புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 35 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 35 of 84 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 59 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jul 28, 2014 12:53 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (275)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஒரு உழக்கு = 336 மில்லி லிட்டர் (ml)
இரண்டு உழக்கு = 1 உரி = 672 மில்லி லிட்டர்
ஒரு  நாழி = 2 உரி = (672 x 2) =   1344 மில்லி லிட்ட ர்

- இதைப்பற்றி நமக்கென்ன கவலை ?

தொல்காப்பியரே கவலைப்பட்டு ‘நாழி’ , ‘உரி’க்கென்றே  ஒரு நூற்பா எழுதியிருக்கும்போது , நம் கவலைப்படாமல் இருக்கமுடியுமா?

உயிர்மயங்கியலில் அடுத்த நூற்பா இவற்றைப் பற்றியதுதான் ! :-
“உரிவரு  காலை நாழிக் கிளவி
 இறுதி  யிகர மெய்யொடுங் கெடுமே
 டகார மொற்று மாவயி   னான ” (உயிர்மயங். 38)

முன்பு ,தொகைமரபு நூற்பாவில்(22) நாம் பார்த்த இலக்கணப்படி , ’நாழி + உரி = நாழியே யுரி ’ என்றுதானே வரவேண்டும் ?

ஆனால் அப்படி வராதாம் !
 
‘உரிவரு  காலை நாழிக் கிளவி’  - ‘நாழி’ என்ற ‘இ’ஈற்றுப் பெயர்ச்சொல் முன் , ‘உரி’ எனும் வருசொல் வந்தால் ,

‘இறுதி  இகரம் மெய்யொடும் கெடுமே’ – ‘ழி’யின் ‘ழ்’ ,’இ’ ஆகிய இரண்டுமே கெடும் !

‘டகாரம்  ஒற்றும் ஆவயின்  ஆன’ -  ‘ட்’ அங்கே வரும் !

நாழி + உரி = நாழியே யுரி ×
நாழி + உரி = நாடுரி √  (அல்வழிப் புணர்ச்சி)
(நாடுரி – நாழியும் உரியும்)

இங்கே , இளம்பூரணர் , “வருமொழி முற்கூறியவதனான் , நிலைமொழி அடையடுத்து இருநாடுரி  என்ற வழியும் இம் முடிபு கொள்க ! ” என்கிறார் .

இதன்படி-

இருநாழி + உரி = இருநாழியே யுரி ×
இருநாழி + உரி = இருநாடுரி √  (அல்வழிப் புணர்ச்சி)

மேலும் இளம்பூரணர் – “ ‘இகரம்’ என்னாது , ‘இறுதியிகரம்’ என்றதனால் ஈண்டை நிலைமொழியும் வருமொழியும் நிலைமொழிகளாய் நின்று பிற பொருட் பெயரோடு வல்லெழுத்து மிக்கு முடிதலும் கொள்க ; நாழிக் காயம் , உரிக் காயம் என வரும் !”

இவ்வுரையின்படி-

நாழி + காயம் = நாழியே காயம் ×
நாழி + காயம் = நாழிக் காயம் √  (அல்வழிப் புணர்ச்சி)
(நாழிக் காயம் – நாழி அளவுள்ள மிளகு)

நாழி + தோரை = நாழியே தோரை ×
நாழி + தோரை = நாழித் தோரை √  (அல்வழிப் புணர்ச்சி)
(நாழித் தோரை – நாழி அளவுள்ள மலைநெல்)

உரி + காயம் = உரியே காயம் ×
உரி + காயம் = உரிக் காயம் √ (அல்வழிப் புணர்ச்சி)
(உரிக் காயம் – உரி அளவுள்ள மிளகு)

உரி + தோரை = உரியே  தோரை ×
உரி + தோரை = உரித் தோரை √ (அல்வழிப் புணர்ச்சி)
(உரித் தோரை – உரி அளவுள்ள மலை நெல்)

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jul 29, 2014 11:47 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (276)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

 பனிக்காலம் – தமிழகத்தில் குறிப்பிடத்தக்க பருவம் !

‘மலைபோல வந்தாலும் பனிபோல விலகும் !’ – தமிழர்களின் தத்துவ மொழி !
‘மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே’ – கம்பன் இரசித்த ஒரு நாட்டுப்புறப் பாடல் அடி !

  ஆகவேதான் , மக்கள் வாழ்வோடு இயைந்து இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் ’பனி’ என்ற சொல் எப்படிப் புணரும் என்று நமது அடுத்த  சூத்திரத்தில் காட்டுகிறார் :-

 “பனியென வரூஉங் கால வேற்றுமைக்
  கத்து மின்னுஞ் சாரியை யாகும் !”   (உயிர்மயங். 39)

 ‘பனி என வரும் ’ – ‘பனி’ எனப்படும்,
‘கால வேற்றுமைக்கு’ – காலத்தைக் குறிக்கும் சொல்லானது , வேற்றுமைப் புணர்ச்சியில்,
‘அத்தும்  இன்னும் சாரியை ஆகும்’ -  ‘அத்து’ , ‘இன்’ ஆகியன சாரியைகளாக வரும் !

1. பனி + கொண்டான் = பனிக் கொண்டான் ×
   பனி + கொண்டான் = பனியத்துக் கொண்டான் √ (அத்து – சாரியை ; ய் -உடம்படுமெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
    பனி + கொண்டான் = பனியிற் கொண்டான் √ (இன் – சாரியை; ய் -   உடம்படுமெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
                                      (பனியத்துக் கொண்டான், பனியிற் கொண்டான் – பனிக்காலத்தில் பெற்றான்)

    பனி + சென்றான் = பனிச் சென்றான் ×
    பனி + சென்றான் = பனியத்துச் சென்றான் √ (அத்து – சாரியை ; ய் - உடம்படுமெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
    பனி + சென்றான் = பனியிற் சென்றான் √ (இன் – சாரியை ; ய் - உடம்படுமெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
                                        (பனியத்துச் சென்றான் , பனியிற் சென்றான் - பனிக்காலத்தில் சென்றான்)

    பனி + தந்தான் = பனித் தந்தான் ×
   பனி + தந்தான் = பனியத்துத் தந்தான் √ (அத்து – சாரியை ; ய் - உடம்படுமெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
  பனி + தந்தான் = பனியிற் றந்தான் √ (இன் – சாரியை ; ய் -உடம்படுமெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)

                              (பனியத்துத் தந்தான் , பனியிற் றந்தான் – பனிக்காலத்தில் தந்தான்)

    பனி +போயினான் = பனிப் போயினான் ×
    பனி + போயினான் = பனியத்துப் போயினான் √ (அத்து – சாரியை ; ய் -  உடம்படுமெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
    பனி + போயினான் = பனியிற் போயினான் √ (இன் – சாரியை ; ய் -  உடம்படுமெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
                                         (பனியத்துப் போயினான், பனியிற் போயினான் – பனிக்காலத்தில் போனான்)

நச்சினார்க்கினியர், தம் உரையில் ஒரு நுணுக்கத்தைக் கூறுகிறார் ! –
“பனி யென்று சொல்லவருகின்ற நோயன்றிக் ,காலத்தை யுணரநின்ற வேற்றுமை முடிபுடைய பெயர்க்கு …!”

என்ன பொருள் ?

‘பனி’ என்று காலத்தைக் குறித்துவரும் சொல்லுக்குத்தான் நூற்பா எழுதினார் தொல்காப்பியர் !
நச்சினார்க்கினியர் தெளிவுரையால் , ‘பனி’ என்ற சொல் நோயைக் குறித்தால், அதற்கு மேலே தொல்காப்பியர் கூறிய விதி பொருந்தாது !

பனி’ என்ற சொல் நோயைக் குறித்தால், அதன் புணர்ச்சி எப்படி இருக்கும் ?
பனி + கொண்டான் = பனிக்கொண்டான் √ (வேற்றுமைப் புணர்ச்சி)(உயிர்மயங். 33)
(பனிக்கொண்டான் – ‘பனி’ எனும் நோயை அடைந்தான் )

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jul 29, 2014 2:54 pm

தூய தமிழை கண்ட சந்தோசம்.. நன்றி அய்யா.. உங்கள் இடைவிடாத பணிகளின் நடுவே இதுபோன்ற தரமான படைப்புகள் தருவதற்கு..  அன்பு மலர் அன்பு மலர் 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 29, 2014 3:54 pm

வாழ்த்துகள் அய்யா ..

இந்த திரி 10,000 முறைகளுக்கு மேல் பார்வையிடபட்டுள்ளது .  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jul 30, 2014 9:16 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (277)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

     ‘வளி’ -  என்ற தமிழர் வாழ்வோடு இயைந்த சொல்லை இப்போது கட்டுகிறார் தொல்காப்பியர் !

வளி – இது எங்கே தமிழர் வாழ்வோடு இயைந்தது என்கிறீர்கள?

சூறாவளி !  

இதிலுள்ளது ‘வளி’ தான் !

வளி – காற்று ! சுழற்றி அடிக்கும் காற்று சூறாவளி !

“வளியென வரூஉம் பூதக் கிளவியும்
அவ்விய னிலையல் செவ்வி  தென்ப ” (உயிர்மயங். 40)

‘வளி என வரூஉம் பூதக் கிளவியும்’ – ‘வளி’ எனும் வலிய இயற்கையைக் குறிக்கும் சொல்லும் ,
‘அவ்வியல் நிலையல் செவ்விது என்ப !’ – முன் உயிர்மயங். 39இல் பார்த்தது போலவே , வேற்றுமைப் புணர்ச்சியில்,  ‘அத்து’ , ‘இன்’ சாரியைகள் கொள்ளும் !

 1 . வளி + கொண்டான் = வளிக் கொண்டான் ×
       வளி + கொண்டான் = வளியத்துக்  கொண்டான் √ (ய் – உடம்படுமெய் ; அத்து -   சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)            

      வளி + கொண்டான் = வளியிற்  கொண்டான் √ (ய் – உடம்படுமெய் ; இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)            


(வளியத்துக்  கொண்டான், வளியிற்  கொண்டான் – காற்று வீசும்போது பெற்றான்)


      வளி + சென்றான் = வளிச் சென்றான் ×
       வளி + சென்றான் = வளியத்துச்  சென்றான் √ (ய் – உடம்படுமெய் ; அத்து -   சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)            

      வளி + சென்றான் = வளியிற்  சென்றான் √ (ய் – உடம்படுமெய் ; இன் -   சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)          


(வளியத்துச்  சென்றான் , வளியிற்  சென்றான் – காற்று வீசும்போது சென்றான்)


      வளி + தந்தான் = வளித் தந்தான் ×
       வளி + தந்தான் = வளியத்துத்  தந்தான் √ (ய் – உடம்படுமெய் ; அத்து -              
சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
      வளி + தந்தான் = வளியிற்  றந்தான் √ (ய் – உடம்படுமெய் ; இன் -   சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)            


(வளியத்துத்  தந்தான் , வளியிற்  றந்தான் – காற்று வீசும்போது
தந்தான்)

      வளி + போயினான் = வளிப் போயினான் ×
       வளி + போயினான் = வளியத்துப்  போயினான் √ (ய் – உடம்படுமெய் ; அத்து -  சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

       வளி + போயினான் = வளியிற்  போயினான் √ (ய் – உடம்படுமெய் ; இன் -   சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

(வளியத்துக்  கொண்டான் , வளியிற்  போயினான் – காற்று
வீசும்போது போனான்)

மேல் தொல்காப்பிய நூற்பா நமக்கு அரியதோர் அறிவியல் பதிவைத் தருகிறது !

என்ன அறிவியல் பதிவு ?

சூறாவளிக் காற்றானது  தொல்காப்பியர் காலத்திலேயே – கி.மு. 1000த்திலேயே – தமிழ்நாட்டில் வீசியுள்ளது என்ற  அறிவியல் பதிவுதான் (Scientific data) !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jul 30, 2014 9:18 am

எம்.எம்.செந்தில், பாலாஜி ஆகியோர்க்கு நன்றி !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jul 31, 2014 11:31 am

 
                            தொடத் தொடத் தொல்காப்பியம் (278)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
 
   ‘பனி’ , ‘வளி’ என்ற இயற்கைகளைப்பற்றிக் கவலைப்பட்டார் தொல்காப்பியர் !
 
இப்போது அவற்றின் தொடர்ச்சியாக மரங்களைப் பற்றிக் கவலைப்படுகிறார் ! :-
 
 “உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே !” (உயிர்மயங். 41)
 
 ‘உதி மரக் கிளவி’ -  உதிய மரத்தைக் குறிக்கும் ‘உதி’ எனும் சொல் , நிலைமொழிப் பெயராக நின்றால்,


 ‘மெல்லெழுத்து மிகுமே’ – அப்போது , வேற்றுமைப் புணர்ச்சியில் , சந்தியாக மெல்லெழுத்து இடையே மிகும் !
 
 உதி + கோடு = உதிக் கோடு ×
உதி + கோடு = உதிங் கோடு (வேற்றுமைப் புணர்ச்சி)
 
உதி + செதிள் = உதிச் செதிள் ×
உதி + செதிள் = உதிஞ் செதிள் (வேற்றுமைப் புணர்ச்சி)
 
உதி + தோல் = உதித் தோல் ×
உதி + தோல் = உதிந் தோல் (வேற்றுமைப் புணர்ச்சி)
 
உதி + பூ = உதிப் பூ ×
உதி + பூ = உதிம் பூ (வேற்றுமைப் புணர்ச்சி)
 
  இங்கே , நச்சினார்க்கினியர் ஓர் உரைநுட்பம் காட்டுகிறார் ! -
 “அம்முச் சாரியை விதிக்கின்ற புளி மரத்தினை இதன்பின் வைத்தமையான் , உதியங்கோடு என இதற்கும் அம்முப் பெறுதல் கொள்க !”
 
இதன்படி
 
உதி + கோடு = உதிக் கோடு ×
உதி + கோடு = உதிங் கோடு (வேற்றுமைப் புணர்ச்சி)
உதி + கோடு = உதியங் கோடு √  (அம் - சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)
 
 
உதி + செதிள் = உதிச் செதிள் ×
உதி + செதிள் = உதிஞ் செதிள் (வேற்றுமைப் புணர்ச்சி)
உதி + செதிள் = உதியஞ் செதிள் (அம் - சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)
 
 
உதி + தோல் = உதித் தோல் ×
உதி + தோல் = உதிந் தோல் (வேற்றுமைப் புணர்ச்சி)
உதி + தோல் = உதியந் தோல் (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
 
 
உதி + பூ = உதிப் பூ ×
உதி + பூ = உதிம் பூ (வேற்றுமைப் புணர்ச்சி)
உதி + பூ = உதியம் பூ (அம் - சாரியை(வேற்றுமைப் புணர்ச்சி)
 
அது சரி !


 ‘உதிக் கோடு’ என ஏன் வராது ?
 
 ‘உதிக்கோடு’ – என வந்தால் , ‘உதிக்கும் கோடு’  (rising branch) என்று தவறாகப் பொருள்பட்டுவிடும் !
 
 உதி மரம் – என்பது வேறொன்றுமில்லை ! உதிய மரம்தான் !


தொல்காப்பியர் பேசிய உதி மரத்தைப் பார்க்கவேண்டுமா?


[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]

படங்கள் – முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
 
இதுதான் உதி மரம் !


இதன் வேறு பெயர்கள் – ஒதி மரம் ; ஒதிய மரம் .


மரம் காணப்பட்ட இடம் –   சென்னை - 113


இதன் தாவரவியல் பெயர் -  Lannea coromandelica
 

                                ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 01, 2014 9:09 am

                 தொடத் தொடத் தொல்காப்பியம் (279)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
 
 உதிய மரத்தில் நின்றோம் !


அது தங்கும் சக்தி அற்றது !


தாங்கும்சக்தி கொண்ட புளிய மரத்திற்குத் தாவலாம் வாருங்கள் ! :-
 
 “புளிமரக் கிளவிக் கம்மே சாரியை” (உயிர்மயங். 42)
 
இதன்படி –
 
புளி + கோடு = புளிக் கோடு × 
புளி + கோடு = புளிங் கோடு × 
புளி + கோடு = புளி + அம் + கோடு (அம் – சாரியை சேர்ந்தது) = புளி +ய் + அம் + கோடு (ய் – உடம்படு மெய் சேர்ந்தது) = புளியங் கோடு (வேற்றுமைப் புணர்ச்சி) 
 
புளி + செதிள் = புளிச் செதிள் × 
புளி + செதிள் = புளிஞ் செதிள் × 
புளி + செதிள் = புளி + அம் + செதிள் (அம் – சாரியை சேர்ந்தது) = புளி +ய் + அம் + செதிள் (ய் – உடம்படு மெய் சேர்ந்தது) = புளியஞ் செதிள் (வேற்றுமைப் புணர்ச்சி) 
 
புளி + தோல் = புளித் தோல் × 
புளி + தோல் = புளிந் தோல் × 
புளி + தோல் = புளி + அம் + தோல் (அம் – சாரியை சேர்ந்தது) = புளி +ய் + அம் + தோல் (ய் – உடம்படு மெய் சேர்ந்தது) = புளியந் தோல் (வேற்றுமைப் புணர்ச்சி) 
 
புளி + பூ = புளிப் பூ × 
புளி + பூ = புளிம் பூ × 
புளி + பூ = புளி + அம் + பூ (அம் – சாரியை சேர்ந்தது) = புளி +ய் + அம் + பூ (ய் – உடம்படு மெய் சேர்ந்தது) = புளியம் பூ (வேற்றுமைப் புணர்ச்சி) 
 
 அது இருக்கட்டும் !


ஏன்  ‘புளிக் கோடு’ , ‘புளிங் கோடு’ என்றெல்லாம் வராது ?


‘புளிக் கோடு’ , ‘புளிங் கோடு’ எனில் , அந்தக் கோடே – கிளையே புளிக்கும் என்ற பொருள் வந்துவிடும் ! இதைத் தவிர்ப்பதற்காகவே ‘அம்’ நுழைகிறது !
 
தமிழ்ப் புணர்ச்சி இருக்கிறதே , அப்பப்பா படு நுட்பம் !
 

                                        ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 02, 2014 12:46 pm

   
     தொடத் தொடத் தொல்காப்பியம் (280)
               -முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
 
                                 ’புளி’ – என்பது மரத்தைக் குறித்தால் , ‘புளி + அம் + கோடு = புளியங் கோடு’ என ‘அம்’ சாரியை பெற்றுப் புணர்ச்சி நடக்கும் என்று பார்த்தோம் ! சரி!
 
 ‘புளி’ என்பது குழம்புக்குக் கரைக்கும் புளியைக் குறித்தால் ?
 
நியாயமான வினா!
 
இதற்குத் தொல்காப்பியரே விடை கூறுகிறார் !:-
 
 “ஏனைப் புளிப்பெயர் மெல்லெழுத்து மிகுமே” (உயிர்மயங். 43)


“வல்லெழுத்து மிகினு மான மில்லை
ஒல்வழி யறிதல் வழக்கத் தான” (உயிர்மயங். 44)
 
அஃதாவது-
 
1. புளி + கூழ் = புளியங் கூழ் ×
   புளி + கூழ் = புளிங் கூழ் √ (வேற்றுமைப் புணர்ச்சி)(உயிர்மயங். 43)
   புளி + கூழ் = புளிக் கூழ் √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 44)
 
2. புளி + சோறு = புளியஞ் சோறு ×
   புளி + சோறு = புளிஞ் சோறு √ (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 43)
   புளி + சோறு = புளிச் சோறு √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 44)
 
3. புளி + தயிர் = புளியந் தயிர் ×
   புளி + தயிர் = புளிந் தயிர் √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 43)
   புளி + தயிர் = புளித் தயிர் √ (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 44)
 
 
 
4. புளி + பாளிதம் = புளியம் பாளிதம் ×
   புளி + பாளிதம் = புளிம் பாளிதம் √ (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 43)
   புளி + பாளிதம் = புளிப் பாளிதம் √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 44)
                                (பாளிதம் – இங்கே பாற்சோறு; புளிப் பாளிதம் – புளிப்புச் சுவையை உடைய பாற்சோறு)
 
இங்கே இளம்பூரணர் சில அரிய இலக்கணக் குறிப்புகளை நமக்கு நல்குகிறார்  !




அவற்றை விளக்கி வருமாறு தரலாம்:-
 
 1 . கூதாளி + கோடு = கூதாளங் கோடு (அம்- சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)  
                                                                            (உயிர்மயங்.44இளம்.உரை)
                                (கூதாளங் கோடு – கூதாளி மரத்தின் கிளை)
 
2 . கணவிரி + கோடு = கணவிரங் கோடு (அம்- சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)  
                                                                            (உயிர்மயங்.44இளம்.உரை)
                                (கணவிரங் கோடு – கணவிரி மரத்தின் கிளை)
 
3 . துணி + கொண்டான் = துணியத்துக் கொண்டான் (அத்து - சாரியை)(வேற்றுமைப்
                                                                புணர்ச்சி)(உயிர்மயங்.44இளம்.உரை)
        (துணியத்துக்  கொண்டான் – துணியில் ஒரு பொருளைப்   பெற்றான்)
 
4 . பருத்தி + சென்றான் = பருத்திக்குச் சென்றான் (இக்கு - சாரியை)(வேற்றுமைப்
                                                                புணர்ச்சி)(உயிர்மயங்.44இளம்.உரை)
        (பருத்திக்குச்  சென்றான் – பருத்தி பறிக்கச் சென்றான்)
 
5 . கப்பி + தந்தை = கப்பிந்தை (வேற்றுமைப் புணர்ச்சி)(உயிர்மயங்.44இளம்.உரை)
        (கப்பிந்தை – கப்பி என்பவரின் தந்தை)
 
6 . கட்டி + அகல் = கட்டகல் (வேற்றுமைப் புணர்ச்சி)(உயிர்மயங்.44இளம்.உரை)
        (கட்டகல் – மாவைக் குழியாகக் கட்டி , மாவிளக்கு ஏற்றக்கூடிய அகல்)
 
 
7 . குளி + குறுமை = குளிக் குறுமை (வேற்றுமைப் புணர்ச்சி)
                                                              (உயிர்மயங்.44இளம்.உரை)                   
        (குளி – முத்து என்பது பொருளாயின் , குளிக் குறுமை – முத்தின் சிறிய அளவு)
 
8 . இனி + இனிக்கொண்டான் = இன்னினிக் கொண்டான் (வேற்றுமைப் புணர்ச்சி)
                                                             (உயிர்மயங்.44இளம்.உரை)

        (இனி – இப்போது; இன்னினிக் கொண்டான் – இப்போதே இப்போதே கொண்டான்)
 
9 . அணி + அணிக்கொண்டான் = அண்ணணிக் கொண்டான் (வேற்றுமைப்                                                                  புணர்ச்சி)(உயிர்மயங்.44இளம்.உரை)
        (அணி – அருகே; அண்ணணிக் கொண்டான் –  அருகேயே கொண்டான்)
 
                                கப்பி – என்றெல்லாம் மக்கட் பெயர்கள் பழந்தமிழகத்தில் இருந்துள்ளமைக்கு நமது மேலை ஆய்வே சான்று !
 
 ‘நப்பின்னை’ – இது ‘நப்பி’ என்பவரின் பின் பிறந்தவரைக் குறிப்பதாகலாம் !




 ‘நப்பி +பின்னை = நப்பின்னை’ !
 
                                தொல்காப்பியமும் அதன் உரைகளும் வெறும் இலக்கண நூற்கள் மட்டுமல்ல ; பெரிய வரலாற்றுக் களஞ்சியமும் கூட !
 
 இளம்பூரணர் பேசிய கணவிரி , கூதாளி ஆகியவற்றைக் காணலாம் வருகிறீர்களா?
 
(1) 
[You must be registered and logged in to see this image.]Coutesy- tropicalfruit.com


இதுதான் கணவிரி ! செவ்வலரி என்பதும் இதுவே !

இந்நாளில் செவ்வரளி எனப்படும் !

இதன் தாவரவியல் பெயர் - Nerium oleander
 
(2)


[You must be registered and logged in to see this image.]Courtesy - keys.lucidcentral.org

                                                                                                                   

 [You must be registered and logged in to see this image.]Courtesy - biodiversitysitia.gr
   
இவைதாம் கூதாளி !

இந்நாளில் இது  ‘பூமிச் சக்கரப் பூண்டு ’ எனப்படுகிறது !
 
இதன் தாவரவியல் பெயர்  - Convolvulus arvensis

                                ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 03, 2014 9:22 am

                        தொடத் தொடத் தொல்காப்பியம் (281)
               -முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
 
                                                தொல்கப்பியத்து எழுத்ததிகாரத்தில் , உயிர்மயங்கியலில் , ‘இ’ ஈற்றுச் சொற்கள் எவாறு பிற சொற்களுடன் புணரும் என்று பார்த்துவருகிறோம் !
 
   இப்போது நாளைக் குறிக்கும்  ‘இ’ ஈற்றுச் சொற்களை எடுத்துக்கொள்கிறார் ! :-
 
                      “நாண்முற்  றோன்றுந்   தொழினிலைக் கிளவிக்
                       கானிடை வருத லைய மின்றே ”           (உயிர்மயங். 45)
 
        ‘நாள்  முன் தோன்றும் ’ – நாளைக் குறிக்கும் சொல்லின் முன்பாக வரும் ,
 
      ‘தொழில் நிலைக் கிளவிக்கு’ – வினைச் சொல்லிற்கு , வேற்றுமைப் புணர்ச்சியில் ,
 
      ‘ஆன்  இடை வருதல் ’ – ‘ஆன்’ சாரியை இடையே வருவது,
 
      ‘ஐயம் இன்றே’ -  ஐயமற்றது !
 
      எடுத்துக்காட்டிற்குப் ‘பரணி’ என்ற ‘இ’ ஈற்றுச் சொல்லை எடுத்துக்கொள்கிறார் இளம்பூரணர் ! –
 
                1. பரணி + கொண்டான்= பரணி + ஆன் + கொண்டான் (ஆன் – சாரியை சேர்ந்தது ) =  பரணியாற் கொண்டான் (ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
                (பரணியாற் கொண்டான் – பரணி நாளில் பெற்றான்)
 
                2. பரணி + சென்றான்= பரணி + ஆன் + சென்றான் (ஆன் – சாரியை    சேர்ந்தது ) = பரணியாற்  சென்றான் (ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
                (பரணியாற் சென்றான் – பரணி நாளில் போனான்)
 
                3. பரணி + தந்தான்= பரணி + ஆன் + தந்தான் (ஆன் – சாரியை    சேர்ந்தது ) = பரணியாற்  றந்தான் (ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
                (பரணியாற் றந்தான் – பரணி நாளில் தந்தான்)
 
                4. பரணி + போயினான்= பரணி + ஆன் + போயினான் (ஆன் – சாரியை சேர்ந்தது ) =  பரணியாற்  போயினான் (ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
                (பரணியாற் போயினான் – பரணி நாளில் போனான்)
 
                 ‘இ’ ஈற்று நாள் பெயரில்,  ‘பரணி’ என்ற ஒரு சொல்லுக்கு மட்டும் இளம்பூரணர் எடுத்துக்காட்டுக்  கூற , நச்சினார்க்கினியர் ’சோதி’ எனும் இன்னொரு சொல்லையும் சேர்க்கிறார் !
 
                அதனைக் கீழ்வருமாறு விளக்கலாம் –
 
                5. சோதி + கொண்டான்= சோதி + ஆன் + கொண்டான் (ஆன் – சாரியை சேர்ந்தது ) =  சோதியாற் கொண்டான் (ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
                (சோதியாற் கொண்டான் – சோதி நாளில் பெற்றான்; சோதி - சுவாதி)
 
                6. சோதி + சென்றான்= சோதி + ஆன் + சென்றான் (ஆன் – சாரியை    சேர்ந்தது ) = சோதியாற்  சென்றான் (ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
                (சோதியாற் சென்றான் – சோதி நாளில் போனான்)
 
                7. சோதி + தந்தான்= சோதி + ஆன் + தந்தான் (ஆன் – சாரியை சேர்ந்தது ) = சோதியாற்  றந்தான் (ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
                (சோதியாற் றந்தான் – சோதி நாளில் தந்தான்)
 
                8. சோதி + போயினான்= சோதி + ஆன் + போயினான் (ஆன் – சாரியை சேர்ந்தது ) = சோதியாற் போயினான் (ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
                (சோதியாற் போயினான் – சோதி நாளில் போனான்)
 

                                                              ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 35 of 84 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 59 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக