புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_c10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_m10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_c10 
63 Posts - 40%
heezulia
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_c10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_m10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_c10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_m10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_c10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_m10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_c10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_m10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_c10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_m10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_c10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_m10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_c10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_m10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_c10 
314 Posts - 50%
heezulia
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_c10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_m10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_c10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_m10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_c10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_m10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_c10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_m10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_c10 
21 Posts - 3%
prajai
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_c10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_m10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_c10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_m10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_c10 
3 Posts - 0%
Barushree
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_c10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_m10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_c10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_m10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_c10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_m10திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை

Page 1 of 3 1, 2, 3  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Feb 14, 2013 9:57 pm

திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - மாணிக்கவாசகர் அருளியது

சாழல் என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. இவ்விளையாட்டின் போது பெண்கள் இரண்டு கட்சியினராய்ப் பிரிந்து நின்று பாடுவர். ஒருத்தி கேட்பதும், அதற்கு மற்றொருத்தி விடை கூறுவதுமாக இப்பாட்டு நிகழும். இவ்விளையாட்டின் போது பாடப்படும் பாடலே சாழல் என்பதாகும்.

ஆருயிர்கள் ஒழுகி உய்தற்பொருட்டுச் சிவபெருமான் உயிர்க்கு உயிராய் உணர்விற்கு உணர்வாய் அகத்தே நின்று இயங்குகிறான். அது போன்றே அருள் உருவாய்க் கோலம் கொண்டு புறத்தே வழிகாட்டியும் இயக்குகின்றான். இதுவே சிவபெருமானுடைய மாபெரும் கருணையாகும்.

இனி விளையாட்டுக்குப் போவோம்.

வினா: தோழியே, உங்கள் இறைவன் பூசிக்கொள்வதும் வெண்மையான திருநீறு. அணிகலன் களாக அணிவது சீறுகின்ற பாம்பு. அவனது திருவாயினால் சொல்லுவது யாருக்கும் விளங்காத வேதங்கள். அவனைப் போய் உயர்ந்தவன் என்று எவ்வாறு சொல்கிறாய்?

விடை: தோழி ! எல்லா உயிர்க்கும் அவனே இறைவன் எனும் போது, அவன் பாதங்களைப் பணியாமல், அவன் பூசுவதையும் பேசுவதயும் பூண்பதையுமா பார்ப்பாய்? அதனால் யாருக்கு என்னடீ பயன்?

சரி நீ கேட்டுவிட்டதால் அதற்கும் பதில் சொல்கிறேன் கேள். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு வேதங்களை ஓதுவதினால் நமக்கு அறிவைத் தருகிறான். பாம்பை அணிவதன் மூலம் உலகினர் வியக்கும் தனது சத்தியை அவர்களுக்கு உணர்த்துகிறான். திருநீறு அணிவதன் மூலம் உயிர்களின் நிலையாமையை உணர்த்தி அருளொளி நல்குகிறான். போதுமா?

(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Feb 15, 2013 10:50 pm

வினா: சரி. பூசுவதையும் பேசுவதயும் பூண்பதையும் விடு. தந்தையாயும், தலைவனாகவும், எல்லார்க்கும் முதல்வனாயும் உள்ளவன், கிழிந்த துணிகள் சேர்த்துத் தைத்த ஆடையை கோவணமாகக் கொள்வது ஏன் தோழி?

பதில்: இறைவன் அணிந்துள்ள கோவணம் ஏனையோர் அணிவன போல் அல்ல, அதையும் அவன் தன்பொருட்டன்றி உயிர்கள் பொருட்டே அணிகிறான். அதாவது அறம்,பொருள், இன்பம், வீடு என்ற நான்கு மறைகளையே அரை நாண்கயிறாகவும் அந்த நான்மறைக் கருத்துக்களைக் கூறும் மெய்நூல்களையே கோவணமாக அணிந்துள்ளான். அதாவது இறைவன் மறையும் மறைப் பொருளாகவும் இருக்கிறான்.

(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Feb 16, 2013 11:47 pm

வினா: தோழியே! சுடுகாட்டைக் கோயிலாகவும், கொல்லுகின்ற புலியின் தோலை ஆடையாகவும் கொண்டவன் உங்கள் இறைவன். அன்றியும் அவனுக்குத் தாயும் தந்தையரும் இல்லை; இது பெருமைக்குரியதோ? சொல்!

பதில்: பெண்ணே! கேள். எல்லாம் ஒடுங்கிய இடம்தான் சுடுகாடு. எல்லாம் ஒடுங்கும்போதுதான் நாம் அவனைக் காணமுடியும். புலித்தோலை அணிவது உயிர்களின் செருக்கை அடக்கவல்லான் என்பதைக் குறிக்கும்.

உலகில் உள்ள எல்லாம் தோன்றுதற்குக் காரணமாயிருப்பவன் அவன். அதே சமயம் அவனுக்குத் தோற்றம் என்று ஒன்று கிடையாது. எவன் ஒருவன் பிறக்கிறானோ அவன் இறந்துதான் ஆகவேண்டும். இவன் பிறப்பிலி. தோற்றமும் முடிவும் இல்லாதவனாய் ஒப்பற்ற ஒருவனாக விளங்குகிறான்.

அவன் கோபப்பட்டால் அவனுக்கு முன் எதுவும் நிற்காது. பின் எதற்கு அவனுக்குத் துணை?

தோற்றுவிப்பவன் எவனோ அவனால்தான் ஒடுக்கவும் முடியும். ஒடுக்குபவன் எவனோ அவனால்தான் தோற்றுவிக்கவும் முடியும். இதை அனைத்தையும் செய்பவன் அவன் ஒருவனே என உணர்ந்து அவனை வழிபடு.

(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Feb 17, 2013 11:19 pm

வினா: நான்முகனையும் , மன்மதனையும், யமனையும், சந்திரனையும் காயப்படுத்தினானே இதுதானோ உங்கள் கடவுளின் தன்மை? தோழியே சொல்!

பதில்: நீண்டு தொங்கும் குழலையுடை தோழியே! தந்தை தாயர் தம் மக்களைத் தண்டிப்பது எதற்காக? அவர்கள் திருந்தி நல்வழியில் நடப்பதற்குதானே? அதைப்போலத்தான் நான்முகனையும் , மன்மதனையும், யமனையும், சந்திரனையும் முக்கண் பெருமான் தண்டித்தது. அஃது அவர்களுக்கு நன்மை தருவதற்காகத்தான்.

(தொடரும்)

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Feb 18, 2013 10:20 am

திருச்சாழல் விளக்கம் அருமை....தொடருங்கள் உங்களின் சேவையை...

சதாசிவம்
திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Feb 24, 2013 11:06 pm

வினா: தக்கனையும், யாகத்து அதிதேவரையும் தலை அரிந்து, கூடி வந்த தேவர்களையும் அழித்தது என்ன காரியம்?

பதில்: தோழி! தக்கன் நடத்தியது சிவநிந்தை வேள்வி. சிவபெருமானை நிந்தனை செய்து வேள்வி நடத்தியதால், வெகுண்ட வீரபத்திரர் தக்கனையும் தேவர்களையும் அழித்தார். பின்பு, தக்கனின் தலையை மட்டும் தீக்கிரை ஆக்கினார்.

இதை அறிந்த சிவபெருமான் கருணை கொண்டு, இறந்தவர்களை உயிர்பெற்றெழச் செய்தபொழுது தக்கன் மட்டும் எழாதொழிய, வேள்வியின் பொருட்டு வெட்டப்பட்ட ஆட்டின் தலைகளுள் ஒன்றை அவன் உடலில் பொருத்தி எழச் செய்தார்.

பலரைக் கொன்றொழித்துப் போயினான் அல்லன் எங்கள் பெருமான்; மீண்டும் அவர்களை உயிர்பெற்றெழச் செய்து அருள்வழங்கியே சென்றான்; அவருள் முன்னின்ற தக்கனையும் அழித்தொழியாது எழச்செய்து, மாற்றுத்தலையால் அவனது குற்றத்தின் முதன்மை எஞ்ஞான்றும் விளங்கச் செய்தான். அதனால், சிவபெருமான் தனக்கு தீங்கு செய்தவர்களுக்கும் நன்மையே செய்துள்ளான் என புரிந்து கொள் தோழி!

(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Feb 26, 2013 12:17 am

வினா: தோழியே! பிரமனும் திருமாலும் திகைப்படையும்படி, தேடி அறியாவண்ணம் தீப்பிழம்பு வடிவினனாய்ப் பூவுலகம் முதல் பாதாளம் வரை அண்ட வடிவைப் பொருந்த நின்றது எக்காரணம் பற்றி?

பதில்: அயனும், மாலும் ஒரு பிரமகற்பத் தொடக்கத்தில் தாங்களே உலகிற்கு முதல்வர் என்று தம்முள் செருக்கடைந்து செய்த போரினால் உலகம் பெரிதும் துன்பப்பட்டது. இதை அறிந்து தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களுக்கு இரங்கிய சிவபெருமான், பாதளாத்தின் கீழும் அண்ட முகட்டின் மேலும் ஊடுருவி நிற்கும் ஒரு தீப்பிழம்பாய்த் தோன்றினார். அதனைக் கண்ட பிரமனும் திருமாலும் அஞ்சி நின்றனர். இதன் அடியையும், முடியையும் காண்பவரே உலகிற்கு முதல்வர் எனத் தம்முள் முடிவு செய்து கொண்டனர். திருமால் பன்றி வடிவங்கொண்டு நிலத்தின் கீழ்ச் சென்றும், அயன் அன்ன வடிவங்கொண்டு விண்ணின் மேற் சென்றும் அடி முடிகளைக் காண இயலாது மீண்டனர். பின்பு அது சிவபெருமான் கொண்ட வடிவமே என்பதறிந்து, அப்பெருமானை வணங்கித் தம் செருக்கொழிந்தனர்.

தோழி! சிலரை வெளிப்பட்டு நின்று அழித்தல் பொருந்துவதாயினும், சிலரை மறைந்து நின்று பயமுறுத்துதல் தலைவரானவர்க்குப் பொருந்துமோ என்றுதானே கேட்கிறாய். நோய்க்குத் தக்கவே மருத்துவன் மருந்து கொடுத்தல் போல, அவரவர்க்கு ஏற்ற முறையாலே அவரவரைத் திருத்துதல் வேண்டும். அதன்படி பிரமனையும் திருமாலையும், மறைந்து நின்று பயமுறுத்தித் திருத்துதல் குற்றமாகாது. அவர் அவ்வாறு நிற்கவில்லையெனில் திருமால் பிரம்மன் ஆகிய இருவரும் தமக்குள் ஏற்பட்ட தனிப்பகையும் செருக்கும் நீங்காமல் நின்று இருப்பர்.
(தொடரும்)

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Feb 26, 2013 2:45 pm

இதை அறிந்த சிவபெருமான் கருணை கொண்டு, இறந்தவர்களை உயிர்பெற்றெழச் செய்தபொழுது தக்கன் மட்டும் எழாதொழிய, வேள்வியின் பொருட்டு வெட்டப்பட்ட ஆட்டின் தலைகளுள் ஒன்றை அவன் உடலில் பொருத்தி எழச் செய்தார்.

ஆடு இறந்து விட்டதா அழுகை

அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Feb 26, 2013 2:48 pm

கேள்விகளும் பதில்களும் அருமை அருமையிருக்கு சூப்பருங்க தொடருங்கள்

அன்புடன்
சின்னவன்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Feb 26, 2013 11:13 pm

வினா :தோழியே! பார்வதி தேவியை ஒரு பாகத்தில் அமைத்துக் கொள்ளு தலும், மற்றொருத்தியாகிய கங்கை நீருருவாகி அவன் சடையில் பாய் வதற்குக் காரணம் என்ன சொல்?

பதில்: ஒருத்தியை மணந்தபின் மற்றொருத்தியை அவளறியாமல் மறைத்து வைத்திருத்தல் உயர்ந்த தலைவராவார்க்குப் பொருந்துமோ என்றுதானே கேட்கிறாய்? பகீரதன் வேண்டுகோளுக்காக வேகமாகப் பாய்ந்து வரும் கங்கையை இறைவன் தன் சடையில் ஏற்றாவிடில் இப்பூவுலகம் அழிந்திருக்கும். ஆக இன்பம் நுகர்தற்காக மணந்திலன், உலகத்தைக்காக்கவே அவளைத் தாங்கினான். இது அவன் செயலுக்கு பெருமையேயன்றி சிறுமை ஆகாது தோழி.

(தொடரும்)

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக