புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10 
66 Posts - 41%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10 
2 Posts - 1%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10 
2 Posts - 1%
சிவா
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10 
432 Posts - 48%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10 
29 Posts - 3%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 79 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 79 of 84 Previous  1 ... 41 ... 78, 79, 80 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed May 19, 2021 12:09 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (528)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வினையியலில் இதுவரை வினையின் பொதுத் தன்மைகளைப் பேசிய தொல்காப்பியர், இப்போது உயர்திணை வினையைக் கையில் எடுக்கிறார்! :

அவைதாம்
அம்ஆம் எம்ஏம் என்னுங் கிளவியும்
உம்மொடு வரூஉங் கடதற வென்னும்
அந்நாற் கிளவியோ டாயெண் கிளவியும்
பன்மை உரைக்குந் தன்மைச் சொல்லே (வினையியல் 5)

‘அவைதாம்’ என்று சுட்டுவது , உயர்திணை வினைமுற்றுகளை.
‘அம்ஆம் எம்ஏம் என்னுங் கிளவியும்’ என்பது , ‘அம்’ , ‘ஆம்’ , ‘எம்’ , ‘ஏம்’ ஆகிய நான்கு ஈறுகளை உடைய வினைமுற்றுச் சொற்களை
‘உம்மொடு வரும் கடதற’ என்பது , ‘கும்’ , ‘டும்’ , ‘தும்’ , ‘றும்’ ஆகிய நான்கு ஈறுகளைக் கொண்ட வினைமுற்றுச் சொற்களை.
‘ஆயெண் கிளவியும்,பன்மை உரைக்குந் தன்மைச் சொல்லே’ என்பது, மேற்சொன்ன எட்டு ஈறுகளையும் பெற்ற வினைமுற்றுச் சொற்கள் எல்லாம் தன்மைப் பன்மையை உணர்த்துவதை.

மேல் ஈறுகள் கொண்ட தன்மைப் பன்மை (First person plural) வினைகளுக்குத், தெய்வச்சிலையார் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம்!:
1 . உண்டனம் ( ‘அம்’ ஈறு) (தன்மைப் பன்மை இறந்தகால வினைமுற்று)
2 . உண்டாம் ( ‘ஆம்’ ஈறு) (தன்மைப் பன்மை இறந்தகால வினைமுற்று)
3 . உண்டனெம் ( ‘எம்’ ஈறு) (தன்மைப் பன்மை இறந்தகால வினைமுற்று)
4 . உண்டேம் ( ஏம்’ ஈறு) (தன்மைப் பன்மை இறந்தகால வினைமுற்று)
5 . உண்கின்றனம் ( ‘அம்’ ஈறு) (தன்மைப் பன்மை நிகழ்கால வினைமுற்று)
6 . உண்கின்றாம் ( ‘ஆம்’ ஈறு) (தன்மைப் பன்மை நிகழ்கால வினைமுற்று)
7 . உண்கின்றனெம் (‘எம்’ ஈறு) (தன்மைப் பன்மை நிகழ்கால வினைமுற்று)
8 . உண்கின்றேம் ( ‘ஏம்’ ஈறு) (தன்மைப் பன்மை நிகழ்கால வினைமுற்று)
9 . உண்கும் ( ‘கும்’ ஈறு) (தன்மைப் பன்மை எதிர்கால வினைமுற்று)
10 . உண்டும் ( ‘டும்’ ஈறு) (தன்மைப் பன்மை எதிர்கால வினைமுற்று)
11 . வருதும் ( ‘தும்’ ஈறு) (தன்மைப் பன்மை எதிர்கால வினைமுற்று)
12 . சேறும் ( ‘றும்’ ஈறு) (தன்மைப் பன்மை எதிர்கால வினைமுற்று) (சேறும் – செல்லுவோம்)

மேல் 12 எடுத்துக்காட்டுகளுமே உடன்பாட்டுப் பொருளில் வந்துள்ளதை நோக்குக!
அப்படியானால், எதிர்மறைப் பொருளில் தன்மைப் பன்மை வினைமுற்றுச் சொற்கள் வாராவா?
வரும்!
எடுத்துக்காட்டுகள் :
1 . உண்டனம் (உடன்பாட்டுப் பொருள்) – உண்டிலம் (எதிர்மறைப் பொருள்) (இரண்டிற்கும் ‘அம்’ ஈறு)
2 . உண்டாம் (உடன்பாட்டுப் பொருள்) – உண்டிலாம் (எதிர்மறைப் பொருள்) (இரண்டிற்கும் ‘ஆம்’ ஈறு)
3 . உண்டனெம் (உடன்பாட்டுப் பொருள்) – உண்டிலெம் (எதிர்மறைப் பொருள்) (இரண்டிற்கும் ‘எம்’ ஈறு)
4 . உண்டேம் (உடன்பாட்டுப் பொருள்) – உண்டிலேம் (எதிர்மறைப் பொருள்) (இரண்டிற்கும் ‘ஏம்’ ஈறு)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed May 19, 2021 12:12 pm

[b]தொடத் தொடத் தொல்காப்பியம் (529) [b]
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தன்மைப் பன்மை வினைமுற்றுகளைச் சொன்னபின், தன்மை ஒருமை வினைமுற்றைக் (First person singular finite verb) கூறுகிறார்!:

கடதற வென்னும்
அந்நான் கூர்ந்த குன்றிய லுகரமோடு
என்ஏன் அல்என வரூஉம் ஏழும்
தன்வினை உரைக்குந் தன்மைச் சொல்லே (வினையியல் 6)

‘ கடதற வென்னும், அந்நான் கூர்ந்த குன்றிய லுகரமோடு’ என்பது, ‘கு’ , ‘டு’, ‘து’, ‘று’ எனும் ஈறுகளைக் கொண்ட வினை முற்றுகளை.
‘என்ஏன் அல்என வரூஉம் ஏழும்’ என்பது, ‘என்’, ‘ஏன்’, ‘அல்’ எனும் ஈறுகளைக் கொண்ட வினைமுற்றுகளை.
‘ஏழும், தன்வினை உரைக்குந் தன்மைச் சொல்லே’ என்பது, மேல் ஏழு ஈறுகளைக் கொண்ட வினைமுற்றுகள், தன்மை ஒருமை வினைமுற்றுகளாம் என அறிவிப்பது.

மேல் ஈறுகளுக்குக், கல்லாடனார் தரும் எடுத்துக்காட்டுகளை வருமாறு நாம் விளக்கலாம்!:
1 . உண்கு ( ‘கு’ ஈறு பெற்ற எதிர்கால வினைமுற்று) ( உண்கு - உண்பேன்)
2 . உண்டு ( ‘டு’ ஈறு பெற்ற இறந்தகால வினைமுற்று) ( உண்டு - உண்டேன்)
3 . வருது ( ‘து’ ஈறு பெற்ற எதிர்கால வினைமுற்று) ( வருது - வருவேன்)
4. சேறு ( ‘று’ ஈறு பெற்ற எதிர்கால வினைமுற்று) ( சேறு - செல்வேன்)
5 . உண்டனென் ( ‘என்’ ஈறு பெற்ற இறந்தகால வினைமுற்று) (உண்டனென் -
சாப்பிட்டேன்)
6 .உண்டிலென் ( ‘என்’ ஈறு பெற்ற இறந்தகால எதிர்மறை வினைமுற்று) (உண்டிலென் -
சாப்பிட்டேன் அல்லேன்)
7 . உண்ணாநின்றனென் ( ‘என்’ ஈறு பெற்ற நிகழ்கால வினைமுற்று)( உண்ணாநின்றனென்-
சாப்பிடுகிறேன்)
8 . உண்ணாநின்றிலென் ( ‘என்’ ஈறு பெற்ற நிகழ்கால எதிர்மறை வினைமுற்று)(
உண்ணாநின்றிலென்- சாப்பிடுகிறேன் அல்லேன்)
9 . உண்பென் ( ‘என்’ ஈறு பெற்ற எதிர்கால வினைமுற்று)( உண்பென்- சாப்பிடுவேன்)
10 . உண்ணலென் ( ‘என்’ ஈறு பெற்ற எதிர்கால எதிர்மறை வினைமுற்று)( உண்ணலென்-
சாப்பிடுவேன் அல்லேன்)
11 . உண்டேன் ( ‘ஏன்’ ஈறு பெற்ற இறந்தகால வினைமுற்று) (உண்டேன் - சாப்பிட்டேன்)
12 . உண்டிலேன் ( ‘ஏன்’ ஈறு பெற்ற இறந்தகால எதிர்மறை வினைமுற்று)
(உண்டேன் அல்லேன் – சாப்பிட்டேன் அல்லேன்)
13 . உண்கின்றேன் ( ‘ஏன்’ ஈறு பெற்ற நிகழ்கால வினைமுற்று) (உண்கின்றேன் -
சாப்பிடுகிறேன்)
14 . உண்கின்றிலேன் ( ‘ஏன்’ ஈறு பெற்ற நிகழ்கால எதிர்மறை வினைமுற்று)
(உண்கின்றிலேன் – சாப்பிடுகிறேன் அல்லேன்)
15 . உண்பேன் ( ‘ஏன்’ ஈறு பெற்ற எதிர்கால வினைமுற்று) (உண்பேன் - சாப்பிடுவேன்)
16 . உண்ணேன் ( ‘ஏன்’ ஈறு பெற்ற எதிர்கால எதிர்மறை வினைமுற்று) (உண்ணேன் -
சாப்பிடேன்)
17 . உண்பல் ( ‘அல்’ ஈறு பெற்ற எதிர்கால வினைமுற்று) (உண்பல் - சாப்பிடுவேன்)
18 . உண்ணாதொழிவல் ( ‘அல்’ ஈறு பெற்ற எதிர்கால எதிர்மறை வினைமுற்று)
(உண்ணாதொழிவல் – சாப்பிடுவேன் அல்லேன்)
மேல் 18 எடுத்துக்காட்டுகளுமே தன்மை ஒருமையில் வந்துள்ளதைக் கவனிக்க!

நூற்பாவில், ‘அந்நான் கூர்ந்த குன்றிய லுகரமோடு’ என்றாரல்லவா?
அது , ‘கு’ , ‘டு’ , ‘து’, ‘று’ ஆகிய நான்கு ஈறுகள் கொண்ட குற்றியலுகரம் பெற்ற வினைமுற்றுகளை!
1 . உண்கு – மென்றொடர்க் குற்றியலுகரம் பெற்ற வினைமுற்று
2 . உண்டு - மென்றொடர்க் குற்றியலுகரம் பெற்ற வினைமுற்று
3 . வருது - உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் பெற்ற வினைமுற்று
4. சேறு - நெடில்தொடர்க் குற்றியலுகரம் பெற்ற வினைமுற்று
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri May 21, 2021 11:50 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (530)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘உண்கு’ முதலிய வினைமுற்றுகளை நாம் பார்த்தோம் (வினை. 6) அல்லவா?
இந்த ‘உண்கு’ என்ற வினைமுற்றைத் தொல்காப்பியர் ‘செய்கு’ என்ற வாய்பாட்டில் அடக்குகிறார். அடக்கிச், ‘செய்கு’ என்ற வாய்பாட்டு வினைமுற்றுகள் எல்லாம், தொடரில், வினைகொண்டு முடிந்தாலும், தான் ஒரு வினைமுற்றாகவே நிற்கும் என்கிறார்!

இதற்குச் சேனாவரையரின் எடுத்துக்காட்டைப் பார்ப்போம்!
‘ காண்கு வந்தேன் என வரும்’ என்பது சேனாவரையம்; ‘ காண்பேன் வந்தேன்’ என்பது இதன் பொருள். இது எதிர்காலம் காட்டும் தொடர்.
‘காண்கு வந்தேன்’ என்பதில் ‘வந்தேன்’ என்பது வினைமுற்று. தொடரின் பொருளானது , ‘காண வந்தேன்’ என்று இருப்பினும், ‘காண்கு’ என்பது ‘செய’ என்ற எச்ச வாய்பாடாகத் திரியாது, ‘செய்கு’ வாய்பாட்டு வினைமுற்றாகவே இருக்கும் என்று தொல்காப்பியர் கூறவருகிறார்!
இதோ நூற்பா:

அவற்றுள்
செய்கென் கிளவி வினையொடு முடியினும்
அவ்வியல் திரியாது என்மனார் புலவர் (வினையியல் 7)

இதற்கு விளக்கமாகச் சேனாவரையர் தந்த இன்னொரு எடுத்துக்காட்டு – ‘தங்கினை சென்மோ’.
தங்கினை சென்மோ – தங்கிச் சென்மோ (தங்கிச் செல்க)
‘தங்கினை’ – வினைமுற்று; ஆனால், தொடரில், எச்சப் பொருளில், ‘செய்து’ எனும் வாய்பாட்டுச் சொல்லாகத் திரிந்துவிடுகிறது!
ஆனால் இவ்வாறு ‘செய்கு’ வாய்பட்டு வினைமுற்றானது, ‘செய’ வாய்பாட்டு எச்சமாகத் திரியாது எனக் கூறவருகிறார் சேனாவரையர்!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri May 21, 2021 12:01 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (531)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

உயர்திணைத் தன்மை ஒருமை வினைமுற்றை விளக்கிய பின்னர், தொல்காப்பியர் , உயர்திணைப் படர்க்கை ஒருமை வினைமுற்றை (Third person singular finite verb ) அறிமுகப்படுத்துகிறார்!:

அன்ஆன் அள்ஆள் எனும் நான்கும்
ஒருவர் மருங்கிற் படர்க்கைச் சொலே (வினையியல் 8)

‘அன்’ , ‘ஆன்’, ‘அள்’ , ‘ஆள்’ – இந்த நான்கு ஈறுகளையும் கொண்ட வினைமுற்றுகள், படர்க்கை ஒருமை வினைமுற்றுகளாகத் தொடர்களிற் பயிலும்!
இவற்றுக்கு ,நச்சர் சுருக்கமாகக் காட்டும் எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம்!:

1 . உண்டனன் ( ‘அன்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை இறந்தகால வினைமுற்று)
2 . உண்டிலன் ( ‘அன்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை இறந்தகால எதிமறை வினைமுற்று)
3 . உண்ணாநின்றனன் ( ‘அன்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை நிகழ்கால வினைமுற்று)
4 . உண்ணாநின்றிலன் ( ‘அன்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை நிகழ்கால எதிமறை
வினைமுற்று)
5 . உண்கின்றனன் ( ‘அன்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை நிகழ்கால வினைமுற்று)
6 . உண்கின்றிலன் ( ‘அன்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை நிகழ்கால எதிமறை
வினைமுற்று)
7 . உண்பன் ( ‘அன்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை எதிர்கால வினைமுற்று)
8 . உண்குவன் ( ‘அன்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை எதிர்கால வினைமுற்று)
9 . உண்ணலன் ( ‘அன்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை எதிர்கால எதிர்மறை வினைமுற்று)
10 .உண்டான் ( ‘ஆன்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை இறந்தகால வினைமுற்று)
11 .உண்டிலான் ( ‘ஆன்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை இறந்தகால எதிமறை
வினைமுற்று)
12 . உண்ணாநின்றான் ( ‘ஆன்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை நிகழ்கால வினைமுற்று)
13 . உண்ணாநின்றிலான் ( ‘ஆன்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை நிகழ்கால எதிர்மறை
வினைமுற்று)
14 . உண்கின்றான் ( ‘ஆன்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை நிகழ்கால வினைமுற்று)
15 .உண்கின்றிலான் ( ‘ஆன்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை நிகழ்கால எதிர்மறை
வினைமுற்று)
16 .உண்பான் ( ‘ஆன்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை எதிர்கால வினைமுற்று)
17 .உண்குவான் ( ‘ஆன்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை எதிர்கால வினைமுற்று)
18 .உண்ணான் ( ‘ஆன்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை எதிர்கால எதிர்மறை வினைமுற்று)
19 . உண்டனள் ( ‘அள்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை இறந்தகால வினைமுற்று)
20 .உண்டிலள் ( ‘அள்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை இறந்தகால எதிமறை வினைமுற்று)
21 .உண்ணாநின்றனள் ( ‘அள்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை நிகழ்கால வினைமுற்று)
22 . உண்ணாநின்றிலள் ( ‘அள்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை நிகழ்கால எதிமறை
வினைமுற்று)
23 . உண்கின்றனள் ( ‘அள்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை நிகழ்கால வினைமுற்று)
24 . உண்கின்றிலள் ( ‘அள்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை நிகழ்கால எதிர்மறை
வினைமுற்று)
25 . உண்பள் ( ‘அள்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை எதிர்கால வினைமுற்று)
26 . உண்குவள் ( ‘அள்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை எதிர்கால வினைமுற்று)
27 . உண்ணலள் ( ‘அள்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை எதிர்கால எதிர்மறை வினைமுற்று)
28 .உண்டாள் ( ‘ஆள்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை இறந்தகால வினைமுற்று)
29 .உண்டிலாள் ( ‘ஆள்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை இறந்தகால எதிர்மறை
வினைமுற்று)
30 . உண்ணாநின்றாள் ( ‘ஆள்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை நிகழ்கால வினைமுற்று)
31 . உண்கின்றாள் ( ‘ஆள்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை நிகழ்கால வினைமுற்று)
32 .உண்ணாநின்றிலாள் ( ‘ஆள்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை நிகழ்கால எதிர்மறை
வினைமுற்று)
33 . உண்கின்றிலாள் ( ‘ஆள்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை நிகழ்கால எதிர்கால
வினைமுற்று)
34 .உண்பாள் ( ‘ஆள்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை எதிர்கால வினைமுற்று)
35 .உண்குவாள் ( ‘ஆள்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை எதிர்கால வினைமுற்று)
36 .உண்ணாள் ( ‘ஆள்’ ஈற்றுப் படர்க்கை ஒருமை எதிர்கால எதிர்மறை வினைமுற்று)

மேல் 36 எடுத்துக்காட்டுகளில் , ஆண்பால், பெண்பால், உடன்பாடு, எதிர்மறை, இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் குறித்த வினைமுற்றுகள் வந்துள்ள பாங்கைக் கவனிக்க! எல்லா 36 எடுத்துக்காட்டுகளுமே படர்க்கை ஒருமையில் வந்துள்ளதையும் நோக்குக!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri May 21, 2021 12:10 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (532)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

படர்க்கை ஒருமை வினைமுற்றைப் பேசிய தொல்காப்பியர், அடுத்துப் படர்க்கைப் பன்மை வினைமுற்றை (Third person plural finite verb) நல்குகிறார்!:

அர்ஆர் பஎன வரூஉம் மூன்றும்
பல்லோர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே (வினையியல் 9)

‘அர்’, ‘ஆர்’, ‘ப’ – இந்த மூன்று ஈறுகளையும் பெற்ற வினைமுற்றுகள் படர்க்கைப் பன்மையை உணர்த்தும்!

இம் மூன்று ஈறுகளையும் பெற்று வரக்கூடிய படர்க்கைப் பன்மை வினைமுற்றுகளை நச்சினார்க்கினியரும் கல்லாடனாரும் தருகின்றனர்; இவற்றை விளக்கப் பட்டியலாக வருமாறு நாம் அமைக்கலாம்!:

1 . உண்டனர் ( ‘அர்’ ஈற்றுப் படர்க்கைப் பன்மை இறந்தகால வினைமுற்று)
2 . உண்டிலர் ( ‘அர்’ ஈற்றுப் படர்க்கைப் பன்மை இறந்தகால எதிர்மறை வினைமுற்று)
3 . உண்ணாநின்றனர் ( ‘அர்’ ஈற்றுப் படர்க்கைப் பன்மை நிகழ்கால வினைமுற்று)
4 . உண்கின்றனர் ( ‘அர்’ ஈற்றுப் படர்க்கைப் பன்மை நிகழ்கால வினைமுற்று)
5 .உண்ணாநின்றிலர் ( ‘அர்’ ஈற்றுப் படர்க்கைப் பன்மை நிகழ்கால எதிர்மறை வினைமுற்று)
6 .உண்கின்றிலர் ( ‘அர்’ ஈற்றுப் படர்க்கைப் பன்மை நிகழ்கால எதிர்மறை வினைமுற்று)
7 .உண்பர் ( ‘அர்’ ஈற்றுப் படர்க்கைப் பன்மை எதிர்கால வினைமுற்று)
8 .உண்குவர் ( ‘அர்’ ஈற்றுப் படர்க்கைப் பன்மை எதிர்கால வினைமுற்று)
9 .உண்ணலர் ( ‘அர்’ ஈற்றுப் படர்க்கைப் பன்மை எதிர்கால எதிமறை வினைமுற்று)
10 . உண்டார் ( ‘ஆர்’ ஈற்றுப் படர்க்கைப் பன்மை இறந்தகால வினைமுற்று)
11 . உண்டிலார் ( ‘ஆர்’ ஈற்றுப் படர்க்கைப் பன்மை இறந்தகால எதிமறை வினைமுற்று)
12 . உண்ணாநின்றார் ( ‘ஆர்’ ஈற்றுப் படர்க்கைப் பன்மை நிகழ்கால வினைமுற்று)
13 .உண்கின்றார் ( ‘ஆர்’ ஈற்றுப் படர்க்கைப் பன்மை நிகழ்கால வினைமுற்று)
14 . உண்ணாநின்றிலார் ( ‘ஆர்’ ஈற்றுப் படர்க்கைப் பன்மை நிகழ்கால எதிர்மறை
வினைமுற்று)
15 . உண்கின்றிலார் ( ‘ஆர்’ ஈற்றுப் படர்க்கைப் பன்மை நிகழ்கால எதிர்மறை
வினைமுற்று)
16 .உண்பார் ( ‘ஆர்’ ஈற்றுப் படர்க்கைப் பன்மை எதிர்கால வினைமுற்று)
17 .உண்குவார் ( ‘ஆர்’ ஈற்றுப் படர்க்கைப் பன்மை எதிர்கால வினைமுற்று)
18 .உண்ணார் ( ‘ஆர்’ ஈற்றுப் படர்க்கைப் பன்மை எதிர்கால எதிர்மறை வினைமுற்று)
19 . உண்ப ( ‘ப’ ஈற்றுப் படர்க்கைப் பன்மை எதிர்கால வினைமுற்று)
20 . உண்குப ( ‘ப’ ஈற்றுப் படர்க்கைப் பன்மை எதிர்கால வினைமுற்று)
21 .உண்ணாநிற்ப ( ‘ப’ ஈற்றுப் படர்க்கைப் பன்மை நிகழ்கால வினைமுற்று)

மேல் 21 எடுத்துக்காட்டுகளில் , உடன்பாடு, எதிர்மறை, இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் குறித்த வினைமுற்றுகள் வந்துள்ள பாங்கைக் கவனிக்க! எல்லா 21 எடுத்துக்காட்டுகளுமே படர்க்கைப் பன்மையில் வந்துள்ளதையும் நோக்குக!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri May 21, 2021 12:13 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (533)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது, ‘மார்’ ஈற்றுப் படர்க்கைப் பலர்பால் வினைமுற்றின் தன்மை கூற வருகிறார் தொல்காப்பியர்:

மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை
காலக் கிளவியொடு முடியும் என்ப (வினையியல் 10)

‘மார்’ ஈறு பெற்ற படர்க்கைப் பலர்பால் வினைமுற்றுச் சொல்லானது, பெயர்ச்சொல்லோடு முடிவதல்லாமல், வினைச்சொல்லோடும் முடியும்! இவ்வுரை தெய்வச்சிலையாரின் உரை!

அவரின் எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம்:
1 . ஆ கொண்மார் வந்தார் – இத் தொடரில், ‘கொண்மார்’ என்பது ‘மார்’ ஈறு பெற்ற படர்க்கைப் பலர்பால் வினைமுற்று; இது ‘வந்தார்’ என்ற வினைமுற்றைக் கொண்டு முடிந்துள்ளது.
ஆ கொண்மார் வந்தார் – பசுவைக் கொள்ள வந்தார்.
கொண்மார் – கொள்வார் – கொள்ளவேண்டி.
இங்கு, ‘கொண்மார்’ என்பது எச்சப் பொருளில் வந்தாலும், இதனை வினையெச்சம் எனக் கொள்வதில்லை. ஏன்?
தெய்வச்சிலையாரே விடை சொல்கிறார்:
“இதனையும் செய்கு என்பதனையும் வினையெச்சம் என்றதனாற் குற்றம் என்னையெனின், வினையெச்சம் பால் தோன்றாது, இவை பால் தோன்றலின் முற்று எனல் வேண்டும்”
‘கொள்ள’ என்ற வினையெச்சத்தில் , ஒருமை பன்மைக் குறிப்பு இல்லை; ஆனால், ‘கொண்மார்’ என்பதில் பன்மை என்பது அறியக்கிடக்கிறது! இதையே தெய்வச்சிலையார் கூறினார்.
2 . பாடின் மன்னரைப் பாடன்மார் எமரே – இதில் , ‘பாடன்மார்’ எனும் படர்க்கைப் பலர்பால் வினைமுற்று ‘எமர்’ என்ற பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிந்துள்ளது.
பாடன்மார் – பாடாதொழிவார் ; பாடமாட்டார்கள்

‘கொண்மார்’ , ‘பாடன்மார்’ இரண்டுமே எதிர்காலம் பற்றியன என்பதை நோக்குக.
கல்லாடனார் , ‘மார் , எதிர்காலம் ஒன்றுமே பற்றி வரும்’ என்பது ஈண்டு குறிக்கத் தகும்.
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri May 21, 2021 12:25 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (534)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வினையியலில் அடுத்து, உயர்திணைக்குரிய வினைமுற்றுகள் இத்தனை என்று தொகுத்துக் கூறுகிறார் தொல்காப்பியர் !:

பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
அந்நா லைந்தும் மூன்றுதலை யிட்ட
முன்னுறக் கிளந்த உயர்திணை யவ்வே (வினையியல் 11)

அஃதாவது, பன்மை, ஒருமைகளைத் தெரிவிக்கக்கூடிய , முன்னே சொல்லிய, 23 ஈறுகளைக் கொண்ட வினைமுற்றுகள் யாவும் உயர்திணை வினைமுற்றுகளாம்.

‘அந்நா லைந்தும் மூன்றுதலை யிட்ட’ என்ற 23க்குக் கணக்கு!
நாலைந்து = 4×5 =20
மூன்று தலையிட்ட = 3ஐக் கூட்டிய = 20+ 3 = 23
கணக்கு நேர்!
‘நாலஞ்சு இருபது’ என்று பள்ளியில் நாம் படித்த வாய்ப்பாட்டை நினைவு படுத்தலாம்!
இதையே தொல்காப்பியரும் கூறியிருப்பதால், நாம் படித்த அந்த வாய்ப்பாடுகள் கி.மு.700க்கும் முன்பிருந்தே தமிழகத்தில் இருந்துவந்தமை புலனாகிறது!

சரி!
தொல்காப்பியர் கூறும் அந்த 23 ஈறுகள்தாம் யாவை?
1 . ‘அம்’ ஈறு (வினை. நூ. 5)
2 . ‘ஆம்’ ஈறு ( ’’ )
3 . ‘எம்’ ஈறு ( ’’ )
4 . ‘ஏம்’ ஈறு ( ’’ )
5 .‘கும்’ ஈறு ( ’’ )
6 . ‘டும்’ ஈறு ( ’’ )
7 . ‘தும்’ ஈறு ( ’’ )
8 . ‘றும்’ ஈறு ( ’’ )
9 . ‘கு’ ஈறு (வினை. நூ. 6)
10 .‘டு’ ஈறு ( ’’ )
11 .‘து’ ஈறு ( ’’ )
12 .‘று’ ஈறு ( ’’ )
13 .‘என்’ ஈறு ( ’’ )
14 .‘ஏன்’ ஈறு ( ’’ )
15 .‘அல்’ ஈறு ( ’’ )
16 .‘அன்’ ஈறு (வினை. நூ. 8)
17 .‘ஆன்’ ஈறு ( ’’ )
18 .‘ அள்’ ஈறு ( ’’ )
19 .‘ஆள்’ ஈறு ( ’’ )
20 .‘அர்’ ஈறு (வினை. நூ. 9)
21 .‘ஆர்’ ஈறு ( ”)
22 .‘ ப’ ஈறு ( ”)
23 .‘மார்’ ஈறு (வினை. நூ.10)
கணக்கு சரியாயிற்றா?




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat May 22, 2021 9:59 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (535)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நானும் அவளும் தண்ணீர் குடித்தோம் √
நானும் மாடும் தண்ணீர் குடித்தோம் – இத் தொடர் சரியா?

‘சரி’ என்பது தொல்காப்பியரின் விடை.

உயர்திணைச் சொல் ஒன்றும், அஃறிணைச் சொல் ஒன்றும் அடுக்கி வரும்போது, உயர்திணைக்குரிய தன்மைப் பன்மை வினைமுற்றே கொள்ளும்!

உயர்திணையோடு அஃறிணை கலந்து வருவதையே ‘திரிபு’ என்றார் தொல்காப்பியர்.
தொல்காப்பிய நூற்பா:
அவற்றுள்
பன்மை யுரைக்கும் தன்மைக் கிளவி
எண்ணியல் மருங்கின் திரிபவை உளவே (வினையியல் 12)

மேல் எடுத்துக்காட்டில், ‘பன்மை உரைக்கும் தன்மைக் கிளவி’ எது?
‘நானும் மாடும்’ என்பதே , பன்மை உரைக்கும் தன்மைக் கிளவி.
‘நானும் மாடும்’ என்று அடுக்கி வருகிறதல்லவா? இதுவே ‘எண்ணியல்’!
‘திரிபவை’?
முதல் எடுத்துக்காட்டில், ‘நானும் அவளும்’ என்று இரண்டு உயர்திணைச் சொற்கள் வந்தன அல்லவா? இதில், இரண்டுமே உயர்திணைச் சொற்கள் ஆதலால் ‘திரிபு’ ஏதும் இல்லை!
அடுத்த எடுத்துக்காட்டில் , ‘நானும் மாடும்’ என்று, ஓர் உயர்திணைச் சொல்லும், ஓர் அஃறிணைச் சொல்லும் கலந்து வந்துள்ளதால் , இது ‘திரிபு’!
இனிச் சேனாவரையர் எடுத்துக்காட்டு :

‘யானும் என் எஃகமும் சாறும்’ – நானும் என் வாளும் போதும்
எஃகம் – வாள்
சாறும் – போதும் (சால்+ தும் = சாறும் எனப் பிரிப்பர்) [ ‘சால்’ என்ற தமிழ் அடியாகப்
பிறந்த தெலுங்குச் சொல்லே ‘சாலுனு’ (போதும்), ‘சாலது’
(போதாது) ஆகியன!]
இதில், ‘யான்’ என்ற உயர்திணையும், ‘எஃகம்’ என்ற அஃறிணையும் கலந்து (திரிந்து) வந்துள்ளதைக் கவனிக்க!
அடுத்து , ‘யார்?’ என்ற கேள்வி!
‘யார்?’ எனும் வினாப்பொருளை உணர்த்தும் சொல்லானது, உயர்திணையில், ஆண்பால், பெண்பால், பலர்பால் ஆகிய மூன்று பாற்களுக்கும் உரியது என்கிறார் தொல்காப்பியர்!:

யாஅர் என்னும் வினாவின் கிளவி
அத்திணை மருங்கின் முப்பாற்கும் உரித்தே (வினையியல் 13)

அத்திணை – முன் சொல்லப்பட்ட உயர்திணை
முப்பால் – ஆண்பால், பெண்பால் , பலர்பால்

சேனாவரையரின் எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம்:
1 . அவன் யார்?
அவன் – உயர்திணை ஆண்பால் (masculine gender)

2 . அவள் யார்?
அவள் – உயர்திணைப் பெண்பால் (feminine gender)


3 . அவர் யார்?
அவர் – உயர்திணைப் பலர்பால் (human plural)

‘யார்’ என்ற சொல்லை உரையாசிரியன்மார் , ‘குறிப்பு வினைமுற்று’ என்றே குறிக்கின்றனர்.
‘யார்’ என்பது எப்படி வினையாகும்?
விடையைக் கூறுகிறார் தெய்வச்சிலையார்:
“ யார் என்பது காலம் காட்டாமையின் வினைச்சொல் ஆகாது எனின், வேற்றுமை ஏலாமையான் வினையெனப்படும். அதனானேயன்றே , வினையெனப் படுவது காலமொடு தோன்று மென்னாது, வேற்றுமை கொள்ளாதுஎனவும் ஓதல் வேண்டிற் றென்க. உ-ம்: அவன் யார்? , அவள் யார்? , அவர் யார்? என வரும்”
அஃதாவது –
அவன் யாரை? × ( ‘ஐ’ வேற்றுமை ஏற்கவில்லை)
அவன் யார்? √

அவள் யாரை? ×( ‘ஐ’ வேற்றுமை ஏற்கவில்லை)
அவன் யார்? √

அவர் யாரை? ×( ‘ஐ’ வேற்றுமை ஏற்கவில்லை)
அவர் யார்? √

இக் கால மொழிநூலார் , ‘யார்’ என்பதைப் ‘பிரதிப் பெயர்’ (pronoun) என எழுதுகின்றனர்.
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon May 24, 2021 12:50 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (536)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வினை முற்றுகளின் ஈறுகள் , பாடலில் , அடையும் ஒரு திரிபைக் கூறலுறுகிறார் தொல்காப்பியர்!:

பாலறி மரபின் அம்மூ ஈற்றும்
ஆஓ ஆகும் செய்யு ளுள்ளே (வினையியல் 14)
பாலறி மரபு – ஆண்பால், பெண்பால், பலர்பால் என்பவற்றை அறிவதற்கேற்ற
அம்மூ ஈற்றும் – ஆன் , ஆள் , ஆர் ஆகிய மூன்று ஈறுகளிலும் உள்ள
ஆஓ ஆகும் - ’ஆ’ என்பது ‘ஆ’வாக மாறும்
செய்யு ளுள்ளே - பாடல்களில்!

சேனாவரையரின் எடுத்துக்காட்டுகள்:
1 . வினவிநிற்றந் தோனே
2 . நல்லை மன்னென நகூப்பெயர்ந் தோளே
3 . வாடா வள்ளியங் காடிறந் தோரே

இவற்றை விளக்குவோம்.
1 . வினவி நிற்றந்தோனே – வினவி நிற்பவனே
நிற்றந்தோனே – நிற்றந்தோன் + ஏ
‘நிற்றந்தான்’ என்பதன் ஈற்றயலில் உள்ள ‘ஆ’, ‘ஓ’வாக மாறி, ‘நிற்றந்தோன்’ ஆனது காண்க!
ஏ – ஈற்றசை
நிற்றந்தான் – ஆண்பாற் சொல்

2 . நகூப் பெயர்ந்தோளே – சிரித்துச் சென்றவளே
பெயர்ந்தோளே – பெயர்ந்தோள் + ஏ
‘பெயர்ந்தாள்’ என்பதன் ஈற்றயலில் உள்ள ‘ஆ’, ‘ஓ’வாக மாறிப், ‘பெயர்ந்தோள்’ ஆனது காண்க!
ஏ – ஈற்றசை
பெயர்ந்தாள் – பெண்பாற் சொல்


2 . வள்ளியங் காடிறந்தோரே – வள்ளிக் கொடி அடர்ந்த காட்டைக் கடந்து சென்றாரே
காடிறந்தோரே – காடு + இறந்தோர் + ஏ ; இறந்தோர் - கடந்தோர்
‘காடிறந்தார்’ என்பதன் ஈற்றயலில் உள்ள ‘ஆ’, ‘ஓ’வாக மாறிக், ‘காடிறந்தோர்’ ஆனது காண்க!
ஏ – ஈற்றசை.
காடிறந்தார் – பலர்பாற் சொல்
‘நிற்றந்தான்’, ‘பெயர்ந்தாள்’,‘காடிறந்தார்’ ஆகிய மூன்றும் வினை முற்றுகளே என்பதைக் கவனிக்கவும்.

இவற்றைப் போன்றே ‘ஆய்’என்பதும் ‘ஓய்’ ஆகப்,பாட்டில் மாறுவது உண்டு என்கிறார்!:

ஆயென் கிளவியும் அவற்றொடு கொள்ளும் (வினையியல் 15)

இங்கே தொல்காப்பியர் காட்டும் ஈறு, ‘ஆய்’.

சேனாவரையரின் எடுத்துக்காட்டு – ‘வந்தோய் மன்ற’
‘வந்தாய்’ என்பதன் ஈற்றில் உள்ள ‘ஆய்’, ‘ஓய்’ ஆக மாறி, ‘வந்தோய்’ ஆனது காண்க!
மன்ற - ‘வந்தாய்’ என்று ஐயம் நீக்கிய தெளிவுதரும் ஓர் இடைச்சொல் (particle)

தொல்காப்பியம் முழுவதுமே வழக்கையும் செய்யுளையும் கருத்திற் கொண்டு யாக்கப்பட்டது என்பதை மறவாதீர்!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed May 26, 2021 8:24 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (537)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வினையியலில், இப்போது நாம் பார்க்கப்போவது – உயர்திணைக்குரிய குறிப்பு வினைமுற்று (Appellative finite verb)!
இதுதான் தொல்காப்பிய நூற்பா:
அதுச்சொல் வேற்றுமை யுடைமை யானும்
 கண்ணென் வேற்றுமை நிலத்தி நானும்
  ஒப்பி  னானும்  பண்பி னானுமென்று
 அப்பாற் காலங் குறிப்பொடு தோன்றும்     (வினையியல் 16)

‘காலங் குறிப்பொடு தோன்றும்’ – காலமானது குறிப்பால் தெரியவரும் ; வெளிப்படையாகத் தெரியாது!
எதனுடைய காலம் ?
குறிப்பு வினைமுற்றுச் சொல்லின் காலம்!
எப்படிப்பட்ட  குறிப்பு வினைமுற்று?
 ‘அதுச்சொல் வேற்றுமை யுடைமை யான்’ அமைந்தது.
அந்தக் குறிப்பு வினைமுற்றானது ‘அது’ எனும் வேற்றுமைப் பொருள் கொண்டதாக இருக்கும்!
‘அதுச் சொல்’ – ‘அது’ எனும் வேற்றுமை உருபு’
 எடுத்துக்காட்டாகக், ‘கச்சினன்’ என்றால் , ‘கச்சது கொண்டவன்’ எனப் பொருள்படும்.
ஆறாம் வேற்றுமை உருபுக்கு, ‘உடைமைப்’ பொருள் உண்டு (வேற்றுமையியல் 18).

இன்னொரு வகைக் குறிப்பு வினைமுற்று ‘கண்ணென் வேற்றுமை நிலத்தினால்’ அமையும்!
இக் குறிப்பு வினைமுற்றுக்கு எடுத்துக்காட்டு – ‘இல்லத்தன்’
‘இல்லத்தன்’ – இல்லத்தின்கண்ணோன்.
 இங்கே ‘கண்’ , ஏழாம் வேற்றுமை உருபாய் இடப்பொருளை உணர்த்துவது காண்க!

மூன்றாம் வகைக் குறிப்பு வினைமுற்று ‘ஒப்பினால்’ அமையும்!
ஒப்புப் பொருள் – உவமைப் பொருள்
இவ்வகைக் குறிப்பு வினைமுற்றுக்கு எடுத்துக்காட்டு – ‘புலிபோல்வன்’
‘புலிபோல்வன்’ – புலிபோன்றான்
‘போல’ எனும் உவம உருபு வந்துள்ளதைக் கவனிக்க!

நான்காம் வகைக் குறிப்பு  வினைமுற்று ‘பண்பினால்’ அமையும்!
இவ்வகைக் குறிப்பு வினைமுற்றுக்கு எடுத்துக்காட்டு – ‘செய்யன்’
‘செய்யன்’– சிவந்தான்
 ‘சிவப்பு’ எனும் நிறப் பண்பு வந்துள்ளதைக் கவனிக்க!

அடுத்தது – ‘காலம்’!
மேல் கச்சினன்,இல்லத்தன்,புலிபோல்வன், செய்யன் ஆகிய நான்கு குறிப்பு வினை முற்றுகளுமே வெளிப்படையாகக் காலத்தைக் காட்டாதன!

இந் நான்கு சொற்களையும் உச்சரிப்பானின் குறிப்பால்தான் காலம் தெரியவரும்!

கூறுவான் இறந்தகாலக் குறிப்புடன் ‘முன்பு இவன் கச்சினன்’ என்றால், ‘கச்சினன்’ எனும் சொல் இறந்தகாலக் குறிப்பைத் தரும் .
கூறுவான் நிகழ்காலக் குறிப்புடன் ‘இப்போது இவன் கச்சினன்’ என்றால், ‘கச்சினன்’ எனும் சொல் நிகழ்காலக் குறிப்பைத் தரும்.
கூறுவான் எதிர்காலக் குறிப்புடன் ‘நாளை இவன் கச்சினன்’ என்றால், ‘கச்சினன்’ எனும் சொல் எதிர்காலக் குறிப்பைத் தரும்.
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 79 of 84 Previous  1 ... 41 ... 78, 79, 80 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக