புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_c10 
56 Posts - 73%
heezulia
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_c10 
221 Posts - 75%
heezulia
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_c10 
8 Posts - 3%
prajai
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_c10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_m10ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக தகவல்கள்» பிற மதங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 7:58 am

மனத்தூய்மைக்கு அழிவில்லை


புத்தர் துறவறம் ஏற்றதும் அவரைப் பார்க்க வந்த பாவிகள் கூட, மனம் திருந்தினர். சிலர் அவரைப் பின்பற்றி துறவறமே பூண்டனர். சிலர் அவரையே தெய்வமாக எண்ணி வழிபடத் துவங்கினர். இதனால், தேவர்களுக்குரிய யாகங்கள் நின்று போயின. தேவர்களுக்கு யாகங்கள் மூலமே உணவு கிடைக்கும். அந்த உணவின்றி அவர்கள் சிரமப்பட்டனர். தாங்கள் அழிந்து போவோம் என்று பயந்தனர். புத்தரை அழிக்க கங்கணம் கட்டினர். அவர்கள் பூலோகம் வந்து புத்தரிடம், ""புத்த பெருமானே! நாங்கள் ஒரு யாகம் செய்ய இருக்கிறோம். அது பூலோகத்தில் தூய்மையான இடமாக இருக்க வேண்டும். அந்த இடம் உன் மார்பு தான். உமது மார்பில் யாககுண்டம் அமைத்து தீ மூட்ட அனுமதிக்க வேண்டும்,'' என்றனர். தீயிட்டு அவரைக் கொன்று விட வேண்டும் என்பது தேவர்களின் திட்டம். புத்தரும் ஒப்புக் கொண்டார். யாகம் துவங்கியது. தீ மூட்டப்பட்டதும் புத்தரின் முகம் முன்னை விட அந்த ஜுவாலையில் ஜொலித்தது. தேவர்கள் ஏதும் அறியாமல் திகைத்து நின்றனர். அவரைத் தாக்க ஆரம்பித்தனர். அப்போது அசரீரி ஒலித்தது. ""ஏன் இந்த வீண் முயற்சி செய்கிறீர்கள்? மனத்தூய்மை உள்ளவர்களை அழிக்க யாராலும் முடியாது,'' என்றது அந்தக்குரல். தேவர்கள் தலைகுனிந்தனர். மனத்தூய்மை உள்ளவர்களுக்கு பயமும் இல்லை. அழிவும் இல்லை.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 7:59 am

அலைகடலின் ஆழத்தில் அமைதி
* தெளிவான அறிவோடு எவன் பற்றற்றவனாய், நல்ல சிந்தனையோடு செயலாற்றுகிறானோ அவனே எவ்வித துன்பங்களும் இல்லாத முக்தி என்னும் நற்கதியை அடையத் தகுதி உடையவனாவான்.
*உபவாசம் என்பது உண்ணாமல் இருப்பது மட்டுமன்று. சோம்பலில்லாமல் ஞானசிந்தனையோடும், தியானத்திலும் ஈடுபாடு கொண்டிருப்பதுமாகும்.
*பாவத்திற்கு அஞ்சியாவது பிற பெண்டிரிடம் செல்லாதிருங்கள். பிற பெண்களை உடன்படுத்தாதீர்கள். பெண்ணாசையால் மனிதன் பலதுன்பங்களுக்கும் ஆளாகிறான்.
*இன்பம் வந்த மகிழ்ச்சி கொள்ளாமலும், துன்பம் வந்த போது அஞ்சாது நிற்றலுமே சமணத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
*வினைக்கட்டிலிருந்து முற்றிலும் விடுபட்டவரும், மோட்சத்திற்குரிய வழிகளை அருளியவரும் மேன்மையான ஞானத்தைக் கொண்டவரும் ஆகிய ஜினேந்திர பகவானை வணங்கி அன்றாடப் பணிகளைத் துவக்குங்கள்.
*இடம் விட்டு இடம் பெயரும் போதும், பிற செயல்கள் செய்யும் போதும் பிற உயிர்களுக்கு ஏற்படும் துன்பங்களுக்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.
*நாம் அடைய வேண்டிய முக்தி இன்பம் என்பது பிறவிச்சுழற்சிக்கு மாறான தன்மையுடையது. ஆனால், அதுவே சிறந்த புகலிடமாகவும், நன்மையானதும், என்றும் நிலைபேறுடையதும் ஆகும்.
*வினைகளை உண்டாக்கும் வாயில்களான ஐம்புலன்களையும் அடக்கி, மனத்தின் பற்றுக்களாகிய அகப்பற்று, புறப்பற்றுக்களை நீக்கி முறறுந்துறந்தவனே முனிவன் அல்லது துறவி ஆவான்.
*வாழ்க்கை என்னும் கடலில் இன்பஅலைகளும், துன்ப அலைகளும் ஆர்ப்பரித்து உயிரை அலைக்கழிக்கின்றன. ஆனால், அலைகடலின் ஆழத்தில் அமைதியுண்டு. அதுபோல, இல்லறத்திலும் இதயத்தின் அடிஆழத்தில் அமைதியைப் பெறலாம்.

--மகாவீரர்


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 8:00 am

மனதில் நோய் வேண்டாமே!


நாக்கு உள்ளவன் பிறரின் நாக்கையும் சகித்துக்கொள்ள வேண்டும்.மோகவெறி போன்ற நெருப்பு வேறெதுவுமில்லை.

துவேஷத்தைப் போன்ற முதலை வேறெதுவுமில்லை. சித்த மயக்கத்தைப் போன்ற வலை வேறெதுவுமில்லை. ஆசைகளைப் போன்ற ஆற்று வெள்ளம் வேறெதுவுமில்லை.

மெய்யறிவு பெறாத மனிதனான நரனை, ஆடையற்ற கோலமோ, சடைத்தலையோ, புழுதிமேனியோ, உபவாசமோ, வெறுந்தரையில் கிடப்பதோ, நீறுபூசுதலோ, முழங்காலிட்டு அசையாது நிஷ்டையிலிருப்பதோ எதுவும் புனிதப்படுத்திவிடாது.

நிந்தனைக்கு ஆளாகாதவன் இந்த உலகில் எவனுமே இல்லை.
போர் முனையில் தன்னை நோக்கிப் பாய்ந்துவரும் அம்புகளை யானை தாங்கிக் கொள்வது போல நான் பிறரின் நிந்தனைச் சொற்களைத் தாங்கிக் கொள்வேன். ஏனெனில் அந்தத் தீமைதான் உலகத்தின் பண்பு.

ஜீவவதை செய்பவன், திருடுபவன், புளுகுபவன், பிறன் மனைவியை இச்சிப்பவன் - அவனை அறிஞர் நிந்திப்பார்.
நிர்வாணம் என்றால் விடுதலை என்று அர்த்தம்.

அறிவாளிகள் எப்போதும் வலுவான சக்திகள் படைத்தவராய், சிந்தனை ஒருமிப்புடனும், தளராத உறுதியுடனும், சீரான போக்குடனும், நிர்வாணத்தை அடைகின்றனர். அந்த நிர்வாணமே அதி உன்னதமான ஆனந்தம்.

'என் உடல் நோய் பிடித்ததாயிருந்தாலும் என் மனம் நோய் பிடித்ததாக இருக்கக்கூடாது' என்று நீங்களே உங்களைப் பயிற்சி செய்துகொள்ள வேண்டும்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 8:02 am

உயிர்வாழும் ஆசை எதற்கு?


* ஒரு மடையன் வாழ்நாள் முழுவதும் அறிஞன் ஒருவனோடு சேர்ந்தபோதிலும் அவன் சத்தியத்தை அறியமாட்டான். எப்படி குழம்பின் ருசியை கரண்டி அறியாதோ அப்படித்தான்.

* யார் ஒருவர் முட்டாள்களின் நட்பில் வாழ்கிறாரோ அவர் அதிகக் காலம் துன்பப்படுவார். மடையர்கள் நட்பு எதிராளிகளின் நட்பைவிட மிகவும் வேதனை தரும்.

* விழித்திருப்பவனுக்கு இரவு நெடியதாகும். களைத்து இருப்பவனுக்கு வழி நெடுந்தூரமாகும். அதுபோல நல்லறத்தை அறியாத மூடனுக்கு பிறப்பு இறப்பாகிய வாழ்க்கை எல்லையற்றதாகும்.

* செல்வமானது மூடனை அழித்துவிடும். ஆனால் வீடு பேற்றில் நாட்டம் உள்ளவனை அது அழிப்பதில்ல. சுக போகங்களில் மேன்மேலும் விருப்பமுள்ள மூடன் மற்றவர்களை அழிப்பதோடு கூட தன்னையும் அழித்துக் கொள்கிறான்.

* மெய்யை பொய்யாகவும், பொய்யை மெய்யாகவும் காணும் மருள் உணர்வு உள்ளவர்கள் ஒரு போதும் மெய்ப்பொருளை அடைவதில்லை. அவர்கள் வீண் எண்ணங்களில் உழல்வார்கள்.

* கருத்துடன் தியானத்தில் ஆழ்ந்தவராயும், பற்றற்ற விடுதலையில் திளைப்பவராயும் உள்ள மெய்யறிவு பெற்றவரைக் கண்டு தேவர்களும் பொறாமைப்படுகிறார்கள்.

* பிறவி, மூப்பு, பிணி, சாவு போன்ற மனித வாழ்க்கையில் ஏற்படும் யாவையும் துக்கம் நிறைந்தவை. துக்கத்தின் காரணத்தைக் கண்டுபிடித்து அதை நீக்கினால் துக்கம் விலகும். துக்கத்திற்குக் காரணம் உயிர்வாழ வேண்டுமென்னும் ஆசையே. இந்த ஆசை உலகத்திலிருந்து தனித்தன்மை உள்ளனவாக எண்ணும் அறியாமையின் விளைவே. ஆதலால் மெய்யுணர்வு பெற்றால் அறியாமை ஒழியும். ஒழுக்க நெறியில் நின்றால் ஆசை ஒழியும். துன்பம் நீங்கும.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 8:03 am

மரணமே வந்தாலும் கலங்காதீர்கள்


* நாம் அனைவரும் உண்மையானவர்களாகத் திகழ்வோமாக. லட்சியத்தை நம்மால் பின்பற்ற முடியவில்லை என்றால், நமது பலவீனத்தை நாம் ஒப்புக் கொள்வோம். லட்சியத்தை நாம் இழிவுபடுத்தாமல் இருக்க வேண்டும். லட்சியத்தைத் தாழ்ந்த நிலைமைக்குக் கொண்டு செல்ல எவரும் வேண்டாம்.

* முன்னேறிக் கொண்டேயிரு! முறையற்ற ஒரு செயலைச் செய்து விட்டதாக நீ நினைத்தாலும், அதற்காக நீ திரும்பிப் பார்க்க வேண்டாம். அவை போன்ற தவறுகளை முன்பு செய்யாமல் இருந்திருந்தால்; இன்று நீ இருக்கும் நிலையை அடைந்திருக்க முடியும் என்று இப்போது நம்புகிறாயா? அந்தத் தவறுகளே தான் நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாகும். உன் நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதைக் குறித்து நீ கவலைப்பட வேண்டாம். லட்சியத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு முன்னேறியபடியே இரு!

* இந்திய இளைஞர்களே! பெருஞ்செயல்களைச் செய்து முடிப்பதில் எப்போதும் முன்னேறிச் செல்லுங்கள்.

ஏழைகளிடமும், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களிடமும் இரக்கம் காட்டும் போது, நமக்கு மரணமே வாய்த்தாலும் கூட, அவர்களுக்கு இரக்கம் காட்டுவதே நமது லட்சியமாகும்.

* என்னுடைய லட்சியத்தை, உண்மையில் சில சொற்களில் சொல்லி முடித்துவிடலாம். அதாவது, மக்களுக்கு அவர்களுடைய தெய்வீகத் தன்மையை எடுத்துச் சொல்வதும், வாழ்க்கையின் ஒவ்வோர் இயக்கத்திலும் அதை எப்படி வெளிப்படுத்துவது என்பதை எடுத்துச் சொல்வது தான் அது.

* எழுந்திருங்கள்! விழித்திருங்கள்! நீங்களும் விழித்திருங்கள், மற்றவர்களையும் விழிக்கச் செய்யுங்கள். உங்களுடைய இந்த உலக வாழ்க்கை முடிவடைவதற்கு முன்னால் மனிதப் பிறவியினால் பெறுவதற்கரிய பெரிய நன்மையை அடையுங்கள்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 8:04 am

இன்ப துன்பம் காரணத்தோடு வருகிறது


தர்மம் உங்கள் துன்பத்தையும், துயரத்தையும் போக்கும். அறவாழ்வின் அம்சங்களை, அதன் உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

'நான்' என்ற அகந்தையை விடுங்கள். உங்களுடைய அகந்தையும் பொறாமையும் அல்லவா என்னுடைய தவவலிமையை ஒப்புக் கொள்ளத் தயங்குகிறது. அகந்தையில் உங்கள் மனம் அலைபாயும். அமைதியிழக்கும். உங்களுடைய உண்மையான இயல்பை உணர்ந்து கொள்ளும் வரை 'நான்' என்ற மயக்கம் இருக்கும்.

வீணான ஆராய்ச்சியில் காலத்தை வீணாக்காதீர்கள். உங்கள் அறிவின் துணை கொண்டு உண்மையை அறிந்து கொள்ளுங்கள். வாழ்வுக்காகட்டும், மரணத்துக்காகட்டும் காரணம் இருக்கிறது. காரணமில்லாமல் எதுவும் நிகழ்வதில்லை.

இன்பமோ துன்பமோ ஒரு காரணத்தோடுதான் வருகிறது.

கடல்நீர் ஆவியாகி, வானமண்டலத்தில் மேகமாய் உருவெடுக்கிறது. பின்பு, அது மழையாகி மலைச்சரிவின் வழியே உருண்டோடி ஆறாகிறது. ஆறு கடலில் கலக்கிறது. இது ஒரு சுழற்சி, இடையறாத இயக்கம். எல்லா நிகழ்வுகளிலும் இதனை நீங்கள் காணமுடியும்.

நடுக்கடலின் ஆழம் கரையோரத்தில் இல்லை. கரையில் நிற்பவர் கொஞ்சம் கொஞ்சமாய் கடலினுள் செல்லும் போது அதன் ஆழம் அதிகரிப்பதை அறியலாம். அதுபோலவே படிப்படியாகத்தான் தர்மத்தில் மேன்மை அடைய முடியும். பயிற்சியைத் தொடர்வதன் மூலமே ஒழுக்கத்தில் உணர்வு காணமுடியும்.

கடல் மரித்தவைகளை தன்னுள் வைத்துக் கொள்ளாது. கரையோரம் ஒதுக்கிவிடும். ஒழுக்கமற்றவர் கூட்டுறவை நாம் அவ்விதமே ஒதுக்கிவிட வேண்டும்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 8:05 am

நற்பண்புள்ளவனே துறவி

தர்ப்பைப் புல்லைத் தவறாகப் பற்றியிழுத்ததால் அது கையைக் கிழித்து விடுகிறது; அதுபோலவே தீய வழியில் அனுஷ்டிக்கும் துறவறமும் ஒருவனை நரகத்திற்கு வழி நடத்துகிறது.

மூடனான துறவி போலியான கீர்த்தியை விரும்புகிறான்.

துறவிகளிடையே முதன்மையானவனாகவும், துறவற மடங்களிலே தலைவனாகவும் இருக்க வேண்டுமென்றும் இல்லறத்தார் தன்னை வணங்க வேண்டுமென்றும் அவன் விரும்புகிறான்.

எவன் மன மாசுகளிலிருந்து தன்னையே சுத்தி செய்து கொள்கிறானோ, எவன் சகலவிதமான நற்பண்புகளிலும் நன்கு நிலைத்து நிற்கிறானோ, எவன் சத்தியத்தையும் நிதானத்தையும் பொருட்படுத்துகிறானோ அவனே காஷாய ஆடைக்கு அருகதை உள்ளவன்.

எவன் தன்னையே மன மாசுகளிலிருந்து சுத்தப்படுத்திக் கொள்ளாமலும், சத்தியத்தையும், நிதானத்தையும் பொருட்படுத்தாமலும், காஷாய ஆடை தரிக்க விரும்புகிறானோ அவன் அந்தக் ஆடைக்குத் தகுதியானவன் அல்ல!
பாச பந்தங்கள் அனைத்தையும் அறுத்தெறிந்து விடுதலை பெற்றவனுக்கும், மனதின் எல்லாவித விலங்குகளையும் உடைத்தெறிந்தவனுக்கும் துன்பம் என்பதே இல்லை!
உண்டாக்கப்பட்டவை அனைத்தும் துன்பமும் துயரமுமானவை. இதை உணர்ந்து காண்பவனே துன்பத்தில் அமைதியாக இருக்கிறான். இதுவே தூய்மைக்கு வழிநடத்தும் பாதை.

நீண்ட காலம் துன்பத்தைத் தாங்கும் சகிப்புத் தன்மையே முதன்மையான தவம். பிறரைத் துயர்படுத்துகிறவன் சந்நியாசியல்ல.

அறிவுக் கூர்மையும், நேர்மையும், உறுதிப் பாங்கும் உள்ளவனாய் உன்னோடு ஒத்துப் பழகக் கூடியவனாய் ஒரு வழித்துணைவன் கிடைக்கிறானா? எல்லாக் கவலைகளையும் விட்டுவிட்டு, களிப்புடனும் கருத்துடனும் அவனோடு நடந்து செல்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 8:06 am

தீயநட்பு வேண்டவே வேண்டாம்


அறிவாளியின் நட்பு, உறவினர்களைக் காண்பதைப் போன்று இன்பத்தை அளிக்கும். மூடர்களுடைய நட்பு பகைவனுடைய கூட்டுறவைப் போல துன்பம் தரும்.

நல்ல அறிவும், நல்லொழுக்கமும் உடைய தீமைகளைக் களைந்து நிதானமாக வாழ்கிற நண்பர் ஒருவர் உனக்குக் கிடைப்பாரானால் விருப்பமோடு அவருடன் கலந்து பழகு.
எதிரிக்கும் நண்பனாய் இரு. தேவைக்கு உதவி செய்.

அறிவாளியாயும், ஒத்துப் போகக்கூடியவனாயும், அடக்கமும், நல்லொழுக்கமும் உடைய ஒரு தோழன் கிடைப்பானாகில் எல்லா இடையூறுகளையும் கடந்து அவனுடன் கருத்துடனும் மகிழ்ச்சியுடனும் நட்புக் கொள்ள வேண்டும்.

மூடனின் நட்பைப் பெறுவதனைக் காட்டிலும், ஒருவன் தனியே வசிப்பது நல்லது. அவனது நட்பு பாவ காரியங்களைச் செய்ய வைக்கும்.

முட்டாள்களுடன் ஒட்டி வாழ்வதைக் காட்டிலும் தனிமையாய் வாழ்வதே சிறந்தது. மடையர்களின் நட்பில் வாழ்பவர் அதிக காலம் துன்புறுவார்கள். மடையர்கள் நட்பு எதிராளியின் நட்பை விட மிகுந்த வேதனை அளிக்கும். தீய நட்பும், வீணருடன் உறவும் வேண்டாம். நல்லாரோடு இயங்கிப் பெரியோரைத் துணைக்கொள்.

உங்களுக்கு உபதேசிக்கப்பட்டுள்ளது என்பதற்காகவோ, சம்பிரதாயமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பதாலோ, உங்கள் கற்பனையே ஒட்டியது என்பதாலோ எதையும் நம்பாதீர்கள். குரு போதிப்பதை நீங்கள் அவரிடம் கொண்டுள்ள மதிப்பின் காரணமாக மட்டும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். எந்தச் செயலையும் நன்கு ஆராய்ந்து எது எல்லாப் பிறவிகளின் நன்மைக்கும், நலனுக்கும் உகந்தது நல்லது என்று தெரிந்தால், அதை உறுதியாய் கடைப்பிடியுங்கள்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 8:07 am

இன்பம் மட்டும் தான் வாழ்க்கையா?



* மிகச்சிறந்த நூல்களை ஆராயாமல் உள்ளத்தை சுகபோக வாழ்க்கைக்கு அர்ப்பணித்து இன்பத்திற்கும் இனிப்பிற்கும் ஏங்கி நிற்பது மோட்சமுடைய வாழ்க்கைக்கு செல்வதாக ஆகாது. அந்த வாழ்க்கை செல்லரித்த வாழ்க்கையாகவே இருக்கும்.


* பொய் பேசாத, உண்மை பிறழாத வாழ்க்கை தான் மனிதனுக்கு தேவை. திருடும் வாழ்க்கை தேவையில்லை.


* வாழ்க்கை நன்கு அமைய தியானம் செய்ய வேண்டும். மனத்தை ஒருநிலைப்படுத்த வேண்டும். அலைகின்ற மனம் கூடாது. அலைகின்ற மனத்துள் ஆசைகள் தோன்றும். ஆசைகள் தோன்றும்பொழுது மிகவும் அற்பமான செயல்களைச் செய்ய தூண்டப் பெறுவோம்.


* சமூகத்தை தம் போலித்தனத்தால், பதவிச் செருக்கால், அதிகார ஆணவத்தால் திருடத் துணிபவன், சுரண்ட முயல்பவன் மிகவும் தீமையானவன். அவன் தவிட்டிற்குச் சமம்.


* கண நேரம்கூட வீண்பொழுது போக்கக்கூடாது. வீண்பொழுது போக்காத வாழ்க்கையே மிகவும் உயர்ந்த வாழ்க்கையாகும். பொய்யுடைய வாழ்க்கை புறங்கூறும் வாழ்க்கையாகும்.


* உயர்ந்த வாழ்க்கை வாழ நினைப்பவர்கள், நாம் ஆற்றும் நற்பணிகளுள் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். கண்ணும் கருத்துமற்ற செயல் மண்ணில் பெருமை தரக்கூடியதாக இருக்காது. பெருமை தரக்கூடிய பிறர் போற்றக்கூடிய செயல்களையே செய்தல் வேண்டும்.


* இனிப்பு பண்டத்தின் சுவைக்கு மயங்குவது போல, இன்பச்சுவை எப்பொழுதும் ஊறு விளைவிக்கும். இன்பச்சுவையில் மெய்மறந்து ஓரிடத்திலேயே தங்க விரும்புவோம். அந்த வாழ்க்கை கூடாது. யாத்திரை புறப்பட வேண்டும். எங்கும் சுற்றித் திரிய வேண்டும்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 8:08 am

சிறிய உதவிக்கு கூட பெரிய பலன்



* கொடுக்கின்ற பழக்கம் வேண்டும். அத்துடன் கொடுக்கின்ற மனம் உடையவர்களைத் தடுக்கின்ற மனம் நம்மிடையே வரக்கூடாது.


* இன்று இளமையுடன் தன் அழகால் ஆணவம் பெற்று உயர்ந்த வாழ்விற்கு ஆசைப்படுபவள் நாளை அழகு அழிந்து கிழவியாகி இறப்பது உறுதி.


* ஏழ்மையில் உழலும் தாய்மார்களுக்கு நாம் செய்யும் உதவிகள் பாராட்டக்கூடியதாகும்.


* பெரியவர்களுக்கும், நல்லவர்களுக்கும் நாம் செய்யும் உதவியே பெரியதாகும். அந்த உதவி சிறியதாக இருந்தாலும் பெரியதாக வளர்ந்து நிற்கும்.


* பெண்களின் அழகைக் கண்டு மயங்க வேண்டாம். காலையில் மலரும் அழகான மலர் மாலையில் ''நான் அழகுடன் திகழ்கிறேன், என்னை வாடச் செய்யாமல் இருக்கச் செய்'' என்றால் இயற்கை விடுகிறதா?


* இருக்கின்ற பொழுது நாம் செய்யும் அன்னதானம், அடைக்கல சுகம், அருங்கல்விச்சாலை ஆக அத்தனையும் நம் புகழ்பாடும்.



* நாம் உயிருடன் இருக்கும்பொழுது செய்யும் நற்பணிகளே நம்மை அழியாமல் புகழுக்கு இட்டுச் செல்லும்.




* உதவிகள் பெயரால் பெண்களின் உறுப்புகளை வர்ணித்து உளறுதல் அறிவற்றவன் செயல். அறிவற்றவர்கள் போலி அழகுக்கும் பொல்லாத இளமைக்கும் மயங்குவர்.




* மயங்காத அறிவு படைத்தவர்களே துறவிகள். அவர்களே ஞானிகள்! அவர்கள் திருமணத்தை விரும்பமாட்டார்கள். மிகவும் பொறுமைசாலிகள்.




* உதவி என்பது நமது அன்பினால் அவசரங்கட்கும், தேவைகட்டும் எளிய முறையில் செய்யக்கூடியதாகும். நாம் செய்யும் உதவிகள் என்றென்றும் நன்றி பாராட்டக்கூடியதாக திகழ வேண்டும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக