புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_c10 
61 Posts - 80%
heezulia
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_c10 
397 Posts - 79%
heezulia
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_c10 
8 Posts - 2%
prajai
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_c10 
6 Posts - 1%
Anthony raj
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4


   
   

Page 6 of 19 Previous  1 ... 5, 6, 7 ... 12 ... 19  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon May 21, 2012 9:12 pm

First topic message reminder :

“பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை” - என்ற தலைப்பில் வேதத்தின் மகத்துவங்களை அனைவரும் அறிந்திட பல்வேறு சிறுசிறு தலைப்புகளில் அனைவரும் விரும்பி ஆர்வமாக வாசிக்கும்படியாக இப்பகுதியில் ஒரு திரியை திறக்கிறேன். அனைத்து உறவுகளின் ஆதரவையும் அன்புடன் நாடுகிறேன்.

இதில் கேள்வி கேட்பவர்கள் அந்ததந்த தலைப்பில் உள்ள அம்சங்களில் மட்டும் (தாங்கள் அறிந்து கொள்ள மட்டும்) கேட்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தலைப்பிற்கு சம்பந்தமில்லாத க‌ேள்விகளையும் வாத-விதாண்டாவாதங்களையும் தவிர்க்கும்படி தயவாக க‌ேட்டுக் கொள்கிறேன்.

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 154550


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue May 29, 2012 1:35 am

8. ஒரு பழைய ஏற்பாட்டு ஒப்புமைக்கு புதிய ஏற்பாட்டில் புதிய பொருள் அளிக்கப்பட்டிருக்கிறதா?

மனுக்குலத்தைக் குறித்த தேவனுடைய திட்டங்கள் வெளிப்பட்டவுடன், அவா் தம்முடைய மக்களோடு இடைபடும் முறையில் மாற்றம் ஏற்பட்டது. தேவகுமாரனுடைய வருகைக்காக இஸ்ரவேல் மக்கள் ஆயத்தப்பட வேண்டுமென்பதற்காக பல சட்டங்களடங்கிய மோசேயின் நியாயப்பிரமாணம் அவா்களுக்கு அளிக்கப்பட்டது. கலாத்தியா்: 3:24,25 வசனங்கள் இவ்வாறு கூறுகின்றன:

“இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மை கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது. விசுவாசம் வந்த பின்பு உபாத்திக்கு கீழானவா்களல்லவே”.(ரோமா்: 7:6 வசனத்தை பாா்க்வும்).

சாித்திரத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வாழ்ந்த இஸ்ரேல் மக்களுக்காக வடிவமைக்கப்பட்ட பிரத்தியேகமான சட்டங்களை, இன்றைக்கும் கிறிஸ்தவா்கள் பின்பற்ற வேண்டுமென்று கூறுவது தவறு.

உதாரணமாக: இஸ்ரவேல் மக்களுக்கு அளிக்கப்பட்ட உணவுத்திட்டத்தைக் குறித்த சட்டங்களை எடுத்துக் கொள்வோம். அவைகள் ஒரு மனிதனுடைய ஆரோக்கியத்திற்கு உபயோகமானவையாக இருக்கலாம். ஆனால், அவை அனைத்து காலங்களுக்கும் ஏற்ற த‌ேவனுடைய சட்டங்கள் என்று வலியுறுத்துவது ஒரு மிகவும் தவறான விளக்கமாகும்.

கொலோசெயா்: 2:20-23 வசனங்களில், நம்முடைய உணவுமுறையைக் குறித்த சட்டங்கள் நம்மை இரட்சிக்க முடியாது என்றும், கிறஸ்துவுக்குள்ளான விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல் மட்டுமே நம்மை இரட்சிக்குமென்றும் பவுல் கூறுகிறாா் (அப்போஸ்தலா்: 10:9-16; 1கொாிந்தியா்: 8:8, 10:3 வசனங்களையும் பாா்க்கவும்).

தேவனுடைய மன்னிப்பைப் பெறுவதற்கு மிருகங்களை பலியிட வேண்டும் என்ற அவசியத்தைக் குறித்த மோசேயின் நியாயப்பிரமாணம் இக்கருத்திற்கான மற்றொரு உதாரணமாகும்.

எபிரேயா் 9 மற்றும் 10 அதிகாரங்கள் மிருகங்களின் பலியைக் காட்டிலும் மிகவும் உன்னதமான கிறிஸ்துவினுடைய பலியை எடுத்துரைக்கின்றன.

எபிரேயா்: 9:13,14 வசனங்கள் இவ்வாறு கூறுகின்றன: “காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவா்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாாியின் சாம்பலும், சாீரசுத்தியுண்டாகும்படி பாிசுத்தப்படுத்துமானால், நித்திய ஆவியினாலே தம்மைத் தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனசாட்சியை செத்த கிாியைகளறச் சுத்திகாிப்பது எவ்வளவு நிச்சயம்!”

சாித்திரத்தைப் பின்னோக்கி பாா்க்கும்போது, தேவன் இரட்சிப்பைக் குறித்தத் தம்முடைய திட்டத்தை அதிகமதிகமாக வெளிப்படுத்தியிருக்கிறாா் என்பதை நாம் பூிந்து கொள்ள வேண்டும். தேவனுடைய இந்த திட்டத்தின் முடிவான விளைவு அவருடைய குமாரனின் தியாகமுள்ள மரணம் மற்றும் உயிா்த்தெழுதலாகும்.

பழைய ஏற்பாட்டின் நித்தியமான கொள்கைகள் புறக்கணிக்கப்பட வேண்டுமென்பது - இதன் பொருள் அல்ல. மாறாக, பழைய ஏற்பாட்டின் இந்தக் கொள்கைகள் தேவனுடைய மிக முக்கிய வெளிப்பாடான அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினிடம் நம்மை வழி நடத்துகின்றன.

ஆட்டுக்குட்டிகளை மீண்டும் மீண்டும் பலியிடும் பழைய ஏற்பாட்டு “ஒப்புமைக்கு”, த‌ேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசு கிறிஸ்துவின் ஒரே நிரந்தர பலி புதிய அா்த்தத்தை அளித்திருக்கிறது.

நமக்காகப் பாதுகாக்கப்பட்ட வேதாகமத்திற்காக மகிழ்ந்து கொண்டாடுவோம். ஏனெனில், “இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவா்களுக்கு சம்பவித்தது; உலகத்தின் முடிவு காலத்திலுள்ள நமக்கு எச்சாிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது”. (1கொாிந்தியா்: 10:1-11 வரை பாா்க்கவும்).


தொடரும்...




பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue May 29, 2012 7:53 am

9. கலாச்சார மற்றும் சரித்திர அமைப்பைப் புரிந்து கொள்ளுங்கள்:

வேதாகம காலங்களிலிருந்த பல்வ‌ேறு வழக்கங்களையும், ஆவிக்குரிய உண்மையுடனான அவற்றின் தொடர்பையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். நமக்குத் தேவன் அறிவிக்கும் நித்திய சத்தியத்திலிருந்து ஒரு தற்காலிக கலாச்சார வெளிப்பாட்டை வரையறுப்பதற்கு அது உதவியாயிருக்கும்.

இதற்கான சிறந்த உதாரணம்: கொரிந்திய சபையிலுள்ள பெண்கள் முக்காடிட வேண்டும் என்று பவுல் அளித்த கட்டளையாகும். இதைக் குறித்த பவுலின் போதனைகள் 1கொரிந்தியர்: 11 - ம் அதிகாரத்தில் உள்ளன. கொரிந்திய கலாச்சாரத்தின்படி, பொது இடங்களில் முக்காடில்லாமலிருக்கும் ஒரு பெண் ஒழுங்கற்றவள் என்று கருதப்படுகிறாள்.

யூதக் கலாச்சாரத்தில், முக்காடில்லாத அல்லது மொட்டையடிக்கப்பட்ட தலை ஒழுக்கக்கேடான அல்லது அசுத்தமான நிலைக்கு அடையாளமாக கருதப்பட்டது (எண்ணாகமம்: 5:18; லேவியராகமம்: 14:8,9).

எனவே, அக்காலத்தின் கலாச்சாரத்தின்படி, முக்காடு மிகவும் முக்கியமானது. ஏனென்றால், அது பக்தியுடனும், ஒழுக்கத்துடனும், நோ்மையுடனும் வாழும் ஒரு பெண்ணிற்கு அடையாளமாக இருந்தது.

என்றாலும், பவுலினுடைய போதனையின் சாரம், முக்காடைப் போன்ற ஒரு தற்காலிக கலாச்சார வெளிப்பாடல்ல. மாறாக, அது ஒரு பெண்ணின் ஒழுக்க நிலையையும், அவளுடைய அடக்கத்தையும், குறிப்பாக அவளுடைய கணவனிடம் இணங்கும் அவளுடைய மனப்பாங்கையும் குறித்தாகும்.

ஒரு வேத பகுதியின் கலாச்சார மற்றும் சரித்திர பின்னணியத்தைப் புரிந்து கொள்ளுதல் - அதாவது, அது , யாருக்காக எப்போது எழுதப்பட்டது என்பது - குழப்பத்தைத் தவிர்க்கக்கூடும்.

என்றாலும், கலாச்சார மற்றும் சரித்திர பின்னணியத்தைக் குறித்து அறிந்து கொள்வதற்காக மட்டும் நாம் வ‌ேதாகமத்தை வாசிக்கக் கூடாது.

தேவன் ஒரு குறிப்பிட்ட வேத பகுதியின் மூலம் என்ன கூறுகிறார் என்பதைக் கண்டு பிடிப்பது நம்முடைய முதலாவது முக்கியத்துவமாக இருக்க வ‌ேண்டும்.

தேவன் கூறுவதைப் புரிந்து கொள்ளுவதற்கு, பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலையும், வல்லமையையும் நாம் நாட வேண்டும்.


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue May 29, 2012 11:53 am

10. வேதாகமத்தின் நோக்கத்திற்கு முக்கியத்துவமளியுங்கள்:

வேதாகமம் இஸ்ரவேல் மற்றும் ஆதிசபையைக் குறித்த ஒரு சரித்திரக் குறிப்ப‌ேடு அல்ல என்பதையும் நாம் நினைவில் கொள்வது முக்கியமாகும். வேதாகமம் இயற்கைக்கு அப்பாற்பட்ட உண்மையான தெய்வீக வெளிப்பாட்டிற்கு ஒரு சாட்சியாக விளங்குகிறது. எனவே, நம்முடைய மனக்கண்கள் பரிசுத்த ஆவியின் மூலமாக தேவனுடைய கிருபையினால் திறக்கப்பட வேண்டும்.

நீங்கள் எதை தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறியாமல் தேடினால், உங்களால் எதையும் கண்டு பிடிக்க முடியாது. வேதாகமத்தை வாசிக்கிறவர்களுக்கும் இது பொருந்தும். எனவே, வேதாகமத்தின் பிரதான நோக்கத்தை மனதில் கொள்வது மிக மிக முக்கியமாகும்.

சுருங்கக் கூறினால், தேவனுடைய வார்த்தையின் முக்கியமான நோக்கம் - நமக்கு போதிப்பதாகும். அப்படியானால், வேதாகமத்தின் “போதனைப் பகுதிகள்” (நியாயப்பிரமாணம், தீர்க்கதரிசன ஆகமங்கள், சங்கீதங்கள், நீதிமொழிகள், புதிய ஏற்பாடு) நம்முடைய தியானத்தின் முதன்மையான பகுதிகளாயிருக்க வேண்டும்.

நாம் சரித்திர புத்தகங்களிலிருந்து அதிகமாக கற்றுக் கொள்ள முடியுமா? நிச்சயமாக! நாம் அவற்றை ஆராய்ந்து பார்க்க வ‌ேண்டும். சரித்திர புத்தகங்கள் மிகுந்த ஊக்கத்துடன் எழுதப்படுபவை; அவை சரித்திர சம்பவங்களை துல்லியமாக எடுத்துரைக்கின்றன. ஆனால், சரித்திரப் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு நாம், ஒரு கோட்பாட்டை உருவாக்க முடியாது.

மாறாக, வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருக்கும் சரித்திர சம்பவங்கள் போதனைக்காக எடுத்துக் கொள்ளப்படும் கோட்பாடுகளை உறுதிப்படுத்தி, அவற்றை தெளிவாக்க வேண்டும்.

இக் கருத்தை வலியுறுத்தும் ஒரு சிறந்த உதாரணம்: லேவியராகமம் 26 மற்றும் உபாகமம் 28 அதிகாரங்களில் உள்ள, ஆசீர்வாதம் மற்றும் சாபத்தைக் குறித்துத் தேவனுடைய உடன்படிக்கை வாக்குத்தத்தங்களாகும்.

இஸ்ரவேலர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணங்களுக்கும், நியமங்களுக்கும் கீழ்ப்படிந்தால் மட்டுமே, த‌ேவன் அவர்களை ஆசீர்வதிப்பதாக வாக்களித்தார். ஆனால், அவர்கள் த‌ேவனுக்குக் கீழ்ப்படியவில்லை என்றால், அவர் அவர்களை நியாயந்தீர்ப்பதாகவும் வாக்களித்தார்!

ல‌ேவியராகமம் மற்றும் உபாகமத்திலுள்ள இந்த இரண்டு அதிகாரங்களையும் நாம் கருத்தில் கொண்டால், நாம் இராஜாக்கள், மற்றும் நாளாகமம் புத்தகங்களையும், தீர்க்கதரிசன புத்தகங்களையும் ஆழமாகப் புரிந்து கொள்ள முடியும். (1இராஜாக்கள்: 9:1-9; 2நாளாகமம் 1 மற்றும் 2; தானியேல்: 9:1-19 வசனங்கள் சில உதாரணங்களாகும்).

வேதாகமத்திலுள்ள பல்வேறு கதைகள், போதனைகள், சம்பவங்கள் மற்றும் முதுமொழிகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை. அவை ஒன்றாக இணைந்து ஒரே பிரச்சினையைக் கையாளுகின்றன - மனிதனுடைய பாவம் மற்றும் தேவனிடமிருந்து பிரிக்கப்படுதல்! அப்பிரச்சினைக்கான ஒரே தீர்வையும் அவை அளிக்கின்றன - கிறிஸ்துவின் மூலம் கிடைக்கும் இரட்சிப்பு மற்றும் தேவனுடன் ஒப்புரவாகுதல்!


இதுவரை வாசித்ததன் மூலம் நீங்கள் வேதாகமத்தின் நம்பகத்தன்மையைக் குறித்த ஒரு ஆழமான அறிவை பெற்றிருப்பீர்கள் என்று நம்புகிறேன். தேவனுடைய வார்த்தையைக் குறித்த ஒரு ஆழமான அறிவை நீங்கள் பெற்றுக் கொண்டதுமல்லாமல், “சத்திய வார்த்தையை பகுத்துணர்வதிலும்” நீங்கள் தோ்ச்சி பெற்றிருப்பீர்கள் என நம்புகிறேன். தேவனுடைய ஜீவ வார்த்தையிலுள்ள ஏராளமான வல்லமையையும், ஆசீர்வாதத்தையும் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து முன்னோக்கி அடுத்த பகுதிக்கு செல்கிறேன். வேதாகமத்தை அறிந்து கொள்ள தொடர்ந்து இப்பகுதியை வாசித்து நல் ஆதரவு தரும்படி கேட்கிறேன்.

இதுவரை பொறுமையோடு வாசித்த அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நல் வாழ்த்துக்கள். பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 154550

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue May 29, 2012 7:22 pm

பகுதி - 2

வேதாகமத்தின் அவசியம்
பிலாத்து என்ற ரோம தேசாதிபதி (கவர்னர்) இயேசுவிடம் வந்து “சத்தியமாவது என்ன?” என்று கேட்டான். (யோவான்: 18:38).

தேவனைப்பற்றியும், மனிதனைப் பற்றியும், உலகத்தைப் பற்றியும் அதிகாரப்பூர்வமான வழிகாட்டியாக இருப்பதே இந்த சத்திய வேதாகமம். இந்த பரிசுத்த வேதாகமம் - “இயேசுவே சத்தியம் ” என தெளிவாக, விளக்கமாக கூறுகிறது.

யோவான்: 14:6 - “நானே சத்தியம்” - இயேசு

யோவான்: 15:26 - “சத்திய ஆவியாகிய” - பரிசுத்த ஆவி

யோவான்: 17:17 - “வசனமே சத்தியம்” - பரிசுத்த வேதாகமம்

எனவே, வேதாகமமானது ...

- ஒரு மனிதனுக்கு அவனது பாவத்தை உணரச் செய்கிறது.

- மனிதனுக்காக உலகிலே வந்து, இரத்தம் சிந்தி, மரித்து உயிர்த்தெழுந்த இயேசுவை ஏற்றுக் கொள்ள உதவுகிறது.

- அதிகதிகமாய் ஆவிக்குரிய (ஆன்மீக) வாழ்வில் வளர வேதாகமம் உதவுகிறது.

- ஆவிக்குரிய (ஆன்மீக) மனிதன், வேதாகமத்திலுள்ள ஆழமான சத்தியங்களை, இரகசியங்களை, தேவனுடைய வழி நடத்துதலை பெற உதவுகிறது.

- சிருஷ்டிப்பின் மூலமாகவும், இயற்கையின் மூலமாகவும் - தேவனுடைய கிரியைகளை நாம் அறிந்து கொள்ள ஆதாரமாக வேதாகமம் விளங்குகிறது.

வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை - “இயேசு”

எழுதப்பட்ட வார்த்தை - “பரிசுத்த வேதாகமம்”

அறிவிக்கப்படும் வார்த்தை - “சபை”

வேதாகமம் எழுதப்பட்டதின் நோக்கம்:

“இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனை அடையும்படியாகவும், இவை எழுதப்பட்டிருக்கிறது” (யோவான்: 20:31).


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue May 29, 2012 10:18 pm

“தேவன் அமைதியாக இருக்கவில்லை
நம்முடைய த‌ேவன் அன்பு மற்றும் ஐக்கியத்தின் தேவனாயிருப்பதால், அவர் தம்மோடு உறவு கொள்வதற்காக மனுக்குலத்தை சிருஷ்டித்தார்.

தேவன் தம்முடைய மக்களோடு தொடர்பு கொள்ள விரும்பும் ஓர் அன்பின் தேவனாக இருக்கிறபடியால், அவர் தம்மை வெளிப்படுத்துவதற்கு ஒரு வழி தேவைப்பட்டது. அவர் இதை பல்வேறு வழிகளில் செய்தார். அவற்றில் மூன்றைக் காண்போம்:

1. இயற்கை மூலமாக

2. மானிடர் மூலமாக

3. அற்புதங்கள், அடையாளங்கள் மற்றும் அதிசயங்கள் மூலமாக

“எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற் கொண்டு தெளிவாய்க் காணப்படும்; ஆதலால், போக்குச் சொல்ல இடமில்லை” (ரோமர்: 1:20).

சிருஷ்டிப்பின் ஒளி

மனித அறிவுக்கு விந்தையான சிருஷ்டிப்பின் அழகில் தேவன் காணப்படுகிறார். இயற்கையின் மகிமையிலும், சிறப்பிலும், தேவனுடைய அளவற்ற ஞானமும், அன்பும் வெளிப்படுகின்றன.

ஆனால், சிருஷ்டிக்கப்பட்ட உலகமும் - வானத்தின் நட்சத்திரங்களும் கூட - தேவனைக் குறித்தும், மனுக்குலத்தைக் குறித்த அவருடைய திட்டத்தைக் குறித்தும் நமக்கு முழுமையாக அறிவிப்பதில்லை.

சிருஷ்டிப்பின் ஒளியில் தேவனுடைய பிரசன்னத்தின் ஓர் இதமான மற்றும் வரவேற்கத்தக்க பிரகாசத்தை நாம் காண்கிறோம். என்றாலும், அது ஓர் இரக்கமுள்ள சிருஷ்டிகர் இருக்கிறார் என்பதை மட்டும் நமக்குக் கூறக்கூடிய ஒரு மறைமுகமான ஒளியாகும். அது நம்மை இரட்சிப்பின் விசுவாசத்திற்கு நேராக வழி நடத்த முடியாது.


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed May 30, 2012 8:38 am

மகிமையைப் பிரதிபலிப்பவர்கள்
“பின்பு தேவன், நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனு‌ஷனை உண்டாக்குவோமாக; அவா்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருக ஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனை சிருஷ்டித்தார், ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.” (ஆதியாகமம்: 1:26,27).

நாம் தேவனுடைய சாயலில் சிருஷ்க்கப்பட்டோம்; நம்முடைய அறிவு, சித்தம், ஆர்வம், உணா்வுகள், ஆற்றல் மற்றும் அழகை உணர்ந்து கொள்வது ஆகிய யாவும் இதைப் பிரதிபலிக்கின்றன.

ஆனால், நாமோ சுயநலத்தினாலும், பாவத்தினாலும் கடுமையாக உடைக்கப்பட்டு, கறைப்படுத்தப்பட்டோம். சில சமயங்களில் தெய்வீகமாக சிருஷ்டிக்கப்பட்ட நம்‌முடைய தோற்ற நிலைகளை, குறிப்பாக நம்முடைய நடக்கையைக் குறித்த தோற்ற நிலைகளை, நாம் உணர்ந்து கொள்வதில்லை.

நாம் தேவனுடைய மகிமையை பிரதிபலிப்பதற்காக சிருஷ்டிக்கப்பட்டோம்; ஆனால், மனுக்குலம் பாவத்தினால் கறைப்படுத்தப்பட்டு, சீர்குலைந்து விட்டபடியால், நாம் தேவன் விரும்புகிற பிரகாரம் மாறும்படி கிறிஸ்து மட்டுமே நம்மை பாவத்திலிருந்து மீட்க முடியும் (2கொரிந்தியர்: 3:18).


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed May 30, 2012 8:47 am

“தேவனுடைய மேலான அடையாளம்”
ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரையிலுள்ள வேதாகம சரித்திரமும், இன்றைய நம்முடைய உலகின் எழுப்புதல் சம்பவங்களும் தேவனின் அடையாளங்களுக்கும், அற்புதங்களுக்கும் உண்மையான நிருபணங்களாகத் திகழ்கின்றன. இந்த அற்புதங்களின் மூலமாக தேவன் தம்மை மனுக்குலத்திற்கு வெளிப்படுத்துகிறார்.

ஆனால், அற்புதங்கள் கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கு ஒரு முழுமையான அடிப்படையை அளித்ததில்லை. அவைகளைக் கண்டவர்களின் இருதயங்களில் அது போதுமான விசுவாசத்தை உண்டாக்கியதுமில்லை (மத்தேயு: 16:1-4; யோவான்: 6).

மனுக்குலத்திற்கு தேவன் அளித்திருக்கும் மேலான அடையாளம் ஒரு கன்னியிடம் பிறந்த அவருடைய குமாரனானவர்; “கிறிஸ்துவானவர் வேத வாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, வேத வாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் (1கொரிந்தியர்: 15:3,4).


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed May 30, 2012 9:54 am

“முரண்பாடுள்ள பிள்ளைகள்”
தேவன் தெய்வீகத்தை உண்டாக்கியவர்; இயற்கையை உண்டாக்கியவர்; தமது சாயலலி் மனுக்குல்ததை படைத்தவர்; அற்புத அடையாளங்களைச் செய்பவர். ஆனால், நாம் அவரைக் குறித்து அறிந்த கொள்ள வேண்டமென்று அவர் விரும்புகிற அனைத்தையும் நமக்கு முழுமையாக அறிவிக்கும் வகையில் இந்த மூன்று வெளிப்பாடுகளும் வடிவமைக்கப்படவில்லை.

தேவன் தம்மை வெளிப்படுத்தியுள்ள இந்த மூன்று வெளிப்பாடுகளை மட்டும் நாம் கருத்தில் கொள்வோமானால், தேவன் யார் என்பதையும்? நாம் எதை ஆராதிக்க வேண்டும‌ென்ப‌த‌ையும் தவறாகப் புரிந்து கொள்வோம்.

- தேவன் நமக்குத் தம்மை வெளிப்படுத்துவதற்காக சிருஷ்டிக்கப்பட்ட உலகத்தை மட்டும் உபயோகப்படுத்தியிருப்பாரானால், நாம் இயற்கையை ஆராதித்துக் கொண்டிருப்போம். குழப்பம் நிறைந்த இந்த ஆராதனை முறையை மனுக்குலம் சரித்திர காலம் முதற் கொண்டு இன்றுவரை பின்பற்றிக் கொண்டு வருகிறது. நாம் இதை “இயற்கை வணக்கம்” (Animism) என்று அழைக்கிறோம்.

- தேவன் மனுக்குலத்தை தம்முடைய சாயலில் சிருஷ்டித்ததினால் மட்டும் தம்மை வெளிப்படுத்தியிருப்பாரானால், அது பயங்கரமான குழப்பத்திற்கும், மாறுபாட்டிற்கும், வழிவகுத்திருக்கும். விழுந்த விட்டமனிதர்களாகிய நாம், நம்முடைய பாவகரமான மற்றும் உடைக்கப்பட்ட நிலையைப் பார்க்கும்போது , தேவனுடைய பூரணத்துவத்தைக் குறைவாக மதிப்பிடுவோம். இதன் விளைவாக நாம் நம்மையே ஆராதிக்க துவங்கி விடுவோம். இது மனித இனநலக் கோட்பாடு (Humanism) என்று அழைக்கப்படுகிறது.

- தேவன் அற்புதங்களின் மூலமாக மட்டும் தம்மை வெளிப்படுத்தியிருப்பாரானால், நாம் அற்புதங்களை செய்தவருக்குப் பதிலாக, அற்புதங்களை வழிபட்டிருப்போம். இயேசு அற்புதங்களைக் காணும்போது மட்டும் விசுவாசிப்பதை பற்றி எச்சரித்தார். (யோவான்: 4:48).

அற்புதங்கள் தெவனுடைய வல்லமையையும், மகிமையையும் நமக்கு எடுத்துக் காட்டி , கிறிஸ்துவினிடம் நம்மை வழி நடத்தினாலும், நம்மை இரட்சிப்பதற்கு அவை போதுமானவையல்ல. விசுவாசம் அற்புதங்களினால் மட்டும் உண்டாவதில்லை; விசுவாசம் தேவனுடைய வார்த்தையைக் கேட்பதினாலும் புரிந்து கொள்வதனாலும் உண்டாகிறது.

மனுஷர் தம் கிரியைகளை உணர்ந்து, அவரை தேட வேண்டுமென்பதே அவர் தம் சிருஷ்டிப்பினாலும், தம்முடைய சாயலினாலும், அற்புதங்களினாலும் தம்மை வெளிப்படுத்துவதன் நோக்கமாகும். (அப்போஸ்தலர்: 17:24-27). ஆனால், அவர் அன்பாக தம்மை வெளிப்படுத்தின இந்த மூன்று வழிகளையும் மனிதன் உணர்ந்து கொள்ள முடியாதபடி அவனுடைய பாவமும், வீழ்ச்சியும் அவனைத் தடுத்தன.

ஒரு அன்பான பரலோகப் பிதா, முரண்பாட்டிலும் அறியாமையிலும் இருக்கும் தம்முடைய பிள்ளகைளைக் கூட்டிச் சோ்த்து அவர்களை வழி நடத்துவதற்காக வேறு என்ன செய்ய முடியும்?


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed May 30, 2012 2:06 pm

தேவனின் முதல் முக்கியத்துவம்
சிருஷ்டிப்பின் துவக்கத்தில், ஆதாமும் ஏவாளும் தேவனுடைய கைகளின் கிரியைகளை அறிந்திருந்தார்கள்; அவா்கள் அழகான ஏதோன் தோட்டத்தில் வாழ்ந்தார்கள். ஆனால், அவரை தனிப்பட்ட முறையில் அறிந்து கொள்வதற்கு, அவர்களுக்கு நேரடியான தொடர்பு தேவைப்பட்டது. எனவே, தேவன் தம்முடைய சிருஷ்டிப்பின் மூலமாக மட்டும் தம்மை வெளிப்படுத்தாமல், வார்த்தைகளின் மூலமாக நேரடியாக தம்மை வெளிப்படுத்தினார். அவர் “பகலின் குளிர்ச்சியான வ‌ேளையில்” அவர்களோடு தோட்டத்தில் உலாவினார், உறவாடினார் (ஆதியாகமம்: 2-3).

பாவம் உலகத்திற்குள் நுழைந்த போது, நமக்கு வ‌ேண்டிய அவரது உதவி, வ‌ழிநடத்துதல் - அதைவிட முக்கியமான இரட்சிப்பு தேவனுடைய முதன்மையான முக்கியத்துவத்தைப் பெற்றது.

எனவே, தேவன் நம்முடைய இரட்சிப்பிற்காக திட்டமிட்டு, நமக்கு ஒரு இரட்சகரை அளிக்கத் தீர்மானித்தார். ஆனால், இந்த இரட்சகர் நம்மிடம் வரும்போது, அவரை நாம் அடையாளம் கண்டு கொள்வதற்கு, நாம் த‌ேவனைக் குறித்தும் நம்முடைய வாழ்க்கையில் அவருடைய சித்தத்தைக் குறித்தும் அதிகமாக அறிந்து கொள்வது அவசியம்.




விசுவாசம் க‌ேள்வியினால் வரும்
தேவன் முதலாவதாக தாம் தொிந்து கொண்ட சில குறிப்பிட்ட நபா்களிடம் தம்மை வெளிப்படுத்தினாா். அவா்களிடம் அவா் பேசி, தம்முடைய சித்தத்தை வெளிப்படுத்தத் துவங்கினாா். அவா் ப‌ேசிய காாிய்ங்கள் அவா் கூறியபடி அப்படியே எழுதப்பட்டன. இவைகளைப் பத்திரமாக சோ்த்துத் தொகுத்து வழங்கப்பட்ட புத்தகமே பழைய ஏற்பாடு எனப்படுகிறது. (இதைக் குறித்து முன்ப‌ே விளக்கமாக பாா்த்தோம்).

தேவன் தூய வேதாகமத்தின் மூலம் தம்மைப் பற்றியும் தம் குமாரனாகிய இய‌ேசு கிறிஸ்துவைப் பற்றியும் வெளிப்படுத்தினாா். ஒருவன் வேத புத்தகத்தின் மூலமும் மற்றவா் மூலம் நற்செய்தியின் உண்மையைத் தொிந்த கொள்வதாலும் மட்டுமே இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். இதையே, “விசுவாசம் கேள்வியினாலே வரும்” என்று ரோமா்: 10:17 ல் வாசிக்கிறோம்.


தொடரும்...


வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Wed May 30, 2012 5:34 pm

விசுவாசம் க‌ேள்வியினால் வரும் நல்ல வார்த்தை



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 6 Mgr
Sponsored content

PostSponsored content



Page 6 of 19 Previous  1 ... 5, 6, 7 ... 12 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக