புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_vote_lcapசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_voting_barசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_vote_rcap 
44 Posts - 46%
heezulia
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_vote_lcapசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_voting_barசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_vote_rcap 
27 Posts - 28%
mohamed nizamudeen
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_vote_lcapசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_voting_barசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_vote_rcap 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_vote_lcapசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_voting_barசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_vote_rcap 
5 Posts - 5%
T.N.Balasubramanian
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_vote_lcapசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_voting_barசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_vote_rcap 
4 Posts - 4%
Raji@123
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_vote_lcapசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_voting_barசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_vote_rcap 
3 Posts - 3%
prajai
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_vote_lcapசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_voting_barசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_vote_lcapசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_voting_barசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_vote_lcapசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_voting_barசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_vote_rcap 
2 Posts - 2%
Srinivasan23
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_vote_lcapசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_voting_barசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_vote_lcapசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_voting_barசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_vote_rcap 
163 Posts - 41%
ayyasamy ram
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_vote_lcapசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_voting_barசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_vote_rcap 
159 Posts - 40%
mohamed nizamudeen
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_vote_lcapசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_voting_barசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_vote_rcap 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_vote_lcapசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_voting_barசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_vote_rcap 
21 Posts - 5%
Rathinavelu
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_vote_lcapசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_voting_barசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_vote_rcap 
8 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_vote_lcapசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_voting_barசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_vote_lcapசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_voting_barசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட சுட செய்திகள்...அச்சலா

Page 23 of 37 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 30 ... 37  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 10:49 am

First topic message reminder :

3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 78f3e7ac-22fc-41bf-9b54-dd6933912bb0_S_secvpf

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.

இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.

இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.

3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.

-மாலைமலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 17, 2012 8:23 pm

ஓடும் பஸ்சில் மாணவி பலாத்காரம் : நண்பருடன் சேர்த்து வெளியில் வீசியது கும்பல்.

புதுடெல்லி: டெல்லியில் நண்பருடன் பஸ்சில் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. பின்னர் இருவரையும் பஸ்சில் இருந்து வெளியில் தூக்கி வீசியது. இதனால் டெல்லி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டெல்லியில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவிட்டதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. காரில் இளம்பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவங்களும் நடந்துள்ளன. கல்லூரி மாணவிகளிடம் ஈவ் டீசிங் செய்யும் கும்பலின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஓடும் பஸ்சில் மாணவியை ஒரு கும்பல் பலாத்காரம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விவரம்: உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் பாராமெடிக்கல் படித்து வந்த 23 வயது கல்லூரி மாணவி, பயிற்சிக்காக டெல்லிக்கு வந்திருந்தார். அவரது நண்பர் டெல்லியில் இன்ஜினியராக வேலை பார்க்கிறார். இருவரும் நேற்று இரவு முன்ரிகா பகுதியில் இருந்து துவாரகா செல்லும் பஸ்சில் ஏறினர். மகிபால்பூர் அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் திடீரென மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றது. தடுக்க வந்த நண்பரை அடித்து உதைத்தனர்.

மாணவியை பலாத்காரம் செய்த கும்பல், அவரையும் நண்பரையும் பஸ்சில் இருந்து தூக்கி வீசிவிட்டு தப்பியது. பாதிக்கப்பட்ட மாணவி சப்தர்ஜங் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர். மாணவி, நண்பர் பெயர் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. பலாத்காரம் நடந்த போது டிரைவர் ஏன் பஸ்சை நிறுத்தவில்லை, கண்டக்டர் என்ன செய்து கொண்டிருந்தார், பயணிகள் யாரும் இல்லையா என்பது போன்ற விவரங்களை போலீசார் உடனடியாக வெளியிடவில்லை.

தமிழ் முரசு

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 17, 2012 8:25 pm

நிச்சயதார்த்த விழாவில் மாப்பிள்ளை குத்திகொலை : மனமுடைந்த இளம்பெண் தாயுடன் தூக்கிட்டு சாவு.

கம்பம்: நிச்சயதார்த்த விழாவின்போது மாப்பிள்ளையை மணப்பெண்ணின் அண்ணனே குத்திக் கொன்றார். இதனால் மனமுடைந்த புதுப்பெண், அவரது அம்மா இருவரும் நள்ளிரவில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜல்லிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகுசாமி. இவரது மகன் சரவணன் (29), பெரியகுளத்தில் உள்ள ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் கம்பம் நேதாஜி தெருவை சேர்ந்த மகேந்திரன் மகள் மீனா (21) என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். பெண் வீட்டில் நேற்று நிச்சயதார்த்தம் நடந்தது. சடங்குகள் முடிந்ததும் மீனாவின் நெற்றியில் சரவணன் பொட்டு வைத்தார்.

அப்போது அருகில் அமர்ந்திருந்த மீனாவின் அண்ணன் ஜெயபாண்டி (23), திடீரென கத்தியால் சரவணனை சரமாரியாக குத்திவிட்டு ஓடிவிட்டார். படுகாயமடைந்த சரவணன், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில், “மீனாவின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்டார். ஜெயபாண்டி, தனது தங்கையை உறவுக்காரர் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என தாயிடம் கூறினார். அதை அவர் ஏற்க மறுத்து, மகளை சரவணனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார். இது பிடிக்காமல்தான் சரவணனை ஜெயபாண்டி கொலை செய்துள்ளார்’’ என்றனர்.

மாப்பிள்ளை கொலை செய்யப்பட்டதால் மணப்பெண் மீனா, அவரது அம்மா ராணி இருவரும் மனவேதனையுடன் காணப்பட்டனர். பின்னர் இரவு இருவரும் தூங்க சென்றனர். இன்று காலை நீண்ட நேரமாக கதவு திறக்கப்படவில்லை. பக்கத்து வீட்டினர் ஜன்னல் வழியாக பார்த்தபோது தாயும் மகளும் தூக்கில் பிணமாக தொங்கினர். தகவல் கிடைத்து வந்த போலீசார், இருவரின் உடலை இறக்கி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. தலைமறைவாக உள்ள ஜெயபாண்டியை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தமிழ் முரசு

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 17, 2012 8:28 pm

காப்பீடு தொகை வழங்காத எல்ஐசிக்கு அபராதம்: நுகர்வோர் கோர்ட் அதிரடி.

புதுடெல்லி: டெல்லியை சேர்ந்தவர் பிரகாஷ் சத்வானி. இவரது மகன் ராஜேஷ்(21), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ராஜேஷ் மீது எல்ஐசி நிறுவனத்தில் பிரகாஷ் காப்பீடு செய்திருந்தார். கடந்த 2007ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு ராஜேஷ் இறந்தார். இதையடுத்து, காப்பீடு தொகை வழங்க கோரி எல்ஐசிக்கு பிரகாஷ் சத்வானி விண்ணப்பித்தார். ஆனால், ராஜேஷ் ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை மறைத்து அவர் மீது பிரகாஷ் காப்பீடு செய்துள்ளார். அதனால், தொகையை வழங்க முடியாது என்று எல்ஐசி தெரிவித்தது. இதையடுத்து, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் பிரகாஷ் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ‘ராஜேஷ் இதய நோயால் பாதிக்கப்பட்டிருப்து 2007ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதிதான் டாக்டர்கள் கண்டுபிடித்துள் ளனர். அதன்பின் சில நாட்களில் அவர் இறந்துவிட் டார். இதற்கான ஆதாரங் களை பிரகாஷ் சமர்பித்துள்ளார். அதனால், பிரகாஷுக்கு காப்பீடு தொகையாக 5 லட்சம், வழக்கு செலவாக ரூ. 50 ஆயிரம், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ஸி1 லட்சம் என மொத்தம் 6.5 லட்சம் வழங்க வேண்டும்’ என்று தீர்ப்பளித்தது.

தினகரன்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 17, 2012 8:32 pm

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 6 ராணுவ வீரர்கள் பலி.

புதுடெல்லி: காஷ்மீரில் உள்ள சியாசின் பனிப்படலம் பகுதி உலகிலேயே உயரமான போர் முனையாகும். கடல் மட்டத்தில் இருந்து 20 ஆயிரம் அடி உயரம் உள்ள பனிபடர்ந்த அந்த பகுதியில் இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த 30 ஆண்டுகளாக ராணுவத்தை குவித்துள்ளன. கடும் குளிர் நிலவினாலும் இரு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அங்குள்ள ஹனீப் பகுதியில் இந்திய ராணுவத்தின் அசாம் ரெஜிமென்ட் பிரிவை சேர்ந்த வீரர்கள் நேற்று காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை 7 மணிக்கு திடீரென பனிச் சரிவு ஏற்பட்டது. இதில், 7 வீரர்கள் பனியில் புதைந்தனர். அவர்களில், 6 பேர் பலியானார்கள். அவர்களது சடலங்களை ராணுவம் மீட்டுள்ளது. ஒரு வீரரை தேடும் பணி நடந்து வருகிறது.

தினகரன்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 17, 2012 8:40 pm

பேருந்தில் பயணத்தின் போது ............ நினைக்கவே கொடூரமாக இருக்கிறது.இந்தியா தனது நிலையில் இருந்து தரம்கெட்டு போய்க்கொண்டிருக்கிறது.எப்படி இது சாத்தியம் ?கேவலமாக உள்ளது.

அங்கு பனியில் தன் உயிரை கொடுத்து பணி செய்வதால் தான் இங்கு பலர் பலவாறு வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்.

அவர்களுக்கு எனது வீர வணக்கங்கள்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Dec 18, 2012 10:37 am

இலங்கையின் சில இடங்களில் விண்கல் விழுந்துள்ளன. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விண்கற்கள் விழுந்து உலகம் அழியப்போகிறது என்று பரவலாக செய்தி பரப்பபட்டு வந்தது. இது உண்மையாக இருக்குமோ என்ற அச்சம் நேற்று சில இடங்களில் விண்கற்கள் விழுந்ததால் ஏற்பட்டுள்ளது.

அதேபோல் சிகப்பு மழையும் பெய்கிறது. சிகப்பு மழை பெய்யும் இடங்களில் நாய்கள் இறந்துபோகின்றன. இன்று மலையக பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவில் 6பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் அழியப் போகிறது என்ற பீதி அனைத்து நாடுகளையும் உலுக்கி வரும் நிலையில் இலங்கையில் விண்கல் விழுந்து பீதியை பன்மடங்காயிருக்கிறது. வலஸ்முல்ல, கனுமுல்தெனிய பிரதேசத்தில் நேற்று விண்கல் விழுந்திருக்கிறது. விண்கல் விழுந்ததில் பலா மரம் எரிந்துள்ளது. பளபளக்கும் தன்மையுடைய இந்த விண்கல்லினை எடுத்து வைத்திருக்கும் நபர் அரசுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

வந்துரம்பை என்ற இடத்தில் இன்று திங்கள்கிழமை சிகப்பு மழை பெய்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். காலி மத்தேகம வந்துரம்பையில் சுமார் 15 நிமிடங்கள் வரை இந்த சிகப்பு மழை பெய்திருக்கிறது. இதேபோல் பொலநறுவை என்ற இடத்தில் இறந்து கிடந்த நாய்கள், சிகப்பு மழையினால் பலியானதாகவும் கூறப்படுகிறது.

யாழ் இணையம்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Dec 18, 2012 11:21 am

திருமங்கலம்:தன்னையும், தன் பெற்றோரையும் ஏளனமாக பேசிய, மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த, தனியார் கல்லூரி பேராசிரியர் போலீசில் சரணடைந்தார்.
பேராசிரியர், துறை தலைவர்
அண்ணாநகர் மேற்கு, ஆறாவது நிழற்சாலை, செந்தூர் குடியிருப்பின் முதல் தளத்தில் வசித்தவர் சேலம் மேட்டூரை சேர்ந்த
கண்ணன், 41.
இவர் திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையிலுள்ள, தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராகவும், கல்லூரியின், வணிக நிர்வாகவியல் துறை தலைவராகவும் இருந்து வந்தார்.
இவரது மனைவி மோகனாம்பாள், 37; சேலம் கொண்டாம்பட்டியை சேர்ந்தவர். 15 ஆண்டுகளுக்கு முன், திருமணமான கண்ணன் - மோகனாம்பாள் தம்பதியினருக்கு, 13 வயதில், பூஜா என்ற மகள் உள்ளார்.
செல்வ செழிப்பால் ஏளனம்
கண்ணன் குடும்பத்தினரை விட, மோகனாம்பாள் குடும்பம், செல்வ செழிப்புள்ள குடும்பம் என்பதால், திருமணம் ஆனதில் இருந்தே, மோகனாம்பாள், கண்ணனையும் அவர் குடும்பத்தினரையும் ஏளனமாக பேசி, கண்ணனுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தி வந்தார்.
இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக அதிகரித்து வந்த மோகனாம்பாளின் ஏளன பேச்சு, கடந்த, 15 நாட்களாக, கட்டுக்கடங்காமல் போய்விட்டது.
இதனால், மிகுந்த மன உளைச்சலில் இருந்த கண்ணன், நேற்று முன்தினம், மனைவி மோகனாம்பாள், மகள் பூஜாவை அழைத்து கொண்டு, மெரீனா கடற்கரை, ஓட்டல், வணிக நிறுவனங்கள் என்று சுற்றி விட்டு, இரவு வீடு வந்து சேர்ந்தார்.
உரலால் தலையில்...
பிறகு, மனைவியோடு உறங்கி கொண்டிருந்த கண்ணன், அதிகாலை, 2:00 மணிக்கு எழுந்தார். அப்போது ஆழ்ந்த உறக்கத்திலிருந்த, மனைவி மோகனாம்பாளின் தலையில், இஞ்சி இடிக்க பயன்
படும் சிறிய கல் உரலால் தாக்கினார்.
அப்போது விழித்து கொண்ட மோகனாம்பாள், அதை எதிர்த்து போராடினார். தாக்குதல் முற்றிய நிலையில், மிகுந்த கோபமடைந்த கண்ணன், சமையலறையில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால்,
மோகனாம்பாளின் கழுத்தை அறுத்து கொன்றார்.
பிறகு, கண்ணன், தன் வீட்டு
உரிமையாளரை தொடர்பு கொண்டு, போலீசிடம் தகவல் கொடுக்க
சொன்னார்.
பின், திருமங்கலம் காவல்
நிலையத்தில், சரண் அடைந்தார். போலீசார், கண்ணனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்றோர்களின் முட்டாள்தனத்தால் குழந்தை இருவரையும் இழந்து நிற்கிறது .... படிதவர்களிடமே பொறுமை இல்லை .........

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Dec 18, 2012 11:32 am

அமெரிக்காவில் வங்கியில் கொள்ளை
ரோம்னி முகமூடியுடன் வந்த மர்ம நபர் கைவரிசை

வாஷிங்டன் : அதிபர் தேர்தலில் ஒபாமாவுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்த மிட்ரோம்னி போல முகமூடி அணிந்த வந்த மர்ம நபர், வங்கியில் கொள்ளையடித்து விட்டு தப்பினார்.

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் வெல்ஸ் பர்ஸோ வங்கி கிளை உள்ளது. இந்த வங்கிக்கு புளோரிடா மாகாண கொடியை போல சட்டையும், மிட்ரோம்னி போல முகமூடியும் அணிந்து ஒரு மர்ம நபர் வந்தார். அவர் 5 கவுண்டர்களில் இருந்த ஊழியர்களை மிரட்டி பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிவிட்டார். இது குறித்து போலீசார் விசாரிக்ககின்றனர்.

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Dec 18, 2012 11:59 am

மயிலாப்பூரில் முகவரி கேட்பதுபோல் நடித்து இளம்பெண்ணை காரில் கடத்தி நகைகள் பறிப்பு பெரம்பூரில் தள்ளிவிட்ட மர்ம பெண்களுக்கு வலை.......................

சென்னை, :மயிலாப்பூர் நாச்சியார் தெருவை சேர்ந்தவர் நிவேதா (20). இவருக்கும் மேற்கு மாம்பலம் நாகராஜ் (29) என்பவருக்கும் 2 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. நாகராஜ் பந்தல் போடும் தொழில் செய்கிறார். கடந்த சில தினங்களாக நிவேதாவுக்கு உடல்நிலை சரியில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இருப்பினும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் பெற்றோர் வீட்டுக்கு சில தினங்களுக்கு முன் நிவேதா சென்றார். நேற்று முன்தினம் மாலை நிவேதா கச்சேரி சாலையில் உள்ள ஜெயின் கோயில் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது, ஒரு காரில் 3 பெண்கள் வந்தனர். அவர்கள் ஒரு துண்டு பேப்பரை காட்டி இந்த முகவரி எங்கு உள்ளது என்று கேட்டனர். துண்டு சீட்டை வாங்கி பார்த்து கொண்டிருந்தபோது, 3 பெண்களும் சேர்ந்து நிவேதாவை காருக்குள் இழுத்து போட்டு வாயை பொத்தினர். கார் விர்ரென பறந்தது.

ஆள்நடமாட்டம் மிகுந்த இடத்தில் இளம்பெண்ணை மர்ம பெண்கள் காரில் கடத்தியது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மயிலாப்பூர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் நிவேதாவை வலைவீசி தேடினர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையில், நிவேதா அணிந்திருந்த 5 சவரன் தாலி செயின், மோதிரம், நெக்லஸ், ஜிமிக்கி, கொலுசு, மெட்டி, வளையல் ஆகியவற்றை அந்த பெண்கள் பறித்துள்ளனர். அவற்றை தர நிவேதா மறுத்தபோது மர்ம பெண்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் காயம் அடைந்து மயங்கினார்.

பெரம்பூருக்கு கார் வந்ததும், நிவேதாவை கீழே தள்ளிவிட்டு அந்த பெண்கள் காரில் தப்பிவிட்டனர். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்த நிவேதா அங்கிருந்து கணவருக்கு போன் செய்து தெரிவித் தார். அவர் விரைந்து சென்று நிவேதாவை மீட்டு, மயிலாப்பூர் காவல் நிலை யம் அழைத்து வந்தார். அவரிடம் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்......................

இப்போது பெண்களே ,பெண்களை கடத்த ஆரம்பித்து விட்டார்களா .சபாஷ் ........

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 18, 2012 2:07 pm

கூகிளின் வரி ஏய்ப்பு – இதுதாண்டா முதலாளித்துவம்!

‘பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் வந்தால் வேலை வாய்ப்பு பெருகும், அவர்கள் கட்டும் வரி மூலம் அரசுக்கு வருமானம் பெருகும். அதனால் நல வாழ்வுத் திட்டங்கள் பெருகும், அதனால் நாட்டு மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்’ அதாவது ஔவையார் ‘வரப்புயர நீர் உயரும், நீருயர பயிர் உயரும், பயிருயர குடி உயரும், குடி உயர கோன் உயர்வான்’ என்று பாடியது போல பாடுகிறார்கள் முதலாளித்துவ அறிஞர்கள்.

ஆனால், தமது லாப வேட்டைக்காக ஊழியர்களை ஈவு இரக்கம் இல்லாமல் வீட்டுக்கு அனுப்பி வைப்பதன் மூலம் உண்மை முகத்தைக் காட்டும் பன்னாட்டு பெருநிறுவனங்களின் இன்னொரு முகத்திரையையும் விலக்கிக் காட்டியிருக்கிறார் கூகுள் நிறுவனத்தின் தலைவர் எரிக் ஷ்மிட்த்.

‘ஆமா, நாங்க வரி ஏய்ப்பு செஞ்சோம். அதை நினைத்து பெருமைப் படுகிறோம். அதுதான் முதலாளித்துவம்’ என்று போட்டு உடைத்திருக்கிறார்.

2011-ம் ஆண்டு தனது வருமானத்தில் $9.8 பில்லியனை (சுமார் ரூ 54,000 கோடி) பெர்மூடா நாட்டில் பதிவு செய்தது மூலம் $2 பில்லியன் (சுமார் ரூ 11,000 கோடி) வரி ஏய்ப்பு செய்திருக்கிறது கூகுள். இது மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய வரி ஏய்ப்புத் தொகையை விட இரண்டு மடங்காகும்.

வெளிநாட்டுக் கிளை நிறுவனங்களின் வருமானத்தை, வருமான வரி விதிக்காத பெர்முடா நாடு வழியாக பெறுவதன் மூலம் கூகுள் தனது ஒட்டு மொத்த வரி விகிதத்தை பாதியாக குறைத்திருக்கிறது. பெர்முடாவுக்கு செலுத்தப்பட்டத் தொகை 2011-ல் கூகுளின் மொத்த லாபத்தில் 80 சதவீதம் ஆகும்.

இந்தத் தகவல் கூகுளின் நெதர்லாந்து கிளை நிறுவனம் நவம்பர் 21-ம் தேதி பதிவு செய்த அறிக்கையில் வெளியாகியிருக்கிறது.

கூகுள் சென்ற ஆண்டு தனது மொத்த வெளிநாட்டு லாபத்தில் வெறும் 3.2 சதவீதம் மட்டுமே வரியாக செலுத்தியது. அதன் வெளிநாட்டு விற்பனையில் பெரும்பகுதி 26 சதவீதம் முதல் 34 சதவீதம் வரை வருமான வரி செலுத்த வேண்டிய ஐரோப்பிய நாடுகளிலிருந்துதான் வருகிறது.

கூகுள் தனது வருமானத்தில் சுமார் 11 சதவீதத்தை ($4.1 பில்லியன் – ரூ 22,000 கோடி) இங்கிலாந்து நாட்டில் சம்பாதிக்கிறது. ஆனால், சென்ற ஆண்டு அங்கு $9.6 மில்லியன் (சுமார் ரூ 52 கோடி) மட்டுமே வரி செலுத்தியிருக்கிறது. டபுள் ஐரிஷ் மற்றும் டச் சாண்ட்விச் என்ற அமெரிக்கச் சட்டம் அனுமதிக்கும் இரண்டு முறைகளை ஒருங்கிணைத்து கூகுள் இந்த வரி ஏய்ப்பைச் செய்திருக்கிறது.

யுகேவிலும், பிரான்சிலும் வெளியாகும் விளம்பரங்களுக்கான கட்டணத்தை கூகுளின் அயர்லாந்து துணை நிறுவனம் ஒன்று பெற்றுக் கொள்கிறது. அந்த நிறுவனம் பெர்முடாவில் பதிவு செய்யப்பட்ட கூகுளின் இன்னொரு அயர்லாந்து துணை நிறுவனத்துக்கு உரிமத் தொகை செலுத்துகிறது. இரண்டு அயர்லாந்து நாட்டு நிறுவனங்கள் பயன்படுவதால் இரட்டை ஐரிஷ் (டபுள் ஐரிஷ்) முறை என்று இந்த உத்திக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அயர்லாந்தில் வரி பிடிக்கப்படுவதைத் தவிர்க்க, உரிமத் தொகையை நெதர்லாந்தில் (டச்) இருக்கும் துணை நிறுவனம் வழியாக பெர்முடாவுக்கு அனுப்புகிறது. இதனால் டச் சேண்ட்விச் என்ற பெயரும் இந்த முறைக்கு கிடைக்கிறது. நெதர்லாந்து துணை நிறுவனத்தில் ஊழியர்கள் யாரும் கிடையாது.

கூகுளின் நெதர்லாந்து துணை நிறுவனம் பெர்முடா துணை நிறுவனத்துக்கு சென்ற ஆண்டு அனுப்பிய தொகை 2008-ம் ஆண்டை விட 81 சதவீதம் அதிகரித்து $9.8 பில்லியனை எட்டியது.

பிரான்சின் வரி அதிகாரிகள் இந்த ஆண்டு கூகுளின் வருமான வரியை $1.3 பில்லியன் ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளனர். அவர்கள் ஜூன் 2011-ல் கூகுளின் அலுவலகத்தில் ரெய்டு நடத்தி கம்ப்யூட்டர் கோப்புகளை எடுத்துச் சென்றிருந்தனர்.

இத்தாலியில் வரித்துறை காவலர்கள் கூகுளின் மிலான் அலுவலகத்தில் சென்ற மாதம் தேடுதல் வேட்டை நடத்தினர்.

‘நான் ஒரு பாப்பாத்தி’ என்று சட்ட சபையில் அறிவித்த ஜெயலலிதாவைப் போல இப்போது கூகுளின் எரிக் ஷ்மிட்டும் ‘இதுதான் முதலாளித்துவம்’ என்று போட்டு உடைத்திருக்கிறார். ‘சமூக நீதி காத்த வீராங்கனை’ என்று பட்டம் சூட்டி, பார்ப்பனியத்திற்கு பல்லக்குத் தூக்கிய வீரமணியைப் போல கூகுளின் முதலாளித்துவ இலக்கணத்துக்கு பொழிப்புரை எழுதப் போகிறவர்கள் யார்?

நன்றி வினவு

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 23 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 23 of 37 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 30 ... 37  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக