புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எண்.25 - விடையற்ற விடுகதை  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.25 - விடையற்ற விடுகதை  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.25 - விடையற்ற விடுகதை  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
30 Posts - 50%
heezulia
கதை எண்.25 - விடையற்ற விடுகதை  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.25 - விடையற்ற விடுகதை  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.25 - விடையற்ற விடுகதை  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
கதை எண்.25 - விடையற்ற விடுகதை  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.25 - விடையற்ற விடுகதை  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.25 - விடையற்ற விடுகதை  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எண்.25 - விடையற்ற விடுகதை  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.25 - விடையற்ற விடுகதை  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.25 - விடையற்ற விடுகதை  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
72 Posts - 57%
heezulia
கதை எண்.25 - விடையற்ற விடுகதை  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.25 - விடையற்ற விடுகதை  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.25 - விடையற்ற விடுகதை  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
கதை எண்.25 - விடையற்ற விடுகதை  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.25 - விடையற்ற விடுகதை  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.25 - விடையற்ற விடுகதை  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
கதை எண்.25 - விடையற்ற விடுகதை  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண்.25 - விடையற்ற விடுகதை  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண்.25 - விடையற்ற விடுகதை  (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எண்.25 - விடையற்ற விடுகதை (சிறுகதை சின்னத்திருவிழா)


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 13, 2012 10:48 am

விடையற்ற விடுகதை



சட்டைப்பாக்கெட்டிலிருந்த செல்போன் அதிர்ந்ததும், அன்னார்ந்து சுவர் கடிகாரத்தை பார்த்தேன். அது 5:35 என்று காட்டியது. அந்த அழைப்பு அமரனிடமிருந்துதான் என்று தெரியும் எனக்கு. “அமரா. . . . . கௌம்பிட்டியா? சரி நானும் தோ ரெண்டு நிமிஷத்துல வந்துடறேன்”.

பார்த்துக்கொண்டிருந்த கோப்புகளை அப்படியே மூடி மூட்டைக்கட்டி வைத்துவிட்டு புறப்பட்டேன். ஆமாம். எப்படிப்பட்ட முக்கியமான வேலையில் மூழ்கியிருந்தாலும் , அமரனிடமிருந்து அழைப்பு வந்துவிட்டால், அவ்வளவுதான்
அதற்கு பின் எதிலும் நாட்டம் கொள்ளாமல், அவனை சந்திப்பதை நோக்கியே மனம் சிந்திகத்தொடங்கிவிடும். சும்மாவா! இருபத்திதைந்தாண்டு கால நட்பாயிற்றே!

“சார்!. . . ரூம பூட்டிடலாமா? திரும்பி வருவீங்களா?” வாட்ச் மேன் கேட்டான்.

“ இல்ல இல்ல அப்படியே போயிட வேண்டியதுதான்” என்றேன்.

"சார்! நான் சொல்லேறன்னு தப்பா நெனைக்காதீங்க. இனிமே, 'அப்படியே போயிடுவேன்னு’ சொல்லாதீங்க சார். நல்லா இல்ல! அதையே வேற மாதிரி சொல்லுங்க.” முகத்தை இருக்கமாக வைத்துகொண்டு சொன்னான்.

“ஐயையோ! சரி..விடு. நான் வாக்கிங் போயிட்டு, அப்படியே வீட்டுக்கு போயிட்டு, நாளைக்கு காலையில வர்றேன். போதுமா? “

அவன் குனிந்து கொண்டே தலையசைத்தான்.

"வார்த்தைகளிலா வாழ்;க்கை இருக்கிறது’ என்று போயிடுவேன் என்றால்.. போய்விடுவேனா? அவன் ஏன் அப்படி பயப்படுகிறான்?’ என்று சிந்தித்துக் கொண்டே வழக்கமாக வண்டியை விடும் இடத்தில் விட்டுவிட்டு காந்தி சிலையை நோக்கி நடந்தேன்.

அலுவலகம் முடித்துவிட்டு மாலையில் கடற்கரையோரம் அரைமணிநேரம் நடந்து விட்டு வீட்டுக்கு செல்வது வழக்கத்திலிருந்தது. வேலை அதிகம் இருக்கும் நாட்களில், நடையை முடித்துவிட்டு மீண்டும் அலுவலகத்திற்கே சென்று எட்டு எட்டரை வரை வேலை பார்த்துவிட்டு போவேன். அந்த அர்த்தத்தில் வாட்ச்மேன் கேட்கப்போய்தான்…

அமரன் எனக்கு முன்பே வந்து அமர்ந்திருந்தான். மற்றவர்களைப்போல மாலையில் நடந்தால் உடலுக்கு நல்லது என்பதற்காக இல்லாவிட்டாலும்;. அமரனோடான அந்த அரைமணிநேரம் சந்திபிற்காகவே தவறாமல் வருவதுண்டு. இந்த மாலை சந்திப்பு குறித்து இதே உணர்வு இருப்பதாக அமரனும் சொல்லியிருக்கிறான்.

"வாடா. .. . என்ன . . . சிரிச்சுக்கிட்டே வர்ற. .. . ?” அமரன் கேட்டான். வாட்ச்மேன் சொன்னதைச் சொன்னேன்.

"ஆமாம்டா. வாழ்க்கை குறித்த பயத்தோட வாழறவங்தான் இங்க அதிகம். ஒருத்தனோட வாழ்க்கை எதுஎதுலியோ இருக்கிறதா நம்பறாங்க. 'போறேன்’னா..'போய்ட்டுவர்றேன்’னு சொல்லுங்கம்பாங்க. கல்யாணம் ஆவற மாதிரி கனவு கண்டா.. எழவு விழும்ன்னு அடிச்சி சொல்லுவாங்க. தோ…பாரு.. ரெண்டு வருஷமா நாம தொடர்ந்து பீச்சுக்கு வர்றோம். 'வாக்கிங்’ போற கூட்டம் எப்படி பெருத்துகிட்டே வருது பார்த்தியா? எல்லோர்க்கும் உயிர் பத்தின பயம் அதிகமாயிகிட்டேபோகுது!”

"சரி அமரா, அந்த பயம் தப்புன்னு சொல்றியா?"

“தப்புன்னு சொல்ல. வாழற எல்லோருக்குமே சாவற ரிஸ்க் இருக்கறப்போ…அதையே எதுக்கு சிந்திச்சுகிட்டு இருக்கனும். நிச்சயமா, உயிரோடு இருக்ககிறவரைக்கும் சாவு வரப்போறதில்ல. அப்புறம்…? போறதுக்குள்ள எதையாவது உருப்படியா குடும்பத்துகோ தெருவுக்கோ ஊருக்கே நாட்டுக்கோ, உலகத்துக்கோ, செய்ய முடியாமான்னு பார்க்கிறத விட்டுட்டு ‘ஐயையோ! நாம செத்துடபோறோம்ன்னு’ பயந்து பயந்து வாழறது, ஒரு வாழ்க்கையா?”

“சரி அமரா. அதவிடு. எதுக்கு அந்த சீரியசான டாப்பிக். அப்புறம்… காஞ்சனாவுக்கு ஏதோ டெஸ்ட்டெல்லாம் எடுக்க சொன்னாங்கன்னியே.. எடுத்தாச்சா?”

“அத ஏன்டா கேக்குற…? அவளுக்கு எடுக்கப் போய், ‘ஏங்க… உங்களுக்கும் நாற்பது வயசு ஆயிடுச்சி. நீங்களும் எடுத்துக்கோங்கன்னு அடபிடிச்சா.”

"குட். எடுத்தியா? இல்லியா?”

"எடுத்தேன்…எடுத்தேன். சுகர், பி.பி, கொலஸ்ட்ரால்…எல்லாமே நார்மல். இன்னும் சொல்லப்போனால், அவளவிட எனக்கு எல்லாம்; கரைக்ட்டான லெவல்ல இருக்குது.”

“ஓ.கே. ஓ.கே”

"என்னடா ஓ.கே. இந்த டெஸ்டுக்கெல்லாம்கூட உயிர்பத்தின பயம்தான் காரணம்?”

என் சட்டைப்பையில் இருந்த செல்போன் அதிர்ந்தது. எடுத்து பேசி முடித்ததும், அமரன் எரிச்சலோடு," ஏன்டா. . . எத்தனைதடவ சொல்றது? சைலன்;ட் மோடுல போட்டு, பாக்கெட்ல வைக்காதேன்னு. அந்த வைப்ரேஷன்… ரேடியேஷன்… உடம்புக்கு நல்லதில்ல…ஹார்ட்அட்டாக் வருதுன்னு ஆராய்ச்சிகள் சொல்லுது.”

"இல்லப்பா. ஆபிஸ்ல, சைலன்ட்டல போட்டு வைக்கிறேனா..அத மாத்தியிருக்கனும்..மறந்துட்டேன்.”

" சரி. யாரு போனுல ? யாருடா ஆஸ்பிட்டல இருக்கா?” அமரன் ஆர்வமாய் கேட்டான்.

“விழுப்புரத்திலேர்ந்து சித்தப்பா பையன் பேசினான். சித்தப்பாவுக்கு உடம்பு முடியலேன்னு ஆஸ்பிட்டல்ல சேர்த்தாங்கலாம். பல்ஸ் கொறஞ்சிகிட்டே போவுது.. சொல்லவேண்டியவங்களுக்கெல்லாம் சொல்லிடுங்கன்னு சொல்லிட்டாங்கலாம்.”

“நீ போய், பார்த்துட்டு வரப்போறியா? ஏன் கேட்கறேன்னா.. அவரு மூணு மணிநேரத்துல இல்ல… மூணுமாசம்… ஏன்?? மூணு வருஷம் கூட உயிரோட இருக்க வாய்ப்பிருக்கு”.

"டேய்…அவருக்கு வயசு ஏழுபத்தி ரெண்டு ஆகுதுடா…”

“ஆகட்டும்…வயசுக்கும் சாவறதுக்கும் சம்மந்தமில்லடா. எண்பது வயசு, தொண்னூரு வயசுன்னு யாரும் வாழறதில்லையா? ஏன் சொல்றேன்னா… எங்க வீட்டு பக்கத்தில ஒரு பெரியவரு… இன்னிக்கு போயிடுவாரு நாளைக்கு போயிடுவாருன்னு எட்டு வருஷமா இருக்கார்.”

"அதுக்கு என்ன காரணம்ன்னு நீ நெனைக்கிறே?”

"நண்பா.. உயிர் பத்தின தியரி, ரெண்டும் ரெண்டும் நாலுன்னு புரிஞ்கிற அளவுக்கு ஈசியானது இல்ல. அது ஒரு சிக்கலான விடுகதை. சரி..நீ விழுப்புரம் கௌம்பனுமில்ல…புறப்படலாம்...”

விழுப்புரம் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தபோது மணி ஒன்பது. மருத்துவமனை என்றாலே எனக்குள் ஒருவித பதட்டம் தொற்றிக்கொள்ளும். அதனாலோ என்னவோ எனக்கு லேசாக நெஞ்சு வலிப்பதுபோல் இருந்தது.
‘அப்படியெல்லாம் சொல்லாதீங்க சார்..’ என்று வாட்ச்மேன் சொன்னதும், ‘செல்போன அங்க வைக்காதடா…ஹார்ட் அட்டாக் வருதாம்’ என்று அமரன் சொன்னதும் தேவையில்லாமல் நினைவுப்பரப்பில் வந்து நிழலாடியது.

“அண்ணே… வந்துட்டீங்களாண்ணே…? இல்லண்ணே! ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடிதான் அதே டாக்டர் திரும்ப வந்து, இட் ஈஸ் எ மெடிக்கல் மிராக்கல்… அவரோட பல்ஸ் இம்ப்ரூவ் ஆயிடுச்சு. அவரு சீக்கிரமே நார்மலுக்கு வந்துடுவார்ன்னு சொல்லிட்டு போயிட்டாருண்ணே!” தலையை சொறிந்துகொண்டே, சித்தப்பா மகன் சொன்னான்.

“சரிப்பா.. நல்ல விஷயம்தானே! இருக்கட்டும”; என்று சொல்லிவிட்டு, சித்தப்பாவை அருகில் சென்று பார்த்துவிட்டு மருத்துவமனையைவிட்டு வெளியே வந்த போது, “அவரு மூணு மணிநேரத்துல இல்ல… மூணுமாசம்… ஏன்?? மூணு வருஷம் கூட உயிரோட இருக்க வாய்ப்பிருக்கு” அமரன் சொன்னது நினைவுக்கு வந்தது. ஏனோ பெருமையாக இருந்தது. சம வயதாக இருந்தாலும்கூட, உயிர் பற்றியும், வாழ்க்கைப்பற்றியும் அவனுக்கு தெரிகிற அளவிற்கு, அல்லது அந்த தத்துவம் புரிகிற அளவிற்கு நமக்கு புரியவில்லையே! ம்ம்.. என்று பெருமூச்சு விட்ட நொடியில், பாக்கெட்டினுள் செல்போன் அதிர்ந்தது.

‘ஐயோ! நல்ல வேள…அமரன் பக்கத்துல இல்ல…’ என்று சிந்தித்துக்கொண்டே கையில் எடுத்தபோது, செல்பேசி திரையில் அமரன் என்ற பெயர் ஒளிர்ந்தது. சித்தப்பா பற்றி விசாரிப்பதற்காய் இருக்கக்கூடும் என்று எடுத்தேன். எதிர்முனையில் அமரனின் மனைவி காஞ்சனா கதறிக்கொண்டே,
“அண்ணே..அவரு இறந்துட்டார்ண்ணே…சாப்பிட்டுட்டு உட்க்கார்ந்தவர், அப்படியே சாஞ்சிட்டார்ண்ணே… எனக்கு ஒன்னுமே புரியல…சீக்கிரம் வாங்கண்ணே..” என்றாள்.

அதிர்ச்சித் தாக்கி அப்படியே விழுந்த என் காதுகளில், "நண்பா.. உயிர் பத்தின தியரி, ரெண்டும் ரெண்டும் நாலுன்னு புரிஞ்கிற அளவுக்கு ஈசியானது இல்ல. அது ஒரு சிக்கலான விடுகதை.” அமரனின் குரல் எதிரொலித்துக்கொண்டேயிருந்தது.

ருக்மணி
ருக்மணி
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012

Postருக்மணி Sun Oct 14, 2012 10:51 pm

"நண்பா.. உயிர் பத்தின தியரி, ரெண்டும் ரெண்டும் நாலுன்னு புரிஞ்கிற அளவுக்கு ஈசியானது இல்ல. அது ஒரு சிக்கலான விடுகதை.”

உண்மை தான்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக