புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_c10சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_m10சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_c10 
9 Posts - 64%
heezulia
சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_c10சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_m10சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_c10 
3 Posts - 21%
mruthun
சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_c10சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_m10சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_c10 
1 Post - 7%
Sindhuja Mathankumar
சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_c10சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_m10சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_c10சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_m10சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_c10 
78 Posts - 50%
ayyasamy ram
சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_c10சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_m10சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_c10 
54 Posts - 34%
mohamed nizamudeen
சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_c10சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_m10சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_c10சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_m10சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_c10சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_m10சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_c10சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_m10சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_c10 
3 Posts - 2%
manikavi
சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_c10சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_m10சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_c10 
2 Posts - 1%
mruthun
சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_c10சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_m10சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_c10சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_m10சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_c10சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_m10சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீர்காழி மூவர் எனும் தமிழிசை மூவர்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Feb 21, 2013 11:22 am

தமிழ்கூறும் நல்லுலகத்தால் சீர்காழி மூவர் எனவும் தமிழிசை மூவர் எனவும் அறியப்படுபவர்கள் முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாச்சலக் கவிராயர். தமிழ் சாகித்தியங்களில் பக்தி ரசமும், சங்கீத பாவமும் அதிகம் உண்டு என்பதை தமிழ் இசையுலகுக்கு உணர்த்தியவர்கள்.

தமிழில் இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றுக்கும் மணம் பரப்பிய இத்தகைய மண்ணின் மைந்தர்களுக்கு சீர்காழியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பது தமிழ்ச் சான்றோர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது.

இந்தக் கோரிக்கையை ஏற்ற முந்தைய திமுக அரசு சீர்காழியில் தமிழிசை மூவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்து, நிதி ஒதுக்கியது. இதன்படி சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே சிதம்பரம் - மயிலாடுதுறை பிரதான சாலையோரத்தில் 19,160 சதுரடி நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கின.

கடந்த 2010 ஆகஸ்ட் 2-ஆம் தேதி பணிகள் தொடங்கி, தமிழிசை மூவரின் முழு உருவ வெண்கலச் சிலைகளை மணிமண்டபத்தின் வரவேற்பு முகப்பாகக் கொண்டு இந்த மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

ஏழு இசைகளுக்கும் (ஸ்வரம்) மகுடம்சூட்டிய மாமேதைகள் சீர்காழி மூவர் என்பதை உணர்த்தும் வகையில் மணிமண்டபத்தின் மையத்தில் 7 கலசங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மிகுந்த கலை நயத்துடன் அமைக்கப்பட்ட இந்த மணி மண்டபத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த 2011 டிசம்பர் 24-ல் நிறைவடைந்தன.

4,772 சதுரடியில் அமைந்துள்ள இந்த மணிமண்டபத்தின் கட்டுமான மதிப்பீடு ரூ. 92 லட்சம். இதன் நடுநாயகமாக அமைக்கப்பட்டுள்ள தமிழிசை மூவர் சிலைகளின் மதிப்பு ரூ. 21 லட்சம். சிற்ப வேலை மதிப்பீடு ரூ. 38 லட்சம். ஆக இந்த மணிமண்டபத்தின் மொத்த மதிப்பீடு ரூ. 1.51 கோடி.

திமுக ஆட்சி நிறைவுக்கு முன்பாக இந்த மணிமண்டபத்தைத் திறக்க வேண்டும் என்பதற்காக கட்டுமானப் பணிகளில் மிகுந்த தீவிரம் காட்டப்பட்டது. இரவு, பகலாகப் பணிகள் நடைபெற்றாலும், சட்டப்பேரவைத் தேர்தல் குறுக்கீட்டால் இது திறக்கப்படவில்லை.

அதிமுக அரசு அமைந்த பின்னர் வண்ணம் பூசும் பணிகள் நடத்தப்பட்டு, திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், ஏதோ காரணத்தால் திறப்புவிழா நடத்தும் முயற்சிகள் 3 முறை தோல்வியுற்றன. இதனால், இந்த மணிமண்டபம் திறக்கப்படுமா என்ற அச்சமும், ஆர்வமும் தமிழ் ஆர்வலர்களிடம் ஏற்பட்டது.

திறப்பை வலியுறுத்திய தினமணி: இந்த ஏக்கத்தை தினமணியின் தமிழ்மணியின் "இந்த வாரம்' பகுதி (கடந்த 17-ஆம் தேதி) பிரதிபலித்தது. அதில் தமிழிசை மூவர் மணிமண்டபத்தை விரைவாகத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தினமணி முன்மொழிந்தது.

இதன் விளைவாக விழாவுக்கான முன்னறிவிப்புகள், அழைப்பிதழ்கள் ஏதுமின்றி திடீரென திறப்பு விழா கண்டுள்ளது தமிழிசை மூவர் மணிமண்டபம்.

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம், சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபத்தை தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா புதன்கிழமை காலை திறந்துவைத்தார்.

சீர்காழி மணிமண்படத்தில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சியில் நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி, மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ஓ.எஸ். மணியன், மாவட்ட ஊராட்சித் தலைவர் ஏ.கே. சந்திரசேகரன், சீர்காழி தொகுதி எம்எல்ஏ ம. சக்தி, பூம்புகார் தொகுதி எம்எல் எஸ். பவுன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தடைபட்ட விழா தொடருமா?

அரசு சார்பில் ஆண்டுதோறும் ஆனி மூலம் நட்சத்திர தினத்தில் தொடங்கி 3 நாள்கள் சீர்காழியில் நடத்தப்படும் தமிழிசை மூவர் விழா கடந்த 3 ஆண்டுகளாக தடைபட்டுள்ளது. கடந்த 2010-ல் கோவை செம்மொழி மாநாடு காரணமாக இந்த விழா தடைபட்டது. 2011, 2012-களில் காரணம் ஏதும் குறிப்பிடப்படாமலேயே விழா கைவிடப்பட்டது.

தமிழிசை மூவருக்கு மணிமண்டபம் இல்லாத நிலையில், சீர்காழி சட்டநாதர் கோவிலில் கொண்டாடப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக தடைபட்டுள்ள தமிழிசை மூவர் விழாவை நிகழாண்டிலிருந்து, மூவர் மணிமண்டபத்தில் சிறப்பாகப் கொண்டாட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

மூவரின் பெருமைகள்

முத்துத்தாண்டவர்: தமிழகத்தின் கீர்த்தனம் - கிருதி - மரபுக்குப் பிதாமகன் எனக் குறிப்பிடப்படும் இவர் சீர்காழியில் இசைவேளாளர் மரபில் பிறந்தவர். தில்லை (சிதம்பரம்) நடராஜப் பெருமானுக்குத் தனது கீர்த்தனைகளையும், பதங்களையும் அர்ப்பணித்தவர். 80 வயதுக்கும் மேல் வாழ்ந்த இவர் இயற்றிய கீர்த்தனங்கள் பல நூறு என அறியப்பட்டாலும், இவர் பாடிய 80 கீர்த்தனங்கள் மட்டுமே தமிழிசை உலகுக்குக் கிடைத்துள்ளன.

மாரிமுத்தாப்பிள்ளை: சிதம்பரம் அருகேயுள்ள தில்லைவிடங்கன் என்ற சிற்றூரில் சைவ வேளாளர் மரபில் பிறந்தவ இவர். தில்லை நடராஜப் பெருமான் மீது பல கீர்த்தனங்களையும், பதங்களையும் பாடியவர். 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும் புலவர்கள் வரிசையில் இடம் பெற்றவர். இவரது படைப்புகளில் குறவஞ்சி, நொண்டி நாடகம் மற்றும் சொந்த ஊரைப் பற்றி பாடிய பதிகங்கள் குறிப்பிடத்தக்கவை.

அருணாச்சலக் கவிராயர்: நாகை மாவட்டம், தில்லையாடியில் சைவவேளாளர் குலத்தில் பிறந்த இவர் கம்பராமாயணத்தையும், ராம சரித்திரத்தையும் கீர்த்தனையாகப் பாடியவர். இவரது கீர்த்தனைகளைப் பாடாத இசைவாணர்களே இல்லை எனக் குறிப்பிடப்படுவதன் மூலம் இவரின் பெருமையை உணரலாம்.

தமிழ் ஆர்வலர்கள் வேண்டுகோள்

மைய மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை சுமார் 250 பேர் அமர்ந்து பார்க்குமளவு இடவசதி உள்ளது. நாட்டிய நிகழ்ச்சி நடத்துவதற்கேற்ப மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒப்பனை அறை, கழிப்பறை ஆகியன அமைக்க வேண்டும். தமிழிசை மூவரின் கீர்த்தனைகளை சுவர்களில் பொறிக்க வேண்டும் என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.

சீர்காழி தமிழிசை மூவர் பேரவையின் நிர்வாகி பாலவேலாயுதம்:

தமிழிசை மூவர்களின் கீர்த்தனைகள், வாழ்க்கை வரலாறுகள் குறித்த நூல்கள் இந்த மண்டபத்தில் இடம்பெற வேண்டும். இதைப் பார்வையிடுவோருக்குத் தமிழிசை மூவர் குறித்த அனைத்து விவரங்களும் தெரியும் வகையில் ஏற்பாடு மேற்கொள்ள வேண்டும்.

திருப்பாணர் நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் அமிர்த ஜெயராமன்: இங்கு அமைக்கப்பட்டுள்ள வெண்கலச் சிலைகள் சென்னையிலிருந்து கொண்டு வரப்பட்டன. தமிழ் மீதான ஆர்வம் மற்றும் தன்னார்வத்துடன் இந்தச் சிலைகளை மண்டபத்துக்குள் இறக்கிவைக்கும் பணியில் ஈடுபட்ட எனக்குக் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

தமிழிசை மூவரின் கீர்த்தனைகளை தினமும் இந்த மணிமண்டபத்தில் ஒலிக்கச் செய்ய வேண்டும். மூவரின் கீர்த்தனைகளையும் சுவர்களில் பதிக்க வேண்டும். இந்த மணிமண்டபம் தமிழிசை மூவரின் புகழ் பரப்பும் மையமாகச் செயல்பட வேண்டும்.

திருக்குறள் பண்பாட்டுப் பேரவை நிர்வாகி கு. ராஜாராமன்: இந்த மணிமண்டபத்தில் இசை நிகழ்ச்சிகள் பிரதானமாக இடம்பெற வேண்டும். தமிழிசை மூவரின் வரலாறு, கீர்த்தனை புத்தகங்கள் இடம் பெற வேண்டும்.
(நன்றி-தினமணி)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக