புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 6:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 6:16 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am

» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Today at 8:49 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:26 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» எப்பூடி? - மரியாதை ராமன் கதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10 
71 Posts - 51%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10 
48 Posts - 35%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10 
6 Posts - 4%
i6appar
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10 
3 Posts - 2%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10 
2 Posts - 1%
Barushree
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10 
1 Post - 1%
Jenila
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10 
1 Post - 1%
Safiya
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10 
148 Posts - 42%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10 
142 Posts - 41%
i6appar
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10 
16 Posts - 5%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10 
10 Posts - 3%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10 
10 Posts - 3%
Anthony raj
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10 
3 Posts - 1%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Page 47 of 84 Previous  1 ... 25 ... 46, 47, 48 ... 65 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Mar 26, 2015 8:03 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (355)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது தொல்காப்பியர் காட்டும் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் பற்றிக் காண்போம் ! –

“குறியதன் முன்னர்  ஆய்தப்  புள்ளி
உயிரொடு புணர்ந்தவல்  லாறன் மிசைத்தே”  (மொழி. 5)

‘குறியதன் முன்னர்’ – குற்றெழுத்தின் முன்பாக ,
‘ஆய்தப் புள்ளி’ – ஆய்தமாகிய மெய்யெழுத்து ,
‘உயிரொடு புணர்ந்தவல்  லாறன் மிசைத்தே’  -  ஆறு வல்லெழுத்துகள் மீது உயிரெழுத்துகள் ஏறிக் குற்றியலுகரங்கள் நிற்கும் !

இதற்கு நச்சர் தந்த எடுத்துக்காட்டுகள்  !:-

1. எஃகு
2. கஃசு
3. கஃடு
4. கஃது
5. கஃறு
6. கஃபு
7. கஃறு
8. அஃது
9. இஃது
10. உஃது

நச்சர், குற்றியல் உகரத்தோடு சேரும் பிற உயிர்கள் பற்றியும் தனது உரையில் காட்டுகிறார் ! :

11. அஃகாமை (அஃகு + ஆ + மை) (குற்றியல் உகரத்தோடு பிற உயிரான ‘ஆ’ சேர்ந்ததை நச்சர் குறிக்கிறார் !)

12. வெஃகாமை (வெஃகு +ஆ + மை) ) ( இங்கும் குற்றியல் உகரத்தோடு பிற உயிரான ‘ஆ’ சேர்ந்ததை நச்சர் குறிக்கிறார் !)

13. அஃகி (அஃகு + இ) (குற்றியல் உகரத்தோடு பிற உயிரான ‘இ’ சேர்ந்ததை நச்சர் குறிக்கிறார் !)

14. வெஃகி (வெஃகு + இ) ( இங்கும் குற்றியல் உகரத்தோடு பிற உயிரான ‘இ’ சேர்ந்ததை நச்சர் குறிக்கிறார் !)

15. அஃகம் (அஃகு + அம்) (  குற்றியல் உகரத்தோடு பிற உயிரான ‘அ’ சேர்ந்ததை நச்சர் குறிக்கிறார் !)

16. கஃசியாது  (கஃசு + யாது) (குற்றியல் உகரம் , இகரமாகத் திரிந்ததைக் காட்டுகிறார் நச்சர் !)

இந்த எடுத்துக்காட்டுகளில்  எல்லாம் , உயிர் எழுத்துகளின் பின்னே (வலப்புறம்) ஆய்தம் நிற்பதைக் கவனிக்க !

மேலே வந்த பட்டியலின்படி –
குறிலை அடுத்த ஆய்தமானது தனித்த சொற்களிலும் வரும் , புணர்ச்சியால் ஏற்பட்ட  சொற்களிலும் வரும் என்பது காணக்கிடக்கிறது !

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 28, 2015 2:47 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (356)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஆய்தமானது, தனிக்குறில் குற்றியலுகரம் ஊர்ந்த எழுத்து , ஆகியவற்றின் இடையே வரும் என்று சற்றுமுன் காட்டினார் தொல்காப்பியர் ! எஃகு , கஃசு முதலிய எடுத்துக்காட்டுகளையும் பார்த்தோம் !

இப்போது , தனிச் சொல்லில் மட்டுமல்லாது புணர்ச்சிக்கிடையேயும் ஆய்தம் தோன்றும் எனக் காட்டுகிறார் ! –

“ஈறியன்  மருங்கினு மிசைமை தோன்றும்”  (மொழி. 6)

‘ஈறு இயல் மருங்கினும்’ – நிலைமொழி ஈறு , வருமொழி முதலொடு புணரும்போது,
‘இசைமை தோன்றும்’ – ஆய்த ஒலி தோன்றும் !

இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் ! –
1 . கஃறீது
கல் + தீது = கஃறீது ;  இங்கே வந்த ‘ஃ’ , அரை மாத்திரை கொண்டது என்பது நச்சர் உரையால் தெளிவாகிறது ! ஆனால் நன்னூலார் , இடையிலே புணர்ச்சியால் வந்துள்ளதால் இந்த ஆய்தத்திற்கு மாத்திரை கால் என்று கூறுகிறார் ! நன்னூலாரின் இக் கூற்றை மறுத்தும் எழுதியுளர் !

2 . முஃடீது
முள் + தீது = முஃடீது
மேலை விளக்கத்தை இங்கும் இணைக்க !
மேல் இரு சொற் புணர்ச்சிகளிலும் நிலைமொழி  முதல் எழுத்து குறிலாகவும் வருமொழி வல்லெழுத்தாகவும்  இருப்பதைக் கவனிக்க !

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 29, 2015 4:49 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (357)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இந்த நூற்பாவில் , சில இடங்களில் ஆய்த ஒலி நீண்டு ஒலித்தாலும் , ‘ஃஃ’ என இரண்டு ஆய்தம் போட்டு எழுத வேண்டாம் என்பதற்கு விதி தருகிறார் தொல்காப்பியர் ! –

“உருவினும் இசையினும் அருகித் தோன்றும்
மொழிக்குறிப்பு எல்லாம் எழுத்தின் இயலா
ஆய்தம் அஃகாக் காலை யான”  (மொழி. 7)

‘உருவினும் இசையினும்’ – நிறத்தையும் உருவத்தையும்
‘ஆய்தம் அஃகாக் காலை யான ’  - ஆய்தமானது தனது இயல்பான அரை மாத்திரையை விட அதிகமாக ஒலிக்கவேண்டிவந்தபோது.
‘அருகித் தோன்றும்
மொழிக்குறிப்பு எல்லாம்’  - கஃறு ,சுஃறு என்பன போன்ற ஒலிக்குறிப்புச் சொற்களில் ,
‘எழுத்தின் இயலா’ – ஓர் ஆய்தம் மட்டுமே எழுதப்படுமே அல்லாமல் , ஃஃ என இரண்டு ஆஃதம் போட்டு எழுதுதல் இல்லை !

அஃதாவது-
‘கறு’ எனும் கறுப்பு நிறத்தைக் குறிக்கும் சொல்லைக் , ‘கஃறு’ என ஒரே ஒரு ஆய்தம் இட்டு எழுதினால் போதும் !

இதைப்போலவே ,  ‘சுறு’ எனும் ஓசையைக் குறிக்கும் சொல்லைக்  ‘ ‘சுஃறு’ என ஒரே ஒரு ஆய்தம் இட்டு எழுதினால் போதும் !

ஆய்வாளர்கள் ஆய்ந்துள்ளதைத் துணைக்கொண்டு ,
மேலும் விளக்கம் கூறலாம் !-

‘கஃறென்னும் கல்லதர் அத்தம்’  என்றால் , ‘கறுப்பாக இருக்கும் கல் நிரம்பிய வழி’ என்பது பொருள் ! இங்கே ‘கஃறு’ என்பதில் உள்ள ஆய்தமானது நீண்டு ஒலிக்கிறது ;ஆனால் அதற்காக இரண்டு ஆஃதங்களைப் போட்டு எழுதக்கூடாது !

‘சுஃறென்னும் தண்தோட்டுப் பெண்ணை ’  என்றால் , ‘சுஃறு என ஒலிக்கும் பச்சை இலைகளைக் கொண்ட பெண்ணை மரம்  ’ என்பது பொருள் ! இங்கே ‘சுஃறு’ என்பதில் உள்ள ஆய்தமானது நீண்டு ஒலிக்கிறது ;ஆனால் அதற்காக இரண்டு ஆஃதங்களைப் போட்டு எழுதக்கூடாது !

அப்படியானால் ‘ஆய்த அளபெடை’ எல்லாவற்றுக்குமே ஓர் ஆஃதம் போட்டால் போதுமா ?

உங்கள் ஐயம் நியாயமானது !

ச.பாலசுந்தரம் இதற்கு விடை கூறுகிறார் ! –

“எஃஃகிலங்கிய ,  வெஃஃகுவார்  என்புழிப் போல , ஆய்த அளபெடைபெயர், வினை இடத்தே வருதலன்றிக் குறிப்பு மொழிக்கண் வாராது”.

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Apr 01, 2015 8:45 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (358)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழிமரபில் தொல்காப்பியர் இப்போது அளபெடை பற்றிக் கூறுகிறார் !-

“குன்றிசை  மொழிவயி  னின்றிசை  நிரைக்கும்
 நெட்டெழுத் திம்ப ரொத்தகுற் றெழுத்தே” (மொழி. 8)

‘குன்றிசை  மொழிவயின்’ – சொல்லில் ஓசை குறையும் நேரத்தில் ,
‘நெட்டெழுத்து   இம்பர்  ஒத்த குற்றெழுத்தே ’ – நெடில் எழுத்தின் பின்னே , அந்த நெடிலின் இனமாகிய குறில் எழுத்து ,  
‘நின்றிசை  நிரைக்கும் ’ – நின்று இசையை  நிறைக்கும் !

இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகளை வருமாறு எழுதிக்காட்டலாம் !-

1 . ஆஅ
‘ஆ’விற்குரிய இரண்டு மாத்திரை ஓசை போதாதென்றால் , பக்கத்தில் ‘அ’வை எழுதி ஒரு மாத்திரையைக் கூட்டிக்கொள்ளலாம் !

2 . ஈஇ
‘ஈ’யிற்குரிய இரண்டு மாத்திரை ஓசை போதாதென்றால் , பக்கத்தில் ‘இ’யை எழுதி ஒரு மாத்திரையைக் கூட்டிக்கொள்ளலாம் !

3 . ஊஉ
‘ஊ’விற்குரிய இரண்டு மாத்திரை ஓசை போதாதென்றால் , பக்கத்தில் ‘உ’வை எழுதி ஒரு மாத்திரையைக் கூட்டிக்கொள்ளலாம் !

4 . ஏஎ
‘ஏ’விற்குரிய இரண்டு மாத்திரை ஓசை போதாதென்றால் , பக்கத்தில் ‘எ’வை எழுதி ஒரு மாத்திரையைக் கூட்டிக்கொள்ளலாம் !

5 . ஓஒ
‘ஓ’விற்குரிய இரண்டு மாத்திரை ஓசை போதாதென்றால் , பக்கத்தில் ‘ஒ’வை எழுதி ஒரு மாத்திரையைக் கூட்டிக்கொள்ளலாம் !

மேல் அளபெடை,  பாட்டுகளில் மட்டும்தான் வருமா?

அல்ல!

பாட்டுகளில் பெரும்பாலும் வரும் ! உரைநடையில்  எப்போதாவது வரும் !

ஐங்குறுநூற்றுக் கூற்றுகளில் ‘சொல்லியதூஉம்  ஆம்’ எனப் பல இடங்களில் வருகிறது ! இது உரைநடைதான் ! ஒரு கருத்துத் தெளிவிற்காக  உரைநடையில்  அளபெடை வருகிறது !

சிறு குழந்தையைத்  தாய்க்காரி , ‘வா……’ என்று இரைந்து கூப்பிடுகிறாள் ! இதனை , ‘வாஆ’ என்று எழுதக்கூடாது ! ‘வாஅ அ’ என்றுதான் எழுதவேண்டும் !

இதற்கு இலக்கணம்தான் நாம் மேலே  (மொழி. 8 ) பார்த்தது !

இவ்வாறு பேச்சு வழக்கில் வரும்  அளபெடையை ‘இயற்கை அளபெடை’ என்பர் !

 ***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Apr 01, 2015 8:46 pm

PostDr.S.Soundarapandian Thu Apr 02, 2015 3:54 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (359)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழிமரபின் சென்ற நூற்பாவில் (8) , ‘ஆ’வுக்கு அளபெடை எழுத்து ‘அ’ என்றும் ,  ‘ஈ’ க்கு அளபெடை எழுத்து ‘இ’ என்றும் பார்த்தோம் !

அப்படியானால் , ‘ஐ’ , ‘ஔ’ ஆகியவற்றுக்கு ?

தொல்காப்பியரின் விடை ! –
“ஐஔ வென்னு மாயீ ரெழுத்திற்
கிகர வுகர மிசைநிறை வாகும் !”  (மொழி. 9)

இதன்படி-
‘ஐ’க்கு அளபெடை எழுத்து – ‘இ’  !
‘ஔ’வுக்கு அளபெடை எழுத்து – ‘உ’  !

இந் நூற்பாவிற்கு இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகளை வருமாறு தரலாம் ! –

1 . ஐஇ
‘ஐ ’க்கு அளபெடை எழுத்தாக ‘இ’!
‘ஐ’ என்ற எழுத்தையும் ‘இ’ என்ற எழுத்தையும் உச்சரித்துப் பாருங்கள் ! ‘ஐ’க்கு இன எழுத்து ‘இ’ என்பது சரிதான் என்பது விளங்கும் !

2. ஔஉ
‘ஔ ’வுக்கு அளபெடை எழுத்தாக ‘உ’!
‘ஔ’ என்ற எழுத்தையும் ‘உ’ என்ற எழுத்தையும் உச்சரித்துப் பாருங்கள் ! ‘ஔ’க்கு இன எழுத்து ‘உ’ என்பது சரிதான் என்பது விளங்கும் !

‘காரிகை’ என்பதைக் கூத்துக் கலைஞர் ‘காரிகைஇ இ இ இ’ என்று காதைப் பொத்திக்கொண்டு நீட்டுவார் ! அப்போது ஆர்மோனியக்காரக் மேசை மீது ஏறிக்கொண்டு ஆர்மோனியப்பெட்டிக் கட்டைகளை அழுத்து அழுத்து என்று அழுத்துவார் !

அதே கலைஞர் , ‘கௌமாரி’ என்பதைக் ‘கௌஉ உ உ உ உ மாரி’ என்பார் !
இந்த இரு எடுத்துக்காட்டுகளிலும் இன உயிர்கள் , ஓசையைக் கூட்டுவதற்காக , அளபெடை எழுத்துகளாக வந்துள்ளதைக் காண்க !

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Apr 03, 2015 1:49 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (360)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஓரெழுத்து  ஒருமொழி – கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இதைப் பற்றியதுதான் கீழ்வரும் நூற்பா ! –
“நெட்டெழுத்  தேழே ஓரெழுத் தொருமொழி !” (மொழி. 10)

இதனை மேலோட்டமாகப்  பார்க்கும்போது , ஏழு நெடில் எழுத்துகள் மட்டுமே  ‘ஓரெழுத்து ஒருமொழி ’ என்று கூறத் தக்கவை என்று பொருள் ஆகிறது !

அப்படியானால் தமிழில் மொத்தமே 7 ஓரெழுத் தொருமொழிகள்தாமா உள்ளன?
நாம் ‘மேலோட்டமாகப்’ பார்த்ததில் ஏதோ பிழை உள்ளது என்று தோன்றுகிறது ; இல்லையா?

என் கையைப் பிடித்துக்கொண்டு வாருங்கள் நூற்பாவை ஆய்வோம் !

‘நெட்டெழுத்து   ஏழே’ – ஏழு நெடில் உயிர்கள் மட்டுமே ,
‘ஓரெழுத்து  ஒருமொழி’ – ஓர் எழுத்தால் அமையும் சொல்லாகும் !

இப்போதும் தெளிவில்ல!

இளம்பூரணர், “ ஆ  ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என வரும் ” என்று உரை எழுதுகிறார் !
நெடில் ஏழு யாவை என்பதுதான் நமக்குத் தெரியுமே ?

எனவே இபோதும் தெளிவில்லை !

இளம்பூரணர் உரையைப் பின் தொடர்வோம் !

“இதுவும் உயிர்க்கும் உயிர்மெய்க்கும் பொது  ” என்கிறார் இளம்பூரணர் !
அஃதாவது , ‘நெட்டேழுத்து  ஏழு’ என்பதை , மெய்மீது ஏறிய 7 நெடில்கள் என்றும் பொருள் கொள்ளவேண்டும் ! ‘உயிர் மெய்க்கும் பொது’ என இளம்பூரணர் சொன்னதன் பொருள் இதுதான் !

இப்போது தெளிவு பிறக்கிறது !

அஃதாவது-

1 .ஆ – இஃது ஓரெழுத்து ஒருமொழிதான் ! தனி நெடிலாக நின்று ஒரு மொழி (சொல்) ஆகிறது ! ஆ =  பசு .

இனி இந்த உயிர் ஏறிய சொல்லைப் பார்ப்போம் !

க் + ஆ = கா
கா – இதுவும் ஓரெழுத்து ஒருமொழிதான் ! கா= சோலை

இப்போது இளம்பூரணர் உரை நமக்குத் தெளிவாகி விட்டதல்லவா?

2 . ஈ – ஓரெழுத்து ஒருமொழி ! ஈ = பறக்கும் ஈ.
   த் + ஈ = தீ
தீ – இதுவும் ஓரெழுத்து ஒருமொழிதான் ! தீ = நெருப்பு

3. ஊ - ஓரெழுத்து ஒருமொழி ! ஊ = தசை
ப் + ஊ = பூ
பூ – இதுவும் ஓரெழுத்து ஒருமொழிதான் ! பூ = ஏமாந்தவர் காதில் சுற்றுவது!

4. ஏ – ஓரெழுத்து ஒருமொழி ! ஏ = அம்பு
   ந் + ஏ = நே
நே – இதுவும் ஓரெழுத்து ஒருமொழிதான் ! நே = அன்பு

5 .  ஓ – ஓரெழுத்து ஒருமொழி ! ஓ = மதகு நீர் தாங்கும் பலகை
  ச் + ஓ = சோ
சோ – இதுவும் ஓரெழுத்து ஒருமொழிதான் ! சோ = அரண்

6 . ஔ – ஓரெழுத்து ஒருமொழி அல்ல !
     இளம்பூரணர் எழுதுகிறார் – “ஔகாரத்தில் உயிர் மெய்யையே கொள்க !”

ஔ எனும் நெடில் உயிரைப் பொறுத்தவரையில் , தனி ‘ஔ’ ஆக நின்று ஒரு தனிச்சொல்லாக அமைவது இல்லை ! மெய்யோடு சேர்ந்துதான் தனிச்சொல்லாக- ஓரெழுத்து ஒருமொழியாக -  வரும் !
   க் + ஔ = கௌ
கௌ –  ஓரெழுத்து ஒருமொழி ! கௌ = கொள்ளு (Horsegram)

மேலே காட்டிய இந்த ஓரெழுத்து ஒருமொழிகள்தாம் தமிழின் மொத்த ஓரெழுத்து ஒருமொழிகள் என எடுத்துக்கொள்ளவேண்டாம் ! வேறு பலவும் உள !

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82899
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 03, 2015 4:24 pm

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 3838410834 தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 47 103459460

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Apr 03, 2015 8:17 pm

நன்றி அய்யாசாமி அவர்களே !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 04, 2015 10:26 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (361)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

முன் ஆய்வில் ஏழு நெடில்களுகும் ஓரெழுத்து ஒருமொழிக்கும் உள்ள தொடர்பைப் பார்த்தோம் !

அப்படியானால் ஐந்து குறில் உயிர்கள்?

அது பற்றியதுதான் இந்த நூற்பா! –

“குற்றெழுத்  தைந்து  மொழிநிறை  பிலவே” (மொழி. 11)
‘குற்றெழுத்து   ஐந்தும் ’ – அ , இ , உ , எ , ஒ  ஆகிய ஐந்தும் ,
‘மொழிநிறைபு  இலவே’ – தனித்து நின்று ஓரெழுத்து ஒருமொழி ஆவதில்லை !

இங்கு இளம்பூரணர் ஒரு தெளிவைத் தருகிறார் !

  அ , இ , உ , எ – ஆகிய நான்கும் சுட்டெழுத்தாகவும் வினா எழுத்தாகவும் தனித்து நின்று பொருள் தருமே என்றால் , இந்த நான்கும் ‘இடைச்சொல்’ என்ற பிரிவிலேதான் வருமே அல்லாது , ‘சொல்’ என்ற வகையில் அடங்காது என விளக்குகிறார்  இளம்பூரணர்!

ஒ – சுட்டெழுத்தாகவோ  வினா எழுத்தாக வோ தனித்து வருதல் இல்லை !

ஆனால் ‘உ’ , ‘ஒ’ ஆகிய குறில் உயிர்கள் ,  மெய்மீது ஏறி , ஓரெழுத்து ஒருமொழி ஆவது உண்டு என்கிறார் இளம்பூரணர் !

இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகள் –
1 . து
த் + உ = து ; இஃது ஓரெழுத்து ஒருமொழி !
து = உணவு
து – பெயர்ச் சொல்

2 . நொ
ந் + ஒ = நொ ; இஃது ஓரெழுத்து ஒருமொழி !
நொ = துன்பம்
நொ – பெயர்ச் சொல்

தொல்காப்பிய நூற்பாவை மீண்டும் பாருங்கள் !

ஐந்து குறில்கள் ஓரெழுத்து ஒருமொழிகளைத் தரமாட்டா என்ற செய்திதானே உள்ளது ?

பின்னர் எப்படி இளம்பூரணர் ‘து’  , ‘நொ’ ஆகிய ஓரெழுத்து ஒருமொழிகளைக் காட்டினார் ?

இங்கேதான் நாம் தொல்காப்பியத்தைப் படிக்கும் நுட்பத்தைப் புரிந்துகொள்ளவேண்டும் ! அது தான் ‘தொல்காப்பிய நடை’!

தொல்காப்பிய நூற்பாவின் நடையை வைத்துத்தான் இளம்பூரணரால் , சில குறில்களும் ஓரெழுத்து ஒருமொழிகளைத் தரமுடியும் என்று உரை எழுத முடிந்தது !

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 47 of 84 Previous  1 ... 25 ... 46, 47, 48 ... 65 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக