புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 3 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 3 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 3 Poll_c10 
5 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 3 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 3 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 3 Poll_c10 
251 Posts - 52%
heezulia
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 3 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 3 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 3 Poll_c10 
152 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 3 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 3 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 3 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 3 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 3 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 3 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 3 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 3 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 3 Poll_c10 
18 Posts - 4%
prajai
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 3 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 3 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 3 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 3 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 3 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 3 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 3 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 3 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 3 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 3 Poll_c10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 3 Poll_m10ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி


   
   

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jan 15, 2013 1:24 pm

First topic message reminder :

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்
ரமணி

01. காஞ்சி முனிவரின் ஹாஸ்யம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)

எப்போதும் பூஜை எல்லாமே உபதேசம்
தப்பாத விரதங்கள் என்றில்லை துறவிக்கு.
நகைச்சுவை இழையும் கேலியும் கிண்டலும்
நகையென மின்னும்
தகைசால் தெய்வீகத் துறவி
ஜகத்குரு காஞ்சி மஹானின் பேச்சிலே.

மராட்டிய மாநில மூதூர் ஒன்றில்
விராட்டுரு முனியின் வீதியோர முகாம்.
யானைமேல் அமர்ந்து
நாலுபேர் சாலைவழிப்
போவதைப் பார்த்தார் பெரியவர்.
அவர்களை உடனே அழைத்து உசாவினார்:
இவர்ந்து யானைமேல் எங்குச் செல்கிறீரோ?

நாங்கள் ஓர்காலம் நீங்காத செல்வமுடன்
பாங்காக வாழ்ந்தோம் ஸ்வாமீ!
எந்தைதம் காலம் எய்திய காலை
விந்தையான முறையில்
தனங்கள் அனைத்தும் தானம் செய்துவிட்டு
வனமிகிவ் வானை எம்வசம் தந்து
கற்றது ஊரெல்லாம் சொற்றியே
உற்ற காலம் கழித்து வாழ்வீர்
என்று சொல்லி நன்று மறைந்தாரே!

அதன்படி நாங்களும் அங்கும் இங்கும்
மெதுவாக யானைமேல்
ஊர்விட்டு ஊர்சென்று
பேர்மிகு புராணக் கதைகள் சொல்கிறோம்
பக்திப் பாக்கள் பாடுகிறோம்
ஏதோ கொஞ்சம்
தீதில்லாப் பொருள்கிடைக்கும் எமக்கும் யானைக்குமே!

ஹாஹா என்று சிரித்தார் பெரியவர்.
இங்கேயும் இதுதான் நடைமுறை!
இவர்களும் என்னை யானைபோல்
தவறாது ஊர்விட்டு ஊராக
அழைத்துச் செல்லும் இடங்களில் நானும்
உழைக்கிறேன் பக்தி உள்பலம் பெருகவே.

இவர்கட்கும் சாப்பாடு பணமெனக் கிடைக்கும்
எனக்கும் பக்தர்கள்
எனக்கும் உமக்கும் ஒரேதொழில்!
பெரியவர் சிரிப்பில் நகைச்சுவை உணர்வும்
சரிசம உள்ளமும் கண்ட பக்தருளம்
விரிவும் உவகையும் வியப்பும் உற்றதே!

--ரமணி 08/01/2013

*****



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 26, 2013 10:17 pm

கருணாமூர்த்தி அவர்தம் ஒவ்வொரு செயலிலும்,
அர்த்தங்கள் ஆயிரம் இருக்கும்,
அறிந்தவர் ஒரு சிலரே .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Jan 02, 2014 7:05 pm

18. குட்டு விளைத்த கூட்டு!
(அறுசீர் விருத்தம்: விளம்/மா காய் மா, அரையடி)

வந்தனர் ஐந்தாறு நபர்கள்.
. வைணவர். கறைவேஷ்டி. திருமண்.
வந்தனம் செய்தேதாள் பணிந்தார்.
. வயதான ஒருவரைத் தவிர.
சிந்தையில் நிற்பதில்லை எதுவும்
. இந்தவோர் பெரியவர்க்கே! இன்னும்
எந்தவோர் ஆலயமோ? இவரை
. பெரியவா சரியாக்க வேண்டும்!

பெரியவர் பெரியவரைப் பார்த்தார்.
. விஷ்ணுச ஹஸ்ரநாமா வளியில்
அரியதோர் ஸ்லோகத்தைக் கொடுத்தே
. அவரைநூற் றெட்டுமுறை தொடர்ந்து
வரிபிச காதுசொலச் சொன்னார்
. அச்சுதா னந்தகோ விந்த...*
அருமுனி அடுத்ததாய்ச் செய்தார்
. அதிரவைக் கும்செயலா யொன்றே.

மல்லனைப் போன்றொருவர் தம்மை
. மறைமுனி விளித்தார்கை சொடுக்கி
வல்லிய குட்டுவொன்றை அந்த
. வயதினர் தலைவைக்கச் செய்தார்
கல்லெனத் தலைவிழுந்த குட்டில்
. கணத்திலே தெளிந்ததவர் சித்தம்!
மெல்லிய குரலெடுத்துக் கிழவர்
. விழிகளை உயர்த்தினார் வியப்பில்!

ஏண்டா ரகுநாதா நாம
. எங்கே இருக்கோம்னு சொல்லு?
ஆண்டாள் சன்னதில இருந்தோம்
. அப்புறம் என்னாச்சு சொல்டா
காண்பது எல்லாமே இங்கே
. கபாலி சின்னமாவே இருக்கே?
ஈண்டெவண் வந்தேன்நான் பார்த்தால்
. இதுவோர் மடம்போல உளதே?

பெருகிய விழிநீரும் வழிய
. பெரியவர் காத்தனரே என்றார்
பெரியவர் கையுயர்த்தி யேதம்
. பெருமையை மறைத்தபடி சொன்னார்
பெருமாளே காப்பாற்றி யுள்ளார்
. எத்தனை திவ்யதேசம் சென்றீர்!
அருமுனிக் குறுமுனியா யவர்தம்
. அருமையைப் போற்றுதலை யொப்பரோ?

குறிப்பு:
பெரியவா சொல்லச் செய்த விஷ்ணு ஸஹஸ்ரநாம வரிகள்
அதன் கிரமபாடத்தில் த்வாதஷ நாம பஞ்சரம் பகுதியில்
15-ஆம் ஸ்லோகமாக வருவன:
"அச்சுதானந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத் |
நஶ்யந்தி சகலா ரோக, சத்யம் சத்யம் வதாம்யஹம் ||"‘
http://vthuppal.tripod.com/ipd_str5.pdf

--ரமணி, 02/01/2014, கலி.18/09/5114

*****


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 02, 2014 9:35 pm

சிந்தை பேதலித்தவரையும்
விந்தை சில புரிந்தே,
சீராக்கிடும் சீலர்,
சீர் மிகு பெரியவா !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Mar 11, 2014 6:31 pm

19. பாமரனின் பரிணாமம்
(குறும்பா)

கலியுகத்தில் கண்படவே நிதமாடி
நிலையுயர்த்தி யாட்கொள்ளும் இதமாகக்
. கச்சிமுனி சென்னைமுகாம்
. இச்சையுடன் மன்பதையாம் ... [மன்பதை = மனித இனம்]
நிலைகொண்டார் ஈராண்டு விதமாக. ... 1

மயிலையிலே நிலைகொண்டார் மையமென
அயலிடங்கள் பயணித்தார் மெய்யனவர்
. இருந்தவிடம் ஆலயமாம்
. மருந்தெனவே பாலனமாம்
உயிருக்கும் உடலுக்கும் உய்வெனவே. ... 2

ஒருகாலை அடியார்கள் உடனுறவே
திருவான்மி யூர்சாலை நடைச்செலவாய்
. மருந்தீசர் கோவிற்றிசை
. அருளீசர் பாதவிசை ... [பாதவிசை = பாதங்களின் வேக நடை]
ஒருவிளைஞன் எதிர்கொண்டான் தடையெனவே. ... 3

செருக்குடனே முன்நின்றே நோக்கியவன்
செருப்புகளைக் கழற்றாத போக்கினிலே!
. அடியார்கள் சூழ்நிற்க
. அடியவரின் தாள்நிற்க
விருப்பெனவென் றார்முனிதன் வாக்கினிலே. ... 4

வினவினனே இளைஞனுமே நேராக
’எனக்கேதும் தேவையிலை ஈடாக
. தவமுனிவர் சங்கரரே
. இவரென்று இங்குறுவோர்
நினைப்பவரும் போற்றுவரும் நீர்தானா?’ ... 5

’அதுவோர்புறம், உன்பேரைச் சொல்வாயா?
அதிகாலையில் எங்குநீயும் செல்வாயோ?’
. பெயர்சொல்லி ஏளனமாய்
. பயனுள்ள வேலையென
’அதிகாலையில் வேலைக்குச் செல்வேனே.’ ... 6

உன்வேலை யெங்கெனவே பரிவுடனே
அன்னையெனக் கேட்டாரே திருவுடையார்
. கிண்டியிலே வேலையென்றான்
. உண்டெனக்கோர் கேள்வியென்றான்
’இந்துமதம் யாராலுரு வானதுவோ?’ ... 7

தவசிதெரி யாதப்பா என்றாரே
அவனுரையோ வாதத்தில் வென்றானாய்
. சாத்திரத்தின் சொல்மேலே
. ஊத்துபாலைக் கல்மேலே
அவிநெருப்பில் ஊத்துநெய்யை என்பீரே, ... 8

நல்லதுக்கே இவையெல்லாம் என்பதையே
வல்லவர்சொல் நம்பிடுமே மன்பதையே
. தெரியாதே சொல்வதுவே
. சரியான சொல்லதுவா
நல்லதெனில் எப்படிநான் நம்புவதோ? ... 9

சிறிதேனும் சலனமுறா நாட்டுடையார் ... [நாட்டு = நிலை]
பரிவுடனே தண்குரலில் கேட்டிடுவார்
. ’அதுவோர்புறம் இருக்கட்டும்
. பொதுவழியாய் பலருக்கும்
உருவான இதுகிண்டி சேர்த்திடுமா?’ ... 10

’அதுதானே தினமும்நான் போறேனே!’
இதுவென்ன கேள்வியென ஏறிட்டான்
. நாட்டானின் இதயவீணை
. மீட்டவெண்ணி இதயவாணர் ... [வாணர் = வாழ்பவர்]
பொதுவான கேள்வியொன்றை வேரிட்டார். ... 11

’போட்டதியார் இந்தரோடு?’ என்றாரே
’பாட்டன்முப் பாட்டன்நாள்’, என்றானே
. ’இந்தரோடு உள்ளதுவே
. அந்தவழிச் செல்வதுவே
போட்டதுயார் கேள்வியேனோ’ என்றானே. ... 12

’நிச்சயமாய்ச் சொல்லுகிறாய் கிண்டிபோகும்?’
’நிச்சயம்தான் ஏன்-ஐயம் உண்டாகும்?
. பலகையுண்டே கைகாட்டி
. பலசாலை வழிகாட்டி
அச்சமேனோ சர்க்காரே செய்ததாகும்!’ ... 13

அன்புவலைப் பட்டதுவே அம்மானும்
வம்புபேசி வலைப்பட்டான் அன்னானும்
. அல்லவது சிறைக்காப்பு
. நல்லதொரு இறைமீட்பு
அன்னவனுக் கருள்செய்தார் பெம்மானே. ... 14

’உன்போலத் தானப்பா நானுமே
முன்னாளில் போட்டதுயார் ஏனென
. அலட்டலேது மில்லாமல்
. கலக்கமேதும் கொள்ளாமல்
இந்துமதப் பாதையிலே போவனே.’ ... 15

’கைகாட்டும் பலகைநீ நம்புகிறாய்
மெய்காட்டும் வேதம்நான் நம்புகிறேன்
. காற்றினிலே மழையினிலே
. காட்டுமிது பிழையுறலாம்
உய்வழியை வேதமுமி யம்பிடுமே.’ ... 16

’பாட்டன்முப் பாட்டனாக என்னைவிட
நாட்டத்தில் பெரியோரும் சொன்னதுவே
. வருடங்கள் ஆயிரமாய்
. உருவான தாயிதுவே
நாட்டுமறச் சாலையெனக் குன்னதமே.’ ... 17

’நம்பியென்றன் சாலவழிப் போவேனே
நம்புவதை நாலுபேர்க்குச் சொல்வேனே
. உன்வழியில் வேலைபல
. என்வழியில் ஏதுமில
உம்பனனுனைக் காத்திடுவான் செல்வாயே.’ ... 18 ... [உம்பன் = கடவுள்]

செருப்புகளை மறுகணமே உதறியவன்
செருக்கதுவும் தெறித்திடவே பதறியவன்
. மன்னிப்புக் கோரினனே
. கன்னங்கள் நீரிடவே
பெரியவர்தாள் பணிந்தவனும் கதறினனே. ... 19

ரசவாதப் பரிணாமம் பெற்றவனாய்
வசமாகிப் பெரியவரைப் பற்றினனே
. ஏளனம்செய வந்தவனும்
. தாள்பணிந்த வந்தனையை
உசவுவதில் நம்வினைய கற்றுவமே. ... 20 ... [உசவுதல் = ஆராய்தல்]

--ரமணி, 09-11/03/2014, கலி.27/11/5114

உதவி:
http://periva.proboards.com/thread/5287/common-mans-change-heart-devotion


*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Jul 25, 2014 10:27 am

ஜகத்குரு தரிசனம்
மானிடர்க்குத் தேர்த் திருவிழா!

(வெண்பா)

காஞ்சிவரு வாய்த்துறை ஆய்வர்நான் வந்ததுவோர்
ஆஞ்ஞை அறநி லயத்துறை ஆணையர்
ஆட்சியர் நண்பர் அருமுனி காஞ்சிமகான்
காட்சியருள் கொள்ளவிழை வாம். ... 1

பெரியவர்முன் பத்தைந்து பேராய மர்ந்தோம்
அருமுனி யும்தன் அகமலர்ந் தேசிறு
கோவிற் றிருப்பணி கொள்வது பற்றியே
நாவழுத்தும் சொல்லுரைத் தார். ... 2

சட்டென்றோர் கேள்வி தவமுனி கேட்டாரே
கட்டுகள் உள்ள அவனியில் தோன்றிக்
கருவில் திருவுற்ற மானிடர்மூ வர்த்தேர்த்
திருவிழாக் கொள்வர் எவர்? ... 3

மானிடர்க்குத் தேரா மயங்கினோம் மூளையை
ஆனமட்டும் தோண்டியும் காணவில்லை யேவிடை!
புன்னகை பூத்தந்தப் புங்கவர் சொல்லுற்றார்
நன்று விடைசொல்வேன் நான். ... 4

திருவில்லி புத்தூரில் தேர்-ஆண்டா ளுக்கே
பெரும்புதூர்ரா மானுசர் பெற்றார் ஒருதேர்
பெருந்துறை வாதவூர பெற்றதேர் என்றார்
ஒருகுழந் தைசிரிப் போடு. ... 5

[வாதவூரர் = மாணிக்கவாசகர்]

--ரமணி, 25/07/2014, கலி.09/04/5115

கட்டுரை:
’மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’ இரண்டாம் தொகுதி
பக்.208-210, அன்பர் ’இராசு’வின் அனுபவம்

http://www.periva.proboards.com/thread/7693/great-devotees-who-receive-procession

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Jul 31, 2014 8:08 am

ஜகத்குரு தரிசனம்
’படிப்பிலே மக்குன்னு நெனச்சியோ?’

(வெண்பா)

உதவி:
http://www.periva.proboards.com/thread/7692/periva-good-ச்டுடிஎஸ்
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 3 3670d1406774052-2958-2985-3021-2965-2997-3007-2980-3016-2990-3009-2991-2993-3021-2970-3007-2965-2995-3021-perivaschool

அருந்தவ மாமுனி காஞ்சி மகானின்
அரிதெனும் பள்ளிப் பருவப் பதிவொன்றை
ஆனந் தவிகடன் ஆன்மீகப் பேனாவாய்
ஆனபர ணீதரன்பெற் றார். ... 1

பரணீதரன் சொல்வார்:

ஆர்கா டுமிஷன் அமெரிக்கப் பள்ளியைநான்
ஆர்வத்து டன்-அணுகிக் காஞ்சிமுனி கற்ற
பழைய பதிவுகள் பற்றியே தேடித்
துழவியே தட்டினேன் தூசு. ... 2

திண்டிவனம் ஊரில் சிறந்தவப் பள்ளியில்
கண்டேன் ஒரேவொரு காகிதம் அஃதோர்
வருகைப் பதிவேட்டின் மக்கிய பக்கம்
இருந்ததே அன்னாரின் பேர்! ... 3

சுவாமிநா தன்பேர் சுவாசம் நிறுத்த
அவாவுடன் பள்ளி அனுமதி பெற்றந்த
ஆயிரத்துத் தொள்ளாயி ரத்திநா லாம்-ஆண்டின்
பாயிரம் பெற்றுவந்தேன் நான். ... 4

பெரியவர் ஃபாரம் இரண்டில் படித்த
வருகை அறிவித்த மக்கிய தாளுடன்
ஆந்திர தேசப் பயணத்தில் ஏகிய
காஞ்சிமுனி யைக்கண்டேன் நான். ... 5

நள்ளிரவு, பௌர்ணமி; ஞானியவர் மேனாவில்;
பள்ளி விவரப் பதிவேடு பற்றிநான்
சொன்னபடி கூடவே ஓடினேன் மேனாவும்
நின்றதுசற் றுத்தொலை வில். ... 6

உடன்வந்தோர் ஆகாரம் கொள்ள அனுப்பி
அட-இது எப்படிவுன் கையில் கிடைத்ததென்றார்
கைமின் விளக்கொளியில் கண்ணாடி வில்லையில்
கைமுன் னுளதாள்பார்த் தார். ...

முகம்மலர உள்ளத்தில் முன்னோக்கிப் பத்தாம்
அகவையின் நாட்களில் ஆழ்ந்தார் ஒருகணம்
தன்னுடன் கற்ற சகாக்கள் எவரெவெர்
இன்றில்லை மற்றவர் எந்தவூர் என்றுசொல்லி
என்னிடமோர் கேள்விகேட் டார். ... 8

என்பேர் கடைசியில் இத்தாளில் வந்ததால்
என்ன நெனச்சே? பெரியவா மக்குன்னா?
இல்லை பெரியவா பேரேன் கடைசியிலென்
றல்லல் மனம்கொண் டது. ... 9

பூர்வா சிரமத்தில் ஸ்கூல்-இன்ஸ்பெக் டர்தந்தை
ஊர்-ஊராய் மாற்றல் உறுதியாய்; செப்டம்பர்
மாதமவர் திண்டிவனம் வந்ததால் பள்ளியில்
பாதியில் சேர்ந்தேன்நான் ஆதலால் என்பேர்
கடைசியில் என்றார் குரு. ... 10

--ரமணி, 31/07/2014, கலி.15/04/5115

*****

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 31, 2014 9:13 am

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி - Page 3 OlS38MXSSyCzLe6SvnsX+PerivaSchool_zpsf12b6eb1

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Aug 10, 2014 7:40 pm

ஜகத்குரு தரிசனம்
கணிதத்தில் சீவனும் பரமனும்!


(இதன் மூலத்தை அவசியம் படிக்கவும்:
http://periva.proboards.com/thread/4175/perivas-exposition-on-mathematical-formulae)

(எண்சீர் விருத்தம்: கூவிளம் காய் விளம் காய்
. விளம் காய் விளம் மா)


அத்வைதம் என்றாலும் துவைதமென் றாலுமவை
. சார்ந்தவி சிஷ்டாத்து வைதமென் றாலும்
தத்துவம் ஒன்றேதான்: சீவனின் இலக்கென்றே
. ஆவது பரமன்தான் என்றிவை சொல்லும்;
எத்தகு சூழ்நிலையில் சீவனின் இருப்பென்றும்
. எவ்வழி உய்வென்றும் சொல்வது மாறும்;
முத்தியின் வழிசொல்லும் தத்துவம் மூவகையின்
. ஒப்புமை கணிதத்தால் அறிந்திட லாமே. ... 1

சங்கரர் அத்துவைத வழியினில் பரமாத்மன்
. சதுரமாம் சீவாத்மன் அதனொரு பக்கம்!
இங்கிதம் என்னவெனில் சதுரமும் சுற்றளவில்
. சீவனாம் பக்கத்தின் நான்மடங் கென்றே.
சங்கையாம் நான்கென்றால் கூறுறா எண்ணாகும்
. சமுசயம் இல்லாத இணைப்பிது வாமே
இங்ஙனம் சமன்பாட்டில் சீவனும் பரமனாகி
. இணைந்தியல் நிலையென்று நிச்சயம் உண்டே! ... 2

[இங்கிதம் = குறிப்பு, கருத்து, இனிமை;
சங்கை = எண்; கூறுறா எண் = rational number;
சமுசயம் = சந்தேகம்; சமன்பாடு = equation]

மத்துவர் துவைதவழி யில்லிது கடுமையாகும்
. வட்டமும் வட்டத்தின் விட்டமும் என்றே
ஒத்ததோர் நிலையினிலே சீவனும் ஆத்துமனும்!
. சுற்றள வில்வட்டம் எத்தனை விட்டம்?
இத்தகு சமன்பாட்டில் ’பை’யெனும் மாறிலியே
. இரண்டையும் தொடர்புறுத்தும் கூறுறும் எண்ணாய்;
எத்தனை முயன்றாலும் ’பை’யதன் விகிதத்தை
. எண்ணுதல் முற்றுப்பெ றாதென வாகும். ... 3

[’பை’=mathematical pi; மாறிலி = constant]

எங்ஙனம் வட்டத்தின் சுற்றினை விட்டமொன்று
. நெருங்கவே முடியாத நிலையென் றாமோ
அங்ஙனம் சீவாத்மன் எத்தனை சாதனைகள்
. ஆற்றியும் பரமாத்மன் என்பதா காதாம்
எங்ஙனம் ஐன்ஸ்டயினின் தேற்றமும் ’பை’கொண்டே
. இப்பிர பஞ்சத்தில் அனிச்சயம் சொலுமோ
அங்ஙனம் பேதமுறும் சீவனும் ஆத்துமனும்
. சடமெனும் பொருட்களுடன் சீவனும் தாமே. ... 4

கருவிளம் காய் விளம் காய்
. விளம் காய் விளம் மா

உடையவர் விசிஷ்டாத்து வைதமாம் பரமாத்மன்
. உருவிலே வட்டம்போல் தோன்றிடும் சதுரம்!
விடையென இவ்வழியில் துவைதமும் அத்வைதமும்
. இணைத்தொரு வழியினையே முத்தியாய்ச் சொல்லும்!
நடுவென இருமுனையின் சராசரி யெடுப்பதுபோல்,
. அரிசுடாட் டில்’கோல்டன் மீன்’-தனைப் போல!
நடைமுறை நெறியெனவே நாரணன் நெறியிதுவே
. ஆகுமாம் நம்மிடையே பலவடி யார்க்கே! ... 5

பரமனே நீயென்றோர் சீவனி டம்சொன்னால்
. வருவதோ மிதப்பென்றே ஆகவாய்ப் புண்டு
பரமனாய் நீயென்றும் ஆவது இலையென்றால்
. வருவதோ விரக்தியென ஆகலாம்! எனவே
பரம்பொருள் குழப்பவட்டம் அவித்தையே உள்ளவரை
. பரம்பொருள் தெளிசதுரம் ஞானம துவந்தால்
உருவினில் பலபெயர்கள் வெளியிலே! பேருந்தின்
. உள்வரின் நடத்துனர்க்கோ அனைவரும் ’டிக்கெட்’! ... 6

--ரமணி, 10/08/2014, கலி.25/04/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Oct 26, 2014 10:18 pm

ஜகத்குரு தரிசனம்
24. ’நிறுத்திவிடு காமாட்சி!’
(அறுசீர் விருத்தம்: கருவிளம் மா காய் ... விளம் மா காய்)

உதவி:
http://periva.proboards.com/thread/8164/

திருவிசை நல்லூர் ஊரினிலே
. திருமுனி தந்தார் தரிசனமே
இருவிழி யற்ற பெண்ணொருத்தி
. இன்முகம் காணக் காத்திருந்தாள்
திரிபுர சுந்தரி வழிபாட்டில்
. தேர்ந்தவள் தங்க உண்ணச்செய்
தரிசனம் தருகுவன் அங்குவந்தே
. சங்கரர் சொன்னார் அடியரிடம்.

அடியவர் தானே தயாரித்த
. அரிசியா லான உப்மாவைப்
படையலாய்க் கொண்ட பெண்மணியும்
. பார்வையை மூடித் தியானிக்கக்
கிடைத்தத வள்கரம் ஶ்ரீசக்ரம்!
. இதையடுத் தேதோ செய்திடவே
கிடைத்தசக் கரமும் மறைந்ததுவே!
. சீடரும் கண்டே அதிசயித்தார்.

விளக்குகள் மெலிதாய் ஒளிர்ந்திடவே
. வினவிவினள் முனிவர் தரிசனத்தில்
விளக்குவீர் எனக்கேன் சகஸ்ராரம்
. விளங்கிடும் ஜோதி தெரியவில்லை?
உளத்தினை மூடிச் சிறுநேரம்
. ஒருமையில் தியானம் செய்யென்றார்
விளக்குகள் யாவும் அணையென்றார்
. விழிகளை மங்கையும் மூடிடவே.

அடுத்தவோர் நிமிடப் பொழுதினிலே
. அலறினாள் பெண்மணி தாளாதே!
கிடைத்தது ஜோதி தரிசனமே
. நிறுத்திதை போதும் காமாட்சி!
உடன்விளக் கெல்லாம் ஏற்றென்றார்
. புறவொளி யில்பெண் அமைதியுற்றாள்
சடுதியில் முனியும் சென்றுவிட்டார்
. அடியவர்க் கொன்றும் புரியவில்லை!

நடந்ததைக் கேட்ட அடியரிடம்
. நங்கையும் சொன்னாள் இங்ஙனமே
முடியுறும் ஜோதி தரிசனத்தை
. முனிவரும் எனக்குத் தந்தனரே
உடையவ ராயவர் காமாட்சி
. உருவினில் தந்த ஜோதியினை
இடிவரும் மின்னல் போல்நானும்
. இரண்டுநி மிடமே கண்ணுறலாம்!

அன்னைகா மாட்சி ஜோதியினை
. அதற்குமேல் காணத் தாங்காதே!
என்மனம் தாளா தேநானும்
. நிறுத்திடச் சொல்லி அலறினனே!
என்னவோர் பேறென அடியவரும்
. இந்நிலை வியந்தே துணுக்குற்றார்
மன்பதை போற்றும் மாமுனியே
. மன்றினில் ஆடும் இறையன்றோ?

--ரமணி, 26/10/2014, கலி.09/07/5115

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Jan 23, 2015 8:02 pm

ஜகத்குரு தரிசனம்
26. வறுமையே செல்வம்!
(எழுசீர் இயைபுக் குறள் வெண்செந்துறை)

அரசு அலுவலர் ஆன்ற முனிவரைத் தெரிசனம் செய்தார் நாடி
பெரிய வரிடம்தன் பெரிய சுமையென வறுமையே என்றார் வாடி. ... 1

கடனாய் மாதக் கடைசியில் வாங்கிக் காலம் ஓடுதல் சொன்னார்
கடமை அலுவலில் காப்பெனும் சம்பளம் போதிய தில்லை யென்றார். ... 2

உடனுறை மனையின் உற்ற மக்களின் அன்பெவண் என்றார் முனிவர்
நடந்து கொள்வரே நலிவிலும் அன்பாய் குறையிலும் உள்ளம் கனிவர். ... 3

சித்த நாழியென் எதிரில் அமர்வாய் என்றார் காஞ்சிப் பெரியவர்
எத்துணை பாக்கியம் என்றவர் எதிரே அமர்ந்து கொண்டார் வறியவர். ... 4

வந்தனர் ஒருசெல் வந்தர் மனையுடன் காணிக் கைகளை வைத்தே
முந்திரி பாதாம் முக்கனி மலர்களும் சந்தனத் தொடுசர்க் கரைத்தேன். ... 5

சால்முனி யிடம்பிர சாதம் பெற்றபின் செல்வரும் சொன்னதோர் செய்தி
ஆலெனச் செல்வமும் ஆட்களும் வாய்த்தும் வாய்த்திலை மனதில மைதி. ... 6

ஏழை யெனநான் இருந்திருந் தாலோ என்மனம் மகிழ்வுற் றிருக்கும்
நீழை யெனத்தொடர் நீரிழி நோயினால் நீக்குண வெல்லாம் விருப்பம்! ... [நீழை = நிழல்] ... 7

பிள்ளைகள் இருவரின் போக்கும் சரியிலை நல்லதை நாடுவ தில்லை.
உள்ளது துய்ப்பதில் உள்ளது துன்பமே வாழ்வதன் இறுதியில் தொல்லை! ... 8

நோயில் உடலும் நோவில் உளமும் நொந்திடும் வாழ்வென வாழ்வே?
தாயெனத் தாரம் தனயரும் தகவர் ஏழ்மையில் ஏதுறும் தாழ்வே! ... 9

நேரில் முனிவர் நிகழ்த்திய பாடம் கற்றுத் தெளிந்தார் அலுவலர்
சேரும் பணத்தில் செல்வது எதுவெனத் தெரிந்தவர் ஆனார் வலுவினர். ... 10

--ரமணி, 23/01/2015, கலி.09/10/5115

உதவி:
http://periva.proboards.com/thread/8532/

*****


Sponsored content

PostSponsored content



Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக