புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10 
32 Posts - 42%
heezulia
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10 
1 Post - 1%
jothi64
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10 
398 Posts - 49%
heezulia
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_m10கவிதைகள் பத்து -2 தொகுப்பு -  கிரிகாசன் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைகள் பத்து -2 தொகுப்பு - கிரிகாசன்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Nov 24, 2012 2:33 pm

First topic message reminder :

1 . விடியாத வாழ்வு வேண்டாம்

தேயாத வெண்ணிலா தீண்டாத தென்றலும்
துவளாத கொடிதானும் வெயிலில்
காயாத ஈரமும் கலையாதமேகமும்
கருதாத எண்ணமும் உண்டோ
பாயாத நீர்நதி பரவாத வான்வெளி
பருகாத தாகமும் நன்றோ நிலை
சாயாத நேர்மையும் சரியாத வீரமும்
சரித்திரம் தமிழ்கொண்ட தன்றோ

வேயாத கூரையும் விடியாத காலையும்
வெயிலெண்ணி ஏங்காத பயிரும்
மேயாத மான்களும் மிதவாத ஓடமும்
மிகையான அழகற்ற பூவும்
தாயாகின் வன்மையும் தவளாத குழந்தையும்
தகிக்காத உச்சியின் வெயிலும்
நோயாக போனாதாய் நிற்குமோர் நெஞ்சமும்
நிலையீது கொள்ளுதல் தகுமோ

வெல்லாத வீரமும் விளைந்திடா ஆற்றலும்
வெறிகொண்ட பகைகொல்ல வெகுண்டு
கொள்ளாத நெஞ்சமும் குறிவைத்துத் தாக்கிட
கொதிக்காத உணர்வோடு தூங்கி
துள்ளாத ஆறெனத் துடிக்காத பூவிழி
தொடங்காத ஆரம்பம் போலே
நில்லாந டந்திடு நெஞ்சை உயர்த்திடு
நீகாணும் வெற்றியை எண்ணு

செல்லாத கால்களும் தெரியாத பாதையும்
திக்கற்ற விதமான போக்கும்
கல்லாக நெஞ்சமும் கடமைக்கு ஆற்றலும்
கருவற்ற கவிதைபோல் நேர்மை
அல்லாத பார்வையும் அளவற்ற பொறுமையும்
அடிமைக்கு நிகரான வாழ்வும்
இல்லாது போகவே இறைமைக்கு வேறென
எண்ணுதல் நிறுத்தி நீசெல்வாய்

கல்லாத மூடனும் கனிவற்ற காதலும்
கடலோடு சேராத நதியும்
சொல்லாத இரகசியம் தூண்டா விளக்கொளி
தொட்டேசு கம்காணாத் தேகம்
புல்லென்ற கீழ்மையும் புனல்வீழும் தாழ்மையும்
பொழுதாகின் இருள்கொண்ட வாழ்வும்
இல்லாது வீரமும் வல்லாண்மை கொண்டுநீ
இயங்கிடு சுதந்திரம் தேவை

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Jan 09, 2013 8:08 pm

Aathira wrote:சொல்ல வார்த்தைகள் எனக்குள் இல்லை கிரிகாசன் சார். இவை கவிதைகளா.... மடைதிறந்த வெள்ளமாய் கவி யோட்டம்.... தமிழ்ச்சுவையைத் தருக தொடர்ந்து...

அனைத்து அந்த சக்தியின் ஊற்று. பிரபஞ்சத்தில் ஒளிவெள்ளத்தின் மூலசக்தி தரும் புத்துணர்வு!
நன்றிகள்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Jan 09, 2013 8:15 pm

தேனில் ஊறிய பலாச்சுளையாய் இனிக்கிறது உங்களின் கவிதை வரிகள். மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றும் கவிதை வரிகள். சிறப்பு ஐயா. உங்களின் தமிழ்ப் பணி மேலும் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Jan 11, 2013 10:03 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:தேனில் ஊறிய பலாச்சுளையாய் இனிக்கிறது உங்களின் கவிதை வரிகள். மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றும் கவிதை வரிகள். சிறப்பு ஐயா. உங்களின் தமிழ்ப் பணி மேலும் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

நன்றிகள் ஐயா! தங்கள் போன்றவர்களின் ஆசியுள்ளவரையும் எனக்கு குறை
வில்லை

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Jan 11, 2013 10:03 pm

6 .பொங்கவா? பொங்க வா!

பொங்க நினைத்தே யோர் புதுப்பானை கையெடுத்தேன்
மங்குமிருள் போங்காலை மனதெண்ணிச் சூரியனை
செங்கல் மூன்றெடுத்துச் சேர்த்தேமுக் காலடுப்பில்
தங்கவெனப் பானையிடத் தமிழ்மகனே பொங்கென்றாள்

எங்கிருந்தோ வந்தகுரல் ஒலிக்கும் இடம்நோக்கத்
தங்கஒளித் திருமேனி, தமிழன்னை எதிர்நின்றாள்
பொங்குவாய் என்றெண்ணப் பொங்கலின்றிப் பொங்குகிறாய்
பொங்குகின்ற போதுனது பொங்கலதும் வேண்டியதோ

பொங்குவாய் பொங்கலின்றிப் பொங்குவன போகாது
பொங்கி வினைமுடித்தே பொங்குகையில் பொங்கென்றாள்
சங்கத் தமிழ்தாயே சாற்றுமிதன் பொருளறியேன்
அங்கமிலா அறிவீன அந்தகனாய் ஆயினனோ

பைந்தமிழின் பாவையவள் பனிகுளிரப் பானையுடன்
செந்தழலும்மூட்டியொளிச் சுடர் வரமுன் பொங்கவெனச்
வந்தவனை சொல்லுரையால் வழிமறித்த சுந்தரிகாண்
சந்தம் தெரிகிறது சாரம் பொருளேதென்றேன்

தங்கமகள் சினமுடனே சற்று எனைப் பார்த்தபின்னர்
பொங்குதடா துன்பமெலாம் பெண்மேனி தீயர்கொளப்
பொங்குதடா வேதனையும் புறத்தே குருதி பொங்கத்
தங்குதடா ஈனமுடை தமிழனெனப் பெயர் பின்னால்

மங்கையரைக் கூட்டியொரு மாபடைக்கு விருந்தாக்கப்
பொங்குதடா கண்ணிரண்டும் புது வெள்ளம் தேசமதைச்
சங்கரித்து தீயிடுவோன் சற்றும்ஓய்ந் தானுமில்லை
பொங்கியெழ நீமறந்து பொங்குவதோ என்றழுதாள்

முக்கா லடுப்பாக்கி முத்தமிழென் றெண்ணியதில்
வைக்கும் புதுப்பானை வண்ணமொழிக் கவிதையென
சர்க்கரையா சந்தங்கள் சார்ந்தஎழிற் சொல்குழைத்து
இக்கதிரோன் வானமெழ இட்டிடுவோம் என இவளோ

சங்கத் தமிழ்பாடும் சரித்திரத்து நாயகனே
பொங்கிப் புயலாகிப் பெருந்துயரும் நீக்கியபின்
பொங்கும் இனிமையதும் புதுமகிழ்வும் பொங்கமனம்
பொங்குமெழிற் சுதந்திரத்துப் பூமியிலே பொங்கென்றாள்

அங்கம் கிழிந்தவரும் ஆடையின்றி பொய்த்தழவும்
தங்கையவள் மானமது சந்தியிலே போகுங்கால்
வெங்கண் துடி துடித்து வேதனையை தீர்த்தபின்னர்
பொங்குவதாம் என்றுறுதி பூணாயோ பொன்மகனே !

**************

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Feb 16, 2013 4:16 am

7. கவிதை களஞ்சியம் (சேர்ப்பு 15.02.13 )

பொழிலலை தளும்பிய பொழிதினி லிதழுடை
புதுமலரென மனமும்
எழிலுற அலைதென்ற லிளமல ரழைந்தென
இதமுட னெவர்முதுகும்
வழிசெலும் பொழுதிடை வருடிய சுகமெழ
விழி கிறங்கிய வகையும்
மொழிதமிழ் கவிதைகள் முழுதெப் புனைகவி
மிகுமிட மிதுவெனவோ

கருவிடை யுயிர்தரு கடவுளு மருள்சொரி
கலைபயி லறிவகமோ
குருவிடை பயிலெனக் குறுஅறி வுடனிரு
கலைமகன் அறிவெழுமோ
தருபலகனிகளும் தலைநிலம் விழுதென
திகழ்பெருந் தருவிதுவோ
பெருமள கவிதரு புலமையில் இணைதொலை
பலகையும் இதுவெனவோ

மெருகிடக் கலைமகள் வருவளோ கமலவெண்
மலர்தனும் இதிலுளதோ
முருகெனு மிளையவன் முதுமைகொ ளறிவினன்
மகிழ்வுற எழுஞ்சபையோ
பருகிட மதுவிழும் பலவண்ண நறுமணம்
படர்விழை மலர்வனமோ
வருபவ ரெவர்தனும் வளமுறத் தகமையை
வழங்கிடு மரசவையோ

அறிவினிற் பலமின்னு மகமிடை கருகொளும்
அதிசயத் திருவிடமோ
பிறிதில்லை மலையிடை பெருகிடு மருவியின்
புனலுதிர் பரவசமோ
பொறியெழ அனலுடை பெருவெளிகொதி யழல்
பரவிய வலிமையதோ
அறமெழ மனதினில் அழகுறுங் கவிபொலி
அமுதளி சுரபியிதோ

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Feb 16, 2013 6:38 am

8. சக்தியே ஆணையிடு -( சேர்ப்பு 15.02.13)

கண்கள்பாதி போனதென்ன காட்சிமங்குதே - இந்தக்
காயமென்ன செய்தபாவம் காணும் துன்பமே
எண்ணமிங்கு மேகமிட்டு என்னைதூக்குதே - அங்கு
ஏகும்பாதை வானின் தோன்றி ஏறு என்குதே
கிண்ணமிட்ட பாலும் பொங்கி கீழே ஊற்றுதே - அந்த
கேணி நீரும் வற்ற மீனின் மூச்சுமுட்டுதே
அண்டவானில் ஆதவன்கள் அள்ளிவீசினாய் - சக்தி
ஆசைகொண்ட நெஞ்சம் வாழ ஆணைகூட்டுவாய்

வண்ணமிட்ட சித்திரங்கள் வாழ்வு வேண்டுதே -சுற்றி
வற்றும் நீரைகண்டு பூக்கள் வாடிச் சோர்வதேன்
மண்ணில் சுட்ட பாத்திரத்தை ஏந்தி நிற்கிறேன் - என்னை
மன்னன் என்று பேரும் வைத்து மாலைசூடவா
வண்ணமிட்ட பூக்களாலே வாசல் தோரணம் - உள்ளே
வைத்த பானை அன்னமின்றி கொண்டகாரணம்
உண்மை நெஞ்சில் அன்னைநீயு மெண்ணும் நீதியும் - விட்டு
ஓரம்வைத்துப் பார்ப்பதென்ன உள்ளே வைத்திடு

திண்ணையோரம் வந்தொருவன் காத்திருக்கிறான் - கையில்
தேவையென்று பாசமென் கயிற்றைக் கொள்கிறான்
கண்ணை மூடித் தூங்குமட்டும் காவல்நிற்கிறான் - போகும்
காலம் என்னும் பாதைசெல்ல என்னை கேட்கிறான்
அன்னை சக்தி கண்கள்விட்டு உள்ளம் காண்கிறேன் - அவள்
ஆக்கும் சக்தி ஈந்த அன்பில் வீறுகொள்கிறேன்

எண்ணமெங்கும் சக்திதீபம் ஏந்திநிற்கிறேன்- இங்கு
என்னயல்ல என்னையீந்த தாயென்றாகிறேன்

தொட்டுத்தொட்டுத் தூரிக்கையால் வண்ணம்பூசென - நல்ல
தூய தமிழ்சொல் கொடுத்து தூண்டி விட்டவள்
கட்டியெனைப் போட்டுவிட்டுக் காண்பதென்னவோ - இனி
கால் விலங்கும் அன்பு கொண்ட காவல் என்பதோ
எட்டிநடை போடுமெந்தன் கால் நிறுத்தியே - எண்ண
இறக்கை தந்து எல்லையற்ற வான்பறக்கவே
வட்டமிட்டு தேடும்வண்டு பூவின் காண்பதாய் - புவி
வாழு மென்னை தீந்தமிழில் வாசமிட்டதேன்

அன்னைமீது சத்தியத்தின் ஆணை வேண்டினேன் . மேனி
ஆலையில் கரும்புபோல ஆகப் போகமுன்
நின்மனம் அருள் புரிந்து என்னைக் காத்திடு - எந்தன்
நிழல்பிரிந்து கொள்ள முன்நிறுத்தி வைத்திடு
தன்னை மீறி ஓடும் காற்று உள்நிறுத்திடு - நல்ல
தாயின் அன்பு உள்ளத்தோடு என்னைப் பார்த்திடு
பொன்னையல்ல பூமியல்ல பொழுது வேண்டினேன் - வாழப்
போகும்நாளும் புதிது கொள்ள விதியும் வேண்டினேன்

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Feb 16, 2013 9:01 am

உங்களுளம் உள்ளதெல்லாம் உவகையுடன் நிறைவேற
திங்கள்முடி சூடியவன் அங்கயற்கண் ணுமையுடனே
பங்கமற ஆட்கொண்டு பரிவுடனே சீர்திருத்தி
அங்கமெலாம் நலம்பெறவே அருள்செய்ய வேண்டுகிறேன்.

அன்புடன்,
ரமணி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Feb 16, 2013 6:19 pm

ரமணி wrote:உங்களுளம் உள்ளதெல்லாம் உவகையுடன் நிறைவேற
திங்கள்முடி சூடியவன் அங்கயற்கண் ணுமையுடனே
பங்கமற ஆட்கொண்டு பரிவுடனே சீர்திருத்தி
அங்கமெலாம் நலம்பெறவே அருள்செய்ய வேண்டுகிறேன்.

அன்புடன்,
ரமணி

நன்றிகள் ஐயா! என்வேண்டுதலுக்கு தாங்களும் ஆசிவழங்கியதற்கு!!

அன்புடன் கிரிகாசன்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Feb 17, 2013 1:53 pm

8. மறுக்காதே தாயே! (சேர்ப்பு 17.02.13)

களிமிகு புவியிடை கருவென வுயிர்தரு
கருணையே வருவாயோ
அளிபல அமுதெனு மருஞ்சுவை தமிழிசை
அகமெழ வருளாயோ
துளிபல உதிர்வெடு கடுமழை எனமனம்
தமிழ்பொழிந் திடத்தாயே
எளிதென மனமுயர் இசைகவி பலவெழும்
இதயமும் தாராயோ

புவியசைந் திடுமதைப் பு[ரிந்திடும் உணர்வினைப்
பொழுதுளம் இழந்தாலும்
செவியினி தமிழ்சொலும் .திறமெடு தகமையைச்
சிறுமதி மறந்தாலும்
கவினுறு மலர்தன்னும் கனிபிழி சுவைமது
கொளும்நிலை மறந்தாற்போல்
ரவியெழ ஒளிவரத் தனைமறந் தொழுகிடும்
இனிமலரென வெனைச்செய்

குழிவிழ குறுகிட குவயலம் தனிலுள
கொடுமைகள் எதுகொளினும்
அழியென கவிமனம் அடங்கிட புரிசெயல்
அரிதெனும் பெருங்கேடாம்
பொழிலுடை எழில்மலர் பிடுங்கியே தரையிடும்
பிழைதனைப் போற்றாது
தொழிலதை விடுஅருந் துயர்களை மனமெடு
துணையிரு தமிழ்த்தாயே

மொழிசொல மனதினில் முழுதென உயிர்திட
மொடுநிலை வளர்ந்தோங்க
கழிஎன குறியிடுங் கணிதமென் றுயிர்கொளும்
கடமையும் சரியாமோ
ஒழிஎன முடிவினை உயரெனக் கருதிடல்
ஒருமுறை விடுதாயே
பழிஎனப் பழமையின் தவறெதும் நினைந்திவன்
பயில்கலை மறுக்காதே
***************

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Feb 17, 2013 1:55 pm

9. என் நாடு போல வருமா? (சேர்ப்பு 17.02.13)

பனிதூங்கு மிலையாடப் படர்காற்றில் குளிர்மேவப்
பெரும்போர்வை கொளும் நாடிதே
இனிதான தமிழோசை எழுங்காலைப் பொழுதெங்கே
இடி மேகம் இசைகீதமே
குனிந்தெங்கள் நடைமாறிக் குணம் மாறிக் குரல்மாறி
கொளவென்று விதிகூறுதே
இனியென்று மனதாசை இன்பங்கள் பொலிகின்ற
எழில்நாட்டைக் கண்காண்பதோ

கனிதூங்கு மாவின்கிளி கலகலத் தோடு மணில்
கிளை தூங்கி மந்தி யாடும்
நுனி தாங்கி நெல்முதிர நிலம் நோக்கு வயற்கதிரும்
நிமிர் வானம் தொடுமாலயம்,
புனை பானை நிரைக ளயல் புதுவாழை கனியழகும்
பேச்சினொலி தமிழ்நயந்து
நனைந்தாடு தாமரைகள் நங்கை மதிமுகம்போலும்
நளினமிவை காண்பதெப்போ

இலைமீது தனைமோதி எழுந்தோடி வருங்காற்று
இன்பவரு டலின்போதையும்
கலைவண்ண நடமாடும் கண்கவருந் தோகையொடு
காயும் புகை யிலைவாசமும்
அலையோடு குளக்காற்று ஆலமரத்தடி, கோவில்
அயலுள்ள பெட்டிக்கடையும்
இலையென்ற வாழ்வாகி இருந்திங்கே என்பாடு
எனதாகு மேமாற்றமே

பனை உரசல் சர்ரென்று பழம்வீழ அணிலோட
பயந்தோடும் குருவி கூச்சல்
தனியாகக் குயிலொன்று தருமீது துணையின்றித்
தருமோசை துயர் கீதமும்
மனையோடு ஒருவேம்பு மாதுளையும் கமுகென்று
மனம் பொங்கு மெழிற்காட்சிகள்
இவைகாணா தொருவாழ்வும் இருந்தென்னபோயென்ன
எனமனது அலைந்தோடுதே

நீள்சாலை நிலம்கீழே நெடிதோடும் வண்டிகளும்
நிழல் மரங்கள் அற்றபாதை
தோள் மாறித் திடமற்ற துணிவழிந்த கோலமுடன்
தோல்வி மனம் தொய்ந்ததான
வாழ்வுணர்வு என்றாகி வண்ணங் கரு காக்கைநிறம்
வகையேனோ தோலென்றெண்ணி
நாளென்ன பொழுதென்ன நலமாயி னுளம்காணும்
நலிவு மிகுந்தேங்கும் வாழ்வே!

*********************

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக