புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 4 Poll_c10இவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 4 Poll_m10இவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 4 Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram

17 Posts - 40%
Dr.S.Soundarapandian

2 Posts - 5%
Ammu Swarnalatha

1 Post - 2%
T.N.Balasubramanian

Balaurushya

prajai

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

383 Posts - 49%

255 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%

26 Posts - 3%

7 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
Srinivasan23
இவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 4 Poll_c10இவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 4 Poll_m10இவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 4 Poll_c10 
3 Posts - 0%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Jan 03, 2013 3:39 pm

First topic message reminder :

எனது வலைப்பூவில்: http://kakkaisirakinile.blogspot.in/2013/01/blog-post.html

இது என்னோட 2013 வது புத்தாண்டின் முதல் பதிவு ஆனா பேசப்போறது 2012 ஆண்டு புத்தாண்ட பத்தி. என்னடா சம்மந்தமே இல்லமா ஒருவருஷம் பின்னாடி போயி பேசுறேன்னு பாக்குறிங்களா ..? சம்மந்தம் இருக்குங்க. அதுவும் என்னான்னு கொஞ்சம் பாக்கலாம் வாங்க.

அது என்னவோ தெரியலைங்க. வீட்ல சாம்பார்ல இருந்து பொறியல் வரைக்கும் எதுலயாவது ஒரு சின்ன எறும்பு விழுந்தாகூட வேற யாரு கண்ணுலயும் படாது. என் கண்ணுல மாட்டிக்கும். அதுக்கப்பறம் என்ன, எங்க அம்மா காதுல பஞ்சு வச்சுக்க வேண்டிய தான் பாக்கி. இப்ப நான் வெளியூர்ல இருக்கறதால என் அம்மா கொஞ்சம் சந்தோசமா இருக்கும்னு நெனைக்கிறேன். ஏனா, வீட்ல என் அம்மாவை எப்பவும் திட்ற ஒரே ஜீவன் நானாதான் இருப்பேன் (நீ பக்கத்துல இருந்து திட்டமா இப்பல்லாம் ரொம்ப போர் அடிக்குதுடானு போன்ல அப்பப்ப காலாய்க்க வேற செய்யிறாங்க). இது மாதிரி தான் போன 2012 புதுவருட நீயா நானா ஸ்பெஷல் ஷோல சிலர் என் கண்ணுக்கு மாட்டுனாங்க (சத்தியமா இந்த வாட்டி கோபிய விமர்சிக்கலங்கோ). ஆனா அதப்பத்தி எழுதனும்னா 2012 முடியும் வரம் காத்திருந்துதான் ஆகணும். அப்படி ஒரு கட்டயாம். அதுக்கு முன்னாடிஎழுதிருந்தா என்ன முட்டாள்னு முத்திரை குத்தீருப்பாங்க. ஏனா டாபிக் அப்படி.

அது என்ன ஷோ ? தலைப்பு என்ன ? அதுல என்ன பிரச்சன ? யார் அந்த நண்பர்கள்னு பாக்கா அப்படியே ஒருவருஷம் பின்னாடி போலாமா ..?

2012 வருஷ நீயா நானா ஸ்பெசல் ஷோல பேசப்பட்ட தலைப்பு "2012 ஆண்டில் ஜோதிடம் என்ன சொல்கிறது" என்பதுதான். இந்த நிகழ்ச்சியில் பொதுப்பலன், ஒவ்வொரு ராசிக்கும் உரிய பலன் அப்படின்னு நெறைய விவாதிச்சாங்க. அதுல, கோபி ஒரு கேள்விய கேட்டாரு. 2012 இல் நான் இதைக் கணித்திருக்கிறேன். அது கண்டிப்பாக நடக்கும் என எந்த நிகழ்வையாவது உங்களால் சொல்ல முடியுமா என்று.

அதுக்கு வந்த பதில்கள் நிறைய. அதுல முக்கியமான ரெண்டு, 2012 முடியறதுக்குள்ள "ராஜபக்சே கட்டாயமாக ஆட்சியை விட்டு இறங்குவார்" , "இந்திய-சீன போர் வரும்" என்பதே.

இதுல எதாச்சும் நடந்ததா ..? அவர்கள் பேசிய பகுதியை மட்டும் இந்த காணொளில் ஒரு முறை பார்க்கவும். மீதியை பிறகு பேசுவோம்.

அதுமட்டுமில்லாம, அந்த ஜோசியர்களிடே கூட சரியான உடன்பாடில்லை. ஒருவர் ராஜபக்சே ஆட்சியை விட்டு விலகுவார்னு சொல்றாரு, மற்றொருவர் கண்டிப்பா இல்லன்னு எதிர்கிறாரு. அவங்களுக்குள்ளேயே எது சாரின்னு தெரியல. எல்லாரும் ஒரே ஜாதகத்தத்தான படிச்சிருப்பாங்க.? அப்ப ஏன் இந்த மாறுபட்ட கருத்துக்கள் .? இவர்கள் எப்படி நம்மளுடைய வாழ்கைய ஜாதகம் என்கிற போர்வையில தீர்மானிக்க முடியும். இவர்களை நம்பி நாம் ஏன் போகவேண்டும். இவர்கள் என்ன கடவுளா..? நாமளும் கொஞ்சம் யோசிக்க வேண்டாமா ..?

அதோட இங்க நீங்க இன்னும் ஒன்ன சரியா புரிஞ்சுக்கணும். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜோசியர்கள் எல்லாரும் தமிழ் நாட்டில் பிரபலமான பெரிய ஜோசியர்கள் என்று சொல்லப்படுபவர்கள். ஷெல்லி என்கிறவர் அடிக்கடி டிவில வாரத பாத்துருப்பிங்க. அவர்தான் ராஜபக்சே 2012 குள்ள ஆட்சியை விட்டு வெளியேற்றப்படுவார்னு சொன்னார். ஆனா நமது உறவுகளை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த அவன் என்னவோ சுகபோகமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஜோசியத்தில் அனைத்தையும் அறிந்த, தமிழ் நாட்டின் பெரிய ஜோசியர்கள் என்று சொல்லப்படும் இவர்கள் வார்த்தைகளே பொய்த்து போகிறதே, அப்ப நம்ம ஊரு அரைகுறை ஜோசியர்களின் கதி என்ன ..? அவர்களை நம்பி நாம ஏன் ஊர் ஊரா கோவில் கோவிலா சுத்தணும், வாழ்க்கைய அழிச்சுக்கணும் ..?

அடுக்கடுக்காக வைக்க என்னிடம் நிறைய கேள்விகள் இருந்தது. அந்த கேள்விகளை ஒட்டுமொத்தமாக "சங்கரி ராஜ்குமார்" என்ற ஒரு இயக்குனர் தன்னோட படத்து கடைசி காட்சில சமூதாயத்திற்கு ஒரு சாட்டையடியாக பதிவு செய்தார். அந்தப் படம் வேற எதுவும் இல்ல. யாருமே பெருசா கவனிக்காத, இப்படி ஒரு படம் வாந்துச்சானு கூட பலருக்கு தெரியாத படம் "வெங்காயம்". நான் பார்த்த சமூக கருத்துள்ள படங்களில் மிக முக்கியமான இடத்தை பிடிக்கும் படம் இது.

அந்த படத்தின் ஐந்து நிமிட கடைசி காட்சியை இங்கு இணைக்கிறேன். கட்டாயம் பாருங்கள்.

இத்தனை கேள்விகள் உதாரணங்கள் கொடுத்தும், நீ என்ன அவ்ளோ பெரியாளா .? உனக்கு அப்படி என்ன தெரியும் ..? உன்ன பெரிய அறிவாளின்னு காட்டிக்க முயற்சி பண்ட்ரியானு தலைப்ப மட்டும் பாத்துட்டு கல்ல விட்டு அடிக்க நம்ம ஊர்ல பல நண்பர்களும் இருப்பாங்க. அடிக்கறதா இருந்தா கொஞ்சம் சின்ன கல்லா வச்சு அடிங்க பாஸ். ஆனா அடிச்சிட்டு, குறைந்த பட்சம் இந்த மூட நம்பிக்கைகளை விட்டு விலகினா ரொம்ப சந்தோசப்படுவேன்.

இத்தனை சொல்லியும்.. உனக்கு என்ன தெரியும், இந்த கட்டுரை உன்னோட அறியாமையைக் காட்டுது அப்படின்னு நம்மாளுக கமெண்ட் அடிக்காம இருக்க மாட்டாங்க. அவங்களுக்கு மட்டும் என் வாழ்கையை ஒரு உதாரணமாகச் சொல்லி இந்த பதிவை முடித்துக்கொள்கிறேன்.

2011 ஆகஸ்ட் 18 தேதி, நான் இந்த உலகில் ஒரு தனிமரம் என்று நினைத்துக் கொண்ட நாள். என் வாழ்க்கையில், ஈடு செய்ய முடியாதா ஒன்றை இழந்த நாள். என் வாழ்வில் இதற்கு மேலும் ஒரு பெரிய இழப்பு வர இயலாத, அந்த இழப்பு என் அண்ணன் என்பதை இன்னும் ஜீரணித்துக் கொள்ள முடியாத நாள். ஒரு விபத்தில் சிக்கி, சில லட்சங்கள் செலவு செய்தும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்தபின் 29 வது வயதில் எனது அண்ணனின் உயிர் பிரிந்தது. என் அப்பாவிற்கு ஜாதகத்தில் அதீத நம்பிக்கை. ஆனால் எனக்கு எப்போதுமே இருந்ததில்லை.

அந்த நம்பிக்கையால் உயிர் பிரிவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னும் என் அப்பா, என் மாமாவிடம் சொல்லி எனது அண்ணனின் ஜாதகத்தைப் பார்க்கச் சொன்னார். ஜோசியர் சொன்னது, "இவரின் ஆயுள் கெட்டியானது. எதற்கும் பயப்படாதீர்கள். இப்போது எதுவும் ஆகாது. கண்டிப்பாக திரும்பிவருவார் என்பதே". என் அண்ணனும் திரும்பி வந்தார், ஆனால் உயிர் மட்டும் இல்லை.

என் அண்ணனின் ஆயுள் ஜாதகம், எங்களுடைய சுற்றுப்புற ஊர்களிலேயே மிகவும் பிரபலமான ஜோசியர் ஒருவரால் முத்தான எழுத்துக்களில் 73 வயதுவரை வாழ்வார் என எழுதப்பட்டு, அதற்கு மேலும் ஆயுள் உண்டு என்ற குறிப்போடு இன்னும் எங்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கிறது.

இத்தனை மாதங்களாகியும் உயிருக்கு இணையான என் அண்ணனைப் பற்றி சிந்திக்கவே எனது மனம் இன்னும் பக்குவப்படவில்லை. இருந்தும் இந்த உதாரணத்தைத் தர காரணம், சிலருக்காவது உதவும் என்ற நம்பிக்கையில்.

யோசிப்பீர்கள் என்று நம்புகிறேன்..!

நன்றி,

அன்புடன்,
அகல்

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jan 05, 2013 10:33 am

பங்கு சந்தையையும் ஜோதிடத்தையும் லிங்க் பண்ணுவது சரி படாது. ஏன் என்றால் பங்கு சந்தை ஏற்ற இறக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட (ப்ரோகர்) தனி மனிதர்களின் செயல் பாடுகள் தான் அவர்கள் நினைத்தால் ஒரு கம்பனியை இறக்குவார்கள் அல்லது ஏற்றுவார்கள். ஜோதிடம் என்பது மனிதன் கையில் இல்லை பின்னர் எவ்வாறு லிங்க் செய்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஜோதிடம் சாஸ்திரம் மூலம் வந்தது அது நம்பிக்க சார்ந்த விஷயம். ஜோசியம் பார்க்காமல் இருப்பது உத்தமம். உயிரினங்க மனிதனை தவிர அனைத்தும் என்ன ஜோசியமா பார்க்கிறது. ஜோசியம் மன குழப்பத்தை தான் உருவாகும். வாழ்கையை அதன் வழியில் அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்வது உத்தமம்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 05, 2013 10:41 am

கே. பாலா wrote:ஜோதிடம் பொய்யல்ல....
பொய்யானவர்கள் ஜோதிடம் பார்பவர்களில் அதிகம் ...

ஜோதிடத்தை நம்புங்கள்
ஆனால் ஜோதிடத்தை மட்டுமே நம்பாதீர்கள் சிரி
அருமை பாலா சார் ,

அகில் இதற்க்கு மேல் உங்களுக்கு எவ்வாறு விளக்கம் கொடுப்பது என்று தெரியவில்லை

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jan 05, 2013 10:43 am

ஜோதிடம் என்பது ஒரு அடிக்சன் அதை நம்ப ஆரம்பித்தால் அதை மட்டுமே நம்ப வைத்து விடும்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 05, 2013 10:55 am

தர்மா wrote:ஜோதிடம் என்பது ஒரு அடிக்சன் அதை நம்ப ஆரம்பித்தால் அதை மட்டுமே நம்ப வைத்து விடும்
நன்றி , நான் ஜோதிடத்தை கண்ணை மூடிக்கொண்டு நம்பமாட்டேன் (ஜோதிடர் சொல்லிவிட்டார் அதனால் கூரையை பிய்த்துக்கொண்டு வந்து கொட்டிவிடும் என்றோ அல்லது நமக்கு 100 வயது வரை ஆயுள் கெட்டி என்று நினைத்து கொண்டு ரயில் தண்டவாளத்தில் படுத்துகிடப்பதோ கிடையாது)

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Jan 05, 2013 1:18 pm

தர்மா wrote:பங்கு சந்தையையும் ஜோதிடத்தையும் லிங்க் பண்ணுவது சரி படாது. ஏன் என்றால் பங்கு சந்தை ஏற்ற இறக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட (ப்ரோகர்) தனி மனிதர்களின் செயல் பாடுகள் தான் அவர்கள் நினைத்தால் ஒரு கம்பனியை இறக்குவார்கள் அல்லது ஏற்றுவார்கள். ஜோதிடம் என்பது மனிதன் கையில் இல்லை பின்னர் எவ்வாறு லிங்க் செய்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஜோதிடம் சாஸ்திரம் மூலம் வந்தது அது நம்பிக்க சார்ந்த விஷயம். ஜோசியம் பார்க்காமல் இருப்பது உத்தமம். உயிரினங்க மனிதனை தவிர அனைத்தும் என்ன ஜோசியமா பார்க்கிறது. ஜோசியம் மன குழப்பத்தை தான் உருவாகும். வாழ்கையை அதன் வழியில் அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்வது உத்தமம்

இதை இரண்டையும் லிங்க் செய்யவில்லை, இவை இரண்டிலும் கணிக்கும் முறைகளே ஒப்பீடு செய்யப்பட்டது. ஜோதிடம் மட்டுமல்ல, மதமும் நம்பிக்கை சார்ந்த விஷயமே, எந்த விலங்கும் கோவிலுக்குப் போவதில்லை, உடை உடுப்பதில்லை, அம்மா அப்பா உறவு கொண்டாடுவதில்லை. ஆகையால் இவைகளையும் மனிதன் கடைபிடிக்கலாமே.

ஜோதிடம் பொய் என்று சொல்பவர்கள் மதம் பொய், அனைத்து மத நம்பிக்கையும் பொய் கடவுள் பொய் என்று சொல்வதில்லையே, ஒரு நம்பிக்கை உண்மை, ஒன்றின் உட்பிரிவான ஜோதிடம் பொய் என்று கூறுவது எப்படி பகுத்தவறிவாகும் ?.... பொய் என்று முடிவு செய்தால் அனைத்தும் பொய்யே, வானஅறிவியல் உட்பட, ஏனென்றால் அதில் பல கோட்பாடுகள் இன்று வரை ஊகங்களாகத் தான் உலவுகிறது....

சதாசிவம்
இவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 4 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 05, 2013 1:24 pm

சதாசிவம் wrote:இவை இரண்டிலும் கணிக்கும் முறைகளே ஒப்பீடு செய்யப்பட்டது. ஜோதிடம் மட்டுமல்ல, மதமும் நம்பிக்கை சார்ந்த விஷயமே, எந்த விலங்கும் கோவிலுக்குப் போவதில்லை, உடை உடுப்பதில்லை, அம்மா அப்பா உறவு கொண்டாடுவதில்லை. ஆகையால் இவைகளையும் மனிதன் கடைபிடிக்கலாமே.

ஜோதிடம் பொய் என்று சொல்பவர்கள் மதம் பொய், அனைத்து மத நம்பிக்கையும் பொய் கடவுள் பொய் என்று சொல்வதில்லையே, ஒரு நம்பிக்கை உண்மை, ஒன்றின் உட்பிரிவான ஜோதிடம் பொய் என்று கூறுவது எப்படி பகுத்தவறிவாகும் ?.... பொய் என்று முடிவு செய்தால் அனைத்தும் பொய்யே, வானஅறிவியல் உட்பட, ஏனென்றால் அதில் பல கோட்பாடுகள் இன்று வரை ஊகங்களாகத் தான் உலவுகிறது.
நன்றி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Jan 05, 2013 1:38 pm

அகல் wrote:
சதாசிவம் wrote:[அது போல் தான் ஜோதிடத்தின் முழுமை தெரியாமல் அது வீணானது என்று முடிவுக்கு வரக்கூடாது.

நடைமுறையில் பல நிகழ்வுகளை மேற்கோள் காட்டியுள்ளேன் எபதை நீங்கள் கவனிக்க வேண்டும்.

கவனித்தேன் நண்பரே, ஆனால் இவை சாம்பிள்கள் மட்டுமே , சரித்தம் இல்லை. நீங்கள் பார்த்த அதே நிகழ்ச்சியில் செவ்வாய் தோஷம் RH ரத்த வகை குறித்தும் பேசப்பட்டது. அதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

மேலும் ஜோதிடம் என்பது, ஜாதகப் பலன் கூறுவது மட்டுமல்ல, காத்து வரும் திசையில் கதவு வையுங்கள் என்று சொல்லும் அறிவியலும், குழந்தை பிறப்பதற்கு இணையாகும் அமைப்புகளை பற்றிக் கூறும் மருத்துவமும் உள்ளது என்பதை நாம் மறுக்கக்கூடாது.

இதில் ஒரு சிலர் தவறு செய்வதால், அதை முற்றிலும் புறக்கணிப்பது தவறு என்பது தான் நான் சொல்ல வரும் கருத்து.

மனிதனின் பேராசையை எல்லாத் துறைகளுமே தவறாகத் பயன்படுத்துகிறது...ஜோதிடம், கல்வி, மருத்துவம் உட்பட, இவை அனைத்தையும் புறக்கணிக்கலாமே. இதில் ஒன்று சரி, ஒன்று தவறு என்று சொல்வது சரியா ?

ஒருவர் தனிப்பட்ட முறையில் ஒரு மத நம்பிக்கையை ஏற்காத பொழுது, அதை பொது மேடைகளில் விவாதிப்பதில்லை. உங்களுக்கு ஏற்கவில்லை என்றால் அதை சீண்டாதீர்,

அது போன்று ஜோதிடத்தை பொது மேடைகளில் விவாதிக்கும் பொழுது உங்களின் தனிப்பட்ட கருத்து என்று ஒரு சில சாம்பிள்களை வைத்து முழு ஜோதிடமும் பொய் என்ற கருத்தை எடுத்துக் வைப்பதில் தான் எனக்கு உடன்பாடு இல்லை.

சதாசிவம்
இவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 4 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jan 05, 2013 1:42 pm

மறுபடியும் குழப்புரீர்கள். வான சாஸ்திரம் நீங்கள் கூறுவது எல்லாம் வான் ஆராய்ச்சியை பற்றியே மனிதன் எப்படி இருப்பான் என்ற ஆராய்ச்சி அல்ல . இனியும் ஜோதிடம் சொல்லி உலகை ஏமாற்ற முடியாது. விலங்கிடம் இருந்து நல்லவற்றை கற்றுகொள்ளுங்கள் அவை செய்யும் தீயவைகளுக்கு உங்கள் மனம் ஏன் போகிறது என்று தெரியவில்லை.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Jan 05, 2013 2:24 pm

தர்மா wrote:மறுபடியும் குழப்புரீர்கள். வான சாஸ்திரம் நீங்கள் கூறுவது எல்லாம் வான் ஆராய்ச்சியை பற்றியே மனிதன் எப்படி இருப்பான் என்ற ஆராய்ச்சி அல்ல . இனியும் ஜோதிடம் சொல்லி உலகை ஏமாற்ற முடியாது. விலங்கிடம் இருந்து நல்லவற்றை கற்றுகொள்ளுங்கள் அவை செய்யும் தீயவைகளுக்கு உங்கள் மனம் ஏன் போகிறது என்று தெரியவில்லை.

தெளிவு வரும் வரை குழப்பம் இருக்கத்தான் தான் செய்யும், மனிதன் செய்யும் செயல்களை விலங்கோடு ஏன் ஒப்பீடு செய்ய வேண்டும்...ஆ ஊ என்றால் வான அறிவியல் ஆதாராமாகப் பேசுவதால் அவ்வறிவியலில் உள்ள தத்துவங்கள் பல ஊகமே, ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட கருத்துக்கள் உண்டு என்ற உண்மையும் மக்கள் உணர வேண்டும் என்ற காரணமும் தான்.

மனிதனைப் பற்றி ஆராயும் உளவியல் மருத்துவத்திலும் புரியாத புதிர்கள் உள்ளது.. இவைகளை நாம் புறக்கணிப்பதில்லை....

சதாசிவம்
இவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 4 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Jan 05, 2013 2:43 pm

சதாசிவம் wrote:
தர்மா wrote:மறுபடியும் குழப்புரீர்கள். வான சாஸ்திரம் நீங்கள் கூறுவது எல்லாம் வான் ஆராய்ச்சியை பற்றியே மனிதன் எப்படி இருப்பான் என்ற ஆராய்ச்சி அல்ல . இனியும் ஜோதிடம் சொல்லி உலகை ஏமாற்ற முடியாது. விலங்கிடம் இருந்து நல்லவற்றை கற்றுகொள்ளுங்கள் அவை செய்யும் தீயவைகளுக்கு உங்கள் மனம் ஏன் போகிறது என்று தெரியவில்லை.

தெளிவு வரும் வரை குழப்பம் இருக்கத்தான் தான் செய்யும், மனிதன் செய்யும் செயல்களை விலங்கோடு ஏன் ஒப்பீடு செய்ய வேண்டும்...ஆ ஊ என்றால் வான அறிவியல் ஆதாராமாகப் பேசுவதால் அவ்வறிவியலில் உள்ள தத்துவங்கள் பல ஊகமே, ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட கருத்துக்கள் உண்டு என்ற உண்மையும் மக்கள் உணர வேண்டும் என்ற காரணமும் தான்.

மனிதனைப் பற்றி ஆராயும் உளவியல் மருத்துவத்திலும் புரியாத புதிர்கள் உள்ளது.. இவைகளை நாம் புறக்கணிப்பதில்லை....

அறிவியலில் உள்ள முரண்பட்ட கருத்துகள் மற்றும் புரியாத புதிர்கள் என்று எதைச் சொல்கிறீர்கள்?

Sponsored content

PostSponsored content

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக