புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10 
51 Posts - 44%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10 
48 Posts - 41%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10 
2 Posts - 2%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10 
417 Posts - 49%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10 
284 Posts - 33%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10 
28 Posts - 3%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 1 of 84 1, 2, 3 ... 42 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jan 04, 2013 10:28 pm

தொடத் தொடத் தொல்காப்பியம்(2)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

கல் + அணை = கல்லணை
நள் + இரவு = நள்ளிரவு
மன்+ அகல் = மண்ணகல்

-இவற்றில் ,வலப்புறச் சொற்களில் ,’ல்ல’ ,‘ள்ளி’, ‘ண்ண’ என இரட்டை இரட்டையாக
வருகின்றன அல்லவா? இதனையே ‘இரட்டித்தல்’ என்றனர் இலக்கணிகள். தொல்காப்பியத்தில்
இதற்கு விதி உண்டா?
உண்டு! அவ்விதி :-
” .....
குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்
அறியத் தோன்றிய நெறியியல் என்ப ” (தொகை மரபு 18 )

அப்படியானால்,
தம் + அது = தம்மது
நம் + அது = நம்மது
என்றுதானே வரவேண்டும் ?
”வராது” என்கிறார் தொல்காப்பியர் ; நமக்குக் குழப்பம் வருகிறது !

தொல்காப்பியர் ,’நாம்’ என்பதுதான் ‘நம்’ ஆகியுள்ளது ; ஆகவே , இவ்வாறு
நெடில் எழுத்தை அடுத்துப் புள்ளி எழுத்து வந்த சொற்களில், நெடில் எழுத்தானது
குறுகினால், அப் புள்ளி எழுத்து இரட்டிக்காது “ என்கிறார். ஆனால் இந்த விதி ‘அது’
எனும் ஆறாம் வேற்றுமை உருபு சேரும்போதும், ‘கு’ எனும் நான்காம் வேற்றுமை உருபு
சேரும்போதும் மட்டுமே பொருந்தும் ! தொல்காப்பியரின் அவ்விதி :-

” ஆறன் உருபினும் நான்கன் உருபினும்
கூறிய குற்றொற்று இரட்டல் இல்லை
ஈறாகு புள்ளி அகரமொடு நிலையும்
நெடுமுதல் குறுகும் மொழிமுன் னான” (தொகை மரபு 19)

அஃதாவது, ‘தம்’ என்பது, ‘தாம்’என்பதன் குறுக்கம் ஆதலால்,
தம் + அது = தமது
என்றுதான் ஆகும் என்பது அவர் விளக்கம் !

இதனைப் போலவே,
நம் +அது = நம்மது ×
= நமது √
தன் + அது = தன்னது ×
= தமது √

குழப்பம் நீங்கியதா ?

* *


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Jan 05, 2013 7:38 am

அருமை, அருமையான பதிவு.....பயனுள்ள தகவல்கள்...இன்றைய தமிழருக்கு எழுதுவதில் பல குழப்பங்கள் நிலவுகிறது....தங்களின் பதிவு பல ஐயங்களை தீர்க்க உதவும்...

மிக்க நன்றி, தொடருங்கள்



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Jan 05, 2013 9:58 am

மிக மிக அருமை தொடருகள்
கேசவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கேசவன்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 06, 2013 12:01 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (3)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“ இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக் கூட்டம் காணுங் காலை ” (களவியல் 1:1-3)
- என்பது தொல்காப்பியம்.
இதில் , ‘காமக் கூட்டம் காணுங் காலை’ எனும் மூன்றாம் அடிக்கு,’காமத்தால் ஆணும் பெண்ணும் சேரும் சேர்க்கையைப் பற்றிப் பேசும்போது’ என்பது பொருள். இதில் ஒன்றும் குழப்பமில்லை.

’ அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்’ எனும் இரண்டாம் அடிக்கு ’முல்லை,குறிஞ்சி,பாலை,மருதம்,நெய்தல் என்ற ஐந்து நிலங்களிலும் நடக்கும் காத்திருத்தல்(இருத்தல்),புணர்தல், பிரிதல் ,ஊடல்,வருந்துதல்(இரங்கல்) ஆகிய ஐந்து செயல்களிலுமே அன்பு இருக்கிறது;அப்படிப்பட்ட ஐந்திணையில் ’ என்பது பொருள். இதிலும் குழப்பமில்லை.

ஆனால் முதலடியில், ’இன்பமும் பொருளும் அறனும்’ என்று தொல்காப்பியர் வரிசைப்படுத்தியுள்ளாரே அதில்தான் குழப்பம் வருகிறது!
’அறம், பொருள், இன்பம்’ என்ற வரிசைதானே நாமறிந்தது?திருக்குறளில் இந்த வரிசையில்தானே மூன்று பால்கள் உள்ளன?

இளம்பூரணர் விளக்குகிறார்!

அஃதாவது,’போகம் எனும் ஆண் பெண் புணர்ச்சியால் வரும் இன்பம் மனிதர்களுக்கு மட்டுமல்லாது விலங்குகளுக்கும் முதன்மையாகும்; அதனால் அதனை முதலில் வைத்தார்;அந்த இன்பத்தை அடையப் பொருள் தேவை; அதனால் அதனை இரண்டாவதாக வைத்தார்; அந்தப் பொருளைத் தேடுவதில் எச்சரிக்கை தேவை; பொருள் தேடுவது அறவழியில் இருக்கவேண்டும்; ஆகவே அறத்தை மூன்றாவதாகக் கூறினார்.’ என்பதே இளம்பூரணர் விளக்கியதன் கருத்துப் பிழிவாகும்!

இப்போது நமக்குக் குழப்பம் நீங்குகிறது!
* * *


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jan 09, 2013 9:43 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (4)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

களவியல் ,கற்பியல் என்று தொல்காப்பியத்தில் இரண்டு இயல்கள் உள்ளன.இவற்றில் தோழிப்பெண் தலைவியிடம் எந்தெந்தச் சூழல்களில் எவ்வெவற்றைப் பேசலாம், தாய்,தலைவியிடம் எப்போது பேசலாம்,தலைவன் தலைவியிடம் எம்மாதிரியான இடங்களிற் சொல்லாடலாம்,பேசுவோர் என்னென்ன கருத்துப்படப் பேசலாம் என்றெல்லாம் தொல்காப்பியர் விதிகளை வகுத்துள்ளார்!
ஓர் எடுத்துக்காட்டு :-
” பண்பிற் பெயர்ப்பினும் பரிவுற்று மெலியினும்
அன்புற்று நகினும் அவட்பெற்று மலியினும்
ஆற்றிடை யுறுதலும் அவ்வினைக் கியல்பே “ (களவியல் 12)
என்பது அவர் வகுத்துள்ள விதி.
அஃதாவது,தோழி தலைவனிடம், “ நீ தலைவியிடம் இப்படி இரகசியமாகப் பழக எண்ணுகிறாயே,இது நல்ல பண்புதானா?” என்று கேட்கும்போதும், தலைவன்(காதலன்),தலைவியை நினைத்து நினைத்து உடல் மெலியும்போதும்,தோழி தலைவனைக் கேலிசெய்யும்போதும்,தோழி தலைவியைச் சந்திக்கத் தலைவனை அனுமதிக்கும்போதும் , தலைவனானவன் தோழியிடம் பேசலாம்” என்பது இவ் விதியின் பொருளாகும்.
இங்கு நமக்கு ஓர் ஐயம் வருகிறது! யாரிடம் யார் எப்படிப்பேசினால் இவருக்கென்ன? இதற்கு விதி தேவையா? என்றெல்லாம் வினாக்கள் எழுகின்றன!
இவற்றுக்கு விடை தொல்காப்பியத்தில் இல்லை! உரையாசிரியர்களிடமும் இல்லை!
விடையை நாம் சமுதாயத்திலிருந்து பெறவேண்டும்!
வீட்டில் சிறுமி அதிகமாகப் பேசினால் என்ன சொல்கிறார்கள்? “ இந்தா வயசுக்குத் தக்கன பேசு! “ என அதட்டுகிறார்கள் அல்லவா? என்ன பொருள்? ஒரு சிறுமி இவ்விவற்றை இந்த அளவுதான் பேசவெண்டும் என்று நம் முன்னோர்கள் பாதை வகுத்துள்ளார்கள் என்பதுதானே?
அலுவலகத்திலிருந்து மாலை வீடு திரும்புகிறார் ஒருவர்; அப்போது வாசல் காப்போன்,”சார்,கோபமாக இருக்கிறீர்களா? காபி சாப்பிடுகிறீர்களா?” என்று கேட்டால் வீட்டுக்காரர் அதை விரும்புவாரா? அதே கேள்வியை வீட்டுக்குள் சென்றதும் அவரின் மனைவி கேட்டால் அவர் மகிழ்வார்!
வங்கியில் பணம் எடுக்கிறீர்கள் ; அப்போது ,யாரோ ஒருவர் ,”சார்! பணத்தை எண்ணிப்பார்த்தீர்களா?”என்று கேட்டால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்? ”ஆகா! நம் பணத்துக்கு ஆபத்து! நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் !” என நினைக்கமாட்டீர்கள்?உங்களிடம் ஒரு மனக் கலவரம் ஏற்படாது? அதே நேரத்தில், வங்கிக் காசாளர்,”சார்! பணத்தை என்ணிப்பார்த்தீர்களா? சரியாக இருக்கிறதா?”என்று கேட்டால் நீங்கள் அகமகிழ்வீர்கள்!
நாம் பார்த்த இந்த எடுத்துக்காட்டுக்களிலிருந்து என்ன தெரிகிறது?

யாரும் எதையும் பேசலாம் என்று நினைக்கக் கூடாது;பேச்சுக்கு (பேச்சைத்தான் ‘கூற்று’ என்று தொல்காப்பியம் எழுதுகிறது) ஒரு வரன்முறை உண்டு! யார், யாரிடம், எப்போது ,எதைப் பேசலாம் என்றெல்லாம் பழந்தமிழர்கள் கோடு போட்டு வாழ்ந்தனர்! அதைத்தான் சூத்திரங்களாக எழுதினார் தொல்காப்பியர்!
ஐயம் நீங்கியதா?
* * *


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 12, 2013 1:07 pm



தொடத் தொடத் தொல்காப்பியம் (5)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

"பெருமையும் உரனும் ஆடூஉ மேன “ (களவியல் 7)
(பெருமை-ஆற்றல், கொடை முதலியவற்றால் வரும் பெருமை; உரன் –அறிவு;
ஆடூஉ-ஆண்;மேன-மேலன)
இந்தத் தொல்காப்பிய நூற்பாவைக் கொண்டு பலர்,”ஆணுக்குரிய பண்புகள்-பெருமையும்
அறிவும்;பெண்ணுக்கு இவை இல்லை!தொல்காப்பியரே கூறிவிட்டார்!” என்பர்.
அப்படியானால் ,பென்ணுக்குப் பெருமை என்பதே இல்லையா? பெண்ணுக்கு அறிவே
இல்லையா?
வினாக்கள் எழுகின்றன அல்லவா?
நூற்பா ,காதலில் விழுந்த ஆண்பெண் பற்றியது என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள்!
காதலில் அப்போதுதான் ஆணும் பெண்ணும் நுழைந்துள்ளனர்!அந்த வேளையில் காதலன்
என்ன செய்வான்?தன்னைப் பெருமைப்படுத்திக் கொள்ள விழைவான்! குறைந்தது சட்டைக் காலரையாவது தூக்கிவிட்டுக் கொள்கிறானல்லவா?அதுதான் பெருமைப்படுத்திக் கொள்வது!

அடுத்தடுத்த நாட்களில் அக் காதலன் நல்ல நல்ல ’பெல்ட்டு’களைப் போட்டுக்கொண்டுவருவான்!பார்த்திருக்கிறீர்களா? அதுதான் ’பெருமை’ என்பதன் சுருக்கப் பொருள்!
அக் காதலன் தன்னை அறிவாளியாகக் காட்டிக்கொள்ளப் படாத பாடு படுவான்!புதிதாக
ஒரு ‘செல் போன்’ வாங்கிவருவான்! ஒரு புதுப் பாட்டை அதில் போட்டுக்காட்டுவான்!இவையெல்லாம்
காதல் வயப்பட்ட காதலனைப் பற்றிக்கொள்ளும் தன்மைகள்! உளவியல் நுட்பங்கள்!
ஆனால், இளம்பூரணர் கருத்துப்படி, இந்த இரு வெளிப்பாடுகளும் ,’ காதலியை மனைவியாக அடையவேண்டுமே தவிர, உடனடியாகப் புணர்ச்சியில் ஈடுபட முயலக்கூடாது’ என்று அவனை நல்வழிப்படுத்தும்!
ஆதலால், களவில் (காதலில்) அப்போதுதான் நுழைந்துள்ளவனுக்குக் கூறியதைப் பொதுவாக எடுத்துக்கொண்டு அல்லல்படக் கூடாது!
விடை கிடைத்ததா?
* * *


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Jan 12, 2013 4:26 pm

தங்களின் பதிவுக்கு மிக்க நன்றி.... சூப்பருங்க

தொல்காப்பியம் குறித்து தாங்கள் தரும் தகவல்களை ஒரே திரியில் தொடராக வழங்கவும்.... வாசிப்பவருக்கு அனைத்தையும் படிக்கும் வாய்பமையும்... அன்பு மலர்



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 13, 2013 2:01 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (6)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

”அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற் குரிய என்ப ” (களவியல் 8)

-இது தொல்காப்பியம்!

இதனை வைத்து ,”அச்சம், நாணம் ,மடம் ஆகிய குணங்கள்தாம் பெண்ணுக்கு இருக்கவேண்டிய குணங்கள் !” என்று எழுதுகிறார்கள்!
இந்த மூன்றும் பெண்களுக்குத் தொல்காப்பியத்தில் விதிக்கப்பட்ட குணங்கள் அல்ல!
பின், உண்மை யாது ?
களவியல் நூற்பா இது! களவியல்- காதலியல்.
அஃதாவது, காதலன் காதலி இருவரும் ஒருவர் உள்ளத்தில் மற்றவர் ,முதன்முதலாக அப்போதுதான் புகுந்துள்ளனர்! அவளுக்கோ வேட்கைத்தீ ! அந்த ஆசைத் தீக்கு அவள் பலியாகிவிடுவாளா?
மாட்டாள்!
ஏன்?
அவளை அப்போது பதுகாப்பன மூன்று – அச்சம் ,நாணம் , மடம் !
” ஏதாவது ஆகிவிடுமோ? நாம் மோசம் போய்விடுவோமோ?”- என அப்போது அவள் எண்ணுவது ’அச்சம்’ !
அவள் முகம் அப்போது வேர்க்கிறது! சிவக்கிறது!ஆனால் பேச்சு வரவில்லை!எதையும் செய்ய இயலவில்லை! இலேசான உதட்டு நெளிப்பு மட்டும் காட்டுகிறாள்! –இது ’நாணம்’!
காதலனைக் கண்டுகொள்ளாதது போல, எதுவுமே அறியாதது போலப் பாவனை காட்டுகிறாள்! –இதுதான் ‘மடம்’! இந்த மடம், காதலன் உண்மையாகத்தான் காதலிக்கிறானா என்று அறிவதற்கான ஒரு கருவி ! ’மடம்’ என்பது மடத்தனம் அல்ல!
இவ்வாறு காதலில் வீழ்ந்த பெண்மனத்தின் மூன்று நுட்பமான நிலைகள்தாம் தொல்காப்பியரால் கூறப்பட்டனவே அல்லாமல்,பொதுவாகப் பெண்களுக்கு அவரால் வகுக்கப்பட்ட இலக்கணங்கள் அல்ல அவை !
உண்மை , துலங்கிற்றா ?


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jan 14, 2013 11:04 am


தொடத் தொடத் தொல்காப்பியம் (7)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33


”காமஞ் சொல்லா நாட்டம் இன்மையின்
ஏமுற இரண்டும் உளவென மொழிப” (களவியல் 20)

-இது தொல்காப்பியம்!

ஆணும் பெண்ணும் சந்தித்துக், காதலைக் கனியவைத்துக் கொண்டனர்! அப்போது,பெண்ணிடத்தில் கப்பிக்கொண்டவை- அச்சம், நாணம் ,மடம்!
ஆனால், காமவேட்கையோ அதிகம்!
என்ன ஆயிற்று?
அச்சம் போய்விட்டது!
அச்சம்போன அந்த நிலையில்,அவளுடைய கண்ணில் காமம் கொப்பளித்தது!அப்போது தொல்காப்பியர் சொன்னார்-”காமத்தைக் காட்டிக் கொடுக்காத கண் உலகில் எங்குமே இல்லையப்பா!”(நாட்டம்-கண்).
ஆனாலும்,அச்சம் நீங்கினாலும்,அவள் கட்டவிழ்த்துவிட்ட காளையாகிவிடமுடியாது!
அவளைக் காப்பதற்கு என்று நாணமும் மடமும் இருக்கும்!அவை இரண்டும் அவளிடத்து இருந்து ,அவளின் காமம் மேலோங்காவாறு பாதுகாக்கும்! (ஏமுற-பாதுகாப்புத் தரும் வகையில்).
இதுதான் காதல் வளையில் விழுந்த பெண்ணின் உளவியல்(psychology)! இதைத்தான் படம்பிடித்தார் தொல்காப்பியர்! சிறந்த ’திரைப்பட இயக்குநர்’ அவர்!
இந்த நூற்பாவில் வந்த ‘காமத்தைச் சொல்லாத கண்ணே உலகில் இல்லை’என்ற தொல்காப்பியர் மொழி இருக்கிறதே, ஆகா, தொடத் தொட இன்பம்!

* * *


Sponsored content

PostSponsored content



Page 1 of 84 1, 2, 3 ... 42 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக