புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_c10 
49 Posts - 60%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_c10 
1 Post - 1%
Guna.D
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_c10 
44 Posts - 60%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 71 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Page 71 of 84 Previous  1 ... 37 ... 70, 71, 72 ... 77 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Sep 20, 2017 7:08 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (460)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இரண்டாம் வேற்றுமை உருபும் ஏழாம் வேற்றுமை உருபும் , ஒன்று வரவேண்டிய இடத்தில் மற்றது வரலாம் என்பதற்கான மேலும் இரு எடுத்துக்காட்டுகளைத் தொல்காப்பியர் தருகிறார் :-
“கன்றலுஞ் செலவும் ஒன்றுமார் வினையே” (வேற். 3)

கன்றல் – ஆட்படுதல் ; அடிமைப் படல்
செலவு – செல்லுதல்

சூதினைக் கன்றினான் = சூதினுக்கு ஆட்பட்டான்
சூதினைக் கன்றினான் – இங்கே ‘ஐ’ உருபு வந்துள்ளதைக் காண்க.
சூதின்கட் கன்றினான்  = சூதினுக்கு ஆட்பட்டான்
சூதின்கட்  கன்றினான் – இங்கே ‘கண்’ உருபு வந்துள்ளதைக் காண்க.

ஆக, மேல் எடுத்துக்காட்டுகளைப் பொறுத்தவரை, ‘ஐ’ உருபு வந்தாலும், ‘கண்’ உருபு வந்தாலும் பொருள் ஒன்றுதான் என்று அறிகிறோம்!

இதே முறையில் ,
நெறியைச் சென்றான் = நெறிப்படி போனான்
நெறியைச் சென்றான் – இங்கே ‘ஐ’உருபு வந்துள்ளதைக் காண்க.
நெறிக்கண் சென்றான் = நெறிப்படி போனான்
நெறிக்கண் சென்றான்- இங்கே ‘கண்’ உருபு வந்துள்ளதைக் காண்க

சேனாவரையர்,
’சூதினை இவறினான்’ , என்பதும்  ‘சூதின்கண் இவறினான்’ என்பதும் ஒரே பொருள் தருவனவே என்கிறார் !

இவறினான் – மிக விரும்பினான்

மேலும் சேனாவரையர்,
‘நெறியை நடந்தான்’ , என்பதும் ‘நெறிக்கண் நடந்தான்’ என்பதும் ஒரே பொருளன என்கிறார் !
தொல்காப்பியர் , ’கன்றல்’ , ‘செலவு’ ஆகிய இரு சொற்களைத் தரச், சேனாவரையர் வேறு எந்தப் புதுச் சொல்லையும் தராமல், அந்த இரு சொற்களின் பொருளைத்தரும் வேறு இரு சொற்களை மட்டும் தந்துள்ளதை நோக்குவீர் !

இதுவே சேனாவரையரின் உரைநெறி!
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Sep 23, 2017 1:40 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (461)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘மரத்தைக் கிளையை வெட்டினான்’ – இந்தத் தொடர் சரியா?

சரியில்லை !

அப்படியானால் , இதுபோன்ற தொடர்களுக்குத் தொல்காப்பியத்தில் விதி உள்ளதா? – அடுத்த கேள்வி !

விதி உள்ளது! :-

 “முதற்சினைக் கிளவிக்கு அதுவென் வேற்றுமை
 முதற்கண் வரினே சினைக்கை வருமே ”  (வேற்.மயங். 4)

‘முதற்சினைக் கிளவிக்கு’ – முதலும் அதன் உறுப்பும் சேர்ந்துநிற்கும் ஒரு தொடரில்,
‘அது என் வேற்றுமை’ -  ‘அது’ எனும் வேற்றுமை உருபானது ,
‘முதற்கண் வரினே’ – முதல் உறுப்போடு சேர்ந்து வந்தால்,
’சினைக்கு ஐ வருமே’ – சினை உறுப்பிற்கு ‘ஐ’ உருபு வரும்!

யானையைக் கோட்டைக் குறைத்தான் ×
யானையைக் கோட்டது குறைத்தான் ×
யானையது  கோட்டது  குறைத்தான் ×
யானையது கோட்டின்கண் குறைத்தான் ×
யானையது  கோட்டைக் குறைத்தான் √   ( = யானையின் கொம்பை வெட்டினான்)

யானை – முதல்
கோடு – சினை (உறுப்பு )  (கோடு - கொம்பு)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 24, 2017 1:14 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (462)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மேற்கண்டவாறு பாடம் நடத்திய தொல்காப்பியரிடம் ஒரு மாணவன், ‘யானையைக் கோட்டின்கண் குறைத்தான்’ எனச் சொல்லலாமா? எனக் கேட்டான் போலும் !
அவனுக்கு விடை கூறியது போன்று  எழுதுகிறார் அடுத்த நூற்பாவை –

“முதல்முன் ஐவரின் கண்ணென் வேற்றுமை
சினைமுன் வருதல் தெள்ளி தென்ப”  (வேற். மயங். 5)

‘முதல்’ என்பது ‘யானை’யைக் குறிக்கும் எனச் சென்ற ஆய்வில் பார்த்தோம்; ‘சினை’ என்பது கோட்டைக் (கொம்பு) குறைக்கும் என்வும் கண்டோம்.

இந்த நூற்பாவில் (வேற்.மயங். 5) , முதலுக்கு ‘ஐ’ உருபு வந்தால்,  சினைக்கு ‘கண்’ உருபு வரும் என்கிறார் !:-
யானையைக் கோட்டின்கண் குறைத்தான் √

யானையை இத்தோடு விடவில்லை தொல்காப்பியர்!

’முதல் , சினை  என்பதில் குழப்பம் கூடாது !  யானை முதல் என்றால் கோடு சினை; கோடு முதல் என்றால் அதன் நுனி சினை  !’  - என்றொரு விளக்கத்தை அளிக்கிறார்! :-

“முதலுஞ் சினையும் பொருள்  வேறுபடாஅ
நுவலுங் காலைச் சொற்குறிப் பினவே”   (வேற். மயங்.6)

’முதலும் சினையும் பொருள்  வேறுபடாஅ’ -  முதல் என்றும் சினை என்றும் தனிப் பொருள் வேறுபாடு உள்ளவை என்று எதையும் பிரிக்கமுடியாது !
‘நுவலுங் காலைச் சொற்குறிப் பினவே’ – சொல்லப்போனால் , சொல்லுபவனது மனக் குறிப்பைப் பொறுத்தே ‘முதல்’ , ‘சினை’ என்பதெல்லாம் ஏற்படுகிறது !  

‘கோடு’ முதலானால் –
கோட்டது நுனியைக் குறைத்தான் √  (விதி - வேற்.மயங்.4)
கோட்டை நுனிக்கண் குறைத்தான் √ (விதி - வேற்.மயங்.5)

மேல் நூற்பாவைக் (வேற்.மயங்.6) கொண்டு , சொல்லுபவனின் கருத்தைக் குறிப்பால் நாமே உணர்ந்துகொண்டு ,  ‘யானையைக் கோட்டைக் குறைத்தான்’ என்றால் , ‘யானையது கோட்டைக் குறைத்தான் என அறிந்துகொள்ளவேண்டும்’ என்பதே உரையாசிரியர்தம் உரையாக உள்ளது !

இதனால் , தொடரானது , அப்படியே நேராகத்தான் பொருளைத் தெரிவிக்கவேண்டும் என்பதில்லை ; அதில் சொல்லுவான் குறிப்பும் உள்ளது என்பதை அறிகிறோம் !
தமிழ்த் தொடரியல் (Syntax of Tamil Language) இது சுட்டத்தக்கது
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 02, 2017 9:26 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (463)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வேற்றுமை மயங்கியலில் நிற்கிறோம் !
இதில் ‘பிண்டப் பொருள்’ வந்தால் வேற்றுமை உருபுகள் எவ்வாறு இணையும் என்பது பற்றி விளக்குகிறார் தொல்காப்பியர்!
பிண்டப் பொருள் என்றால் என்ன?
குவியலாக எது இருக்கிறதோ அது பிண்டம் !
சோற்றைக் கையில் பிடித்து வைப்பார்கள்; அதைப் ’பிண்டம்’ என்பர். ஏனெனில் அது சிறு குவியலாக இருபதால் !
குப்பையானது குவியலாக இருந்தால் அதுதான் ‘பிண்டம்’!
இப்போது நூற்பா-
“பிண்டப் பெயரும் ஆஇயல் திரியா
பண்டியல் மருங்கின் மரீஇய மரபே”  (வேற்.மயங்.7)

 ‘பிண்டப் பெயரும்’ – பிண்டத்தை உணர்த்தும் பெயர்ச்சொல்லும்,
‘ஆ இயல் திரியா’ -  அந்த முறையிலிருந்து மாறுபடாது வருவது,
‘பண்டு இயல் மருங்கின்’ – பண்டுதொட்டு வழங்கிவரும் முறையின்,
‘மரீஇய மரபே’ – மருவிய முறையே !

 ‘அந்த முறையிலிருந்து’  என்று சொன்னார் அல்லவா?
எந்த முறையிலிருந்து?

முன் நூற்பாக்கள் வேற்.மயங்.4, 5 ஆகியவற்றில் கூறிய முறையிலிருந்து!

அம் முறைப்படி, சேனாவரையர் தந்த எடுத்துக்காட்டுகள் !:-

1. ‘குப்பையது  தலையைச் சிதறினான்’  -   (இதற்கு விதி, வேற்.மயங்.4)
- இதில் ‘முதல்’ = குப்பை
            ’சினை’= தலை

‘அது’ எனும் வேற்றுமை உருபு ‘முதல்’மீது வந்துள்ளதைக் காண்க!
‘ஐ’ எனும் வேர்றுமை உருபு ‘சினை’ மீது வந்துள்ளதைக் காண்க!’

2. ‘குப்பையைத்  தலைக்கட்  சிதறினான்’  -   (இதற்கு விதி, வேற்.மயங்.5)
- இதிலும் ‘முதல்’ = குப்பை
            ’சினை’= தலை

‘ஐ’ எனும் வேற்றுமை உருபு ‘முதல்’மீது வந்துள்ளதைக் காண்க!
‘கண்’ எனும் வேர்றுமை உருபு ‘சினை’ மீது வந்துள்ளதைக் காண்க!’

மேலே ‘குப்பை’ என வந்ததுதான் ‘பிண்டம்’!

இவற்றைச் சொல்லிவிட்டுச் சேனாவரையர் , “சிறுபான்மை இரண்டாவது வருதலுமாம்!” என்கிறார்!

என்ன பொருள்?
அஃதாவது, முதலுக்கு ’ஐ’ வரும்போது சினைக்குக் ‘கண்’ வரும் என்று பார்த்தோமல்லவா?  சில இடங்களில் , முதலுக்கு ‘ஐ’ வந்து சினைக்கும் ‘ஐ’ வரும் என்பதே சேனாவரையர் சொல்ல வந்தது !

சேனாவரையரின் எடுத்துக்காட்டு –
  ‘குப்பையைத் தலையைச் சிதறினான்’

இந்த எடுத்துக்காட்டில் .  ‘முதல்’ மீதும் , ’சினை’ மீதும் ‘ஐ’ வந்ததைக் காண்க!

நமக்காகச் சேனாவரையர் , ‘பிண்டம்’ பற்றி விளக்குகையில் , தனது உரை இறுதியில், “படை காடு, காவு மன்ன” என்கிறார் !

என்ன பொருள்?

‘படை’ என்பது பலர் சேர்ந்தது     ; அதனால் , ‘படை’ என்ற சொல்லும் ‘பிண்டம்’தான்.
‘காடு’ என்பது பல  தாவரங்கள்  சேர்ந்தது     ; அதனால் , ‘காடு’ என்ற சொல்லும் ‘பிண்டம்’தான்.
‘கா’ என்பது பல  மரங்கள் சேர்ந்தது     ; அதனால் , ‘கா’ என்ற சொல்லும் ‘பிண்டம்’தான்.

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 02, 2017 9:29 am

PostDr.S.Soundarapandian Sat Feb 17, 2018 12:38 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (464)     

-       முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வேற்றுமை மயங்கியலில் நிற்கிறோம்!

1.   சேவகர்களோடு அரசன் வந்தான்
2.   அரசனோடு சேவகர்கள் வந்தனர்
-       இவற்றில் எது சரி?

இன்றைய நமது நடையில் இரண்டுமே சரிதான்!
ஆனால் தொல்காப்பிய நெறியில் 2ஆம் தொடரே சரியானது!-

அரசனோடு சேவகர்கள் வந்தனர்.

இவ்வாறே-
1.   மாணாக்கரோடு ஆசிரியர் வந்தார் ×
2.   ஆசிரியரோடு மாணாக்கர் வந்தனர்

இதற்கு விதி _
 “ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தே” *(வேற்.மயங். 8)
 
இங்கே நாம் பார்க்கவேண்டியது , ‘ஒடு’ உருபு , உயர்வானவரோடு ஒட்டவேண்டும் !
 
மேலைத் தொடர்களில்,  முறையே ‘அரசன்’ , ‘ஆசிரியர்’ ஆகிய இரு பெயர்ச் சொற்களும் உயர்வானோரைச் சுட்டுவன! அஃதாவது , சேவகரைவிட அரசன் உயர்வானவன்; மாணவரைவிட ஆசிரியர் உயர்வானவர்.

இருவர் சமமானவர் வந்தால் எப்படி எழுதுவது?
 
இளம்பூரணர் உரையில் இதற்கு விடை உள்ளது!

இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டு –
 ‘சாத்தனும் கொற்றனும் வந்தார்’

அஃதாவது,
சமமான இருவராயின்-

சாத்தனொடு கொற்றன் வந்தான்×
கொற்றனொடு சாத்தன் வந்தான்×
சாத்தனும் கொற்றனும் வந்தார்
 
இளம்பூரணர் , ‘நாயொடு நம்பி வந்தான்’ என்றொரு தொடரை எழுதி ஏதோ சொல்லவருகிறாரே? என்ன அது?
அதனை நம் நடையில் வருமாறு விளக்கலாம் !-
 
 ‘நாயொடு நம்பி வந்தான்’ எனில், நம்பியை விட நாய் உயர்ந்தது என எண்ணவேண்டாம் !  நம்பியின் உடைமைப் பொருள் நாய் ! எனவே , உடைமைப் பொருளாதலின் ‘நாயொடு’ என வந்தது!

  ‘கைப்பொருளொடு வந்தான்’  (இதுவும் இளம்பூரணரின் எடுத்துக்காட்டுதான் ).
-
இதில் , ‘கைப்பொருள்’  வந்தவனைவிட உயர்வானது அல்ல! இருந்தாலும் ‘ஒடு’ உருபு சேர்ந்து வந்துள்ளது! மேலே சொன்னவாறு , உடைமைப்பொருள் ஆதலின் இந்த ‘ஒடு’ , மேல் நூற்பாவில் குறித்த ‘ஒடு’ ஆகாது!
இதுதான் இளம்பூரணர் உரைக்கு விளக்கம் !

                                      ***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Feb 17, 2018 12:47 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (464)     

-       முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வேற்றுமை மயங்கியலில் நிற்கிறோம்!

  1.   சேவகர்களொடு அரசன் வந்தான்

   1.   அரசனொடு சேவகர்கள் வந்தனர்

-       இவற்றில் எது சரி?

இன்றைய நமது நடையில் இரண்டுமே சரிதான்!
ஆனால் தொல்காப்பிய நெறியில் 2ஆம் தொடரே சரியானது!-

அரசனொடு சேவகர்கள் வந்தனர்.

இவ்வாறே-
1.   மாணாக்கரொடு ஆசிரியர் வந்தார் ×
2.  ஆசிரியரொடு மாணாக்கர் வந்தனர்

இதற்கு விதி _
 “ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தே” *(வேற்.மயங். 8)
 
இங்கே நாம் பார்க்கவேண்டியது , ‘ஒடு’ உருபு , உயர்வானவரோடு ஒட்டவேண்டும் !
 
மேலைத் தொடர்களில்,  முறையே ‘அரசன்’ , ‘ஆசிரியர்’ ஆகிய இரு பெயர்ச் சொற்களும் உயர்வானோரைச் சுட்டுவன! அஃதாவது , சேவகரைவிட அரசன் உயர்வானவன்; மாணவரைவிட ஆசிரியர் உயர்வானவர்.

இருவர் சமமானவர் வந்தால் எப்படி எழுதுவது?
 
இளம்பூரணர் உரையில் இதற்கு விடை உள்ளது!

இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டு –
 ‘சாத்தனும் கொற்றனும் வந்தார்’

அஃதாவது,
சமமான இருவராயின்-

சாத்தனொடு கொற்றன் வந்தான்×
கொற்றனொடு சாத்தன் வந்தான்×
சாத்தனும் கொற்றனும் வந்தார்
 
இளம்பூரணர் , ‘நாயொடு நம்பி வந்தான்’ என்றொரு தொடரை எழுதி ஏதோ சொல்லவருகிறாரே? என்ன அது?
அதனை நம் நடையில் வருமாறு விளக்கலாம் !-
 
 ‘நாயொடு நம்பி வந்தான்’ எனில், நம்பியை விட நாய் உயர்ந்தது என எண்ணவேண்டாம் !  நம்பியின் உடைமைப் பொருள் நாய் ! எனவே , உடைமைப் பொருளாதலின் ‘நாயொடு’ என வந்தது!

  ‘கைப்பொருளொடு வந்தான்’  (இதுவும் இளம்பூரணரின் எடுத்துக்காட்டுதான் ).
-
இதில் , ‘கைப்பொருள்’  வந்தவனைவிட உயர்வானது அல்ல! இருந்தாலும் ‘ஒடு’ உருபு சேர்ந்து வந்துள்ளது! மேலே சொன்னவாறு , உடைமைப்பொருள் ஆதலின் இந்த ‘ஒடு’ , மேல் நூற்பாவில் குறித்த ‘ஒடு’ ஆகாது!
இதுதான் இளம்பூரணர் உரைக்கு விளக்கம் !

                                      ***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 03, 2018 12:01 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (465)              
-       முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
 
இப்போது-
                       “மூன்றனும் ஐந்தனும் தோன்றக் கூறிய
                       ஆக்கமொடு புணர்ந்த ஏதுக் கிளவி
                       நோக்கோ ரனைய என்மனார் புலவர்”  (வேற். மயங். 9)
 
 ‘மூன்றனும்’ – மூன்றாம் வேற்றுமைக்கண்ணும்,
‘ஐந்தனும்’ – ஐந்தாம் வேற்றுமைக்கண்ணும்,
 ‘தோன்றக் கூறிய’ – விளங்கச் சொல்லப்பட்ட,
 ‘ஆக்கமொடு புணர்ந்த’ – ஆக்கத்தோடு கூடிய,
 ‘ஏதுக் கிளவி’ -  காரணச் சொல்,
 ‘நோக்கு ஓர் அனைய’ -  நோக்கும் நோக்கு ஒரு தன்மைய.
 
வாணிகத்தான் செல்வன் ஆனான்-

இத் தொடரில்,

  ‘வாணிகத்தான்’ = வாணிகம் காரணமாக
                        ‘காரணமாக’ எனவந்துள்ளதை நோக்குக. எனவேதான்,  ‘ஆன்’ எனும் மூன்றாம் வேற்றுமை சேர்ந்த  ‘வாணிகத்தான்’ என்பதை,‘ஏதுக்கிளவி’ என்கிறோம் !  ஏது- காரணம்.

 ‘ஆனான்’ என்பதே ஆக்கக் கிளவி! ‘ஆதல்’ பொருள் இங்கே இருப்பதை நோக்குவீர்!
 
தொல்காப்பியர், ‘ஒடு’வைத்தானே மூன்றாம் வேற்றுமை உருபாகச் சொல்லியுள்ளார்; ‘ஆன்’ எங்கிருந்து வந்தது?
-       நல்ல வினா!

 வேற்றுமையியல் நூற்பா 13இல் , ‘அதனின் இயறல்’ என்று , மூன்றாம் வேர்றுமையை விளக்கினாரல்லவா தொல்காப்பியர்? அதற்கு இளம்பூரணர், ‘மண்ணான் இயன்ற குடம்’ என எடுத்துக்காட்டுத் தந்ததை நோக்குவீர்!

 மண் + ஆன் = மண்ணான்; இங்கே ‘ஆன்’ உருபு வந்துள்ளதல்லவா?
 
 எனவே , தொல்காப்பியர் , மூன்றாம் வேற்றுமை உருபாக ‘ஆன்’ என்பதையும் கூறியுள்ளார் எனல் தகும் !
 
ஐந்தாம் வேற்றுமை உருபாக ‘இன்’னை நேரடியாகக்  கூறியமைக்கு விதி, வேற்றுமையியல் நூற்பா19 ( ‘ஐந்தாகுவதே…’).
 
மேலே , ‘ஆன்’ உருபு வந்ததைப்போலவே, ‘இன்’ உருபும் அதே பொருளில் வரும் என்பதுதானே மேல் நூற்பா (வேற்.மயங்.9)?

எனவே ,
வாணிகத்தான் ஆயினான் = வாணிகத்தின் ஆயினான்

                                      ***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Mar 15, 2018 6:08 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (466)              
-       முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வேற்றுமை மயங்கியலில் தொடர்வது-
  
‘நோக்கல் நோக்கம்’!
 
என்ன அது நோக்கல் நோக்கம் ?-
1. அரசனின் செங்கோலை நோக்கிக் குடிகள் வாழ்கின்றன!
-               இத் தொடரில் , ‘நோக்கி’ என்பது கண்ணால் நோக்குவதைக் குறிக்காது ! ‘அந்தா தெரியுது மன்னன் செங்கோல்!’ என்று கூறுவார்களா?

கருத்தால் மட்டும் நோக்குவதே ‘நோக்கல் நோக்கம்’ ; நோக்கு அல் நோக்கம் !
-               இந்த ‘நோக்கல் நோக்கம்’ பயிலும் தொடர்களில் , இரண்டாம் வேற்றுமை உருபும் , ஐந்தாம் வேற்றுமை உருபும் வரும் என்பதே நாம் காணப்போகும் நூற்பா!-
 
 “இரண்டன் மருங்கின் நோக்கல் நோக்கம்அவ்
  இரண்டன் மருங்கின் ஏதுவு மாகும்”  (வேற்.மயங்.10)
 
முன்னே , வேற்றுமையியல் நூற்பா 11இல் ( ‘காப்பின்..’), இரண்டாம் வேற்றுமை உருபான ‘ஐ’ எப்படியெல்லாம் வரும் என்று காட்டியபோது, தொல்காப்பியர்,  ‘நோக்கலின்’ என்று ஒரு பொருள் பாகுபாட்டை உரைத்தார்!  அதன்படி, ‘கணையை நோக்கினான்’  என்று எடுத்துக்காட்டை வரைந்தார்  சேனாவரையர். 

இது ‘நோக்கிய நோக்கம்’! ஏனெனில் , கணையைக் கண்ணால் பார்ப்பதையே தொடர் குறிக்கிறது !
 
 ‘செங்கோலை நோக்கி’ என்பது இரண்டாம் வேற்றுமை உருபு பெற்ற  ‘நோக்கல் நோகத் தொடர்’!  இதே நோக்கல் நோக்கத் தொடர் , மூன்றாம் வேர்றுமை உருபும், ஐந்தாம் வேற்றுமை உருபும் பெற்று வரலாம் என்பதே இந் நூற்பாப்  (வேற்.மயங்.10) பொருள் !
 
மேல் நூற்பாவில்  (வேற்.மயங்.10), ‘இரண்டன்’ என்பது , முன் நூற்பாவில் (வேற்.மயங்.9) கூறப்பட்ட  3,5 ஆம் வேற்றுமை உருபுகளையாகும் ! 3, 5 ஆம் வேற்றுமை உருபுகளைக்கொண்டு சேனாவரையர் அமைத்துக்காட்டிய தொடர்கள் இவை!-
 
1 .  ‘கோலான் நோக்கி வாழும்’  ( ‘தொடரில்  ஆன்  எனும் மூன்றாம் வேற்றுமை உருபு பயிறுள்ளதை  நோக்குக!’)
  ‘கோலான் நோக்கி வாழும் ’ = கோலால் நோக்கி வாழ்கின்ற

2 .  ‘கோலினோக்கி வாழும்’    ( ‘தொடரில்  இன்  எனும் ஐந்தாம் வேற்றுமை உருபு பயிறுள்ளதை  நோக்குக!’)
  ‘கோலினோக்கி வாழும்’  = கோலால் நோக்கி வாழ்கின்ற
 
இந்த இரண்டு தொடர்களுக்கும் பொருள் ஒன்றே!
 
மேல் தொல்காப்பிய நூற்பாவில் (வேற்.மயங்.10) ,  ‘ஏதுவும் ஆகும்’ என்று வந்ததை நோக்குவீர்!

ஏது = காரணம்

அஃதாவது 3, 5 ஆம் வேற்றுமை உருபுகளின் காரணப் பொருண்மை தொடர்களில் இருக்கவேண்டும் என்பது தொல்காப்பியம்!
 
நாம் பார்த்த தொடரில் , ’அரசனின் செங்கோல்தான் மக்களின் நல்வாழ்வுக்குக் காரணம் ’என்று பொருள் இருப்பதை நோக்குவீர்!இதுவே ’காரணப் பொருண்மை’!

                                      ***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 07, 2018 8:38 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (467)              
-       முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
 
அருணன் மகன் வந்தான் – இத் தொடருக்குப் பொருள் யாது?

அருணனும் மகனும் வந்தனரா?
அருணனின் மகன் மட்டும் வந்தானா?
அருணனின் மகன் வந்தான் என்பதே சரி என்கிறார் தொல்காப்பியர்!

 ‘அருணன் மகன்’ என்பதை  ’உயர்திணைத் தொடர்’ என்று எழுதுகிறார் தொல்காப்பியர். இப்படிப்பட்ட உயர்திணைத் தொடரை விரிப்பதற்கே வருமாறு இலக்கணம் வரைகிறார் தொல்காப்பியர் !:-

 “அதுவென் வேற்றுமை உயர்திணைத் தொகைவயின்
  அதுவென் உருபுகெடக் குகரம் வருமே”                      (வேற். மயங். 11)
 
‘அது என் வேற்றுமை’ – ‘அது’ எனப்படும் வேற்றுமை,
 ‘உயர்திணைத் தொகைவயின்’ – உயர்திணையில் தொகையாக வரும்போது,
 ‘அது என் உருபு கெடக்’ – ‘அது’ எனும் உருபானது கெட்டு,
 ‘குகரம் வருமே’ -   ‘கு’ வ்வுருபு வரும் !
 
 சேனாவரையரின் எடுத்துக்காட்டு – ‘நம்பி மகன்’
 ‘நம்பி மகன்’ என்பதை விரித்தால் , ‘நம்பிக்கு மகன் ’ என வரும் என்பது சேனா வரையரின் விளக்கம்.

சேனாவரையரின்  அடுத்த எடுத்துக்காட்டு – ‘நங்கை கணவன்’
அஃதாவது , ‘நங்கை கணவன்’ என்பதை விரித்தால் , ‘நங்கைக்குக் கணவன் ’ என வரும் என்பது சேனாவரையரின் விளக்கம்.

சரி!
 ‘உயர்திணைத் தொகை’க்குக், ‘கு’ வரும்! அஃறிணைத் தொகைக்கு?
அஃறிணைத் தொகைக்கு ‘அது’வே வரும் என்கிறார் சேனாவரையர்!

இதற்கு எடுத்துக்காட்டை நாம் வருமாறு தரலாம்! –
முட்டை விலை – இஃது அஃறிணைத் தொகை.

இதனை விரித்தால்-
முட்டையது விலை!

விரிவில், ‘அது’ உருபு வந்துள்ளதை நோக்கலாம் !
 
அதெல்லாம் சரி!

மேல் நூற்பாவில் ‘தொகைவயின்’ என வந்துள்ளதைக் கவனித்தீர்களா?
ஆம்!  இருசொல் தொகைக்குத்தான் இந்த விதி பொருந்துமே அல்லாமல், தொடருக்குப் பொருந்தாது!  

 இந்த நுட்பத்தை மு.சண்முகம் பிள்ளையின் பதிப்பு (2006) அடிக்குறிப்பில் வருமாறு காணலாம்! :-

 “நம்பி மகன் என்பது நம்பிக்கு மகன் என விரிக்கப்படினும், குவ்வுருபு இருசொற்றொடர்க்கே ஏற்குமெனவும் நம்பிக்கு மகன் வந்தான் என்புழிப் பிளவுபட்  டிசைத்து வேறு பொருளும் படுதலின் , பலசொற் றொடர்க்கு இன்னுருபே ஏற்குமெனவே அறிந்துகொள்க!  ”.
 
                                                ***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 71 of 84 Previous  1 ... 37 ... 70, 71, 72 ... 77 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக