புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_c10 
34 Posts - 43%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_c10 
32 Posts - 40%
Balaurushya
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_c10 
2 Posts - 3%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_c10 
1 Post - 1%
jothi64
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_c10 
400 Posts - 49%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_c10 
27 Posts - 3%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Page 80 of 84 Previous  1 ... 41 ... 79, 80, 81, 82, 83, 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed May 26, 2021 8:29 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (538)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘கச்சினன்’ என்ற குறிப்பு வினைமுற்றைப் பார்த்தோம்!
இதில், காலம்தான் குறிப்பாகச் சுட்டப்படுகிறதே தவிரப், பொருள் வெளிப்படையாகத் தெரிகிறது. கச்சினன் – கச்சைக் கொண்டவன்.
ஆனால் , இன்னொரு வகைக் குறிப்பு வினைமுற்றுகள் உள்ளன; இவற்றில் , பொருளும் காலமும் குறிப்பால்தான் தோன்றும்!
‘அல்லன்’ – பொருள் தெளிவு இல்லை!
‘சொன்னான் அல்லன்’ – இப்போது தெளிவு வருகிறது!
சொன்னான் அல்லன் – அவன் சொல்லவில்லை
சரி! காலம்தான் தெளிவாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை!
நேற்றுச் சொன்னான் அல்லன் – நேற்று அவன் சொல்லவில்லை
இப்போது, காலம் தெளிவாயிற்று!
அஃதாவது, கூறுவான் சொல்வகையால் காலம் அறியப்படுகிறது! ‘காலம் குறிப்பால் உணர்தல்’ என்பது இதுவே!
இவ்வாறு, பொருளையும் காலத்தையும் குறிப்பால் உணர்த்தும் குறிப்பு வினைமுற்றாக ‘அல்லன்’ விளங்குகிறது!
இந்த ‘அல்லன்’ என்பதை , ‘அன்மை’ப் பொருள் பற்றி வந்த சொல் என்பர்.
‘அன்மை’ப் பொருள் கொண்ட குறிப்பு வினைமுற்று ‘அல்லன்’ என்பதோடு இவ்வகைக் குறிப்பு வினைமுற்றுகள் முடிகின்றனவா?
இல்லை! ஒரு பெரிய பட்டியலையே தொல்காப்பியர் தருகிறார்!:

அன்மையின் இன்மையின் உண்மையின் வன்மையின்
அன்ன பிறவுங் குறிப்பொடு கொள்ளும்
என்ன கிளவியுங் குறிப்பே காலம் (வினையியல் 17)

இதற்குச்,சேனாவரையர் தந்துள்ள குறிப்பு வினைமுற்றுகளை வருமாறு பட்டியலிட்டு நாம் விளக்கலாம்!
1 . அல்லன் – ‘அன்மை’ப் பொருட்குறிப்பைத் தரும் உயர்திணை ஆண்பாற் குறிப்பு வினைமுற்று.
2 . அல்லள் – ‘அன்மை’ப் பொருட்குறிப்பைத் தரும் உயர்திணைப் பெண்பாற் குறிப்பு வினைமுற்று.
3 . அல்லர் – ‘அன்மை’ப் பொருட்குறிப்பைத் தரும் உயர்திணைப் பலர்பாற் குறிப்பு வினைமுற்று.
4 .இலன் – ‘இன்மை’ப் பொருட்குறிப்பைத் தரும் உயர்திணை ஆண்பாற் குறிப்பு வினைமுற்று.
5 .இலள் – ‘இன்மை’ப் பொருட்குறிப்பைத் தரும் உயர்திணைப் பெண்பாற் குறிப்பு வினைமுற்று.
6 .இலர் – ‘இன்மை’ப் பொருட்குறிப்பைத் தரும் உயர்திணைப் பலர்பாற் குறிப்பு வினைமுற்று.
7 .உளன் – ‘உண்மை’ப் பொருட்குறிப்பைத் தரும் உயர்திணை ஆண்பாற் குறிப்பு வினைமுற்று.
8 .உளள் – ‘உண்மை’ப் பொருட்குறிப்பைத் தரும் உயர்திணைப் பெண்பாற் குறிப்பு வினைமுற்று.
9 .உளர் – ‘உண்மை’ப் பொருட்குறிப்பைத் தரும் உயர்திணைப் பலர்பாற் குறிப்பு வினைமுற்று.
10.வல்லன் – ‘வன்மை’ப் பொருட்குறிப்பைத் தரும் உயர்திணை ஆண்பாற் குறிப்பு வினைமுற்று.
11.வல்லள் – ‘வன்மை’ப் பொருட்குறிப்பைத் தரும் உயர்திணைப் பெண்பாற் குறிப்பு வினைமுற்று.
12. .வல்லர் – ‘வன்மை’ப் பொருட்குறிப்பைத் தரும் உயர்திணைப் பலர்பாற் குறிப்பு வினைமுற்று.
13 . நல்லன் - ‘நன்மை’ப் பொருட்குறிப்பைத் தரும் உயர்திணை ஆண்பாற் குறிப்பு வினைமுற்று.
14 . நல்லள் - ‘நன்மை’ப் பொருட்குறிப்பைத் தரும் உயர்திணைப் பெண்பாற் குறிப்பு வினைமுற்று.
15 . நல்லர் - ‘நன்மை’ப் பொருட்குறிப்பைத் தரும் உயர்திணைப் பலர்பாபாற் குறிப்பு வினைமுற்று.
16 . தீயன் - ‘தீமை’ப் பொருட்குறிப்பைத் தரும் உயர்திணை ஆண்பாற் குறிப்பு வினைமுற்று.
17 .தீயள் - ‘தீமை’ப் பொருட்குறிப்பைத் தரும் உயர்திணைப் பெண்பாற் குறிப்பு வினைமுற்று.
18 .தீயர் - ‘தீமை’ப் பொருட்குறிப்பைத் தரும் உயர்திணைப் பலர்பாற் குறிப்பு வினைமுற்று.
19 . உடையன் - ‘உடமை’ப் பொருட்குறிப்பைத் தரும் உயர்திணை ஆண்பாற் குறிப்பு வினைமுற்று.
20 . உடையள் - ‘உடமை’ப் பொருட்குறிப்பைத் தரும் உயர்திணைப் பெண்பாற் குறிப்பு வினைமுற்று.
21 . உடையர் - ‘உடமை’ப் பொருட்குறிப்பைத் தரும் உயர்திணைப் பலர்பாற் குறிப்பு வினைமுற்று.

இந்த 21 குறிப்பு வினைமுற்றுகளுக்கும், மேலே ‘அல்லன்’ என்பதற்கு நாம் கண்ட விளக்கத்தையே கொள்க!

மேலனவற்றுள், ‘அன்மை’க்கான பொருள் பற்றி முன்பே கண்டோம்!
இன்மை – இல்லாத் தனமை
உண்மை – உளவாம் தன்மை
வன்மை – ஆற்றல் உடைத் தன்மை
நன்மை – நல்லதுடைத் தன்மை
தீமை – தீயதுடைத் தன்மை
உடமை – உடைத்தாதல் தன்மை
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jun 18, 2021 11:02 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (539)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அடுத்து, குறிப்பு வினைமுற்றுச் சொற்களுக்கான ஈறுகளைக் காட்டுகிறார் தொல்காப்பியர்!:

பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
அன்ன மரபிற் குறிப்பொடு வரூஉங்
காலக் கிளவி உயர்திணை மருங்கின்
மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே (வினையியல் 19)

‘பன்மையும் ஒருமையும் பாலறி வந்த’ – பன்மையு ஒருமையும் ஆகிய பால் விளக்கி ,
‘குறிப்பொடு வரூஉம்’ – குறிப்புப் பொருண்மை உடையவாய் வரக்கூடிய வினைச் சொல்லானது,
‘ உயர்திணை மருங்கின்,மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே’ – முன்னர் உயர்திணை பற்றிப் பேசியபோது கூறப்பட்ட தெரிநிலை வினையோடு ஒக்கும்!

அஃதாவது, தெரிநிலை வினை முற்றுகளின் ஈறுகளில் தக்கவற்றைக் கொண்டுதான் குறிப்பு வினைமுற்றுகளின் ஈறுகளும் அமைகின்றன என்பதே தொல்காப்பியரின் ஆய்வு!
‘ஈறு’என்ற சொல்லே நூற்பாவில் இல்லையே?
நல்ல வினா!
நூற்பாவை மறுபடியும் பாருங்கள்!
‘பன்மையும் ஒருமையும் பாலறி வந்த, அன்ன மரபு’ என்றுள்ளதா?
அது என்ன மரபு?
தெரிநிலை வினைமுற்றுகளில் , ஈறுகளால் ஒருமை, பன்மை, தன்மை, முன்னிலை விளங்கும் மரபு!
வந்தான் – தெரிநிலை வினைமுற்று; ‘ஆன்’ ஈறு, ஒருமையைத் தெரிவித்ததா?
வந்தேன் – தெரிநிலை வினைமுற்று; ‘ஏன்’ ஈறு, தன்மையைச் சுட்டியதா?
கேட்பர் – தெரிநிலை வினைமுற்று; ‘அர்’ ஈறு, பன்மையைச் சொன்னதா?
மறவார் - தெரிநிலை வினைமுற்று; ‘ஆர்’ ஈறு, படர்க்கையைக் கூறியதா?

எனவே , ‘பன்மையும் ஒருமையும் பாலறி வந்த,அன்ன மரபு’ என்பது, ஈறுகளால் அறியப்படும் ஒருமை பன்மைகளையும், தன்மை, முன்னிலை முதலிய இடங்களையும் அறியும் மரபு ஆம்.
இப்படித்தான் , குறிப்புவினைமுற்று ஈறுகள் பற்றித் தெரிவித்துள்ளார் தொல்காப்பியர்!
இதனைச் சேனாவரையரின் உரைக்கு உரை எனக் கொள்ளலாம்!

வினையியலில் நூற்பா 5 முதல் 10 வரை கூறப்பட்ட நூற்பாக்களின்படி, தெரிநிலை உயர்திணை வினைமுற்று ஈறுகள் மொத்தம் 23. இவற்றில், குறிப்பு வினைமுற்றுகளுக்கு ஏற்ற ஈறுகள் என்று சேனாவரையர் கண்டுள்ளது 12. அவை – அம், ஆம், எம்,ஏம்,என், ஏன், அன், ஆன், அள், ஆள்,அர் , ஆர்.

இப் பன்னிரு ஈறுகள் கொண்ட குறிப்பு வினைமுற்றுகளுக்கும் எடுத்துக்காட்டுகள் தருகிறார் சேனாவரையர்; இவ் வெடுத்துக்காட்டுகளை ஆய்ந்து, நாம் வருமாறு வகைப்படுத்தலாம்! :
1 . கரியம் – ‘அம்’ ஈற்று உளப்பாட்டுத் தன்மைப் பன்மை உயர்திணைக் குறிப்பு வினைமுற்று
2 . கரியாம் – ‘ஆம்’ ஈற்று உளப்பாட்டுத் தன்மைப் பன்மை உயர்திணைக் குறிப்பு வினைமுற்று
3. கரியெம் – ‘எம்’ ஈற்றுத் தன்மைப் பன்மை உயர்திணைக் குறிப்பு வினைமுற்று
4. கரியேம் – ‘ஏம்’ ஈற்றுத் தன்மைப் பன்மை உயர்திணைக் குறிப்பு வினைமுற்று
5. கரியென் – ‘என்’ ஈற்றுத் தன்மை ஒருமை உயர்திணைக் குறிப்பு வினைமுற்று
6. கரியேன் – ‘ஏன்’ ஈற்றுத் தன்மை ஒருமை உயர்திணைக் குறிப்பு வினைமுற்று
7. கரியன் – ‘அன்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை ஆண்பால் உயர்திணைக் குறிப்பு வினைமுற்று
8. கரியான் – ‘ஆன்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை ஆண்பால் உயர்திணைக் குறிப்பு வினைமுற்று
9. கரியள் – ‘அள்’ ஈற்றுப் படர்க்கை ஒருமைப் பெண்பால் உயர்திணைக் குறிப்பு வினைமுற்று
10. கரியாள் – ‘ஆள்’ ஈற்றுப் படர்க்கை ஒருமைப் பெண்பால் உயர்திணைக் குறிப்பு வினைமுற்று
11. கரியர் – ‘அர்’ ஈற்றுப் படர்க்கைப் பலர்பால் உயர்திணைக் குறிப்பு வினைமுற்று
12. கரியார் – ‘ஆர்’ ஈற்றுப் படர்க்கைப் பலர்பால் உயர்திணைக் குறிப்பு வினைமுற்று

இத்துடன் , உயர்திணை வினைகளை முடித்துக்கொண்டு, தொல்காப்பியர் மேற்செல்கிறார்!
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 18, 2021 12:02 pm

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 1571444738

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 18, 2021 12:13 pm

அருமை அய்யா.நன்றி.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jun 18, 2021 1:07 pm

சக்தி18, இரமணியன் ஆகியோர்க்கு நன்றி!

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 80 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jun 18, 2021 1:07 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (540)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது தொல்காப்பியர் பேசுவது அஃறிணை வினைச்சொற்கள் பற்றி!
முதற்கண், பன்மை வினைமுற்றுப் பற்றி ஓதுகிறார்:-

“அஆ வஎன வரூஉம் இறுதி
அப்பான் மூன்றே பலவற்றுப் படர்க்கை” (வினையியல் 19)

அஃதாவது- ’அ’, ‘ஆ’, ‘வ’ என்ற மூன்று ஈறுகளையும் கொண்டு பலவின்பால் வினைமுற்றுகள் அமையும்!
நச்சர் தரும் சுருக்க எடுத்துக்காட்டுகளை நாம் வருமாறு பட்டியலிடலாம்!:-

1. தொக்கன – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று(தொக்கன- எஞ்சிநின்றன)
2. தொக்க – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று(தொக்க- எஞ்சிநின்றன)
3. தொக்கில – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று(தொக்கில- எஞ்சிநில்லாதன)
4. உண்டன – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
5. உண்ட – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
6. உண்டில – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று
7. வந்தன – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
8. வந்த – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
9. வந்தில – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று
10. சென்றன – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
11. சென்ற – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
12. சென்றில – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று
13. அஞ்சின – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
14. தப்பின – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
15. உரிஞின – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று (உரிஞின- உரிஞ்சின)
16. பொருநின – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று (பொருநின - பொருந்தின)
17. நண்ணின – ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று (நண்ணின – நெருங்கின)
18. செருமின - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று (செருமின – நிரம்பின)
19. துன்னின - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று (துன்னின – அணுகின)
20. போயின - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
21. சேரின - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
22. சொல்லின - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
23. மேவின - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
24. துள்ளின - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
25. போயன - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
26. போய - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் இறந்தகால வினைமுற்று
27. உண்ணாநின்றன - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் நிகழ்கால வினைமுற்று
28. உண்ணாநின்ற - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் நிகழ்கால வினைமுற்று
29. உண்ணாநின்றில - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் நிகழ்கால எதிர்மறை வினைமுற்று
30. உண்கின்றன - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் நிகழ்கால வினைமுற்று
31. உண்கின்ற - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் நிகழ்கால வினைமுற்று
32. உண்கின்றில - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் நிகழ்கால எதிர்மறை வினைமுற்று
33. உண்பன - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
34. உண்ப - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
35. உண்ணல - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால எதிர்மறை வினைமுற்று
36. வருவன - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
37. வருவ - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
38. உரிஞுவன - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
39. உரிஞுவ - ‘அ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
40. உண்ணா- ‘ஆ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால எதிர்மறை வினைமுற்று
41. தின்னா- ‘ஆ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால எதிர்மறை வினைமுற்று
42. உண்குவ - ‘வ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
43. தின்குவ - ‘வ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
44. உண்ணுவ - ‘வ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
45. ஓடுவ - ‘வ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
46. தாவுவ - ‘வ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
47. உரிஞுவ - ‘வ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
48. செருமுவ - ‘வ’ ஈற்றுப் பலவின்பால் எதிர்கால வினைமுற்று
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jun 19, 2021 11:42 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (541)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வினையியலில், இப்போது படர்க்கை ஒன்றன்பால் வினைபற்றிப் பேசுகிறார் தொல்காப்பியர் :-

“ஒன்றன் படர்க்கை தறட வூர்ந்த
குன்றிய லுகரத் திறுதி யாகும்” (வினையியல் 20)

இதன் கருத்தாவது – ‘து’, ‘று’, ‘டு’ ஆகிய மூன்று ஈறுகளைப் பெற்றே படர்க்கை ஒன்றன்பால் வினைமுற்று அமையும்!

இதற்கு நச்சரின் சுருக்க எடுத்துக்காட்டுகளை , நாம் விளக்கப் பட்டியலாகத் தரலாம்!:-

1. புக்கது – ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று (புக்கது- புகுந்தது)
2. புக்கிலது – ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று (புக்கிலது- புகவில்லை)
3. உண்டது – ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று
4. உண்டிலது – ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று
5. வந்தது – ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று
6. வந்திலது – ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று
7. சென்றது – ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று
8. சென்றிலது – ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று
9. எஞ்சியது – ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று
10. தப்பியது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று
11. உரிஞியது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று(உரிஞியது- உரிஞ்சியது)
12. கண்ணியது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று
13. தப்பியது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று
14. பொருநியது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று (பொருநியது- பொருந்தியது)
15. பொருமியது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று (பொருமியது- துன்புற்றது)
16. துன்னியது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று (துன்னியது- நெருங்கியது)
17. போயது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று
18. கூரியது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று
19. சொல்லியது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று
20. மேவியது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று
21. துள்ளியது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று
22. நடவாநின்றது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் நிகழ்கால வினைமுற்று (நடவாநின்றது- நடக்கின்றது)
23. நடவாநின்றிலது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் நிகழ்கால எதிர்மறை வினைமுற்று(நடவாநின்றிலது- நடக்கவில்லை)
24. நடக்கின்றது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் நிகழ்கால வினைமுற்று
25. நடக்கின்றிலது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் நிகழ்கால எதிமறை வினைமுற்று
26. உண்ணாநின்றது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் நிகழ்கால வினைமுற்று
27. உண்ணாநின்றிலது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் நிகழ்கால எதிர்மறை வினைமுற்று
28. உண்கின்றிலது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் நிகழ்கால எதிர்மறை வினைமுற்று
29. உண்பது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் எதிர்கால வினைமுற்று
30. செல்வது - ‘து’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் எதிர்கால வினைமுற்று
31. புக்கன்று - ‘று’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று (புக்கன்று - புகுந்தது)
32. புக்கின்று - ‘று’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று(புக்கின்று - புகவில்லை)
33. உண்டன்று - ‘று’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று(உண்டன்று -சாப்பிட்டது)
34. உண்டின்று - ‘று’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று(உண்டின்று - சாப்பிடவில்லை)
35. வந்தன்று - ‘று’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று(வந்தன்று - வரவில்லை)
36. சென்றன்று - ‘று’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று(சென்றன்று - சென்றது)
37. சென்றின்று - ‘று’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று(சென்றின்று - செல்லவில்லை)
38. கூயிற்று - ‘று’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று(கூயிற்று - கூவியது)
39. கூயின்று - ‘று’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று(கூயின்று - கூவவில்லை)
40. போயிற்று - ‘று’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால வினைமுற்று(போயிற்று - போனது)
41. போயின்று - ‘று’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் இறந்தகால எதிர்மறை வினைமுற்று(போயின்று - போகவில்லை)
42. குண்டுகட்டு – ‘டு’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் குறிப்பு வினைமுற்று (குண்டுகட்டு – குண்டான கண்ணையுடையது)
43. குறுந்தாட்டு - ‘டு’ ஈற்றுப் படர்க்கை ஒன்றன்பால் குறிப்பு வினைமுற்று (குறுந்தாட்டு – குறுகிய தாளை உடையது)

எடுத்துக்கட்டுகள் 1 முதல் 30 வரையானவை, உயிர்த்தொடர்க் குற்றியலுகர ஈறு பெற்றவை; 31 முதல் 37 வரையானவை மற்றும் 39,41 ஆகியவை மென்றொடர்க் குற்றியலுகர ஈறு பெற்றவை; 38 , 40, 42,43 ஆகியன வன்றொடர்க் குற்றியலுகர ஈறு கொண்டவை. 42,43 ஆகியவை மூன்று காலங்களுக்கும் பொருந்துவன.

இதுவரை ஆறு ஈறுகளைப் பார்த்துள்ளோம்!
அ, ஆ,வ, து, று, டு – ஆகியனவே இவை!
இந்த ஆறு ஈறுகளைக் கொண்டே படர்க்கைப் பலவின்பால் அஃறிணை வினைமுற்றுச் சொற்களும், படர்க்கை ஒன்றன்பால் அஃறிணை வினைமுற்றுச் சொற்களும் அமைகின்றன என்று மேலே பார்த்தோம்! இதனைத்தான், மீண்டும் ஒரு தொகுப்புரைபோலச் சொல்லுகிறார் தொல்காப்பியர்:-

“பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
அம்மூ விரண்டும் அஃறிணை யவ்வே” (வினையியல் 21)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 20, 2021 10:16 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (542)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

உயர்திணை வினைகளைப் பார்த்தபோது, உயர்திணைக் குறிப்பு வினைமுற்றுகளைக் கண்டோம்! அதைப்போன்றே இப்போது அஃறிணை வினைமுற்றுகளைப் பார்த்துள்ள நாம் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகளைப் பார்க்கப் போகிறோம்!

முதலாவதாக ‘எவன்’ என்னும் குறிப்பு வினைமுற்று:-

“அத்திணை மருங்கின் இருபாற் கிளவிக்கும்
ஒக்கும் என்ப எவனென் வினாவே” (வினையியல் 22)

‘எவன்’ எனும் வினாவானது, அஃறிணைச் சொல்லாய், ஒன்றன் பாலுக்கும் பலவின் பாலுக்கும் பொருந்தி வரும்!

சேனாவரையர் எடுத்துக்காட்டுகள்- ‘அஃது எவன்?’ ; ‘அவை எவன்?’
‘அஃது எவன்?’ – என்பதில், ‘அஃது’ என்ற அஃறிணை ஒருமைக்கு இயைய ‘எவன்’ வந்துள்ளது.
‘அவை எவன்?’ – என்பதில், ‘அவை’ என்ற அஃறிணைப் பன்மைக்கு ஏற்ப அதே ‘எவன்’ வந்துள்ளது.
இந்த ‘எவன்’ எனும் வினாச் சொல், ‘குறிப்பு வினைமுற்று’ என்று மேல் தொல்காப்பியர் நூற்பாவில் கூறப்படவில்லை; சேனாவரையர் உரையில்,’எவன்’, குறிப்பு வினைமுற்றாகக் கூறப்பட்டுள்ளது.நன்னூலிலும் (சூத்தி. 350) ‘எவன்’ , குறிப்பு வினைமுற்றாகவே வருகிறது.
சேனாவரையர் இந்த ‘எவன்’ பற்றிச் சிறிது ஆய்ந்துள்ளார். ‘எவன் என்பதோர் பெயரும் உண்டு; அஃது இக் காலத்து என் என்றும், என்னை என்றும் நிற்கும்’.
ஆகவே, ‘எவன்’ எனும் வினாச் சொல், குறிப்பு வினைமுற்று மற்றும் பெயர்ச்சொல் ஆகிய இரு வகைகளில் வரும் என்பது தெளிவாகிறது.
இங்கே சிறிது விளக்கம் தேவைப்படுகிறது!
தொல்காப்பியம் கிளவியாக்கம் நூற்பா 31இல் ‘எவன்’ பேசப்பட்டுள்ளது. அங்கே, அறியாப் பொருளாக இருந்தால் ‘எவன்’ என்பதைப் பெயர்ச்சொல் என்று கருதலாம் என விதி கூறப்பட்டுள்ளது.
ஆகவே அறிந்த பொருளாக இருந்தால் ‘எவன்’ என்பதைக் குறிப்பு வினைமுற்றாகக் கருத இடம் ஏற்படுகிறது!

பூட்டிய பெட்டிக்குள் இருப்பது எவன்? – இங்கு வந்துள்ள ‘எவன்’, பெயர்ச் சொல். ஏனெனில், அந்தப் பொருள் இன்னது என்று கேட்டவனுக்குத் தெரியாது; அவன் பொருளைப் பார்க்கவில்லை!
ஓரிடத்தில் கொட்டிவைத்துள்ள பொருளைக் காட்டி, ‘இஃது எவன்?’ என்று கேட்டால்,
இங்கு வந்துள்ள ‘எவன்’, குறிப்பு வினைமுற்று! ஏனெனில், அந்தப் பொருளை அவன் பார்த்துத்தான் மேல் விளக்கத்திற்காகக் கேட்கிறான்.இந்த ‘எவன்’ என்பதில் ஒரு வினைத் தன்மை உள்ளது!
எவன் – என்னவாக இருக்கிறது ; இந்த ‘இருத்த’லே வினைத்தன்மை.
ஒரு பொருள் பற்றி, ‘இஃது எவன்?’ எனவும் கேட்கலாம்; பல பொருட்கள் பற்றியும் ‘இவை எவன்?’ என்றும் கேட்கலாம்!
’நீ இப்படிப் பேசுவதால் பயன் எவன்?’ – இதில் வந்துள்ள ‘எவன்’ , பெயர்ச்சொல்!
ஏனெனில், ‘நீ இப்படிப் பேசுவதால் பயன் இல்லை’ என்பதே தொடர்க் கருத்து; ஆகவே, பார்க்காத பொருள் பற்றி ‘எவன்’ வந்துள்ளதால், அது வினாப் பெயர்! இந்த ‘எவன்’ என்பதில் வினைத்தன்மை இல்லை! இங்கே எவன் – என்ன என்பது மட்டுமே. உரையாசிரியன்மார் நடைகளில் அடிக்கடி ‘என்னை?’என்ற வினாவைப் பார்த்திருப்பீர்கள்; இந்த ‘என்னை’ , பெயர்ச்சொல்லான ‘எவன்’ என்பதன் மரூஉ.
இந்த ‘எவன்’ என்ற வினா, இப்போது வழக்கில் இல்லை! தொல்காப்பிய உரையாசிரியர்கள் காலத்திலேயே அருகிவிட்டது!
இன்றைய இலக்கணத்தில்,
‘எவன்’ – பிரதிப் பெயர்ச்சொல் (interrogative pronoun)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 20, 2021 10:17 pm

PostDr.S.Soundarapandian Tue Jun 22, 2021 8:43 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (543)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘எவன்’ எனும் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றை ஓதிய தொல்காப்பியர், அடுத்துச் சில அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகளை அடுக்கிக் காட்டுகிறார்!:-

“இன்றில உடைய என்னுங் கிளவியும்
அன்றுடைத் தல்ல வென்னும் கிளவியும்
பண்புகொள் கிளவியும் உளவென் கிளவியும்
பண்பின் ஆகிய சினைமுதற் கிளவியும்
ஒப்பொடு வரூஉங் கிளவியொடு தொகைஇ
அப்பாற் பத்துங் குறிப்பொடு கொள்ளும்” (வினையியல் 23)

தொல்காப்பியர் இந் நூற்பாவில் 10 அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகளுக்கான பொருள் அடிப்படைகளைத் தெரிவித்து, இப் பத்துப் பொருள் அடிப்படையில் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள் பிறக்கும் என்கிகிறார். இவற்றையும், இவற்றுக்கு இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகளையும் கீழ்வருமாறு பட்டியலாக விளக்கலாம்!:

1. ‘இன்று’ – இப் பொருண்மை அடிப்படையில் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள் தோன்றுவதற்கு எடுத்துக்காட்டுகள்: கோடின்று; செவியின்று
கோடின்று – கொம்பிலது
செவியின்று - செவியிலது
2. ‘இல’ – இப் பொருண்மை அடிப்படையில் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள் தோன்றுவதற்கு எடுத்துக்காட்டுகள்: கோடில; செவியில
(கோடு - கொம்பு)
3. ‘உடைய’ – இப் பொருண்மை அடிப்படையில் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள் தோன்றுவதற்கு எடுத்துக்காட்டுகள்: கோடுடைய; செவியுடைய
4. ‘அன்று’ – இப் பொருண்மை அடிப்படையில் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள் தோன்றுவதற்கு எடுத்துக்காட்டுகள்: நாயன்று; நரியன்று
5. ‘உடைத்து’ – இப் பொருண்மை அடிப்படையில் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள் தோன்றுவதற்கு எடுத்துக்காட்டுகள்: கோடுடைத்து; செவியுடைத்து
6. ‘அல்ல’ – இப் பொருண்மை அடிப்படையில் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள் தோன்றுவதற்கு எடுத்துக்காட்டுகள்: உழுந்தல்ல; பயறல்ல
7. ‘பண்புகொள் கிளவி’ – இப் பொருண்மை அடிப்படையில் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள் தோன்றுவதற்கு எடுத்துக்காட்டுகள்: கரியது; கரிய
8. ‘உள’ – இப் பொருண்மை அடிப்படையில் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள் தோன்றுவதற்கு எடுத்துக்காட்டுகள்: உழுந்துள; பயறுள
9. ‘பண்பின் ஆகிய சினைமுதற் கிளவி’ – இப் பொருண்மை அடிப்படையில் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள் தோன்றுவதற்கு எடுத்துக்காட்டுகள்: குறுங்கோட்டது; குறுங்கோட்டன
குறுங்கோட்டது(ஒருமை) – குறுகிய கொம்பைப் பெற்றது
குறுங்கோட்டன (பன்மை)– குறுகிய கொம்பைப் பெற்றவை
10. ‘ஒப்பொடு வரூஉங் கிளவி’ – இப் பொருண்மை அடிப்படையில் அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள் தோன்றுவதற்கு எடுத்துக்காட்டுகள்: பொன்னன்னது; பொன்னன்ன
பொன்னன்னது(ஒருமை) – பொன் போன்றது
பொன்னன்ன(பன்மை) – பொன் போன்றவை

எடுத்துக்காட்டு அஃறிணைக் குறிப்பு வினைமுற்றுகள் யாவுமே காலத்தை வெளிப்படையாகக் காட்டாத குறிப்பு வினைமுற்றுகள் என்பதைக் கவனிக்க!
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 80 of 84 Previous  1 ... 41 ... 79, 80, 81, 82, 83, 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக