புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10 
5 Posts - 3%
prajai
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10 
2 Posts - 1%
சிவா
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10 
435 Posts - 47%
heezulia
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10 
30 Posts - 3%
prajai
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4


   
   

Page 4 of 19 Previous  1, 2, 3, 4, 5 ... 11 ... 19  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon May 21, 2012 9:12 pm

First topic message reminder :

“பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை” - என்ற தலைப்பில் வேதத்தின் மகத்துவங்களை அனைவரும் அறிந்திட பல்வேறு சிறுசிறு தலைப்புகளில் அனைவரும் விரும்பி ஆர்வமாக வாசிக்கும்படியாக இப்பகுதியில் ஒரு திரியை திறக்கிறேன். அனைத்து உறவுகளின் ஆதரவையும் அன்புடன் நாடுகிறேன்.

இதில் கேள்வி கேட்பவர்கள் அந்ததந்த தலைப்பில் உள்ள அம்சங்களில் மட்டும் (தாங்கள் அறிந்து கொள்ள மட்டும்) கேட்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தலைப்பிற்கு சம்பந்தமில்லாத க‌ேள்விகளையும் வாத-விதாண்டாவாதங்களையும் தவிர்க்கும்படி தயவாக க‌ேட்டுக் கொள்கிறேன்.

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 4 154550


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed May 23, 2012 7:37 am

“தேவனால் - பிறப்பிக்கப்பட்ட வார்த்தைகள் - பரிசுத்த ஆவியினால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்கள்”
பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலனாகிய பவுலடன் பேசி, “வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டது (தேவனால் சுவாசிக்கப்பட்டது)” என்று கூறியபோது, தேவன் மனிதர்களுடைய எழுத்துக்கள் அல்லது சிந்தனைகளில் ஒரு விசேஷித்த வல்லமையை சுவாசத்தைப்போல அளிக்கவில்லை.

மாறாக, தேவன் மனிதர்களுடைய சிந்தனைகளில் தம்முடைய வார்த்தைகளை அளித்து அவைகளை அவர்கள் எழுதும்படி செய்தார்.

1கொரிந்தியர்: 2:13 வசனம் இதே கருத்தை வலியுறுத்துகிறது:

“அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசுகிறோம்”.

வேதாகமத்தின் தெய்வீக உந்துதலை விளக்கும் இரண்டாவது முக்கியமான வேதபகுதி: 2பேதுரு: 1:20-21 வசனங்களாகும்:

“வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுய தோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறிய வேண்டியது. தீர்க்கதரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு பேசினார்கள்”

வேதாகமத்தில் எழுதப்பட்ட எந்த வார்த்தையும் மனிதனுடைய கிரியையினால் அல்லது உணர்வினால் எழுதப்படவில்லை என்பதை இன்னும் அதிகமாக புரிந்து கொள்வதற்கு இந்த வசனம் நமக்கு உதவுகிறது.

வேதாகமத்தை எழுதிய ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டார்கள் அல்லது வழி நடத்தப்பட்டார்கள். ஆனால், தேவன் ஒரு இயந்திரத்தை கட்டுப்படுத்துவதுபோல அவர்களுடைய சிந்தனைகளையும், கரங்களையும் கட்டுப்படுத்தவில்லை.

தேவன் மனிதனை பரிசுத்த ஆவியைக் குறித்த அறிவுடனும், உணர்வுடனும் சிருஷ்டித்தார். அவர் மனிதனுடன் பேச நினைக்கும்போது, அவர் மனுக்குலத்தை எவ்வாறு வடிவமைத்தார் என்ற உண்மையை அவர் புறக்கணிப்பதில்லை.

வேதாகம எழுத்தாளர்கள் ஏதோ வித்தை போன்று “தானே இயங்குகிற” முறையில் நிச்சயமாக வேதாகமத்தை எழுதவில்லை. பரிசுத்த ஆவியானவர் அவ்வாறு கிரியை செய்வதில்லை! இப்படிப்பட்ட கிரியை தேவனிடமிருந்து வந்தது என்று கூறும் எந்த வாதத்தையும் குறித்து நாம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

மேலும், 2தீமோத்தேயு: 3:16 வசனத்தின்படி, வ‌ேதாகமத்தின் எழுத்துக்கள் பரிசுத்த ஆவியின் உந்துதலுக்குட்பட்டன. அவற்றை எழுதினவர்கள் அல்ல, வேதாகமம் பரிசுத்தாவியின் உந்துதலுக்குட்பட்டது, வேதாகமத்தை எழுதினவர்களல்ல.

எனவே, நாம் 2தீமோத்தேயு: 3:16 மற்றும் 2பேதுரு: 1:20-21 வசனங்களை இணைக்கும்போது, வேதாகமம் பின்வரும் வழியில் பரிசுத்தாவியின் உந்துதலுக்குட்பட்டது என்று அறிகிறோம்.

“பரிசுத்த ஆவியினால் ஆட்கொள்ளப்பட்ட” மனிதர்கள் “தேவனால் பிறப்பிக்கப்பட்ட” வார்த்தைகளை எழுதினார்கள். இந்தத் “தேவனுடைய வார்த்தைகள்” ஒரு கிறிஸ்தவ விசுவாசத்தையும், கிறிஸ்தவ வாழ்க்கை முறையையும் உருவாக்குவதற்கு தெய்வீக அதிகாரம் பெற்றவையாகும்.


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed May 23, 2012 7:31 pm

“சத்தியம்”

அதை அளித்தல்

அதை பதிவு செய்தல்

அதை புரிந்து கொள்ளுதல்
உந்துதல் என்றால் என்ன என்பதை தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு இரண்டு முக்கியமான மற்றும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்ட கருத்துக்கள் நமக்கு உதவுகின்றன.

அந்த 2 கருத்துக்கள்: 1. வெளிப்பாடு 2. பிரகாசிப்பித்தல்

மனித அறிவு ஒருக்காலும் அறிந்திராத சத்தியத்தைத் தேவன் நேரடியாக அறிவிக்கும் அவருடைய செயல் “வெளிப்பாடு” எனப்படும். அந்த சத்தியத்தை தேவனுடைய வெளிப்பாடில்லாமல் மற்ற எந்த வழியிலும் அறிந்து கொள்ள முடியாது.

வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்களை மறுபடியும் பிறந்த விசுவாசிகள் புரிந்து கொள்ள அவர்களுக்கு உதவும் வகையில் பரிசுத்த ஆவியானவர் அளிக்கும் இயக்கம் அல்லது உதவி, “பிரகாசிப்பித்தல்” என்று குறிப்பிடப்படுகிறது. வேத வாக்கியங்கள் விவரிக்கும் உந்துதல் இந்த 2 கிரியைகளில் ஒன்றையாகிலும் போன்றதல்ல.

பின்பு, வெளிப்பாடு, உந்துதல் மற்றும் பிரகாசிப்பித்தல்ஆகிய இம்மூன்றும் எவ்வாறு ஒன்றாக கிரியை செய்கின்றன?

வெளிப்பாடு: சத்தியத்தை அளித்தல்

உந்துதல்: அந்த சத்தியத்தைப் பெற்றுக் கொண்டு அதைப் பதிவு செய்தல்

பிரகாசிப்பித்தல்: வெளிப்படுத்தப்பட்டு, உந்துதலளிக்கப்பட்ட சத்தியத்தைப் புரிந்து கொள்ளுதல்

வேத வாக்கியங்களில் கூறப்பட்டுள்ள சத்தியத்தின் வெளிப்பாட்டை தேவனால் மட்டுமே மனுக்குலத்திற்கு அளிக்க முடியும். அது தேவனிடத்திலிருந்து மனிதனுக்கு அளிக்கப்படும் ஒரு தெய்வீக செய்தியாகும்.

தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட மக்கள் இந்த தெய்வீக செய்தியைப் பெற்றுக் கொண்டு பின்பு அதை மற்றவர்களும் அறிந்து கொள்வதற்காக அதைப் பதிவு செய்த முறை அல்லது வழி உந்துதல் எனப்படுகிறது.

தேவனால் வெளிப்படுத்தப்பட்டவைகளை மனிதன் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவனுடைய மனதும், இருதயமும் பிரகாசிப்பிக்கப்பட வேண்டும்.

“எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டும்.” (யோவான்: 14:26).

“சத்திய ஆவியானவர் நம்மை பிரகாசிப்பிக்கிறார்” (யோவான்: 14:17).


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed May 23, 2012 10:59 pm

“ஜீவ சுவாசம்”
வேத வாக்கியங்கள் தேவனுடைய உந்துதலினால் எழுதப்பட்டவை:
இது வேதாகமத்தைக் குறித்து மிக முக்கிய உண்மைகளில் ஒன்றாகும். வேத வாக்கியங்கள் தேவனுடைய சொந்த சிருஷ்டிப்பின் வல்லமையிலிருந்து பிறப்பிக்கப்பட்டவை என்பது இதன் பொருள்.

மனிதன் தேவனைக் குறித்து உலகத்திற்கு அறிவிப்பதற்காக உபயோகிக்கும் வார்த்தைகளாலும், கருத்துக்களாலும் வேதாகமம் எழுதப்படவில்லை. தேவன் தாமே, பரிசுத்த ஆவியானவரின் மூலமாக, அதி முதல் அந்தம் வரை வேத வாக்கியங்களின் நூலாசிரியராகவும், வடிவமைப்பாளாராகவும் இருந்தார். அவர் தம்மைக் குறித்தும், மனுக்குலத்திற்கான தம்முடைய திட்டத்தைக் குறித்தும் நமக்குக் கூறுவதற்காக வேதாகமத்தை நேரடியாக “பிறப்பித்தார்”

ஏற்கனவே கூறியதுபோல, வேதாகமத்தை எழுதியவர்கள் தேவனால் “பிறப்பிக்கப்பட்டார்கள்” என்பது இதன் பொருளல்ல; வேதாகமம் தேவனால் பிறப்பிக்கப்பட்டது என்பது இதன் பொருளாகும். தேவனுடைய பிறப்பிக்கும் சுவாசத்தினால் தேவனுடைய வார்த்தை உருவாக்கப்பட்டது.

தேவன் ஆதாமுக்கு “ஜீவ சுவாசத்தை” (ஆதியாகமம்: 2:7) அளித்ததுபோல, அவர் வேதாகமத்திற்குள் உயிர்ப்பிக்கிற தம்முடைய ஆவியை அளித்தார். (யோவான்: 6:63).


எனவ‌ே, வேதாகமம் தேவனுடைய சொந்த “வாக்கு” அல்லது “சுவாசமாக” இருக்கிறபடியால், அது “த‌ேவனுடைய வார்த்தை” என்று சாியாக அழைக்கப்படுகிறது.

தேவனுடைய வாா்த்தை நமக்கு விலையேறப் பெற்ற ஜீவனை அளிக்கும் மூலாதாரம் (யோவான்: 6:63). அது ஜீவனும், வல்லமையுடையது (எபிரேயர்: 4:12).

நாம் தேவனுடைய வார்த்தையை பரிசுத்தமுள்ள பயத்துடனும், மரியாதையுடனும் கவனமாக வாசித்து, அதில் புதைந்து கிடக்கும் சத்தியங்களின் ஆழங்களை தோண்டியெடுப்பதற்கு நாட வேண்டும்.


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu May 24, 2012 5:09 am

B. வேதாகமம் - நாம் அதை நம்ப முடியுமா?

பிழையற்ற தன்மையின் கோட்பாடு
(Doctrine of Inerrancy)

முந்திய பகுதியில், தேவன் வேத வாக்கியங்களை “பிறப்பித்தார்” என்ற அடிப்படையான உண்மையை பார்த்தோம். வேதாகமம் மனிதர்களின் கண்டுபிடிப்பு, கருத்துக்கள் அல்லது அபிப்பிராயங்களாயிராமல் - தேவனுடைய வார்த்தையாயிருக்கிறபடியால், நாம் அதை முற்றிலுமாக நம்ப முடியும். இந்த ஆதாரத்தின் அடிப்படையில், நாம் பிழையற்ற தன்மையின் கோட்பாட்டை அறிந்து கொள்ளலாம்.


நம்பத்தக்கதது, பிழையற்றது

“பிழையற்ற தன்மை”
என்றால் என்ன?

பிழையற்ற தன்மை என்பது:

வேதாகமத்தின் எழுத்தாளர்களால் (தேவனால் பிறப்பிக்கப்பட்ட வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்கள்) தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு பிரதியின் மூலப் படிவங்களிலும் தவறுகள் அல்லது பிழைகள் இல்லை.

பிழையற்றது என்ற வாா்ததைக்கு பதிலாக தவறற்றது என்ற வார்த்தையையும் உபயோகிக்கலாம். தவறற்றது என்றால், இரட்சிப்பையும், தேவனிடம் மனிதனுக்குள்ள உறவு முறையையையும் குறித்த வேதாகமத்தின் அடிப்படையான செய்தி முற்றிலுமாக நம்பத்தக்கது என்று பொருள்.

வேதாகமம் பிழையற்றது (பிழைகள் இல்லாமல்) மற்றும் தவறற்றது நம்பத் தகுந்தது என்று நாம் விசுவாசிக்கிறோம்.

இதை இன்னும் அதிகமாக புரிந்து கொள்வதற்கு வேதாகமத்தின் எந்த ஒரு வாக்கியத்தையும் குறித்த மூன்று க‌ேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டும். அவை:


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu May 24, 2012 6:00 am

1. அவ் வேத வாக்கியத்தை எழுதின எழுத்தாளர் அது ஒரு உண்மையான கருத்தைக் கூறுகிறாரா? - அல்லது ஒரு பொய்யை மிகவும் சாியாக, பிழையில்லாமல் பதிவு செய்கிறாரா?
உதாரணமாக, தவறான ஒரு கருத்தை நாம் உண்மையுடனும், பிழையில்லாமலும் எழுதலாம். ஆதியாகமத்தில், நன்மை தீமை அறியத்தக்க ஜீவ விருட்சத்தின் கனியைப் புசிப்பது குறித்து சாத்தான் கூறிய பொய் சாியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது:

“நீங்கள் சாகவே சாவதில்லை” என்று சாத்தான் கூறினான். (ஆதியாகமம்: 3:4); என்றாலும், அப்படிப்பட்ட கீழ்ப்படியாமையின் செயல் ம‌ரணத்தினால் தண்டிக்கப்படும் என்று தேவன் முன்னதாகவே கூறியிருக்கிறார் (ஆதியாகமம்: 3:3).

வேதாகமத்தில், சாத்தான் ஏவாளை வஞ்சித்த விதம் பிழையில்லாமலும், உண்மையுடனும் விவரிக்கப்பட்டுள்ளது.

இது இந்த உதாரணத்தின் பிழையற்ற தன்மையாகும்.


2. வேத வாக்கியத்தின் எழுத்தாளர் நேரிடையான விஞ்ஞான மொழி நடையில் எழுதியுள்ளாரா - அல்லது வழக்கத்தில் உள்ள ஒரு பிரபலமான மொழி நடையை உபயோகப்படுத்துகிறாரா?
வேதாகம எழுத்தாளர்கள் “பூமியின் நான்கு திசைகள்” (ஏசாயா: 11:12) என்று எழுதினபோது, அவா்களுக்கு புவியியலைக் குறித்த சரியான அறிவு இருந்ததில்லை என்று சிலர் கூறலாம்.

அல்லது “வானத்தின் மதகுகள்” (ஆதியாகமம்: 7:11) என்ற சொற்றொடர் அண்ட சராசரத்தைக் குறித்து ஒரு தவறான, கற்பனையான தோற்றத்தை அளிக்கிறது என்றும் அவர்கள் கூறலாம்.

என்றாலும், இந்த மொழி நடை ஒரு அடையாளமான அல்லது மறைபொருளை அர்த்தத்துடனும், நோக்கத்துடனும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொண்டால், எந்தக் குழப்பமும் ஏற்படுவதற்கு இடமில்லை.

நாம் சூரியன் “உதிப்பதைக்” குறித்தும், “அஸ்தமிப்பதைக்” குறித்தும் அடிக்கடி பேசுகிறோம். விஞ்ஞானத்தின்படி, இது நேரிடையாக உண்மையல்ல - ஏனென்றால், பூமியே சுற்றுகிறது. சூரியன் அல்ல.

ஒரு விசேஷமான அர்த்தத்தின்படி இது உண்மை - ஏனென்றால், பூமியிலிருந்து பார்க்கும்போது, சூரியன் உதிப்பது போலவும், அஸ்தமிப்பது போலவும் காட்சியளிக்கிறது.

நம்முடைய செய்தி நிறுவனங்கள் “சூரியன் உதிக்கும்” ந‌ேரத்தையும், அது “அஸ்தமிக்கும்” நேரத்தையும் அறிவிக்கும்போது, அவர்கள் தவறாக அறிவிக்கிறார்கள் என்று நாம் அவர்களைக் குற்றம் சாட்ட முடியாது!


3. வேத வாக்கியத்தின் எழுத்தாளர் “ஏறக்குறைய சரியான” எண்ணிக்கைகளைக் குறித்துக் கூறுகிறாரா? அல்லது அவர் ஒரு துல்லியமான கணக்கீட்டை அளிக்கிறாரா?
வேதவாக்கியத்தில் அளிக்கப்பட்ட எண்ணிக்கை ஏறக்குறைய சரியாக இருக்குமென்றால், அதில் கூறப்பட்டவை முற்றிலுமாக உண்மையானவை என்று ஏற்றுக் கொள்ள முடியும்.

நம்முடைய அன்றாட பேச்சு வழக்கில் இப்படிப்பட்ட எண்ணிக்கை கணக்கீடுகளை அதிகமாக உபயோகிக்கிறோம். வேத வாக்கியத்தின் நோக்கத்திற்கு ஒரு துல்லியமான எண்ணிக்கை அளிக்கப்பட வேண்டியதன் அவசியமில்லாதபோது, இந்தக் கணக்கீடுகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.

வேதவாக்கியத்தின் பிழையற்ற தன்மையைக் குறித்துப் பேசும்போது, எழுத்தாளரின் நோக்கத்தில் உள்ள பொருள், அச்செய்தியை அளிப்பதற்கான காரணம் மற்றும் வேத வாக்கியங்களின் உண்மையை வெளிப்படுத்தும் அவருடைய மொழி நடை ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu May 24, 2012 6:58 am

வேதாகமத்தின் உள்ள‌ே

பிழையற்ற தன்மையின் சான்று
பிழையற்ற தன்மையின் கோட்பாடு எங்கிருந்து வருகிறது?

வேதவாக்கியங்களிலிருந்து என்பது இக் க‌ேள்விக்கான பதில். வேதாகமம் தன்னுடைய பிழையற்ற தன்மையைக் குறித்து என்ன கூறுகிறது என்று பார்ப்போம்:


1. வேத வாக்கியங்களின் சாட்சி:

அ) பழைய ஏற்பாடு:
பழைய ஏற்பாட்டில் “...என்று கர்த்தர் கூறுகிறார்” போன்ற சொற்றொடர்கள் 3,800 முறைக்கும் மேலான இடங்களில் இடம் பெற்றுள்ளன. பழைய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் தாங்கள் தேவனுடைய வார்த்தையிலிருந்து பேசுவதைக் குறித்து முழுமையான நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

“கர்த்தருடைய வேதம் குறைவற்றதும்... கர்த்தருடைய சாட்சி சத்தியமுமாயிருக்கிறது” (சங்கீதம்: 19:7) என்று சங்கீதக்காரன் அறிவிக்கிறான்.

வேதாகமத்தின் முழுமையான நம்பகத்தன்மைக்கு இது ஒரு நேரிடையான ஆதாரமாகும். “உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம்” (சங்கீதம்: 119:160). “அவருடைய கட்‌டளைகளெல்லாம் உண்மையானவைகள்” (சங்கீதம: 111:7). நீதிமொழிகளும் இதே கருத்தைத் தொிவிக்கிறது: “தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்” (நீதிமொழிகள்: 30:5).

“கர்த்தருடைய ஆவியானவர் என்னைக் கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது” (2சாமுவேல்: 23:2) என்று இராஜாவாகிய தாவீது கூறுகிறான். ஏசாயா, எரேமியா, எசேக்கிய‌ேல் போன்ற மற்ற பல தீர்க்கதரிசிகளும் இதைப் போன்ற கருத்துக்களை வெளிப்படுத்தகிறார்கள்.

ஆ) புதிய ஏற்பாடு: புதிய ஏற்பாட்டின் எழுத்தாளர்கள், தேவன் தங்களுடன் பேசினார் என்ற உண்மைக்கும் சாட்சியளிக்கிறார்கள். சுவிசேஷங்கள் மற்றும் நிருபங்களில் உள்ள பல வேத வாக்கியங்கள் வேதாகமத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகின்றன. (லூக்கா: 1:70; எபிரேயர்: 4:12; ரோமர்: 7:12; யாக்கோபு: 4:5).

வேதாகமத்தின் போதனை மற்றும் உந்துதலின் கோட்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த அனைத்துக் கருத்துக்களையும் நாம் ஆராயும்போது, வேதாகமம் தன்னுடைய சொந்த பிழையற்ற தன்மையைப் போதிக்கிறது என்று திட்டமாக அறிகிறோம்.

எனவே, வேதவாக்கியங்களை எழுதினவர்கள் தேவனுடைய வார்த்தையைக் குறித்துப் பேசினார்கள். தேவனுடைய வார்த்தையை எழுதினார்கள் என்பது தெளிவாகிறது.

ஆனால், வேத வாக்கியங்களின் பிழையற்ற தன்மைக்கு மிகப் பெரிய சாட்சிகளில் ஒன்று பின் தொடர்கிறது:

அது ...


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu May 24, 2012 7:36 am

2. இய‌ேசு கிறிஸ்துவின் சாட்சி:
தேவ குமாரனாகிய இய‌ேசு, வேத வாக்கியங்களின் முழுமையான தெய்வீக அதிகாரத்திற்கும், நம்பகத்தன்மைக்கும் சாட்சியளித்தார். அவர் குறிப்பாக பழைய ஏற்பாட்டின் நிறைவை பின்வருமாறு உறுதிப்படுத்துகிறார்: “மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேற வேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வந்த விசேஷங்கள் இவைகளே” (லூக்கா: 22:44).

பரிசேயர்கள் இயேசுவினிடம் தர்க்கித்தபோது, அவர் “வேதவாக்கியம் தவறாதது” (யோவான்: 10:35) என்று கூறினார். அவர் வேத வாக்கியத்தின் உண்மை மற்றும் நம்பகத்தன்மையின் அடிப்படையில் போதித்தார்.

நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக் கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்து போனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும் (ஒரு சிறிய எபிரேய எழுத்து) ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் (ஒரு எபிரேய எழுத்தின் சிறிய உறுப்பு) ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லகிறேன் (மத்தேயு: 5:17,18).

குறிப்பாக, இயேசு பல பழைய ஏற்பாட்டு சம்பவங்களையும், நபர்களையும் குறித்துக் கூறினார். தம்முடைய போதனையில் இவைகளைக் குறிப்பிடுவதால் அவைகள் முழுமையாக நம்பத்தக்கவை என்று உறுதிப்படுத்தும் வகையில், இயேசு தம்முடைய ஒப்புதலின் முத்திரையை அவைகளின் மீது பதிக்கிறார்.

அது பற்றிய சுவிசேஷங்களிலுள்ள இக்குறிப்புகளின் ஒரு பட்டியல்:

சிருஷ்டிப்பு மற்றும் திருமணம் - மத்தேயு: 19:5

ஜலப்பிரளயம் மற்றும் நோவாவின் பேழை - லூக்கா: 17:26, 27

சோதோம் மற்றும் கொமாராவின் அழிவு - லூக்கா: 17:28,29

தீரு மற்றும் சீதோனின் அழிவு - மத்தேயு: 11:21,22

விருத்தசேதனம் - யோவான்: 7:22

பஸ்கா - மத்தேயு: 26:2

நியாயப்பிரமாணம் - யோவான்: 7:19

கட்டளைகள் - மத்தேயு: 19:7-9

யூத விவாகரத்து சட்டம் - மத்தேயு: 19:7-9

எரிகிற முடசெடியின் உண்மை - மாற்கு: 12:26

யோனா மற்றும் பெரிய மீனின் அனுபவம் - மத்தேயு: 12:40

நினிவேயின் மனந்திரும்புதல் - மத்தேயு: 12:41

சாலமோனின் மகிமை - மத்தேயு: 6:29

சாலமோனின் ஞானம் - மத்தேயு: 12:42

கூடாரப் பண்டிகை - யோவான்: 7 ம் அதிகாரம்

தாவீது சமூகத்து அப்பங்களைச் சாப்பிடுதல் - மத்தேயு: 12:3

ஆசாரியர்கள் ஓய்வு நாளைப் பரிசுத்த குலைச்சலாக்குதல் - மத்தேயு: 12:5

எலியாவின் நாட்களில் வானம் அடைபட்டது - லூக்கா: 4:25

குஷ்டரோகியான நாகமானின் சம்பவம் - லூக்கா: 4:27

உலோக சர்ப்பத்தின் சம்பவம் - யோவான்: 3:14,15

ஆபேல் மற்றும் சகரியாவின் கொலை - மத்தேயு: 23:35

மேசியாவின் பணி - லூக்கா: 4:16-21

யோவான்ஸ்நானகனின் பணி - மத்தேயு: 17:10-13

எலியாவின் பணி - மத்தேயு: 17:10-13

தானியேலும், அவனுடைய மேலான தீர்க்கதரிசனமும் - மத்தேயு: 24:15


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu May 24, 2012 3:35 pm

3. தீர்க்கதரிசனத்தின் சாட்சி
வேத வாக்கியத்திலுள்ள தீர்க்கதரிசனங்கள் யாவும் முழுமையாக நிறைவேறின என்ற உண்மை வ‌ேதாகமத்தின் பிழையற்ற தன்மைக்கு ஒரு வல்லமையான சாட்சியாகும்.

வேதாகமத்தில் சம்பவங்களைக்குறித்த எந்த நிபந்தனையற்ற தீர்க்கதரிசனமும் - இன்றைய நாளின் சம்பவங்களைக் குறித்தத் தீர்க்கதரிசனங்கள் உள்பட - நிறைவேறாமல் போகவில்லை! பிற்காலங்களைக் குறித்த இந்த தீர்க்தரிசனங்கள் பல நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பாகவே அளிக்கப்பட்டன.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்த‌ெழுதல் ஆகியவற்றைக் குறித்த 333 தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியுள்ளன என்று சில வேத பண்டிதர்கள் கூறுகின்றனர்.

ஒரு தனிப்பட்ட நபரைக் குறித்த பல தீர்க்கதரிசனங்கள் தற்செயலாக நிறைவேறுவதற்கான சாத்தியக் கூறு 83 பில்லியனில் ஒன்று என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ஒரே ஒரு நபர் தேவனைக் குறித்த 8 தீர்க்கதரிசனங்களை மட்டும் நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறு நம்ப முடியாத அளவிற்கு மிகவும் குறைவாகும்.

இயேசுவின் வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைக் குறித்த 300 தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியுள்ள ஒரு குறிப்பிடத்தக்க அற்புதத்தை சிந்தித்துப் பாருங்கள்! உண்மையில், ஆதிமுதல் அந்தம் வரை அனைத்தையும் அறிந்த தேவன் மட்டுமே வேதாகமத்தின் ஒரே நூலாசிரியர். (வெளிப்படுத்தல்: 1:17,18).

கிறிஸ்துவைக் குறித்த பெரும்பாலான தீர்க்தரிசனங்கள் அவருடைய பிறப்பிற்கு பல நூறு வருடங்களுக்கு (சில தீர்க்கதரிசனங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு) முன்பாக அளிக்கப்பட்டன என்றாலும், அனைத்து தீர்க்கதரிசனங்களும் நிறைவேறின. மற்ற தீர்க்கதரிசனங்கள் - அறிவு மற்றும் மக்கள் தொடர்பின் பெருக்கம் (தானியேல்: 12:4) மற்றும் இஸ்ரேல் ஒரு தேசமாக நிலைநிறுத்தப்படுதல் (ஏசாயா: 61:4) - போன்றவை நம்முடைய காலங்களில் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன.

தேவனுடைய பரிசுத்த வார்த்தையில் உள்ள தீர்க்கதரிசனங்கள் மனிதனால் எழுதப்பட்டவை அல்ல. மனிதனுடைய வாழ்க்கையில் நிகழக்கூடிய சம்பவங்களை எதிர்காலத்தை அறிந்திருக்கின்ற தேவன் ஒருவரால் மட்டுமே அத்தீர்க்கதரிசனங்களை நிறைவேற்ற முடியும்.


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri May 25, 2012 11:08 am

“வேதாகமத்திற்கு வெளிய‌ே பிழையற்ற தன்மையின் சான்று
வேதாகமத்தில் மிகுதியான சரித்திரக் குறிப்புக்கள் உள்ளபடியால், அதனுடைய பிழையற்ற தன்மையை நாம் சரி பார்க்க முடியும். வேதாகமத்தின் பிழையற்ற தன்மையை சரி பார்ப்பதற்கு இரண்டு விதமான சான்றுகள் உள்ளன.

அ) தொல் பொருள் ஆராய்ச்சியின் சான்று

ஆ) பண்டைய காலத்தில் எழுதப்பட்ட ஆவணங்களின் சான்று



அ) தொல் பொருள் ஆராய்ச்சியின் கண்டு பிடிப்புகளிலிருந்து கிடைக்கும் சான்று:
தொல் பொருள் ஆராய்ச்சியின் எந்தக் கண்டுபிடிப்பும் ஒரு வேதாகம குறிப்பை தவறு என்று நிருபித்தது கிடையாது என்பதை கருத்தில் கொள்வது முக்கியமாகும்.

உண்மையில் வ‌ேதாகமத்தைக் குறித்த 25,000 இடங்கள் தொல் பொருள் ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டுள்ளன. அவைகள் பல விதமான சம்பவங்கள், மக்கள், வம்ச வரலாறு போன்றவற்றைக் குறித்த வேதாகமக் குறிப்புகளின் பிழையற்ற தன்மையையும், நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்துகின்றன. தொல் பொருள் ஆராய்ச்சி இன்றும் தொடர்கிறது. பல தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் சரித்திர இடங்களை கண்டு பிடிப்பதற்காக வேதாகமத்தைப் பணன்படுத்துகிறார்கள்!



ஆ) பண்டைய காலத்தின் ஆவணங்களிலிருந்த சான்று:
பல பத்தாண்டுகளுக்கு முன், ஆடுகளை மேய்க்கும் சிறுவன் பல பெரிய கல்லறைகளில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பண்டைய கால ஆவணங்களை கண்டு பிடித்தான். இந்த ஆவணங்கள் “சவக்கடல் சுருள்கள்” என்று அழைக்கப்பட்டன.

அவைகளில் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு பிரதிகளில் பல இருந்தன. ஏற்கனவே இருக்கும் ஆயிரக்கணக்கான பிரதிகளுடன் அவைகளை ஒப்பிடும்போது, எந்த முக்கியமான வேறுபாடுகளும் காணப்படவில்லை!

இந்த கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் என்னவென்றால், ஏற்கனவே உள்ள பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் முழுமையான பிரதிகளைவிட சவக்கடல் சுருள்கள் 1000 வருடங்கள் பழமையானவை.

சுருங்கக் கூறினால், உலகப்பிரகாரமான எந்த இலக்கியத்தையும்விட, வ‌ேதாகமத்திற்கு அதிகமான பண்டைய கால எழுத்துச் சான்றுகள் உண்டு. பண்டைய காலங்களிலிருந்த வ‌ேதாகமம் ஒரு சிறந்த ஆவணமாக திகழுகிறது. வேதாகமம் பண்டைய கால புத்தகங்களைவிட முற்றிலுமாக நம்பத்தக்கது என்று உறுதியுடன் கூறலாம்.

ஆயிரக்கணக்கான வருடங்களான வேதாகமம் எந்த மாற்றத்திற்குட்படாமலும், நம்பக்கூடிய அளவிற்கு பிழையில்லாமல் நீடித்திருக்கிறது!


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri May 25, 2012 11:34 am

“பிழையில்லாத சத்தியம்”
வேதாகமம் தெய்வீக வழிநடத்துதலினால் எழுதப்பட்டது என்பதற்கு, தொல்பொருள் ஆராய்ச்சியும், பண்டையகால ஆவணங்களும் ஒரு மறைமுகமான, ஆனால், போதிய நிருபணத்தை அளிக்கிறது. கண்கூடக் காணக்கூடிய இந்த உண்மையான சான்றுகளில் வேதாகம பிழையற்றதாக இருக்குமென்றால், அது தன்னுடைய ஆவிக்குரிய உண்மைகளிலும் பிழையற்றதாக இருக்குமென்பது மிகவும் நிச்சயமாகும்.

வேதாகமத்தின் பிழையற்றதன்மை மற்றும் நம்புவது ஆகியற்றைப் பொறுத்தவரையில், அதிலுள்ள சத்தியத்தை அறிவிப்பது யார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தேவன் பிழையற்ற சத்தியத்தை அறிவிக்கிறார். இது உண்மை. ஏனென்றால், ஒப்புயர்வற்ற, “சத்திய தேவன்” (ஏசாயா: 65:16), “பொய் சொல்ல ஒரு மனிதன் அல்ல” (எண்ணாகமம்: 23:19; தீத்து: 1:3; எபிரேயர்: 6:18).

எனவே, தேவன் சத்தியமுள்ளவரானபடியால் (யோவான்: 3:3; 17:3), அவருடைய வார்ததையும் சத்தியமாகும் (யோவான்: 17:17); தேவன் மீதான நம்முடைய விசுவாசத்தையும், அவ்விசுவாசத்தின் கிரியையும் வாழ்க்கை மற்றும் ஒழுக்கத்தையும் முற்றிலுமாக வழி நடத்தும் ஒரு நம்பகமான வழிகாட்டியாக அவருடைய வார்த்தை செயல்படுகிறது.


தொடரும்...


Sponsored content

PostSponsored content



Page 4 of 19 Previous  1, 2, 3, 4, 5 ... 11 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக