புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: Poll_c10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: Poll_m10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: Poll_c10 
366 Posts - 49%
heezulia
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: Poll_c10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: Poll_m10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: Poll_c10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: Poll_m10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: Poll_c10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: Poll_m10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: Poll_c10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: Poll_m10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: Poll_c10 
25 Posts - 3%
prajai
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: Poll_c10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: Poll_m10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: Poll_c10 
6 Posts - 1%
sugumaran
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: Poll_c10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: Poll_m10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: Poll_c10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: Poll_m10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: Poll_c10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: Poll_m10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: Poll_c10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: Poll_m10ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்:


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 30, 2012 10:20 am

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: TN_121116144622000000

மேஷம்: எண்ணத்தில் ஆன்மிகம் உள்ளத்தில் பணம்!


(வரும் 2.12.2012 ஞாயிறு, காலை 10.36 மணிக்கு, ராகு விருச்சிகத்தில் இருந்து துலாமிற்கும், கேது ரிஷபத்தில் இருந்து மேஷத்திற்கும் பெயர்ச்சியாகின்றனர். இவர்கள் 21.6.2014 வரை இந்த ராசிகளில் செயல்படுவர்.)

உழைப்பில் ஆர்வம் காட்டும் மேஷராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் ராகுவும் ராசியில் கேதுவும் இடம் பெற்றுள்ளனர். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே பாக்யம், பூர்வ புண்ணிய ஸ்தானங்களில் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே புகழ் மற்றும் ஆதாய ஸ்தானங்களில் பதிகிறது. இது அனுகூலக் குறைவாக இருந்தாலும் பார்வை பலம் சில நல்ல மாற்றங்களைத் தரும். ராசியில் கேது உள்ளதால் ஆன்மிக எண்ணம் வளரும். ஆனால், பணத்தட்டுப்பாடு குறித்த கவலை ஏற்படும். வீடு, வாகனத்தில் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். புத்திரர்கள் சகவாச தோஷத்தால், படிப்பில் பின்தங்கும் கிரகநிலை உள்ளது. கவனித்து வழிநடத்துவதால் சிரமம் குறைந்து படிப்பில் முன்னேற்றம் காண்பர்.குடும்பத்தின் முக்கிய செலவுக்காக சொத்தின் பேரில் கடன் பெறுகிற சூழ்நிலை இருக்கும். வெற்றி இலக்கை அடைய ஒரு முறைக்கு இருமுறை முயற்சி, செயல்பாடு தேவைப்படும். உடல்நலம் நன்றாக இருக்கும்.தம்பதியர் ஒற்றுமை சீராக இருக்க விட்டுக்கொடுக்க வேண்டும். சிறு சச்சரவுகளை நண்பர், உறவினர்கள் பெரிதுபடுத்தும் சூழல் உள்ளது. சிலர் குடும்பத்தை பிரிந்து வெளியூரில் தங்க நேரிடலாம்.

தொழிலதிபர்கள்: திட்டமிட்ட உற்பத்தி, இலக்கை அடைய கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். நிர்வாகச்செலவு அதிகரிக்கும். போட்டியாளர்கள் மூலம் வரும் சிரமங்களை புதிய யுக்தியால் சரிசெய்வதால் அதிக ஒப்பந்தம் கிடைக்கும்.

வியாபாரிகள்: அதிக போட்டியை எதிர்கொள்வீர்கள். லாபம் குறைத்து விற்பனை செய்ய வேண்டியிருக்கும். லாபம் சுமார் தான். பணப்பரிவர்த்தனை, சரக்கு பாதுகாப்பில் பாதுகாப்பு வேண்டும். அளவான மூலதனம் இட்டால் போதும். கடும் உழைப்பே விற்பனை யைத் தக்க வைக்கும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறை பணியாளர்கள், சக பணியாளர் செய்கிற குளறுபடியினால் தமது வேலையில் பாதிப்பு அடைவர். இதனால் பணி மாற்றம், பணியிட மாற்றம் ஏற்படலாம். சிரம சூழ்நிலையிலும் கூடுதல் பொறுப்புணர்வு டன் செயல்படுபவர்களில், சிலருக்கு அதிர்ஷ்டவசமாக சலுகை, பதவி உயர்வு கிடைக்கும். வேலை நேரத்தில் மாற்றம் ஏற்படும்.வீடு,வாகனம் வாங்க நிதியுதவி கிடைக்கும்.

பெண்கள்: பணி புரியும் பெண்களுக்கு பணியில் குளறுபடியும், தாமதமும் ஏற்படும். குடும்பப் பெண்கள் வீட்டுச்செலவு தட்டுப்பாட்டை சந்திப்பர். சுயதொழில் புரியும் பெண்கள் தொழில் அபிவிருத்தி கடன் பெற சிரமப்பட வேண்டியிருக்கும். லாபம் சுமார்.

மாணவர்கள்: ஆசிரியரின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றுவதால் மட்டுமே படிப்பு, பயிற்சியில் தேர்ச்சி இலக்கை அடைய முடியும். ஆடம்பரச் செலவுகளுக்காக பெற்றோரிடம் பணம் கேட்டு நிர்ப்பந்தம் செய்யக்கூடாது. நண்பர்களுடன் பேச்சில் மென்மையான அணுகுமுறை பின்பற்றுவது நல்லது.

அரசியல்வாதிகள்: திட்டங்களை நிறைவேற்ற அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைப்பதில் தாமதம் இருக்கும். ஆதரவாளர்கள் அன்பு கொள்வர். பொது விவகாரங்களில் ஒரு சார்பு நிலையை எடுத்தால், எதிரிகள் உருவாகலாம்.

விவசாயிகள்: காலத்துக்கேற்ற பயிர் செய்தால் மட்டுமே எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பினால் ஓரளவு பணவரவு இருக்கும். புதிய நிலம் நம்பகமானவர்களிடம் வாங்குவது நல்லது.

பரிகாரப் பாடல்:
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.

பரிகாரம்: முருகனை வழிபடுவதால் சிரமம் குறைந்து நன்மை வளரும்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 30, 2012 10:21 am

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: TN_121116145106000000

ரிஷபம்: சுபநிகழ்ச்சி நடத்துவீங்க! சொத்து வாங்குவீங்க!

வரவு அறிந்த செலவு செய்யும் ரிஷபராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் ராவுகும், பன்னிரெண்டாம் இடத்தில் கேதுவும் இடம்பெற்று உள்ளனர். ராகுவின் அமர்வு நல்ல பலன்களையும் கேதுவின் அமர்வு சில படிப்பினைகளையும் பெற்றுத்தரும். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே அஷ்டம, வீடு, வாகன ஸ்தானங்களில் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே தனம், தொழில் ஸ்தானங்களில் பதிகிறது. ராகுவின் அமர்வு சிறப்பாக உள்ளதால் செயல்பாடுகளில் உற்சாகம் ஏற்படும். கடந்த காலத்தில் இருந்து வந்த ஆடம்பரசிந்தனை மறையும். குடும்பத்தினருக்கு உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். உடல்நலம் மேம்படும் விதத்தில் செயல்பட்டு வருவீர்கள். வருமானம் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகமுண்டு. தாய்வழி உறவினர்களிடம் இணக்கம் கூடும். பூர்வ சொத்துக்களில் கிடைக் கும் வருமானம் உயரும். புத்திரர் படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னோடியாகத் திகழ்வதைக் கண்டு பெருமை அடைவீர்கள். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பாசத்துடன் நடந்து குடும்பத்திற்கு பெருமை சேர்த்திடுவர். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். தொழில் சார்ந்த வகையில் புதிய சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி தகுந்த வளர்ச்சியும், நல்ல ஆதாயமும் பெறுவீர்கள்.

தொழிலதிபர்கள்: தொழிலதிபர்கள் தங்கள் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவர். உற்பத்தி, தரம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெற்று அமோக லாபம் காண்பர். தொழிலில் குறுக்கிடும் சிரமங்கள் அடியோடு விலகும். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று வளர்ச்சிக்கு வழிவகுப்பர். அபிவிருத்தி பணி சிறப்பாக நிறைவேறும்.

வியாபாரிகள்: வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் ஆதரவைப் பெற்று ஆதாயத்தைப் பெருக்குவர். சகவியாபாரிகளின் மத்தியில் நன்மதிப்பு உண்டாகும். கனிவான அணுகுமுறையைப் பின்பற்றுவதால், விலகிச்சென்ற வாடிக்கையாளர்கள் கூட தற்போது உங்களைத் தேடிவருவர். புதிய கிளை நிறுவும் எண்ணம் நிறைவேறும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியிடத்தில் அனுகூலமான சூழ்நிலை அமையப் பெறுவர். சகபணியாளர்களின் ஒத்துழைப்பால் பணியிலக்கை எளிதில் நிறைவேற்றுவர். பதவி உயர்வும், விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். அவ்வப்போது பணிச்சுமையைச் சந்தித்தாலும் வருமானத்திற்கு குறைவிருக்காது.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் உற்சாகத்துடன் பணியில் ஈடுபடுவர். திறமையுடன் பணி யாற்றிபணியிலக்கை எளிதில் நிறைவேற்றுவர். சிலருக்குப் பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புண்டு. எதிர்பார்த்த சலுகைகள் படிப்படியாகக் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பும், குடும்பச் செலவுக்குத் தேவையான பணவரவும் கிடைக்கப் பெறுவர். சுய தொழில் புரியும் பெண்கள் மூலதனத்தை அதிகப்படுத்தி வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வர்.

மாணவர்கள்: மாணவர்கள் அக்கறையுடன் படித்து கல்வியில் முன்னேற்றம் காண்பர்.
கல்விச் செலவுக்கான பணம் சீராகக் கிடைக்கும். நண்பர்களுடன் பயனுள்ள பொழுதுபோக்கில் ஈடுபட்டு மகிழ்வர். பெற்றோர் ஆசிரியர் மத்தியில் நற்பெயர் காண்பர்.

அரசியல்வாதிகள்: ஆதரவாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்வர். பதவி, பொறுப்பை விரும்புபவர்களுக்கு தலைமையின் ஆதரவால் கவுரவமான பதவி கிடைக்கும்.

விவசாயிகள்: அதிக பணவரவு தரும் மாற்றுப் பயிர்களை விளைவித்து மகசூலைப் பெருக்குவர். விளைபொருள் தேக்கமின்றி விரைவில் விற்பனையாகும். கால்நடை வளர்ப்பிலும் லாபம் அதிகமாகும். புதிதாக நிலம் வாங்கும் யோகமும் உண்டு.

பரிகாரப் பாடல்:
மாலே! நெடியானே! கண்ணனே! விண்ணவர்க்கு
மேலா! வியன்துழாய்க் கண்ணியனே!- மேலால்
விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே! என்றன்
அளவன்றால் யானுடைய அன்பு.

பரிகாரம்: விஷ்ணுவை வழிபடுவதால் வருமானம் உயரும்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 30, 2012 10:22 am

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: TN_121116145739000000

மிதுனம்: குடும்பநிலை சுமார் வியாபாரம் ஜோர் !

மற்றவர் ஆலோசனையை ஏற்று நடக்கும் மிதுனராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் ராகுவும், பதினொன்றாம் இடத்தில் கேதுவும் இடம்பெற்றுள்ளனர். ராகு, கேது பெயர்ச்சியில் கேது நல்ல பலன்களை வழங்குவார். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே சப்தம, புகழ் ஸ்தானத்தில் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே ராசி, பாக்ய ஸ்தானத்தில் பதிகிறது. வருமானத்திற்கான புதிய வாய்ப்பு உருவாகும். வீடு, வாகனத்தில் இருக்கிற வசதியை பயன்படுத்திக் கொள்வது போதுமானது. புத்திரர்களின் பிடிவாத செயல்பாடு கண்டு வருத்தம் அடைவீர்கள். தக்க அறிவுரை கூறி வழிநடத்துவது அவசியம். ஆரோக்கியத்தை கண்ணும் கருத்துமாக பாதுகாத்திடுவீர்கள். கடின அலைச்சலால் அசதி ஏற்படலாம் கவனம். தம்பதியர் ஒற்றுமையுடன் செயல்பட்டாலும், உறவினர்களின் நடவடிக்கையால்கருத்துவேற்றுமை கொள்ளவாய்ப்புண்டு கவனம். தொழில் சார்ந்த வகையில் வளர்ச்சிப் பணிகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். சிலருக்கு தந்தைவழி சொத்தில் பங்கு பெறுகிற அனுகூலம் உண்டு. வீட்டில் சுபநிகழ்ச்சியை திட்டமிட்டபடி நடத்தி முடிப்பீர்கள். விருந்து,கேளிக்கையில் அடிக்கடி கலந்து கொள்ள வாய்ப்புண்டு. நண்பர்களிடம் உதவி பெறுவதும், செய்வதுமான நன்னிலை உண்டு.

தொழிலதிபர்கள்: தொழிலதிபர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வளர்ச்சி காண்பர். லாபமும் திருப்திகரமாக இருக்கும். பணியாளர் ஒத்துழைப்பும் சீராகக் கிடைக்கும். வங்கி நிதியுதவியுடன் அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்வர். தொழில் கூட்டமைப்பில் கவுரவமும் பொறுப்பான பதவியும் கிடைக்க வாய்ப்புண்டு.

வியாபாரிகள்: வியாபாரிகள் புதிய உத்திகளைப் பின்பற்றி வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பெறுவர். விற்பனை அதிகரித்து லாபவிகிதம் உயரும். புதிய கிளை துவங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். சகவியாபாரிகளின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சுய திறமையை வளர்த்து பணிகளை சிறப்புற செயல்படுத்துவர். நிர்வாகத்தினர் மத்தியில் நற்பெயர் உருவாகும். எதிர்பார்த்த சலுகை பயன் படிப்படியாகக் கிடைக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பால் பணிச்சுமை குறையும். சிலருக்கு விரும்பிய பணி, இடமாற்றம் கிடைக்கும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் உற்சாகத்துடன் செயல்பட்டு பணி இலக்கை விரைந்து நிறைவேற்றுவர். நிர்வாகத்தின் ஆதரவால் சம்பள உயர்வு கிடைக்கும். குடும்பபெண்கள் கணவரின் குறிப்பறிந்து செயல்படுவது நன்மை தரும். வீட்டுச்செலவுக்குத் தேவையான பணம் சீராக கிடைக்கும். அவரவர் வசதிக்கேற்ப ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் திருப்திகரமான மூலதனத்தில் உற்பத்தி, விற்பனையை உயர்த்துவர்.

மாணவர்கள்: மாணவர்கள் ஒருமுகத் தன்மையுடன் படித்து சிறந்த தரதேர்ச்சி பெறுவர். கல்விச் செலவுக்கு குறையிருக்காது. சக மாணவர் படிப்பில் சிறக்க இயன்ற அளவில் உதவுவீர்கள். படிப்பை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் கவுரவமான பணியும் கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: சமூகப்பணியில் ஆர்வம் காட்டி மக்கள் செல்வாக்கைப் பெறுவர். தொண்டர்களின் அமோக ஆதரவால் அரசியலில் செல்வாக்கு கூடும். ஆதரவாளர்களின் எதிர்பார்ப்புக்களை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றுவீர்கள்.

விவசாயிகள்: பயிர் வளர்ப்பில் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். அபரிமிதமான அளவில் மகசூல் கிடைக்கும். விளைபொருட்களுக்கு கூடுதல் விலை பெறுவீர்கள். சிலருக்கு புதிதாக நிலம் வாங்கும் வாய்ப்புண்டு.

பரிகாரப் பாடல்:
தனந்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.

பரிகாரம்: அபிராமி அன்னையை வழிபடுவதால் மங்கல நிகழ்வு உண்டாகும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 30, 2012 10:24 am

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: TN_121116150318000000

கடகம்: நண்பர்களிடம் நடியுங்க! நன்றாகப் படியுங்க!
பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றும் கடகராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் ராகுவும் பத்தாம் இடத்தில் கேதுவும் இடம் பெற்றுள்ளனர். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே சத்ரு, பணவரவு ஸ்தானங்களில் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே சுபவிரயம், ஆயுள் ஸ்தானத்தில் பதிகிறது. இரண்டு கிரகங்களுமே எதிர்மறையான பலன்களைத் தர உள்ளனர். இருப்பினும் ராகு-கேதுவின் பார்வை பதிகிற ஸ்தானங்களின் வழியாக சில நல்ல பலன்கள் கிடைக்கும். உங்களின் செயல்களில் தகுந்த திட்டமிடல் மட்டுமே வெற்றியை பெற்றுத்தர உதவும். உங்களுக்கு எதிராக நடந்த சிலர், தங்கள் காரியம் ஆக வேண்டுமென்பதற்காக, கவர்ச்சியாகப் பேசி உங்களின் உழைப்பைத் திருட விரும்புவர். அவர்களிடம் எச்சரிக்கையுடனும், விலகியிருப்பதும் நல்லது. வீடு, வாகனத்தில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். பயணத்தில் மிதவேகம் வேண்டும். புத்திரர்கள் எதிர்பார்ப்பு மனதுடன் உங்களை அணுகுவர். அவர்கள் விரும்பியதை வாங்கித்தருவீர்கள். பணத்தேவையை சரிக்கட்ட கடன் பெறுவீர்கள். உஷ்ணம், அஜீரணம், வயிற்றுவலி போன்ற உடல் உபாதை வரலாம். தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு வரலாம். பணவரவு குறையும் என்பதால், அத்தியாவசிய செலவுகளை மட்டும் செய்யுங்கள்.நண்பர்களின் ஆலோசனை, கருத்துக்களில் உடன்பாடு இல்லை என்றாலும் ஏற்பது போல் நடியுங்கள். மூத்த சகோதர, சகோதரியின் அன்பு கிடைக்கும்.

தொழிலதிபர்கள்: இருப்பதைப் பாதுகாத்துக் கொண்டாலே போதும். புதிய செயல்பாடுகளை தள்ளி வைப்பது நல்லது. உற்பத்தி, நிர்வாகச் செலவு அதிகரிக்கும். ஒப்பந்தங்கள் குறையும். கூட்டுத் தொழில் துவங்குவதில் நிதானம் வேண்டும்.

வியாபாரிகள்: விற்பனை ஓரளவுக்கு இருக்கும். லாபம் சுமாராக இருக்கும். சரக்கு இருப்பு வைக்கும் இடங்களில் பாதுகாப்பு நடைமுறையை
பின்பற்ற வேண்டும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சக பணியாளர்களிடம் கருத்து வேறுபாடு வராத அளவிற்கு சுமூக நட்பு கொள்வது நல்லது. இயந்திர பணியில் உள்ளவர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். புதிய சலுகை கிடைக்க வாய்ப்பு குறைவு. குடும்பத்தின் முக்கிய செலவுகளுக்காக சிறு அளவில் கடன் பெற வேண்டியிருக்கும். சிலருக்கு பணியிடம், வீடு மாற்றம் இருக்கும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்களுக்கு சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு வரலாம். சலுகைகள் கிடைக்க பகீரதப்பிரயத்தனம் செய்ய வேண்டி வரும். குடும்பப் பெண்கள் வீட்டுச்செலவுக்கு திண்டாட நேரிடும். தங்க நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, சுமார் லாபம் காண்பர்.

மாணவர்கள்: பாடங்களை புரிந்துகொள்வதில் தயக்கமும் சிறு குழப்பமும் இருக்கும். கூடுதல் பயிற்சி, மனம் ஒன்றுபட கடவுள் வழிபாடு தியானம் பின்பற்றுவதால் ஞாபகத்திறன் வளர்ந்து நல்ல மதிப்பெண் பெற உதவும். ஆடம்பரச்செலவு செய்வதில் உள்ள ஆர்வத்தைக் குறைப்பது நல்லது. சக மாணவர்களுடன் படிப்பு தவிர பிற விஷயங்களைப் பற்றி விவாதிக்க வேண்டாம். பெற்றோர் உங்களுக்கு தேவையான உதவி வழங்குவர்.

அரசியல்வாதிகள்: கடந்த காலத்தில் பெற்ற நற்பெயர் சரியும். ஆதரவாளர்கள், பணம் எதிர்பார்த்து அணுகுவதால் விரக்தி உண்டாகும். அதிகாரிகளிடம் சூழ்நிலை உணர்ந்து பேசுவதால் எதிர்பார்ப்பது நிறைவேறும். எதிரிகளிடம் விலகுவதால் அனுகூலம் கிடைக்கும்.

விவசாயிகள்: அதிக பணவரவு தருகிற பயிர்வகைகளை விளைவிக்க முயற்சி மேற்கொள்வர். மகசூல் ஓரளவு கிடைக்கும். விவசாயக்கடன் பெறுவதில் குறுக்கீடு அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பில் சுமாரான பணவரவு வரும். சொத்து தொடர்பான முக்கிய ஆவணம் பிறர் பொறுப்பில் கொடுக்க வேண்டாம்.

பரிகாரப் பாடல்:
காணற்கு அரிதான வாயு மைந்தா
கானந்தொரு தான்திரி நீதியுளோய்
வானத்தவர் பூமியுளோர் வாழ்த்திடுமோர்
மோனத்தவ மாருதியைப் போற்றுதுமே.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் நற்பலன் அதிகரிக்கும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 30, 2012 10:25 am

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: TN_121116151020000000

சிம்மம்: வளர்ச்சி தேடி வருது! வாய்ப்பு ஓடி வருது!

எந்தநிலையிலும் மனம் கலங்காத சிம்மராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் ராகுவும், ஒன்பதாம் இடத்தில் கேதுவும் இடம் பெற்றுள்ளனர். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே பூர்வ புண்ணியம், ராசி ஸ்தானங்களில் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே ஆதாயம், சப்தம ஸ்தானங்களில் பதிகிறது. ராகு அளப்பரிய நற்பலன்களை வழங்குவார். இவரது மூன்றாம் இட அமர்வு புதிய திட்டங்களை உருவாக்கி எளிதில் வெற்றி பெற துணைநிற்கும். உடல்நலத்தை பலப்படுத்தும். வீடு, வாகன வகையில் இருந்த மனசஞ்சலம் விலகும். புத்திரர்கள் படிப்பில் சிறந்த தேர்ச்சி பெறுவர். வேலை வாய்ப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு கவுரவமான பணி கிடைக்கும். பூர்வசொத்தில் வருமானம் அதிகரிக்கும். எதிரிகள் விலகுவர். குடும்பத்தேவைகளை நிறைவேற்ற தாராள பணவசதி துணைநிற்கும். கேதுவின் அமர்வு ஆடம்பரச்செலவை ஏற்படுத்தும். புதியவர்களிடம் பழகுவதில் கவனம் தேவை. வழக்கு, விவகாரங்களில் வெற்றி கிடைக்கும்.தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். வெகுநாள் திட்டமிட்ட மங்கல நிகழ்ச்சி உறவினர், நண்பர்களின் ஒத்துழைப்புடன் இனிதாக நிறைவேறும். மூத்த சகோதரர்கள் பணம் கேட்டு வருவார்கள்.

தொழிலதிபர்கள்: கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வீர்கள். உற்பத்தி, தரம் உயரும். அதிக ஒப்பந்தங்கள், தாராள பணவரவு வரும். நவீன தொழில்நுட்ப கருவி வாங்குவீர்கள். புதிய கிளை துவங்க நல்யோகம் உண்டு.

வியாபாரிகள்: போட்டி குறைந்து புதிய வாடிக்கையாளர் கிடைக்கப்பெறுவர். விற்பனை சிறந்து தாராள பணவரவை பெற்றுத்தரும். பாக்கி வசூலாகி கூடுதல் மூலதனமாக பயன்படும். கிளைகளை அதிகரிக்கிற முயற்சி நிறைவேறும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் முழு கவனத்துடன் செயல்பட்டு பணி இலக்கை பூர்த்தி செய்வர். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம், சலுகை எளிதாக கிடைக் கும். சக பணியாளர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு விலகும். தாராள பணவரவு கிடைப்பதால் ஆடம்பரமான செலவு செய்வீர்கள். தொழில்நுட்ப பணியாளர்கள் திறமை வளர்க்க கூடுதல் பயிற்சிகளை மேற்கொள்வர். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்திடம் நற்பெயர் பெறுவர். பதவி உயர்வு, சலுகை கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்களை மதித்து செயல்படுவர். குடும்பத் தேவைகளை நிறைவேற்ற தாராள பணவசதி இருக்கும். புத்திரப்பேறு விரும்புபவர்களுக்கு அனுகூல பலன் உண்டு. ஆடை, ஆபரணச்சேர்க்கை கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் விற்பனை அளவை உயர்த்துவர். உபரி வருமானம் கிடைக்கும்.

மாணவர்கள்: படிப்புக்கு தேவையான பணவசதி சீராக கிடைக்கப்பெறுவர். அக்கறையுடன் படித்து நல்ல தரதேர்ச்சி பெறுவீர்கள். வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை கிடைக்கும். சக மாணவர்கள் உதவுவர். பெற்றோர் பாராட்டுகிற வகையில் நடந்து வெகுநாள் லட்சியங்களை அடைவீர்கள்.

அரசியல்வாதிகள்: தாராள பணவசதி துணை நிற்கும். ஆதரவாளர்களின் மனப்பூர்வமான நம்பிக்கையும், செயல்திறனும் சமூகத்தில் கூடுதல் அந்தஸ்தை உருவாக்கும். எதிரிகள் விலகிப்போகிற நன்னிலை உண்டு. உடல்நலம் பலம்பெறும். புதிய வீடு, வாகனம் வாங்குவீர்கள். அரசியல் பணி சிறக்க புத்திரரின் செயல்பாடு உதவும். வழக்கு, விவகாரத்தில் அனுகூல தீர்வு கிடைக்கும்.

விவசாயிகள்: விவசாய பணி சிறக்க தேவையான மூலப்பொருட்கள் எளிதாக கிடைக்கும். மகசூல் சிறந்து பயிருக்கு நல்ல விலை கிடைக்கும். புதிய நிலம் வாங்க அனுகூலம் உண்டு. கால்நடை வளர்ப்பிலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

பரிகாரப் பாடல்:
பொன்னார்மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னை அல்லால் இனியாரை நினைக்கேனே.

பரிகாரம்: சிவனை வழிபடுவதால் பலன்கள் அதிகமாகும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 30, 2012 10:26 am

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: TN_121116151622000000

கன்னி: ஏழரையும் சரியில்லே! இரட்டையரால் பலனில்லே!

கவர்ச்சியான பேச்சால் மற்றவர்களைக் கவரும் கன்னிராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் ராகுவும், எட்டாம் இடத்தில் கேதுவும் இடம் பெற்றுள்ளனர். ராகுவின் 3, 11ம் பார்வை வீடு, வாகனம், சுப விரய ஸ்தானங்களில் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே தொழில், சத்துரு ஸ்தானத்தில் பதிகிறது. ஏழரைச்சனியின் கடைசிப்பகுதியை அனுபவித்து வரும் நிலையில், இரண்டு கிரகங்களின் பெயர்ச்சியும் அவ்வளவு சாதகமாக இல்லை.பிறரிடம் பேசுவதிலும் அணுகுமுறையிலும் மிகுந்த கவனம் வேண்டும். இல்லாவிட்டால் பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். இளைய சகோதர,சகோதரிகளால் பலன் கிடைக்காது.வீடு, வாகனத்தில் தகுந்த பாதுகாப்பு பின்பற்றுவதால் திருடர் தொல்லையில் இருந்து தப்பலாம். தாயின் தேவைகளை நிறைவேற்றி அன்பு, ஆசி பெறுவீர்கள். பூர்வ சொத்தில் கிடைக்கிற பணவரவின் அளவு குறையும். அலைச்சலால் உடல்நலம் பாதிக்கும். மனநிம்மதி குறையும். பணவிரயம் ஏற்படும்.புத்திரர்கள் படிப்பு, திறமை வளர்ப்பதில் சில தடைகளை எதிர்கொள்வர். எதிரிகளிடம் ஒதுங்கிப்போவது சட்ட பிரச்னையில் இருந்து பாதுகாக்கும். சச்சரவு கூடாது. உடல்நிலை கைகொடுக்கும் வகையில் இல்லை. தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு உருவாகி, சரியாக நாள் பிடிக்கும். உறவினர்கள் ஓரளவே ஒத்துழைப்பர். சிலர் குடும்பத்தை விட்டு வெகுதூரம் விலகிச் சென்ற பணிபுரிகிற சூழல் உருவாகும். சுபச்செலவுகளுக்கு கடன் வாங்க வேண்டியிருக்கும். மூத்த சகோதர, சகோதரிகள் வாழ்வில் நல்லநிலை அடைந்து உங்களுக்கும் உதவுவர்.

தொழிலதிபர்கள்: இருப்பதைப் பாதுகாத்துக் கொண்டால் போதும். லாப விகிதத்தைக் குறைத்து ஒப்பந்தம் செய்வது ஓரளவு வருமானத்துக்கு வழிவகுக்கும். அபிவிருத்தி, நிர்வாகச்செலவுக்கு கடன் வாங்க வேண்டி வரலாம். பணியாளர்களின் ஒத்துழைப்பைப் பெற அதிக பணம் செலவாகும்.

வியாபாரிகள்: நடைமுறை செலவுக்கான பணத்தேவை அதிகரிப்பதால் விற்பனையை உயர்த்த அதிக ஈடுபாடு கொள்வீர்கள். நியாயமான லாபம் வைத்தால் விற்பனையைத் தக்க வைக்கலாம். அபிவிருத்தி பணிகளுக்கு கடன் வாங்க வேண்டிய நிலை வரலாம். லாபம் சுமாராகவே இருக்கும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறை பணியாளர்கள் பணியிடத்தில் உள்ள சூழ்நிலைகளை உணர்ந்து பொறுப்புடன் செயல்படுவது நல்லது. பணிகளை முடிப்பதிலும், சலுகை பெறுவதிலும் தாமதம் ஏற்படும். ஆடம்பரச்செலவை தவிர்ப்பதால் தேவையற்ற கடன் பெறுகிற சூழ்நிலையை மாற்றலாம். பொறுமையாக இருந்தால், நிர்வாகத்திடம் நல்ல பெயர் கிடைக்கும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகரித்து குழப்பமான மனநிலையில் செயல்படுவர். சலுகைகள் கேட்பதில் நிதான நடைமுறை நல்லது. குடும்பப் பெண்கள் செலவில் சிக்கனம் பின்பற்று வதால் கடன் பெறுவதை தவிர்க்கலாம். நகை இரவல் கொடுக்க, வாங்கக் கூடாது. சுயதொழில் புரியும் பெண்கள் பொருளின் தரத்தை சீராக்குவதால் மட்டுமே எதிர்பார்த்த விற்பனை இலக்கை அடைய இயலும். பணவரவு சுமாராக இருக்கும்.

மாணவர்கள்: வெளியிடங்களில் அதிக நேரம் செலவழிக்காமல் முழு கவனத்துடன் படிப்பது நல்லது. செலவில் சிக்கனம் வேண்டும். படிப்பை முடித்தவர்களுக்கு குறைந்த சம்பளத்தில் வேலை கிடைக்கும். சக மாணவர்களிடம் தேவையற்ற விவாதம் கூடாது.

அரசியல்வாதிகள்: அதிகாரிகளிடம் இதமாக நடப்பதால், செயல்பாடுகள் நிறைவேறும். ஆதரவாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வரவுக்கு மீறி செலவாகும். புத்திரர்கள் அரசியல் பணிக்கு உதவுவதில் தயக்கம் காட்டுவர். எதிரிகளால் தொல்லை உண்டு.

விவசாயிகள்: கடுமையாக உழைத்தாலும், அளவான மகசூலும், ஓரளவு பணவரவும் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் கிடைக்கிற பணவரவு முக்கிய செலவுகளுக்கு பயன்படும். சொத்து ஆவணங்களை நம்பகத்தன்மை குறைவானவர்களிடம் கொடுத்து கடன் பெறக்கூடாது.

பரிகாரப் பாடல்:
களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க்கு உதவும்- அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன் தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்.

பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் சிரமங்களும், தடைகளும் தூள் தூளாகும்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 30, 2012 10:27 am

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: TN_121116165009000000

துலாம்: பார்வை ஒன்றே போதும்! பலன்கள் நூறு நடக்கும்!

நேர்மையாக நடக்க விரும்பும் துலாம் ராசி அன்பர்களே!

உங்கள் ராசியில் ராகுவும், ஏழாம் இடத்தில் கேதுவும் உள்ளனர். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே புகழ், ஆதாய ஸ்தானங்களில் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே பாக்யம் - பூர்வ புண்ணிய ஸ்தானங்களில பதிகிறது. ராகு-கேதுவின் அமர்வு சில சிரம பலன்களை தருவதாக இருந்தாலும் பார்வை பலன் சில நல்ல மாற்றங்களை உருவாக்கும். ராசிநாதன் சுக்கிரனுக்கு கட்டுப்பட்ட கிரகமான ராகு புகழ் ஸ்தானத்தை பார்க்கிறார். இதனால் உங்கள் பேச்சு, எழுத்து, செயல்களின் மூலம் புகழும் தாராள பணவரவும் பெறுவீர்கள். சகோதர, சகோதரிகள் அனுசரணையுடன் நடந்துகொள்வர். வீடு மாற வேண்டியிருக்கும். புதிய வாகனம் வாங்கலாம். புத்திரர்கள் பொருட்கள் சில கேட்டு பிடிவாதம் செய்வர். அவர்களைப் பக்குவமாக வழி நடத்துவதால் குடும்ப ஒற்றுமை சீராக இருக்கும். பூர்வ சொத்துக்களை பராமரிக்க நம்பகமானவர்களை பணியமர்த்துவது நல்லது.எதிரிகள் உங்களுக்கு எந்தவிதத்திலாவது இடையூறு செய்ய வேண்டுமென்ற எண்ணத்துடன் நடந்துகொள்வர். உடல்நலம் சுமார். ஏழரைச்சனி வேறு படுத்துகிற நேரம் என்பதால் கவனமாக இருக்கவும். குடும்பத்தின் முக்கிய செலவுக்காக நம்பகமானவர்களிடம் கடன் பெறுவீர்கள். தம்பதியர் சிறு விஷயங்களைக்கூட பெரிதாக்கி சண்டை போடும் நிலையுண்டு. விட்டுக்கொடுத்து செல்லவும். வேலைவாய்ப்பு முயற்சிப்பவர்களுக்கு தகுதிக் கேற்ப பணி கிடைக்கும்.

தொழிலதிபர்கள்: தொழிலில் வளர்ச்சி நிலையை சீராக்க கூடுதல் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டியிருக்கும். இதனால், செலவு அதிகரிக்கும். இருப்பினும், கைவிட்டுப் போன ஒப்பந்தங்களின் திடீர் வரவால் பணப்புழக்கத்தை சீராக்கிக் கொள்ளலாம். தொழிற்சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் வேண்டும்.

வியாபாரிகள்: லாபம் குறையும். சரக்கு இருப்பு இடங்களில் பாதுகாப்பு விதிமுறைகளை அனுசரிப்பதால் அசம்பாவிதம் வராமல் தவிர்க்கலாம். சரக்கு கொள்முதல் செய்ய புது நிறுவனங்களிடம் இருந்து வரும் அழைப்பை ஏற்று தேவைக்கேற்ப கொள்முதல் செய்வீர்கள். சிரமம் இருந்தாலும் தப்பி விடலாம்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறை பணியாளர்கள் பணியில் குளறுபடிகளை எதிர்கொள்வர். பணவரவு சுமார் என்பதால், குடும்பச்செலவுகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். அலுவலகத்தில் கடன் பெறுவதைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு பணியிட மாறுதல் இருக்கும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் கவனமாகப் பணி செய்ய வேண்டும். சலுகைகள் ஓரளவு கிடைக்கும். செலவில் சிக்கனம் தேவை. குடும்பப் பெண்கள் கணவரின் பணவரவுக்கேற்ப செயல்படுவதால் மட்டுமே ஒற்றுமை, மகிழ்ச்சி குறையாமல் இருக்கும். ஆடை, ஆபரணம் கேட்டு பெறுவதில் நிதான அணுகுமுறை நல்லது. சுயதொழில் புரியும் பெண்களுக்கு முக்கிய செலவுகளை சரிசெய்யும் அளவுக்கே பணவரவு இருக்கும்.

மாணவர்கள்: அதிக மதிப்பெண் பெறுகிற மாணவர்களின் உதவியால் நன்கு படித்து தரதேர்ச்சியில் சிறந்த இடம்பெறுவர். படிப்புக்கான செலவில் முக்கியமானவற்றை முதலில் செலுத்துவீர்கள். கட்டண பாக்கிகளை கால அவகாசத்தில் கொடுக்க சலுகை கிடைக்கும். வேலைவாய்ப்பு பெறுவதற்கு வெளிவட்டார உதவி கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: திட்டங்களை நிறைவேற்ற அதிகாரிகளின் ஒத்துழைப்பு பெறுவதில் குறுக்கீடு இருக்கும். ஆதரவாளர்களிடம் உங்களை பற்றிய மதிப்பை வளர்க்க அவர்களுக்கு சேவை புரிவது அவசியம். விவகார பேச்சுகளில் சமரசமுயற்சியில் ஈடுபடுபவர்கள் இருதரப்பு நியாயங்களையும் பரிசீலித்து சொல்லாவிட்டால், அரசியல்வாழ்வு பின்தங்கும். புத்திரர்கள் அரசியல் பணிக்கு ஓரளவே உதவுவர்.

விவசாயிகள்: விளைச்சல் சுமாராக இருக்கும். பழைய பாக்கி கிடைப்பதால் பணநிலை ஓரளவு கைகொடுக்கும். கால்நடை வளர்ப்பு வருமானம் தரும்.

பரிகாரப் பாடல்:
பரமனை மதித்திடாப் பங்க யாசனன்
ஒருதலை கிள்ளியே ஒழிந்த வானவர்
குருதியும் அகந்தையும் கொண்டு தண்டமுன்
புரிதரு வடுகனைப் போற்றி செய்குவாம்.

பரிகாரம்: பைரவரை வழிபடுவதால் நன்மை வளரும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 30, 2012 10:28 am

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: TN_121116164620000000

விருச்சிகம்: பணவரவில் தடையில்லை ஒற்றுமைக்கு குறைவில்லை!

சமயோசிதமாக செயல்புரிந்து முன்னேறும் விருச்சிகராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 12ல் ராகுவும், ஆறில் கேதுவும் உள்ளனர். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே தனம், தொழில் ஸ்தானங்களில் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே ஆயுள், சுக ஸ்தானத்தில் பதிகிறது. ராகுவை விட, கேது அளப்பரிய நல்ல பலன்களை வழங்குவார்.கடந்தகாலங்களில், சில விஷயங்களில் இருந்த குழப்பம் விலகி மனம் தெளிவுபெறும். சூழ்நிலை அறிந்து பேசி நற்பெயரை பெறுவீர்கள். நடைமுறைச்செலவு அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் பாசத்துடன் நடந்துகொள்வர். தாய்வழி சொத்து கவுரவமான வகையில் கிடைக்கும்.வீடு, வாகன வகையில் கூடுதல் பயன் கிடைக்கும். புத்திரர்கள் படிப்பில் தரத்தேர்ச்சி அடைவர். பூர்வசொத்தில் கிடைக்கிற பணவசதி அதிகரிக்கும். எதிரிகளின் தொந்தரவு இருக்காது. உடல்நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் முக்கிய தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.கணவன், மனைவி ஒற்றுமையுடன் செயல்படுவர். உறவினர்களை உபசரித்து நற்பெயர், பாராட்டு பெறுவீர்கள். சுற்றுலா திட்டம் நிறைவேறும். புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு. மூத்த சகோதர, சகோதரிகள் சில எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற அணுகுவர். தொழில் சார்ந்த வகையில் உருவாகிற குளறுபடிகளைச் சரிசெய்து உற்பத்தி, வளர்ச்சியில் தகுந்த முன்னேற்றம் காண்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சிலர் பணியிட மாற்றம் தொடர்பாக குடியிருக்கும் இடத்தை மாற்ற வேண்டி வரும். சுபநிகழ்ச்சி நடத்த தேவையான அனுகூலம் எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். வேலைவாய்ப்பு விரும்புபவர்களுக்கு முயற்சி கைகூடும். குடும்பச் செலவுகளை மனமுவந்து ஏற்பீர்கள். இதனால் குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

தொழிலதிபர்கள்: திறமைமிகு பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறுவீர்கள். உற்பத்தி அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களால் லாபம் அதிகரிக்கும். நிறுவனத்தின் அபிவிருத்தி பணிகளை திறம்பட நிறைவேற்றுவீர்கள்.அதற்கான நிதி தடையின்றி கிடைக்கும். தொழிலதிபர் சங்கங்களில் சிலருக்கு கவுரவமான பதவி கிடைக்கும்.

வியாபாரிகள்: போட்டி குறைந்து விற்பனை அதிகரிககும். கூடுதல் லாபம் கிடைக்கும். வளர்ச்சிப்பணிகளுக்கான கடன் திருப்திகரமான வகையில் கிடைக்கும். திட்டமிட்ட மங்கல நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவீர்கள். புதிய கிளை துவங்க விரும்புபவர்களுக்கு அனுகூல பலன் உண்டு.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணிகளை தாமதமின்றி நிறைவேற்றுவர். நற்பெயரும் சலுகையும் கிடைத்து கவுரவம் பெறுவீர்கள். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சம்பள உயர்வு, ஊக்கத்தொகை கணிசமாக கிடைக்கும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் பெறுவர். குடும்பப் பெண்களுக்கு தாராள பணவசதி இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை பெற நல்யோகம் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையில் நல்ல முன்னேற்ற மும், உபரி வருமானமும் கிடைக்கும்.

மாணவர்கள்: மாணவர்கள் ஞாபகத்திறன் வளரும். படிப்புக்கான பணவசதி தாராள அளவில் கிடைக்கும். சக மாணவர்களுடன் நட்பு வளரும். பெற்றோரிடம் பாசம் கூடும். வேலைவாய்ப்பு பெற முயற்சிப்பவர்களுக்கு கவுரவமான பதவி கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: ஆதரவாளர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற நல்ல சூழ்நிலை உருவாகும். எதிரிகள் ஓடிவிடுவர். வீடு, வாகனம் வாங்க அனுகூலம் உள்ளது. புத்திரர்கள் அரசியல் பணி நன்கு சிறக்க புதிய திட்டங்களும் நிறைவேற்ற தகுந்த உதவியும் புரிவர்.

விவசாயிகள்: தாராள மகசூல், சந்தையில் நல்ல விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் எதிர்பார்த்த பணவரவு உண்டு. புதிய நிலம் வாங்க அனுகூலம் உண்டு.

பரிகாரப் பாடல்:
இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒருகாலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

பரிகாரம்: துர்க்கையை வழிபடுவதால் வீட்டில் சுபநிகழ்ச்சி நடந்தேறும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 30, 2012 10:29 am

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: TN_121116164122000000

தனுசு: ராகு அள்ளித்தருவார் கேது கிள்ளி விடுவார்!!

சாதனைத் திறன் மிக்க தனுசு ராசி அன்பர்களே!

உங்கள்ராசிக்கு பதினொன்றில் ராகுவும் ஐந்தில் கேதுவும் உள்ளனர். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே பாக்ய ஸ்தானம், ராசியில் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே சப்தம, புகழ் ஸ்தானங்களில் பதிகிறது. ராகு மிகச்சிறந்த நற்பலன்களை வழங்குவார். கடந்த காலங்களில் இருந்த நிலை மாறி தாராள பணவரவு இருக்கும். தேவைகள் நிறைவேறும்.பசு, பால் -பாக்யம், தான்ய லாபம் வளமாய் பெறுகிற யோகம் உண்டு. பிறரை மதித்து நடந்து அவர்களின் அன்பை பெறுவீர்கள். சமூகத்திலும் மதிப்பு, மரியாதை கிடைக்கும். கேதுவின் அமர்வினால் புத்திரர்களின் படிப்பில் சிறக்க ஊக்கமும் பயிற்சியும் தருவதால் மட்டுமே தரத்தேர்ச்சி சீராகும். பூர்வ சொத்தைப் பராமரிக்கவும், வீட்டை வாடகைக்கு கொடுக்கவும் நம்பகமானவர்களுக்கு இடம் தருவதால் சிரமம் தவிர்க்கலாம். உடல்நலம் சுமாராக இருக்கும். எதிரிகளே வியக்குமளவு வாழ்க்கைத்தரம் மாறும்.தம்பதியர் குடும்பநலன் சிறக்க தேவையான பணிகளை மேற்கொள்வர். மகிழ்ச்சியும் சுபமங்கல நிகழ் வுகளும் உண்டாகும். நண்பர் கள் தேவையான சமயங்களில் உதவுவர். மூத்த சகோதர, சகோதரிகள் உங்களின் ஒவ்வொரு முயற்சியும் வெற்றிபெற தகுந்த ஆலோசனை சொல்வர். வேலை தேடுபவர்களுக்கு ஓரளவு அனுகூல பலன் உண்டு. குடும்பத்தில் திட்டமிட்ட சுபநிகழ்ச்சியை தாராள பணச்செலவில் நடத்துவீர்கள்.

தொழிலதிபர்கள்: உற்பத்தி அளவும், பொருட்களின் தரமும் உயரும். கூடுதல் ஒப்பந்தம் கிடைத்து தாராள பணவரவு பெறுவீர்கள். புதிய தொழில் கருவிகள் வாங்கலாம். புதிய கிளைகள் துவங்கவும் வாய்ப்புண்டு.

வியாபாரிகள்: நிறுவன நிர்வாகத்தில் தேவையான சீர்திருத்தங்களை செய்வீர்கள். வாடிக்கையாளர்கள் திருப்தி அடையும் வகையில் சேவைத்தரம் உயரும். விற்பனை சிறந்து உபரி வருமானம் கிடைக்கும். புதிய கிளை துவங்குகிற திட்டம் இனிதாக நிறைவேறும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவீர்கள்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறை பணியாளர்கள் ஆரோக்கிய உடல்நலம் அமைந்து பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவர். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் எளிதாக கிடைக்கும். சக பணியாளர்கள் ஒத்துழைப்பர். குடும்பத்தேவைகளைத் தாராள செலவில் மனமுவந்து நிறைவேற்றுவீர்கள். தொழில்நுட்ப பணியாளர்கள் தகுதியை வளர்த்துக் கொள்ள கூடுதல் பயிற்சி மேற்கொள்வர். வீடு, மனை, வாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறும். தேவையான உதவி கிடைக்கும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் திறமையாகப் பணி செய்து வேலைகளை விரைந்து முடிப்பர். பாராட்டு, சலுகை, பதவி உயர்வு கிடைக்கும். பணவரவு நன்றாக இருக்கும். குடும்ப பெண்கள் கணவரின் அன்பு, சீரான பணவசதி கிடைத்து மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். தந்தைவழி உறவினர்களின் பணஉதவி கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் அபிவிருத்தி பணி செய்வர். உற்பத்தி, விற்பனை சிறந்து உபரி பணவரவை பெற்றுத்தரும்.

மாணவர்கள்: மாணவர்கள் லட்சிய மனதுடன் படித்து உயர்ந்த தேர்ச்சி பெறுவர். ஆசிரியரின் பாராட்டு கிடைக்கும். விரும்பிய பரிசுப்பொருள் பெற்றோர் வாங்கித்தருவர். சக மாணவர்களிடம் மதிப்பு உயரும்.

அரசியல்வாதிகள்: எதிர்ப்பு குறையும். அதிகாரிகளின் ஒத்துழைப்பு எதிர்பார்த்தபடி கிடைக்கும். ஆதரவாளர்களின் மனதில் நம்பிக்கை ஏற்படும். அரசியல் பணிக்கு புத்திரர்களின் உதவி அதிகம் இராது.

விவசாயிகள்: விவசாயப்பணி சிறந்து எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். பயிர்களுக்கு சந்தையில் நல்ல விலை பெறுவீர்கள். கால்நடை வளர்ப்பில் அபிவிருத்தியும் கூடுதல் பணவரவும் உண்டு.

பரிகாரப் பாடல்:
அன்றால நிழற்கீழ் அருமறைகள் தானருளி
நன்றாக வானவர் மாமுனிவர் நாள்தோறும்
நின்றார ஏத்தும் நிறைகழலோன் புனைகொன்றைப்
பொன்தாது பாடி நாம் பூவல்லி கொய்யாமோ

பரிகாரம்:: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் தொழில் சிறந்து வருமானம் கூடும்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 30, 2012 10:30 am

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்: TN_121116163744000000

மகரம்: இரண்டும் சரியில்லே! இருந்தாலும் பயமில்லே!

அன்பான உள்ளத்தால் சமூகத்தில் நன்மதிப்பு பெறும் மகரராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு பத்தில் ராகுவும், நான்கில் கேதுவும் உள்ளனர். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே சுபவிரயம், அஷ்டம ஸ்தானங்களில் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே விவகாரம், வாக்கு ஸ்தானத்தில் பதிகிறது. ராகு-கேது பெயர்ச்சியில் இரு கிரகங்களும் அனுகூல பலன் தரும் வகையில் இல்லை. இருப்பினும் ராகு-கேதுவின் பார்வை பதிகிற ஸ்தானங்களின் வழியாகவும், பிற கிரகங்களின் ஆதரவு காரணமாகவும் சில நல்ல பலன்கள் கிடைக்கும். பணவரவைவிட செலவு அதிகரிக்கும். இளைய சகோதர, சகோதரிகள் அன்புடன் நடந்து கொள்வர். சொத்தின் பேரில் கடன் பெறுகிற கிரகநிலை உள்ளது. நம்பகமானவர்களிடம் கொடுத்து பணம்பெறுவதால் வில்லங்கம் வராமல் தவிர்க்கலாம். இருப்பதைப் பாதுகாத்துக் கொண்டாலே போதும். புத்திரர்கள் தமது செயல்களை நல்லவிதமாக அமைத்துக்கொள்வர். படிப்பு, தரதேர்ச்சியில் திட்டமிட்ட இலக்கை எளிதாக அடைவர்.உடல்நலம் சுமாராக இருக்கும். எதிரிகளை விட்டு விலகி விடுங்கள். வெளியூர் பயணங்களை பயன் கருதி மேற்கொள்வதால் செலவைத் தவிர்க்கலாம். தம்பதியருக்கிடையே சிறு சச்சரவுகள் வரலாம். நண்பர்களின் கருத்துக்களில் இருக்கிற நியாயங்களை ஏற்க மறுக்காதீர்கள்.

தொழிலதிபர்கள்: கூடுதல் கண்காணிப்புடன் செயல்படுவதால் உற்பத்தியில் உள்ள சுணக்க நிலை மாறும். புதிய ஒப்பந்தங்களை உருவாக்க கடந்த காலங்களில் நட்பு கொண்ட சிலர் உதவுவர். நிர்வாகச்செலவு அதிகரிக்கும். பணப்பரிவர்த்தனையில் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது நல்லது. அரசு தொடர்பான உதவி சிறிது கால அவகாசத்தில் கிடைக்கும்.

வியாபாரிகள்: விற்பனை இலக்கை அடைய அக்கறையுடன் செயல் படுவர். அளவான லாபம் வைத்து விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். சரக்கு, பண பரிவர்த்தனையில் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். ரொக்கத்திற்கு விற்பதால் தேவையற்ற கடன் வராமல் தவிர்க்கலாம்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறை பணியாளர்கள், பணியில் சில குளறுபடிகளை எதிர் கொள்வர். தயக்கமும், நம்பிக்கை குறைவும் பணி நிறைவேற்றுவ தில் தாமதம் உருவாக்கும். நிர்வாகத்தின் கண்டிப்பைத் தவிர்க்கும் வகையில், பணியில் கவனமாக இருக்க வேண்டும். செலவில் சிக்கனம் நல்லது. எவருக்கும் தகுதிக்கு மீறிய பணப்பொறுப்பு ஏற்கக்கூடாது. சலுகைகள் கேட்பதில் நிதான அணுகுமுறை நல்லது.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் உடல்நலத்தை சரிவர பேணுவதால் மட்டுமே பணியில் ஆர்வம் வளரும். சலுகைகள் அதிகம் எதிர்பார்க்க வேண்டாம். குடும்பப் பெண்கள், வரவுக்கு ஏற்ப செலவுகளை திட்டமிடுவதால் தேவையற்ற கடன்களைத் தவிர்க்கலாம். தாய்வழி உறவினர்கள் தேவையான உதவிபுரிவர். சுயதொழில் புரியும் பெண்கள் கடும் உழைப்பால் மட்டுமே உற்பத்தி, விற்பனையை சீராக்க முடியும். பணவரவு சுமார்.

மாணவர்கள்: கவனமாகப் படிப்பதால் மட்டுமே எதிர்பார்க்கும் தேர்ச்சி கிடைக்கும். சக மாணவர்களுடன் படிப்பு தவிர வெளிவட்டார நிகழ்வுகள் பற்றி பேசுவதால் மனவருத்தம் வரலாம். கவனம். விளையாட்டுத்துறை சார்ந்த மாணவர்கள் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

அரசியல்வாதிகள்: அரசு தொடர்புடைய பணிகள் நிறைவேறுவதில் புதுவித குறுக்கீடுகளை சிலர் உருவாக்குவர். பொறுமையும் சமயோசிதமும் பின்பற்றுவதால் சில நற்பலன் கிடைக்கும். ஆதரவாளர்களின் நம்பிக்கையை பாதுகாத்திட கூடுதல் பணம் செலவு செய்ய வேண்டியதிருக்கும். புத்திரர்களின் உதவி ஓரளவுக்கு உண்டு.

விவசாயிகள்: சுமாரான மகசூல், பயிருக்கு குறைந்த விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் இதே நிலையே. நிலம் தொடர்பான விவகாரங்களில் கனிவுடன் நடந்து கொள்ளவும்.

பரிகாரப் பாடல்:
ஹரிஹர புத்திரனை ஆனந்த ரூபனை
இருமூர்த்தி மைந்தனை ஆறுமுகன் தம்பியை
சபரிகிரீசனை சாந்த ஸ்வரூபனை
தினம் தினம் போற்றி பணிந்திடுவோமே.

பரிகாரம்: சாஸ்தாவை வழிபடுவதால் இடையூறு வராத நல்வாழ்வு ஏற்படும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக