புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 4:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 4:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 4:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 3:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 3:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 3:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 3:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 3:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 3:40 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 8:56 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 8:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 7:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 7:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 7:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 5:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 5:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 4:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 4:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 4:46 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:29 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 4:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 4:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 4:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 4:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 4:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 8:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 2:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 1:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 1:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 12:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 11:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 11:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:10 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 11:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 10:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 10:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_c10 
85 Posts - 79%
heezulia
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_c10 
250 Posts - 77%
heezulia
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 3:40 am

மனைவியிடம் கோபிக்காதீர்கள்

1,



நாம் செய்த நல்வினை, தீவினை ஒன்றுக்கு ஆயிரமாகப் பெருகி வரும். வயலில் இட்ட விதை ஒன்று பலவாக வருவதுபோல் வினைகளும் பன்மடங்கு வளர்ந்து வரும்.



பகை தொலைவில் இருக்கலாம். அடுத்த வீட்டில், எதிர்வீட்டில் இருக்கக்கூடாது. இருந்தால் அது நமக்கு அஷ்டமத்துச் சனி. மிக்க ஆபத்தைத் தரும்.





மனிதன் வாழ்கின்ற வாழ்க்கை பிறருக்கும், நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.





மனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக்கூடாது. மனைவி கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தழைக்காது.





ஒரு மனிதனோடு பழகும்போது அளந்து பழக வேண்டும். பால் வாங்கும் போதும், துணி எடுக்கும் போதும் அளந்து தானே வாங்குகிறோம். அதுபோல் யாரிடம் பழகினாலும் அளந்து பழகாவிட்டால் துயரம் வந்து சேரும்.





நமது உடம்பின் அளவு கண். கண்ணை மட்டும் பார்த்தாலே அவன் எப்படி உள்ளவன் என்று கணக்கிட்டுவிடலாம்.





இருள் இருவகைப்படும். ஒன்று புற இருள், மற்றொன்று அக இருள். இதற்கு ஆணவம் என்று பேர். புறஇருள் தன்னைக் காட்டும், ஏனைய பொருள்களை மறைக்கும். ஆணவ இருள் தன்னையும் மறைத்து, மற்ற எல்லாவற்றையும் மறைத்து நின்று பெருந்துயரத்தைச் செய்யும்.





தங்கம் இளகினால் அதில் ரத்தினக்கல் பதியும். அதுபோல் நம் உள்ளம் உருகினால் உருகிய உள்ளத்தில் இறைவன் ஒன்றி விடுவான்.





எதனையும் பலமுறை சிந்தித்துச் செய்ய வேண்டும். ஒருவர் போன வழியிலேயே, சிந்திக்காமலேயே பின்பற்றிச் செல்வது மூடத்தனம்.





எங்கும் நிறைந்த இறைவனை எங்கும் எளிதாகக் கிடைக்கக்கூடிய பூவினாலும், நீரினாலும் நாம் வழிபட வேண்டும். வழிபாட்டிற்கு அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள் போன்றவை.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 3:45 am

இன்சொல் மட்டுமே பேசுங்கள் ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Icon_lol


எல்லாத் தேசத்தாரும், எல்லா நாட்டாரும், எல்லா நிறத்தாரும், எல்லா சமயத்தாரும் கருத்து வேறுபாடின்றி ஒப்பமுடிந்த உண்மை வேதம் நமது திருக்குறள் ஒன்றேயாம். உலகிலுள்ள எல்லா அறங்களையும் தன்னகத்தே கொண்டு சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது திருக்குறள்.





திருமால், குறள் வடிவு கொண்டு இரண்டடியால் மூவுலகையும் அளந்தவர். வள்ளுவர், தமது குறளின் இரண்டடியால் எல்லா உலகங்களையும் அளந்தவர்.



திருக்குறள் ஓதுவதற்கு எளிது. மனப்பாடம் செய்வதும் சுலபம். ஒரு முறை படித்தாலே போதும்.



உணர்தற்கு அரிது, வேதங்களிலுள்ள விழுப்பொருள்களை எல்லாம் விளக்கமாக உரைப்பது. நினைக்கும்தோறும் நெஞ்சில் தெவிட்டாத இன்பத்தை ஊற்றெடுக்கச் செய்வது.





கடல் தண்ணீர் வற்றிவிட்டாலும் சூரியன் தட்பத்தை அடைந்தாலும், சந்திரன் வெப்பத்தை அடைந்தாலும் திருக்குறள் தனது பெருமையினின்றும் குறையாது.



திருக்குறளைத் தொட்டாலும் கை மணக்கும்.



படித்தாலும் கண் மணக்கும். கேட்டால் செவிமணக்கும். சொன்னால் வாய் மணக்கும்.



எண்ணினால் இதயம் மணக்கும். அத்தகைய தெய்வ மணம் வீசும் சீரும் சிறப்பும் உடையது திருக்குறள்.





இன்சொல்லே பேசுகிறவர்களுக்கு உலகில் ஒரு வகையான துன்பமுமில்லை. எம வாதனையும் கிடையாது. சிவகதி திண்ணமாகக் கிடைக்கும்.



கனிகள் நிறைந்துள்ள ஓர் மரத்தில் வகையறியா ஒருவன் சுவைமிகுந்த கனிகளை விலக்கிக் கைப்புடைய காய்களை மென்றதை ஒக்கும் இன்னாத சொற்களைக் கூறுவோனின் இயல்பு.



எனவே மனத்தூய்மையுடன் வாழ்ந்து இறைவன் திருவருளால் இன்சொல்லைக்கூறப் பயின்று நாம் அனைவரும் இம்மை இன்பத்தையும் அடைந்து நற்கதி பெறுவோமாக.


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 3:46 am

ஒரே நிமிடத்தில் புண்ணியம்







* தன்னுடைய புத்தகம், பெண், பணம் இவை பிறரிடம் கொடுத்தால் போனது போனதுதான். ஒருவேளை திரும்பி வருவதாயின் புத்தகம் கிழிந்தும், பெண் மாசுபடிந்தும், பணம் அளவு குறைந்தும்தான் வரும்.



* முதலை வாய்ப்பட்ட மணியை எடுத்து விடலாம். அலைபாயும் கடலையும் அப்புறமாகத் தாண்டிடலாம். பாம்பையும் மாலையாக கழுத்தில் அணிந்திடலாம். ஆனால் மூடனைத் திருத்த யாராலும் இயலாது.



* ஆறு தரம் பூமியை வலம் வருதலும், பதினாராயிரம் தடவை காசியில் குளித்தலும், பலநூறு தடவை சேது ஸ்நானம் செய்தாலும் ஆகிய இவற்றால் கிடைக்கும் புண்ணியம், தாயைப் பக்தி பூர்வமாக ஒரு தரம் வணங்கினால் கிடைக்கும்.



* விளக்கு நமக்கு எத்தனை வண்ணமாக உதவி செய்கிறது என்பதை நாம் அது இல்லாதபோதுதான் உணர முடியும். தாய் நம்மை எப்படியெல்லாம் வளர்க்கின்றாள் என்பதை தாய் இல்லாத போதுதானே உணர முடிகிறது.



* பறவைகட்கு இரு சிறகுகள்; மனிதனுக்கு இரு கால்கள், இரு கைகள், இரு கண்கள். புகை வண்டிக்கு தண்டவாளங்கள் இருப்பதுபோல் மாணவர்களுக்கு இரு குணங்கள் இருக்க வேண்டும். ஒன்று அடக்கம், மற்றொன்று குருபக்தி. இந்த இரு குணங்கள் உள்ள மாணவன்தான் முன்னேற்றமடைவான்.



* இன்பமான சொல்லும், சிரித்த முகமும், பார்வையும், நண்பர்களின் சொல்லைக் கேட்க வேண்டுமென்ற எண்ணமும், அவர்களைக் கண்டவுடன் சந்தோஷப்படுதலும் ஆசையில்லாதவனின் லட்சணங்களாகும்.



* தீப்பந்தத்தைக் கீழ்நோக்கிப் பிடித்தாலும் அதன் ஜுவாலை மேல்நோக்கி எழுவதுபோல் உயர்ந்த குணத்தை கீழ்ப்படுத்த சொப்பனத்திலும் முடியாது.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 3:48 am

துன்ப அனுபவம் நன்மைக்காகவே!





கண்ணுக்கு தெரிந்த இந்த உலக மக்களுக்கு சேவை செய்வதோடு, கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கும் சேவை செய்வது நம் கடமையாகும். நம்மைப் பெற்ற தாய், தவமிருந்து, கருவுற்று, தாலாட்டி சீராட்டி வளர்த்ததை நம் கண்ணால் கண்டதில்லை. அதுபோல், கடவுளின் அன்பையும் கண்ணால் கண்டதில்லை. எனவே, கடவுளும் நம் தாய் போன்றவர் தான்! கோவில் வாசலில் துவாரபாலகர் இருவர் இருப்பதை நாம் பார்க்கிறோம். அதில் ஒருவர் ஆள்காட்டி விரலைக் காட்டி நிற்பார்.


ஆள்காட்டி விரலைக் காட்டுவதன் தாத்பர்யம் கடவுள் ஒருவரே என்பதைக் காட்டுவதே. மற்றொருவர் கையை விடுத்து நிற்பார். அதன் தத்துவம் கடவுளை தவிர வேறொன்றும் இல்லை என்பதையே காட்டுகிறது. இதையே "ஏகம் ஏவ அத்விதீயம் பிரம்ம ' என்று வேதம் கூறுகிறது. ண தாய் குழந்தையின் நோய் நீங்க வேப்பங்கொழுந்து, சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை அரைத்து கொடுப்பாள். அது குழந்தைக்கு மிகுந்த கசப்பும் காரமுமாக இருக்கும். அன்றியும் குழந்தையின் சிறுமதியில் தாய் தன் நன்மைக்குத் தான் இதை தருகிறாள் என்று அறிந்து கொள்ள முடியாது.


காரணம் அதற்கு அறிவு முதிர்ச்சி இல்லை. அது போல், கடவுள் நமக்கு தரும் துன்ப அனுபவங்களும் நம் நன்மைக்காகவே.





ஆன்மீக சிந்தனைகள் » கிருபானந்த வாரியார் Tblanmegamideanews_90237063170 -வாரியார்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 3:49 am

கனவிலும் நினைக்கக்கூடாதது





முதுமைக்கு வேண்டியவற்றை இளமையில் தேட வேண்டும். மறுமைக்கு வேண்டியவற்றை இம்மையில் தேடவேண்டும். மரணபயம் தலைக்கு மேல் இருக்கின்றது. எந்தக்கணத்திலும் அது வரலாம். மேலே எறிந்த கல் எவ்வாறு கீழே விழுவது உறுதியோ, அதுபோல உடம்பெடுத்த நாம் மரணமடைவது உறுதி.ஒரு மனிதனுக்கு மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம். யாருக்கு எப்போது வரும் என்று யா?992;ாலும் கணிக்க இயலாது. அது எந்த வினாடியும் வரும். எனவே, நல்ல அறங்களை செய்து நற்கதி தேடுவதே நல்லது. செல்வம் அழியாமல் இருக்க, ஏழைகள் மனம்நொந்து கண்ணீர் விடும்படியான பாவசெயல்களை செய்தல் கூடாது. பிறருடைய பொருள் உங்களுக்கு வரவேண்டுமென்று கனவிலும் நினைக்க கூடாது. நியாயமற்ற வழியில் பொருள் தேடக்கூடாது. இந்த உடம்பு நமக்கு இறைவன் கொடுத்த வாடகை வண்டி. இதில் ஏறி, நாம் பிரயாணம் செய்கிறோம். ஒரு குறிப்பிட்ட காலத்தை கடவுள் நமக்கு அளவிட்டுக் கொடுத்துள்ளார். அக்கால எல்லைக்குள் நாம் பிறவாநிலையாகிய முக்தியுலகை நாடிப் பிரயாணம் புரிய வேண்டும். அதற்கு ஒரே வழி யாருக்கும் தீங்கிழைக்காமல் இருப்பதே ஆகும். நல்ல உணவை உண்டால் உடல் வளரும். நல்ல நூல்களை படிப்பதனால் நல்லுணர்வு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 3:50 am

லட்சுமி கடாட்சம் கிடைக்க வழி





கொடுத்த கடனைத்திருப்பிக் கொடுக்காதது எவ்வளவு பெரிய பாவமோ, அத்தனை பெரிய பாவம் இறைவனை நாள்தோறும் வணங்காததும் ஆகும். அதனால் தான் "என் கடன் பணி செய்து கிடப்பதே' என்றார் அப்பர். இறைவன் தந்த உடம்பினால் அவனை வழிபடுவதை " அவனருளாலே அவன் தாள் வணங்கி' என்கிறார் மாணிக்கவாசகர்.



* பல இழைகள் ஒன்றுபட்டுத் திரித்த வடக்கயிற்றைக் கொண்டு பெரிய தேரை இழுத்து விடலாம். ஆனால், தனி இழையான துரும்பினைக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. ஒரே சிந்தனையுடன் பல அன்பர்கள் கோவிலில் கூட்டு வழிபாடு செய்யும் போது இறைவனின் திருவருளை உறுதியாகப் பெற முடியும். பல காலமாக கணக்கு வழக்கில்லாமல் பிறவிகளை எடுத்து வருகின்ற நாம் இறைவனை உள்ளத்தூய்மையுடன் உருகி வழிபட்டு நாளும் அர்ச்சித்து வந்தால் நம் பிறவிநோய் தீரும். நம் வீட்டில் அனைவரும் இயன்ற வரையில் நாள்வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்யும் இல்லங்களில் குடும்ப ஒற்றுமை சிறந்து விளங்கும். தெய்வஅருளும், லட்சுமி கடாட்சமும் நிறைந்து இருக்கும். நீராடி தூய ஆடை அணிந்து நல்ல சிந்தனையுடன் ஒழுக்கநெறியில் கோவில்களுக்குச் செல்ல வேண்டும். கோவிலில் இருக்கும் நேரத்தில் மனம் ஒருமுகப்பட்ட நிலையில் இறைசிந்தனையுடன் இருப்பது மிக அவசியம்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 3:51 am

நல்ல நூல்களைப் படியுங்கள்





* மூட்டைப் பூச்சியைப் போல் பிறரைத் துன்புறுத்தி வாழக்கூடாது. எலியைப்போலத் திருடி வயிறு வளர்க்கக் கூடாது. கரையான்களைப் போல் பிறர் பொருளை நாசப்படுத்தி வாழக்கூடாது. தேனீயைப் போலவும், எறும்பைப் போலவும் உழைத்து உண்ணுவதே அமைதியான வாழ்க்கை.


* நல்ல நூல்களை சிரமப்பட்டு படிக்க வேண்டும். உயர்ந்தோருடன் பழக வேண்டும். ஆசிரியருக்குப் பணிவிடை செய்யவேண்டும். இதையெல்லாம் செய்யாமல், ஞானமும் கல்வியும் பெற வேண்டுமென்றால், ஒரு பெண் தன் கணவனைக் கொன்றுவிட்டுப் பிள்ளை வரம் கேட்ட கதை போலாகும். நல்லாசிரியன் ஒருவனை நாடிப்பெறும் கல்வியே ஞானத்தை கொண்டதாகும்.


* குடும்பம் மரத்தைப் போன்றது. அதற்கு வேர் மனைவி, அடிமரம் கணவன், கிளைகள் குழந்தைகள். பலவித பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் நிழல் தந்து, மரம் உறைவிடமாக உதவுவது போல், குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும்.


* நல்ல உணவுகளை உண்பதால் உடல் வளரும். நல்ல நூல்களைப் படிப்பதால் உணர்வு வளரும். நல்ல உள்ளத்துடன் சதா இறைவனை நினைப்பதனால் உயிர் வளரும். இம்மூன்றும் வாழ்வின் அத்தியாவசியத் தேவைகள்.


*எப்போதும் இறைவனின் நினைவு வேண்டும். அது முடியவில்லையானால் எழுகின்ற போது, சாப்பிடும் போது மற்றும் படுக்கும் போதாவது நினைக்க வேண்டும்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 3:52 am

அமைதி உங்கள் மனைவி





*சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தருமம் என்னும் சகோதரன், கருணை என்னும் நண்பன், அமைதி என்னும் மனைவி, பொறுமை என்னும் புதல்வன் இவர்கள் மட்டுமே நமக்கு உகந்த உற வினர்கள் ஆவர்.


*விடாது கடைந்தால் பாலிலிருந்து வெண் ணெய் வெளிப்படும். அதுபோல, இடைய றாத தியானத்தாலும், வழிபாட்டாலும் இறைவன் நம் உள்ளத்தாமரையில் வெளிப்படுவான்.


*தெரியாத ஒருவனுக்கு ஒரு விஷயத்தை தெரிவிக்கலாம். தெரிந்தவனுக்கு அந்த விஷயத்தின் நுட்பங்களைக்கூறி மேலும் தெளிவுபடுத்தலாம். ஆனால், இது நல்லது இது கெட்டது என்று அறியாதவனைச் சீர்திருத்த ஆண்டவனாலும் முடியாது.



*சந்திரன் இரவுப் பொழுதைப் பிரகாசிக்கச் செய்கிறது. சூரி யன் பகல் பொழுதினைப் பிரகாசிக்கச் செய்கிறது. ஒருவன் செய்த தருமம் மூன்று உலகங்களிலும் பிரகாசிக்கச் செய்யும். நல்ல பிள்ளை, பிறந்த குடும்பத்தை பிரகாசிக்கச் செய்கிறான்.


*ஆறுதரம் பூமியை வலம் வருவதாலும், பத்தாயிரம் தடவை கங்கையில் குளிப்பதாலும், பலநூறு முறை சேதுக்கரையில் தீர்த்தமாடுவதாலும் கிடைக்கும் புண்ணியம், தாயைப் பக்திப்பூர்வமாக ஒரே ஒருதரம் வணங்கினாலே கிடைத்து விடும்.


*பசுக்கள், வேதங்கள், பதிவிரதைகள், சத்தியசீலர்கள், பற்றற்ற ஞானிகள், தருமசீலர்கள் இவர்களாலேயே உலகம் இன்றும் நிலைத்து நிற்கிறது

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 3:53 am

கடவுளை எளிமையாக வழிபடுங்கள்





உன்னை யாராவது புகழும்போது மகிழ்ச்சி அடையாதே. அதேபோல், உன்னை இகழும் போது கவலையும் கொள்ளாதே.
புகழையும், இகழையும் சமமாகக் கருதுபவனே மனஅமைதியுடன் வாழ முடியும். ஆண்டவனை வழிபடுவதைக் காட்டிலும், அடியாரை வழிபடுவது சிறந்தது. ஆண்டவனை வழிபட்டால் ஒரு மடங்கு பலன். அடியாரை வழிபடுவோருக்கு இருமடங்கு பலன். தாய், தந்தையரின் பழக்கம் தான் பிள்ளைகளிடத்தில் உண்டாகும். ஆகவே, நல்ல பழக்கவழக்கங்களைப் பிள்ளைகளிடத்தில் உண்டாக்க தாயும், தந்தையும் நெறிமுறைகளைப் பின்பற்றி ஒழுக்கத்தோடு வாழ வேண்டும்.
நாம் செய்த செயல்களின் விளைவு நம்மை வந்து சேரும். நல்வினையும், தீவினையும் வயலில் விதைத்த விதைபோல, பலமடங்கு பெருகி நம்மையே வந்தடையும். இளகிய தங்கத்தில் ரத்தினக்கல் பதியும். அதுபோல,
இறைவனை மனமுருக வழிபட்டால் உருகிய நமது உள்ளத்தில் கடவுள் ஒன்றி விடுவார். எங்கும் நிறைந்த இறைவனை எளிமையாகவே வழிபடுங்கள். சாதாரணநீரும், பூவும் கொண்டு இறைவனின் திருப்பாதங்களை பூஜியுங்கள். அவரை ஆடம்பரமாக பூஜிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. அன்பையும், ஒழுக்கத்தையும் மட்டுமே ஆண்டவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 3:54 am

பேசுவதால் பயனேதும் இல்லை





* வயலில் தூவப்படும் சில விதைகளே, பல ஆயிரம் மடங்காக பயிர்களை திருப்பித்தரும். அதைப்போலவே ஒருவர் செய்யும் நன்மையும், தீமையும் பல மடங்காக பெருகி அவரிடமே வந்து சேரும். ஆகவே, எப்போதும் நன்மை செய்பவர்களாகவே இருங்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக இல்லாவிட்டாலும்கூட, நன்மை செய்வதிலிருந்து தவறாதீர்கள். இவ்வாறு செயல்படுபவர்களுக்கே விரைவில் இறைவன் அருள் கிடைக்கும்.


* சிலர் தேவையே இல்லாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். எதற்காக பேசுகிறோம், எந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பேசுகிறோம் என்ற வரையறையே இல்லாமல் பேசுவதால் பேசுபவருக்கோ, பேச்சை கேட்பவருக்கோ எந்த நன்மையும் உண்டாகப் போவதில்லை. ஆகவே, அமைதியாகவே இருங்கள்.


* நெருப்பு எரியும் இடத்தில் இருந்து புகை கிளம்பிக் கொண்டிருக்கும். நெருப்பினால் நமக்கு தேவையானவற்றை சூடுபடுத்திக் கொள்ளாலாம் அல்லது பிற தேவைகளுக்கு பயன்படுத்தலாம். ஆனால், புகையால் பயன் ஏதும் இல்லை. புகையை நிறுத்த வேண்டுமானால் நெருப்பை அணைக்க வேண்டும். நெருப்பு என்ற பற்றினை அணைத்து விட்டால், புகை என்ற காரியமானது தாமாகவே அழிந்து விடுகிறது.


* ஆசை அழிக்கும் குணமுடையது. அன்பு வளர்க்கும் குணத்தை உடையது. நீங்கள் வளர்க்கும் குணமுடையவர்களாக இருங்கள். வீணான ஆசைகளால் துன்பம் நேருமே தவிர நன்மை எதுவும் உண்டாகிவிடாது என்பதால் ஆசையை அழித்து விடுங்கள்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக