புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by சிவா Today at 23:40

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 22:19

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 22:06

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 22:05

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 20:54

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 20:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:07

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 17:08

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 16:41

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 16:10

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:45

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 13:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 13:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 13:31

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 13:30

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 13:29

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 23:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 21:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:37

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:57

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:38

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 19:33

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:43

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 17:28

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 14:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 14:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 14:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 12:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 12:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 12:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:03

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:29

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 22:47

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed 26 Jun 2024 - 19:39

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 13:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 10:47

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 0:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 0:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 0:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Wed 26 Jun 2024 - 0:51

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_c10 
63 Posts - 40%
T.N.Balasubramanian
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_c10 
4 Posts - 3%
Manimegala
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_c10 
2 Posts - 1%
prajai
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_c10 
429 Posts - 48%
heezulia
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_c10 
303 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%
prajai
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4

Page 16 of 19 Previous  1 ... 9 ... 15, 16, 17, 18, 19  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon 21 May 2012 - 23:42

First topic message reminder :

“பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை” - என்ற தலைப்பில் வேதத்தின் மகத்துவங்களை அனைவரும் அறிந்திட பல்வேறு சிறுசிறு தலைப்புகளில் அனைவரும் விரும்பி ஆர்வமாக வாசிக்கும்படியாக இப்பகுதியில் ஒரு திரியை திறக்கிறேன். அனைத்து உறவுகளின் ஆதரவையும் அன்புடன் நாடுகிறேன்.

இதில் கேள்வி கேட்பவர்கள் அந்ததந்த தலைப்பில் உள்ள அம்சங்களில் மட்டும் (தாங்கள் அறிந்து கொள்ள மட்டும்) கேட்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தலைப்பிற்கு சம்பந்தமில்லாத க‌ேள்விகளையும் வாத-விதாண்டாவாதங்களையும் தவிர்க்கும்படி தயவாக க‌ேட்டுக் கொள்கிறேன்.

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 16 154550

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon 11 Jun 2012 - 8:45

நற்செய்தி நூல்களும் அப்போஸ்தலர் நடபடிகளும்
புதிய ஏற்பாடு மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் 4 சுவிசேஷங்களுடன் ஆரம்பிக்கிறது.. “சுவிசேஷங்கள்” என்பதை சரியான தமிழ்நடையில் “நற்செய்தி நூல்கள்” என்று அழைக்கலாம். ஆங்கிலத்தில் இது, நற்செய்தியை அல்லது நல்ல சரித்திரத்தை அறிவிக்கும் நூல்கள் என்னும் கருத்தில் “காஸ்பல்” (Gospel) என்ற வார்த்தையில் அறியப்படுகிறது.

மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் இதன் எழுத்தாளர்கள், “நற்செய்தியாளர்கள்” அல்லது “சுவிசேஷகர்கள்” என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் தங்கள் சொந்த எழுத்து நடையில் இயேசுவின் சரித்திரத்தை நமக்குத் தருகிறார்கள்.

நான்கு நற்செய்தி நூல்களும் நான்கு வித்தியாசமான கோணங்களிலிருந்து இயேசுவின் வாழ்க்கையை நமக்கு எடுத்துக்கூறுகின்றன. இயேசு எப்படிப்பட்டவர்? அவர் என்ன செய்தார்? அவருக்கு சம்பவித்தது என்ன? அவை ஏன் சம்பவித்தன? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு நற்செய்தி நூல்கள் நான்கும் நமக்குப் பதில் தருகின்றன.

என்றாலும், அவை இயேசுவின் பிறப்பைக் குறித்த காரியங்களை எடுத்துரைத்தபின் முக்கியமாக அவரது கடைசி மூன்றரை ஆண்டு கால ஊழியங்களையும், அவரின் பாடு, மரணம், உயிர்த்தெழுதல், பரமேறுதல் போன்ற காரிய்ங்களையும் தெளிவாக நமக்கு படம் பிடித்துக் காட்டும் சரித்திர புத்தகமாக விளங்குகின்றன.

இயேசுவின் சீஷர்கள் குறித்தும், அவர்கள் எப்படி இயேசுவை மேசியாவாக கண்டு கொண்டனர் என்பது குறித்தும் இந்நூல்களில் பல்வேறு சம்பவங்கள் மூலம் அறிகிறோம். நமது ஆண்டவர் இயேசுவின் சிலுவை மரணத்தின் முக்கியத்துவம், பாவ மனுக் குலத்தை மீட்க சிலுவைப் பிராயச்சித்தமும், தேவனுடைய மாபெரும் திட்டமும் போன்ற சத்தியங்களையும் தமது சரித்திரக் குறிப்புகளில் கவனமாய் உள்ளடக்கித் தருகின்றன இந்த நற்செய்தி நூல்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக இயேசுவின் மரணத்தின் மூலம் ஏற்பட்ட மாபெரும் வெற்றி, தமது பின்னடியார்களாகிய அப்போஸ்தலருக்கு நற்செய்தியை அறிவிக்கும் பணியை விட்டுச் செல்லுதல் போன்ற காரியங்களும் சுவிசேஷங்கள் நமக்குத் தரும் விபரங்கள் ஆகும்.

இன்னும் கூறப்போனால், நான்கு சுவிசேஷங்களிலும் கூறப்பட்டிருக்கும் இயேசுவின் வாழ்க்கையும், அவர் செய்த காரியங்களனைத்தும் அதினதின் காலக்கிரமத்தின்படி எழுதப்படவில்லை என்பதை கவனிக்க வேண்டும். வரிசைக்கிரமமாக இயேசுவின் வாழ்க்கைச் சம்பவங்களைக் கூறுவதைக் காட்டிலும், இயேசுவின் வாழ்க்கையின் உன்னத நிகழ்ச்சிகளைக் கூறுவதையே அதன் ஆசிரியர்கள் தங்கள் பிரதான நோக்கமாக கொண்டனர்.

தொடரும்...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon 11 Jun 2012 - 8:54

நற்செய்தி நூல்கள் எழுதப்படக் காரணங்கள்
இயேசு கிறிஸ்துவைக் குறித்த அனைத்து சரித்திரக் குறிப்புகளும், அவர் நாட்களில் அவரைப் பின்பற்றிய உண்மையான விசுவாசிகள் மற்றும் அவரது சீஷர்கள் மூலம் பாலஸ்தீன யூதருக்கு, நினைவாற்றலிலிருந்து சொல்லப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வந்தது. ஆனால், சுவிசேஷம் யூத எல்லையை விட்டு புறஜாதியாரை அடைந்தபோது நடந்தவற்றை சரித்திரமாக எழுதவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அப்படி எழுதப்பட்ட நூல்கள் ஆரம்பத்தில் ஏராளம் எழுந்தாலும் (லூக்கா: 1:1-4), காலப்போக்கில் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் நான்கு நூல்கள் மட்டுமே திரும‌றையாக இன்றுவரை நிலைத்திருக்கின்றன. பரிசுத்த ஆவியின் ஏவுதலால் இவை எழுதப்பட்டமையால் தவறில்லாத உண்மைச் சரித்திரமாக இன்று நம் கையில் வந்துள்ளது.

தொடரும்...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon 11 Jun 2012 - 11:49

ஒன்றுக்கு மேற்ப்பட்ட நற்செய்தி நூல்களின் தேவை என்ன?

ஒரு காரியத்தை வலுவாய் உறுதிப்படுத்த ஒரு நீதிமன்றத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சாட்சிகள் தேவைப்படுவதுபோல, இயேசுவின் வாழ்க்கை சரித்திரமும் நான்கு நற்செய்தியாளர்களால் எழுதப்பட்டு உண்மை சரித்திரமாய் உறுதிபட்டுள்ளது.

ஒரு கட்டிடத்தை புகைப்படம் எடுக்கும் ஒருவர் கட்டிடத்தின் முழு அமைப்பும் தெளிவாய் கிடைக்க ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை எடுப்பதுபோல, நமதாண்டவரின் வாழ்க்கை குணாதிசயங்கள், ஊழியம் இவற்றை தெளிவுறக் காட்ட ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்தாளர்கள் தங்கள் சொந்த மொழிநடையில் எழுத வேண்டியது அவசியமாயிற்று.

மத்தேயு இய‌ேசுவை ராஜாவாகவும், மாற்கு இயேசுவை ஊழியக்காரராகவும். லூக்கா இயேசுவை மனித குமாரனாகவும், யோவான் இயேசுவை தேவகுமாரனாகவும் சித்தரிக்கிறார்கள்.

இவை நான்கும் இயேசுவின் ஊழியம், போதனைகள் மற்றும் அற்புதங்களையே சித்தரித்துக் காட்டினாலும், ஒரு நூலிலிருந்து மற்றது வேறுபட்டிருக்கிறது. மாற்கு எழுதாமல் விட்டதை மத்தேயு எழுதுகிறார்.

தொடரும்...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon 11 Jun 2012 - 12:06

ஒருநோக்கு நற்செய்தி நூல்கள்
நான்கு சுவிசேஷங்களுமே இயேசுவின் 18 ஆண்டுகால வாழ்க்கையை (12 வயது முதல் 30 வயது வரை) எழுதாமல் விட்டுவிடுகின்றன. ஒவ்வொரு நூலும் தன்னில்தானே முழுமையுற்றதாயிருப்பினும், ஒவ்வொருவரும் தனித்தன்மையுடன் எழுதுகின்றனர்.

தாங்கள் எழுதும்படி தெரிந்தெடுத்த கருப்பொருளில், மையக்கருத்தில் கவனம் செலுத்தி எழுதுகிறபடியினாலேயே இவ்வித வித்தியாசங்கள் காணப்படுகின்றன என்று எடுத்துக் கொள்ளலாம். இதில் மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று சுவிசேஷங்களும் ஒன்றைஒன்று அதிகம் ஒத்திருப்பதால் அவை “ஒரு நோக்கு நற்செய்தி நூல்கள்” அல்லது “திரி அநுபந்த சுவிசேஷங்கள்” என்று அழைக்கப்படுகின்றன.

ஒருநோக்கு நற்செய்தி நூல்கள் இயேசுவின் கலிலேயா ஊழியத்தை அதிகம் எடுத்து எழுதும்போது, யோவான் நற்செய்தி நூல் நமதாண்டவரின் யூதேயா ஊழியத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றது.

முதல் மூன்று நூல்களும் இயேசுவின் அற்புதங்கள், உவமைகள் மற்றும் திரள் கூட்டத்திற்கு அவர் பிரசங்கித்த பிரசங்கங்களையும், போதித்த போதனைகளையும் விவரித்துக் காட்டுகின்றன.

ஆனால், நான்காவது சுவிசேஷம் (யோவான்), இயேசுவின் ஆழமான போதனைகளையும், சம்பாஷணைகளையும், ஜெபங்களையும் சித்தரித்துக் காட்டுகிறது.

இன்னும் கூறினால், “திரி அநுபந்த நூல்கள்” (மத்தேயு, மாற்கு. லூக்கா) இயேசுவின் இவ்வுலக செயல்களைச் சித்தரிக்கும்போது, யோவான் சுவிசேஷம் இயேசுவின் பரலோக உறவையும், மனுமக்களோடு அவர் கொண்ட தனிப்பட்ட உறவையும் தெளிவாய்த் தருகிறது.

தொடரும்...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon 11 Jun 2012 - 17:12

பகுதி: 4
புதிய ஏற்பாடு 27 புத்தகங்களின் சுருக்கமான தொகுப்பு

1. மத்தேயு:
அ) பின்னணி:

ஆசிரியர்: மத்தேயு

எழுதப்பட்ட காலம்: பாலஸ்தீனா அல்லது அந்தியோகியா

எழுதப்பட்ட காலம்: கி.பி.70 - கி.பி.80

சேருமிடம்: பாலஸ்தீனா அல்லது அந்தியோகியா யூதர்கள், புறஜாதிகள்

எந்நிலையில் எழுதப்பட்டது:

பாலஸ்தீனா மற்றும் அந்தியோகியாவிலுள்ள விசுவாசிகளுக்கு “கிறிஸ்து கட்டளையிட்ட அனைத்தையும்” குறித்துப் போதிப்பதன் தேவை.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “தாவீதிய மேசியாவின் சுவிசேஷம்”

கருப்பொருள்: புதிய மேசியாவின் கீழ் புதிய இஸ்ரவேலுக்கு போதித்தல்

நோக்கம்: புதிய இஸ்ரவேலின் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தாவீதிய மேசியாவாகிய கிறிஸ்து கட்டளையிட்ட அனைத்து காரியங்களை புறஜாதி சீஷர்களும், கிரேக்க, ரோம கலாச்சாரங்களில் வாழும் யூதர்களும் கைக் கொள்வதில் அவர்களுக்கு உதவும்படி வடிவமைக்கப்பட்ட ஒரு போதனை கையேட்டை அளித்தல்.

முக்கியவசனம்:

மத்தேயு: 28:18-20 - “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்பொய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பாிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்.”

தொடரும்...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue 12 Jun 2012 - 0:51

2. மாற்கு

அ) பின்னணி:

ஆசிரியர்: மாற்கு

எழுதப்பட்ட இடம்: ரோமாபுரி (1பேதுரு: 5:13)

எழுதப்பட்ட காலம்: கி.பி.65 (முதலாவதாக எழுதப்பட்ட சுவிசேஷமாக மாற்கு அளித்த முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.

சேருமிடம்: ரோம புறஜாதிகள்

எதற்காக எழுதப்பட்டது: ரோமாபுரியில் நீரோவின் அடக்குமுறைக்கு கீழ்ப்பட்ட விசுவாசிகளுக்காக.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “பாடுபடும் ஊழியரின் சுவிசேஷம்”

கருப்பொருள்:

தேவனுடைய சித்தத‌்தை நிறைவேற்றின ஒரு ஊழியரான கிறிஸ்து, தம்முடைய பாடுகளை எவ்வாறு ஜெயங்கொண்டார் என்பதை எடுத்துக் காட்டுவதன் மூலம் ரோமாபுரியில் பாடுகளுக்குள்ளான கிறிஸ்தவர்களை ஊக்குவித்தல்.

முக்கிய வசனம்:

மாற்கு: 10:45 - “மனுஷகுமாரனும் ஊழியங் கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்.”

தொடரும்...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue 12 Jun 2012 - 8:09

3. லூக்கா

அ) பின்னணி:

ஆசிரியர்: லூக்கா

எழுதப்பட்ட இடம்: சிசேரியா, ரோமாபுரியாக இருக்கக் கூடும்.

எழுதப்பட்ட காலம்: கி.பி.70 - கி.பி.85

சேருமிடம்: தெயோப்பிலுவேல் (ரோமாபுரியில் வாழ்ந்தவராக இருக்கக்கூடும்.

எந்நிலையில் எழுதப்பட்டது: ரோமத் தலைவன் கிறிஸ்தவத்தைக் குறித்து அறிய வேண்டிய தேவை.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “இரக்கமுள்ள இரட்சகரின் சுவிசேஷசம்”

கருப்பொருள்:

கிறிஸ்துவினுடைய வார்த்தைகள் மற்றும் செயல்களைக் குறித்த ஒரு முறையான விவரம்.

நோக்கம்:

ஒரு ரோமத் தலைவனான தெயோப்பிலுவிற்கு கிறிஸ்துவினுடைய வாழ்க்கையைக் குறித்த ஒரு முறையான விவரத்தை அளித்தல்.

முக்கியவசனம்:

லூக்கா: 2:10,11 - “...பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்கு தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.”

தொடரும்...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue 12 Jun 2012 - 8:19

4. யோவான்

அ) பின்னணி:

ஆசிரியர்: யோவான்

எழுதப்பட்ட இடம்: எபேசு

எழுதப்பட்ட காலம்: கி.பி.90 - கி.பி.100

சேருமிடம்: எபேசுவைச் சுற்றி வாழ்ந்த யூதர்களும், புறஜாதிகளும்

எப்போது எழுதப்பட்டது:

முரண்பாடுகளும், சமயத் தீவிரவாதிகளும் அதிகமாயிருந்த காலத்தில், கிறிஸ்து உண்மையில் யார் என்பதை விசுவாசிகளும், அவிசுவாசிகளும் அறிய வேண்டிய த‌ேவையிலிருந்தபோது எழுதப்பட்டது.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “தெய்வீக மேசியாவின் சுவிசேஷம்”

கருப்பொருள்: இயேசுவினுடைய வாழ்க்கையும், அற்புதங்களும் அவர் மேசியா என்பதை வெளிப்படுத்துகின்றன.

நோக்கம்:

தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவை மேசியாவாக மக்கள் விசுவாசிப்பதிலும், அவ்வாறு செய்வதன் மூலம் தேவனோடு ஒரு உறவுமுறையை அனுபவிக்கும் ஒரு வாழ்க்கையை வாழ்வதிலும் அவர்களுக்கு உதவுதல்.

முக்கியவசனம்:

யோவான்: 20:31 - “இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனை அடையும்படியாகவும் இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.”

தொடரும்...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue 12 Jun 2012 - 8:35

5. அப்போஸ்தலர்

அ) பின்னணி:

ஆசிரியர்: லூக்கா

எழுதப்பட்ட இடம்: சிசேரியா, ரோமாபுரியாக இருக்கக்கூடும்.

எழுதப்பட்ட காலம்: கி.பி.70 - கி.பி.85

சேருமிடம்: தெயோப்பிலுவேல் ( ரோமாபுரியில் வாழ்ந்திருக்க கூடும்)

எந்நிலையில் எழுதப்பட்டது: ரோமத் தலைவன் கிறிஸ்தவத்தைக் குறித்து அறிய வேண்டியதன் தேவை இருந்த போது

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “கிறிஸ்துவினுடைய ஊழியம் விரிவடைந்தது”

கருப்பொருள்: சபையின் பிறப்பு மற்றும் வளர்ச்சியைக் குறித்த முறையான விவரம்

நோக்கம்:

ரோமத் தலைவனான தெயோப்பிலு கிறிஸ்தவத்தைக் குறித்த சத்தியத்தை அறியும்படியாக, சபையின் பிறப்பு மற்றும் விரிவாக்கத்தைக் குறித்த ஒரு முறையான விவரத்தை அளித்தல்

குறிப்பு விவரம்: அப்போஸ்தலர்: 1:8 வசனத்தின் அடிப்படையில், காலம் - சார்ந்த தொகுப்புகளோடு கூடிய மூன்று மடங்கான குறிப்பு விவரம்:

1. எருசலேமில் ( 2:1 - 6:1)

2. யூதேயா மற்றும் சமாரியாவில் (18:1 - 12:1)

3. பூமியின் கடைசி பரியந்தம் (13:1 - 28,31)

மிக முக்கிய புத்தகம்:

1. சுவிசேஷங்களை முன் ஊகிக்கிறது

2. நிருபங்களுக்கு முன்னானது

3. தோ்வு செய்தலின் திறம்:

- பேதுருவின் நடபடிகள் - (1-12)

- பவுலின் நடபடிகள் (13-28)

முக்கிய வசனம்:

அப்போஸ்தலர்: 1:8 - “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி பரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்”

தொடரும்...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed 13 Jun 2012 - 1:54

நிருபங்களுக்கு ஒரு முன்னுரை

ரோமர் முதல் வெளிப்படுத்தல் வரை

I. கடித வடிவம்:

புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களில் 21 புத்தகங்கள் நிருபங்களாகும்.

நிருபங்கள் என்றால் “கடிதங்கள்” என்று பொருள்.

அ) படைப்பின் முறை:

1. எழுத்தாளரால் எழுதப்பட்டது

2. ஒரு செயலாளர் மூலமாக எழுதப்பட்டது

3. உரையாற்றப்பட்ட செய்தியின் பதிவு செய்யப்பட்டது

4. செய்தியைக் கேட்டவர்களின் வாய்மொழியில் கூறினர்

ஆ) எழுதுவதின் நோக்கம்:

1. ஒரு உள்ளூர் சபையின் குறிப்பிட்ட சர்ச்சைகளை விசேஷமாக குறிப்பிடுதல்.

2. பொதுவான கொள்கைகளும் மதிப்புரைகளும்.

இ) கடிதத்தின் அமைப்பு:

1. அனுப்புநர் (ரோமர்: 1:1)

2. பெறுநர் (1கொரிந்தியர்: 1:2)

3. வாழ்த்துதல் (கலாத்தியர்: 1:3-5)

4. கருத்துப் பகுதி ( எபேசியர்: 1:3 - 6:20)

5. இறுதி நல் வாழ்த்துக்கள் (கொலோசெயர்: 4:7 - 18)

II. கடிதங்களின் வகைகள்:

அ) பொதுவான (உலகளாவிய) நிருபங்கள்.

ஆ) பிரத்தியேகமான (பவுலினுடைய) நிருபங்கள்.

1. இம்மை மறுமை குறித்தவை: (இறுதிக்காலங்களைக் குறித்தவைபுன்னகை 1தெசலோனிக்கேயர், 2தெசலோனிக்கேயர்.

2. தனிப்பட்ட தேவையைக் குறித்தவை: (இரட்சிப்பின் கோட்பாடு) : கலாத்தியர், 1கொரிந்தியர், 2கொரிந்தியர், ரோமர்.

3. சிறை நிருபங்கள்: எபேசியர், கொலோசெயர், பிலிப்பியர், பிலமோன்.

4. போதகர் குறித்த சர்ச்சைகள்: 1தீமோத்தேயு, 2தீமோத்தேயு, தீத்து.

III. புதிய ஏற்ப்பாட்டு கடிதங்களின் கால வரிசை:

அ) முந்திய கால கட்டம்: கலாத்தியர், யாக்கோபு

ஆ) இரண்டாம் ஊழியப் பயணம்: 1தெசலோனிக்கேயர், 2தெசலோனிக்கேயர்.

இ) மூன்றாம் ஊழியப் பயணம்: 1கொர்ந்தியர், 2கொரிந்தியர், ரோமர்.

ஈ) முதலாம் ரோம சிறையிருப்பு: எபேசியர், கொலோசெயர், பிலமோன், பிலிப்பியர்.

உ) சுதந்திரத்தின் கால கட்டம்: 1தீமோத்தேயு, 1பேதுரு, தீத்து.

ஊ) இரண்டாம் ரோம சிறையிருப்பு: 2தீமோத்தேயு, 2பேதுரு.

எ) பவுலுக்குப் பிந்தியவை: எபிரேயர், 1யோவான், 2யோவான், 3யோவான், யூதா.

IV. பவுலினுடைய கடிதங்களின் தனித்தன்மை:

அ) நீளம் - நீளமானவை (பெரும்பாலான மற்ற கடிதங்களைவிட மூன்று மடங்கு நீளமானவை.

ஆ) உள்ளடக்கம் - வேதாந்தம்

இ) செய்தி (முழுச் சமுதாயத்திற்கும் அளிக்கப்படுகிறது)

V. பதிமூன்று கடிதங்களை எழுதின பவுல்:

1. தெய்வீக அழைப்பும், அர்ப்பணிப்பும் (கலத்தியா்: 1; 2கொரிந்தியர்: 3:1-18; எபேசியர்: 3:1-13)

2. தெய்வீக அப்போஸ்தல அதிகாரம் (2கொரிந்தியர்: 10-13)

3. மக்களின் மீது ஆழமான அன்பு ( 1தெசலோனிக்கேயர்: 2:7,8)

4. சவிசேஷத்தினுடைய பொருள் மற்றும் உபயோகத்தை குறித்த தெய்வீக நுண்ணறிவு (ரோமர்: 1-15)

5. நிலைமைக்கேற்றபடி தன்னை வேறுபடுத்திக் கொள்ளும் திறமும், இணக்கமும் உடையவர் (1கொரிந்தியர்: 9:21-23)

6. சாீரப்பிரகாரமாக துன்பத்தைத் தாங்கும் ஆற்றல் படைத்தவர் (2கொரிந்தியர்: 11:23-29)

7. இலக்கியப் பின்னணி; செய்தியை அறிவிப்பதில் மிகச் சிறந்தவர் (எபேசியர்: 1-6)

8. கிறிஸ்துவுடன் ஆழமான அனுபவங்களை உடையவர் (2கொரிந்தியர்: 12:2-10)

தொடரும்...

Sponsored content

PostSponsored content

Page 16 of 19 Previous  1 ... 9 ... 15, 16, 17, 18, 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக