புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10 
5 Posts - 3%
prajai
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10 
2 Posts - 1%
சிவா
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10 
435 Posts - 47%
heezulia
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10 
30 Posts - 3%
prajai
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு


   
   

Page 10 of 12 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat May 19, 2012 2:10 pm

First topic message reminder :

ராஜ் சிவா !

ஈகரை அன்பர்களுக்கு நன்கு தெரிந்த பெயர் ,,,,

2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' என்ற சுவாரசியமான கட்டுரையின் ஆசிரியர் .
அவர் வேறொரு கட்டுரை தொடரை உயிரோசையில் ஆரம்பித்துள்ளார் அதுதான்

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன"

இந்த கட்டுரை பற்றிய அறிமுகத்தில் ராஜ் சிவா இப்படி குறிப்பிடுகிறார்

நான் எழுதப் போகும் அனைத்தும் உங்களால் நம்ப முடியாதவையாகவே இருக்கும். ஆனால் ஒரு நேரத்தில் நம்ப வேண்டிய கட்டாயங்கள் உங்களுக்கு வந்தே தீரும். இவற்றை நீங்கள் நம்ப வேண்டும், நம்பாமல் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் தாண்டி, இப்படியெல்லாம் உலகில் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியப்படுத்துவதே என் முதல் நோக்கமாக இருக்கிறது.

அப்படி என்ன தான் சொல்லபோகிறார் ராஜ் சிவா!

உங்களோடு அறிய நானும் ஆவல்கொண்டிருக்கிறேன் ..படிப்பதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்

இதோ முதல் பகுதி .......

நன்றி :உயிரோசை






வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Nov 15, 2012 9:25 pm

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Photo%201

ஜெர்மனியில் உள்ள பல தொலைக்காட்சி நிறுவனங்களில் முதலாவது தொலைக்காட்சி நிறுவனமாக இருப்பது ARD என்னும் தொலைக்காட்சிதான். இந்த ARD, அரசினால் நடத்தப்படும் ஒன்று. அரசினால் நடத்தப்படுவது என்றவுடன், நமது நாட்டு அரசுத் தொலைக்காட்சிகளைப் போல நினைத்துவிடக் கூடாது. அரசுக்குச் சொந்தமான தொலைக்காட்சிதானேயொழிய, அரசை நடத்தும் கட்சிக்கோ, அரசுக்கோ ஆதரவாக ஜால்ரா அடிக்கும் நிகழ்ச்சிகள் அதில் அறவே இருக்காது. மாணவர்களுக்கும், கல்விக்கும் உதவும் நிகழ்ச்சிகளுக்கும், உண்மைத்தன்மை நிறைந்த நிகழ்ச்சிகளுக்கும் மட்டுமே அதில் இடமிருக்கும். விளம்பரங்கள் இருக்காது. இந்தத் தொலைக்காட்சி நடத்துவதற்கென, ஜெர்மனியில் உள்ள மக்கள் அனைவரும் கட்டாயமாக ஒரு குறிப்பிட்ட பணத்தை மாதாமாதம் செலுத்த வேண்டும். அந்த அளவுக்கு முக்கியமானது இந்தத் தொலைக்காட்சி. மக்களின் நன்மைக்காக, மக்களின் பணத்தால் நடத்தப்படும் தொலைக்காட்சி இது. இந்தத் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாக வேண்டுமென்றால், அதற்கு எனக் கட்டுப்பாடுகள் மிக அதிகமாக இருக்கும். இந்தத் தொலைக்காட்சி முதல் முறையாக ஒரு பறக்கும் தட்டு சம்பவத்தை டாக்குமெண்டரியாக ஒளிபரப்பியதென்றால் அது பெல்ஜியம் பறக்கும் தட்டு சம்பவத்தைத்தான். இந்த ARD ஒளிபரப்பியதாலேயே பெல்ஜியம் பறக்கும் தட்டு சம்பவம் அதிக முக்கியத்துவத்தை எடுத்துக் கொண்டது இந்தச் சம்பவம். ARD யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது, அதை அவதானித்து வந்தவர்களில் நானும் ஒருவன். அப்படி இந்தச் சம்பவத்துக்கு ARD முக்கியத்துவம் கொடுத்ததற்குக் காரணம், இதில் இருந்த உண்மைத்தன்மைதான். ஆனாலும், பெல்ஜியம் பறக்கும் தட்டு சம்பவத்தில் முக்கோண வடிவத்தில் பறக்கும் தட்டைப் பலர் பார்த்ததாகச் சொல்வதில், இவர்கள் பார்த்தது பறக்கும் தட்டையல்ல, ஒரு ஹெலிகாப்டரைத்தான் என்று விவாதம் செய்யும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இந்த ஹெலிகாப்டர் கதையை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு ஹெலிகாப்டர் பறக்கும்போது, எவ்வளவு தூரத்துக்கு அதன் விசிறியின் சத்தம் கேட்கும் என்பது குழந்தைப் பிள்ளைக்கே தெரியும்போது, சத்தமேயில்லாமல் நகர்ந்த பறக்கும் தட்டை, ஹெலிகாப்டர் என்று சொல்வதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இனி இந்தச் சம்பவத்துக்கு இவ்வளவு நம்பகத்தன்மை எப்படி வந்தது என்பதை விளக்கமாக நாம் பார்க்கலாம்.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Photo%202

பெல்ஜியம் போலீஸ் காவலர்களான, ஹைன்ரிக் நிக்கோலும், ஹூபேர்ட் மொண்டினியும் பறக்கும் தட்டைக் கண்ட பல நிமிடங்களின் பின்னர், அது அவர்களை விட்டு 'லா கலமின்' (La Calamine) என்னும் கிராமத்தின் திசையை நோக்கி விரைந்து மறைந்தது. இவர்களை விட்டுப் பறக்கும் தட்டு மறைந்த ஆறாவது நிமிடத்தில் லா கலமின் கிராமத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸ் காவலர்கள் இருவர் அந்தப் பறக்கும் தட்டைக் கண்டனர். சற்று முன்னர்தான் பறக்கும் தட்டு ஒன்றைக் கண்டதாக, அவர்களுடன் பணிபுரிபவர்கள் ஊடாக வயர்லெஸ் மூலமாக வந்த செய்தியைக் கேட்டுவிட்டுப் பழித்துச் சிரித்தவர்கள் இவர்கள். எதை நினைத்துச் சிரித்தார்களோ, அது அவர்கள் கண் முன்னால் மிகவும் தாழ்வாக நின்று கொண்டிருந்தது. திகைத்துப் போனார்கள். பிரமாண்டமாக, முக்கோண வடிவில் கத்தோலிக்கச் சர்ச்சுக்கு மேலாக அது காணப்பட்டது. அந்தப் பறக்கும் தட்டை மொத்தமாக இருபது போலீஸ்காரர்கள் அன்று கண்டிருக்கிறார்கள். அத்துடன் நூற்றுக்கும் அதிகமான பொதுமக்களும் கண்டிருக்கிறார்கள். ஆனால் இது நடந்தது பெல்ஜியத்தின் ஒரு மூலையில் இருந்த கிராமப்புறத்தில் என்பதால், பலர் இதை நம்பவுமில்லை, பெரிதுபடுத்தவுமில்லை. வானில் எதையோ கண்டுவிட்டு பறக்கும் தட்டு என்று கதை விடுகிறார்கள் என்றுதான் நினைத்தார்கள் பெல்ஜியம் மக்கள். அத்துடன் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிப் போனது இந்தப் பறக்கும் தட்டு பற்றிய பேச்சு. ஆனால் அவையெல்லாம் சிறிது நாட்களுக்குத்தான். மார்ச் மாதம் 1990ம் ஆண்டு வந்தது ஒரு புதிய செய்தி.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Photo%203

காப்டன் ஜாக் பின்சன் (Capt. Jacques Pinson) என்பவர் பிரசெல்ஸ் நகருக்குச் சற்றுத் தள்ளியிருக்கும் இடமொன்றில் தனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இரவு விருந்து ஒன்றைக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, வானில் வித்தியாசமான ஒளி விளக்குகள் மிதப்பதைக் கண்டார். அந்த ஒளி விளக்குகள் மிகவும் விந்தையான வகையில் இருப்பதையும் அவதானித்தார். முக்கோண வடிவத்தில் மூன்று வெள்ளை ஒளி விளக்குகளும் நடுவே ஆரஞ்சு விளக்கும் இருப்பதாக அவை காணப்பட்டன. இது ஒய்ப்பன் கிராமத்தில் போலீஸ்காரர்கள் எப்படிப்பட்ட வடிவத்தில் பறக்கும் தட்டை வானில் கண்டார்களோ, அது போலவே இருந்தது. ஆனால் இப்போது ஒரு முக்கோண வடிவப் பறக்கும் தட்டு மட்டும் தெரியவில்லை. முக்கோண வடிவ வெளிச்சங்களுடன் பல பறக்கும் தட்டுகள் தெரிந்தன. அதாவது ஐந்துக்கும் மேற்பட்ட பறக்கும் தட்டுகளை அவரும், அவரது விருந்தினர்களும் கண்டார்கள். அந்தப் பறக்கும் தட்டுகள் மிகவும் மெதுவாக அங்கும் இங்கும் அலைந்தபடி இருந்தன. இதை உடனடியாக அவர் இராணுவத்தளத்துக்கு அறிவித்தார். இந்தச் சம்பவம் நடந்து கொண்டிருந்த வேளையில் முப்பது மைல்கள் தூரத்துக்கு அப்பால் இருக்கும் நேட்டோவின் ராடார் நிலையத்தில் (NATO Tracking Station) உள்ள ராடார்களில் இந்தப் பறக்கும் தட்டுகளை அவதானித்தார்கள். எங்கு விருந்து நடந்து கொண்டிருந்ததோ, அந்தத் திசையில் அவை காணப்பட்டன. லெப்டினண்ட் கர்னல் பியர்ரே பில்லென் (Lieutenent Colonel Pierre Billen) என்பவர் இதைப் பின்னர் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தினார். இவர் நேட்டோவுக்காகப் பணிபுரிபவர். நேட்டோவின் ராடார்களில் பறக்கும் தட்டுகள் தெரிந்தவுடன் பெல்ஜியம் விமானப்படைத்தளத்துக்கு, உத்தியோகபூர்வமற்ற வானூர்திகள் பெல்ஜியம் வானில் நின்று கொண்டிருப்பதாக அறிவித்தல் கொடுக்கப்பட்டது.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Photo%204

இந்த வேளையில் பெல்ஜியம் அரசு ஒரு புத்திசாலித்தனமான காரியம் ஒன்றைச் செய்தது. அது உடனடியாக அமெரிக்கத் தூதுவராலயத்தைத் தொடர்பு கொண்டு, அமெரிக்காவின் பரீட்ச்சார்த்தமான விண்வெளி ஆராய்ச்சிகளோ, விமானங்களின் பறப்போ  பெல்ஜியத்தின் வான் வெளியில் நடக்கிறதா என உத்தியோகபூர்வமாகக் கேட்டுக் கொண்டது. அதற்கு உடனடியாக அப்படி ஒன்றும் நடக்கவில்லையென்ற பதில் அமெரிக்காவிலிருந்து உறுதிபட வந்தது. அதையடுத்துப் பெல்ஜியம் விமானப் படையிலிருந்து இரண்டு F16 விமானங்கள் அந்த முக்கோன வடிவங்களை நோக்கி அனுப்பப்பட்டன. பறக்கும் தட்டுகள் வானில் பறந்தாலும், அதை மக்கள் தெரிந்து கொண்டால் பதட்டமடைவார்கள் என்ற காரணத்தினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ, அமெரிக்கா இந்த மர்மங்களை மக்களுக்குத் தெரியாமல் மறைத்தது. ஆனால் பெல்ஜியம் அரசு, வானில் பறப்பவை பறக்கும் தட்டுகளாகத்தான் இருக்க வேண்டும் எனத் தெரிந்ததும், அது பற்றிய உண்மைகளை மக்களுக்கு கொண்டுவரப் பாடுபட்டது. அதற்காக, அந்த வடிவங்களைப் பற்றி எப்படியும் அறிந்து கொள்வது என்னும் முடிவுடன் இரண்டு அதிவேக போர் விமானங்களைப் பறக்கும் தட்டுகளை நோக்கி அனுப்பியது. விமானங்கள் இரண்டின் விமானிகளும், தங்கள் விமானங்களில் இருந்த ராடார் சாதனங்களில் பறக்கும் தட்டுகள் தெரியும் வண்ணம் அண்மித்தனர். அதேபோல, ராடார்களிலும் பறக்கும் தட்டுகள் தெரியத் தொடங்கின. அப்புறம் நடந்தவை அனைத்துமே வேடிக்கையான சம்பவங்கள்.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Photo%205

சரியாக ஒரு மணி நேரம் அந்தப் பறக்கும் தட்டுகளை அண்மிப்பதற்கு விமானங்கள் முயன்றன. ஆனால் விமானங்கள் அவற்றை அண்மித்ததும், அவை திடீரென வேகமெடுத்துச் சடேரென கீழே சரிந்து நகர்ந்தன. நம்ப முடியாத வேகம் அது. விமானிகள் சற்று நிதானித்ததும், மீண்டும் கீழ் நோக்கி அவற்றை அண்மிக்க முயல்கையில், சில செக்கன்களில் பல ஆயிரம் மீட்டர் உயர மேலே எழும்பின. விமானத்தில் உள்ள ராடார் கருவிகள் அந்தப் பறக்கும் தட்டு நகரும் விதம் அனைத்தையும் திரையில் காட்டிக் கொண்டேயிருந்தது. விமானிகள் திகைத்தனர். ஒரு எலியுடன் பூனை எப்படி விளையாடுமோ, அப்படி இருந்தது அந்தச் செயல். அந்தப் பறக்கும் தட்டு நகரும்போது, கிட்டத்தட்ட 1000 நாட்டுகள் (Knots) வேகத்தில் நகர்ந்தன. 1000 நாட்டுகள் என்பது கற்பனை பண்ண முடியாத வேகம். அதாவது ஒலியின் வேகத்துக்கு அதிகமானதாக அந்தப் பறக்கும் தட்டுகளின்  வேகம் இருந்தது. சாதாரணமாக ஒரு விமானம், வான்வெளியில் ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தை எடுக்கும்போது, ஒலி ஏற்றம் (Sonic Boom) என்னும் விளைவு ஒன்று உருவாகும். அது உருவாகும்போது, மிகையொலியின் காரணமாக பாரிய சத்தம் ஒன்று ஏற்படும். ஆனால் அப்படி எந்தச் சத்தமும் அப்போது கேட்கவேயில்லை. இது விமானிகளையும், தரையில் இருந்து அவதானித்தவர்களையும் ஆச்சரியப்படுத்தியது. விமானிகளுக்கு ஒரு நேரத்தின் பின்னர் இப்படிப்பட்ட பின்தொடரலால் எந்தப் பயனும் இல்லை என்பது புரிந்தது. அத்துடன் அது சாதாரணமான ஒரு விண்கலமும் இல்லையென்பதும் புரிந்தது. அந்தப் பறக்கும் தட்டில் இருந்தவர்களின் நோக்கம், இவர்களைக் களைக்கப் பண்ணுவதாகத்தான் இருந்தது. இவர்களைத் தாக்கும் நோக்கமோ, எதிர்க்கும் நோக்கமோ அவர்களுக்கு இருக்கவில்லை. அதை விமானிகளும் புரிந்துகொண்டார்கள். அதனால் கீழே இறங்கினார்கள்.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Photo%206

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Photo%207

இந்த நேரத்தில் பெல்ஜியம் விமானப்படை செய்த மிக முக்கியமான செயல் ஒன்றுதான், இப்போது இந்தச் சம்பவத்தை நம்பிக்கைக்குரிய சம்பவமாக உலகிற்கே எடுத்துக்காட்டியிருக்கிறது. அதாவது வானில் நடந்த அனைத்துச் சம்பவங்களும், விமானிகளால் ராடார் கருவி மூலம் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டது. பறக்கும் தட்டின் ஒவ்வொரு நகர்வும், வேக மாற்றங்களும், அதில் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டது. இதுவே பெல்ஜியம் பறக்கும் தட்டு சம்பவத்துக்கு அசைக்க முடியாத சாட்சியாக அமைந்தது. இந்தக் காணொளி பின்னர் ஊடகங்களுக்கு, விமானப்படையினரால் போட்டுக் காட்டப்பட்டது. அதற்கு முன்னர், இந்தக் காணொளி உண்மையானவை என்று நிரூபணம் செய்வதற்காக, பெல்ஜியத்தில் உள்ள 'போர்களை ஆராயும் விற்பன்னர்கள்' பார்வைக்கு அனுப்பப்பட்டது. அங்கு பலவிதமான பரிசோதனைகளுக்கு அவை உட்படுத்தப்பட்டு, உண்மையான காணொளிகள் என்றும், அவற்றில் காணப்பட்ட வடிவம் பூமியில் உள்ள எந்த ஒரு விமானத்தின் நடவடிக்கை போல இல்லை என்பதையும் உறுதிப்படுத்தினார்கள். அதாவது 979 நாட்டுகள் (Knots) வேகத்தில் அந்தப் பறக்கும் தட்டு பறந்ததையும், சில செக்கன்களில், பல ஆயிரம் மீட்டரைக் கடந்திருப்பதையும் உறுதிப்படுத்தினார்கள். இந்த ஆராய்ச்சிகளுக்குப் பொறுப்பாக இருந்தவர் புரொபசர் எமில் ஸ்வைகர் (Prof. Emile Schweicher) என்னும் இயற்பியல் விஞ்ஞானி. அவர், "இப்படியான வேக மாற்றத்தை எந்த விமானங்களின் மூலமாகவும் செய்யமுடியாது" என்று அடித்துச் சொன்னார். "ராடார்கள் ஏன் தப்பு செய்திருக்கக் கூடாது?" என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்ட போது, "ஒரு ராடார் தப்பு செய்திருக்க முடியும். ஆனால், இந்தச் சம்பவத்தைக் கீழே இருந்தும் பல ராடார்கள் அவதானித்துக் கொண்டிருந்தன. அனைத்து ராடார்களும் ஒரே விதத்தில் பழுதடைய சாத்தியமே இல்லை" என்று அவர் பதிலளித்தார். அத்துடன் அவர் கடைசியாகச் சொல்லிய வார்த்தைகள்தான் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. "நான் இப்போது சொல்வதை வைத்து என்னைப் பணியில் இருந்து கூட நீக்கலாம். ஆனாலும் சொல்கிறேன். இந்த ராடாரில் காணப்படுவது நிச்சயமாகப் பறக்கும் தட்டேதான்" என்றார்.

வானில் நடந்த இந்தச் சம்பவத்தையும், பறக்கும் தட்டையும் 13500 பொதுமக்கள் தங்கள் கண்களால் கண்டிருப்பதாகப் பதிவு செய்திருக்கிறார்கள். பதிவு செய்யாதவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். பெல்ஜியத்தில் உயர் பதவியில் இருந்த ஜெனரல். வில்ஃபிரிட் ப்ரௌவெர் (General Wilfried Brouwer) என்பவர் இந்தச் சம்பவத்தைத் தெளிவான பேட்டியாக அனைத்துச் சாட்சியங்களுடனும் செய்தி ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அத்துடன் அயல் நாடுகளான, ஜெர்மனி, ஃபிரான்ஸ், நெதர்லாந்து போன்ற நாடுகளுக்கும் அறிக்கையாகச் சமர்ப்பித்தார். இவையெல்லாம் பெல்ஜியம் நாடாளுமன்றத்திலும் கூட விவாதத்துக்கு எடுக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, நடந்த சம்பவங்கள் அனைத்தும் உண்மையானவை என்று பதிவு செய்யப்பட்டன. பெல்ஜியம் அரசு எந்த விதத்திலும் மக்களுக்கும், வேறு நாட்டவர்களுக்கும் நடந்தவற்றை மறைக்கவில்லை. அத்துடன் இந்த பெல்ஜியம் பறக்கும் தட்டு சம்பவத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இன்னுமொரு சாட்சியும் கிடைத்தது.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Photo%208

பறக்கும் தட்டு தங்களுக்கு மேலாக மிதந்தபோது, பயந்து ஒளிந்து கொண்ட மக்களின் மத்தியில், பட்ரிக் என்னும் இளைஞன் பறக்கும் தட்டு தனக்கு மேலாக மிதந்தபோது, பயப்படாமல் படம் ஒன்றை எடுத்தான். இது ஏப்ரல் மாதம் 1990 இல் நடந்தது. அதிகப் பிரகாசமான ஒளியில் எடுத்த அந்தப் படம் தெளிவாக இல்லாவிட்டாலும் கூட, உலகிலேயே பறக்கும் தட்டை நிஜமாகவே எடுத்ததாகக் கருதப்படுகிறது. பல படங்களை, பலரும் எடுத்ததாகச் சொன்னாலும், இது ஒன்றே அசலானதாகக் கருதப்படும் பறக்கும் தட்டு படமாகும். இந்தப் படத்தையும் பல பரிசோதனைகளுக்கு உட்படுத்திப் பார்த்தபோது, அது அசலான படம் என்று நாஸா கூட ஒத்துக் கொண்டது. படத்தைக் கணினியின் மூலம் பல படிமங்களில் ஆராய்ந்தபோது, பறக்கும் தட்டின் உண்மையான வடிவம் தெளிவாகத் தெரிந்தது. இந்தப் படத்தைக் கூட பொய்யான படம் என்று சிலர் சொல்கிறார்கள். படம் எடுத்த பட்ரிக்கே அதை ஒத்துக் கொண்டதாகவும் இணையத்தில் சில செய்திகளும் உலவுகின்றன. ஆனால் அவற்றில் உண்மை எதுவும் இல்லை என்றே தெரிய வருகிறது.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Photo%209


பல இடங்களில், பல சந்தர்ப்பங்களில், பலவிதமான மக்களால், பல சாட்சியங்களுடன் பெல்ஜியம் பறக்கும் தட்டு சம்பவம் நடந்து முடிந்திருக்கிறது. ஆயிரத்துக்கும் அதிகமான அரசப் படை வீரர்கள். நேட்டோ அதிகாரிகள், லட்சக்கணக்கான மக்கள், ராடாரின் காணொளிப் பதிவுகள், நிஜமாகவே எடுக்கப்பட்ட படம் என்று பெல்ஜியத்தின் பறக்கும் தட்டு சம்பவம், நம்பிக்கைத் தன்மையை அதிகம் கொண்டதாக இருக்கிறது. இதனாலேயே பறக்கும் தட்டு என்று சொன்னாலே முதலில் பெல்ஜியத்தையும், இரண்டாவதாக ரோஸ்வெல்லையும் சொல்கிறார்கள். ரோஸ்வெல்லில் அமெரிக்க அரசு, சம்பவங்களை மறைக்கப் பார்க்கிறது என்று குற்றச்சாட்டு உள்ள வேளையில், பெல்ஜிய சம்பவத்தில், அரசே முன்னின்று இந்தச் சம்பவங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இதை விட நம்பிக்கையான எந்தச் சம்பவமும் இருக்க முடியாது. இதையும் நாம் நம்பாவிட்டால், நம்மால் எதையும் நம்ப முடியாமல் போய்விடும். ஆனால் இன்னும் நம்மால் நம்பிக்கை என்னும் தளத்தில் பிரயாணிக்க முடியவில்லை. அதற்கும் முக்கியமான காரணம் உண்டு. அந்தக் காரணத்தினால்தான் நாம் பறக்கும் தட்டுகளையும், ஏலியன்களையும் இன்றும் நம்ப மறுக்கிறோம். அந்தக் காரணங்களுக்கு விடைகள் கிடைத்தால், ஒரு வேளை நாம் இவற்றை நம்பினாலும் நம்பலாம். 

அந்தக் காரணங்கள் என்ன? அந்தக் காரணங்களுக்குச் சரியான விடைகள் எங்கிருந்தாவது கிடைக்குமா என்பது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Nov 15, 2012 9:32 pm

இந்த திரியை மிக சிறப்பாக கொண்டு செல்கிறீர்கள் ரமேஷ் பாராட்டுக்கள் சூப்பருங்க மகிழ்ச்சி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Nov 15, 2012 9:42 pm

கே. பாலா wrote:இந்த திரியை மிக சிறப்பாக கொண்டு செல்கிறீர்கள் ரமேஷ் பாராட்டுக்கள் சூப்பருங்க மகிழ்ச்சி
மிக்க நன்றி அண்ணா... நன்றி




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
avatar
rudran
பண்பாளர்

பதிவுகள் : 77
இணைந்தது : 13/11/2009

Postrudran Fri Nov 16, 2012 2:18 am

அறிந்திராத செய்திகள், அருமையான கட்டுரை, தொடருங்கள் நண்பரே.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Nov 20, 2012 6:38 am



"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Photo%201

ஏலியன்கள் இருக்கின்றன என்பதை உலகில் எந்த ஒரு விஞ்ஞானியும் மறுத்ததில்லை. ஏலியன்கள் பூமிக்கு வரவில்லை என்று உறுதியாக வாதிடுபவர்கள் கூட, ஏலியன்கள் இல்லையென்று சொல்வதில்லை. ஏலியன்கள் உண்டு ஆனால் அவை பூமிக்கு வந்ததில்லை என்றுதான் சொல்கிறார்கள். பூமி தாண்டி, சூரியக் குடும்பம் தாண்டி, எங்கோ தொலை தூரத்தில், நம்மிடம் வந்து சேர முடியாத தொலைதூரத்தில் ஏலியன்கள் இருக்கின்றன என்றுதான் சொல்கிறார்கள். ஏலியன்கள் பூமிக்கு வரவில்லை என்று சொல்பவர்களிடம் ஒரு நியாயமான வாதம் இருக்கத்தான் செய்கிறது. அவர்கள் சொல்வது இதுதான். "ஏலியன்கள் என்பவை வேற்றுக்கிரகங்களில் இருக்கும் உயிரினங்கள். அப்படி உயிரினங்கள் இருப்பதில் எந்தவிதச் சந்தேகமுமில்லை. ஆனால், அந்த உயிரினங்கள் நம் பூமியில் இருக்கும் புழுக்கள் போலவோ, பூச்சிகள் போலவோ, அல்லது ஏதோ வினோத வடிவத்திலோ இருக்கலாம். மனிதன் போல அவை இருக்கின்றன என்பதை நம்ப முடியவில்லை. ஒரு பேச்சுக்கு அவை மனிதன் வடிவில் இருந்தாலும், அதி புத்திசாலியான ஏலியனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படிப் புத்திசாலிகளாக இருந்தாலும், ஒளியின் வேகத்தை விட, வேகமாகச் செல்லக்கூடிய பறக்கும் தட்டுக்களை உருவாக்கி, அவற்றில் பிரயாணம் செய்யும் அளவுக்குப் புத்திசாலிகளாக இருக்க முடியாது. அப்படிப் பிரயாணம் செய்யக்கூடியவையாக இருந்தாலும், இவ்வளவு கோடான கோடி நட்சத்திரங்கள், கோள்கள் உள்ள பிரபஞ்சத்தில், கண்ணுக்கே தெரியாத புள்ளியாக இருக்கும் பூமியைத் தேடி வரவே முடியாது. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களையும், கோள்களையும் கணக்கிட்டால், நம் பூமியில் இருக்கும் கடற்கரைகளில் எவ்வளவு மண் துகள்கள் உள்ளதோ, அந்த மண் துகள்களை விட நட்சத்திரங்களும், கோள்களும் அதிகம். மெரினாக் கடற்கரையில், எங்கோ இருக்கும் கடற்கரை மணல் துகள் ஒன்றுக்கு, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இன்னுமொரு மணல் துகளைத் தெரிய எந்த அளவுக்குச் சாத்தியம் இல்லையோ, அவ்வளவு சாத்தியம் பூமியை ஏலியன்கள் கண்டு பிடிப்பதில் உண்டு " என்கிறார்கள். இந்த அனைத்துச் சாத்தியங்களும் ஒன்றாகச் சேர்ந்து, ஏலியன்கள் பூமிக்கு வந்தன என்று சொல்வதை, இவர்கள் சந்தேகிப்பது நியாயமானது அல்லவா? ஆனால், ஏலியன்கள், பறக்கும் தட்டில் பூமிக்கு வந்தார்கள் என்ற விதத்தில் இதுவரை நாம் பார்த்த பலவிதமான சாட்சிகள், நம்மை நம்பவும் வைக்கிறது. மனிதர்கள் கண்டதாக, நம்பிக்கையான, மறுக்க முடியாத சாட்சிகள் கிடைத்திருந்தாலும், சில முக்கியமான கேள்விகளுக்கான பதிலை அறிவியல் இந்த விசயத்தில் மேலும் எதிர்பார்க்கிறது. அந்தப் பதில்கள் கிடைக்கும் பட்சத்தில், பறக்கும் தட்டுகள் பூமிக்கு வந்தன என்று முழுமையாக நாம் நம்பலாம்

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Photo%202

இப்போது, நமக்கு முன்னால் இருக்கும் மிகப் பெரிய கேள்வியே, ஏலியன்கள் எங்கிருந்து பூமிக்கு வருகின்றன என்பதுதான். சூரியக் குடும்பத்தில் இருக்கும் ஏதாவது ஒரு கிரகத்திலிருந்தா? அல்லது நமக்கு மிக அருகில், நான்கு ஒளி வருடங்கள் தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்களான அல்ஃபா சென்டௌரிக்குச் (Alpha Centauri) சொந்தமான ஏதாவது ஒரு கோளில் இருந்தா? அல்லது நமது காலக்ஸியான பால்வெளி மண்டலத்தின் ஏதாவது நட்சத்திரத்துக்குச் சொந்தமான ஒரு கோளிலிருந்தா? அல்லது பால்வெளி மண்டலம் தாண்டி, வேறு ஒரு காலக்ஸியிலிருந்தா? எங்கிருந்து இவை வரலாம்? சூரியக் குடும்பத்தின் ஏதாவது கோளில் இருந்து இந்த ஏலியன்கள் வந்தன என்றால், அதை நாம் நம்பலாம். காரணம் அவை இருக்கும் தூரம் மிகவும் குறைவானவை. ஆனால் அதற்கு அப்பால் இருப்பவை எல்லாம் 'ஒளி வருடங்கள்' என்னும் அலகில் அளக்கும் தூரத்தில் இருக்கின்றன. இதுவரை உள்ள அறிவியல் அறிவின்படி, ஒளியை விட வேகமாகப் பிரயாணம் செய்யும் எதுவுமே பிரபஞ்சத்தில் இல்லை என்றுதான் நம்பப்படுகிறது, அல்ஃபா சென்டௌரி நான்கு ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. அதாவது ஒளியின் வேகத்தில், அங்கிருந்து யாராவது பறக்கும் தட்டில் வந்தால் கூட, அதற்கு நான்கு வருட காலம் எடுக்கும். ஒளியின் வேகத்திலேயே யாரும் பயணம் செய்ய முடியாது என்றிருக்கும் போது, சரி அப்படிப் பிரயாணம் செய்கிறார்கள் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும், நான்கு வருடங்கள் செலவளித்துப் பூமிக்கு வரவேண்டும். இதற்கே இப்படியென்றால், இதற்கு அப்பால் இருக்கும் நட்சத்திரங்கள் எல்லாமே, இருபது, ஐம்பது, நூறு, ஆயிரம் ஒளியாண்டுகள் என்னும் தூரங்களில் இருக்கின்றன. அப்படி இவற்றிலிருந்து வர வேண்டுமெனின், இருபது, ஐம்பது, நூறு, ஆயிரம் என ஆண்டுகள் தேவை. நாம் இருக்கும் காலக்ஸியான பால்வெளி மண்டலம் ஒரு லட்சம் ஒளியாண்டு அகலமானது. நம் காலக்ஸியைத் தாண்டி வேறொரு காலக்ஸியில் இருந்து வர வேண்டுமென்றால், ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு அதிகமாகத் தேவை. இப்படி அதிகக் காலங்கள் பிரயாணம் செய்து, பறக்கும் தட்டுகள் பூமியை நோக்கி வருவது சாத்தியம்தானா? என்று கேட்பதிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Photo%203

சூரியக் குடும்பத்தில் உள்ள சில கோள்களிலும், அந்தக் கோள்களின் உப கோள்களிலும் உயிரினங்கள் வாழச் சாத்தியம் உண்டு என்றே விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அவற்றுக்கான முழுமையான ஆராய்ச்சியிலும் அவர்கள் இறங்கியுள்ளனர். ஆனாலும், பறக்கும் தட்டில் பூமிக்கு வந்து போகும் அளவுக்கு அங்கு உயிரினங்கள் இருப்பதாக நம்பவில்லை. ஒரு வேளை பறக்கும் தட்டுகள் பூமிக்கு வந்திருந்தால், அவை சூரியக் குடும்பம் தாண்டிய வேறு ஒரு இடத்திலிருந்துதான் வந்திருக்க வேண்டும் என்றுதான் நம்புகிறார்கள். அதிகப்படியான தூரத்தில் இருந்து ஒளியின் வேகத்திலோ அல்லது அதற்கு அதிகமான வேகத்திலோ பூமியை நோக்கிப் பறக்கும் தட்டுகள் வந்திருக்கலாமா? என்பதுதான் இப்போது நம் முன்னால் இருக்கும் முக்கியமான கேள்வி. இதில் சவாலாக இருப்பது ஒளியின் வேகம்தான். பிரபஞ்சத்தில் உள்ள எதுவும் அல்லது யாரும் ஒளியின் வேகத்தில் பயனிக்கவே முடியாது என்கிறது அறிவியல். ஒளியின் வேகத்தில் ஏன் பிரயாணம் செய்ய முடியாது என்னும் கேள்வி இங்கு முக்கியமானது. இதற்கு நாம் ஐன்ஸ்டைன் என்ன சொன்னார் என்பதைப் பார்க்க வேண்டும்.

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Photo%204

ஐன்ஸ்டைன் என்னும் விஞ்ஞானி 1905ம் ஆண்டு, ஒரு புரட்சிகரமான கணித, இயற்பியல் சமன்பாடு ஒன்றைச் சமர்ப்பித்தார். இது சிறப்புச் சார்புக் கோட்பாடு (Special Relativity Theory) என்று சொல்லப்படுகிறது. இந்தச் சமன்பாட்டை E = mc2 என்னும் கணிதச் சமன்பாட்டால் குறிப்பிடுவார்கள். இங்கு E என்பது சக்தியையும், m என்பது நிறையையும், c என்பது ஒளியின் வேகத்தையும் குறிக்கும். அதாவது ஒரு குறித்த நிறையுள்ள பொருளுக்கான சக்தி ஒளியின் வேகத்துடன் இணைந்த ஒரு கணிதச் சமன்பாட்டுக்குள் அடங்குகிறது. இந்தச் சமன்பாட்டின்படி ஒரு பொருள் ஒளியின் வேகத்தை அடைந்தால், அந்தப் பொருள் எடையில் நினக்கவே முடியாத அளவு அதிகமாவது மட்டுமில்லாமல், அப்பொருள் ஒரு புள்ளி போலச் சுருங்கியும்விடும் சாத்தியம் உண்டு. மொத்தத்தில் இந்தக் கோட்பாட்டின்படி பிரபஞ்சத்தில் உள்ள எதுவுமே ஒளியின் வேகத்தை அடைய முடியாது. அப்படி ஒளியின் வேகத்தை அடையக் கூடிய ஒன்று பிரபஞ்சத்தில் உண்டு என்றால், அது ஃபோட்டான்கள் (Photon) என்று சொல்லப்படுப் ஒளித்துகள்கள்தான். சுருக்கமாகச் சொன்னால், ஒளி மட்டுமே ஒளியின் வேகத்தில் பயணம் செய்யக் கூடியது. சமீபத்தில் கூட நியூட்ரினோஸ் என்பவை ஒளியை விட வேகமாக பயணிக்கின்றன என்று ஒரு ஆராய்ச்சியில் அறிவித்து, அப்புறம் அது அப்படி அல்ல என்று பின்வாங்கினார்கள்.

இந்த அடிப்படையில், பிரபஞ்சம் முழுவதும் உள்ள எவையாயினும், அவை அதிபுத்திசாலியான ஏலியன்களாக இருந்தாலும், ஒளியை விட வேகத்தில் ஒரு பறக்கும் தட்டை உருவாக்கிப் பறக்க வைக்க முடியாது என்ற முடிவுக்குத்தான் நாம் வரவேண்டி உள்ளது. எனவே ஒளியின் வேகத்தை விடக் குறைவான வேகத்தில் பூமியை அடைவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிடும். இவ்வளவு காலங்களைச் செலவளித்துப் பூமிக்கு ஏலியன்கள் வந்து போகின்றன என்பதை நம்ப முடியாது அல்லவா? 'அப்படியென்றால், பறக்கும் தட்டுகள் பூமிக்கு வந்தன என்பது பொய்தானா? ரோஸ்வெல், பெல்ஜியம் போன்ற இடங்களில் நம்பகத்தன்மையுடன் சொல்லபட்ட அனைத்தும் பொய்க் கதைகள்தானா?' என்று நீங்கள் இப்போது சோர்ந்து போய்விடலாம். ஆனால் நவீன விஞ்ஞானம் உங்களைச் சோர்ந்து போக விடுவதாயில்லை. இவையெல்லாவற்றையும் தாண்டி, பூமிக்குப் பறக்கும் தட்டுகள் வந்ததற்கான சில சாத்தியக் கூறுகளை நவீன விஞ்ஞானம் முன்வைக்கிறது. அந்தச் சாத்தியக் கூறுகளை நீங்கள் அறிந்து கொண்டால், நவீன விஞ்ஞானத்தை மட்டுமல்ல, அதை உங்களுக்குச் சொல்லும் என்னையும் பைத்தியம் என்று சொல்லி விடுவீர்கள். நவீன விஞ்ஞானம் எடுத்து வைக்கும் அந்தச் சாத்தியக் கூறுகள் உண்மையில் பறக்கும் தட்டுகளுக்காகச் சொல்லப்பட்டவை அல்ல. பிரபஞ்சத் தோற்றம் பற்றிய ஆராய்ச்சிகளின் முடிவுகள் தந்த தீர்ப்புகள் அவை. கண்டுபிடிக்கவே முடியாது என்று பல விஞ்ஞானிகள் தவித்துக் கொண்டிருந்த ஒரு சமன்பாட்டுச் சிக்கலைத் தீர்க்கப் போன நிலையில், இந்த நவீனக் கோட்பாடு பிறந்திருக்கிறது. இப்படிப் பிறந்த கோட்பாடுதான் பறக்கும் தட்டுகளும் பூகிக்கு வந்திருக்கலாம் என்று சொல்வதற்குரிய வழியையும் நமக்குத் திறந்து வைத்திருக்கிறது. ஆச்சரியகரமாக உலகில் உள்ள அனைத்து இயற்பியலாளர்களும், கணித மேதைகளும் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் விஞ்ஞானிகள் அனைவரும் ஏற்றுக்கொண்டாலும், நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களா என்பது சந்தேகமே!

அப்படி என்னதான் நாம் ஏற்றுக்கொள்ள முடியாத கோட்பாட்டை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து விட்டனர் என்று நீங்கள் யோசிக்கும் வேளையில், அதை உங்களுக்குப் புரிய வைக்க, ஒரு தெளிவான விளக்கத்தை நான் கொடுக்க வேண்டும். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அந்தக் கோட்பாட்டைப் புரிய வைப்பதற்கு நமக்கு நிறைய நேரமும், அவகாசமும் தேவை. அவசர அவசரமாக அதைச் சொல்லும் போது, அதைச் சரியாகப் புரிய வைக்க முடியாமல் போய்விடலாம். எனவே, அடுத்த வாரம் அந்தக் கோட்பாடு பற்றிய தெளிவான விளக்கத்துடன் உங்களைச் சந்திக்கிறேன். ஆனாலும், பூமிக்கு ஏலியன்கள் வந்திருக்கின்றன என்று சொல்லப்படும் வேறு வகையான சில கோட்பாடுகளும் இருப்பதால், அவை பற்றித் தொடர்ந்து பார்க்கலாம்.

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Photo%205

நாம், ஏலியன்கள் பறக்கும் தட்டில் பூமிக்கு வந்து போகின்றன என்று சொல்லிக் கொண்டிருக்கையில், அதெல்லாம் கிடையாது. ஏலியன்கள் நம்முடனே பூமியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்று சொல்பவர்களும் உண்டு. மிகப் பிரபலமான ஹாலிவூட் திரைப்படமான 'Men in Black' இல் வருவது போல, ஏலியன்கள் பூமியில் நம்முடனே வாழ்கின்றன என்று சொல்கிறார்கள். சிலர் ஒருபடி மேலே போய், ஹிட்லர், இடி அமீன் போன்றவர்கள் ஏலியன்கள்தான் என்று அடித்துச் சொல்கிறார்கள். ஏதோ ஒரு வடிவத்தில், ஏதோ அமைப்பில் ஏலியன்கள்தான் இப்போதும் உலகத்தையே ஆண்டு கொண்டிருக்கின்றன என்று சொல்பவர்களும் உண்டு.

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Photo%206

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Photo%207

சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். உலகில் எத்தனை விதமான உயிரினங்கள் உண்டு என யோசியுங்கள். மனிதன், மிருகங்கள், ஊர்வன, பறப்பன, பூச்சிகள், புழுக்கள், கடல்வாழ் விலங்குகள் என விதவிதமாக, நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு உயிரினங்கள் பூமியில் உண்டு. காடுகளில் உள்ள பூச்சிகள் ஒவ்வொன்றினதும் தோற்றங்களை யோசித்துப் பாருங்கள். எவ்வளவு வினோதமான வடிவங்களில் அவை உண்டு. மனிதனுக்குச் சற்றும் சம்மந்தமே இல்லாத உயிரினங்கள் அவை. கோடிக்கணக்கான விதங்களில், வடிவங்களில் உயிரினங்கள் பூமியில் உண்டு. இவற்றில் எவையாவது ஏலியன்களாக ஏன் இருக்கக் கூடாது? பல பூச்சி வகைகள் அச்சு அசல் ஏலியன்கள் போலவும் இருக்கின்றன. பூச்சிகளோடு பூச்சிகளாக, உயிரினங்களோடு உயிரினங்களாக ஏலியன்கள் நம்மோடு ஏன் கலந்திருக்கக் கூடாது? ஏலியன் என்பது மனிதன் அளவுக்குப் பெரிதாகத்தான் இருக்க வேண்டுமா? சின்னதாக இருந்து பெரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடாதா? தற்கால விஞ்ஞானமே குவாண்டம் விஞ்ஞானம் (Quantum) என்று ஆகிவிட்ட நிலையில், ஏலியன்கள் ஏன் சின்னதாக இருக்கக் கூடாது? நாளைக் காலை, "மர்மக் காய்ச்சலைத்" தரப்போகும் நுளம்பு ஒன்றைக் கண்டால், அந்த நுளம்பை அடித்துக் கொன்று விடாமல், அது ஒரு ஏலியனாக ஏன் இருக்கக் கூடாது என்று சிந்தித்துப் பாருங்கள். உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும், அடுத்த உயிரினத்தைத் தாக்குகின்றனவென்றால், ஒன்று உணவுக்காக அல்லது பாதுகாப்புகாக மட்டும்தான். ஆனால் ஒன்றுமேயறியாத மனிதனிடம் உணவைப் பெற்றுவிட்டு, அவனுக்கு உயிர் கொல்லும் நோயை ஏன் நுளம்புகள் கொடுக்க வேண்டும்? இது ஒன்றே அவை ஏலியனாக இருப்பதற்குச் சாட்சியல்லவா? என்ன பயந்து விட்டீர்களா? நான் சற்று நகைச்சுவைக்காக நுளம்பு பற்றி சொன்னேன். ஆனால், இந்த அடிப்படையில் பலர் யோசிக்கத்தான் செய்கிறார்கள். ஏலியன்கள் வேறு உயிரினங்களின் வடிவில் நமது பூமியில் வாழ்கின்றன என்று நம்பும் பலமான கோட்பாடு இருக்கிறது. இதைப் பலவிதத்தில் ஹாலிவூட் படங்களாக எடுத்து வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Photo%208

மேலே சொன்னவற்றை விட்டுவிடலாம். பூமியில் பெரும்பகுதியாக உள்ள கடலைச் சற்றுப் பார்ப்போம். கடல் நீரில் நூறு மீட்டர்களுக்குள் இருக்கும் உயிரினங்கள் மட்டுமே மனிதனுக்குத் தெரிந்தவை. ஆனால் நூறு மீட்டர்களுக்கு கீழே பத்துக் கிலோமீட்டர்கள் வரை என்ன என்ன விதமான மீன் வகைகள், உயிரினங்கள் கடலில் உண்டு என்றே நமக்குத் தெரியாது. கடலில் அமுக்கத்தினால், சில நூறு மீட்டர்களுக்கு மேல் கடலினுள் மனிதனால் செல்லவே முடியவில்லை. அதை ஆராயவும் முடியவில்லை. விண்வெளியில் எத்தனையோ லட்சம் கிலோ மீட்டர்கள் பிரயாணம் செய்யத் தெரிந்த மனிதனுக்கு, கடலுக்குள், பத்துக் கிலோ மீட்டர்கள் ஆழத்துக்குச் செல்ல முடியவில்லை. கடலின் ஆழத்தில் ஏலியன்கள் குடியிருக்கின்றன என்று பலர் நம்புகிறார்கள். இதற்கு ஆதாரமாக பறக்கும் தட்டுகள் கடலில் அமிழ்ந்து மறைந்ததைக் கண்டதாகப் பலர் சாட்சியம் சொல்லியிருக்கிறார்கள். அதிகம் ஏன், உலகப் புகழ் பெற்ற 'டைட்டானிக்' (Titanic), 'அவதார்' (Avatar) ஆகிய படங்களை இயக்கிய முதல் தர இயக்குனரான 'ஜேம்ஸ் கமெரோன்' (James Cameron), 1989ம் ஆண்டு 'அபிஸ்' (Abyss) என்னும் திரைப்படத்தை எடுத்து வெளியிட்டார். அந்த நேரங்களில் சக்கை போடு போட்ட அந்தப் படத்தின் கதையே கடலின் அடியில் ஏலியன்கள். பறக்கும் தட்டுகள் சகிதம் வாழ்கின்றன என்பதைச் சொல்வதுதான். ஹாலிவூட் படங்களில், காதில் பூக்களை வைப்பதற்குப் பதில் பூச்சாடியையே வைக்கும் பழக்கம் உண்டு என்றாலும், அவர்களின் திரைக் கதைகளுக்கு அடிப்படையான, ஒரு வலுவான காரணங்கள் பல சமயங்களில் இருக்கும்.

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Photo%209

மனித இனம் தோன்றுவதற்கு முன்னரே, பூமிக்கு வந்த ஏலியன்கள் கடல்களின் அடி ஆழத்தில் வாழ்ந்து கொண்டு, அப்பப்போ பூமிக்கு மேலே வந்து, நமக்கு ஏன் காட்சியளிக்கக் கூடாது என்று கேட்பவர்களை தர்க்க ரீதியாக மறுக்க நம்மால் முடியாமல்தான் இருக்கிறது. மனிதன் கடலின் அடிஆழத்துக்கு வரவே மாட்டான் என்று தெரிந்த நிலையில், தாங்கள் வாழ மிகச் சரியான இடமாகக் கடலாழத்தை ஏலியன்கள் தெரிவு செய்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். கடலின் அடியாழத்தில் இருக்கும் சில மீன் வகைகளின் உருவத்தைப் பார்த்தால் ஏலியன்களே தேவலை என்று நாம் நினைக்கும் படியாக இருப்பதென்னவோ உண்மைதான். ஏலியன்கள் பூமியில் நம்முடன் வாழ்கின்றன, கடலில் வாழ்கின்றன என்பவை எல்லாம் கோட்பாடுகள் என்ற நிலையில்தான் பார்க்கப்படுகின்றன. அதனால் அவற்றை நம்ப வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்த வேளையில், தம்பிகள் Y.B.யாசிரும், முரளி கிருஷ்ணனும் ஒரே சமயத்தில் அனுப்பிய ஒரு படம் என்னை மிரள வைத்தது. என்னை மட்டுமல்ல உலகில் பலரையும் அது மிரள வைத்தது. பயிர்களில் வட்ட வடிவச் சித்திரங்கள் வரையப்படுகின்றன என்று நாம் நம்பி இருந்த வேளையில், கடலின் அடியில் உள்ள மணலில் வரையப்பட்டிருந்த ஒரு சித்திரத்தைத்தான் அவர்கள் அனுப்பியிருந்தார்கள். அந்தச் சித்திரத்தை நீங்களே பாருங்கள்.

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Photo%2010

ஜப்பானைச் சேர்ந்த 'ஜோயி ஊக்காட்ட' (Yoji Ookata) என்பவரால் கடலடியில் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் சித்திரம் இது. பயிர்வட்டங்கள் போலவே இவது இருக்கின்றது. இது யாரால், எப்படி வரையப்பட்டிருக்கலாம் என்று சிலர் சிந்திக்க, இல்லையில்லை இது பறக்கும் தட்டு ஒன்று கடலடியில் நின்ற போது, கடல் மணலில் அதன் தடம் பதிந்து இப்படி ஆகியிருக்கும் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் அப்படியில்லை. 'பஃபர் மீன்' (Puffer Fish) என்னும் மிகச் சிறிய மீன்வகையே இதை உருவாக்கியது என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். இயற்கையே இப்படிப்பட்ட வடிவங்களை உருவாக்குவதும் நடப்பதுதான் என்றாலும், முடிவை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்.

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Photo%2011%20copy

ஏலியன்கள் பூமியில் வாழ்கின்றன என்பதற்கு மேலே சொல்லப்பட்ட காரணங்கள் அறிவியல் ரீதியாக உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாதவையாக இருந்தாலும், கோட்பாட்டு ரீதியாக அவை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவைதான். ஆதாரமில்லாமல் எதையும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத போது, ஆதாரமில்லாமல் எதையும் மறுக்க முடியாமலும் போகிறது. ஆனால் அறிவியலாக, நவீன விஞ்ஞானத்தின் ஆதார விதிகளுடன் பறக்கும் தட்டுகள், ஒளியின் வேகதையும் தாண்டிப் பூமிக்கு வரலாம் என்னும் சாத்தியம் ஒன்று உண்டு என்று மேலே சொன்னேன் அல்லவா? அந்தச் சாத்தியம் என்னவென்று முழுமையாக, அறிவியலாக, தெளிவாக நாம் பார்க்கலாம்.

அதற்கு அடுத்த வாரம் வரை பொறுத்திருங்கள்.




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Nov 20, 2012 11:04 am

நன்றாக இருக்கிறது கட்டுரை.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Nov 21, 2012 6:13 pm

இந்த தொடரை சிறப்பாக எழுதிவரும் இக்கட்டுரையின் ஆசிரியர் நண்பர் ராஜ்சிவா அவர்களுக்கும் உயிர்மை இனையதளத்திற்கும் ஈகரை நண்பர்கள் சார்பாக இதயம் கனிந்த இனிய நன்றிகளையும் வாழ்த்துக்களையும் கூறி கொள்கிறேன்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Nov 26, 2012 11:11 am

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Photo%201

ஏலியன்கள் பூமிக்கு வந்தன என்று சொல்வதை மறுப்பதற்கான காரணங்களைக் கடந்த பதிவில் நாம் பார்த்திருந்தோம். நாம் வாழும் பூமி, பூமியின் இருப்பைக் கொண்டிருக்கும் சூரியக் குடும்பம், சூரியக் குடும்பத்தை தன் வசம் வைத்திருக்கும் 'மில்க்கி வே' காலக்ஸி, 'மில்க்கி வே' காலக்ஸி போன்று பில்லியன் எண்ணிக்கையில் காலக்ஸிகள் என்று விரிந்திருக்கிறது அண்டம் (Universe). அதை அண்டம் என்று சொன்னால் அதன் தாக்கத்தை நம்மால் உணர முடியாது. அதனால், பேரண்டம் என்று சொல்வதே பொருந்தும். அண்டத்தில் ட்ரில்லியன் ட்ரில்லியன் எண்ணிக்கையில் நட்சத்திரங்களும், கோள்களும் இருக்கின்றன. பூமியில் உள்ள சகல  கடற்கரைகளிலும் இருக்கும் மணலின், சின்னஞ்சிறிய மணல் துகள்களை நாம் எண்ணினால் எவ்வளவு எண்ணிக்கை வருமோ, அதைவிட அதிகமான நட்சத்திரங்களும், கோள்களும் அண்டத்தில் இருக்கின்றன. இதை உங்களால் நம்பவே முடியாமல் போகலாம். காரணம், அந்த அளவுக்குக் கணக்கிடவே முடியாத மிகப் பெரிய எண்ணிக்கை இது. அத்துடன் இதில் இன்னுமொரு வேடிக்கையும் உண்டு. இவ்வளவு அதிக எண்ணிக்கையில் நட்சத்திரங்களும், கோள்களும் அண்டத்தில் இருந்தாலும், அவை அண்டத்தின் அளவில் வெறும் 4% மட்டும்தான் உள்ளன. இதில் மேலும் ஒரு ஆச்சரியமும் உண்டு. இந்த 4 வீதத்திலும் 0.4% மட்டுமே நட்சத்திரங்களும், கோள்களுமாக உள்ளன. எஞ்சிய 3.6 வீதமும் வாயுக்களாகவும், தூசிகளாகவுமாகவே (Intergalactic Gas) இருக்கின்றது.

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Photo%202



நான்கு வீதங்கள் போக, அண்டத்தின் எஞ்சிய 96 வீதமும் வெறுமையாக இருக்கின்றன என்றுதான் முன்னர் நினைத்திருந்தார்கள். ஆனால் அவை வெறுமையில்லை. கரும் சக்தி (Dark Energy), கரும் பொருள் (Dark Matter) என்னும் இரண்டினால் நிரம்பியிருக்கிறது. கரும் சக்தி, கரும் பொருள் ஆகியவை பற்றி விளக்கமாகப் பார்க்கப் போனால் அதற்குள்ளேயே நாம் தொலைந்து விடுவோம். எனவே கரும் சக்தி பற்றி மட்டும் ஒரு உதாரணத்தைச் சொல்லிவிட்டு மேலே தொடர்கிறேன். டார்க் எனர்ஜி என்று சொல்லப்படும் கருமையான மிகை வலுச் சக்தியொன்று, நமது அண்டம் பூராவும் பரந்திருக்கிறது. அண்டத்தின் 73% இந்தச் சக்தியினால்தான் நிரப்பப்பட்டு இருக்கின்றது. பூமியில் வாழும் நாம் எத்தனையோ விதங்களில் சக்திகளைக் கண்டிருக்கிறோம். அவற்றுள் அணுசக்தியையே மிகவும் வலுவானது என்றும் உணர்ந்திருக்கின்றோம். உலகில் உள்ள நாடுகள் எல்லாமே, அணுசக்தியின் மூலமாக, மின்சாரத்தைப் பெற்றுக் கொண்டு இருக்கின்றன. அணுசக்தியின் பின் விளைவுகள் மிகப் பயங்கரமானவை என்று தெரிந்தாலும், வேறு வழியின்றிப் பல நாடுகள் அதைப் பயன்படுத்தி மின்சாரத்தைப் பெற்றுவருகின்றன. ஆனால், அண்டத்தில் உள்ள டார்க் எனர்ஜியுடன் அணுசக்தியை ஒப்பிட்டால், அணுசக்தி ஒன்றுமே இல்லை என்னும் ரகம்தான். டார்க் எனர்ஜியை ஒரு தேனீர் கலக்கும் கரண்டி (Teaspoon) அளவு சேகரித்து எடுத்தோமானால், அதை வைத்துக் கொண்டு, பூமியில் உள்ள அனைத்து நாடுகளுக்கும், நூறு வருடங்களுக்கு இருபத்திநான்கு மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கலாம். என்ன உங்களால் இதைக் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை அல்லவா? உண்மைதான், அவ்வளவு சக்தி வாய்ந்தது இந்தக் கரும் சக்தி. அதை எப்படிச் சேமிப்பது என்பதில்தான் பல விஞ்ஞானிகள் மூளையைப் போட்டுப் புரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  

ட்ரில்லியன் ட்ரில்லியன் நட்சத்திரங்களும், கோள்களும் இருக்கும் அண்டத்தில் 73% நிறைந்திருக்கும் இந்தக் கரும் சக்தியை, எப்போது மனிதன் தன் கைவசப் படுத்துகிறானோ, அப்போது அண்டத்தின் வலுமிக்க முக்கிய அங்கமாக மாறிவிடுவான். இன்று அது சாத்தியமாகாமல் போனாலும், இன்னும் நூறு ஆண்டுகளில் அல்லது ஆயிரம் ஆண்டுகளில் அல்லது பத்தாயிரம் ஆண்டுகளிலாவது இது மனிதனுக்குச் சாத்தியப்படலாம். அப்போது மனிதனால் முடியாதது எதுவும் இல்லை என்றாகிவிடும். இப்போது இப்படிச் சிந்தித்துப் பாருங்கள். நம்மால்தானே இந்தக் கரும் சக்தியைத் தற்போது பயன்படுத்த முடியாமல் இருக்கிறது. ஆனால் இந்த அண்டத்தில் ஏதோ ஒரு கிரகத்தில் இருக்கும், ஏதோ ஒரு இனம், கரும் சக்தியைப் பயன்படுத்தும் அறிவைப் பெற்றிருக்கலாம் அல்லவா? கரும் சக்தியை அவர்களால் பெறக் கூடியதாக இருந்தால், அவர்களால் முடியாதது எதுவுமே இல்லை என்றாகிவிடும். 

'அது எப்படி நம்மை விட அதிக அறிவை ஏலியன்கள் பெற்றிருக்க முடியும்?' என்று நீங்கள் நினைக்கலாம். அதற்கும் ஒரு காரணம் உண்டு. அண்டத்தில் உள்ள பல நட்சத்திரங்களையும், கோள்களையும் எடுத்துக் கொண்டால், பூமி என்பது மிகவும் இளமையானது. அண்டம் என்பது ஒரே செக்கனில் தோன்றியது என்றாலும், நட்சத்திரங்கள், கோள்கள் எல்லாம் படிப்படியாகத்தான் உருவாகின. இன்றும் கூட நட்சத்திரங்கள் உருவாகிக்கொண்டும், உருவாகிய நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறியபடியும்தான் இருக்கின்றன. பூமியை விட இள வயதுள்ள நட்சத்திரங்கள் அண்டத்தில் கோடிக்கணக்கில் உண்டு. நமது பூமி கிட்டத்தட்ட  4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றியது. பூமியில் 'ஹோமோ எரக்டஸ்' (Homo Erectus) என்று சொல்லப்படும் தற்கால மனிதனின் மூதாதையர்கள் தோன்றியது கிட்டதட்ட 1.8 மில்லியன் வருடங்களின் முன்னராக இருக்கலாம். அதிலும் தற்கால மனிதனின் மூதாதையரான 'நியாந்தர்தாலர்' (Neanderthal) மனிதன் தோன்றியது, வெறும் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்தான். ஆனால் அண்டம் உருவாகியதோ 13.7 பில்லியன் வருடங்களுக்கு முன்னர். நமது சூரியன் அண்டத்தின் முன்றாவது பரம்பரை நட்சத்திரம் (Generation Star).

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Photo%203

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Photo%204

மூன்றாவது பரம்பரையாகத் தோன்றிய நட்சத்திரமான சூரியனின் குடும்பத்திலேயே, மனிதன் போன்ற புத்திசாலி உயிரினம் தோன்றியிருக்க முடியுமென்றால், முதலாம் பரம்பரை, இரண்டாம் பரம்பரை நட்சத்திரங்களில் எவ்வளவு புத்திசாலி இனங்கள் தோன்றியிருக்க முடியும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். கடந்த நான்காயிரம் ஆண்டுகளில், பூமியில் உள்ள மனிதர்கள் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு அறிவியலில் சாதனைகள் புரிந்தும், பல வியப்பான கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தும் இருக்கிறார்கள். இனிவரும் பத்தாயிரம் ஆண்டுகளில், இன்னும் எத்தனையோ கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்கவும் போகிறார்கள். பூமியில் தோன்றிய மனிதன் இலட்சம் ஆண்டுகளிலேயே, இவ்வளவு பிரமிக்கும்படி அறிவில் வளர்ந்திருந்தால், கோடிக்கணக்கான வருசங்களுக்கு முன்னர் தோன்றியிருக்கக் கூடிய, வேற்றுக் கிரக உயிரினம் எவ்வளவு புத்திசாலிகளாக வளர்ந்திருக்கும் சொல்லுங்கள். அண்டத்தில் உள்ள பல கோள்களில், ஐந்து பில்லியன் வருடங்களுக்கு முன்னரே உயிரினங்கள் தோன்றியிருக்கச் சாத்தியங்கள் உண்டு. அந்த உயிரினம், மனிதன் போல முழுமையான, புத்திசாலி இனமாகப் பரிணாமமடைந்து, இரண்டு பில்லியன் வருடங்களாவது வாழ்ந்து கொண்டிருக்கலாம். இரண்டு பில்லியன் வருடங்கள் வாழும் ஒரு புத்திசாலி இனத்தால் எவ்வளவு சாதிக்க முடியும் என்பதை, மனிதனின் வளர்ச்சியை வைத்தே கணித்துப் பாருங்கள்.  

பூமிக்குப் பறக்கும் தட்டுகள் வந்திருக்க முடியாது என்பதற்கான காரணங்களில் முக்கியமானது, ஒளியின் வேகத்தை அடைவதில் ஏலியன்களுக்கு உள்ள பிரச்சினைதான். ஆனால் அண்டத்தில் உள்ள டார்க் எனர்ஜியைக் கையாளக் கூடிய அறிவியல் வளர்ச்சி அவர்களுக்கு இருக்குமானால், ஒளியின் வேகத்தை அடைவதில் பிரச்சினை எதுவும் இருக்க முடியாது. மனிதன்கூடப் படிப்படியாக முன்னேறி, ஒளியின் வேகத்தை அடைவதற்கே தன் அறிவியல் பயணத்தை முடுக்கிக் கொண்டிருக்கிறான். இன்றில்லாவிட்டாலும், பத்தாயிரம் அல்லது இருபதினாயிரம் வருடங்களிலாவது மனிதனால் அது சாத்தியமாகலாம். அந்த நம்பிக்கை மனிதனிடம் நிறையவே உண்டு.

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Photo%205

இப்போது நான் சொல்லும் சாத்தியத்தைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இருபதாயிரம் வருடங்களுக்குப் பின்னர், ஒரு பாரிய ராக்கெட்டை, அதாவது ஒரு ஃபுட்பால் மைதானத்தை விடப் பெரிய ராக்கெட்டை மனிதன் உருவாக்குகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதனுள்ளே வேண்டிய அளவு டார்க் எனர்ஜியை நிரப்பிக் கொள்கிறான். ஒரு சிறிய கிராமத்தில் உள்ள ஜனங்கள் அளவுக்கு, விதவிதமான மனிதர்களைக் குடும்பம் குடும்பமாக அதில் ஏற்றுகிறான். டாக்டர்கள், இன்ஜினீயர்கள், ஆசிரியர்கள் என அனைத்துத் தொழில் செய்பவர்களும், தங்கள் முழுக் குடும்பத்துடன் அந்த ராக்கெட்டினுள் பயணமாகத் தயாராகிறார்கள். ராக்கெட் ஒளியின் வேகத்தைத் தொடாவிட்டாலும், ஒளியின் வேகத்தில் அரைவாசியிலாவது பயணிக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம். அந்த ராக்கெட்டில் உள்ளவர்களுக்கு இறப்பு, பிறப்பு, திருமணம், உறவு எல்லாமே அந்த ராக்கெட்டில்தான். கிட்டத்தட்ட அவர்கள் வாழும் நாடு போல அது. அந்த ராக்கெட் நான்கு ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள, அல்ஃபா செண்டௌரி நட்சத்திரத்தை அடைய எட்டு வருடங்கள் எடுக்கும். இப்படி வேண்டிய தூரத்துக்கு, விரும்பிய நட்சத்திரத்துக்கு அந்த ராக்கெட்டில் அவர்கள் பயணப்பட்டபடியே இருக்கலாம். அவர்களுக்குத் தேவையான எரிபொருள் சக்திதான் டார்க் எனர்ஜியாய் வேண்டிய அளவு இருக்கிறதே! ஐநூறு வருடங்களின் பின்னரோ, ஆயிரம் வருடங்களின் பின்னரோ பூமிக்கு மீண்டும் அவர்கள் வர விரும்பினால், திரும்ப வரலாம். ஒரே ஒரு வித்தியாசம்தான் இருக்கும். தகப்பன் புறப்பட்ட ராக்கெட்டில் திரும்பி வருவது, பத்தாவது தலைமுறையாக இருக்கும். இது போல, ஏலியன்களும் தலைமுறை கட்டுமானமுள்ள பறக்கும் தட்டில் நமது பூமியை வந்தடைந்திருக்கவும் சாத்தியம் உண்டல்லவா? அப்படி வந்தவர்களுக்குப் பூமியை ஏதோ ஒரு காரணத்தினால் பிடித்துப் போக, சூரியக் குடும்பத்தில் உள்ள ஒரு கிரகத்திலோ, டைட்டான் போன்ற உபகிரகத்திலோ தங்கித் தொடர்ச்சியாய்ப் பூமிக்கு வந்து போயிருக்கலாமல்லவா? ஏன் இருக்க முடியாது? இந்தக் கருத்தை மையமாக வைத்து ஹாலிவுட்டில் வேண்டிய அளவு திரைப்படங்கள் வந்துவிட்டன. 

பூமிக்குப் பறக்கும் தட்டுகள் வந்ததற்கான ஆதாரத்தை நவீன விஞ்ஞானத்தின் புத்தம் புதிய கோட்பாடு மூலம் நிறுவலாம் என்று கடந்த வாரம் சொல்லியிருந்தேன். மேலே நான் சொன்னவைதான், அந்தப் புதிய கோட்பாடுகள் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். இல்லை, நான் சொல்ல வந்தது இதையல்ல. அது வேறு. அது முழுமையான அறிவியல் சார்ந்தது. மிகவும் சிக்கலானது. புரிய வைப்பதில் மிகவும் கவனம் தேவையானது. 

நீங்கள், உங்களுக்குப் பிடித்த ஒரு நடிகரின் படம் ஒன்றைச் சினிமாத் தியேட்டரில் பார்க்கச் செல்கிறீர்கள். அந்தப் படம் திரையில் காட்டப்படும்போது நீளம், அகலம் என்னும் இரண்டு பரிமாணங்களிலேயே (Dimention) திரையில் தெரியும். அதே தியேட்டரில், மூன்று பரிமாங்கள் (3D) உள்ள படங்களைப் பார்க்கும்போது, நீளம் அகலம் தாண்டி, மூன்றாவது பரிமாணமும் உங்கள் கண்களுக்குத் தெரியும். நாம் வாழும் பூமியில், நமக்குத் தெரியும் அனைத்துக் காட்சிகளும் முப்பரிமாணங்கள் உடையவைதான். கணிதத்தில் X,Y,Z ஆகிய மூன்று அச்சுக்களும் இந்த மூன்று பரிமாணங்களையும் குறிக்கும். மனிதனால் இந்த மூன்று பரிமாணங்களினூடாகவும் பயணம் செய்ய முடியும். அதாவது முன் பின்னாகவும், இடம் வலமாகவும், மேல் கீழாகவும் மனிதனால் பயணிக்க முடியும். ஆனால் இதுவரை மூன்று பரிமாணங்கள் மட்டும்தான் உண்டு என்று நாம் நம்பியிருந்த வேளையில், நான்காவது பரிமாணம் ஒன்றும் உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறினார்கள். அந்த நான்காவது பரிமாணம்தான் நேரம் (Time). இதை வெளி நேரம் (Spacetime) என்பார்கள்.

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 10 Photo%206

முப்பரிமாணமுள்ள வெளியுடன் (Space) நேரமும் (Time) சேரும் போது நான்கு பரிமாணங்களாகின்றன. மனிதனால் மூன்று பரிமாணங்களில் எதுவித சிக்கலும் இல்லாமல் பிரயாணம் செய்யக் கூடியதாக இருக்கையில்,  நான்காவது பரிமாணமான நேரத்திலும் ஏன் பிரயாணம் செய்ய முடியாது என்று கேள்விகள் அறிவியல் உலகில் எழும்ப ஆரம்பித்துவிட்டன. பிரபல இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டீஃபன் ஹாக்கிங், மனிதன் நேரத்தினூடாகப் பிரயாணம் செய்யும் காலம் தூரத்தில் இல்லை என்று அடித்துச் சொல்கிறார். இன்று இல்லாவிட்டாலும், இன்னும் சில ஆயிரம் ஆண்டுகளில் இறந்தகாலம், நிகழ்காலம் ஆகியவற்றுக்கு மனிதன் பிரயாணம் செய்யும் அறிவியல் வளர்ச்சியை அடைந்து விடுவான் என்று விஞ்ஞானிகள் சொல்கின்றனர். 'அட! இது என்ன சுத்தப் பேத்தல். அவனவன் கற்பனையில் கதை சொல்கிறான் என்றால், அதையே உண்மையாக இருக்கும் என்று நான் சொல்கிறேன்' என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையாகவே காலத்தினூடாகப் பிரயாணம் செய்வது சாத்தியமாகக் கூடிய ஒன்றுதான். இந்தக் கணத்தில் கூட, நாம் இறந்த காலத்துடன் எப்படித் தொடர்பு கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்து கொண்டால், இறந்தகாலத்துக்குப் பிரயாணம் செய்வது ஒன்றும் பெரிய விசயம் இல்லை என்பதைப் புரிந்துகொள்வீர்கள். 

 நாம் சூரியனைத் தினமும் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இந்தக் கணத்தில் கூடச் சூரியனை நாம் கண்களால் பார்க்கலாம். ஆனால் உண்மையில் அந்தச் சூரியன் இந்தக் கணத்தின் சூரியன் அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தக் கணத்தில் நீங்கள் பார்க்கும் சூரியன், 8.3 நிமிடங்களுக்கு முன்னர் இருந்த சூரியன். அதாவது இறந்தகாலச் சூரியன். இது போல, நீங்கள் தலையை உயர்த்தி இரவு வானத்தைப் பார்க்கும்போது தெரியும் எல்லா நட்சத்திரங்களும் நூறு, ஆயிரம், லட்சம், கோடி ஆண்டுகளுக்கு முந்தியவை. ஆனாலும் அவற்றை இந்தக் கணத்திலும் நாம் பார்க்கிறோம். இதற்குக் காரணம், ஒளி நம்மை வந்தடையும் வேகமும், அவை இருக்கும் தூரமும்தான். இதனடிப்படையில், ஒளியின் வேகத்தில் நாம் பிரயாணம் செய்யக்கூடியதாக இருந்தால், இறந்தகாலத்தை நோக்கி நம்மால் பிரயாணம் செய்யமுடியும் என்று அறிவியல் சொல்கிறது. 

காலத்தால் பயணம் செய்யலாம் என்றால், பறக்கும் தட்டில் பூமிக்கு வந்து போகின்றவர்கள் பூமியிலேயே வாழும் நம் எதிர்காலச் சந்ததியினராக ஏன் இருக்கக் கூடாது? இன்றிலிருந்து இருபதாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால், மனிதன் காலத்தினூடாகப் பிரயாணம் செய்யும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் காலத்தினூடாகப் பிரயாணம் செய்து இன்றுள்ள காலத்துக்கு வருகிறார்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். அப்படி வருபவர்களை நாம் எப்படி நினைப்போம்? வேற்றுக் கிரகத்திலிருந்து வந்த ஏலியன் என்றுதானே நினைப்போம். இருபதாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர், மனிதனின் உருவம் தற்கால மனிதனைப் போல இருப்பதற்குச் சாத்தியம் ரொம்பவும் குறைவு. அத்துடன் நம் மொழியையும் அவர்கள் பேசுவது என்பதும் இருக்க முடியாது. இதுதான் இயற்கையின் விதியும் கூட. ஆனால் வந்தவர்களுக்கு நம்மைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் தெரிந்திருக்கும். இப்போது பறக்கும் தட்டையும், ஏலியன்களையும் பற்றி நாம் அதிசயிக்கும் எல்லா சம்பவங்களும், இதனுடன் சரியாக ஒத்துப் போகிறதல்லவா? ஏலியன் என்று நம்புபவர்கள் நம்முடைய சந்ததியினராக இருக்கலாமல்லவா?

"அப்படியென்றால், ஏலியன்கள் என்று நாம் நம்புபவர்கள், அண்டத்தின் வேறு எந்த ஒரு கோளிலிருந்தும் வரவில்லை. அவர்கள் பூமியைச் சேர்ந்த நம் எதிர்காலச் சந்ததியினர்தானா?" என்று நீங்கள் என்னிடம் கேட்டால், அதற்கு எனது பதில் 'இருக்கலாம்' என்றுதான் இருக்கும். ஆனால் அதுதான் நிச்சயமான உண்மையாக இருக்க வேண்டும் என்பதல்ல. ஆனால், ஏலியன்கள் இருப்பதற்கான சாட்சியாக நான் கடந்த பதிவில் சொல்ல இருந்த நவீன அறிவியல் கோட்பாடும் இதுவல்ல.

அந்தக் கோட்பாடு என்னவென்று தெரியவேண்டுமா? அடுத்த வாரம் வரை பொறுத்திருங்கள்.




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
avatar
Guest
Guest

PostGuest Mon Nov 26, 2012 11:12 am

சூப்பருங்க அருமை ரமேஷ். இந்த வாரத்திற்காக காத்து கொண்டு இருந்தேன் ஜாலி

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Nov 26, 2012 11:16 am

புரட்சி wrote: சூப்பருங்க அருமை ரமேஷ். இந்த வாரத்திற்காக காத்து கொண்டு இருந்தேன் ஜாலி
மகிழ்ச்சி அண்ணா... மகிழ்ச்சி
தங்கள் ஆர்வத்திற்காக இன்று இரண்டு தொடர்கள் அண்ணா... புன்னகை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 10 of 12 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக