புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10 
2 Posts - 1%
prajai
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10 
435 Posts - 47%
heezulia
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10 
30 Posts - 3%
prajai
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு


   
   

Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat May 19, 2012 2:10 pm

First topic message reminder :

ராஜ் சிவா !

ஈகரை அன்பர்களுக்கு நன்கு தெரிந்த பெயர் ,,,,

2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' என்ற சுவாரசியமான கட்டுரையின் ஆசிரியர் .
அவர் வேறொரு கட்டுரை தொடரை உயிரோசையில் ஆரம்பித்துள்ளார் அதுதான்

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன"

இந்த கட்டுரை பற்றிய அறிமுகத்தில் ராஜ் சிவா இப்படி குறிப்பிடுகிறார்

நான் எழுதப் போகும் அனைத்தும் உங்களால் நம்ப முடியாதவையாகவே இருக்கும். ஆனால் ஒரு நேரத்தில் நம்ப வேண்டிய கட்டாயங்கள் உங்களுக்கு வந்தே தீரும். இவற்றை நீங்கள் நம்ப வேண்டும், நம்பாமல் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் தாண்டி, இப்படியெல்லாம் உலகில் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியப்படுத்துவதே என் முதல் நோக்கமாக இருக்கிறது.

அப்படி என்ன தான் சொல்லபோகிறார் ராஜ் சிவா!

உங்களோடு அறிய நானும் ஆவல்கொண்டிருக்கிறேன் ..படிப்பதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்

இதோ முதல் பகுதி .......

நன்றி :உயிரோசை






வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

avatar
Guest
Guest

PostGuest Mon Nov 26, 2012 11:20 am

ரா.ரமேஷ்குமார் wrote:
புரட்சி wrote: சூப்பருங்க அருமை ரமேஷ். இந்த வாரத்திற்காக காத்து கொண்டு இருந்தேன் ஜாலி
மகிழ்ச்சி அண்ணா... மகிழ்ச்சி
தங்கள் ஆர்வத்திற்காக இன்று இரண்டு தொடர்கள் அண்ணா... புன்னகை

ஜாலி நன்றி நன்றி நன்றி

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Nov 26, 2012 11:23 am

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Photo%201

ஏலியன்களாகப் பூமிக்கு வந்து போவது நமது எதிர்காலச் சந்ததியினராக இருக்கலாம் என்று கடந்த பதிவில் பார்த்தோம். "ஏலியன்களின் தலை பெரிதாகவும், கைகால்கள் சிறியதாகவும் இருக்கின்றனவே, அந்த வடிவத்திலா நம் எதிர்காலச் சந்ததி மனிதன் இருப்பான்? அப்படி இருக்க முடியாதே!" என்று சிலர் சந்தேகங்கள் கேட்டிருந்தனர். இதற்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய பதிலைச் சொல்லும் பட்சத்தில்தான், கடந்த பதிவில் சொல்லப்பட்டதில் ஒரு வீதமாவது உண்மை இருக்கலாம் என்று நம்ப முடியும். இன்றுள்ள நவீன அறிவியல் வசதிகளால், உலகமே உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்டது. மனிதன் இருந்த இடத்தை விட்டு அகலாமல், அனைத்தையும் அடையலாம் என்னும் நிலையை இப்பொழுதே எட்டிவிட்டான். ஆன்லைன் மூலமாக, பெற்ற தாயைத் தவிர மற்றவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலை கூட இன்னும் சில காலங்களில் வந்துவிடும். வீட்டிலிருந்து கொண்டே கல்வி கற்றல் , தொழிற்சாலையில் இயந்திரங்களை இயக்குவது என்று அனனத்தும் வரப்போகிறது. மனிதனுக்குப் பதில் ரோபோக்கள் வேலை செய்யப் போகின்றன. மனிதன் ஓடியாடித் திரியாமலே கைச் சொடுக்கில் சாகசம் செய்யப் போகிறான். இந்த நிலையில், பரிணாமக் கொள்கையை உலகிற்குச் சொன்ன சார்லஸ் டார்வினின் கருத்து ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். 'ஒரு உயிரினம், தனது எந்த உடல் உறுப்பை அதிகம் பயன்படுத்தாது போகின்றதோ, அந்த உடல் உறுப்பு, படிப்படியாகக் குறுகி இல்லாமலே போகலாம்' என்றார் டார்வின். அதற்கு உதாரணமாக, 'மனிதனுக்கு வால் இல்லாமல் அகன்றது அதனால்தான்' என்கிறார். அதே போல, 'ஒரு உயிரினம், எந்த உறுப்பை அதிகம் பயன்படுத்துகிறதோ, அந்த உறுப்பு வளர்ந்து பெரிதாக மாறலாம்' என்றும் சொன்னார். அதற்கு உதாரணமாக, ஒட்டகச் சிவிங்கியின் தலை நீண்டதைச் சொல்கிறார். இதுபோல பல ஆயிரம் வருடங்களுக்குப் பின், நமது எதிர்காலச் சந்ததியினரும் கைகால்களை அதிகம் பயன்படுத்தாததால் அவை சிறுத்தும், மூளைக்கு அதிகம் வேலை கொடுப்பதால், தலை பெரியதாக வளர்ந்தும், இன்று நாம் ஏலியன்கள் என்று நம்பும் ஒரு உருவத்துக்கு மாறலாம் அல்லவா? இப்படி நான் சொல்வதால், அப்படித்தான் இருக்கும் என்ற முடிவுக்கு உடனே நீங்கள் வந்துவிட மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். காரணம், நான் சொல்பவை எல்லாமே சாத்தியக்கூறுகள் மட்டும்தான். அவையே முடிவான முடிவுகளல்ல. 

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Photo%202

ஏலியன்கள் பூமிக்கு வந்து போவதானால் அதற்கு இரண்டு அடிப்படைச் சாத்தியங்கள்தான் உண்டு. ஒன்று பூமி தாண்டிப் பிரபஞ்சத்தில் வேறு எங்கோ இருக்கும் ஒரு நட்சத்திரத்துக்கு அருகில் இருக்கும் கோளில் இருந்து ஏலியன்கள் பூமிக்கு வரவேண்டும். இல்லையெனின், பூமியின் எதிர்காலச் சந்ததியினர், கால இயந்திரத்தின் உதவியினால் தற்சமயம் நாம் வாழும் இந்தக் காலத்துக்கு வரவேண்டும். இது தவிர்ந்து ஏலியன்கள் பூமிக்கு வரச் சாத்தியமே இல்லை. கால இயந்திரம் மூலமாக பூமிக்கு வருவது பற்றிக் கடந்த பதிவில் விரிவாகப் பார்த்தோம். அது போல, ஏலியன்கள் மிகத்தொலைவில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களிலிருந்து பூமிக்கு வருவதாயின், ஒளியின் வேகத்தில் பிரயாணம் செய்தாலும் பல ஆண்டுகள் எடுக்கலாம் என்றும், புள்ளியை விடச் சிறிய பூமியை இந்தப் பிரபஞ்சத்தில் ஏலியன்கள் கண்டுபிடிப்பது என்பதே மிகச்சிரமம் என்றும் பார்த்தோம். இதனால் ஏலியன்கள் பூமிக்கு வந்திருக்க முடியாதோ என்ற சந்தேகமும் நமக்கு வந்தது. ஆனால் நவீன அறிவியலின் கோட்பாடு ஒன்று இந்தச் சந்தேகத்தை உடைத்தெறிந்தது. அது என்ன கோட்பாடு என்பதை நாம் விரிவாகப் பார்ப்பதற்கு முன் சில வார்த்தைகள். இப்போது நான் சொல்லப் போவது மிகவும் சிக்கலான அறிவியல் கோட்பாடு. சிலசமயங்களில் நான் சொல்வது உங்களுக்குப் புரியாமல் போகலாம். அப்படிப் புரியாமல் போனால் அது உங்கள் தவறல்ல. அதைச் சரியாகப் புரிய வைக்க முடியாமல் போன என் தவறாகத்தான் அது இருக்க முடியும். அப்படிப் புரிந்தாலும், அதில் உள்ள நம்பகத்தன்மை பற்றிய சந்தேகமும் உங்களுக்கு எழலாம். அதிகம் ஏன், நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் சிரிக்கவும் கூடும். ஆனால், இந்தக் கோட்பாடு நிச்சயம் சிரிப்பதற்கான ஒன்றல்ல. இதுவரை இந்தக் கோட்பாட்டை விஞ்ஞானிகளும், இயற்பியலாளர்களும் மறுக்கவில்லை. அனைவருமே ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இவர்கள் ஏற்றுக் கொண்ட ஒன்றே இந்தக் கோட்பாடு உண்மையானதாக இருக்க அதிக சாத்தியத்தைக் கொண்டது என்றாகின்றது. இருந்தாலும் இதுவரை அது கோட்பாடு என்னும் நிலையிலேயே உள்ளது. இனி நாம் அந்தக் கோட்பாடு பற்றிப் பார்ப்போம் வாருங்கள்.

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Photo%203

அணுமுதல் அண்டம் வரை உள்ள அனைத்தையும் நான்கு அடிப்படையான விசைகளே கட்டுப்படுத்துகின்றன என்று அறிவியல் கண்டுபிடித்திருக்கிறது. மின்காந்த விசை (Electromagnetic Force), திடமான அணுக்கரு விசை (Strong Nuclear Force), திடமற்ற அணுக்கரு விசை (Weak Nuclear Force), ஈர்ப்பு விசை (Gravitational Force) என்பவையே அந்த நான்கு விசைகளும் ஆகும். இந்த அண்டம் தோன்றியதாகக் கருதப்படும் பெருவெடிப்பின் (Big Bang) போதுதான் இந்த நான்கு விசைகளும் தோன்றின என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.  அதாவது ஒரு சிறிய பொருள் ஒன்று, எந்த ஒரு விளைவும் இல்லாமல் பல காலம் அமைதியாக இருந்து, ஏதோ ஒரு கணத்தில் பெரிதாக வெடித்ததால்தான் அண்டம் தோன்றியது. அப்படிப் பார்த்தால், பெருவெடிப்பினால் தோன்றிய இந்த நான்கு விசைகளும், பெருவெடிப்பிற்கு முன்னால் ஒன்று சேர்ந்து, ஒரே விசையாகச் சமநிலைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்திருக்க வேண்டும் அல்லவா? அதனால், இயற்பியலின்படி இந்த நான்கு விசைகளும் ஒரே கணிதச் சமன்பாட்டில் வரக்கூடிய வகையில் நிச்சயம் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்தனர். அந்தச் சமன்பாடு எதுவென்று கண்டுபிடிப்பதற்கு, ஐன்ஸ்டைன் முதல் இன்றுள்ள எல்லா விஞ்ஞானிகளும் முயற்சிக்கின்றனர். இதுவரை அதற்கு முறையான பதில் கிடைக்கவில்லை. இந்த நான்கு விசைகளையும் ஒன்று சேர்க்கும் கோட்பாட்டை 'தியரி ஆஃப் எவ்ரிதிங்க்' (Theory of everything) என்று அழைக்கிறார்கள். ஐன்ஸ்டைன் தனது இறுதிக் காலங்கள் அனைத்தையும் இந்தச் சமன்பாட்டைக் கண்டுபிடிப்பதிலேயே செலவிட்டார். ஆனாலும் கண்டுபிடிக்க முடியாமலே மரணத்தைத் தழுவினார்.

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Photo%204

இப்படி ஒரு சமன்பாட்டைக் கண்டுபிடிப்பதில் ஏன் இவ்வளவு சிரமங்கள் உள்ளன என்று படிப்படியாகப் பார்த்த போதுதான், எங்கோ தவறு செய்கிறோம் என்னும் யோசனை விஞ்ஞானிகளுக்கு வந்தது. அணுக்களைப் பிரித்துப் பார்த்தால் நம்மால் கண்டுபிடிக்க முடியாத பல உப அணுத்துகள்கள் (Subatomic Particles) அணுவுக்குள் இருக்கின்றன என்னும் உண்மைகள் மெல்லப் புரியலாயிற்று. பல விதமான, பல தன்மையுள்ள உப அணுத்துகள்கள் அணுவுக்குள் இருக்கின்றன என்பதை முதலில் கோட்பாட்டு ரீதியாக முடிவு செய்தார்கள். அணுக்கருக்களை ஒன்றுடன் ஒன்று மிக வேகமாக மோதவிட்டு, அதன் மூலம் உப அணுத்துகள்களை  ஒவ்வொன்றாகக் கண்டுபிடிக்கவும் ஆரம்பித்தார்கள். இப்படித்தான் சமீபத்தில் 'ஹிக்ஸ் போஸான்' (Higgs Boson) என்னும் 'கடவுள் துகள்' என்று சொல்லப்பட்ட உப அணுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றையெல்லாம் ஒன்றுபடுத்தி, ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்கிப் பார்த்தபோது, நான்கு விசைகளையும் சமப்படுத்தக் கூடிய சமன்பாடு ஒன்றை உருவாக்கக் கூடியதாக இருந்தது. அதாவது ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்குவதன் மூலம் 'தியரி ஆஃப் எவ்ரிதிங்க்' என்பதற்கான சமன்பாட்டை உருவாக்கக் கூடியதாக இருந்தது. நான்கு விசைகளையும் ஒன்றாகக் கொண்ட சமன்பாட்டை வடிவமைக்க உருவாக்கப்பட்ட புதிய கோட்பாடுதான் 'அதிர்விழைக் கோட்பாடு' என்று சொல்லப்படும் 'ஸ்ட்ரிங்க் தியரி' (String Theory) ஆகும். ஸ்ட்ரிங்க் தியரி என்றால் என்ன என்பதை நான் இப்போது, இங்கு புரிய வைக்க முடியாது. அதற்கான தளமும் இதுவல்ல. அதை வேறு ஒரு தளத்தில், வேறு ஒரு சந்தர்ப்பத்தில் மட்டுமே புரிய வைக்க முடியும். காரணம், அது மிகவும் நீண்டதொரு விளக்கத்தைக் கொண்டது. அதனால் அதைப் பற்றி விளக்குவதைத் தவிர்த்து மேலே செல்லலாம். 

ஸ்ட்ரிங்க் தியரி உருவாகியதைத் தொடர்ந்து 'எம் தியரி' (M theory) என்னும் பெயரில் இன்னுமொரு கோட்பாடும் தோன்றியது. இந்த இரண்டு கோட்பாடுகளும் தோன்றியதால் அண்டம் எப்படி உருவாகியது, எந்த நிலையில் அண்டம் இருக்கிறது, நாம் அண்டத்தில் எப்படி வசிக்கிறோம் என்ற பல உண்மைகள் (அவை உண்மைகளா என்று தெரியாவிட்டாலும்) கோட்பாடுகளாக வெளிவரத் தொடங்கின. அப்படி வெளிவந்த உண்மைகளின் அடிபடையில்தான் ஏலியன்கள் பூமிக்கு வந்தன என்பதை உங்களுக்குப் புரியவைக்கலாம் என்று இருக்கிறேன். ஸ்ட்ரிங்க் தியரியும், எம் தியரியும் உண்மையாக இருக்க வேண்டுமென்றால், நமது அண்டம் நாம் நினைப்பது போல இருக்காது. நாம் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு வடிவத்தில்தான் அண்டம் இருக்க முடியும்.

பூமியில் வசிக்கும் நாம் முப்பரிமாணமாகத்தான் ( 3 Dimention) உலகைப் பார்க்கிறோம். இடம் வலம், முன்னே பின்னே, மேலே கீழே என்ற மூன்று பரிமாணங்கள் நமக்கு உண்டு. இதுவரை மூன்று பரிமாணங்கள் இருக்கின்றன என்றுதான் நம்பியுமிருந்தோம். ஆனால் ஸ்ட்ரிங்க் தியரி, எம் தியரி ஆகிய இரண்டு கோட்பாடுகளின்படி நமது பூமியும், அண்டமும் பதினொரு பரிமாணங்களைக் கொண்டன என்று கண்டுபிடித்துள்ளனர். ஒரு மனிதனால் மூன்று பரிமாணங்களுக்கு மேல் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனையே பண்ணிப் பார்க்க முடியாது. உதாரணமாக, நிலத்தில் மட்டும் ஊர்ந்து செல்லும் ஒரு புழுவை எடுத்துக் கொள்வோம். நிலத்தில் இடம் வலம், முன் பின்னாக இரண்டு பரிமாணங்களில் மட்டுமே அதனால் ஊர்ந்து செல்ல முடியும் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் புழுவிடம் மேல் நோக்கிப் பறக்கலாம் என்ற ஒரு பரிமாணம் உள்ளது என்று நாம் சொன்னால், அதைக் கற்பனை பண்ணிப் பார்க்க அந்தப் புழுவால் முடியாமல் போகும். அது போல, நமக்கும் மூன்று பரிமாணங்களுக்கு மேலே கற்பனை பண்ணிப் பார்க்க முடிவதில்லை. ஆனால் பல பரிமாணங்கள் இருப்பது என்னவோ உண்மைதான்.

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Photo%205

இரண்டு பரிமாணத்தில் இயங்கும் புழுவினால் மூன்றாவது பரிமாணமான மேலே, வானத்தில் உள்ள எதையும் பார்க்க முடியாதது போல, முன்று பரிமாணத்தில் உள்ள மனிதனால் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது........., பதினோராவது என்னும் பரிமாணங்களில் இயங்குபவர்களையும், அந்தப் பரிமாணங்களில் இருக்கும் எதையும் காணமுடியாது. ஆனால் மூன்று பரிமாணங்களில் இயங்கக் கூடிய மனிதனால், இரண்டு பரிமாணங்களில் இயங்கும் புழுவைப் பார்க்க முடிகிறது அல்லவா? அது போல, மூன்றுக்கு மேற்பட்ட பரிமாணங்களில் இயங்குபவர்களால், முப்பரிமாணத்தில் இயங்கும் மனிதனைக் காணக் கூடியதாக இருக்கும். இப்போது நான் சொல்லும் விசயம் மட்டும் உங்களுக்குப் புரிந்தால், இனி நான் சொல்லப் போகும் அனைத்தையும் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும். இப்போது நாம் ஏலியன்கள் விசயத்துக்கு வரலாம். அதாவது ஏலியன்கள் மூன்றுக்கு மேற்பட்ட பரிமாணங்களான, நான்காவது , ஐந்தாவது ஆறாவது பரிமாணங்களில் இயங்கக் கூடியவர்களாக இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அப்படியெனின், அவர்களை நம்மால் காணமுடியாது. அதே நேரத்தில் அவர்களால் நம்மைக் காண முடியும். ஏதோ ஒரு தேவைக்கான கணத்தில் அவர்கள் மூன்றாவது பரிமாணத்தில் நுழையும்போது நமக்குக் காட்சி தருகிறார்கள். மனிதனாலும் இரண்டு பரிமாணங்களில் இயங்க முடியாது. ஏதோ ஒரு கணத்தில் நிலத்தோடு நிலமாகப் புழுவை இரண்டு பரிமாணத்தில் நாம் சந்தித்தால் மட்டுமே புழுவால் நம்மைப் பார்க்க முடியும். என்ன உங்களால் நம்ப முடிகிறதா? இல்லை, நான் சொல்வதைக் கேட்கும்போது சிரிப்பு வருகிறதா? இல்லை, இது சிரிக்கும் விசயம் இல்லை. நான் சொன்னதைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்

இப்போது இன்னுமொரு புரியாத விசயமொன்றையும் நான் சொல்ல வேண்டும். இடம் வலம், முன் பின் என்றிருக்கும் இரண்டு பரிமாணமான நிலத்தையும், மூன்றாவது பரிமாணமான மேல்வெளியையும் பிரிப்பது மிகச் சிறிய ஒரு பகுதிதான். அதாவது நிலத்திலிருந்து உயர அளவில் ஒரு செண்டி மீட்டர் மேலே வந்தாலும் அது மூன்றாவது பரிமாணமாகிவிடும். ஒரு செண்டிமீட்டர் கூட இல்லை, ஒரு மில்லிமீட்டர் மேலே வந்தாலும் அது மூன்றாவது பரிமாணம்தான். அதாவது இரண்டு பரிமாணத்தையும், மூன்றாவது பரிமாணத்தையும் ஒரு மில்லிமீட்டர் அளவுள்ள மிக மெல்லிய ஒரு படைதான் பிரிக்கிறது. அது போல, மனிதனுக்குத் தெரிந்த முன்றாவது பரிமாணத்தையும் அதற்கு மேலுள்ள பரிமாணங்களையும் மிக மெல்லிய ஒரு நூலிழை போன்ற படைதான் பிரிக்கின்றது என்கிறார்கள் இயற்பியலாளர்கள். நான்காவது பரிமாணமோ அல்லது அதற்கு மேலுள்ள பரிமாணங்களோ நமக்கு மிக அருகாமையில்தான் இருக்கின்றன. அப்படி நம்மையும் அடுத்த பரிமாணத்தையும் பிரிக்கும் மெல்லிய பகுதியை 'மெம்பிரான்' (Membrane) என்று அழைக்கிறார்கள்.

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Photo%206%20



இதுவரை நாம் பார்த்தவற்றைச் சுருக்கமாக மீண்டும் ஒருமுறை பார்க்கலாம். ஏலியன்கள் என்னும் அதிபுத்திசாலிகளான உயிரினங்கள், நாம் வாழும் பூமிக்கு மிக அருகிலேயே வாழ்கிறார்கள். அவர்களையும் நம்மையும் 'மெம்பிரான்' என்று சொல்லப்படும் ஒரு மிக மெல்லிய சவ்வு ஒன்று பிரிக்கிறது. ஏலியன்களை நம்மால் பார்க்க முடியாமல் இருப்பதற்குக் காரணம், அவர்கள் நம்மைப் போல மூன்று பரிமாணங்களில் மட்டும் இயங்குபவர்கள் அல்ல. அதற்கும் மேற்பட்ட பரிமாணங்களில் இயங்குபவர்கள். குறைந்த பரிமாணங்களில் இயங்குபவர்களால், கூடிய பரிமாணங்களில் இயங்குபவர்களைக் காண முடியாது. எப்போதாவது தேவைகள் ஏற்படும்போது, நான்காவது, ஐந்தாவது என்று அதிகப் பரிமாணங்களில் இயங்குபவர்களான ஏலியன்கள், நாம் வாழும் மூன்று பரிமாணப் பூமிக்கு வந்து போகின்றனர். இப்போது ஏலியன்கள் பற்றி நாம் கொண்டிருந்த சந்தேகங்கள் அனைத்தையும் இதில் பொருத்திப் பாருங்கள். எல்லாமே அதனதன் இடத்தில் கச்சிதமாகப் பொருந்துவதைக் காணலாம். ஆனாலும் நம்மிடம் மிகப் பெரிய கேள்வி ஒன்று இப்போதும் எஞ்சியிருக்கும். அந்தக் கேள்வி இதை வாசிக்கும் பலருக்குத் தோன்றியிருக்கலாம், சிலருக்குத் தோன்றியிருக்காது. அதனால் அந்தக் கேள்வி என்னவென்பதை நானே சொல்கிறேன்.

"மற்ற பரிமாணங்களில் இயங்கும் ஏலியன்கள் எங்கே வசிக்கிறார்கள்?" என்பதே அந்தக் கேள்வி. நமது கண்ணுக்குத் தெரியும் நட்சத்திரங்கள் அனைத்துமே முப்பரிமாணத்தில் அடங்குபவைதான். அவை நம் கண்ணுக்குத் தெரிவது ஒன்றே அதற்கு சாட்சியாகின்றது. மேலே சொல்லப்பட்ட கோட்பாட்டின்படி,  ஏலியன்கள் நம் கண்களுக்குத் தெரியக்கூடிய நட்சத்திரங்களில் வசிக்க முடியாது. மூன்று பரிமாணங்களுக்கு மேற்பட்ட வேறு எங்கோதான் அவர்கள் வசிக்க வேண்டும். அப்படியாயின் அவர்கள் எங்கே வசிக்கிறார்கள் என்னும் கேள்வி எழுவது இயல்பானதே!

இந்தக் கேள்விக்கும் அறிவியல் ஒரு பதிலைத் தருகிறது. அது என்ன பதில் என்பதை நாம் அடுத்த வாரம் பார்க்கலாம்.

பிற்குறிப்பு: இந்த வாரம் நான் சொல்லிய விசயங்கள் சிலருக்குப் புரியாமல் போகலாம். அதைப் பற்றி அவர்கள் எந்தக் கவலையும் கொள்ளத் தேவையில்லை. கடைசியாகச் சொல்லப்பட்ட சில விசயங்கள் மட்டும் புரிந்தால் போதுமானது. ஆனால் வாசித்த அனைவருக்கு புரிந்திருக்கும் பட்சத்தில், மிகவும் மகிழ்ச்சியடையும் நபராக நான் இருப்பேன்.

மேலுமொரு பிற்குறிப்பு: இந்தத் தொடரை எழுதுவதற்காக நான் மிகவும் உழைக்க வேண்டியிருக்கிறது. இதற்காக நான் செலவிடும் நேரம் மிக அதிகம். இந்த உழைப்பைச் சிலர் கவனத்தில் கொள்ளாமல், எனது ஆக்கத்தை அப்படியே தழுவி, தங்களுக்கான இடங்களிலும், தொலைக்காட்சியிலும் வெளிக்கொண்டு வருவதாகத் தெரிகிறது. குறைந்தபட்சம் இந்தத் தொடரிலிருந்து தகவல்கள் பெறுமிடத்தில் எங்கிருந்து பெற்றோம் என்ற விளக்கத்தையாவது அவர்கள் கொடுக்கலாம். இதை நிச்சயம் அவர்கள் புரிந்துகொள்வார்களென்று நம்புகிறேன்.



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
avatar
Guest
Guest

PostGuest Mon Nov 26, 2012 11:27 am

மேலுமொரு பிற்குறிப்பு: இந்தத் தொடரை எழுதுவதற்காக நான் மிகவும் உழைக்க வேண்டியிருக்கிறது. இதற்காக நான் செலவிடும் நேரம் மிக அதிகம். இந்த உழைப்பைச் சிலர் கவனத்தில் கொள்ளாமல், எனது ஆக்கத்தை அப்படியே தழுவி, தங்களுக்கான இடங்களிலும், தொலைக்காட்சியிலும் வெளிக்கொண்டு வருவதாகத் தெரிகிறது. குறைந்தபட்சம் இந்தத் தொடரிலிருந்து தகவல்கள் பெறுமிடத்தில் எங்கிருந்து பெற்றோம் என்ற விளக்கத்தையாவது அவர்கள் கொடுக்கலாம். இதை நிச்சயம் அவர்கள் புரிந்துகொள்வார்களென்று நம்புகிறேன்.
--

பாடகன் நன்றி

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Dec 05, 2012 8:13 am

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Photo%201
பேரண்டம் (Universe) உருவாகிய 'பிக்பாங்' கணத்தை ஒரு கணிதச் சமன்பாட்டின் மூலமாக நிரூபிப்பதற்கு இயற்பியலாளர்கள் முயல்கின்றனர். பிக்பாங் வெடிப்பின் கணத்தைக் 'கடவுளின் கணம்' என்று சொல்வார்கள். அண்டத்தைப் படைத்தது கடவுள் என்றால், அவர் அதை ஒரு கணிதச் சமன்பாட்டின் மூலமாகத்தான் படைத்திருக்க வேண்டும். 'The whole Universe is nothing but mathematical equations'. கண்டுபிடிக்கவே முடியாது என்று நினைத்திருந்த அந்தக் கணிதச் சமன்பாடு, 'ஸ்ட்ரிங் தியரி' என்னும் ஒரு கோட்பாட்டின் மூலம் கண்டுபிடிக்கப்படும் நிலைக்கு வந்தது. அணுமுதல், அண்டம் வரை இசைக்கருவிகளில் இருக்கும் இழைகள் (Strings) போல அதிர்ந்து கொண்டிருக்கின்றன என்று ஸ்ட்ரிங்க் தியரி சொல்கிறது. நவீன இயற்பியலில் இந்தப் பேரண்டம் முழுவதுமே ஒரு சிம்ஃபனி (Symphony) போல இசை வடிவம் பெற்றிருக்கிறது. இதை விளக்குவதுதான் ஸ்ட்ரிங் தியரியாகும். ஸ்ட்ரிங் தியரி மூலம் மொத்தமாக ஐந்து வெவ்வேறு கணிதச் சமன்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் உண்மையில் இருக்க வேண்டியது ஒரே ஒரு கணிதச் சமன்பாடு மட்டுமே. எப்போதும் உண்மை என்பது ஒன்றாகத்தான் இருக்க முடியும். ஒரு சிக்கலுக்குத் தீர்வாக ஐந்து உண்மைகள் இருக்க முடியாது. எதற்காக ஐந்து கணிதச் சமன்பாடுகள் உருவாகின என்பதை ஆராய்ந்தனர். அப்போது 'எம் தியரி' என்னும் புதுக் கோட்பாடு பிறந்தது.

எம் தியரியின் மூலம் நமது அண்டம், நாம் இதுவரை நினைத்தது போல மூன்று பரிமாணங்களைக் கொண்டதல்ல, அதைவிட அதிக பரிமாணங்களை உடையது என்ற சந்தேகம் தோன்றியது. ஸ்ட்ரிங் தியரியால் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்து சமன்பாடுகளும் ஐந்து வெவ்வேறான பரிமாணங்களுக்குச் சொந்தமானவை என்ற முடிவுக்கு இந்தச் சந்தேகம் இட்டுச் சென்றது. இதைத் தொடர்ந்து ஆராய்ந்ததில், ஏற்கனவே அண்டவெளிக்குச் (Space) சொந்தமான மூன்று பரிமாணங்களுடன், காலம் (Time) ஒரு பரிமாணமாக எடுக்கப்பட்டு நான்கு பரிமாணமாகியது. அவற்றுடன் ஸ்ட்ரிங் தியரியின் ஐந்து பரிமாணங்களும் சேர்ந்து ஒன்பது பரிமாணங்களாகின. பின்னர் மேலதிக இரண்டு பரிமாணங்கள் சேர்க்கப்பட்டு பதினொரு பரிமாணங்கள் அண்டத்துக்கு உண்டு என்ற முடிவுக்கு இயற்பியலாளர்கள் வந்தார்கள். இதில் 'சிறப்பு ஈர்ப்புவிசை' (Super Gravitational force) பதினோராவது பரிமாணமாகும். 

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Photo%202

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Photo%203%20

மனிதனால் மூன்று பரிமாணங்களில் மட்டும்தான் பிரயாணம் செய்ய முடியும். அதற்கு மேலே உள்ள பரிமாணங்களைக் கற்பனை கூடச் செய்ய முடியாது. உதாரணமாக 'க்யூப்' (Cube) என்று சொல்லப்படும் முப்பரிமானச் சதுரப் பெட்டியை நீங்கள் கண்டிருப்பீர்கள். அது போல, நான்கு பரிமாணமுள்ள 'ஹைப்பர் க்யூப்' (Hypercube) என்பதையும் வடிவமைத்திருக்கிறார்கள். ஆனால் ஹைப்பர் க்யூபின் வடிவம் இதுதான் என்று உங்களால் முடிவுக்கு வரமுடியாதபடி அதன் வடிவம் அமைந்திருக்கும். 'க்யூப்' (Cube) என்னும் பெயரில் ஹாலிவூட்டின் ஒரு ஆங்கிலத் திரைப்படம் வெளிவந்தது. அந்தப் படம் வெற்றிபெற அதன் இரண்டாம் பகுதியை 'ஹைபர் க்யூப்' (Hypercube) என்னும் பெயரில் எடுத்திருக்கிறார்கள். இந்த இரண்டு படங்களையும் நீங்கள் பார்க்கும் போது ஹைபர் க்யூப் என்பது பற்றிய ஒரு புரிதல் உங்களுக்கு உருவாகலாம். 

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Photo%204

நாம் இருக்கும் அண்டம் பதினொரு பரிமாணங்களைக் கொண்டது என்று சொல்லப்படுவது ஒரு கோட்பாடாகத்தான் எடுக்கப்படுகிறது. நிரூபிக்கப்படாமல் இருக்கும் உண்மைக்குச் சமீபமான முடிவுகள் கோட்பாடுகள் (Theory) எனப்படும். ஆனால் நிரூபிக்கபட்ட உண்மைகள் விதிகள் (Law) எனப்படும். விதிகள் அனைத்தும் (தலைவிதியல்ல) கணிதச் சமன்பாடுகளால் நிரூபிக்கப்பட்டவை. கணிதச் சமன்பாடுகள் என்றுமே உண்மையானவை. மாறாத தண்மை கொண்டவை. இயற்பியலும், கணிதவியலும் இணைந்து பல விதிகளை உருவாக்கியிருக்கின்றன. நியூட்டனால் சொல்லப்பட்டவை விதிகளாக, கணிதச் சமன்பாடுகளாக இன்றுவரை மாறாமல் இருக்கின்றன. அதுபோல, பதினொரு பரிமாணங்கள் அண்டத்தில் உள்ளன என்பதும் கோட்பாடாக இருந்தாலும், அது ஒரு கணிதச் சமன்பாட்டில் பொருந்தி விதியாக மாறும் சாத்தியம் உண்டு. அதை நோக்கித்தான் இயற்பியலாளர்களின் இன்றைய பயணமும் அமைந்திருக்கின்றது. அந்த ஆராய்ச்சிகளைப் பூர்த்தியாக்குவதற்காகத்தான் சுவிஸ் நாட்டில் உள்ள சேர்ன் (Cern) நகரில் மிகப்பெரிய அணுத்துகள் மோதி (Large Hadron Collider-LHC) ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்.

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Photo%205%20

பரிமாணங்கள் என்னும் போது, எல்லாப் பரிமாணங்களும் ஒன்றுக்கொன்று மிக அருகிலேயே இருக்கின்றன. இதை வார்த்தைகளால் சொல்லும் போது, உங்களால் கற்பனை பண்ணிப் பார்க்க முடியாது. ஆனால் இப்படிச் சிந்தித்துப் பாருங்கள். ஒரு புள்ளியை ஊடறுத்துச் செல்லும் மேல் கீழ் நேர்கோட்டை ஒரு பரிமாணம் என்று சொல்லலாம். அப்படி ஒரு நேர்கோட்டை உங்களால் கற்பனை பண்ணிப் பார்க்க முடியும் அல்லவா? அந்த நேர்கோட்டில் மேலும் கீழுமாக மட்டும் பயணம் செய்யும் ஒற்றைப் புள்ளி போன்ற ஒரு உயிரினம் இயங்கினால், அது ஒரு பரிமாணத்தில் இயங்குகிறது என்று எடுத்துக் கொள்ளலாம். அந்த நேர்கோட்டிற்கு வலமாகவோ, இடமாகவோ ஒரு மில்லிமீட்டர் இடைவெளியில், இடம் வலமாக இன்னுமொரு கோடு உருவாக்கப்பட்டால் அது இரண்டாம் பரிமாணம் ஆகிவிடும். அதாவது முதலாவது பரிமாணத்தின் இடது பக்கத்திலோ அல்லது வலது பக்கத்திலோ ஒரு மில்லிமீட்டருக்கு குறைவான இடத்திலேயே இரண்டாவது பரிமாணம் ஆரம்பமாகிவிடுகிறது. அதே போல, இந்த இரண்டு பரிமாணங்களுக்கு மேலாகவோ, கீழாகவோ ஒரு மில்லிமீட்டருக்குக் குறைவான உயரத்தில் மூன்றாவது பரிமாணம் ஆரம்பமாகிவிடுகிறது. இந்த மூன்று பரிமாணங்களும் மிகச் சிறிய இடைவெளியுடன் அருகருகே இருப்பது போல, நான்காவது பரிமாணமும், ஐந்தாவது பரிமாணமும் அப்படியே பதினோராவது பரிமாணமும் ஒன்றுக்கொன்று மிக அருகிலேயே காணப்படுகின்றன. எல்லாமே நானோ மீட்டர் அளவு இடைவெளிகளில் காணப்படுகின்றன. இந்த இடைவெளிகளுக்குள்ளேயே ஒவ்வொரு பரிமாணத்திலும் வாழ்பவர்கள் மற்ரவர்களைத் தொலைத்துவிடுகிறார்கள். ஒரு பேச்சுக்கு ஏலியன்களில் ஒரு வகையினர் நான்காவது பரிமானத்தில் வாழ்ந்து கொண்டிருந்தால், அவர்கள் நமக்கு மிக அருகில், நம் கைகளில் படும் தூரத்தில்தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் நம்மால் அவர்களைக் காணவே முடியாது. இப்படி ஒவ்வொரு பரிமாணங்களிலும் வாழக்கூடிய ஒவ்வொரு வகையில் ஏலியன்கள் இருக்கலாம். பதினோராவது பரிமாணத்தில் நாம் கடவுள் என்று சொல்லும் சக்தி கூட வாழ்ந்து கொண்டிருக்கலாம். யார் கண்டது? இயற்பியலாளர்கள் கூடப் பதினோராவது பரிமாணத்தை சுப்பர் கிராவிடிக்கு உரிய பரிமாணம் என்று சொல்கிறார்கள். இந்த ஈர்ப்புவிசைதான் அதிர்வுகளாக அண்டம் முழுவதும் இசை போலப் பரவியிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Photo%206



நவீன இயற்பியல் அண்டத்தின் பல பரிமாணங்களை மட்டும் சொல்லிவிட்டு விலகவில்லை. எம் தியரியுடன் சார்ந்து வேறு சில முடிவுகளையும் அது சொல்கிறது. யாரும் நினைத்துப் பார்க்காத முடிவுகளாக அவை இருக்கின்றன. நாம் இதுவரை பேசிக் கொண்டிருப்பது அண்டத்தைப் பற்றியல்லவா? அண்டம் என்பதற்கு ஆங்கிலத்தில் யூனிவேர்ஸ் (Universe) என்பார்கள். அதற்கு ஒருமை என்றே அர்த்தம் உண்டாகிறது. ஆனால் அண்டம் என்பது ஒன்றல்ல, பல அண்டங்கள் (Multiverse) இருக்கின்றன என்று நவீன இயற்பியல் சொல்கின்றது. அத்துடன், எண்ணிக்கையில் முடிவிலியாக அவை அமைந்திருக்கின்றன. கடலில் எத்தனை நீர்க்குமிழிகள் இருக்கின்றனவோ அத்தனை அண்டங்கள் இருக்கின்றன என்றும் சொல்கிறார்கள். இதைக் கேட்கும் போது நமக்குத் தலையே சுற்றும். ஒரு அண்டம் என்பதே கண்டடைய முடியாதபடி பிரமாண்டமாய் விரிந்திருக்க, முடிவிலித் தொகையில் அண்டங்கள் இருக்கின்றன என்று சொல்வதைக் கற்பனை பண்ணிப் பார்க்கவே முடியாது. இந்த ஒவ்வொரு அண்டமும் மற்ற அண்டத்துக்கும் மிக அருகில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். இப்போதும் கூட பிக்பாங்க் போன்ற வெடிப்புகளால் அண்டங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன என்றும் சொல்கிறார்கள். "அட! இதெல்லாம் கொஞ்சம் நவீன அம்புலிமாமா கதைகள் போல இருக்கின்றன" என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இவை அறிவியல் ரீதியாக நிறுவப்படும் கோட்பாடுகள். விளையாட்டுத்தனமாகச் சொல்லப்படுபவை அல்ல. இத்துடன் முடிந்துவிடவில்லை ஆச்சரியங்கள்.

நவீன இயற்பியல் இன்னுமொரு ஆச்சரியத்தையும் சொல்கிறது. உலகில் எதை எடுத்தாலும், அதற்குச் சமனானதும் நேரெதிரானதுமான இன்னுமொன்றும் இருந்தே தீரும். பூமி சம நிலையில் இருக்க வேண்டுமென்றால் இந்த இரட்டைத் தண்மை மிகவும் முக்கியமானது. மனிதனை எடுத்துக் கொண்டாலே வலது இடது என இரண்டு சமபகுதிகளாகவும் நேரெதிராகவும் பிரிக்ககப்பட்டே இருப்பான். நேர் (Plus) என்ற ஒன்றிருந்தால், எதிர் (Minus) என்ற ஒன்று இருந்தே தீர வேண்டும். ஜின் ஜாங், இரவு பகல், புரோட்டான் எலக்ட்ரான், ஆண் பெண், கடவுள் சாத்தான், கிருஸ்து ஆண்டிகிருஸ்து, சொர்க்கம் நரகம், குளிர் வெப்பம் என்று எல்லாமே இரட்டையாகத்தான் இருக்கும். இருக்க வேண்டும். இது போலத்தான் மாட்டர் (Matter) அண்டத்தில் நிறைந்திருப்பது போல. ஆண்டிமாட்டர்களும் (Antimatter) நிறைந்திருக்கின்றன என்கிறார்கள். அணுக்களானாலென்ன, அண்டமானாலென்ன சமச்சீராகத்தான் (Symmetry) எல்லாமே இருக்கின்றன. இதனால்தான் உப அணுத்துகள்களை ஒவ்வொன்றாக விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் போது, அதற்குச் சமச்சீரான இன்னுமொரு துகளையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இதே வகையில் சமச்சீராக இருக்கிறது என்று அறிவியல் வல்லுணர்கள் அடித்துச் சொல்லும் ஒன்றுதான் சமாந்தர அண்டம் (Parallel Universe) என்பதாகும்.

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Photo%207

நமது அண்டத்துக்கு மிக அருகில், நமது அண்டத்தை அப்படியே காப்பியடித்தது போல இன்னுமொரு அண்டம் சமாந்தரமாக இருக்கிறது என்கிறது நவீன இயற்பியல். நான், நீங்கள், உங்கள் பக்கத்து வீட்டு நாய்க்குட்டி எல்லாமே இங்கிருப்பது போல அங்குமிருக்கும். ஆனால் எல்லாமே எதிரெதிராக. இங்கு நீங்கள் இறந்து போனாலும் அங்கு வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். இங்கு கெட்டவனாக இருக்கும் நீங்கள் அங்கு நல்லவனாக இருப்பீர்கள். இதைத்தான் நம்மவர்கள் சொர்க்கம் என்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் அதற்குரிய சாத்தியங்கள் இந்தக் கோட்பாட்டில் உண்டு. இறப்பவர்கள் வேறு ஒரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்னும் ஆன்மீக நம்பிக்கை இதனடிப்படையில் கூட உருவாகியிருக்கலாம். கடவுள், சொர்க்கம் என்று இங்கு நான் சொல்லும் போது, ஆன்மீகத்தை வலியுறுத்துவது போல உங்களுக்குத் தெரியலாம். ஆனால் நான் சொல்ல வருவது அதுவல்ல. அறிவியல் எதை 'அறிவியல்' (பகுத்தறிவு) என்று சொல்கிறதோ, அதை ஆன்மீகம் 'கடவுள்' என்று சொல்லலாம் என்றுதான் நான் இங்கு சொல்ல வருகிறேன். நாம் எதை எப்படிப் பார்க்கிறோம் என்ற நிலைப்பாட்டில் நமது புரிதலுக்கான விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். 

மேலே நான் சொல்லிய ஏதாவது ஒன்றில் 'ஏலியன்' என்று சொல்லப்படும் புத்திசாலி உயிரினம் வாழ்ந்து கொண்டிருக்கலாம். அந்த ஏலியன் நம்மை அடைய அவர்களுக்கான மிகச் சாதாரண ஒரு வாகனத்தில் வந்தும் போகலாம். ஆனால், அதுவே நமக்கு பறக்கும் தட்டுகளாகத் தெரியலாம். பல சமயங்களில் பறக்கும் தட்டுகளைப் பார்ததாகச் சொல்பவர்கள் கூறுவது இதுதான், "பறக்கும் தட்டு சிறிது சிறிதாக வேகமெடுத்து திடீரென மறைந்துவிட்டது" என்பார்கள்.  அப்படித் திடீரென மறையும் இடமாக ஏன் இந்த பரிமாண இடைவெளி இருக்கக் கூடாது? ஏன் அது பரலல் யூனிவேர்ஸாகவும் இருக்கக் கூடாது? தர்க்க ரீதியாகச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். இதுவே ஆன்மீக ரீதியில் கூடப் பொருந்தி வருவதால் எதிர்க்கும் மனப்பான்மை கூட குறைந்திருக்கும். 

இதுவரை நான் மிகவும் சிக்கலான இயற்பியலை ஏலியன்களுடன் தொடர்புபடுத்தி உங்களுக்கு விளக்க முயன்றிருக்கிறேன். நிச்சயம் அது உங்களுக்குப் புரிந்திருக்கும். இந்த வகைகளில் ஏலியன்கள் ஏன் பூமியை நோக்கி வந்திருக்கக் கூடாது என்பதை நீங்கள் சிந்தித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள் என்றே நினைக்கிறேன். 'க்ராப் சர்க்கிள்' என்று சொல்லப்படும் 'பயிர் வட்டங்கள்' உருவாக்கப்படுவதற்கு ஏலியன்கள் காரணமாக இருக்கலாம் என்னும் சந்தேகத்தின் அடிப்படையில் இவற்றையெல்லாம் நாம் விரிவாகப் பார்த்து வந்தோம். ஆனால் நாம் எங்கு ஆரம்பித்தோமோ அங்குதான் நமது முடிவுப் பகுதியையும் அடைய முடியும். ஆகவே மீண்டும் பயிர்வட்டங்களை நோக்கி நாம் செல்லலாம்.

இன்று வரை புதிய பயிர் வட்டங்கள் உலகெங்கும் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. அவற்றின் மர்மங்களும் தொடர்ந்தபடியே இருக்கின்றன. என்ன விதமான புதிய வகைப் பயிர்வட்ட மர்மங்கள் உருவாகின என்று நாம் அடுத்த வாரம் பார்க்கலாம்.




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Dec 05, 2012 8:30 am

உங்கள் பகுதியை படிக்க ஆரம்பித்தால் வேறு எந்த
கவனமும் வரவில்லை, கண்களை வேறு பக்கம் திருப்ப முடியாத அளவிற்கு
அருமையாக இருக்கிறது.
நன்றி நண்பா தொடருங்கள்.


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Dec 05, 2012 9:45 am

vishwajee wrote:உங்கள் பகுதியை படிக்க ஆரம்பித்தால் வேறு எந்த
கவனமும் வரவில்லை, கண்களை வேறு பக்கம் திருப்ப முடியாத அளவிற்கு
அருமையாக இருக்கிறது.
நன்றி நண்பா தொடருங்கள்.
மகிழ்ச்சி நன்றி நண்பரே... நன்றி
தங்களின் அனைத்து பாராட்டும் இக்கட்டுரையின் ஆசிரியர் திரு.ராஜ்சிவா அவர்களையே சாரும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Dec 05, 2012 10:06 am

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Photo%201

வட்டம் என்பது எந்தப் புள்ளியில் ஆரம்பிக்கிறதோ, அந்தப் புள்ளியிலேயே எப்போதும் முடிவடையும். அதுபோல பயிர்வட்டம் பற்றிய இந்தத் தொடரும் எங்கு ஆரம்பித்ததோ அங்குதான் முடிவடைய வேண்டும். உலகம் முழுவதும் பயிர் வட்டங்கள் ஒவ்வொரு வருடமும் உருவாகியபடியே இருக்கின்றன. நான் இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கணத்தில் கூட, உலகில் எங்கோ ஒரு இடத்தில் ஒரு பயிர்வட்டம் உருவாகிக் கொண்டிருக்கலாம். பயிர்வட்டங்கள் உண்மையானவையோ, போலியானவையோ, இன்றுவரை அவை மனிதர்களை அதிசயிக்க வைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. வேற்றுக் கிரகவாசிகளால்தான் (ஏலியன்கள்) பயிர்வட்டங்கள் உருவாகின்றன என்று பலர் திட்டவட்டமாக நம்புகிறார்கள். ஆனால் பயிர்வட்டங்கள் மனிதர்களினால்தான் உருவாக்கப்படுகின்றன என்றும் சிலரால் சொல்லப்படுகிறது.  இவை தொடர்பான உண்மைகளைக் கண்டுபிடித்துச் சொல்ல அரசுகள் ஏன் தயக்கம் காட்டுகின்றன என்பது மட்டும் புரியாத மர்மமாக இருக்கிறது. 'இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?' என்று சாதாரண மக்களே வியக்கும் அளவுக்கு அரசுகள் நடந்து கொள்கின்றன. இந்த உண்மைகளை மக்கள் தெரிந்துவிடக் கூடாது என்பதில்தான் அரசுகள் அதிக அக்கறை காட்டுகின்றன. கண்ணுக்கு முன்னால் நடைபெறும் பயிர்வட்டச் சம்பவங்களுக்கு இதுவரை சரியான விளக்கம் கொடுக்கப்படவில்லை. 

பயிர்வட்டங்கள் மனிதர்களால்தான் உருவாக்கப்படுகின்றன என்று சொல்வதோடு, இதுவரை உருவாக்கப்பட்ட பயிர்வட்டங்கள் போலவே நாங்களும் உருவாக்கிக் காட்டுவோம் என்று சொல்லும் சிலர் கூட, எல்லாப் பயிர்வட்டங்களும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை அல்ல என்பதைத் தயக்கமில்லாமல் ஒத்துக் கொள்கிறார்கள். சில பயிர்வட்டங்கள் எப்படி உருவாகின்றன என்று தங்களால் சொல்ல முடியவில்லை என்பதையும் ஒத்துக் கொள்கிறார்கள். மனிதர்கள் சுயமாக எத்தனை பயிர்வட்டங்களை உருவாக்கினாலும், ஒரே ஒரு பயிர்வட்டமாவது மனிதனால் உருவாக்கப்படவில்லை என்று சொல்லப்பட்டாலே போதுமானது. அந்தப் பயிர்வட்டத்தை உருவாக்கியது எந்தச் சக்தி என்ற கேள்வி அங்கு வந்துவிடுகிறது. அந்தச் சக்தி அமானுஷ்யமாக இருப்பதால், அவை ஏலியனாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிடுகிறார்கள். 

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Photo%202

1980களில் ஆரம்பித்து இன்று வரை தொடரும் பயிர்வட்டச் சரித்திரத்தில் பத்தாயிரத்துக்கு மேலாகப் பயிர்வட்டங்கள் உருவாகியிருந்தாலும்,  2012ம் ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் 125 பயிர்வட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் 69 பயிர்வட்டங்கள் இங்கிலாந்தில் மட்டும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட 69 பயிர்வட்டங்களில் நான்கே நான்கு பயிர்வட்டங்கள்தான் போலியானவை என்று கணித்திருக்கிறார்கள். இங்கிலாந்து தாண்டி உலகம் முழுவதும் உருவாக்கப்பட்ட மிகுதி 56 பயிர்வட்டங்களில், ஐந்து பயிர்வட்டங்களே போலியானவை என்கிறார்கள். 2012 இல் உருவாக்கப்பட்ட பயிர்வட்டங்களில் பெரும்பான்மையானவை சிக்கலான வடிவங்களுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன. மனித டிஎன்ஏ (DNA) முதல் வானியல் அமைவுகள் வரை பல வடிவங்களில் பயிர்வட்டங்கள் உருவாகியிருக்கின்றன. இந்த நேரத்தில் ஒரு கேள்வி அனைவரையும் சிந்திக்க வைக்கிறது. இவ்வளவு சிக்கலான, புத்திசாலித்தனமான, வியக்கும்படியான, பிரமாண்டமான சித்திரத்தை ஒருவேளை மனிதர்கள்தான் உருவாக்கியிருந்தால், அதற்குரிய பாராட்டை எடுத்துக் கொள்ளாமல் ஏன் மறைந்து கொள்ள வேண்டும்? ஒன்று இரண்டு என்றால் சரி. ஆயிரக் கணக்கான பயிர்வட்டங்களை இரவிரவாக உருவாக்கிவிட்டு அவர்கள் ஏன் ஒளித்துக் கொள்ள வேண்டும்? உருவாக்கும் நேரம், அதற்கான செலவுகள் என அனைத்தையும் கவனத்தில் கொள்ளாமல் 30 ஆண்டுகாலமாக மறைவு வாழ்க்கையைப் பயிர்வட்ட உற்பத்தியாளர்கள் ஏன் மேற்கொள்ள வேண்டும்? இதனால் அவர்கள் அடையும் நன்மை என்ன? எதுவும் இல்லையே! 

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Photo%203

இங்கிலாந்தில் ஏன் அதிகப்படியான பயிர்வட்டங்கள் உருவாகின்றன? அப்படி அங்கு என்ன விசேசம் இருக்கிறது என்ற கேள்விகளுக்கு இதுவரை விடை தெரியவில்லை. ஆனால் ஆதிகாலம் முதல் இன்று வரை இங்கிலாந்துக்கும், வட்டவடிவமான அமைப்புகளுக்கும் நிறையவே சம்பந்தம் இருந்து வந்திருந்திருக்கிறது. குறிப்பாகச் சில்பரி ஹில் (Silbury hill), வைல்ட் ஷையர் (Wiltshire), ஹம்ப்ஷையர் (Hampshire), ஆவ்பரி (Avebury) ஆகிய பிரதேசங்களில்தான் அதிகப்படியான பயிர்வட்டங்கள் உருவாகியிருக்கின்றன. இந்த இடங்களைச் சுற்றி வேறு சில ஆச்சரியங்களும் உருவாகியிருக்கின்றன. அந்த ஆச்சரியங்கள் பற்றி நான் இதுவரை உங்களுக்குச் சொல்லலவில்லை. நான்காயிரம் வருசத்துக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட ஆச்சரியங்கள் அவை. இந்த ஆச்சரியங்கள் ஏன், எதற்காக, யாரால் உருவாக்கப்பட்டன என்று இதுவரை தெரியவே இல்லை. அவை வேறு ஒன்றுமில்லை. பயிர்வட்டங்கள் உருவாகிய அதே பிரதேசங்களில் பிரமாண்டமான தோற்றத்தில் உருவாக்கப்பட்ட குதிரைகளின் சித்திரங்கள்தான் அவை. நான்காயிரம் வருடங்களின் பின்னரும் அழியாமல் அப்படியே காட்சிதரும் குதிரைகள் அவை. விதவிதமான வடிவங்களில் வரையப்பட்ட குதிரைகள்.

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Photo%204

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Photo%205

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொத்தமாகப் பத்துக் குதிரை வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நான்காயிரம், இல்லை ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேல் என்று சொல்பவர்களும் உண்டு. அந்த அளவுக்குப் புராதனமான குதிரை வடிவங்கள் ஏன் வரையப்பட்டிருக்கின்றன என்பது தெரியவில்லை. அந்த வடிவங்கள் அனைத்தும் பயிர்வட்டப் பிரதேசங்களிலேயே வரையப்பட்டுள்ளதால் அவற்றுக்கென சிறப்புத் தன்மையும் உண்டாகிறது. பயிர்வட்டப் பிரதேசங்களான இந்த இடங்களில், வெண்கட்டி (Shalk) மண் வகையே காணப்படுகின்றன. இந்த வெண்கட்டித் தரையிலேயே குதிரை உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உருவாக்கப்பட்டிருந்த பத்துக் குதிரைகளில், மூன்று குதிரைகள் 19ம் நூற்றாண்டில் அழிக்கப்பட்டுவிட்டன. எஞ்சியிருப்பவை ஏழு குதிரைகள் மட்டும்தான். இதில் ஆச்சரியம் என்னவென்றால் மாடர்ன் ஆர்ட் வகையில் குதிரைகள் எப்படி வரைவார்களோ, அப்படிச் சில குதிரைகள் வரையப்பட்டிருக்கின்றன. குதிரைகளை வரைவதில் ஆச்சரியம் ஒன்றும் கிடையாது. ஆனால் நூறு மீட்டருக்கும் அதிக அளவுள்ள பிரமாண்டத்தில் அக்குதிரை வடிவங்கள் உருவாக்கப்பட்டிருப்பதுதான் ஆச்சரியம். 

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Photo%206

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Photo%207

இத்தனை ஆச்சரியங்களையும் ஒன்றாக அடக்கிய இங்கிலாந்தின் இந்தப் பிரதேசங்களை ஒன்று சேர்த்து ஆராய்ந்தபோது, அவை எல்லாவற்றுக்கும் இருக்கும் ஒரேயொரு பொதுப் பண்பு இந்த வெண்கட்டி மண்வகை மட்டும்தான். குதிரைகளின் சித்திரங்களும் வெண்கட்டிகளிலேயே அமைக்கப்பட்டிருப்பதால், இந்த வகை மண்ணுக்காகத்தான் ஏலியன்கள் இந்தப் பிரதேசங்களை நோக்கி வருகின்றனவோ என்றும் சிலர் சந்தேகப்படுகிறார்கள். இந்த வெண்கட்டி மண் இருப்பதால் அதற்குக் கீழே இருக்கும் நீர்கூட விசேசத் தன்மையுள்ளதாக இருக்கும் என்கிறார்கள் அவர்கள். இதுவும் ஏலியன்களைக் கவரக் காரணமாக இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். இந்த மண்வகையில் உள்ள இரசாயனம் ஏதோ ஒருவகையில் அவர்களுக்குப் பயன்படுகிறதோ என்றும் சிந்திக்கின்றனர். இது கூட உண்மையாக இருப்பதற்குச் சாத்தியம் உண்டு. யார் கண்டது?  

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Photo%208

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 11 Photo%209
'மிஸ்டரி' என்று சொல்லப்படும் மர்மங்களுக்கு அறிவியல் சரியான விடையைக் கொடுக்காதவரை அது நம்மை ஒரு அமானுஷ்ய சக்தியின்பாலே இழுத்துச் செல்லும். பல மர்மங்கள் விடையளிக்கப்படாமல் உலகம் எங்கும் பரவியிருக்கின்றன. அவற்றுக்கான உண்மையான விளக்கம் நிச்சயம் ஏதோ ஒரு வடிவில் இருந்தே தீரும். அந்த விளக்கம் என்னவென்றுதான் நமக்குத் தெரிந்திருக்கவில்லை. ஒருவேளை அந்த மர்மங்களுக்கான விளக்கங்களைக் கண்டுபிடிக்கும் அளவிற்கு நமது அறிவியல் வளராமல் கூட இருக்கலாம். இதுவரை அப்படிப்பட்ட தன்மையுள்ள ஒரு சில மர்மங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். அவற்றை வாசித்த உங்களுக்கு அவற்றில் சிலவற்றுடன் உடன்பாடுகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் உலகம் எங்கும் அறியப்படாமல் இருக்கும் தகவல்களை உங்களுக்குக் கொண்டு சேர்ப்பது என்பதுதான் என் கடமையாகிறது. இறுதி முடிவு எப்பொழுதும் உங்கள் கையில்தான். இருபத்தியொன்பது வாரங்களாக நான் எழுதியதை சலிக்காமல் வாசித்து வந்த உங்களுக்கு என் நன்றிகள். இந்தத் தொடர் எழுதுவதற்கான முழுச் சுதந்திரத்தையும், உற்சாகத்தையும் தந்த திரு.மனுஷ்ய புத்திரன் அவர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன். அத்தோடு, பல அறிவியல் தகவல்களை உடனிருந்து எனக்குப் பெற்றுத் தந்த என் மகள் யாழினிக்கும் என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன். திரு.மனுஷ்ய புத்திரன் அவர்கள் விரும்பினால், இன்னொரு வித்தியாசமான தொடர் மூலம் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். நன்றி.




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Dec 05, 2012 10:24 am

ஆரம்பம் முதல் இறுதி வரை தொடரை விறுவிறுப்புடனும் அருமையாகவும் கொண்டு சென்ற ஆசிரியர் திரு.ராஜ்சிவா அவர்களுக்கும் உயிர்மை பதிப்பகத்தினருக்கும் ஈகரையில் இத்தொடரை அறிமுகம் செய்து வைத்த அன்பு அண்ணன் கே.பாலா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்... அன்பு மலர் நன்றி அன்பு மலர்
இதுவரை தொடருக்கு சிறப்பான வரவேற்பு அளிந்து தொடர்ந்து பதிவிட உற்சாக படுத்திய ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்... ஐ லவ் யூ





புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 05, 2012 11:14 am

இத்தொடரை தொடங்கிய கே.பாலா அவர்களுக்கும் , பின்பு அதை தொடர்ந்து பதிவிட்ட ரா.ரமேஷ்குமார் அவர்களுக்கும் நன்றிகள் பல .. மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிறப்பான தொடர் மீண்டும் முதல் பகுதி முதல் படிக்க வேண்டும் ..

ஆசிரியர் திரு.ராஜ்சிவா அவர்களுக்கும் உயிர்மை பதிப்பகத்தினருக்கும் நன்றிகள் பல .. நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 05, 2012 11:48 am

இன்னைக்குத்தான் இந்த திரியை பார்த்தேன் பாலா புன்னகை வாவ் ! அற்புதம் பாலா சூப்பருங்க கர்த்தாலேருந்து இதையேத்தான் படித்துக்கொண்டிருக்கிறேன், எழுதும் ராஜ் சிவாவிற்கும் இங்கு அந்த கட்டுரைகளை பதியும் உங்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பாலா புன்னகை நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக