ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ப்ரொட்டோகால் என்றால் என்ன?
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» மும்பை அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்குபோலி கொரோனா தடுப்பூசிபோட்ட புகாரில் 4 பேர் கைது
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் காலமானார்: பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
by T.N.Balasubramanian Today at 6:24 pm

» 3வது அலை தவிர்க்க முடியாதது: எய்ம்ஸ் இயக்குநர்
by T.N.Balasubramanian Today at 6:23 pm

» சாதனையாளர்கள் வாழ்வில்...
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» கால்நடை வளர்ப்பில் டெக்சாஸ் மாநிலம் (அமெரிக்கா)
by ayyasamy ram Today at 5:49 pm

» கமல்ஹாசன் பகிர்ந்த 10 வேட அனுபவம்
by T.N.Balasubramanian Today at 5:49 pm

» அமெரிக்காவில் கல்விப் புரட்சி (1954)
by ayyasamy ram Today at 5:48 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 5:20 pm

» மீன்களில் எது ருசியானது… தெரிஞ்சுக்கலாம்,வாங்க..
by மாணிக்கம் நடேசன் Today at 3:27 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம் (541)
by Dr.S.Soundarapandian Today at 11:42 am

» கொரோனாவை ஒழிக்க சிலைக்கு மாஸ்க்! – விநோதம் செய்யும் ஜப்பானியர்கள்!
by ayyasamy ram Today at 7:18 am

» திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு நாளை முதல் 10 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் இயக்கம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:32 am

» கல்வி தொலைக்காட்சி மூலம் இன்று முதல் நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் - மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்
by ayyasamy ram Today at 6:27 am

» மீம்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» கடமையில் உறுதியாக இருங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» இணையே என் உயிர் துணையே...!
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» குலம் தழைக்க பெரியவா சொன்ன பரிகாரம்
by T.N.Balasubramanian Yesterday at 8:55 pm

» புதிய நாவல்கள் தேவை
by rukman1304 Yesterday at 8:52 pm

» டிரைவிங் ஸ்கூல்ல ஆன்லைன் கிளாஸ்…!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» சில்வண்டு சாக்லேட்
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஒரு குட்டிக் கதை!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» களை- மலையாளப் படம்
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» லூட்கேஸ் – இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» இயற்கையை காதலிக்கும் தனிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» பியூட்டி ஏஞ்சல் எமி ஜாக்சன்!
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இசைப்புயலின் ஹைடெக் மாஸ்க்!
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» சீனாவிடம் வாங்கிய கடன்களை சுமக்கும் பாகிஸ்தான் கழுதைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:42 pm

» கருவி இல்லா சமையல் வேண்டுவோர் பெண் இனத்திற்கு எதிரானவர்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:38 pm

» தலைமறைவாக இருந்த பப்ஜி மதன் கைது
by T.N.Balasubramanian Yesterday at 4:12 pm

» கேரளா புட்டும் கடலைக் கறியும்:
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» ராமர்,சீதை,ராவண தேசங்களும் பெட்ரோல் விலையும்!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» ஜீ தமிழ் சீரியல் வில்லி நடிகை மகன் திடீர் மரணம்: சோகத்தில் குடும்பம்
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» பணத்தால் மனத்தூய்மை குறைகிறது
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» கோபத்தை அறிவால் அடக்குங்கள்!
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» போரில் இறந்த மகனுக்கு தாயார் நாட்டிய நடுகல்
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» `துர்காதேவி சரணம்’ - பாக்கியம் அருளும் பட்டீஸ்வரம் துர்கை மகிமைகள்!
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இருக்கும் நிலைக்கு நீயே பொறுப்பு - விவேகானந்தர்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» இளமையை காக்கும் வால்நட்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:13 pm

» முல்லாவிடம்,தளபதியின் சமரசம்…!!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:12 pm

» எவ்வளவு ஆழம் வெட்டணும்..!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:09 pm

» எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே..
by aanmeegam Yesterday at 11:43 am

» உனக்கு என வரம் வேண்டும்...!
by aanmeegam Yesterday at 11:38 am

» இதற்கு இது பதில் இல்லையே!
by aanmeegam Yesterday at 11:36 am

» முனைவர் செளந்தரபாண்டியன் அய்யா அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by aanmeegam Yesterday at 11:35 am

» நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெற…
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 am

» கோவிட் 3வது அலையை சமாளிக்க தயாராகும் டில்லி: 5,000 இளைஞர்களுக்கு செவிலியர் பயிற்சி
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 am

» இந்திய பெண் அமெரிக்காவில் நீதிபதி ஆகிறார் - ஜோ பைடன் பரிந்துரை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 am

» ’பஞ்ச்’சோதி பராக்!
by T.N.Balasubramanian Thu Jun 17, 2021 9:21 pm

» எப்பவுமே கணவன்மார்களுக்கு அவசரம் தான்…!
by aanmeegam Thu Jun 17, 2021 5:05 pm

Admins Online

வாயு தொந்தரவா? மனசை ரிலாக்ஸ்சா வச்சிக்கங்க!

Go down

வாயு தொந்தரவா? மனசை ரிலாக்ஸ்சா வச்சிக்கங்க! Empty வாயு தொந்தரவா? மனசை ரிலாக்ஸ்சா வச்சிக்கங்க!

Post by முஹைதீன் Thu Jun 21, 2012 9:10 am

வாயு தொந்தரவா? மனசை ரிலாக்ஸ்சா வச்சிக்கங்க!

வாயு தொந்தரவா? மனசை ரிலாக்ஸ்சா வச்சிக்கங்க! 20stomachegas
விருந்து, விசேசத்திற்கு சென்றால் ஒரு சிலர் பார்த்து பார்த்து சாப்பிடுவார்கள். ஏனென்றால் பாழாய் போன கேஸ் அப்பப்ப வேலையை காட்டிடும் என்று அச்சம்தான். "ஒரே கேஸ் பிராப்ளம். வயிறு கல் மாதிரி இருக்கு. பசியே எடுக்கலை. சரியா சாப்பிட முடியலை'' என்ற புலம்பல்கள் அடிக்கடி நம் காதில் விழும் வார்த்தைகளாகும்.

வயிறு பெரிதாக இருப்பது என்பது இப்போதெல்லாம் மிகச் சாதாரணமான விஷயமாகி விட்டது. வயிறு பெரிதாக, உருண்டையாக இல்லாதவர்களைத் தேடுவதுதான் இந்தக் காலத்தில் மிகவும் கஷ்டம். இதில் ஆண், பெண் வித்தியாசமே கிடையாது. வயிறு பெரிதாக இருப்பது ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகமாகக் காணப்படுகிறது. அதிலும் மாத விலக்கு நேரத்திலும், மாதவிடாய் நிற்கிற வயதிலும் `கேஸ்' தொந்தரவு பெண்களுக்கு அதிகமாகவே இருக்கிறது.

ஒழுங்கான நேரத்துக்கு சாப்பிடாததாலும், ஒழுங்கான உணவுகளை சாப்பிடாததாலும், வேளை கெட்ட வேளையில் சாப்பிடுவதாலும், இரைப்பையிலும், குடலிலும் சேரும் காற்றே, `கேஸ்' என அழைக்கப்படுகிறது. வயிறு வீங்கியும், வயிறு பெரிசாகவும், வயிறு முழுக்க நிரம்பியிருப்பது போலவும் இருந்தால், அவர்களுக்கு உணவு ஜீரணம் ஆவதில் கோளாறு இருக்கிறது என்று அர்த்தம்.

உணவுப் பாதையில் உருவாகும் `கேஸ்' நிறமற்ற, மணமற்ற, பல வாயுக்களைக் கொண்டு உருவானது. கார்பன்-டை ஆக்ஸைடு, ஆக்ஸிஜன், நைட்ரஜன், ஹைட்ரஜன், சில சமயங்களில் மீதேன் வாயு, இவையெல்லாம் சேர்ந்து உருவாவதே `கேஸ்' ஆகும். சில சமயங்களில் சிலருக்கு, உடலின் கீழ்ப்பகுதியில் இருந்து வெளியாகும் கேஸில், பயங்கர நாற்றம் இருக்கும். பெருங்குடலில் இருக்கும் கெட்ட பேக்டீரியாக்கள் வெளிவிடும் மிகக் குறைந்த அளவிலான சல்பர் வாயுதான் இதற்குக் காரணம்.

இந்த சல்பர் வாயு, மற்ற வாயுக்களுடன் சேர்ந்து வெளியாகும்போது, `கேஸ்' மிகுந்த நாற்றமடிக்கும். ஒழுங்கில்லாத சாப்பாடு, அடிக்கடி வெளியில் உணவு, அதிக மசாலாக்கள், அதிக காரம் உள்ள உணவு, சரியாக வேகாத உணவு, சுகாதாரமற்ற உணவு, ஒழுங்கான முறையில் சமைக்கப்படாத உணவு, இவைகளையெல்லாம் சாப்பிட்டால், குடலில் சல்பர் வாயு உண்டாகத்தான் செய்யும்.

மேலும் வேகவேகமாக தண்ணீர் குடிப்பதனாலும், வேகவேகமாக சாப்பாட்டை விழுங்குவதாலும், சிக்லெட், சூயிங்கம் முதலியவைகளை அடிக்கடி மெல்லுவதாலும், சரியான அளவில்லாத `பல்செட்' மாட்டியிருப்பதாலும், வெளிக்காற்று, வாய் வழியாக, வயிற்றுக்குள் போய், `கேஸ்' உருவாகிறது. வாய் வழியாக விழுங்கப்படும் கேஸ், ஏற்கனவே வயிற்றில் உருவான கேஸ், இவை இரண்டும் சேர்ந்து, வயிற்றிலும், குடலிலும் பெருமளவு தங்குகிறது.

இதில் அதிக அளவு கேஸ் `ஏப்பம்' மூலமாக உடலை விட்டு வெளியேறி விடுகிறது. மீதியிருக்கும் `கேஸ்' சிறுகுடலுக்கு நகர்ந்து சென்று, அங்கு உள்ளிழுக்கப்படுகிறது. மீதி இருக்கும் கொஞ்சநஞ்ச கேஸ், பெருங்குடல் வழியாக வந்து, ஆசன வாய் வழியாக வெளியேறி விடுகிறது.

நார்ச்சத்து, சர்க்கரைச் சத்து, ஸ்டார்ச் சத்து உள்ள சில உணவுப் பொருட்களை சிறுகுடல் ஜீரணம் பண்ணுவதில்லை. ஏனெனில் இந்த உணவுப் பொருட்களை ஜீரணம் பண்ணத் தேவையான சில என்சைம்கள், சிறுகுடலில் மிகக் குறைவாகவும், தேவையான அளவு இல்லாமலிருப்பதும்தான் காரணம். எனவே, நன்றாக, ஜீரணம் ஆகாது என்று தெரிந்த உணவுப் பொருட்களை தயவு செய்து சாப்பிடாமல், தவிர்க்கப் பாருங்கள்.

இஞ்சியின் மகிமை அறிந்துதான் இப்பொழுது இந்திய சமையலில் அனைத்து உணவுப் பொருட்களிலும் இஞ்சி சேர்க்கப்படுகிறது. தினசரி மூன்று பல் வெள்ளைப்பூண்டு, ஒரு விரல் அளவு இஞ்சி சேர்ந்து அரைத்து காய்ச்சிய கசாயம் காலை வெறும் வயிற்றில் குடிக்க வாய்வு தொந்தரவு நீங்கும். அதேபோல் ஜீரணக்கோளாறு, வாய்வு தொந்தரவு உள்ளவர்கள் துளசி இலையை தண்ணீர் ஊற்றி வேகவைத்து கசாயம் போல அருந்தலாம். அதேபோல் உணவு உண்டபின்னர் சிறிதளவு இஞ்சி சாப்பிடலாம் அல்லது எலுமிச்சை ஜூஸ் பருகலாம்.

பால் பொருட்களில் யோகர்ட் சேர்த்துக்கொள்ளலாம். இது எளிதில் ஜீரணமாகும். அதேபோல் வெள்ளைப்பூண்டு சேர்த்துக்கொண்டால் வயிற்றில் உள்ள கெட்ட வாயுக்கள் வெளியேறிவிடும். வாயு தொந்தரவு இருக்காது. தேங்காய் தண்ணீர், இளநீர் போன்றவைகளை குடிக்கலாம் கேஸ் தொந்தரவு ஏற்படாமல் தடுக்கும்.

கேஸ் பிரச்சினை உள்ளவர்கள் காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், புருக்கோலி, பீன்ஸ், போன்ற உணவுகளை உட்கொள்ளக்கூடாது. அதேபோல் பால் பொருட்கள் சோடா, கார்பனேட் பானங்கள், பீர் போன்றவைகளை உட்கொள்ளக்கூடாது என்று உணவியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல் மன அழுத்தம் இருந்தாலும் வாயுத் தொந்தரவு ஏற்படும். எனவே எதற்காகவும் கவலைப்படாமல் மனதை ரிலாக்ஸ் ஆக வைத்துக்கொண்டாலும் கேஸ் பிரச்சினை ஏற்படாது என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.

http://tamil.boldsky.com/health/wellness/2012/home-remedies-stomach-gas-problems-001396.html
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மதிப்பீடுகள் : 1075

Back to top Go down

வாயு தொந்தரவா? மனசை ரிலாக்ஸ்சா வச்சிக்கங்க! Empty Re: வாயு தொந்தரவா? மனசை ரிலாக்ஸ்சா வச்சிக்கங்க!

Post by விநாயகாசெந்தில் Fri Jun 22, 2012 6:54 pm

மிகவும் பயனுள்ள பதிவு நன்றி நண்பரே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
மதிப்பீடுகள் : 386

Back to top Go down

வாயு தொந்தரவா? மனசை ரிலாக்ஸ்சா வச்சிக்கங்க! Empty Re: வாயு தொந்தரவா? மனசை ரிலாக்ஸ்சா வச்சிக்கங்க!

Post by முரளிராஜா Fri Jun 22, 2012 6:57 pm

பகிர்வுக்கு நன்றி முஹைதீன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

வாயு தொந்தரவா? மனசை ரிலாக்ஸ்சா வச்சிக்கங்க! Empty Re: வாயு தொந்தரவா? மனசை ரிலாக்ஸ்சா வச்சிக்கங்க!

Post by ரிபாஸ் Sat Jun 23, 2012 10:27 am

தகவலுக்கு நன்றி நண்பா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

வாயு தொந்தரவா? மனசை ரிலாக்ஸ்சா வச்சிக்கங்க! Empty Re: வாயு தொந்தரவா? மனசை ரிலாக்ஸ்சா வச்சிக்கங்க!

Post by இரா.பகவதி Sat Jun 23, 2012 5:28 pm

பயனுள்ள தகவலுக்கு நன்றி முகைதின் அண்ணா ,
பால் பொருட்களில் யோகர்ட் சேர்த்துக்கொள்ளலாம்

அண்ணா யோகர்ட் என்றல் என்ன
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 980

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வாயு தொந்தரவா? மனசை ரிலாக்ஸ்சா வச்சிக்கங்க! Empty Re: வாயு தொந்தரவா? மனசை ரிலாக்ஸ்சா வச்சிக்கங்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum