புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_c10 
33 Posts - 42%
heezulia
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_c10 
32 Posts - 41%
prajai
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_c10 
2 Posts - 3%
Saravananj
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_c10 
399 Posts - 49%
heezulia
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_c10 
27 Posts - 3%
prajai
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 7 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jan 15, 2013 1:24 pm

First topic message reminder :

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்
ரமணி

01. காஞ்சி முனிவரின் ஹாஸ்யம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)

எப்போதும் பூஜை எல்லாமே உபதேசம்
தப்பாத விரதங்கள் என்றில்லை துறவிக்கு.
நகைச்சுவை இழையும் கேலியும் கிண்டலும்
நகையென மின்னும்
தகைசால் தெய்வீகத் துறவி
ஜகத்குரு காஞ்சி மஹானின் பேச்சிலே.

மராட்டிய மாநில மூதூர் ஒன்றில்
விராட்டுரு முனியின் வீதியோர முகாம்.
யானைமேல் அமர்ந்து
நாலுபேர் சாலைவழிப்
போவதைப் பார்த்தார் பெரியவர்.
அவர்களை உடனே அழைத்து உசாவினார்:
இவர்ந்து யானைமேல் எங்குச் செல்கிறீரோ?

நாங்கள் ஓர்காலம் நீங்காத செல்வமுடன்
பாங்காக வாழ்ந்தோம் ஸ்வாமீ!
எந்தைதம் காலம் எய்திய காலை
விந்தையான முறையில்
தனங்கள் அனைத்தும் தானம் செய்துவிட்டு
வனமிகிவ் வானை எம்வசம் தந்து
கற்றது ஊரெல்லாம் சொற்றியே
உற்ற காலம் கழித்து வாழ்வீர்
என்று சொல்லி நன்று மறைந்தாரே!

அதன்படி நாங்களும் அங்கும் இங்கும்
மெதுவாக யானைமேல்
ஊர்விட்டு ஊர்சென்று
பேர்மிகு புராணக் கதைகள் சொல்கிறோம்
பக்திப் பாக்கள் பாடுகிறோம்
ஏதோ கொஞ்சம்
தீதில்லாப் பொருள்கிடைக்கும் எமக்கும் யானைக்குமே!

ஹாஹா என்று சிரித்தார் பெரியவர்.
இங்கேயும் இதுதான் நடைமுறை!
இவர்களும் என்னை யானைபோல்
தவறாது ஊர்விட்டு ஊராக
அழைத்துச் செல்லும் இடங்களில் நானும்
உழைக்கிறேன் பக்தி உள்பலம் பெருகவே.

இவர்கட்கும் சாப்பாடு பணமெனக் கிடைக்கும்
எனக்கும் பக்தர்கள்
எனக்கும் உமக்கும் ஒரேதொழில்!
பெரியவர் சிரிப்பில் நகைச்சுவை உணர்வும்
சரிசம உள்ளமும் கண்ட பக்தருளம்
விரிவும் உவகையும் வியப்பும் உற்றதே!

--ரமணி 08/01/2013

*****

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Sep 20, 2015 8:33 am

காஞ்சி பெரியவா குழுமத்தில் மகாபெரியவர் மீது S. Sriram என்பவர் எழுதியுள்ள
சமஸ்கிருத துதி கீழே.

श्री महास्वामि योग चक्र स्तवम्
Authored by Sri S Sriram

सिद्धयोगीश्वर प्रियामृत पूर्ण ज्ञान सागरा
मूलाधार रूपिणे भक्तानुग्रह कारण न्यान मूर्त्ते॥ १

तत्वार्थ रूपरमणीय मनोनाश रञ्जने
स्वधस्सिद्धस्स्वाधिष्ठाने वसति मनोहर:॥२

भू क्षेत्र वससि कामकोट्यालंकृत कामाक्षि प्रिया
अत्भुत शिरो मनिपुर सकल शास्त्र प्रपण्डिता॥३

हृदयप्रिय प्रेमेश्वरो हृदयालय प्रतिष्ठिता
अनादि रूप अनाहतःस्वरूप ब्रह्मैव केवलम्॥४

श्रुति रक्षको श्रुति गीतप्रियो श्रुति शब्द: स्वरूपा
विशुद्धि रूपो तव प्राणस्य जीवो चतुर्वेद:॥५

भ्रुवोर्मध्य ध्यानैक्य नाथा इन्दु अलंकृत ईश:प्रिय:
अज्ञान निवृत्ति कारणा आज्ञा ज्ञानं ददातु देवो॥६

जटामकुटालंकृत रुद्राक्षप्रियधारि प्रदोषपूजकाले
सहस्रारार्चन प्रीतिभावेन शिवशक्तैक्य सदा शिवं कुरु॥ ७

*****

சமஸ்கிருதப் பாடலைத் தமிழ்ப் பாடலாக அடியேனை மொழிபெயர்க்கச் சொன்னார்கள்.
அடியேனின் மொழிபெயர்ப்பு கீழே. சரியாக உள்ளதா என்று அன்பர்கள் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
ரமணி

*****

அருள்மிகு மகாபெரியவர் யோகசக்கரத் துதி
(அறுசீர் விருத்தம்: விளம் மா தேமா . விளம் மா தேமா)

நெஞ்சினுள் துறவி யாக
. நின்றிடும் உருவே போற்றி
தஞ்சமாம் உயிர்கள் தம்மைத்
. தாங்கிடும் அமுதே போற்றி
வஞ்சமில் கடலாய் ஞானம்
. வதியவே நடந்தாய் போற்றி
அஞ்சவே செய்யும் மூலா
. தாரமாய் ஆனாய் போற்றி! ... 1

தத்துவப் பொருளே போற்றி
. தாயெனத் திளைப்பாய் போற்றி
வித்திடும் மனம ழித்தே
. வினைகளை அறுப்பாய் போற்றி
தத்தமாய் மனதைத் தந்தால்
. தன்னிலை லயிக்கச் செய்தே
சித்தமாய் சுவாதிட் டானம்
. சேர்த்தருள் பரமே போற்றி! ... 2

பூமியில் காம கோடி
. புண்ணிய பீடம் ஏற்றுச்
சேமமே அருளும் வேந்தே
. தேவிகா மாட்சி யன்ப
நேமமாய் மனிதர் வாழும்
. நெறியினைத் தருவாய் போற்றி
தாமரை மணிபூ ரத்தில்
. சாத்திரம் அருள்வாய் போற்றி! ... 3

வினாவென ஏது மில்லா
. விதயமாம் ஆல யத்தில்
சனாதன மூர்த்தி யாகச்
. சகலமும் அருள்வாய் போற்றி
அனாதியாம் பரமாய் நெஞ்சில்
. அளாவிடும் ஒளியே போற்றி
அனாகதத் தனிமை வாழும்
. ஆரணண் உருவே போற்றி! ... 4

வேதமே காத்த ருள்வாய்
. வேதகா னத்தில் நேசம்
வேதமாம் ஒலிகள் கொள்ளும்
. விழுப்பொருள் உருவே போற்றி
வேதனின் மூச்சுக் காற்றாய்
. மேவியே திகழும் நான்கு
வேதமே உயிராய் வாழும்
. விசுத்தியின் உருவே போற்றி! ... 5

தற்பதம் புருவம் மத்தி
. தந்திடும் ஒளியே போற்றி
நெற்றியில் கனலைக் கொள்ளும்
. நிலவணி ஈசர் நேசன்
கற்பனை யுள்ளம் கொள்ளும்
. கருமையஞ் ஞானம் போக்கி
நெற்றியில் திகழும் ஆஞ்ஞை
. நிலையருள் ஒளியே போற்றி! ... 6

விருப்புறு அணியாய் சந்தி
. வேளையில் தலையின் உச்சி
உருத்திராட் சமணி மாலை
. ஊடுறும் வடிவே போற்றி
அருச்சனை வழிபா டாக
. ஆயிரம் விழைவாய் போற்றி
உருத்திரை பிணைந்தே காணும்
. உருசதா சிவமே போற்றி! ... 7

--ரமணி, 19/09/2015, கலி.02/06/5116

குறிப்பு:
பாடல் 1.
தஞ்சமாம் = தஞ்சமாகும்; வதியவே = தங்கவே, வசிக்கவே;
அஞ்சவே செய்யும் மூலாதாரம் = மூலாதாரச் சக்கரம் கீழே உள்ள அதர்ம சக்கரங்களே
நம் வினைகளுக்குக் காரணம். மூலாதார மூர்த்தியாகப் பிள்ளையார் அமரும்போது இந்தக்
கீழினச் சக்கரங்கள் மூடப்படுகின்றன. இறைவன்/குருவின் அருளின்றி நாம் மூலாதாரச்
சக்கரத்தைச் சுழலவைக்க முடியாது. அதே சமயம், அது மூடாமல் இருக்கும்வரை
கீழுள்ள சக்கரங்களின் ஆதிக்கத்தில் நம்முள் தர்மமே மேலோங்கும். எனவேதான்,
மூலாதாரத்தை வசப்படுத்துவது ஓர் அஞ்சவைக்கும் சாதனையாகும்.

கீழுள்ள புத்தகத்தில் இதுபற்றிய விளக்கம் உள்ளது:
himalayanacademy.com/media/books/loving-ganesha/loving-ganesha.pdf

பாடல் 3.
நேமமாய் = நியமத்துடன்

பாடல் 5.
தற்பதம் = ’தத்’ என்னும் பதம், பிரம்மஞானம் (தான் பிரம்மமே என்னும் ஞானம்)

பாடல் 7.
உருத்திரை = உமை, பார்வதி.

*****

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 20, 2015 11:17 am

சமஸ்கிருதப் பாடலைத் தமிழ்ப் பாடலாக அடியேனை மொழிபெயர்க்கச் சொன்னார்கள்.
அடியேனின் மொழிபெயர்ப்பு கீழே. சரியாக உள்ளதா என்று அன்பர்கள் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
ரமணி

ரமணி அவர்களே ,
சமஸ்கிருதம் படிக்கத் தெரிந்தவர் என்னைப் போல் ஓரிருவர் இருக்கலாம் .
தமிழ் படிக்கத் தெரிந்தவர் அநேகர் இருக்கலாம் .
ஆனால் சமஸ்கிருதத்தில் படித்து ,
அதை தமிழில் இலக்கண /இலக்கிய சுத்தமாக
கவிதை வடிவில் எழுதக்கூடியவர் எவ்வளவு பேர் இருக்க முடியும் .
( ஈகரையில் ஒருவர் இருக்கலாம் என்பது எந்தன் அனுமானம் .)

நீங்கள் எழுதினால் சரியாகத்தான் இருக்கும் ரமணி அவர்களே !

கவிதை மனதை கொள்ளைக்கொண்டது. மஹா பெரியவ பெருமையை அழகுற தமிழாக்கம் செய்துள்ளீர் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Sep 20, 2015 11:51 am

எனக்கு சமஸ்கிருதம் படித்துப் பொருளறியத் தெரியாது ரமணியன் அவர்களே!
மூலத்தின் தமிழ்ப் பொருளுரையை வாங்கி, அதைத் தமிழ் மரபிற்கேற்ப மாற்றிக் கவிசெய்தேன்.
உங்கள் பாராட்டுக்கு நன்றி.

ரமணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 20, 2015 1:31 pm

+2 வரை (அதாவது அந்த காலத்து 6--11த் class )சமஸ்கிருதம் . பிறகு தொடர்புவிட்டுப் போய்விட்டது .
sriram அவர்கள் கவிதையை படிக்க முடியும் . அர்த்தம் எந்த அளவிற்கு புரிந்தது , என்று படித்து விட்டுக்
கூறுகிறேன் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 21, 2015 1:58 pm

+2 இல் படிக்கையில் , பப்ளிக் தேர்வில் translation பண்ணவும் என்று கேள்வி, வரும் .
அதற்கு தமிழாக்கம் செய்யும் போது , வரிக்கு வரி ,மாற்றம் செய்தல் கூடாது.
கருவை வாங்கிக் கொண்டு , சொந்த நடையில் , அழகு பட கூறினால் ,அதிக மார்க்கு,
பெறலாம் என்ற உத்தியை ,ஆசிரியர்கள் வலியுறுத்தியது நினைவுக்கு வருகிறது .

திருSRI RAM அவர்களின் இரு வரி ஸ்லோகங்களை படிக்க முடிந்த சமயத்தில் ,
உங்களுடைய தமிழாக்கம் , அர்த்தம் புரியாத/தெரியாத அவரது வரிகளுக்கு ,
அர்த்தத்தைக் கொடுத்து , ரசித்து ,அனுபவிக்க வைத்தது என்றால் மிகை ஆகாது .

SriRam அவர்களும் இதை ஒப்புக் கொள்வார் என்றே நம்புகிறேன் .

நீங்கள் பெருமைப் படவேண்டிய ஒரு தமிழாக்கம் இது .
பக்தஜனங்கள் இதை மிகவும் போற்றியே படிப்பார்கள் என்பது திண்ணம் . அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக