புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 2 Poll_c10இவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 2 Poll_m10இவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 1%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 2 Poll_c10இவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 2 Poll_m10இவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 2 Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

20 Posts - 4%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Jan 03, 2013 3:39 pm

First topic message reminder :

எனது வலைப்பூவில்: http://kakkaisirakinile.blogspot.in/2013/01/blog-post.html

இது என்னோட 2013 வது புத்தாண்டின் முதல் பதிவு ஆனா பேசப்போறது 2012 ஆண்டு புத்தாண்ட பத்தி. என்னடா சம்மந்தமே இல்லமா ஒருவருஷம் பின்னாடி போயி பேசுறேன்னு பாக்குறிங்களா ..? சம்மந்தம் இருக்குங்க. அதுவும் என்னான்னு கொஞ்சம் பாக்கலாம் வாங்க.

அது என்னவோ தெரியலைங்க. வீட்ல சாம்பார்ல இருந்து பொறியல் வரைக்கும் எதுலயாவது ஒரு சின்ன எறும்பு விழுந்தாகூட வேற யாரு கண்ணுலயும் படாது. என் கண்ணுல மாட்டிக்கும். அதுக்கப்பறம் என்ன, எங்க அம்மா காதுல பஞ்சு வச்சுக்க வேண்டிய தான் பாக்கி. இப்ப நான் வெளியூர்ல இருக்கறதால என் அம்மா கொஞ்சம் சந்தோசமா இருக்கும்னு நெனைக்கிறேன். ஏனா, வீட்ல என் அம்மாவை எப்பவும் திட்ற ஒரே ஜீவன் நானாதான் இருப்பேன் (நீ பக்கத்துல இருந்து திட்டமா இப்பல்லாம் ரொம்ப போர் அடிக்குதுடானு போன்ல அப்பப்ப காலாய்க்க வேற செய்யிறாங்க). இது மாதிரி தான் போன 2012 புதுவருட நீயா நானா ஸ்பெஷல் ஷோல சிலர் என் கண்ணுக்கு மாட்டுனாங்க (சத்தியமா இந்த வாட்டி கோபிய விமர்சிக்கலங்கோ). ஆனா அதப்பத்தி எழுதனும்னா 2012 முடியும் வரம் காத்திருந்துதான் ஆகணும். அப்படி ஒரு கட்டயாம். அதுக்கு முன்னாடிஎழுதிருந்தா என்ன முட்டாள்னு முத்திரை குத்தீருப்பாங்க. ஏனா டாபிக் அப்படி.

அது என்ன ஷோ ? தலைப்பு என்ன ? அதுல என்ன பிரச்சன ? யார் அந்த நண்பர்கள்னு பாக்கா அப்படியே ஒருவருஷம் பின்னாடி போலாமா ..?

2012 வருஷ நீயா நானா ஸ்பெசல் ஷோல பேசப்பட்ட தலைப்பு "2012 ஆண்டில் ஜோதிடம் என்ன சொல்கிறது" என்பதுதான். இந்த நிகழ்ச்சியில் பொதுப்பலன், ஒவ்வொரு ராசிக்கும் உரிய பலன் அப்படின்னு நெறைய விவாதிச்சாங்க. அதுல, கோபி ஒரு கேள்விய கேட்டாரு. 2012 இல் நான் இதைக் கணித்திருக்கிறேன். அது கண்டிப்பாக நடக்கும் என எந்த நிகழ்வையாவது உங்களால் சொல்ல முடியுமா என்று.

அதுக்கு வந்த பதில்கள் நிறைய. அதுல முக்கியமான ரெண்டு, 2012 முடியறதுக்குள்ள "ராஜபக்சே கட்டாயமாக ஆட்சியை விட்டு இறங்குவார்" , "இந்திய-சீன போர் வரும்" என்பதே.

இதுல எதாச்சும் நடந்ததா ..? அவர்கள் பேசிய பகுதியை மட்டும் இந்த காணொளில் ஒரு முறை பார்க்கவும். மீதியை பிறகு பேசுவோம்.

அதுமட்டுமில்லாம, அந்த ஜோசியர்களிடே கூட சரியான உடன்பாடில்லை. ஒருவர் ராஜபக்சே ஆட்சியை விட்டு விலகுவார்னு சொல்றாரு, மற்றொருவர் கண்டிப்பா இல்லன்னு எதிர்கிறாரு. அவங்களுக்குள்ளேயே எது சாரின்னு தெரியல. எல்லாரும் ஒரே ஜாதகத்தத்தான படிச்சிருப்பாங்க.? அப்ப ஏன் இந்த மாறுபட்ட கருத்துக்கள் .? இவர்கள் எப்படி நம்மளுடைய வாழ்கைய ஜாதகம் என்கிற போர்வையில தீர்மானிக்க முடியும். இவர்களை நம்பி நாம் ஏன் போகவேண்டும். இவர்கள் என்ன கடவுளா..? நாமளும் கொஞ்சம் யோசிக்க வேண்டாமா ..?

அதோட இங்க நீங்க இன்னும் ஒன்ன சரியா புரிஞ்சுக்கணும். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜோசியர்கள் எல்லாரும் தமிழ் நாட்டில் பிரபலமான பெரிய ஜோசியர்கள் என்று சொல்லப்படுபவர்கள். ஷெல்லி என்கிறவர் அடிக்கடி டிவில வாரத பாத்துருப்பிங்க. அவர்தான் ராஜபக்சே 2012 குள்ள ஆட்சியை விட்டு வெளியேற்றப்படுவார்னு சொன்னார். ஆனா நமது உறவுகளை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த அவன் என்னவோ சுகபோகமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஜோசியத்தில் அனைத்தையும் அறிந்த, தமிழ் நாட்டின் பெரிய ஜோசியர்கள் என்று சொல்லப்படும் இவர்கள் வார்த்தைகளே பொய்த்து போகிறதே, அப்ப நம்ம ஊரு அரைகுறை ஜோசியர்களின் கதி என்ன ..? அவர்களை நம்பி நாம ஏன் ஊர் ஊரா கோவில் கோவிலா சுத்தணும், வாழ்க்கைய அழிச்சுக்கணும் ..?

அடுக்கடுக்காக வைக்க என்னிடம் நிறைய கேள்விகள் இருந்தது. அந்த கேள்விகளை ஒட்டுமொத்தமாக "சங்கரி ராஜ்குமார்" என்ற ஒரு இயக்குனர் தன்னோட படத்து கடைசி காட்சில சமூதாயத்திற்கு ஒரு சாட்டையடியாக பதிவு செய்தார். அந்தப் படம் வேற எதுவும் இல்ல. யாருமே பெருசா கவனிக்காத, இப்படி ஒரு படம் வாந்துச்சானு கூட பலருக்கு தெரியாத படம் "வெங்காயம்". நான் பார்த்த சமூக கருத்துள்ள படங்களில் மிக முக்கியமான இடத்தை பிடிக்கும் படம் இது.

அந்த படத்தின் ஐந்து நிமிட கடைசி காட்சியை இங்கு இணைக்கிறேன். கட்டாயம் பாருங்கள்.

இத்தனை கேள்விகள் உதாரணங்கள் கொடுத்தும், நீ என்ன அவ்ளோ பெரியாளா .? உனக்கு அப்படி என்ன தெரியும் ..? உன்ன பெரிய அறிவாளின்னு காட்டிக்க முயற்சி பண்ட்ரியானு தலைப்ப மட்டும் பாத்துட்டு கல்ல விட்டு அடிக்க நம்ம ஊர்ல பல நண்பர்களும் இருப்பாங்க. அடிக்கறதா இருந்தா கொஞ்சம் சின்ன கல்லா வச்சு அடிங்க பாஸ். ஆனா அடிச்சிட்டு, குறைந்த பட்சம் இந்த மூட நம்பிக்கைகளை விட்டு விலகினா ரொம்ப சந்தோசப்படுவேன்.

இத்தனை சொல்லியும்.. உனக்கு என்ன தெரியும், இந்த கட்டுரை உன்னோட அறியாமையைக் காட்டுது அப்படின்னு நம்மாளுக கமெண்ட் அடிக்காம இருக்க மாட்டாங்க. அவங்களுக்கு மட்டும் என் வாழ்கையை ஒரு உதாரணமாகச் சொல்லி இந்த பதிவை முடித்துக்கொள்கிறேன்.

2011 ஆகஸ்ட் 18 தேதி, நான் இந்த உலகில் ஒரு தனிமரம் என்று நினைத்துக் கொண்ட நாள். என் வாழ்க்கையில், ஈடு செய்ய முடியாதா ஒன்றை இழந்த நாள். என் வாழ்வில் இதற்கு மேலும் ஒரு பெரிய இழப்பு வர இயலாத, அந்த இழப்பு என் அண்ணன் என்பதை இன்னும் ஜீரணித்துக் கொள்ள முடியாத நாள். ஒரு விபத்தில் சிக்கி, சில லட்சங்கள் செலவு செய்தும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்தபின் 29 வது வயதில் எனது அண்ணனின் உயிர் பிரிந்தது. என் அப்பாவிற்கு ஜாதகத்தில் அதீத நம்பிக்கை. ஆனால் எனக்கு எப்போதுமே இருந்ததில்லை.

அந்த நம்பிக்கையால் உயிர் பிரிவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னும் என் அப்பா, என் மாமாவிடம் சொல்லி எனது அண்ணனின் ஜாதகத்தைப் பார்க்கச் சொன்னார். ஜோசியர் சொன்னது, "இவரின் ஆயுள் கெட்டியானது. எதற்கும் பயப்படாதீர்கள். இப்போது எதுவும் ஆகாது. கண்டிப்பாக திரும்பிவருவார் என்பதே". என் அண்ணனும் திரும்பி வந்தார், ஆனால் உயிர் மட்டும் இல்லை.

என் அண்ணனின் ஆயுள் ஜாதகம், எங்களுடைய சுற்றுப்புற ஊர்களிலேயே மிகவும் பிரபலமான ஜோசியர் ஒருவரால் முத்தான எழுத்துக்களில் 73 வயதுவரை வாழ்வார் என எழுதப்பட்டு, அதற்கு மேலும் ஆயுள் உண்டு என்ற குறிப்போடு இன்னும் எங்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கிறது.

இத்தனை மாதங்களாகியும் உயிருக்கு இணையான என் அண்ணனைப் பற்றி சிந்திக்கவே எனது மனம் இன்னும் பக்குவப்படவில்லை. இருந்தும் இந்த உதாரணத்தைத் தர காரணம், சிலருக்காவது உதவும் என்ற நம்பிக்கையில்.

யோசிப்பீர்கள் என்று நம்புகிறேன்..!

நன்றி,

அன்புடன்,
அகல்

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jan 04, 2013 11:41 am

ஜோதிடம் தமிழர்கள் எந்த அளவிற்கு வான சாஸ்த்திரத்தில் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதற்கு ஒரு சிறு உதாரணம் ஆகும். இப்போதுள்ள மரத்தடி ஜோதிடர்களும் , தொலைகாட்சி புகழ் ஜோதிடர்களும் வயிற்று பிழைப்புக்காக தொழில் செய்பவர்கள்.

உண்மையான ஜோதிட சாஸ்த்திரம் அறிந்தவர்கள் இக்காலத்தில் மிக குறைவு

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jan 04, 2013 11:42 am

ஜோதிடம் ஒரு மூடத்தனம். அதை நம்புவது மூட நம்பிக்கையாகும். ஒன்பது கிரகங்கள் அல்ல. சூரியன் கிரகமல்ல. சந்திரனும் கிரகமல்ல, ராகுவும் - கேதுவும் உண்மையில் இல்லை. கிரகமான பூமியைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்கிற விளக்கங்களை எடுத்துச் சொன்னதால் பல பேர் அந்த மூட நம்பிக்கையைக் கைவிட்டு விட்டனர்.

வானவெளியை 12 பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் மேஷம், ரிஷபம், மிதுனம் என்று 12 பெயர்களை சூட்டி இருக்கிறார்கள். சூரியன் ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாதம் சஞ்சரிக்கிறது. ஒரு ஆண்டில் 12 ராசிகளைக் கடந்து வருகிறது. சந்திரன் ஒரு ராசியை இரண்டரை நாள்களில் கடந்து விடுகிறது.

சோதிடத்தில் இந்த ராசியும், பிறந்த லக்கனமும், கிரகங்களும் நட்சத்திரங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. இவைகள்தான் சோதிடத்திற்கு அடிப்படை என்று சோதிட நூலில் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் நமக்கு மிகப் பெரிய சந்தேகம்!

சூரியன் வினாடிக்கு 230 கி.மீ. வேகத்தில் விண்வெளியில் ஒரு ராசி வட்டத்தைக் கடக்க ஒரு மாதம் ஆகிறது. பூமியோடு செல்லும் நிலவு வினாடிக்கு 30 கி.மீ. வேகத்தில் சென்று ஒரு ராசி வட்டத்தில் இரண்டரை நாள் சஞ்சரித்து விட்டு அடுத்த ராசிக்குக் கடந்து செல்வதாக சோதிட நூல் கூறுவது 230 கி.மீ., வேகத்தில் செல்லும் சூரியனை 30 கி.மீ. வேகத்தில் செல்லும் நிலவு முந்தி விடுமாம்!

வேகமாக ஓடும் முயலை ஆமை முந்தி விட்டது என்று சொல்வதுபோல் இருக்கிறது. இப்படிக் கூறும் சோதிடத்தை நம்ப முடியுமா? ஏற்றுக் கொள்ளக் கூடியதா!

வானவெளி வட்டத்தை 27 பகுதிகளாகப் பிரித்து, அதில் ஒளியோடு புலப்படும் ஒரு நட்சத்திரத்திற்குப் பெயரைச் சூட்டினார்கள் இந்த நட்சத்திரங்கள் ராசி வட்டத்தைக் கடந்து செல்லும் பாதையை கணக்கிலெடுத்து இருபத்தேழு நட்சத்திரங்களின் ஆதிக்கத்தில்தான் மனிதர்கள் பிறக்கிறார்கள் என்று சோதிடம் கூறுகிறது.

ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் பூமி இருக்கும் ராசிக் கூட்டத்தில் கண்ணுக்குத் தெளிவாகப் புலப்படும் நட்சத்திரமே அவர் பிறந்த நட்சத்திரமாகக் கொள்ளப்படுகிறது. அந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை இன்னின்ன குணாதிசயங்களைப் பெற்றிருப்பார்கள். அவர்கள் வாழ்க்கை எப்படிப்பட்டதாக யிருக்கும் என்று சோதிடத்தில் கணித்துக் கூற முடியும் என்று சோதிடர்கள் கூறுகிறார்கள்.

கிருத்திகை நட்சத்திரம்ஒரு குழந்தை ரிஷப ராசியில் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தது என்றால் அந்த நட்சத்திரத்திற்கும் அக்குழந்தைக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை ஆராய்வோம்!

அக்குழந்தை பிறந்த நேரத்தில் கிருத்திகை நட்சத்திரம் பூமியிலிருந்து 410 ஒளியாண்டுத் தொலைவில் இருக்கும். அந்த நட்சத்திரத்தின் ஒளியாற்றல் வினாடிக்கு 3 இலட்சம் கி.மீ. வேகத்தில் பூமிக்கு வந்த சேர 410 ஆண்டுகள் ஆகும்!

அக்குழந்தை 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தால்கூட அந்த நட்சத்திரத்தின் ஒளியாற்றல் பூமிக்கு வந்து சேர வாய்ப்பில்லை! குழந்தை பிறந்தபோது பூமியில் கிருத்திகை நட்சத்திரத்தின் ஒளியாற்றல் இருந்ததென்றால் அக்குழந்தை அணுவாகவோ கருவாகவோ உண்டாகாத காலத்திற்கு 410 ஆண்டுகளுக்கு முற்பட்டது!

அந்த ஒளியாற்றலை அக்குழந்தைக்குரியதாக ஏற்றுக் கொள்ள முடியுமா? அந்த ஒளியாற்றலை வைத்து சோதிடம் கணிக்கப் படுவதாகக் கூறுவது எப்படிச் சரியாகும்! எப்படிப் பொருந்தும்.கிருத்திகை 500 நட்சத்திரங்களைக் கொண்டது

கிருத்திகை நட்சத்திரம் பல நட்சத்திரங்களைக் கொண்ட கூட்டமாகும்! வானியல் மேதை கலிலியோ தொலை நோக்கி மூலமாக 36 நட்சத்திரங்களைக் கண்டார். 500-க்கு மேற்பட்ட நட்சத்திரக் கூட்டம் அது! அதன் வயது 25 இலட்சம் ஆண்டுகள். கிருத்திகை நட்சத்திரக் கூட்டத்திலுள்ள அல்சியோன் நட்சத்திரம் சூரியனைவிட 1000 மடங்கு ஒளியுடையது.

அதன் குறுக்களவு 90 இலட்சம் கிலோ மீட்டர்! கிருத்திகையில் எந்த நட்சத்திரத்திதை வைத்து சோதிடம் கணிக்கப்படுகிறது. கிருத்திகையிலுள்ள மற்ற நட்சத்திரத்தின் ஆற்றல் பயனற்றதா அல்லது பயன்படாததா?

சோதிடர்கள் இதற்குப் பதில் கூற முடியாது. இது அறிவியல் ஆதாரத்தோடு கூடியது!

சோதிடர்களுக்கு இவை எதுவுமே தெரியாது. எனவே சோதிடர்கள் கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது மட்டுமல்ல! அறிவுக்கும் பொருந்தாதது!

இது போன்றுதான் மற்ற ராசியிலுள்ள நட்சத்திரங்களின் தூரம் உள்ளது. அந்த நட்சத்திரங்களின் ஒளியாற்றலும் பூமிக்கு வந்து சேர நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகிறது.

எனவே குழந்தை பிறந்த நேரத்திற்கும் நட்சத்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் இருக்க முடியாது! எனவே சோதிடம் சொல்வது அறிவியல் அடிப்படையில் அமைந்தது அல்ல! நம்பத் தகுந்ததும் அல்ல!

நட்சத்திரங்களின் தூரம்(ஒளி வினாடிக்கு 3 லட்சம் கி.மீ. வேகத்தில் ஓராண்டிற்குச் செல்லும் தூரம் ஒளியாண்டு ஆகும்)
ரிஷபராசியில் - கிருத்திகை நட்சத்திரம் 410 ஒளியாண்டுத் தொலைவு ரிஷப ராசியில் - ரோகிணி நட்சத்திரம் 130 ஒளியாண்டுத் தொலைவு மிதுன ராசியில் - புனர்பூச நட்சத்திரம் 36 ஒளியாண்டுத் தொலைவு மிதுன ராசியில் - காஸ்டர் நட்சத்திரம் 46 ஒளியாண்டுத் தொலைவு

கடக ராசியில் - ஈட்டாகரினா 6000 ஒளியாண்டுத் தொலைவு சிம்ம ராசியில் - மகம் நட்சத்திரம் 84 ஒளியாண்டுத் தொலைவு கன்னி ராசியில் - சித்திரை நட்சத்திரம் 211 ஒளியாண்டுத் தொலைவு

கன்னி ராசியில் - சுவாதி நட்சத்திரம் 36 ஒளியாண்டுத் தொலைவு விருச்சிக ராசியில் - கேட்டை நட்சத்திரம் 300 ஒளியாண்டுத் தொலைவு மகர ராசியில் - அசுவினி நட்சத்திரம் 84 ஒளியாண்டுத் தொலைவு

மிதுன ராசியில் - திருவாதிரை நட்சத்திரம் 1140 ஒளியாண்டுத் தொலைவு

சூரியன் ஒரு சிறிய நட்சத்திரம்!
சூரியன் ஒரு சிறிய நட்சத்திரம். பூமியிலிருந்து 14 கோடியே 94 இலட்சம் கி.மீ. தூரத்தில் உள்ளது! சூரிய ஒளி பூமிக்கு வர ஏழரை நிமிடம் ஆகும். சூரியனின் குறுக்களவு 13 இலட்சத்து 92 ஆயிரம் கி.மீ., சூரியனின் மையப்பகுதியில் வெப்பம் 1 கோடியே 50 லட்சம் சென்டி கிரேடு! விளிம்பில் 6000 டிகிரி சென்டிகிரேட்!

சூரியன் அண்டத்தை மணிக்கு 8 இலட்சத்து 64 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது. இதே வேகத்தில் அண்டத்தை ஒரு சுற்று சுற்றி வர 25 கோடி ஆண்டுகள் ஆகிறது!

சூரியனுடன் சேர்ந்து பூமியும் மற்றக் கோள்களும் நாள் 1-க்கு 2 கோடியே 7 இலட்சத்து 36 ஆயிரம் கி.மீ., தூரம் அண்டத்தை சுற்றி வருகின்றன. சூரியன் அண்டத்தின் மையப் பகுதியிலிருந்து 30 ஆயிரம் ஒளியாண்டுத் தொலைவில் ஒரு ஓரத்தில் உள்ளது. சூரியனோடு சேர்ந்து நாமும் அண்டத்தைச் சுற்றுகிறோம்!

நட்சத்திரங்களின் ஆற்றல்!
ரோகிணி நட்சத்திரம் 5 கோடியே 10 இலட்சம் கிலோ மீட்டர் குறுக்களவு கொண்டது. ரோகிணியைச் சுற்றி 200-க்கும் மேற் பட்ட நட்சத்திரக் கூட்டம் உள்ளது!

அந்த நட்சத்திரக் கூட்டத்தின் குறுக்களவு 33 ஒளியாண்டு! வயது 100 கோடி ஆண்டு!ஈட்டாகரினா என்ற நட்சத்திரம் சூரியனைவிட 60 இலட்சம் மடங்கு பிரகாசமுடையது. ஒளி குன்றி வருவதால் செம்பூதமாக மாறி பெரு வெடிப்புக்கு உள்ளாகலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

மகம் நட்சத்திரம் சூரியனைவிட 140 மடங்கு ஒளியுடையது. 14 ஆயிரம் டிகிரி வெப்பமுடையது.சுவாதி நட்சத்திரம் சூரியனைவிட 115 மடங்கு அதிக ஒளியுடையது. 5000 டிகிரி வெப்பமுடையது.கேட்டை நட்சத்திரம் சூரியனைவிட 285 மடங்கு குறுக்களவு கொண்டது. 30 மடங்கு சூரியனைவிட அதிக எடை 7500 மடங்கு அதிக ஒளி!

திருவாதிரை நட்சத்திரம் சூரியனைவிட 450 மடங்கு விட்டம் கொண்டது.

நமது அண்டத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் உண்டு! அவற்றில் மனித வாழ்க்கையோடு தொடர்புபடுத்திய சில நட்சத்திரங்களை மட்டுமே இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த அறிவியல் முடிவுகளை ஆராய்ச்சியாளர்கள் எவ்வளவோ காலம் ஆராய்ந்து வெளியிட்டிருக்கிறார்கள். ஆராய்ச்சியாளர் களின் இந்த முடிவுகளை சோதிடம் ஏற்றுக் கொள்ளவில்லை.

(தொகுப்பு - http://www.arusuvai.com/tamil/node/4641?page=2)

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jan 04, 2013 11:54 am

பால் வீதியில கச்சாமுச்சான்னு கிரகங்கள் இருக்கு (பால் வீதிகளே அனேகம் இருக்கிறதாவும் சொல்றாய்ங்க.) இதுல இந்த விஸ்வமே ஒரு பக்கம் சுருங்கிக்கிட்டும் - இன்னொரு பக்கம் விரிவடைஞ்சுக்கிட்டு இருக்காம் வீல் சேர்ல இருந்தே ஒருத்தரு கண்டுபிடிச்சு சொன்னாரு.

ஆனால் சோசியத்துல 7+2 கிரகங்கள் தான் செலாவணியில இருக்கு. சுருக்கம் விரிவாக்கம் இதுக்கெல்லாம் இடமே இல்லை. இது என்னய்யா தர்கம்? ஜோதிடம் எப்படிய்யா விஞ்ஞானமாகும்?

இந்தியாவுல (மட்டும்) நிமிஷத்துக்கு 4 குழந்தை பிறக்குது. 120 நிமிசத்துக்கு (சுமார்) ஒரே லக்னம் தான்,ஒரே ஜாதகம்தான் . ஆக 120 x4 =480 குழந்தை ஒரே லக்னத்துல ஒரே ஜாதகத்துல பிறக்குது. ஆனால் ரஜினி காந்த் ஒருத்தருதேன் சூப்பற ஸ்டார் ஆறாரு. மத்த 479 குழந்தைங்க என்ன ஆச்சு?

பெண்கள் வயதுக்கு வந்த நேரத்தை வச்சு ஒரு ஜாதகம் கணிச்சு அதை ருதுஜாதகம்ங்கறாய்ங்க. ஒருபெண் மோசமான ஜாதகத்துல பிறந்து யோகமான நேரத்துல வயசுக்கு வந்துட்டா என்னாகும்? அட ஒரு பொண்ணு யோகமான ஜாதகத்துல பிறந்து மோசமான ஜாதகத்துல வயசுக்கு வந்துட்டா என்னாகும்?

ருதுஜாதகம் பவர்ஃபுல்லா? ஜனன ஜாதகம் பவர்ஃபுல்லா? ஏதோ ஒன்னுதான் பவர்ஃபுல்லுன்னா அடுத்தது டம்மியா? ( ஐ மீன் பொய்யா போகுமா?) அட ரெண்டுமே பவர்ஃபுல்லுன்னா சிண்டை பிச்சுக்கனுமா? இன்னாய்யா லாஜிக் இது?

பெண்கள் மேட்டர்லயே இன்னொரு சப்ஜெக்டு. மாங்கல்ய பலம்/தோஷம். கொய்யால நேத்துவரை அவன் யாரோ இந்த பெண் யாரோ ஆனால் இவளை கல்யாணம் பண்ணிக்கிட்டதுமே இவ ஜாதகத்துல உள்ள மாங்கல்ய தோஷம் அவனுக்கு டிக்கெட் போட்டுருமா? அப்ப அவன் ஜாதகம் என்ன மானாட மயிலாட பார்க்க போயிருமா?

மாங்கல்ய தோஷம் உள்ள பெண் தீர்காயுள் கொண்ட ஆணை கல்யாணம் பண்ணிக்கிட்டா இவ ஜாதகப்படி விதவையாவாளா? அ அவன் ஜாதகப்படி இவளோட மாங்கல்ய தோஷம் ஃபணாலாகி சுமங்கலியா இருப்பாளா?

அவள் ஜாதகமும் வேலை செய்யனும்.இவன் ஜாதகமும் வேலை செய்யனும். அப்பத்தேன் ஜோதிடம் உண்மையாகும் . அதெப்படி ரெண்டு ஜாதகமும் வேலை செய்யும்? ரெண்டும் வேலை செய்தா என்ன பலன்?

ஆரூட லக்னம்:
கேள்வி கேட்கப்பட்ட நேரத்தை வச்சு பதில் சொல்ற மெத்தட் ஒன்னிருக்கு. அதான் ஆரூடம்/ஆரூட லக்னம்னு சொல்லப்படுது.

அதாவது கேள்வி கேட்ட நேரத்துல எந்த லக்னம் உதயமாகியிருக்கோ அதுக்கு எத்தனையாவது பாவத்துல என்னென கிரகம் இருக்குன்னு பார்த்து பார்ட்டி வந்த வேலை என்ன? அது ஆகுமா ஆகாதான்னு சொல்றதுதான் ஆரூடம்.

சராசரியா ஒரு லக்னம் ரெண்டுமணி நேரம் இருக்கும். ஒரு பிசியான ஜோசியர் கிட்டே 2 மணி நேரத்துல கு.பட்சம் 20 பேராவது வருவாய்ங்க. அப்போ 20 பேரும் ஒரே வேலையா வந்தாப்லயா? 20 பேருக்கும் ஒரே முடிவு தானா?

சோதிட விதிகள் தொகுக்கப்பட்டு பல நூற்றாண்டுகள் ஆயிருச்சு. உலகம், நாடு ,மக்கள்,மக்கள் வாழ்க்கை ,கல்வி, சமுதாயம், அரசியல், பொருளாதாரம் எல்லாமே மாறிப்போச்சு. ஆனால் இன்னைக்கும் அதே அரதப்பழசான விதிகளை வச்சுக்கிட்டு ஜல்லியடிக்கிறாய்ங்களே .. இதுல தர்கம் இருக்கா? நியாயம் இருக்கா?

பாலாரிஷ்ட தோஷம்னு ஒரு விஷ்யம் இருக்கு. குறிப்பிட்ட கிரக நிலையில குழந்தை பிறந்தா அது உயிர் வாழாதுன்னு சொல்றாய்ங்க.ஆனால் அதே கிரக நிலைகளை கொண்ட ஜாதகங்கள் திருமணம், சந்தானம் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பா பலன் கேட்டு இன்னைக்கும் வருதே. அவிக ஏன் சாகலை? அப்ப பாலாரிஷ்ட தோஷம்ங்கறது டுபுக்கா?

ராமர் ஜாதகம் , அனுமார் ஜாதகம்னு பார்க்கிறோம். சிலர் தகட்டுலயே கீறி வித்துக்கிட்டிருக்காய்ங்க.
(அவற்றை அனலைஸ் பண்ணி பார்த்தா வா.வெ ) அவிக தாய்மார்களுக்கு பிரசவம் பார்த்தது ஆரு? பர்த் சர்ட்டிஃபிகேட் இஷ்யூ பண்ணது ஆரு? அவிக பர்த் டீட்டெயில்ஸை இந்த சோதிடப்புலிகளுக்கு தந்தது யாரு?

நட்சத்திர தோஷங்களை பற்றி சொல்லும் போது ஆண் நட்சத்திரங்களுக்கு தோஷமில்லேன்னு சொல்லி வச்சிருக்காய்ங்க. தோஷம் என்ன ப்ரெஸ்ட் கான்சரா பெண்களை மட்டும் எஃபெக்ட் பண்றதுக்கு. இது வடி கட்டின மேல் சாவனிசமில்லையா? இதுல என்னத்தை தர்கம் வாழுது?

அரசியல்ல எல்லா கட்சி காரவுகளும் (சுயேச்சை உட்பட) சோசியம் பார்த்துத்தான் தேர்தல்ல நிக்கிறாய்ங்க. ஆனாலும் ஒரு தொகுதியில ஒரு வேட்பாளர்தான் ஜெயிக்கிறாரு. மத்தவுக தோத்துத்தான் போறாய்ங்க. தோத்தவன் தோக்கறோம்னு தெரிஞ்சே வாரி இறைச்சு தோற்கிறானா? அல்லது வெற்றி உனக்கேன்னு தப்பா சொல்லப்பட்ட பலனை நம்பி நிக்கிறானா?

சினிமா உலகத்துல எல்லா தயாரிப்பாளரும் சோசியம் பார்த்துத்தேன் படம் பண்றாய்ங்க. ஆனால் பலதும் பப்படமாயிருது ஏன்?

குரு பலம் வந்துருச்சு கங்கணம் கூடியிருக்குங்கறாய்ங்க. அல்லது குரு சரியில்லை தம்பதிகளுக்குள்ளே பிரச்சினை வரும்னு சொல்றாய்ங்க அது எப்படி மெட்டீரியலைஸ் ஆகுதுன்னு எந்த சோசியரும் சொல்லமாட்டேங்கறாரு. சோசியம் விஞ்ஞானம்னா காரண காரியத்தை விளக்கலாமே.

பரிகாரம்ங்கற பேர்ல சகட்டுமேனிக்கு யாகம் ,தானம் தருமம்லாம் பண்றாய்ங்க. ஆனாலும் பதவி பறிபோகுது. கைதுலருந்து கோர்ட்டுதான் காப்பாத்துது. ஜாதகத்தை வச்சு பலன் - பலனை தவிர்க்க பரிகாரம்.
பரிகாரம் டுபுக்குன்னா பலனும் டுபுக்குத்தானே. பலன் டுபுக்குன்னா ஜாதகம் ஜோதிடம் எல்லாமே டுபுக்குத்தானே?

(தொகுப்பு - http://anubavajothidam.blogspot.in/2011/10/blog-post_09.html)

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Jan 04, 2013 1:21 pm

நல்ல தொரு விழிப்புணர்வு கட்டுரை! முன்பு போல் ஜோசிய காரர்கள் இப்போது யாரும் இல்லை அதனால் நம்பி யாரும் ஏமாற வேண்டாம்..!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jan 04, 2013 2:34 pm

நல்ல பதிவு நன்றிகள் அகல் அண்ணா

இவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 2 Mஇவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 2 Uஇவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 2 Tஇவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 2 Hஇவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 2 Uஇவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 2 Mஇவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 2 Oஇவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 2 Hஇவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 2 Aஇவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 2 Mஇவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 2 Eஇவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jan 04, 2013 3:23 pm

உங்களின் கேள்விக்கு பதில், அறிவியல் ரீதியாக ...

பார்த்திபன் wrote:ஜோதிடம் ஒரு மூடத்தனம். அதை நம்புவது மூட நம்பிக்கையாகும். ஒன்பது கிரகங்கள் அல்ல. சூரியன் கிரகமல்ல. சந்திரனும் கிரகமல்ல, ராகுவும் - கேதுவும் உண்மையில் இல்லை. கிரகமான பூமியைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்கிற விளக்கங்களை எடுத்துச் சொன்னதால் பல பேர் அந்த மூட நம்பிக்கையைக் கைவிட்டு விட்டனர்.

கிரகம் என்ற வடமொழி வார்த்தைக்கு தன்னைத் தானே சுற்றுவது என்று பொருள்....தலை கிர்ரூ இருக்கு பேசுறோமே அதுவும் இந்த வார்த்தையின் வடிவமே, ஆகையால் அறிவியல் ரீதியில் சூரியன், சந்திரன் தன்னைத் தானே சுற்றுகிறது. ஆகையால் இவைகளை கிரகங்கள் என்று அழைக்கலாம். ஆங்கிலத்தில் ஸ்டார்ஸ் , பிளானெட் என்று கூறுவதில் உள்ள வித்தியாசம் வேறு...விண்வெளிக்கு செல்பவரை அமெரிக்காவில் astronauts என்றும், ரஷ்யா, ஆசியா நாடுகளில் cosmonauts என்று கூறுகிறார்கள், ஆனால் இவர்கள் இருவருமே விண்வெளிக்குச் செல்பவர்கள். ராகு, கேது கிரகங்களாக ஜோதிடம் சாத்திரம் ஏற்பதில்லை, இவற்றை சாயாக் கிரகங்கள் (shadow planets) என்று தான் கூறுகிறது. நீங்கள் இரும்பை நெருப்பில் இடும் போது, நெருப்பு இரும்பை என்ன செய்ய இயலும் என்று தான் பார்க்க முடியும், இரும்பை இரும்பே என்ன செய்யும் என்று கேள்வி கேட்பதும், பூமியை ஏன் சேர்க்கவில்லை என்று கேள்வியைப் போன்றது. மற்ற கிரந்கங்கள் பூமியில் ஏற்படுத்தும் விளைவுகளே ஜோதிடம், இதில் அமாவாசை, பௌர்ணமி, திதி, நட்சத்திரம் இவையெல்லாம் செவ்வாயிலா நடக்கிறது, பூமியில் நடைபெறும் விசயங்களே....பூமியை ஜோதிடம் கண்டு கொள்ளவில்லை என்ற வாதம், விதண்டாவாதம். reference point பூமி தான். உங்களைச் சுற்றி எத்தனை பேர் ஓடுகிறார்கள் என்ற கேள்வியின் பதிலின் நீங்கள் இருப்பீரா

வானவெளியை 12 பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் மேஷம், ரிஷபம், மிதுனம் என்று 12 பெயர்களை சூட்டி இருக்கிறார்கள். சூரியன் ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாதம் சஞ்சரிக்கிறது. ஒரு ஆண்டில் 12 ராசிகளைக் கடந்து வருகிறது. சந்திரன் ஒரு ராசியை இரண்டரை நாள்களில் கடந்து விடுகிறது. திடத்தில் இந்த ராசியும், பிறந்த லக்கனமும், கிரகங்களும் நட்சத்திரங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. இவைகள்தான் சோதிடத்திற்கு அடிப்படை என்று சோதிட நூலில் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் நமக்கு மிகப் பெரிய சந்தேகம்!

சூரியன் வினாடிக்கு 230 கி.மீ. வேகத்தில் விண்வெளியில் ஒரு ராசி வட்டத்தைக் கடக்க ஒரு மாதம் ஆகிறது. பூமியோடு செல்லும் நிலவு வினாடிக்கு 30 கி.மீ. வேகத்தில் சென்று ஒரு ராசி வட்டத்தில் இரண்டரை நாள் சஞ்சரித்து விட்டு அடுத்த ராசிக்குக் கடந்து செல்வதாக சோதிட நூல் கூறுவது 230 கி.மீ., வேகத்தில் செல்லும் சூரியனை 30 கி.மீ. வேகத்தில் செல்லும் நிலவு முந்தி விடுமாம்!

வேகமாக ஓடும் முயலை ஆமை முந்தி விட்டது என்று சொல்வதுபோல் இருக்கிறது. இப்படிக் கூறும் சோதிடத்தை நம்ப முடியுமா? ஏற்றுக் கொள்ளக் கூடியதா!

ஆமை முயலை கண்டிப்பாக வெல்லும், எப்படி என்று கணிதம் தெரிந்தவர்களுக்குப் புரியும். உதாரணமாக நீங்கள் இருக்கும் இடத்துக்கு ஒரு சில மீட்டர் துரத்தில் ஆமை இருக்கிறது, முயல் பல கிலோமீட்டர் துரத்தில் இருக்கிறது. இந்நிலையில் உங்களை ஒருமுறை சுற்றி வர ஆமை முதலில் வருமா, முயல் வருமா, ஆமை மெல்ல நடந்தாலும் அதுவே முதலில் வரும் காரணம் அதன் சுற்றுவட்டப் பாதை முயலின் பாதையை விட மிக மிகச் சிறியது. ஏன் நத்தைக் கூட முயலை வெல்லலாம். இந்த சிறிய கணிதம் கூடத் தெரியாத அதிமேதாவிகள் உலகத்தில் இருப்பது தான் விந்தை...

வானவெளி வட்டத்தை 27 பகுதிகளாகப் பிரித்து, அதில் ஒளியோடு புலப்படும் ஒரு நட்சத்திரத்திற்குப் பெயரைச் சூட்டினார்கள் இந்த நட்சத்திரங்கள் ராசி வட்டத்தைக் கடந்து செல்லும் பாதையை கணக்கிலெடுத்து இருபத்தேழு நட்சத்திரங்களின் ஆதிக்கத்தில்தான் மனிதர்கள் பிறக்கிறார்கள் என்று சோதிடம் கூறுகிறது.

ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் பூமி இருக்கும் ராசிக் கூட்டத்தில் கண்ணுக்குத் தெளிவாகப் புலப்படும் நட்சத்திரமே அவர் பிறந்த நட்சத்திரமாகக் கொள்ளப்படுகிறது. அந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை இன்னின்ன குணாதிசயங்களைப் பெற்றிருப்பார்கள். அவர்கள் வாழ்க்கை எப்படிப்பட்டதாக யிருக்கும் என்று சோதிடத்தில் கணித்துக் கூற முடியும் என்று சோதிடர்கள் கூறுகிறார்கள்.

கிருத்திகை நட்சத்திரம்ஒரு குழந்தை ரிஷப ராசியில் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தது என்றால் அந்த நட்சத்திரத்திற்கும் அக்குழந்தைக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை ஆராய்வோம்!

அக்குழந்தை பிறந்த நேரத்தில் கிருத்திகை நட்சத்திரம் பூமியிலிருந்து 410 ஒளியாண்டுத் தொலைவில் இருக்கும். அந்த நட்சத்திரத்தின் ஒளியாற்றல் வினாடிக்கு 3 இலட்சம் கி.மீ. வேகத்தில் பூமிக்கு வந்த சேர 410 ஆண்டுகள் ஆகும்!

அக்குழந்தை 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தால்கூட அந்த நட்சத்திரத்தின் ஒளியாற்றல் பூமிக்கு வந்து சேர வாய்ப்பில்லை! குழந்தை பிறந்தபோது பூமியில் கிருத்திகை நட்சத்திரத்தின் ஒளியாற்றல் இருந்ததென்றால் அக்குழந்தை அணுவாகவோ கருவாகவோ உண்டாகாத காலத்திற்கு 410 ஆண்டுகளுக்கு முற்பட்டது!

அந்த ஒளியாற்றலை அக்குழந்தைக்குரியதாக ஏற்றுக் கொள்ள முடியுமா? அந்த ஒளியாற்றலை வைத்து சோதிடம் கணிக்கப் படுவதாகக் கூறுவது எப்படிச் சரியாகும்! எப்படிப் பொருந்தும்.கிருத்திகை 500 நட்சத்திரங்களைக் கொண்டது

கிருத்திகை நட்சத்திரம் பல நட்சத்திரங்களைக் கொண்ட கூட்டமாகும்! வானியல் மேதை கலிலியோ தொலை நோக்கி மூலமாக 36 நட்சத்திரங்களைக் கண்டார். 500-க்கு மேற்பட்ட நட்சத்திரக் கூட்டம் அது! அதன் வயது 25 இலட்சம் ஆண்டுகள். கிருத்திகை நட்சத்திரக் கூட்டத்திலுள்ள அல்சியோன் நட்சத்திரம் சூரியனைவிட 1000 மடங்கு ஒளியுடையது.

அதன் குறுக்களவு 90 இலட்சம் கிலோ மீட்டர்! கிருத்திகையில் எந்த நட்சத்திரத்திதை வைத்து சோதிடம் கணிக்கப்படுகிறது. கிருத்திகையிலுள்ள மற்ற நட்சத்திரத்தின் ஆற்றல் பயனற்றதா அல்லது பயன்படாததா?

சோதிடர்கள் இதற்குப் பதில் கூற முடியாது. இது அறிவியல் ஆதாரத்தோடு கூடியது!

நண்பரே, பூமியில் ஒளி விழும் நேரத்தை பொருத்தே ஜோதிடம் பலன் சொல்கிறது, ஆகையால் தான் ஜாதகம் எழுதும் போது சூரிய உதயம், அஸ்தமனம் குறிக்கப்படுகிறது, இது நாட்டுக்குக் நாடு மாறுபடும், இவற்றையும் ஜோதிடம் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.....சூரியனின் ஒளி அதில் தோன்றிய காலத்தை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அப்படி அது எடுத்துக் கொண்டால் அது சொல்லும் அமாவாசை, பௌர்ணமி, கிரகணம் எல்லாம் காலம் தப்பிப் பிறக்கும், ஆனால் இவைகள் மிகத் துல்லியமாக பூமியில் ஏற்படும் நேரத்தை தான் கணிக்கிறது, பூமியில் விழும் நேரத்தின் அடிப்படையில்,,,ஆகையால் கார்த்திகை எந்த தொலையில் இருந்தாலும் அதைப் பற்றிய கவலையில்லை. அது போல் ஒரு நட்சத்திரக் கூட்டத்தக்குத் தான் பெயர் வைக்கப்படுகிறது, உதாரணம் அஸ்வினி என்றால் குதிரை வடிவில் உள்ள பல நட்சத்திரக் கூட்டமே, இதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது. Cluster of ஸ்டார்க்கும் இன்றைய அறிவியல் உலகம் ஒரு பெயரே சூட்டுகிறது.

சோதிடர்களுக்கு இவை எதுவுமே தெரியாது. எனவே சோதிடர்கள் கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது மட்டுமல்ல! அறிவுக்கும் பொருந்தாதது!

மேலே சொன்ன பதிலை வைத்து யார் சொல்வது, அறிவுக்கு பொருந்தாதென்று, யார் சொல்வதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று அறிவுள்ளவர்களுக்குப் புரியும்

இது போன்றுதான் மற்ற ராசியிலுள்ள நட்சத்திரங்களின் தூரம் உள்ளது. அந்த நட்சத்திரங்களின் ஒளியாற்றலும் பூமிக்கு வந்து சேர நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகிறது.

எனவே குழந்தை பிறந்த நேரத்திற்கும் நட்சத்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் இருக்க முடியாது! எனவே சோதிடம் சொல்வது அறிவியல் அடிப்படையில் அமைந்தது அல்ல! நம்பத் தகுந்ததும் அல்ல!

நட்சத்திரங்களின் தூரம்(ஒளி வினாடிக்கு 3 லட்சம் கி.மீ. வேகத்தில் ஓராண்டிற்குச் செல்லும் தூரம் ஒளியாண்டு ஆகும்)
ரிஷபராசியில் - கிருத்திகை நட்சத்திரம் 410 ஒளியாண்டுத் தொலைவு ரிஷப ராசியில் - ரோகிணி நட்சத்திரம் 130 ஒளியாண்டுத் தொலைவு மிதுன ராசியில் - புனர்பூச நட்சத்திரம் 36 ஒளியாண்டுத் தொலைவு மிதுன ராசியில் - காஸ்டர் நட்சத்திரம் 46 ஒளியாண்டுத் தொலைவு

கடக ராசியில் - ஈட்டாகரினா 6000 ஒளியாண்டுத் தொலைவு சிம்ம ராசியில் - மகம் நட்சத்திரம் 84 ஒளியாண்டுத் தொலைவு கன்னி ராசியில் - சித்திரை நட்சத்திரம் 211 ஒளியாண்டுத் தொலைவு

கன்னி ராசியில் - சுவாதி நட்சத்திரம் 36 ஒளியாண்டுத் தொலைவு விருச்சிக ராசியில் - கேட்டை நட்சத்திரம் 300 ஒளியாண்டுத் தொலைவு மகர ராசியில் - அசுவினி நட்சத்திரம் 84 ஒளியாண்டுத் தொலைவு

மிதுன ராசியில் - திருவாதிரை நட்சத்திரம் 1140 ஒளியாண்டுத் தொலைவு

சூரியன் ஒரு சிறிய நட்சத்திரம்!
சூரியன் ஒரு சிறிய நட்சத்திரம். பூமியிலிருந்து 14 கோடியே 94 இலட்சம் கி.மீ. தூரத்தில் உள்ளது! சூரிய ஒளி பூமிக்கு வர ஏழரை நிமிடம் ஆகும். சூரியனின் குறுக்களவு 13 இலட்சத்து 92 ஆயிரம் கி.மீ., சூரியனின் மையப்பகுதியில் வெப்பம் 1 கோடியே 50 லட்சம் சென்டி கிரேடு! விளிம்பில் 6000 டிகிரி சென்டிகிரேட்!

சூரியன் அண்டத்தை மணிக்கு 8 இலட்சத்து 64 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது. இதே வேகத்தில் அண்டத்தை ஒரு சுற்று சுற்றி வர 25 கோடி ஆண்டுகள் ஆகிறது!

சூரியனுடன் சேர்ந்து பூமியும் மற்றக் கோள்களும் நாள் 1-க்கு 2 கோடியே 7 இலட்சத்து 36 ஆயிரம் கி.மீ., தூரம் அண்டத்தை சுற்றி வருகின்றன. சூரியன் அண்டத்தின் மையப் பகுதியிலிருந்து 30 ஆயிரம் ஒளியாண்டுத் தொலைவில் ஒரு ஓரத்தில் உள்ளது. சூரியனோடு சேர்ந்து நாமும் அண்டத்தைச் சுற்றுகிறோம்!

நட்சத்திரங்களின் ஆற்றல்!
ரோகிணி நட்சத்திரம் 5 கோடியே 10 இலட்சம் கிலோ மீட்டர் குறுக்களவு கொண்டது. ரோகிணியைச் சுற்றி 200-க்கும் மேற் பட்ட நட்சத்திரக் கூட்டம் உள்ளது!

அந்த நட்சத்திரக் கூட்டத்தின் குறுக்களவு 33 ஒளியாண்டு! வயது 100 கோடி ஆண்டு!ஈட்டாகரினா என்ற நட்சத்திரம் சூரியனைவிட 60 இலட்சம் மடங்கு பிரகாசமுடையது. ஒளி குன்றி வருவதால் செம்பூதமாக மாறி பெரு வெடிப்புக்கு உள்ளாகலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

மகம் நட்சத்திரம் சூரியனைவிட 140 மடங்கு ஒளியுடையது. 14 ஆயிரம் டிகிரி வெப்பமுடையது.சுவாதி நட்சத்திரம் சூரியனைவிட 115 மடங்கு அதிக ஒளியுடையது. 5000 டிகிரி வெப்பமுடையது.கேட்டை நட்சத்திரம் சூரியனைவிட 285 மடங்கு குறுக்களவு கொண்டது. 30 மடங்கு சூரியனைவிட அதிக எடை 7500 மடங்கு அதிக ஒளி!

திருவாதிரை நட்சத்திரம் சூரியனைவிட 450 மடங்கு விட்டம் கொண்டது.

நமது அண்டத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் உண்டு! அவற்றில் மனித வாழ்க்கையோடு தொடர்புபடுத்திய சில நட்சத்திரங்களை மட்டுமே இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த அறிவியல் முடிவுகளை ஆராய்ச்சியாளர்கள் எவ்வளவோ காலம் ஆராய்ந்து வெளியிட்டிருக்கிறார்கள். ஆராய்ச்சியாளர் களின் இந்த முடிவுகளை சோதிடம் ஏற்றுக் கொள்ளவில்லை.

அண்டத்தில் எத்தனை நட்சத்திரம் இருக்கும் போது, பகல், இரவு சூரியனால் மட்டுமே ஏன் ஏற்படுகிறது, சூரியனை விட ஒளி பொருந்திய நட்சத்திரம் பல அண்டத்தில் இருக்கும் போது, பூமி ஏன் எப்போதும் ஒளி பெறுவதில்லை. ஏனென்றால் இவற்றில் இருந்து மிகச் சக்தி வாய்ந்த ஒளி வந்தாலும், பூமியை வந்து அடையும் போது அவை பயனற்றுப் போகிறது. இது ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கூட புரியும். பூமியில் தாக்கத்தை ஏற்படுத்தும் கிரகங்கள், நட்சத்திரங்களைத் தான் ஜோதிடம் ஏற்றுக் கொள்கிறது. கண்ணில் தெரியும் அனைத்தையும் அல்ல.. இவை மட்டுமல்லாமல் உப நட்சத்திரம், உப உப நட்சத்திரம், உப கிரகம் என்று ஜோதிடத்தில் பெரிய பட்டியலே இருக்கிறது

(தொகுப்பு - http://www.arusuvai.com/tamil/node/4641?page=2)

சதாசிவம்
இவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Jan 04, 2013 3:37 pm

சதாசிவம் wrote:
அகல் wrote:
சதாசிவம் wrote:எப்படி கடவுள் இருப்பதை நம்மால் நிரூபிக்க முடியாதோ, அது போல் தான் ஜோதிடம் எதிர்காலத்தின் அனைத்தையும் 100% துல்லியமாக கணிக்க இயலாது
துல்லியமாக கணிக்க முடியாத ஒன்றை நாம் ஏன் அண்ணா நம்பி சீரழிய வேண்டும்..?

நல்ல கேள்வி...

வானிலை அறிக்கை ஒரு சில நேரங்களில் பொய்யாகப் போகிறதே, அதனால் மீனவர்கள் கடலுக்குள் எப்போது வேண்டுமானால் செல்லலாம், இவற்றை சட்டை செய்யத் தேவையில்லை என்று முடிவு செய்வது எப்படி தவறோ, அது போல் தான் ஜோதிடத்தை முற்றிலும் தவிர்க்க நினைப்பது. இக்கணிதம் செயல்படும் விதத்தை புரிந்து கொண்டால், இதன் எல்லைகள் என்ன எதை நம்ப வேண்டும் எதை நம்பக்கூடாது என்று முடிவுக்கு நாம் வரலாம்.

இது இருட்டில் நடப்பவனுக்கு உதவும் விளக்கு போல், ஒரு வழிகாட்டி மட்டுமே, உங்கள் வழியை, பயணத்தை, உங்களை மாற்றாது, ஆனால் நீங்கள் தடுக்கி விழுந்து கால் உடையாமல் செல்ல உதவும்...
இது உங்களது கருத்து நன்றி.. ஆனால் பங்குச் சந்தை, வானிலை அறிக்கை இவற்றை இதோடு ஒபிடுவதில் எனக்கு உடன்பாடில்லை.

வானிலை அறிக்கையில் மழை வரலாம், புயல் கடக்கலாம், மேக மூட்டத்துடன் காணப்படலாம் என்று சொல்வார்களே தவிர கண்டிப்பாக நடக்கும் என்று சொல்வதில்லை.

பக்குச்சந்தையின் தாக்கத்தை என்னால் கண்கூடாக பார்க்க முடியும். பிறகு அதில் எப்போது முதலீடு செய்யவேண்டும் என்பது அவரவர் அறிவையும் திறமையயும் பொறுத்தது அதற்கு ஒரு லாஜிக் இருக்கிறது.. இதில் என்னால் கண்கூடாக எதையும் பார்க்க முடியவில்லை.. லாஜிக் இருபதாகவும் எனக்கு தெரியவில்லை... வெங்காயம் படத்தில் கடைசி காட்சியைப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒவ்வொருவருக்கு ஒரு ஜாதகம் இருக்குமானால், ஈழத்தில் லட்சத்திற்கும் மேலான உறவுகளை சில நாட்களிலேயே கொல்லப்பட்டார்களே அவர்களுக்கெல்லாம் ஒரே நாள் தான் பிறந்த நாளா..? ஒரே ஜாதகமா ..?

பல ஆயிரம் விடயங்களை அறிவியலோடு சேர்த்து நமது முன்னோர்கள் நமக்குச் சொல்லியுள்ளனர். அதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. ஏன்.. இன்றும் அது போன்ற விடயங்கள் எவ்வாறு சொல்லப்பட்டது என்பது பெரும் வியப்பிற்குரியதாக உள்ளது. ஆனால் அவர்கள் சொல்லிய அனைத்துமே சரியென்றும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தோஷம் கழிய புண்ணியங்கள் பெற, பூஜை செய்தல் கோவில்களைச் சுற்றுதல், வழிபடுதல், என்று ஜாதகர்கள் சொல்வது அடிப்படையற்றது. அதை பின்பற்றுவதிலும் எனக்கு முற்றிலும் உடன்பாடில்லை.

இது எனது சொந்த கருத்து மட்டுமே.. நன்றி..

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jan 04, 2013 4:00 pm

அகல் wrote:
சதாசிவம் wrote:
அகல் wrote:
சதாசிவம் wrote:எப்படி கடவுள் இருப்பதை நம்மால் நிரூபிக்க முடியாதோ, அது போல் தான் ஜோதிடம் எதிர்காலத்தின் அனைத்தையும் 100% துல்லியமாக கணிக்க இயலாது
துல்லியமாக கணிக்க முடியாத ஒன்றை நாம் ஏன் அண்ணா நம்பி சீரழிய வேண்டும்..?

நல்ல கேள்வி...

வானிலை அறிக்கை ஒரு சில நேரங்களில் பொய்யாகப் போகிறதே, அதனால் மீனவர்கள் கடலுக்குள் எப்போது வேண்டுமானால் செல்லலாம், இவற்றை சட்டை செய்யத் தேவையில்லை என்று முடிவு செய்வது எப்படி தவறோ, அது போல் தான் ஜோதிடத்தை முற்றிலும் தவிர்க்க நினைப்பது. இக்கணிதம் செயல்படும் விதத்தை புரிந்து கொண்டால், இதன் எல்லைகள் என்ன எதை நம்ப வேண்டும் எதை நம்பக்கூடாது என்று முடிவுக்கு நாம் வரலாம்.

இது இருட்டில் நடப்பவனுக்கு உதவும் விளக்கு போல், ஒரு வழிகாட்டி மட்டுமே, உங்கள் வழியை, பயணத்தை, உங்களை மாற்றாது, ஆனால் நீங்கள் தடுக்கி விழுந்து கால் உடையாமல் செல்ல உதவும்...
இது உங்களது கருத்து நன்றி.. ஆனால் பங்குச் சந்தை, வானிலை அறிக்கை இவற்றை இதோடு ஒபிடுவதில் எனக்கு உடன்பாடில்லை.

வானிலை அறிக்கையில் மழை வரலாம், புயல் கடக்கலாம், மேக மூட்டத்துடன் காணப்படலாம் என்று சொல்வார்களே தவிர கண்டிப்பாக நடக்கும் என்று சொல்வதில்லை.

பக்குச்சந்தையின் தாக்கத்தை என்னால் கண்கூடாக பார்க்க முடியும். பிறகு அதில் எப்போது முதலீடு செய்யவேண்டும் என்பது அவனவன் அறிவையும் திறமையயும் பொறுத்தது அதற்கு ஒரு லாஜிக் இருக்கிறது.. இதில் என்னால் கண்கூடாக எதையும் பார்க்க முடியவில்லை.. லாஜிக் இருபதாகவும் எனக்கு தெரியவில்லை... வெங்காயம் படத்தில் கடைசி காட்சியைப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒவ்வொருவருக்கு ஒரு ஜாதகம் இருக்குமானால், ஈழத்தில் லட்சத்திற்கும் மேலான உறவுகளை சில நாட்களிலேயே கொல்லப்பட்டார்களே அவர்களுக்கெல்லாம் ஒரே நாள் தான் பிறந்த நாளா..? ஒரே ஜாதகமா ..?

பல ஆயிரம் விடயங்களை அறிவியலோடு சேர்த்து நமது முன்னோர்கள் நமக்குச் சொல்லியுள்ளனர். அதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. ஏன்.. இன்றும் அது போன்ற விடயங்கள் எவ்வாறு சொல்லப்பட்டது என்பது பெரும் வியப்பிற்குரியதாக உள்ளது. ஆனால் அவர்கள் சொல்லிய அனைத்துமே சரியென்றும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தோஷம் கழிய புண்ணியங்கள் பெற, பூஜை செய்தல் கோவில்களைச் சுற்றுதல், வழிபடுதல், என்று ஜாதகர்கள் சொல்வது அடிப்படையற்றது. அதை பின்பற்றுவதிலும் எனக்கு முற்றிலும் உடன்பாடில்லை.

இது எனது சொந்த கருத்து மட்டுமே.. நன்றி..

ஜோதிடத்தில் லாஜிக் இல்லை என்பது உங்கள் கருத்து, இன்றைய ஜோதிடர்களுக்கு இது பொருந்தும், ஆனால் ஜோதிடத்துக்கு ?

பல பேர் இறக்கும் சூழ்நிலைகளும் ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது, இச்சூழலில் தனிப்பட்ட ஜாதகப் பலன்கள் மாறுபடும் என்றும் ஜோதிடம் கூறுகிறது. பங்குச் சந்தையில் எப்படி ஒருவரின் அறிவும் அனுபவமும் கைகொடுக்கிறதோ, அதைப் போல் தான் ஜோதிடமும்,,நீங்கள் முதலீடு செய்வதில் லாபம் வந்தால் நீங்கள் அறிவாளி, இல்லையென்றால் ஏமாளி, ஜோதிடம் சொல்வது நடந்தால் அது உண்மை நடக்கவில்லை என்றால் பொய் என்ற எண்ணம் நிலவுகிறது....பங்குச் சந்தையில் லாஜிக் இருக்கும் போது அதில் கணிக்கப்படும் அனைத்தும் உண்மையாக நடப்பதில்லையே, உடனே கணித்தவர்கள் பித்தலாட்டக்காரர்கள், அறிவில்லாதவர்கள் என்று கூறலாமா ?

பரிகாரங்கள், புண்ணியத் தலத் தரிசனங்கள் உங்கள் தலை எழுத்தை மாற்றாது,,உங்கள் மனதையும், உடலையும் மாற்றும்....ஒரு மரத்தில் விளைந்த மாம்பழங்களை வெவ்வேறு நாடுகளில் பயிரிட்டால் அதில் உள்ள சுவை அனைத்தும் ஒரே போல் அமைவதில்லை, மண்ணில் தன்மைக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப அவற்றின் சுவை லேசாக மாறுபடுகிறது. இது போல் தான் பூமியில் உள்ள அனைத்து இடங்களுக்கும் ஒரே சுழ்நிலை, ஒரே அதிர்வலைகள் இருப்பதில்லை...இடத்துக்குக்கிடம் மாறுபடும்....இது போன்ற மாறுபட்ட இடங்களிலே பரிகாரத் தலங்கள் அமைந்துள்ளது. இவை உங்கள் மனதையும், உடலையும் மாற்றும், இன்றைக்கு அனைத்தும் வர்த்தகமாக மாறிவிட்டது, ஜோதிடமும்.....ஆகையால் உண்மையில் சொல்லப்படாத பல விஷயங்கள் இன்று பரிகாரங்களாக உலவுகிறது, இதனால் உங்களைப் போன்றோர் இதில் உடன்படுவதில்லை...

சதாசிவம்
இவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Jan 04, 2013 4:09 pm

நன்றிகள் அண்ணே புன்னகை .. // இன்றைக்கு அனைத்தும் வர்த்தகமாக மாறிவிட்டது, ஆகையால் உண்மையில் சொல்லப்படாத பல விஷயங்கள் இன்று பரிகாரங்களாக உலவுகிறது// இது முற்றிலும் உண்மை என்று அறியும் பட்சத்தில் நம்பலாம் . ஆனால் பல பொய்கள் கலந்துள்ளது அல்லது கலந்து விட்டார்கள் என்பதை நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள். பிறகு எதன் அடிப்படையில் நான் அதை நம்ப வேண்டும். நம்ப முடியும் .! நீங்களே சொல்லுங்கள் ..

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jan 04, 2013 5:11 pm

பார்த்திபன் wrote:பால் வீதியில கச்சாமுச்சான்னு கிரகங்கள் இருக்கு (பால் வீதிகளே அனேகம் இருக்கிறதாவும் சொல்றாய்ங்க.) இதுல இந்த விஸ்வமே ஒரு பக்கம் சுருங்கிக்கிட்டும் - இன்னொரு பக்கம் விரிவடைஞ்சுக்கிட்டு இருக்காம் வீல் சேர்ல இருந்தே ஒருத்தரு கண்டுபிடிச்சு சொன்னாரு.

ஆனால் சோசியத்துல 7+2 கிரகங்கள் தான் செலாவணியில இருக்கு. சுருக்கம் விரிவாக்கம் இதுக்கெல்லாம் இடமே இல்லை. இது என்னய்யா தர்கம்? ஜோதிடம் எப்படிய்யா விஞ்ஞானமாகும்?

அய்யா அண்டத்தில் எத்தனையோ இருக்கும் போது, சூரியனாலும், சந்திரனாலும் பிரதிபலிக்கும் ஒளியினால் மட்டுமே பூமிக்கு ஒளி வருகிறது.....சூரியக் குடும்பத்தில் அண்டத்தில் இருக்கும் அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவதில்லையே, ஈசி சேரில் படுத்துக் கொண்டிருப்பவருக்கும் இது புரியுமே, வீல் சேரில் இருப்பவரை இழுப்பவருக்கு ஏன் புரியவில்லை. பால்வெளி மண்டலத்தின் தோற்றம் குறித்து விஞ்ஞானிகளிடையே பல கருத்துக்கள் நிலவுகிறது, சந்திரனின் தோற்றம் குறித்தும், இது ஒன்றுக்கு ஒன்று முரண் பட்ட கருத்துகளும் உண்டு என்பது அறிவியல் படித்தவருக்குத் தெரியும். இப்படி முரண்பாடுகள் இருப்பதால் வானஅறிவியல் பொய், வீல் சேரில் இருப்பவர் பொய் பேசுகிறார் என்ற முடிவுக்கு என்று முடிவுக்கு வந்து விடலாமா ? அவர் சொல்வதும் அனுமானமே , தீர்மானம் அல்ல

இந்தியாவுல (மட்டும்) நிமிஷத்துக்கு 4 குழந்தை பிறக்குது. 120 நிமிசத்துக்கு (சுமார்) ஒரே லக்னம் தான்,ஒரே ஜாதகம்தான் . ஆக 120 x4 =480 குழந்தை ஒரே லக்னத்துல ஒரே ஜாதகத்துல பிறக்குது. ஆனால் ரஜினி காந்த் ஒருத்தருதேன் சூப்பற ஸ்டார் ஆறாரு. மத்த 479 குழந்தைங்க என்ன ஆச்சு?

120 நிமிடம் ஒரு லக்னம் என்றாலும் அது 120 பிரிவுகளாக புரிந்துள்ளது....அனைவருக்கும் தெரிந்தது ஒரே ஒரு கட்டம் தான், ஆனால் ஜோதிடத்தில் ஒருவர் பிறந்த நேரத்தை வைத்து நவாம்சம், திரிசாம்சம், தசாம்சம் என்று வரிசையாக 64 வகையான கட்டங்கள் உள்ளது. இவை அனைவருக்கும் ஒன்றாக பொருந்தி வராது..இதனால் தான் ஒருவர் சூப்பர் ஸ்டாரா வரார், மற்றொருவர் நல்ல நடனம், நடிப்புத் திறமை, கலர், கம்பீரம் இருந்தாலும் நாற்பது திருடர்களில் ஒருவராக யாருடைய கண்களுக்கும் தெரியலாம் செல்கிறார், சூப்பர் ஸ்டாரும் பிறந்த நாள் முதலாக சூப்பர் ஸ்டாரை வலம் வரவில்லையே, அவரும் ஒரு கால நேரத்துக்கு பின்பே மாறுகிறார்

பெண்கள் வயதுக்கு வந்த நேரத்தை வச்சு ஒரு ஜாதகம் கணிச்சு அதை ருதுஜாதகம்ங்கறாய்ங்க. ஒருபெண் மோசமான ஜாதகத்துல பிறந்து யோகமான நேரத்துல வயசுக்கு வந்துட்டா என்னாகும்? அட ஒரு பொண்ணு யோகமான ஜாதகத்துல பிறந்து மோசமான ஜாதகத்துல வயசுக்கு வந்துட்டா என்னாகும்?

ருதுஜாதகம் பவர்ஃபுல்லா? ஜனன ஜாதகம் பவர்ஃபுல்லா? ஏதோ ஒன்னுதான் பவர்ஃபுல்லுன்னா அடுத்தது டம்மியா? ( ஐ மீன் பொய்யா போகுமா?) அட ரெண்டுமே பவர்ஃபுல்லுன்னா சிண்டை பிச்சுக்கனுமா? இன்னாய்யா லாஜிக் இது?

ஒரு மண்ணும் இல்லை, ஒருவர் UG , PG படிக்கிறார், UG யில் படித்ததையே PG தொடர வேண்டிய அவசியமில்லை..B .Sc சயின்ஸ் படித்து MBA படிக்கலாம். அவரின் கல்வித்திறமை / தகுதி இவை இரண்டின் அடிப்படையிலே முடிவு செய்யப்படுகிறது, அது போல் தான் ஜனன , ருது ஆகிய இரண்டின் அடிப்படையில் ஒரு பெண்ணுக்கு பலன் சொல்லப்படுகிறது.

பெண்கள் மேட்டர்லயே இன்னொரு சப்ஜெக்டு. மாங்கல்ய பலம்/தோஷம். கொய்யால நேத்துவரை அவன் யாரோ இந்த பெண் யாரோ ஆனால் இவளை கல்யாணம் பண்ணிக்கிட்டதுமே இவ ஜாதகத்துல உள்ள மாங்கல்ய தோஷம் அவனுக்கு டிக்கெட் போட்டுருமா? அப்ப அவன் ஜாதகம் என்ன மானாட மயிலாட பார்க்க போயிருமா?

மாங்கல்ய தோஷம் உள்ள பெண் தீர்காயுள் கொண்ட ஆணை கல்யாணம் பண்ணிக்கிட்டா இவ ஜாதகப்படி விதவையாவாளா? அ அவன் ஜாதகப்படி இவளோட மாங்கல்ய தோஷம் ஃபணாலாகி சுமங்கலியா இருப்பாளா?

அவள் ஜாதகமும் வேலை செய்யனும்.இவன் ஜாதகமும் வேலை செய்யனும். அப்பத்தேன் ஜோதிடம் உண்மையாகும் . அதெப்படி ரெண்டு ஜாதகமும் வேலை செய்யும்? ரெண்டும் வேலை செய்தா என்ன பலன்?

அய்யா, சிவப்பு, வெள்ளை இவை இரண்டையும் கலக்கினால் சிவப்பும், வெள்ளையுமா வரும் வருவது ரோஸ் என்ற புதிய நிறம். அதெப்படி வரும் என்று கேட்டால் என்ன பதில் சொல்வது. அது போல் தான் ஜாதகப் பலன்கள். ஜோதிடத்தில் நட்பு, பகை, கிரக யுத்தம் என்ற பல கணக்குகள் உள்ளது. இந்தக் கணக்கை கூட்டிக் கழித்துப் பார்த்தால், எந்தப் பலன் அதிகம் என்று முடிவு செய்ய இயலும்....
ஆரூட லக்னம்:
கேள்வி கேட்கப்பட்ட நேரத்தை வச்சு பதில் சொல்ற மெத்தட் ஒன்னிருக்கு. அதான் ஆரூடம்/ஆரூட லக்னம்னு சொல்லப்படுது.

அதாவது கேள்வி கேட்ட நேரத்துல எந்த லக்னம் உதயமாகியிருக்கோ அதுக்கு எத்தனையாவது பாவத்துல என்னென கிரகம் இருக்குன்னு பார்த்து பார்ட்டி வந்த வேலை என்ன? அது ஆகுமா ஆகாதான்னு சொல்றதுதான் ஆரூடம்.

சராசரியா ஒரு லக்னம் ரெண்டுமணி நேரம் இருக்கும். ஒரு பிசியான ஜோசியர் கிட்டே 2 மணி நேரத்துல கு.பட்சம் 20 பேராவது வருவாய்ங்க. அப்போ 20 பேரும் ஒரே வேலையா வந்தாப்லயா? 20 பேருக்கும் ஒரே முடிவு தானா?

இருபது பேருக்கும் வேறு வேறு பலன்கள் வரும், ஆருடம் என்பது வரும் லக்னத்தை மட்டுமே வைத்து முடிவு செய்யப்படுவதில்லை.....அவர் வரும் போது எந்த திசையில் இருந்து வருகிறார், என்ன நிறம் உடுத்தி இருக்கிறார், எப்படி அமருகிறார், உடன் வருபவர்கள் எத்தனை பேர், அவர் ஆணா, பெண்ணா என்பதை பொருத்தும் கணிக்க வேண்டும்....இவை மாறுபடுவதால் 20 பேர் இல்லை 2000 பேர் வந்தாலும் கணிக்கலாம், மேலும் ஆருடம் பலன் சொல்லும் போதே, இன்ன இன்ன நடப்பதற்கான சாத்தியங்கள் உள்ளது என்று கூறுவார்களே ஒழிய, சத்தியமாக இவை தான் நடைபெறும் என்று கூறுவதில்லை ஆருடத்தை முறையாகப் பயின்றவர்கள். ஏனென்றால் இக்கணித முறை துல்லியப் பலன்களை கூறப் பயன்படுத்தப்படுவதில்லை

சோதிட விதிகள் தொகுக்கப்பட்டு பல நூற்றாண்டுகள் ஆயிருச்சு. உலகம், நாடு ,மக்கள்,மக்கள் வாழ்க்கை ,கல்வி, சமுதாயம், அரசியல், பொருளாதாரம் எல்லாமே மாறிப்போச்சு. ஆனால் இன்னைக்கும் அதே அரதப்பழசான விதிகளை வச்சுக்கிட்டு ஜல்லியடிக்கிறாய்ங்களே .. இதுல தர்கம் இருக்கா? நியாயம் இருக்கா?

மதப் புத்தகங்கள் எழுதியும் பல ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆகையால் இவையும் காலாவதி ஆகிவிட்டது என்று முடிவு செய்யலாமா ?

சமுதாய மாற்றத்துக்கு தகுந்தும் பலன்கள் மாறுகிறது. துசு சம்மந்தப்பட்ட தொழிலில் இருப்பார் என்று தான் ஜோதிடம் சொல்லும், அவர் நெல் கதிர் அடிக்கும் வேலையிலும் இருக்கலாம், சிமெண்ட் பாக்டரியிலும் வேலை செய்யலாம்.

பாலாரிஷ்ட தோஷம்னு ஒரு விஷ்யம் இருக்கு. குறிப்பிட்ட கிரக நிலையில குழந்தை பிறந்தா அது உயிர் வாழாதுன்னு சொல்றாய்ங்க.ஆனால் அதே கிரக நிலைகளை கொண்ட ஜாதகங்கள் திருமணம், சந்தானம் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பா பலன் கேட்டு இன்னைக்கும் வருதே. அவிக ஏன் சாகலை? அப்ப பாலாரிஷ்ட தோஷம்ங்கறது டுபுக்கா?

எல்லாம் தோஷமும், யோகமும் அனைத்து காலத்துக்குப் பொருந்தி வராது என்று சாத்திரம் முன்பே கூறி இருக்கிறது..

ராமர் ஜாதகம் , அனுமார் ஜாதகம்னு பார்க்கிறோம். சிலர் தகட்டுலயே கீறி வித்துக்கிட்டிருக்காய்ங்க.
(அவற்றை அனலைஸ் பண்ணி பார்த்தா வா.வெ ) அவிக தாய்மார்களுக்கு பிரசவம் பார்த்தது ஆரு? பர்த் சர்ட்டிஃபிகேட் இஷ்யூ பண்ணது ஆரு? அவிக பர்த் டீட்டெயில்ஸை இந்த சோதிடப்புலிகளுக்கு தந்தது யாரு?

கம்ப ராமாயணத்தில் கம்பர் ராமனின் பிறப்பின் குறிப்பை கொடுக்கிறார். இன்றைக்கு நாம் வரலாறு என்று படிக்கும் அனைத்தும் அந்த அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் குறிப்பாலும், அவர்கள் விட்டுச் சென்ற பொருள்களின் குறிப்பாலும் மட்டுமே உணர்கிறோம். அது போல் தான் புராணங்கள் வாயிலாக இந்தத் தகவல்கள் எடுக்கப்படுகிறது...இது தவறு என்றால் நாம் கண்ணில் காணாத ஒவ்வொரு மதத்தில் உள்ள தகவல்கள், நம்பிக்கைகள் அனைத்துமே தவறாய் இருக்கும் வாய்ப்புள்ளது என்ற முடிவுக்கும் வர வேண்டும்.

நட்சத்திர தோஷங்களை பற்றி சொல்லும் போது ஆண் நட்சத்திரங்களுக்கு தோஷமில்லேன்னு சொல்லி வச்சிருக்காய்ங்க. தோஷம் என்ன ப்ரெஸ்ட் கான்சரா பெண்களை மட்டும் எஃபெக்ட் பண்றதுக்கு. இது வடி கட்டின மேல் சாவனிசமில்லையா? இதுல என்னத்தை தர்கம் வாழுது?

ஆண் நட்சத்திரங்களுக்கு தோஷம் இல்லை என்று யார் சொன்னது, அவருக்கும் தோஷம் உண்டு..

அரசியல்ல எல்லா கட்சி காரவுகளும் (சுயேச்சை உட்பட) சோசியம் பார்த்துத்தான் தேர்தல்ல நிக்கிறாய்ங்க. ஆனாலும் ஒரு தொகுதியில ஒரு வேட்பாளர்தான் ஜெயிக்கிறாரு. மத்தவுக தோத்துத்தான் போறாய்ங்க. தோத்தவன் தோக்கறோம்னு தெரிஞ்சே வாரி இறைச்சு தோற்கிறானா? அல்லது வெற்றி உனக்கேன்னு தப்பா சொல்லப்பட்ட பலனை நம்பி நிக்கிறானா?

சினிமா உலகத்துல எல்லா தயாரிப்பாளரும் சோசியம் பார்த்துத்தேன் படம் பண்றாய்ங்க. ஆனால் பலதும் பப்படமாயிருது ஏன்?

பணம் கொழுத்து நிக்கிறான் படம் எடுக்கிறான், இதனை பயன்படுத்துபவர்கள் ஜோதிடர்கள்....மருத்துவத்தில் பிழைக்காது என்று தெரிந்தும் கடைசி வரை சிகிச்சை அளிக்கிறார்களே அதைப் போலே.

குரு பலம் வந்துருச்சு கங்கணம் கூடியிருக்குங்கறாய்ங்க. அல்லது குரு சரியில்லை தம்பதிகளுக்குள்ளே பிரச்சினை வரும்னு சொல்றாய்ங்க அது எப்படி மெட்டீரியலைஸ் ஆகுதுன்னு எந்த சோசியரும் சொல்லமாட்டேங்கறாரு. சோசியம் விஞ்ஞானம்னா காரண காரியத்தை விளக்கலாமே.

பாம்பு கடிச்சா செத்துப்போவாங்க, ஆனால் அவரை பிழைக்க பாம்பின் விஷமே பயன்படுகிறது, அது எப்படி ? ஆணும் பெண்ணும் சிலகாலம் சந்தோசமாக, அதன் பிறகு சண்டை போட்டுக் கொள்கிறார்கள் இது எப்படி, கிரகங்கள் அனைத்து நேரத்திலும் ஒரே இடத்தில் இருப்பதில்லை. இடத்துக்கு தகுந்து பலன்கள் மாறுபடும்..அது போல் குரு பலன் அனைவருக்கும் வந்தால் தான் கல்யாணம் செய்ய வேண்டும் அவசியம் இல்லை, ஒருவரின் லக்னத்தை, குரு இருக்கும் இடத்தை பொறுத்து அவர் கொடுக்கும் பலன்கள் மாறும்.

பரிகாரம்ங்கற பேர்ல சகட்டுமேனிக்கு யாகம் ,தானம் தருமம்லாம் பண்றாய்ங்க. ஆனாலும் பதவி பறிபோகுது. கைதுலருந்து கோர்ட்டுதான் காப்பாத்துது. ஜாதகத்தை வச்சு பலன் - பலனை தவிர்க்க பரிகாரம்.
பரிகாரம் டுபுக்குன்னா பலனும் டுபுக்குத்தானே. பலன் டுபுக்குன்னா ஜாதகம் ஜோதிடம் எல்லாமே டுபுக்குத்தானே?

நடுத்தெருவுக்குப் போகாம கோர்ட்டு காப்பாத்தினதுக்கு பரிகாரம் காரணமாய் இருக்குமோ?

(தொகுப்பு - http://anubavajothidam.blogspot.in/2011/10/blog-post_09.html)

சதாசிவம்
இவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக