புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  2013-லும் கரன்ட் கிடைப்பது கஷ்டம்தான்! ஷாக்... ஷாக்... ஷாக் Poll_c10  2013-லும் கரன்ட் கிடைப்பது கஷ்டம்தான்! ஷாக்... ஷாக்... ஷாக் Poll_m10  2013-லும் கரன்ட் கிடைப்பது கஷ்டம்தான்! ஷாக்... ஷாக்... ஷாக் Poll_c10 
20 Posts - 65%
heezulia
  2013-லும் கரன்ட் கிடைப்பது கஷ்டம்தான்! ஷாக்... ஷாக்... ஷாக் Poll_c10  2013-லும் கரன்ட் கிடைப்பது கஷ்டம்தான்! ஷாக்... ஷாக்... ஷாக் Poll_m10  2013-லும் கரன்ட் கிடைப்பது கஷ்டம்தான்! ஷாக்... ஷாக்... ஷாக் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  2013-லும் கரன்ட் கிடைப்பது கஷ்டம்தான்! ஷாக்... ஷாக்... ஷாக் Poll_c10  2013-லும் கரன்ட் கிடைப்பது கஷ்டம்தான்! ஷாக்... ஷாக்... ஷாக் Poll_m10  2013-லும் கரன்ட் கிடைப்பது கஷ்டம்தான்! ஷாக்... ஷாக்... ஷாக் Poll_c10 
62 Posts - 63%
heezulia
  2013-லும் கரன்ட் கிடைப்பது கஷ்டம்தான்! ஷாக்... ஷாக்... ஷாக் Poll_c10  2013-லும் கரன்ட் கிடைப்பது கஷ்டம்தான்! ஷாக்... ஷாக்... ஷாக் Poll_m10  2013-லும் கரன்ட் கிடைப்பது கஷ்டம்தான்! ஷாக்... ஷாக்... ஷாக் Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
  2013-லும் கரன்ட் கிடைப்பது கஷ்டம்தான்! ஷாக்... ஷாக்... ஷாக் Poll_c10  2013-லும் கரன்ட் கிடைப்பது கஷ்டம்தான்! ஷாக்... ஷாக்... ஷாக் Poll_m10  2013-லும் கரன்ட் கிடைப்பது கஷ்டம்தான்! ஷாக்... ஷாக்... ஷாக் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
  2013-லும் கரன்ட் கிடைப்பது கஷ்டம்தான்! ஷாக்... ஷாக்... ஷாக் Poll_c10  2013-லும் கரன்ட் கிடைப்பது கஷ்டம்தான்! ஷாக்... ஷாக்... ஷாக் Poll_m10  2013-லும் கரன்ட் கிடைப்பது கஷ்டம்தான்! ஷாக்... ஷாக்... ஷாக் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2013-லும் கரன்ட் கிடைப்பது கஷ்டம்தான்! ஷாக்... ஷாக்... ஷாக்


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 25, 2012 6:39 pm

http://www.thedipaar.com/pictures/resize_20121124175220.jpg


அந்த அரசை வீட்டுக்கு அனுப்ப மின் வெட்டுப் பிரச்னையைத்தான் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய ஆயுதமாக இந்த அரசு கையில் எடுத்தது . 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின் வெட்டே இருக்காது’ என்று உறுதி அளித்தார். முதல்வரானதும் அவர் வெளியிட்ட அறிக்கை​யில், '2012-ம் ஆண்டு ஜூனில் 1,865 மெகா வாட் மின்சாரம் கிடைத்துவிடும். அப்போது மின் வெட்டு சீரடையும்'' என்று ஆறுதல் கூறி​னார். ஆனால், மின்பற்றாக்குறை 2 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரம்... 16 மணி நேரமானதுதான் மிச்சம். சென்னைவாசிகளுக்கு 2 மணி நேரம்தான் மின்வெட்டு என்பதால், கஷ்டம் தெரியவில்லை. மற்ற மாவட்டத்துக்காரர்கள் தலைசுற்றிக் கிடக்கிறார்கள்!

முழுநாளும் மின்வெட்டாக மாறுவதற்குள் அரசு செய்ய வேண்டியது என்ன என விவரிக்கிறார் தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் கே.விஜயன்.

''மின்சாரப் பற்றாக்குறை ஒன்றும் தமிழகத்துக்குப் புதியது அல்ல. மின் வாரியத்தின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, 1982-ம் ஆண்டில் இருந்தே மின் பற்றாக்குறை இருக்கிறது. ஆனால், ஒட்டு​மொத்தத் தமிழகமும் வீதிக்கு வந்து போராடும் அவலநிலை இப்போதுதான் ஏற்பட்டு இருக்கிறது. மின்சாரத்துக்காகப் போராடி, போராடி மக்களும் களைத்து விட்டனர்.

முதல்வர் ஜெயலலிதா, 'என்னாலும் தாங்க முடியவில்லை. அதற்காக, ஆயிரம் முறை அல்ல; லட்சம் முறை வருந்துகிறேன்’ என்று கூறியுள்​ளார். வருந்தினால் மின்சாரம் வரும் என்றால், மக்கள் சந்தோஷப்படுவார்கள். மின்சாரப் பற்றாக்குறை 2013-ல் தீர்ந்து விடும்; அதுவரை பொறுத்துக்​கொள்ளுங்கள் என்பதுதான் முதல்வரின் கடைசி ஆறுதல்.

கடந்த 45 ஆண்டுகளாக தி.மு.க., அ.தி.மு.க. தான் மாறிமாறி ஆட்சி செய்கின்றன. மின் பற் றாக்குறைக்கும் மக்கள் படும் அவதிகளுக்கும் இந்த இரண்டு அரசுகளுமே பொறுப்பு. மாநிலத்தின் மின்தேவை ஆண்டுக்கு 8 முதல் 10 சதவிகிதம் வரை அதிகரித்துக் கொண்டே போகிறது. தேவை அடிப்படையில் இப்போதுள்ள மின் உற்பத்தியோடு 8 ஆயிரம் மெகா வாட் மின்உற்பத்தி அதிகரித்து இருக்க வேண்டும். ஆனால், தமிழக மின் உற்பத்தி அரசுத் தரப்பில் கடந்த 16 ஆண்டுகளில் 578 மெகா வாட் மட்டும்தான் உயர்ந்து இருக்கிறது. இது தான் மக்கள் மீது அரசுக்கு உள்ள அக் கறை.

ஆனால், இதே காலகட்டத்தில் 1996-ம் ஆண்டு 108 லட்சங்களாக இருந்த மின்நுகர்வோர் எண்ணிக்கை, 2,000-ல் 138 லட்சங்களாகவும் 2012-ல் 232 லட்சங்களாகவும் உயர்ந்து இருக்கிறது. இதேபோல், 1,869 பன்னாட்டு நிறுவனங்​களும் 42 சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் உருவாகின. 300 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்த நிறுவனமாக இருந்தால், தடை இல் லாமல் மின்சாரம் வழங்க வேண்டும். புதிய பன்னாட்டுத் தொழிற்சாலைகளுக்கு தமிழக அரசுதான் அனுமதி அளிக்கிறது. அதற்கான மின்சாரத்தைத் தடையின்றித் தருவதாக தமிழக அரசும், அதற்கான ஒப்பந்தத்தில் உறுதிமொழி அளித்து இருக்கிறது. அதேபோல், மக்களுக்குத் தேவை​யான மின்சாரத்தைத் தடையின்றிக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? ஏன் எடுக்க​வில்லை. மக்கள் போராட்டம் நடத்தியவுடன், '2013-ல் மின்சாரம் வந்துவிடும்; எதிர்காலத்துக்கும் 4,887 மெகா வாட் அளவுக்கு மின் திட்டங்கள் கைவசம் உள்ளன’ என்று முதல்வர் கூறியுள்ள சமாதானத்தை என்னவென்று சொல்வது?

2007-ம் ஆண்டில் புதிதாக வடசென்னை மற்றும் மேட்டூர் அனல் மின் நிலையத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. நிதி இல்லாததால் கட்டுமானப் பணி தாமதமானது. மின் தேவையைக் கணக்கில் கொண்டு கட்டுமானப் பணிகளை அவசரப்படுத்தி, 2011-ம் ஆண்டு தொடக்கத்திலேயே மின் உற்பத் தியைத் தொடங்கி இருந்தால், 1,800 மெகா வாட் மின்சாரம் கிடைத்திருக்கும். இப்போது, 500 மெகா வாட், மேட்டூரில் அனல் மின்நிலையத்தில் சோதனை ஓட்டம் நடக்கிறது. வடசென்னையில் 600 மெகா வாட் திட்டத்துக்குத் துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இந்தத் திட்டங்களோடு, திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் திட்டம் 500 மெகா வாட் யூனிட் ஒன்று தயாராகி விட்டது. அதிலும் சோதனை ஓட்டம் நடக்கிறது. இந்த மூன்று திட்டங்களும் 2013-ல் முழுவீச்சில் மின் உற்பத்தியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், கூடங்குளம் திட்டத்தின் மூலம் 925 மெகா வாட் மின்சாரம் கிடைத்தால், பிரச்னையை ஓரளவுக்கு சமாளித்து விடலாம் என்று மின்வாரிய அதிகாரிகள் கணக்குப் போட்டு உள்ளனர்.

ஆனால், நடைமுறையில் அதற்கான வாய்ப்பே இல்லை. இப்போது இயங்கி​வருகிற தமிழக மின் வாரியத்தின் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை மத்திய அரசு வழங்காததால் அதிகமாகத் தேவைப்படும் 35 லட்சம் டன் நிலக்கரி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. புதிதாகத் தொடங்கப்பட்டு உள்ள வடசென்னை, மேட்டூர் அனல் மின் நிலையங்களுக்கு 90 லட்சம் டன் நிலக்கரி தேவை. ஆனால், மத்திய அரசு 37 லட்சம் டன் கொடுப்பதாக வாக்குறுதி அளித்து உள்ளது. மீதி 53 லட்சம் டன் நிலக்கரியை வெளிநாட்டில் இருந்துதான் கூடுதல் விலைக்கு இறக்குமதி செய்ய வேண்டிய நிலை. மின் உற்பத்திக்குத் தயாராக இருந்தாலும் நிலக்கரியைத் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கச் செய்தால்தான் தடையற்ற மின்உற்பத்தி சாத்தியம்.

1970-ல் தொடங்கப்பட்ட 450 மெகா வாட் எண்ணூர் அனல் மின் நிலையம், 600 மெகா வாட் நெய்வேலி அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்தி எல்லாம் ஆயுள் முடிந்து போய் ஓடிக்கொண்டு இருக்கிறது. 600 மெகா வாட் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் வயது 30. அதுவும் உரிய பராமரிப்பு இல்லாமல் இந்த ஆண்டில் நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் இரு முறை தீப்பிடித்துப் பாதிக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அனல் மின் நிலையத்திலும் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. மேலும், காலாவதி ஆகிப்போன இந்த அனல் மின் நிலையங்களில் படிப்படியாக உற்பத்தித் திறன் குறைந்துகொண்டே வருகிறது. இதற்கு மாற்றாக, புதிய அனல் மின்நிலையங்கள் அமைக்க வேண்டிய கட்டாயம். இப்போது, அரசு அறிவித்துள்ள உடன்குடி, உப்பூர், எண்ணூர் உள்ளிட்ட இடங்களில் 8,000 மெகா வாட் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு நிதி ஒதுக்கி, மத்திய அரசின் நிலக்கரி ஒதுக்கீடு பெற்று, செயல்பாட்டுக்கு வர கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிவிடும். எனவே, ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல திட் டங்களைத் தூசி தட்டினால், ஓரளவுக்கு மின் தேவையை சரிசெய்ய முடியும்.

18 சதவிகிதம் லைன் லாஸ் என்று கூறப்படும் மின் இழப்பை 15 சதவிகிதமாகக் குறைத்தாலே, 300 முதல் 400 மெகா வாட் மின்சாரம் கூடுதலாகக் கிடைக்கும். சென்னையில் பேசின் பிரிட்ஜ் அருகில் 493 கோடியில் டீசல் மூலம் 180 மெகா வாட் மின் நிலையம் கடந்த ஓர் ஆண்டாக மின் உற்பத்தி செய்யவில்லை. ஆனால், இந்த மின் நிலையத்தின் அருகில் உள்ள தனியார் மின்நிலையம் டீசல் மூலம் தினமும் 200 மெகா வாட் மின் உற்பத்தி செய்கிறது. இதேபோல மாநிலம் முழுவதும் தனியாரின் ஏழு யூனிட்கள் சிறப்பாகச் செயல்படுகிறது. அவர்கள், மின் வாரியத்துக்கு மின்சாரத்தை விற்கிறார்கள். எனவே, பேசின் பிரிட்ஜ் அரசு டீசல் மின் நிலையத்தில் முழுவீச்சில் உற்பத்தியை உடனே தொடங்க வேண்டும்.

எரிவாயு மூலம் மின்உற்பத்தி செய்ய 396 மெகா வாட் மின் உற்பத்தி எந்திரங்கள், 50 சதவிகிதம் அளவுக்கு மட்டுமே மின்உற்பத்தி செய்கின்றன. தென் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட தனியார் நிறுவனம் ஒரு நாள்கூட முழுமையான 92 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யவில்லை. ஏன் முழுமையான மின் உற்பத்தியைத் தரவில்லை என்று கேட்பாரும் இல்லை. தஞ்சை மாவட்டம் குத்தாலத்தில் 105 மெகா வாட் எரிவாயு மின் நிலையத்தில் ஒரு வருடமாக மின் உற்பத்தி இல்லை. சோலையாறு நீர் மின் திட்டத்தில் ஜெனரேட்டர் பழுது காரணமாக 70 மெகா வாட் மின் உற்பத்தி முடங்கிப்போய்க் கிடக்கிறது.

மாநிலத்தின் மொத்த மின் நுகர்வில் 38 சதவிகிதம் தொழில் நிறுவனங்களுக்குத்தான் தேவைப்படுகிறது. அதாவது, கிட்டத்தட்ட 4,000 மெகா வாட் தேவை. இதில், 3,600 மெகா வாட் மின்சாரத்தை அந்தந்தத் தொழிற்சாலைகளே உற்பத்தி செய்யும் வகையில் அவர்கள் ஜெனரேட்டர்கள் வைத்துள்ளனர். ஜெனரேட்டர் டீசலுக்கு ஆகும் செலவில் மின்சாரக் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 5.50 போக மீதி 12, அந்த மாநில அரசு ஏற்க வேண்​டும். தனியாரிடம் யூனிட்டுக்கு சராசரியாக

12 கொடுக்கும் நிலையில் இது ஒன்றும் கூடுதல் செலவு அல்ல. ஆகவே, பிரச்னையை சமாளிக்க இப்போதைக்கு அனுமதிக்கலாம்.

மேலும், மின்வெட்டு உள்ள காலங்களில் அலங்கார மின்விளக்குகள், ஆடம்பர விளக்கு​களுக்குத் தடை விதிக்க வேண்டும். திருட்டு மின்சாரம் எடுப்பதை முற்றிலும் ஒழிக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள ஐந்து ஆண்டுகளில் 3,000 மெகா வாட் சூரிய ஒளி மின் திட்டம் திட்டத்தைப் படிப்படியாகத்தான் நிறைவேற்ற முடியும். இதற்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். இந்தத் திட்டத்தை முதலில் நட்சத்திர ஹோட்டல்கள், பெரிய வர்த்தக நிறுவனங்களில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கலாம். இப்போதுள்ள மின் உற்பத்தித் திட்டங்கள் மற்றும் தேவை அடிப்படையில் பார்த்தால், இப்போதுள்ள மின்வெட்டு 2017-ல்தான் சீரடைய வாய்ப்பு இருக்கிறது. அதுவரை மேற்கூறிய மாற்று ஏற்பாடுகளைச் செய்தால்தான் ஓரளவுக்கு மின்வெட்டை சரிசெய்ய முடியும்'' என்றார்.

மின்வெட்டு குறித்து மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ''மின்சாரப் பிரச்னை குறித்து முதல்வர் மிகுந்த கவலையில் உள்ளார். மின் தட்டுப்பாட்டைக் குறைக்க அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மின்நிலை குறித்து வாரா​வாரம் ஆய்வு செய்கிறோம். கூடுதல் மின்சாரம் கேட்டாலும் மத்திய அரசு தரவில்லை. மத்தியத் தொகுப்பில் இருந்து தரவேண்டிய மின்சாரத்தையும் 1,000 மெகா வாட் அளவுக்குக் குறைத்துள்ளது. நிலக்கரி ஒதுக்கீட்டிலும் ஓரவஞ்சனை செய்கிறது. வெளிமாநிலங்களில் இருந்து விலைக்கு மின்சாரம் வாங்கினாலும் அதைக் கொண்டுவரும் வழித்தடத்தை மத்திய அரசு அமைத்துத் தரவில்லை. இருப்பினும் தமிழக அரசு செய்யும் முயற்சிகளால், 2013 ஜூனில் மின் வெட்டு சரியாகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது'' என்றார்.

வெளிச்சக் கிரணங்கள் வெகுதூரத்தில் இருக்​கின்றன!

நன்றி தமிழ் source

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 25, 2012 6:40 pm

அப்ப டைரக்டர் மணிரத்னத்திற்கு ரொம்ப வசதியா இருக்கும், நிறைய படம் எடுக்கலாம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 25, 2012 6:42 pm

ராஜா wrote:அப்ப டைரக்டர் மணிரத்னத்திற்கு ரொம்ப வசதியா இருக்கும், நிறைய படம் எடுக்கலாம்

அரசாங்கமே படம் எடுக்க போகுது அண்ணா

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 25, 2012 6:42 pm

பட தலைப்பு மின்சாதனமும் மின்சாரமும்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Nov 25, 2012 6:50 pm

நமக்கு புரியுது... புரியவேன்டியவங்களுக்கு சோகம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 25, 2012 6:51 pm

அசுரன் wrote:நமக்கு புரியுது... புரியவேன்டியவங்களுக்கு சோகம்

புரிஞ்சா சரி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Nov 25, 2012 9:05 pm

தற்போதான தேவைகள் அதிகரித்துவிட்டன. எதற்க்கெடுத்தாலும் மின்சாதனங்களின் தேவைகளை நாடவேண்டிய சூழல் உருவாக்கி உள்ளது.

இத்தருணத்தில் மக்களின் பங்கும் அதே நேரத்தில் நிர்வாக சீர்திருத்தமும், முறையான வழிமுறைகளும் கடைபிடிக்க வேண்டியது மிக முக்கியம்.

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Nov 26, 2012 1:10 am

பூவன் wrote:
அசுரன் wrote:நமக்கு புரியுது... புரியவேன்டியவங்களுக்கு சோகம்

புரிஞ்சா சரி
சரி புரிஞ்சா...சரி..



  2013-லும் கரன்ட் கிடைப்பது கஷ்டம்தான்! ஷாக்... ஷாக்... ஷாக் Paard105xz  2013-லும் கரன்ட் கிடைப்பது கஷ்டம்தான்! ஷாக்... ஷாக்... ஷாக் Paard105xz  2013-லும் கரன்ட் கிடைப்பது கஷ்டம்தான்! ஷாக்... ஷாக்... ஷாக் Paard105xz  2013-லும் கரன்ட் கிடைப்பது கஷ்டம்தான்! ஷாக்... ஷாக்... ஷாக் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக