புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10 
68 Posts - 41%
heezulia
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
manikavi
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10 
319 Posts - 50%
heezulia
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10 
21 Posts - 3%
prajai
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_m10தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர்


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Aug 25, 2012 8:45 pm

First topic message reminder :

தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 527913_478838132134442_830937098_n

ஜீவா என்கின்ற ஒரு பெருமகனார் இருந்தார், தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர். கம்யூனிஸ கட்சியை சார்ந்தவர்! மிகப்பெரிய பேச்சாளர்! அவருடைய பேச்சுக்களை எல்லாம் அக்காலத்து மாற்று கட்சியினர் கூட ரசித்தனர், வரவேற்றனர்; தன்னலமற்ற அரசியல்வாதி! காமராஜரின் நெருங்கிய நண்பர்.முக்கியமான விஷயம் அவர் பரம ஏழை. ( ஒரு அரசியல்வாதி ஏழையாய் இருப்பது அதிசயம் தானே!)

ஒருமுறை திருச்சியிலே மாநாடு ஒன்றை முடித்து விட்டு சென்னை திரும்ப ரயில் நிலையத்தை வந்து அடைந்தார். இரவு நேரம் என்பதால் ரயில் ஏற முடியவில்லை பிறகு அங்கேயே படுத்து கொண்டார். இப்போது போலவே அப்போதும் யாரும் அவரை கவனிக்கவில்லை. இரவு உணவு கூட உண்ணவில்லை. விடியற்காலை அவ்வழியாக வந்த காமராஜர் நண்பர் ஜீவாவை பார்த்ததும் மகிழ்ந்து அவரிடம் பேச தொடங்கினார். ஜீவா அவர்கள் சிறிது பேசிவிட்டு பிறகு தன் நண்பரிடம் எனக்கு ரொம்ப பசிக்கிறது கையில் பணம் இல்லை ஒரு டீயும் பண்ணும் வாங்கி தாருங்கள் என்றார். உடனே காமராஜர் விரைந்து வாங்கிக் கொடுத்தார். அதனை வாங்கும் போது அவர் சட்டை பையில் உள்ள சில்லறைகள் சத்தம் கேட்டது. காமராஜர் உடனே என்ன ஜீவா கையில் பணம் இல்லை என்று சொன்னீர்களே, ஆனால் சத்தம் கேட்கிறதே, அதை வைத்து சாப்பிட வேண்டியது தானே என்று அக்கறையோடு கேட்டார். அதற்கு ஜீவா உடனே சொன்னார்,
"அது கட்சி பணம் எனக்கு உரியது அல்ல" என்றார். கையில் பணம் இருந்தும் அது கட்சி பணம் என்பதனால் இரவு முழுவதும் பட்டினியாய் இருந்த அந்த நேர்மையை கண்டு உளம் மகிழ்ந்து தன் நண்பரை ஆர தழுவிக்கொண்டார். இதனை உடனிருந்து கண்டவர் நம் குமரி அனந்தன் அவர்கள்.

இவர்களை எல்லாம் நமக்கு தெரியுமா ???? நடிகர் ஜீவாவைத் தான் நமக்கு தெரியும்....




செந்தில்குமார்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Aug 25, 2012 9:24 pm

கே. பாலா wrote:காமராஜர் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில், தாம்பரம் வழியாகச் செல்லும்போது காரை ஜீவாவின் குடிசை வீட்டுக்கு விடச் சொல்வார். அவ்வாறு ஒருமுறை காமராஜர் ஜீவாவின் வீட்டுக்குள் நுழைந்த போது, ஜீவா நான்கு முழ வேட்டியின் ஒருமுனையை மரத்தில் கட்டிவிட்டு, மற்றொரு முனையைக் கையில் பிடித்துக் கொண்டு வெயிலில் காய வைத்துக் கொண்டிருந்தார். உடனே, வசதியில்லாமல் வாழ்ந்த ஜீவாவுக்கு நான்கு ஜோடி வேட்டி, முழங்கைச் சட்டைகளை நட்புரிமையுடன் வாங்கித் தந்தார் காமராஜர்.
பாலா சார் நன்றி மற்றுமொரு தகவலுக்கு..........அவரைப் பற்றி படிக்கக் படிக்க இன்னும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றிருக்கிறது.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Aug 25, 2012 9:29 pm

அதி wrote:
பாலா சார் நன்றி மற்றுமொரு தகவலுக்கு..........அவரைப் பற்றி படிக்கக் படிக்க இன்னும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றிருக்கிறது.
ஜீவா" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட ப. ஜீவானந்தம் கம்யூனிச
இயக்கத்தில் மிகவும் பிரபலமானவராகவும் அக்கட்சியின் அதிகார பூர்வ ஏடான
"ஜனசக்தி" இதழ் ஆசிரியராகவும் இருந்தவர். இவர் காங்கிரஸ் இயக்கத்தில்
தீவிரமாக இறங்கி பாடுபட்டதும், மகாத்மா காந்தியால் பாராட்டப்பட்டதும்
அனைவரும் அறிந்த செய்தி.

கன்யாகுமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி எனும் சின்னஞ்சிறு கிராமத்தில்
21-8-1907இல் பட்டன் பிள்ளை உமையம்மை தம்பதியரின் மகனாகப் பிறந்தார் ஜீவா.
இந்தச் சிறுவனுக்கு சொரிமுத்து என்றும் மூக்காண்டி என்றும் பெயர் . இவரே
தனது பெயரை ஜீவானந்தம் என்று மாற்றி வைத்துக் கொண்டார். இளம் வயதில்
மகாத்மா காந்தியின்பால் ஈர்க்கப்பட்டு காந்திய வழியில் அரசியல் சமூகப்
பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இராமநாதபுரம் மாவட்டம் சிராவயம்
எனும் கிராமத்தில் 1927இல் "காந்தி ஆசிரமம்" ஒன்றை இவர் நிறுவினார்.

1927இல் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மகாநாடுதான் ஜீவா கலந்து கொண்ட
காங்கிரஸ் மாநாடு. அரசியலில் காந்திஜியையும் சமூகப் பிரச்சினைகளில்
பெரியார் ஈ.வே.ராமசாமி அவர்களையும் பின்பற்றத் தொடங்கினார். அரசியல், சமூக
மாற்றம் இவற்றோடு இலக்கியத் தாக்கமும் அவரிடம் இயற்கையாக வந்து சேர்ந்து
கொண்டது. மகாகவி பாரதியின் பால் மிக்க ஈடுபாடு கொண்டு அவர் எழுதியுள்ள
நூல்களும், கட்டுரைகளும் ஏராளம். கவி ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளில்
மனம் ஈடுபட்டு அவற்றை அழகிய தமிழில் இவர் மொழிபெயர்த்துப் பாடுவதை நாள்
முழுவதும் கூட கேட்டுக் கொண்டிருக்கலாம். குறிப்பாக தாகூரின் "கீதாஞ்சலி"யை
இவர் தமிழாக்கம் செய்திருப்பதைப் போல வேறு யாரும் செய்திருப்பதாகத்
தெரியவில்லை.

சிராவயலில் தான் நடத்தி வந்த ஆசிரமத்துக்கு காந்திஜி வரவேண்டுமென்று
கேட்டுக் கொண்டதற்கிணங்க காந்திஜி வருகை புரிந்தார். அங்கு வந்து
ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்த காந்திஜி ஜீவாவிடம், உங்களுக்கு எவ்வளவு
சொத்து இருக்கிறது என்று கேட்டாராம். அதற்கு ஜீவா இந்த தேசம்தான் எனது
சொத்து என்று பதில் கூறினாராம். இந்தப் பதிலைக் கேட்டு வியந்துபோன காந்திஜி
இல்லையில்லை நீங்கள்தான் இந்த நாட்டின் சொத்து என்றாராம். இந்தச் செய்தி
பலராலும் பிரபலமாகப் பேசப்பட்டு வந்த செய்தி.

மகாத்மா காந்தி விதவைகளின் மறுமணம் பற்றிக் கொண்டிருந்த கருத்தை மகாகவி
பாரதியும் கண்டித்திருக்கிறார். காந்திஜி இன்னமும் இந்த விஷயத்தில்
பிற்போக்கானவர் என்பது அவர் கருத்து. அதுபோலவே ஜீவாவும் சமூக
சீர்திருத்தங்களில் காந்திஜி சற்று பிற்போக்கானவர், ஆனால் தேச சுதந்திரம்,
கதர்த் தொழில் ஆகியவை அவர் கொண்ட உயரிய சேவைகல் என்று கருதினார்.

1928இல் சைமன் கமிஷன் எதிர்ப்பு இயக்கத்திலும் அதனையொட்டி அந்தப் போரில்
போலீசார் தாக்குதலில் உயிரிழந்த பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராயின்
மறைவினால் மனம் பாதிக்கப்ப்ட்ட நிலையில் ஜீவா பல ஊர்களுக்கும் சென்று
பொதுமக்களிடம் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் அக்கிரமங்களை விளக்கிப் பொதுக்
கூட்டங்களில் பேசினார். 1928இல் பெரியகுளத்தில் நடைபெற்ற காங்கிரஸ்
மாநாட்டில் சிறிது நேரம் பேசினார். இந்த காலகட்டத்தில் கப்பலோட்டிய தமிழன்
வ.உ.சிதம்பரம் பிள்ளையோடும் ஜீவாவுக்குப் பழக்கம் ஏற்பட்டது.

சரி! காங்கிரஸில் இருந்து கொண்டு காந்திஜி, பெரியார் ஆகியோருடைய
கொள்கைகளைப் பின்பற்றி வந்த ஜீவா பின் எப்போது கம்யூனிஸ்ட்டாக மாறினார்?
இந்த கேள்வி எழுகிறது அல்லவா? ஆம். அதற்கொரு சரியான காரணம் இருக்கிறது.
இந்திய சுதந்திரப் போர் ஒரு பக்கம் நாளுக்கு நாள் வலுவடைந்து
கொண்டிருந்தது. மகாத்மா காந்தி போலவே நாட்டிலுள்ள அனைவரும் அமைதி, அகிம்சை,
சத்தியாக்கிரகம் என்று இருப்பார்கள் என்று எண்ணியதோ என்னவோ பிரிட்டிஷ்
அரசு. ஆனால் அவர்களது எண்ணங்களுக்கு மாறாக பல மாகாணங்களில் தொழிலாளர்
இயக்கங்கள் உருவாகி, வளர்ந்து, பலம்பெறத் தொடங்கியது. தொழிலாளர் நலன்
மட்டுமல்ல, நாட்டு நலனும் முக்கியம் என்று இவர்களது செயல்பாடு இருந்தது
கண்டு வெள்ளையர் ஆட்சிக்குக் கிலி பிடித்தது. என்ன செய்வது? இந்த தொழிலாளர்
தலைவர்களையெல்லாம் பிடித்துச் சிறையில் தள்ளி இவர்கள் பிரிட்டிஷ்
சாம்ராஜ்யத்துக்கு எதிராகச் சதி செய்தார்கள் என்று குற்றம் சாட்டிச்
சிறையில் தள்ளிவிட எண்ணியது.

அதற்காக வட மாநிலங்கள் மேற்கு வங்கம், பம்பாய், பஞ்சாப், ஐக்கியமாகாணம்
போன்ற பகுதிகளில் இருந்த விவசாய, தொழிலாளர் இயக்கங்களைச் சேர்ந்த
தலைவர்களைப் பிடித்து அவர்கள் மீது சதிவழக்கொன்றை ஜோடித்து விசாரணை என்ற
பெயரில் ஒரு நாடகம் நடத்தினர். இதற்கு "மீரத் சதிவழக்கு" என்று பெயர்.
கம்யூனிச இயக்கத்தின் மூத்த பிதாமகர் எஸ்.ஏ.டாங்கே போன்ற முன்னணித்
தலைவர்கள் குற்றவாளிகளாக நீதிமன்றத்தில் நின்றார்கள். நான்கு
ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த இந்த வழக்கின் தீர்ப்பு 1933இல் வெளிவந்தது.
குற்றவாளிகள் என கூண்டில் நிறுத்தப்பட்டவர்கள் அனைவரும் மிக விளக்கமாக
அறிக்கைகளை வெளியிட்டார்கள். இதையெல்லாம் படித்த ஜீவாவுக்கு வர்க்க உணர்வு
ஏற்பட்டுத் தனது எதிர்கால அரசியலை நிச்சயம் செய்து கொண்டார்.

ஜீவாவின் அனல் கக்கும் பேச்சைக் கண்டு பிரிட்டிஷ் அரசு, இவர் இனி எந்தக்
கூட்டத்திலும் பேசக்கூடாது என்று தடை விதித்தனர். ஆனால் அந்தத் தடையை மீறி
ஜீவா கோட்டையூரில் பேசினார். இது பெரிய குற்றம் அல்லவா, பிரிட்டிஷார்
பார்வையில். இவர் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அங்கிருந்து பிறகு திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டார். அவரது சிறைவாசமும்,
சிறையில் பகத் சிங்கின் கூட்டாளிகளோடு ஏற்பட்ட பரிச்சயமும், மார்க்சீய
நூல்களைப் படித்ததன் பலனும் சேர்ந்து இவரை ஒரு முழு கம்யூனிஸ்ட்டாக
மாற்றியது.

கம்யூனிசம் ஒரு புறம், சமூக சீர்திருத்தம் மறுபுறம் என்று இவர் இருமுனை
வாளாகச் செயல்பட்டார். பகத் சிங்கின் நூலொன்றை இவர் தமிழில்
மொழிபெயர்த்தமைக்காகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார் ஜீவா.
அப்படிக் கைது செய்யப்பட்ட இவரை மிகவும் கொடிய பயங்கரவாதியாகச் சித்தரித்து
கைவிலங்கிட்டு ஊர் ஊராக அழைத்துச் சென்று சிறையிலடைத்தனர்.
சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும் இவரது செயல்பாடு இன்னும் வேகமாக வளரத்
தொடங்கியது.

காங்கிரஸ் கட்சியில் இருந்த இடதுசாரி கொள்கையுடையவர்கள் அனைவரும் காங்கிரஸ்
சோஷலிஸ்ட் என்று அழைக்கப்பட்டனர். இவர்களது முதல் மகாநாடு சேலத்தில்
நடந்தது. இதில் ஜீவா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதோடு
தொழிற்சங்க காங்கிரசின் தலைவராகவும் தேர்வானார் ஜீவா. 1938இல்
வத்தலகுண்டில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் மாநாட்டிலிருந்து அகில இந்திய
காங்கிரசுக்குப் பிரதிநிதிகள் தேர்வாயினர். அவர்களில் ராஜாஜி,
சத்தியமூர்த்தி, காமராஜ் ஆகியோரோடு இவர்களைக் காட்டிலும் அதிக வாக்கு
பெற்று வெற்றி பெற்றார் ஜீவா. அப்போதுதான் ராஜாஜிக்கு யார் இந்த ஜீவா என்ற
கேள்வி பிறந்தது.

இவர் பல தொழிற்சங்கங்களுக்குத் தலைமை ஏற்றுப் பல போராட்டங்களை நடத்தினார்.
இவரது வளர்ச்சியைக் கண்டோ, அல்லது இவருக்குத் தொழிலாளர் மத்தியில் இருந்த
செல்வாக்கு காரணமாகவோ, அல்லது இவரது போக்கு காங்கிரசுக்கு பாதகமாக
இருக்குமென்றோ தெரியவில்லை காங்கிரஸ் கட்சி இவரை 1939 ஆகஸ்ட்டில் கட்சியை
விட்டு நீக்கியது. உடனே ஜீவா தனது அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்
பதவியையும் தூக்கி எறிந்தார்.

அதன் பிறகு காங்கிரசிலோ, அல்லது காங்கிரஸ் சோஷலிஸ்ட் குழுவிலோ அங்கம்
வகிக்காமல் ஜீவா முழுநேர கம்யூனிஸ்ட்டாகவே இருந்தார். 1940இல் இவரை சென்னை
நகரை விட்டு வெளியேறும்படி வெள்ளையர் அரசாங்கம் உத்தரவிட்டது. அதனால் இவர்
பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த காரைக்கால் பகுதிக்குச் சென்றார். அந்த
அரசும் இவரை அங்கு தங்க சம்மதிக்கவில்லை. அங்கிருந்து பம்பாய் சென்ற ஜீவாவை
அந்த மாகாண அரசு பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்து சிறையில் அடைத்து,
பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றியது. 1942இல் விடுதலையான ஜீவா
திருவாங்கூருக்கு அனுப்பப்பட்டார். அந்த சமஸ்தான அரசு இவரை சொந்த ஊரான
பூதப்பாண்டியை விட்டு வெளியேறக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. இவரால்
சும்மாயிருக்க முடியுமா? தடையை மீறினார், கைது செய்யப்பட்டு சிறைவாசமும்
ரூ.500 அபராதமும் கிடைத்தது.

அதிலிருந்து தொடர்ந்து ஜீவா தொழிலாளர் போராட்டங்களிலும், அரசியல்
போராட்டங்களிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இந்திய சுதந்திரத்துக்கு
முன்பாக 1946இல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. அதனால் அது முதல்
இந்திய சுதந்திரம் வரை தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டார். 1952 சட்டமன்ற
தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அப்போது சென்னை
மாகாணத்தில் அமைந்த அரசுக்கு ராஜாஜி முதலமைச்சர் ஆனார். அப்போது ஆளும்கட்சி
வரிசையில் ராஜாஜியும், எதிர் வரிசையில் பெரும் கம்யூனிஸ்ட் தலைவர்களும்
இருந்து வாதிட்டதைப் பார்த்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அப்போது ராஜாஜி
சொன்னார் கம்யூனிஸ்ட்டுகள்தான் எனது முதல் எதிரி என்று.

ஜீவாவின் அரசியல், சமூக சீர்திருத்தக் கொள்கை, தொழிற்சங்க பணிகள் இவற்றோடு
இலக்கியத் துறையிலும் இவர் சிறந்து விளங்கினார். இவரது கணீரென்ற குரலில்
இவர் தாகூரின் 'கீதாஞ்சலி'யை மொழிபெயர்த்த தமிழ்க் கவிதையை உரக்கப் பாடியதை
நேரில் கேட்டு அனுபவித்த பேறு இந்தக் கட்டுரையை எழுதும் எனக்கு
ஏற்பட்டிருக்கிறது. தனது அந்திம காலத்தில் சென்னை தாம்பரத்தில் ஒரு
குடிசையில் அவரும் அவரது மனைவியும் வாழ்ந்த காலத்தில், காமராஜ்
முதலமைச்சராக ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற தாம்பரம் வந்தார். இங்குதான் ஜீவா
இருக்கிறாராமே அவர் வீட்டுக்கு விடு என்று காரோட்டியைக் கேட்டுக்
கொண்டார் காமராஜ். கார் ஒரு குடிசை வாயிலில் நின்றது. இறங்கி உள்ளே போனார்
காமராஜ். அங்கு ஒரு கிழிந்த பாயில் படுத்திருந்தார் நாடறிந்த தலைவர்
ஜீவா. காமராஜ் மனம் கலங்கியது. சரி நான் போகும் நிகழ்ச்சிக்கு நீங்களும்
வாருங்கள் போகலாம் என்றார். சிறிது நேரம் ஆகுமே பரவாயில்லையா என்றார்
ஜீவா. காமராஜ் காத்திருந்தார். நேரம் ஓடிக்கொண்டிருந்தது. ஜீவா வரக்கணோம்.
என்னவென்று பார்த்தால் அவருக்கென்று இருந்த ஒரே வேட்டியை துவைத்து
காயவைத்துக் கொண்டிருந்தார். பின்னர் அந்த நிகழ்ச்சிக்கு இருவரும்
சென்றார்கள்.

ஜீவா வசிக்க ஒரு அரசாங்க வீட்டை ஒதுக்க காமராஜ் ஜீவாவிடம் அனுமதி கேட்டார்.
அதை மறுத்துவிட்ட ஜீவா சொன்னார், இந்த நாட்டில் வீடு இல்லாத ஏழைகளுக்கு
என்று இருக்க வீடு கிடைக்கிறதோ அன்று எனக்குக் கொடுத்தால் போதுமென்றார்.
அதன் பிறகு அவர் அதிக நாள் உயிரோடு இல்லை. இறக்கும் தருவாயில் ஜீவா சொன்ன
செய்தி, காமராஜுக்குத் தகவல் சொல்லிவிடு என்பதுதான். இந்த நூற்றாண்டின் ஒரு
அதிசய மனிதர், கொள்கைப் பிடிப்புள்ள மக்கள் தலைவன், சிறந்த இலக்கியவாதி
மறைந்து போனார். ஆனாலும் அவர் நினைவுகளைத் தாங்கிக் கொண்டு ஆயிரமாயிரம்
தொண்டர்கள் இன்றும் ஜீவாவின் பெயரை நினைவில் வைத்துக் கொண்டு மரியாதை
செய்து வருகிறார்கள். வாழ்க ஜீவாவின் புகழ்!



"ஜீவா ஏறினா ரயிலு, இறங்கினா ஜெயிலு"

(இந்தக் கட்டுரை "தினமணி" சுதந்திரப் பொன்விழா மலரில் பி.எம்.சோமசுந்தரம் எழுதி வெளியானது)

சுதந்திரப் பொன் விழாவை நாம் உற்சாகமாகக் கொண்டாடும் நேரத்தில் நமக்கு இந்த
வாய்ப்பைப் பெற்றுத் தருவதற்கு நம் முன்னோர்கள் பட்ட பாட்டையும் அவர்கள்
செய்த தியாகத்தையும் எழுதிட எந்த அகராதியிலும் வார்த்தைகள் இல்லை என்பதே
உண்மை.

குடும்பத்தைத் துறந்து வெஞ்சிறையில் அடைபட்டு செங்குருதி சிந்தி தம் இனிய
உயிரத் தந்து, நமக்கு வாங்கித் தந்த சுதந்திரம் இது. இந்த வேள்வியில்
ஆஹூதியானோர் பல்லாயிரக் கணக்கில். அவர்களில் இந்தத் தலைமுறையினர் மறக்க
முடியாதவர் மறக்கக்கூடாதவர் ஜீவா என தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட
அமரர் ப.ஜீவானந்தம்.

1927ஆம் ஆண்டு சிராவயல் கிராமத்தில் ஜீவா ஆரம்பித்த ஆசிரமத்திற்கு விஜயம்
செய்தார் காந்தியடிகள். ஜீவாவைப் பார்த்து உங்களுக்கு எவ்வளவு சொத்து
இருக்கிறது என்று அவர் கேட்டார். 'இந்திய மக்கள்தான் என் சொத்து' என்று
ஜீவா பதிலளித்தார். இந்த பதிலால் நெகிழ்ந்த காந்தியடிகள் 'இல்லை,
நீங்கள்தான் இந்தியாவின் சொத்து' என ஜீவாவைப் பாராட்டினார்.

பதவிக்காகவும் சொந்தச் சூழ்நிலை காரணமாகவும் தங்களது கொள்கைகளையே தியாகம்
செய்யும் தலைவர்களை இன்று பார்க்கிறோம். கொண்ட கொள்கையில் எந்தச்
சூழ்நிலையிலும் லட்சியங்களைக் கைவிடாத கொள்கைக் கோமானகவே கடைசி வரை
வாழ்ந்தவர் ஜீவா.

சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டிருந்தபோது தந்தை பெரியாரின் இணையிலாத் தொண்டனாகவும் வலது கரமாகவும் இருந்தவர்.

குறைந்தது பத்தாண்டுகளுக்கு ஒரு முறை பெரியாரிடம் கருத்து மாறுபட்டு பலர்
பிரிந்து செல்வது வழக்கம். பிரிந்து செல்பவர்கள் சொல்லாமல் கொள்ளாமல்
போய்விடுவார்கள். ஒரு சமயத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் திசை
மாறுவதைக் கண்டார் ஜீவா. 1935இல் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற
மகாநாட்டில் பெரியாரின் முன்னிலையிலேயே அவரது கருத்தை போக்கை விமர்சனம்
செய்து (தலைவரைத் தொண்டர்கள் விமர்சனம் செய்ய முடிந்த காலம் அது) விட்டு
வெளியேறினார்.

ஆத்திகராக பொது வாழ்வை ஆரம்பித்தவர் ஜீவா. காங்கிரஸ் தொண்டராக சோஷலிஸ்டாக
சுயமரியாதை வீரராக பொதுவுடமைக் கட்சியின் தொண்டர் தோழர் தலைவர் என்று பல
நிலைகளில் பணியாற்றியவர். காந்திஜி, பெரியார், ராஜாஜி, முத்துராமலிங்கத்
தேவர், ராய. சொ., கோவை அய்யாமுத்து போன்ற முன்னணித் தலைவர்களுடன் இணைந்து
பாரதத்தின் சுதந்திரத்திற்குப் பாடுபட்டவர். இன மத பேதமின்றி பல்வேறு
கட்சிகளும் போராடிப் பெற்ற இந்தச் சுதந்திரத்தைக் காங்கிரஸ்காரர்கள் தங்கள்
பிதுரார்ஜித சொத்தாக அனுபவிக்க நினைத்த போது அதைத் தன் கடைசி மூச்சு
உள்ளவரை எதிர்த்தவர் ஜீவா.

பல தலைவர்களையும், கலைஞர்களையும் இந்த நாட்டுக்குத் தந்த நாஞ்சில் நாட்டில்
பூதப்பாண்டி எனும் சிற்றூரில் ஏழ்மையான குடும்பத்தில் 21-8-1907ஆம் ஆண்டு
பிறந்தவர் ஜீவானந்தம். பின்னாளில் இவர் ஜீவா எனப் பெயர் பெற்றாலும் இவரது
பெற்றோர் பட்டம் பிள்ளை உமையாம்பாள் தம்பதியினர் இவருக்கு வைத்த பெயர்
சொரிமுத்து.

சட்ட மறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டு காரைக்குடியை அடுத்த கோட்டையூரில்
பேசும்போது கைது செய்யப்பட்டார். சிறையில் ஆறு மாதம் அடைக்கப்பட்டார். இது
அவருக்கு முதல் சிறை அனுபவம். அன்று தொடங்கி 1942இல் தடுப்புக் காவல்
சட்டப்படி மீண்டும் சிறை. நாடு கடத்தல் என்று அவர் அனுபவித்த இன்னல்கள்
ஏராளம்.

ஜீவாவை அவரது தொண்டர்கள் "ஜீவா ஏறினா ரயிலு, இறங்கினா ஜெயிலு" என்று
சொல்லும் அளவுக்குத் தன் வாழ்க்கையின் பெரும் பகுதியைப் போராட்டத்திலும்
சிறையிலும் கழித்தார்.

பொதுவுடமைக் கட்சியின் தலைவராக இருந்த சமயம் மதுரையில் மாநாடு ஒன்றை மிகச்
சிறப்பான முறையில் நடத்தினார். ஜீவா மாநாடு முடிந்த மறுநாள் சக
தோழர்களுடன் பேசிக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்தார். பக்கத்தில்
இருந்தவர்கள் 'மயக்கம்' தெளிவித்து எழுப்பினர். மயக்கம் ஏன் வந்தது என்று
கேட்டனர். கையில் காசில்லாததால் ஜீவா இரண்டு நாள் பட்டினி என்பது அப்போது
அவர்களுக்குத் தெரிந்தது. (பாருங்கள்! இவர் ஒரு அகில இந்திய கட்சியின்
மாநிலத் தலைவர்) உடனே அவருக்கு உணவு கொடுத்தனர். அப்போது மாநாட்டுக்குப்
பந்தல் போட்டவர் வந்து நின்றார். ஜீவா, தன் அரைக்கால் சட்டையிலிருந்து
பணக்கத்தை ஒன்றை எடுத்து அவரிடம் தந்தார்.

இவ்வளவு பணம் இருக்கும்போது ஏன் பட்டினியாக இருக்க வேண்டும் என்று
தொண்டர்கள் கேட்டபோது வந்த பதில் "இது கட்சியின் பணம். நான் சாப்பிட அல்ல".
இதுதான் மாசிலா மாணிக்கம் ஜீவா.

பாரத மக்களின் மனதில் சோஷலிசக் கருத்துக்களை ஊன்றியவர் நேரு என்றால், தமிழக மக்களின் மனதில் அதை ஆழ ஊன்றியவர் ஜீவா.

குடிசை வீட்டில் வாழ்ந்த ஜீவாவுக்கு அரசு சார்பில் வீடு கொடுக்க அப்போதைய
முதலமைச்சர் காமராஜ் விரும்பினார். அவர் ஜீவாவிடம் தன் விருப்பத்தைத்
தெரிவித்த போது, "எல்லோருக்கும் வீடு கொடிங்கள். அப்போது எனக்கும் ஒன்று
கொடுங்கள், அதுதான் உண்மையான சோஷலிசம்" என்று அரசு வீட்டை மறுத்தவர் ஜீவா.

எந்த விஷயத்திலும் ஒரு உண்மையான அக்கறையுடனும், தீவிரமான பற்றுதலுடனும்
ஈடுபடும் இயல்பு கொண்டவர் ஜீவா. தலைவராக இருந்த போதும் தன்னை ஒரு தொண்டனாக
தோழனாக நினைப்பதில் பெருமை கொண்டவர்.

நன்றி: "தினமணி" சுதந்திரப் பொன்விழா மலர்




தூக்கம் தூக்கம் தூக்கம் அதி,,, தூக்கம் ,,அதி,,,,



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 25, 2012 9:38 pm

பாலா சார் - ஜீவா எனும் நல்ல மனிதரைப் பற்றி அறிய செய்திகளை தந்தமைக்கு நன்றி.




டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Sat Aug 25, 2012 9:43 pm

1927ஆம் ஆண்டில் செங்கற்பட்டில் தந்தை பெரியார் நடத்திய முதல் சுயமரியாதை மாநாட்டிலும் இவர் பங்கு கொண்டார்.
சிறுவயதில் ஜீவா தெய்வ பக்திப் பிழம்பாகத் திகந்தவர்தான். பின்னாளில் அவரே,
“கடவுளில்லை கடவுளில்லை
கடவுள் என்பதில்லையே!
உடலைக் கண்டதுண்டமாக்கி
ஊறு செய்த போதிலும்
கடவுளில்லை கடவுளில்லை!” என்று மிக மிக வன்மையாகக் கண்டித்தார்.
“பச்சைக் குழந்தைக்குப் பாலுமில்லை அதன்
பட்டினி யழுகை கேட்பதில்லை
இச்சையுடன் பாலைச் சாமிக்கென்றே கல்லில்
இட்டு வணங்குகின்றார், முக்திக் கென்றே!”
என்றும் மனித நேயத்தை முன்னிறுத்தியும் பாடினார்

ஜீவா சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது பீடித் தொழிலாளர், கைத்தறி, துறைமுக, மில் தொழிலாளர்கள் பிரச்சினைகளுக்காகப் பல போராட்டங்களில் பங்கு கொண்டார். திரு.வி.க., சர்க்கரை செட்டியார், சிங்காரவேலர் போன்றவர்களுடன் தொழிற்சங்க இயக்கங்களில் ஈடுபட்டதுண்டு.
பசுமலை மகாலட்சுமி மில் தொழிலாளர் போராட்ட முனையில் நின்ற ஜீவா போலீசாரால் தாக்கப்பட்டார். இந்த செய்தி நகரில் பரவியதால், செய்தி கேட்ட முத்தம்மாள் என்ற பெண் கையில் துடைப்பத்துடன் கிளம்பி ஜீவாவை அடித்த சர்க்கிள் இன்°பெக்டரை துடைப்பத்தாலேயே அடித்துவிட்டு சிறை சென்றாள் என்றால், தொழிலாளர் அதுவும் பெண் அவர்பால் வைத்திருந்த மதிப்பும் பெருமையும் கண்டு வியக்காமலிருக்க முடியுமா

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Aug 25, 2012 9:45 pm

தூக்கம் வரவில்லை பாலா சார்.........எனக்கு உப்பு சப்பில்லாத அரசியல் கூட மிகவும் பிடித்தம்.....இது போன்ற நேர்மையான அரசியல் நடத்திய தலைவர்களைப் பற்றி படிக்காமல் இருப்பேனா?

உங்களால் முடிந்தால் இன்னுமொரு உதவி செய்யுங்கள் பாலா சார்.........காந்திஜி மறுமணம் பற்றி கொண்டிருந்த கருத்து என்று இடையில் ஒரு இடத்தில் இருந்ததே...............அப்படி என்ன கருத்து என்று சொல்ல முடியுமா?

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Aug 25, 2012 9:48 pm

darwin wrote:
பசுமலை மகாலட்சுமி மில் தொழிலாளர் போராட்ட முனையில் நின்ற ஜீவா போலீசாரால் தாக்கப்பட்டார். இந்த செய்தி நகரில் பரவியதால், செய்தி கேட்ட முத்தம்மாள் என்ற பெண் கையில் துடைப்பத்துடன் கிளம்பி ஜீவாவை அடித்த சர்க்கிள் இன்°பெக்டரை துடைப்பத்தாலேயே அடித்துவிட்டு சிறை சென்றாள் என்றால், தொழிலாளர் அதுவும் பெண் அவர்பால் வைத்திருந்த மதிப்பும் பெருமையும் கண்டு வியக்காமலிருக்க முடியுமா

ஜீவாவைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை என்று சொல்வதெல்லாம் பொய் என்று இப்போதெனக்கு புரிகிறது

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Aug 25, 2012 10:03 pm

அதி wrote:
உங்களால் முடிந்தால் இன்னுமொரு உதவி செய்யுங்கள் பாலா சார்.........காந்திஜி மறுமணம் பற்றி கொண்டிருந்த கருத்து என்று இடையில் ஒரு இடத்தில் இருந்ததே...............அப்படி என்ன கருத்து என்று சொல்ல முடியுமா?
இந்தியாவில் விதவைகளின் நிலமை என்ற கட்டுரையில் பாரதியார் காந்தியின் விதவைமறுமணம் பற்றிய கருத்தை விமர்சித்துள்ளார் இங்கே தெரிந்துகொள்ளுங்கள் அதி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 25, 2012 10:12 pm

ஒரு பள்ளிக்கூட திறப்பு விழாவிற்கு அழைத்திட காமராஜர் சென்றுள்ளார். அப்போது தன்னிடம் இருந்த ஒரு வேட்டி-சட்டை அழுக்காகி விட்டதை ஜீவா துவைத்து போட்டு இருந்தார்.


இதனால் அந்த துணி காய வேண்டும் என்பதற்காக காமராஜரிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டு இருந்தார். அவருடைய நேரம், வெயில் சரியாக அடிக்காததால், வேறு வழியின்றி தனது ஒரு வேட்டி-சட்டையை துவைத்து போட்டு உள்ளதை ஜீவா, காமராஜரிடம் கூறினார். இதனைக்கேட்டு கண் கலங்கினார் காமராஜர்.

Original source: http://www.eegarai.net/t55783-topic#ixzz24Zpqqs8s




தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 25, 2012 10:13 pm

அவர் அலுவலகத்தில் இருந்த போது, அங்கு சிறுமி ஒன்று நீண்ட நேரம் அழுது கொண்டு இருந்தது. அந்த சிறுமியிடம் ஜீவா கேட்டபோது,

அந்த சிறுமி தனது தந்தை மற்றும் தாயார் பெயரை எழுதிக்கொடுத்தது. அப்போது தான் அது தனது குழந்தை என்று கண்ணீர் விட்டார். அந்த அளவு நாட்டுக்காக தனது குடும்பத்தை கூட மறந்து பணியாற்றியவர் கம்யூனிஸ்டு தோழர் ஜீவா

Original source: http://www.eegarai.net/t55783-topic#ixzz24ZqBP0Je




தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Aug 25, 2012 10:23 pm

இதுவரை காமராஜரே நாட்டை ஆட்சி செய்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.நாம் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 1357389தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 59010615தமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Images3ijfதமிழகம் மறந்த ஒரு அற்புத மனிதர் - Page 3 Images4px
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக