புதிய பதிவுகள்
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_c10 
54 Posts - 40%
heezulia
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_c10 
35 Posts - 26%
Dr.S.Soundarapandian
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_c10 
31 Posts - 23%
T.N.Balasubramanian
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_c10 
305 Posts - 50%
heezulia
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_c10 
182 Posts - 30%
Dr.S.Soundarapandian
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_c10 
21 Posts - 3%
prajai
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு


   
   

Page 9 of 12 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat May 19, 2012 2:10 pm

First topic message reminder :

ராஜ் சிவா !

ஈகரை அன்பர்களுக்கு நன்கு தெரிந்த பெயர் ,,,,

2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' என்ற சுவாரசியமான கட்டுரையின் ஆசிரியர் .
அவர் வேறொரு கட்டுரை தொடரை உயிரோசையில் ஆரம்பித்துள்ளார் அதுதான்

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன"

இந்த கட்டுரை பற்றிய அறிமுகத்தில் ராஜ் சிவா இப்படி குறிப்பிடுகிறார்

நான் எழுதப் போகும் அனைத்தும் உங்களால் நம்ப முடியாதவையாகவே இருக்கும். ஆனால் ஒரு நேரத்தில் நம்ப வேண்டிய கட்டாயங்கள் உங்களுக்கு வந்தே தீரும். இவற்றை நீங்கள் நம்ப வேண்டும், நம்பாமல் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் தாண்டி, இப்படியெல்லாம் உலகில் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியப்படுத்துவதே என் முதல் நோக்கமாக இருக்கிறது.

அப்படி என்ன தான் சொல்லபோகிறார் ராஜ் சிவா!

உங்களோடு அறிய நானும் ஆவல்கொண்டிருக்கிறேன் ..படிப்பதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்

இதோ முதல் பகுதி .......

நன்றி :உயிரோசை






வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Oct 28, 2012 6:40 am

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%201
கடந்தவாரம் விடுபட்டுப் போன நீர்க்கரடி (Tardigrade) பற்றி மீண்டும் சில வார்த்தைகளுடன் இந்த வாரத்தை ஆரம்பிக்கலாம். நீர்க்கரடி, வேற்றுக்கிரக உயிரினமா, இல்லையா என்று கேட்டால், அதற்குப் பதில் தெரியவில்லையென்றே சொல்ல வேண்டும். ஆனால், அந்த உயிரினத்தின் வாழ்வாதார நிலைமைகளில் சில, பூமியில் உள்ள ஒரு உயிரினங்களின் வாழும் முறைக்கு ஒத்ததாக இல்லாமல் இருக்கிறது. பூமியில் பலவிதமான சூழல்களில் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. கடல்நீர், நன்னீர், நிலம், சேற்றுப்பகுதி, காடு, மலை, பனிப்பிரதேசம், பாலைவனம், வெப்பவலயம் எனப் பலவிதமான சூழல்கள் பூமியில் உண்டு. பூமியில் உயிரினம் தோன்றியதிலிருந்து, பூமியில் உள்ள தட்பவெப்ப நிலைகளுக்கேற்ப படிப்படியாக அவை பரிணாம வளர்ச்சியடைந்து, மனிதன் என்னும் அறிவியல் உயிரினம் வரை வந்திருக்கின்றன. பரிணாம வளர்ச்சி (இலங்கையில் பரிணாம வளர்ச்சியைக் கூர்ப்பு என்று சொல்வார்கள் அதாவது ஆங்கிலத்தில் Evolution) என்பது பற்றி ஒரு தெளிவான கோட்பாடு அறிவியலில் உள்ளது. இந்தப் பரிணாம வளர்ச்சிக் கொள்கையின் தந்தையாக சார்லஸ் டார்வின் (Charles Darwin) என்பவர் வர்ணிக்கப்படுகிறார். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர், 20 வருட ஆராய்ச்சியின் மூலம் பரிணாம வளர்ச்சிக் கொள்கையை (Evolution Theory) வெளியிட்டார். டார்வின் பல கோட்பாடுகளை வெளியிட்டிருக்கிறார். அவற்றில் சிலவற்றைத் தற்காலத்தில் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், பரிணாம வளர்ச்சிக் கொள்கை முழுமையாக அறிவியலில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்தப் பரிணாம வளர்ச்சிக் கொள்கைதான் மத நம்பிக்கைகளுக்கும், அறிவியலுக்கும் நேரடியான ஒரு யுத்தத்தை ஏற்படுத்தியது என்று சொல்லலாம். கி.பி.1600 களில் வாழ்ந்த இத்தாலிய அறிஞரான கலிலியோ கலிலி (Galileo Galilei) என்பவரால், பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்ற அறிவியல் உண்மை சொல்லப்பட்டபோது, மத பீடங்களால் வன்மையாக அவர் கண்டிக்கப்பட்டார். அதுவரை பூமியை மையமாக வைத்துத்தான் சூரியனும், சந்திரனும், பிறகோள்களும் சுற்றிவருகின்றன என்று மதநூல்களில் சொல்லப்பட்டதாக உயர்மட்ட மத அமைப்புகள் எடுத்துக் கொண்டு, கலிலியோ சொன்னதை மறுத்தது. அவர் சொன்னது தவறென்று பகிரங்கமாக ஒப்புக் கொள்ளவேண்டும் என அவரை வற்புறுத்தியது. அதன்படியே அவரும் ஒத்துக்கொள்ள வேண்டியும் வந்தது. அதன்பின், நாகரீகம் வளர்ந்த பிற்காலமான 1800 களில் மீண்டும் டார்வினால் மத நம்பிக்கைகளுக்கு எதிரான பரிணாம வளர்ச்சிக் கொள்கை வெளியிடப்பட்டது. மனிதனைக் கடவுள் ஆணாகவும், பெண்ணாகவும் நேரடியாகப் படைத்தார் என்று மத நூல்கள் சொல்லியபோது, "இல்லை, ஒவ்வொரு உயிரினமும் இன்னுமொரு உயிரினத்தின் பரிணாம வளர்ச்சியினால் உருவாகியது. அதுமட்டுமில்லாமல், இந்த வரிசையில் குரங்கிலிருந்து படிப்படியான பரிணாம வளர்ச்சி மூலம் மனிதன் தோன்றினான்" என்று டார்வின் கூறினார். இந்தக் கோட்பாடு அந்த நேரத்து மநநம்பிக்கையை அப்படியே புரட்டிப் போடும்படி இருந்தது. பல ஆண்டுகால ஆராய்ச்சிகளின் அடிப்படையை வைத்து அவர் சமர்ப்பித்த கோட்பாடு அறிவியலால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், இன்றுவரை இந்தக் கொள்கையை ஏற்க முடியாது என்று பல மத நம்பிக்கையாளர்கள் சொல்லியபடியேதான் இருக்கிறார்கள். இதற்கு மத நம்பிக்கையாளர்கள் முன்வைக்கும் முக்கிய வாதம் ஒன்றும் உள்ளது. 'குரங்கிலிருந்து மனிதன் உருவாகியிருந்தால், இப்பொழுது குரங்குகள் எப்படி இருக்க முடியும்? அவைதான் மனிதனாக மாறிவிட்டனவே!' என்பதுதான் அந்த வாதம். கேட்கும்போது சரியானதாகத் தோன்றினாலும், இதற்கும் டார்வின் தனது கோட்பாட்டின் மூலம் பதில் சொல்லியே இருந்தார்.

டார்வின் சொன்ன அந்தப் பதில் நீர்க்கரடியின் தன்மைக்கும் பொருந்தும் என்பதால்தான், டார்வின் பற்றிக்கூட நான் இங்கு இவ்வளவு விவரமாகக் கூறவேண்டியிருந்தது. அதாவது, குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருந்தால், குரங்கு எப்படி இருக்க முடியும் என்பதற்கு டார்வின் சொன்ன விளக்கம் இதுதான். 'ஒரு காட்டில் குரங்குகள் வாழ்ந்து வருகின்றன. அவை அனைத்தும் வாழ்வதற்கும், உண்பதற்கும் தேவையான அளவு பழங்கள் அந்தக் காட்டில் இருக்கின்றன. ஒரு காலகட்டத்தில் அந்தக் குரங்குகள் நன்றாக இனத்தைப் பெருக்குகின்றன. இப்போது காட்டில் உள்ள பழங்கள் அனைத்துக் குரங்குகளுக்கும் போதாத அளவுக்கு குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இந்த நேரத்தில் பலசாலியான குரங்குகள், பலமில்லாத குரங்குகளை உணவைப் பெற முடியாமல் அடித்துத் துரத்துகின்றன. இதனால் பலமில்லாத குரங்குகளுக்கு உணவு கிடைப்பது சிரமமாகின்றது. எனவே அந்தக் குரங்குகள் அந்தக் காட்டை விட்டு வெளியேறி வேறு இடத்துக்குச் செல்கின்றன. வேறு இடங்களுக்குச் சென்ற குரங்குகளுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது. அங்கு பழங்கள் மரத்தில் ஏறிப் பறிக்கவே தேவையில்லாமல், நிலத்திலிருந்தே பெற்றுக் கொள்ளும்படி இருக்கின்றன. அதனால் அந்தக் குரங்குகள் அந்தச் சூழ்நிலைக்கேற்ப மாறத் தொடங்குகின்றன. நிலத்தில் நின்றபடியே பழத்தைப் பறித்து உண்டதால், அவற்றுக்கு வால் என்பது பாவனைக்குத் தேவையில்லாமல் போகத் தொடங்கியது. இதனால் வால் படிப்படியாகச் சுருங்கத் தொடங்குகிறது. வாலில்லாத புது இனக் குரங்கு தோன்ற ஆரம்பிக்கிறது. அதே நேரத்தில் பழைய காட்டில் பழைய குரங்குகள் இன்னும் குரங்குகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. உணவுப் பிரச்சினை மீண்டும் இந்தப் புதுக் காட்டிலும் தோன்றுகிறது. அங்கும் முன்னர் நடந்தது போல பலமில்லாத குரங்குகள் வேறு இடத்துக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை தோன்றுகிறது. இப்படிப் படிப்படியாகக் குரங்குகள் வெவ்வேறு இடங்களுக்குச் சென்றடைந்ததால் இறுதியாக மனித இனம் தோன்றுகிறது. அதேநேரம் பல்வேறு வகையான குரங்கினங்களும் காணப்படுகின்றன. மனித இனத்தைச் சரியாகக் கவனித்தால், ஆரம்பக் குரங்கினங்களை விடப் பலவீனமான ஒரு இனமாகக் காணப்படுவது தெரிய வரும். மனித இனம், குரங்கின் ஒரு கிளை மூலம் உருவாக, குரங்குகளிலும் பல இனங்கள் உருவாகியிருப்பது தெரியவரும்.

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%202
இது போலத்தான் உலகில் உருவாகும், உருமாறும் ஒவ்வொரு உயிரினத்துக்கும் பூமியில் அது எங்கு வாழ்ந்து வந்ததோ, அந்த அடிப்படையிலேயே குணங்களும், உருவங்களும் பரிணாம வளர்ச்சியடைந்திருக்கும். இதையே டார்வினின் கோட்பாடு சொல்கிறது. ஆனால், நான் கூறிய நீர்க்கரடியின் சில குணங்களும், வாழும் தன்மைகளும் பூமியில் எந்த இடத்திலும் இல்லாத ஒரு சூழ்நிலைக்கு ஏற்ப உருவாகியிருக்கிறது. பூச்சியத்துக்கு கீழே -272 பாகை சதம பாகை குளிர் என்பது, பூமியில் எந்த இடத்திலும் இல்லாதது. அதிக வெப்ப நிலையைப் பொறுத்தவரை, பூமியில் பல இடங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த அளவுக்குக் குளிரான சூழ்நிலை உள்ள இடங்கள் பூமியில் எங்கும் இல்லை. அத்துடன், விண்வெளியின் மிகை அமுக்கத்திலும், கதிர்வீச்சுகளிலும் வாழும் உயிரினமாக நீர்க்கரடி இருப்பதும், பரிணாமக் கொள்கைப்படி சாத்தியமில்லாத ஒன்று. நீர்க்கரடிக்கு இந்தத் தன்மை ஏன், எப்படி உருவாகியது? இது ஒரு அசாதாரணமான ஒரு நிலை. இந்த நிலையை, இந்த உயிரினம் எப்படி அடைந்தது? இப்படிச் சிந்திக்கும் போதுதான், இந்த நீர்க்கரடி ஏன் ஒரு ஏலியன் சார்ந்த உயிரினமாக இருக்கக் கூடாது என விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். விஞ்ஞானிகள் இப்படிச் சந்தேகிப்பதற்கு, எழுந்தமானமாக காரணம் இருக்கவில்லை. அதற்கென அவர்களுக்கு ஒரு திடமான காரணம் இருந்தது. அந்தக் காரணம் என்ன என்று சொல்வதற்கு முன்னர் வேறு ஒரு சம்பவத்தைப் பற்றியும் சொல்லிவிடுகிறேன்.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%203
கடந்த வாரம் செவ்வாயில் இருந்து வந்திருக்கலாம் எனக் கருதப்படும் எரிகல்லில், உயிரினப் படிவம் இருந்ததாகச் சொல்லியிருந்தேன். அது போன்று வேறு சம்பவமும் நடந்துதான் இருக்கிறது. நாஸா விஞ்ஞானியான ரிச்சார்ட் ஹூவர் (Dr.Richard Hoover) என்பவர், அலஸ்கா பகுதிகளில் ஆராய்ச்சி செய்தபோது, விண்ணிலிருந்து வந்து விழுந்த எரிகல் ஒன்றைக் கண்டுபிடித்தார். அந்தக் கல்லிலும் அவருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. புழுவினது வடிவத்தில், பூமியில் வாழும் பாக்டீரியாக்கள் போன்ற உயிரினத்தின் படிமத்தை அந்தக் கல்லில் அவர் கண்டுபிடித்தார். இது Cyanobacteria என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு, 'உயிரினம் பூமி தாண்டி வேறு இடங்களிலும் இருக்கிறது என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கிறது' என்று பலர் கருதத் தொடங்கினார்கள். இதன்படி, பூமியில் இப்போது உள்ள உயிரினங்களின் ஆதாரமே வேற்றுக் கிரகங்களிலிருந்துதான் வந்திருக்கும் என்ற புதிய கோட்பாடும் விஞ்ஞானிகள் மத்தியில் பிரபலமாகிவருகிறது. இதுபற்றி விரிவாக எழுதப்பட்ட புத்தகங்கள் பல உண்டு. முடிந்தால் வாங்கிப் படித்துப் பாருங்கள்.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%204
உயிரினங்கள் ஏலியன்கள் சார்ந்தவை என்று விஞ்ஞானிகள் சந்தேகப்படுவதற்கு இன்னுமொரு திடமான காரணமும் உண்டு. இப்போது நான் சொல்லப் போகும் காரணம் கொஞ்சம் அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த ஒன்றாக இருக்கும். வழமை போல, இதை மறுத்தும் ஆதரித்தும் பல கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும், மறுத்துச் சொல்பவர்களின் குரல்கள் மிகுந்த பலகீனமாகத்தான் ஒலிக்கின்றது. இந்தச் சம்பவம் பற்றி விக்கிப்பீடியா கூடத் தவறான தகவலைத் தந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. நான் முன்னர் சொன்னது போல, இது ஒரு ஹாலிவுட் படத்தின் கதையைப் போலவும் உங்களுக்குத் தோன்றலாம். உண்மை, பொய் என்பதை வாசிக்கும் உங்கள் கைகளிலேயே நான் விட்டுவிடுகிறேன். ஆனால் இந்தத் தகவலைச் சொல்ல வேண்டிய அவசியம் மட்டும் எனக்கு உண்டு. இவ்வளவு தூரத்துக்கு நான் ஏன் பீடிகை போட வேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்கள். விசயம் தெரிந்ததும் அதற்கான காரணம் உங்களுக்கே புரியும்.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%205
1930 ம் ஆண்டு அமெரிக்காவில் வாழ்ந்து வந்த மெக்ஸிகோ இனச் சிறுமி, தனது சொந்த இடமான ஷிகுவாகுவாவுக்குச் (Chihuahua) சென்றாள். அங்கு அவள் ஒரு மலைக் குகைக்கு அருகில் வித்தியாசமானதொரு மண்டையோட்டைக் கண்டெடுத்தாள். அந்த மண்டையோடு வழமையான ஒரு மனித மண்டையோடு போல இல்லாமல், மிகவும் வித்தியாசமான வடிவத்தில் இருந்ததை அவதானித்தாள். அந்த மண்டையோடுதான் இப்பொது உலகையே கலக்கிக் கொண்டிருக்கும் 'ஸ்டார் சைல்ட்' (Starchild) என்று சொல்லப்படும் மண்டையோடாகும். மேலே படத்தில் காணப்படும் மண்டையோடுதான் அந்தப் பெண் கண்டெடுத்த மண்டையோடு. அந்த மண்டையோட்டுக்குச் சொந்தக்காரர் மிகவும் குறைந்த வயதுடையவர் என்று ஆராய்ச்சி மூலம் தெரிய வந்தது. சாதாரணமான ஒரு மனிதக் குழந்தையின் மண்டையோட்டையும், நட்சத்திரக் குழந்தையின் (Starchild) மண்டையோட்டையும் மீண்டும் ஒரு முறை ஒப்பீட்டுக்காகத் தருகிறேன் பாருங்கள்.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%206
இந்த மண்டையோட்டை ஆராய்ச்சிக்கு உட்படுத்தியதில், பல விசயங்கள் ஆச்சரியமூட்டுபவையாக இருந்தது. குறிப்பாக, கண்கள் இரண்டும் இருக்கும் குழிகள் மனிதனில் உள்ளவை போலில்லாமல் ஆழமற்றுக் காணப்பட்டன. அப்படி ஆழமில்லாத ஒரு மண்டையோட்டில் மனிதர்களின் கண்கள் அமைந்திருக்கவே முடியாது. அதுமட்டுமில்லாமல், மூக்கின் பகுதிக்கும், வாய்ப்பகுதிக்கும் இடையே கூட மிகவும் வித்தியாசமான தோற்றம் காணப்பட்டது. அந்த மண்டையோட்டின் ஒட்டுமொத்த வடிவமே, மனிதனின் மண்டை யோட்டைப் போல இல்லாமல் வேறாக இருந்தது. அப்படியாயின் இது யாருடைய மண்டை யோடாக இருக்கலாம் என்ற கேள்விக்குப் பதில் தேடி மேலும் ஆராய்ச்சிகள் நடந்தன. ஆராய்ச்சியின் இறுதியில் இது சாதாரன மனிதனின் மண்டையோடே அல்ல என்ற முடிவுக்கு வந்தார்கள். இப்பொழுது உங்களுக்கு வரும் சந்தேகம் ஆராய்ச்சியாளர்களுக்கும் வந்தது. அதாவது, 'சில குறைபாடுள்ள குழந்தைகளின் தலைகள் வித்தியாசமான வடிவங்களில் இருப்பவைதானே! அப்படி ஒரு குறைபாட்டுடன் கூடிய குழந்தையின் மண்டையோடாக ஏன் இந்த மண்டையோடும் இருக்கக் கூடாது?' என்று நீங்கள் நினைப்பது போல, அவர்களிடையேயும் கேள்வி எழுந்தது. அதனால் அவை பற்றியும் தெளிவாக ஆராயப்பட்டது. முடிவு அந்த மண்டையோட்டின் சொந்தக்காரக் குழந்தைக்கு அப்படி ஒரு நோய் இருந்ததற்கான அறிகுறிகளே இல்லை என்று நிரூபணமாகியது. அப்படியென்றால், இந்த மண்டையோட்டுக்குச் சொந்தக்காரர் யார்? அவர் ஏன் இப்படிப்பட்ட வடிவத்தில் இருக்கிறார்? என்று யோசித்தபோது தான், ஏலியன்கள் பற்றிய சந்தேகம் எழத் தொடங்கியது.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%207
'இந்த மண்டையோடு ஒரு ஏலியனுக்குச் சொந்தமாக இருக்குமோ?' என்ற சந்தேகத்துடன் ஆராய்ச்சிகள் நடந்தன. மண்டையோட்டின் வடிவங்கள் பலவிதங்களில் ஆராயப்பட்டன. எதுவுமே மனித மண்டையோட்டுடன் ஒத்துவரவில்லை. ஆனாலும் அது ஏலியனின் மண்டையோடுதான் என்பதற்கு அந்த ஆதாரங்கள் மட்டும் போதுமானவை இல்லையல்லவா? அதனால், நவீன விஞ்ஞான ஆராய்ச்சியான டிஎன்ஏ (DNA) பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அதன் மூலம் கிடைத்த முடிவுதான் கொஞ்சம் தலையைச் சுற்றும் விதமாக இருக்கின்றது. நான் மேலே ஏன் அவ்வளவு பீடிகை போட்டேன் என்பதற்குக் காரணமும், அந்த முடிவை ஒட்டியதுதான். "அப்படி என்ன முடிவுதான் கிடைத்தது?" என்றுதானே கேட்கிறீர்கள்! சொல்கிறேன். அந்த மண்டையோட்டின் டிஎன்ஏ பரிசோதனையின் முடிவில், அந்த மண்டையோட்டுக் குழந்தையின் அம்மா சாட்சாத் பூமியில் வாழ்ந்த ஒரு பெண்தான் என்று தெளிவாகத் தெரிந்தது. ஆனால் அப்பா.......?

அப்பா யாரென்று நிச்சயம் நீங்கள் ஊகித்திருப்பீர்கள். ஆனாலும், அதுபற்றியும், ஸ்டார் சைல்ட் பற்றியும் விபரமாக அடுத்த வாரம் பார்க்கலாம்.......!




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Oct 29, 2012 6:52 am

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%201
வேற்றுக்கிரகவாசிகள் பறக்கும் தட்டுடன் (UFO) பூமிக்கு வந்து சென்றது பற்றியும், பலர் அவற்றை நேரில் கண்டது பற்றியுமான கதைகள் உலகம் முழுவதும் இலட்சக்கணக்கில் இருக்கின்றன். ஏலியன்களைக் கண்டது மட்டுமல்லாமல் ஏலியன்கள், அவர்களது பறக்கும் தட்டுக்கு தங்களை அழைத்துச் சென்று பல பரிசோதனைகள் செய்ததாகவும், தங்கள் உடம்பில் எதையோ செலுத்திவிட்டு அனுப்பியதாகவும் பலர் கதை கதையாகச் சொல்லியிருக்கிறார்கள். இவற்றுகெல்லாம் ஆதாரங்களாகப் புகைப்படங்களும், காணொளிகளும் நிறைந்து போய் இருக்கின்றன. இணையத்தளத்தில் இது பற்றி நீங்கள் தேடினீர்களேயானால் தகவல்கள் நீர்வீழ்ச்சி போலக் கொட்டும். ஆனால் இவையனைத்தையும் ஏதோ ஒரு விதத்தில் போலி என்றே நாஸா போன்றவை மறுத்து வந்தன. படங்களும், காணொளிகளும் கணினிகளாலும், புகைப்பட உத்திகளாலும் உருமாற்றப்பட்டு நம்மை ஏமாற்றுவதற்கு உருவாக்கப்படுகின்றன என்றே அவர்கள் சொல்கிறார்கள். இதில் பிரச்சினை என்னவென்றால், அவர்கள் சொன்னது போல போலியான படங்களும், காணொளிகளும் இருப்பது என்னவோ உண்மைதான். போலிகளை ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்து, அவற்றைப் போலிகள் என்று வரிசையாக நிரூபித்து வந்தபோது, உண்மையாகவும் இருக்கலாம் என்று சொல்லக் கூடியவையும் அந்த அமளியினுள் அமுங்கிப் போய்விடுகின்றன. மொத்தத்தில், 'ஆவிகளுடன் பேசுகிறோம்' என்று சொல்பவர்களை, அதை நம்பாதவர்கள் எப்படிப் பார்க்கிறார்களோ, அந்த நிலையில் இந்த ஏலியன், பறக்கும் தட்டு விசயங்களும் பார்க்கப்படுகின்றன. ஏலியன்கள் பற்றியோ, பறக்கும் தட்டுகள் பற்றியோ பேச ஆரம்பித்தாலே, "இதோ கதை விடுகிறான் பாருங்கள்" என்னும் ஏளனப் பார்வை வந்துவிடுகிறது. ஆனாலும் எல்லாவற்றையும் அப்படித் தட்டிக் கழித்துவிட்டுப் போக முடியாது. நம்பியே தீர வேண்டிய சம்பவங்களுடனும், அவற்றுக்கான ஆதாரங்களுடனும் ஏலியன்கள் வந்தது உண்மைதான் என அடித்துச் சொல்லும் நிலையும் இருக்கத்தான் செய்கிறது. இவற்றை விளக்கிப் பல புத்தகங்களும் வெளிவந்திருக்கின்றன. அவற்றைப் பற்றியெல்லாம் இங்கு நான் சொல்ல ஆரம்பித்தால், இந்தத் தொடர் நீண்டுகொண்டே போய்விடும். அத்துடன் இந்த விசயத்தில் பொறுப்புணர்வுடன் தகவல்களை நான் உங்களுக்குத் தரவேண்டும்.

இந்த ஒரேயொரு காரணத்தினாலேயே மிகுந்த கவனத்துடன் நான் ஆதாரங்களைத் தேடி உங்களுக்குத் தரவிரும்புகிறேன். மிகவும் நம்பிக்கையான, திட்டவட்டமான அறிவியல் காரணங்கள் இருந்தால் மட்டுமே அவற்றை உங்களுக்கு தரவிரும்புகிறேன். நான் தரும் தகவல்களில் கூட தரவுகள் முழுமையாக இருந்தாலும், அவற்றையும் எதிர்க்கும் எதிர்ப்புக் குரல்கள் இல்லாமலும் இல்லை. அதனால் நான் தரும் சம்பவங்களையும், தகவல்களையும் கூட நீங்கள் முழுமையாக நம்பிவிடாமல், சந்தேகப் பட்டியலில் வைத்திருக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.

ஏலியன்கள் என்று சொல்லும்போது, அவை இரண்டு வகையினுள் அடங்கும். ஒன்று பூமி தாண்டி விண்வெளியில் வசிக்கும் உயிரினம். மற்றது பறக்கும் தட்டுகள் மூலமாக பூமியை வந்தடையக் கூடிய அதிபுத்திசாலிகளான உயிரினம். ஆராய்ச்சியாளர்கள் இந்த இரண்டும் உண்டு என்பதைத் திட்டவட்டமாக நம்புகிறார்கள். அயல் கிரகங்களில் சிறிய பாக்டீரியா போன்ற உயிரினங்கள் இருந்திருக்கின்றன என்பதை எரிகற்களின் படிமங்கள் மூலமாக நாம் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. அந்த பாக்டீரியாக்கள் பல மில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்னர் விண்வெளியில் ஏதோ ஒரு இடத்தில் இருந்திருந்தால், அவையும் பூமியில் உள்ள ஜீவராசிகள் போல பரிணாம வளர்ச்சியடைந்து புத்திஜீவிகளாக மாறியிருப்பதற்கு சாத்தியக்கூறுகள் நிறையவே உள்ளது.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%202
கடந்த பகுதிகளில் மெட்ராய்ட்டுகள் மூலமாக உயிரினப் படிமம் பூமிக்கு வந்தடைந்ததைப் பற்றிச் சொல்லியிருந்தேன். அதே போலப் பூமியை வந்தடைந்த இன்னுமொரு மெட்ராய்ட்டின் உயிரினப் படிமத்தைத்தான் மேலே உள்ள படத்தில் நீங்கள் பார்க்கிறீர்கள். இந்த மெட்ராய்ட் 1864ம் ஆண்டு மே மாதம் ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள Orgueil என்னும் இடத்தில் விழுந்தது. விண்வெளியில் இருந்து பூமியின் காற்றுவெளி மண்டலத்தில் இந்த மெட்ராய்ட் நுழைந்தபோது 20 பகுதிகளாக வெடித்துப் பிளந்து பூமியில் விழுந்தது. Orgueil Meteorite என்று அழைக்கப்படும் இந்த எரிகல், 1961ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட போதுதான், அதனுடன் ஒட்டி வந்த உயிரினப் படிவங்களின் அடையாளங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. மெட்ராய்ட்டில் ஒட்டி வந்திருக்கும் பாக்டீரியாக்களை, சியானோ பாக்டீயா வகைகளில் (Cyanobacteria) ஒரு வகை என்று சொல்கிறார்கள். மெட்ராய்ட்டுகள் மூலம் பூமிக்கு வந்து கண்டுபிடிக்கப்பட்ட உயிரினங்கள் இவை மட்டுமல்ல, இன்னும் அதிகம் உண்டு. அவற்றிற்கு உதாரணங்களாக மேலும் சிலவற்றின் விபரங்களையும், படங்களையும் கீழே தருகிறேன்.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%203
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%204
முதலாவது படத்தில் உள்ளது ஆஸ்ரேலியாவின் Murchison என்னுமிடத்தில் 28 செப்டம்பர் 1969 இல் வீழ்ந்த எரிகல்லான Murchison Meteorite. இரண்டாவதாக இருப்பது, முன்னால் சோவியத் யூனியனின் மாநிலங்களில் ஒன்றாக இருந்த கஜகஸ்தான் என்னுமிடத்தில், 1962இல் விழுந்த Efremovka Meteorite. இந்த எரிகற்களில் உயிரினங்களின் படிமம் படிந்திருக்கின்றன. இவையெல்லாம் விண்வெளியில் உயிரினங்கள் வாழ்ந்தன, வாழ்கின்றன என்பதற்கு மாற்றுக் கருத்துகளே சொல்ல முடியாத ஆணித்தரமான சான்றுகள். பூமியில் தற்செயலாக வந்து விழுந்த சில எரிகற்களிலேயே இந்த அளவுக்கு உயிரினங்கள் இருந்தால், பூமிக்கு வராத எத்தனையோ எரிகற்கள் உண்டு. அவற்றில் எவ்வளவு அதிகமான உயிரினங்கள் இருக்க முடியும் என்று நீங்களே கற்பனை செய்து பாருங்கள். அத்தோடு அந்த எரிகற்கள் உருவாகிய கோள்களில் எவ்வளவு இருக்க முடியும்? இந்த அடிப்படையில் சிந்தித்தால், பூமி தாண்டி உயிரினங்கள் வாழ்வது மட்டுமில்லாமல், அவை புத்திஜீவிகளான உயிரினங்களாகவும் இருப்பதற்கும் சாத்தியம் உண்டு என்று நாம் ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது? அப்படிப்பட்ட புத்தியுள்ள ஜீவராசிகளான உயிரினங்கள் பூமிக்கும் வந்தனவா என்று சந்தேகங்கள் ஏற்படுவதும் தப்பில்லையல்லவா? இப்படிச் சிந்திக்கும் நிலையில்தான், கடந்த வாரம் சொன்ன நட்சத்திரக் குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%205
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%206
கண்டெடுக்கப்பட்ட நட்சத்திரக் குழந்தையின் (Starchild) மண்டையோட்டின் வடிவம் மிகவும் வித்தியாசமானதாகக் காணப்பட்டது. அதன் தோற்றம், ஏலியனாக இருக்குமோ என்ற சந்தேகத்தை உருவாக்கியது. ஆனால் எடுத்தவுடன் அப்படி ஒரு முடிவுக்கு வருவது முட்டாள்தனம் என்பதால், அந்த மண்டையோடு ஏன் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறது என ஆராய்ந்தார்கள். அப்போதுதான், ஹைட்ரோசெஃபலி (Hydrocephaly) என்னும் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் தலை இதே வடிவத்தில்தான் இருக்கும் என்ற சந்தேகமும் வந்தது. எனவே முதலில் அதற்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டன. மனிதனின் தலையில் இருக்கும் மூளையின் கார்டெக்ஸ் (Cortex) பகுதியை பாதுகாப்பதற்காக, மூளையைச் சுற்றிலும் செரிப்ரஸ்பைனல் திரவம் (Cerebrospinal Fluid) என்ற ஒன்று இருக்கிறது. இந்தத் திரவம் சில அசாதாரணமான நிலையில், அதன் அழுத்த அதிகரிப்பினால் மண்டையோட்டினூடாகக் கசிந்து குழந்தைகளின் தலையின் வடிவத்தில் மாற்றத்தை உண்டு பண்ணிவிடுகிறது. அப்படி தலையில் மாற்றங்கள் ஏற்படும் குழந்தைகளை ஹைட்ரோசெஃபலி என்று சொல்வார்கள். குழந்தைகளின் மண்டையோட்டின் மென்மையான பகுதிகளில் ஏற்படும் இடைவெளிகளில், அழுத்தம் காரணமாக செரிப்ரஸ்பைனல் திரவம் வெளிவந்து தலையில் இந்த வகையான மாற்றத்தைச் செய்யும். அதனால் இந்த நோயுள்ள குழந்தைகளின் தலையின் வடிவம் ஒரு சீரான அமைப்பில் இல்லாமல் சமச்சீரற்றுக் காணப்படும். ஹைட்ரோசெஃபலி நோய்வாய்ப்பட்ட குழந்தையின் உருவம் இப்படித்தான் இருக்கும்.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%207
ஆனால், ஸ்டார் சைல்ட்டின் மண்டையோட்டை ஆராய்ந்து பார்த்தபோது, அந்த மண்டையோட்டுக்குரிய குழந்தைக்கு நூறுசதவீதம் ஹைட்ரோசெஃபலி நோய் இருக்கவில்லை என்பது தெளிவாகியது. காரணம் ஸ்டார் சைல்டின் மண்டையோடு இருபக்கமும் சமச்சீரான அகலங்களுடன் பெருத்திருந்தது. எந்தப் பகுதி பெருத்திருந்ததோ, அந்தப் பகுதியில் உள்ள மண்டையோடு இறுகிய பகுதியாகவும் காணப்பட்டது. இறுகிய மண்டையோட்டுப் பகுதி மூலமாக ஹைட்ரோசெஃபலி வடிவம் உருவாகியிருக்க முடியாது. ஸ்டார் சைல்ட்டுக்கான அனைத்துச் சோதனைகளும் உலகின் மிகவும் பிரசித்திபெற்ற வைத்தியர்கள் மூலமாகவே செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து பலவிதமான சோதனைகள், எக்ஸ்ரேக்கள் என்பன எடுக்கப்பட்டு அந்தக் குழந்தைக்கு ப்ரோகெரியா (Progeria) என்ற தலையின் வடிவம் மாறும் வேறு ஒரு வகை நோயும் இருந்திருக்கவில்லை என்ற முடிவுக்கும் வந்தனர். ஸ்டார்சைல்ட்டின் மண்டையோடு, சாதாரணமான மனித மண்டையோட்டுடனும் பல கோணங்களில் ஒப்பிடப்பட்டது. ஆனால், எந்தவித முடிவுகளிலும் ஸ்டார்சைல்ட் மண்டையோடு, மனித மண்டையோட்டின் வடிவத்துடன் பொருந்தி வரவேயில்லை. இதுவே முடிவானது என்று அத்தோடு நின்றுவிடாமல் இறுதிப் பரிசோதனையாக டிஎன்ஏ (DNA) பரிசோதனைகளும் செய்யப்பட்டன.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%209
ஸ்டார் சைல்ட் மண்டையோட்டை 1999, 2003, 2010, 2011, 2012 ஆகிய ஆண்டுகளில், பல தடவை டிஎன்ஏ பரிசோதனைகளுக்கு உட்படுத்தினர். மனிதனில் Mitochontrial DNA (mtDNA), Nuclear DNA (nuDNA) என்று இரண்டு வகையான டிஎன்ஏக்கள் உண்டு. இதில் nuDNA என்பது தாயிடமிருந்து செல்வது என்றும் Blast தாய், தகப்பன் இரண்டு பேரிடமிருந்தும் செல்வது என்றும் நம்பப்படுகிறது. இந்த இடத்தில் டிஎன்ஏ பரிசோதனைகள் எப்படி நடத்தப்படுகின்றன என்பது பற்றி சிறிய விளக்கம். ஙிறீணீst என்று அழைக்கப்படும் ஒரு கணினி சாஃப்ட்வேர் மூலம் அதற்குரிய தகவல் மையத்தில் (NIH Database) பதிவுசெய்யப்பட்டிருக்கும் மில்லியன் கணக்கான பரம்பரை அலகுத் தகவல்களை, ஒன்றுடன் ஒன்று வரிசையாக ஒப்பிட்டுப் பார்க்கும்போது, எந்த அளவுக்கு அவை ஒத்துப் போகின்றன என்பதைப் பொறுத்து டிஎன்ஏ பரிசோதனைகளின் முடிவுகள் தெரியவரும். உதாரணமாக இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதனின் எலும்புக்கூடு நமக்குக் கிடைத்தால், அப்படிக் கிடைத்தது மனித எலும்புக்கூடுதானா என்பதைத் தற்கால மனிதனின் டிஎன்ஏ தகவலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். அப்படிப் பார்க்கும்போது, ஒத்துப் போகும் தரவுகளின் விகிதங்களைக் கொண்டு, கிடைத்தது மனிதனின் எலும்புக்கூடுதானா அல்லது குரங்கினத்தின் எலும்புக்கூடா என்று கண்டுபிடிக்கலாம். இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், சாதாரண மனிதனின் டிஎன்ஏயில் சிம்பான்சி, கொரில்லா, எலி என்பனவற்றின் பரம்பரை தடயங்களும் செய்திகளாகப் பதிந்திருக்கின்றன. இவை என்ன என்ன விகிதத்தில் பதிந்திருக்கின்றன என்பதை ஒப்பிட்டுப் பார்த்து மனிதன்தானா என்ற முடிவுக்கு வந்துவிடலாம்.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%2010
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%2011
இந்த அடிப்படையில் ஸ்டார்சைல்ட்டையும் நியூக்ளியர் டிஎன்ஏ (nuDNA) பரிசோதனைக்கு உட்படுத்தி, Blast இன் தகவல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்த போது கிடைத்த முடிவுகள் மிகவும் வியப்பையளித்தது. மில்லியன் கணக்கான தகவல்களில், எந்த ஒரு தகவலும் அதனுடன் ஒத்துப் போகவில்லை(No significant similarity Fond) என்ற பதில் கிடைத்தது. இதன் மூலம் நாம், ஸ்டார் சைல்ட் என்பதே பூமிக்குச் சொந்தமானதல்ல என்ற முடிவுக்கே வரவேண்டி இருக்கிறது. இதுவே முடிந்த முடிவாக நாம் எடுக்க வேண்டும் என்பதில்லை என்றாலும், இந்த முடிவு என்னவோ அறிவியலாளர்களை அசைத்திருப்பது உண்மைதான். அத்துடன், ஸ்டார் சைல்ட் கிடைத்த சில ஆண்டுகளின் பின்னர் ப்ரேசில் நாட்டில் உள்ள உபராபா (Uberaba) என்னுமிடத்தில் ஸ்டார் சைல்ட் போன்றே இன்னுமொரு எலும்புக் கூடும் கிடைத்தது. அது மேலும் அறிவியலாளர்களை அதிர வைத்தது. இப்போது கூட பிரேசில் நாட்டின் மியூசியத்தில் இந்த எலும்புக் கூடு பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%2012
ஏலியன்கள் பூமிக்கு வந்திருக்கின்றனவா என்பதற்கு இவையெல்லாம் சாட்சிகளாக இருந்தாலும், நம்பமுடியாத ஒரு மனநிலையே நம்மிடையே இன்னும் இருக்கிறது. நம் கண்முன்னால் அவை வந்தாலேயொழிய அவற்றை நம்ப மனம் மறுக்கிறது. ஆனால், அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை விண்வெளியில் இருந்து யாரோ வந்ததற்கான செய்திகள் நம்மை அசைத்தபடியே இருக்கின்றன. அதிகம் ஏன், சமீபத்தில் செவ்வாயில் இறங்கிய க்யூரியாசிட்டி, செவ்வாயில் மண்டையோடு ஒன்றைப் படம் பிடித்திருக்கிறது என்றும், அதை நாஸா மறைத்துவிட்டது என்றும் சொல்கிறார்கள். சிலர் அதற்கான ஆதாரத்துடன் படம் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்கள். அப்படி வெளியிட்டவர்களின் நம்பகத்தன்மை பற்றிச் சந்தேகங்கள் இருந்தபோது, ணிஷிகி ESA (European Space Agency) என்னும் ஐரோப்பிய வானியல் கழகம் வெளியிட்டிருக்கும் வேறு ஒரு படத்தில் செவ்வாயில் அடுக்கடுக்காய்க் கட்டடங்கள் தெரிவதாகச் சொல்கிறார்கள்.

இவையெல்லாம் உண்மைதானா? இல்லைக் கட்டுக் கதைகளா? இதற்கான பதிலுடன் அடுத்த வாரம் பார்ப்போமா?




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Nov 04, 2012 7:54 am

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%201
செவ்வாய்க் கிரகத்துக்கு 'க்யூரியாசிட்டி' போய்ச் சேர்ந்தாலும் சேர்ந்தது, அப்போதிருந்து ஏலியன்கள் செவ்வாய்க் கிரகத்தில் இருப்பதற்கான சாத்தியச் செய்திகள், ஒவ்வொரு மூலையிலிருந்தும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. க்யூரியாசிட்டி அனுப்பிய படங்களில் 'அது இருந்தது, இது இருந்தது' என்று பல செய்திகள் தினமும் வருகின்றன. இவைகளில், சிலவற்றில் அர்த்தங்கள் இருந்தாலும், பலவற்றில் அனுமானங்களே அதிகமாக இருக்கின்றன. 'க்யூரியாசிட்டி, செவ்வாயில் மண்டையோடு ஒன்றைப் படம் பிடித்திருக்கிறது' என்றும், அதை 'நாஸா மறைத்து விட்டது' என்றும் சொல்லி, மண்டையோடு போன்ற படம் ஒன்றையும் சிலர் இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். அந்தப் படத்தில் இருப்பது மண்டையோடா? இல்லையா என்பதற்கே தனியாகப் பட்டிமன்றமும் நடத்துகிறார்கள். இது போல, 'ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்' (ESA - European Space Agency) வெளியிட்டிருக்கும் ஒரு படத்தில், அடுக்கு மாடிக் கட்டடங்கள் தெரிகின்றன என்றும் சொல்லப்படுகிறது. இவற்றின் நம்பகத் தன்மைகள் எந்த அளவுக்கு என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் ESA வெளியிட்டிருக்கும் படத்தைப் பார்க்கும்போது, சிÌறிய ஆச்சரியம் நமக்கு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை என்பதும் உண்மைதான். நான் சொல்வது போல, உங்கள் கணினியில் நீங்களே முயற்சித்துப் பாருங்கள். நிச்சயம். ஆச்சரியப்பட்டுப் போய்விடுவீர்கள்.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%202
www.esa.int என்னும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் இணையத் தளத்துக்குச் செல்லுங்கள். அங்கு 'Crater Hale in perspective, looking west' என்பதை சர்ச் (search) செய்யும் இடத்தில் அடித்துத் தேடுங்கள். அதனால் கிடைக்கும் படத்தை Hi-res ஆக உங்கள் கணினியில் பதிவு செய்யுங்கள். அந்தப் படம் மிகவும் ஒளிச்செறிவு அதிகமுள்ள படமாகக் காணப்படும். அதனால் அந்தப் படத்தின் காண்ட்ராஸ்ட்டை மிகவும் குறைத்துக் கொள்ளுங்கள். அப்போது படத்தின் கீழே, இடது பக்கங்களில், நீங்கள் பல வடிவங்களைக் காண்பீர்கள். அந்த வடிவங்கள் அனைத்தும் கட்டடங்கள் போன்ற அமைப்புடன் காணப்படுகின்றன. விதவிதமான அடுக்கு மாடிக் கட்டட அமைப்புகள் போலவும் அவற்றில் சில காணப்படுகின்றன. ESA யின் அந்தப் படத்தையும், அதன் ஒளியமைப்புக் குறைக்கப்பட்ட ஒரு படத்தையும் உங்களுக்காகத் தந்திருக்கிறேன். நன்றாக நிதானமாகப் பாருங்கள். ஏதாவது தெரிகின்றதா? ஆனாலும் நீங்களே படத்தை உங்கள் கணினியில் பதிவுசெய்து, முயற்சிசெய்து பார்த்தால்தான் அதன் நிஜ ஆச்சரியம் புரியும். 
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%203
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%204
இதிலிருந்து ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ளலாம். செவ்வாயில் எது நடந்தாலும் நாம் அதை ஏலியன்களுடன் சம்பந்தப்படுத்தியே பார்க்க விரும்புகிறோம் என்பதுதான் அந்த உண்மை. அதாவது, செவ்வாயில் நம்மை மிஞ்சிய புத்திசாலியான உயிரினம் இருக்க வேண்டும் என்பதை நாம் எதிர்பார்க்கிறோம். இந்த எதிர்பார்ப்புக்குக் காரணங்களும் இல்லாமல் இல்லை. பூமிக்கு ஏலியன்கள் வந்ததைப் பார்த்ததாகப் பலர் சொல்லியிருந்தாலும், அவையெல்லாம் தனிப்பட்ட மனிதர்கள் தாங்கள் ஏலியன்களைக் கண்டதாகச் சொல்லும் சம்பவங்கள்தான். அத்துடன் அந்தத் தனிப்பட்ட மக்கள் அனைவரும் கொடுத்த சாட்சியங்களும், படங்களும் போலியானவை என்று வன்மையாக மறுக்கப்பட்டும் வந்தன. ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி ஏலியன்கள் பற்றிய வேறு பல உண்மைச் சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. ஏலியன்கள் பூமிக்கு வந்தன என்பதை யாருமே மறுக்க முடியாத வகையிலும் பல சம்பவங்கள் நடந்துதான் இருக்கின்றன. ஆனால் அந்த வகை உண்மைச் சம்பவங்கள் அனைத்துமே அரசுகளால் திட்டமிட்டு மறைக்கப்பட்டுவிட்டன. 

எந்த அரசுகள் ஏலியன்கள் இல்லை என்று கூறிப் பல இரகசியங்களை மறைத்தனவோ, அதே அரசுகளின் போலீஸ், இராணுவம், விமானப்படை, கடற்படை போன்ற  படைப்பிரிவுகளில் பணியாற்றிய உத்தியோகஸ்தர்களே ஏலியன்கள் பூமிக்கு வந்ததைக் கண்டதற்குச் சாட்சிகளாகவும் இருக்கின்றனர். இவர்கள் சொல்லும் சாட்சியங்களும், ஆதாரங்களும் அரச ஆவணங்களில் உத்தியோக பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதும் இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியவை. ஆனால், அரசப் படைகளில் இவர்கள் பணியாற்றுவதால், 'அரசாங்க இரகசியங்கள் காக்கப்பட வேண்டும்' என்னும் கட்டளைகளுக்கு உள்ளாகி, பேசமுடியாமல் தடுக்கப்படுகிறார்கள். ஆனால், என்னதான் அவர்கள் தடுக்கப்பட்டாலும், சம்பந்தப்பட்ட படையினர்கள் மூலம் பல ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த இரகசியங்கள் கசிவதை யாராலும் தடுக்க முடியவில்லை. அப்படிக் கசிந்த தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சிகரமானவை. அசைக்க முடியாத சாட்சிகளுடன் வெளிவந்த அந்தத் தகவல்கள், ஏலியன்கள் இருக்கின்றன, அவை பூமிக்கு வந்தன என்பதை மிகத்திடமாக ஊர்ஜிதம் செய்தன. இப்படிப்பட்ட தகவல்கள் தரும் நம்பிக்கைதான், நம்மை செவ்வாயில் ஏலியன்கள் இருப்பதாக ஆதாரங்களைத் தேட வைக்கிறது. 

இதுவரை வெளிவந்த ஏலியன்கள் சம்பவங்களில் இருபது சம்பவங்கள் மிகவும் அதிக நம்பகத்தன்மை வாய்ந்தவையாக இருக்கின்றன. சொல்லப் போனால் இருபது சம்பவங்கள் கூடத் தேவையில்லை. ஒரேயொரு சம்பவம் மட்டுமே ஏலியன்கள் பூமிக்கு வந்தன என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்துவிட்டால், ஏலியன்கள் இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். இதுவரை ஏலியன்கள் பூமிக்கு வந்தன என்று சொல்வதில் ஒருவித நழுவல் தன்மையைக் கடைப்பிடித்து வந்த நானே, ஏலியன்கள் இருக்கின்றன என்பது போல இப்போது எழுதுகிறேன் என்றால் அந்தச் சம்பவங்களைப் பற்றி நீங்களே யோசித்துப் பாருங்கள். அப்படிப்பட்ட சம்பவங்களில் சிலவற்றை உங்களுக்குத் தருகிறேன். ஆனால் அவை வழமையான பறக்கும் தட்டுகளின் கதைகளாக இருக்கப் போவதில்லை. இவை அனைத்துக்கும் திடமான ஒரு பின்புலமும், நம்பகத்தன்மையும், சிறப்பம்சமும் இருப்பதால் மட்டுமே அவற்றை உங்களுக்குத் தருகிறேன்.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%205
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%206
அமெரிக்க நாஸா நிறுவனத்தால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட விண்கலம் ஒன்றின் பெயர்தான் 'ஸ்கைலாப் 3' (Skylab 3). 'அலன் பீன்' (Alan bean), 'ஜாக் லௌஸ்மா' (Jack Lousma), 'ஓவென் காரியட்' (Dr.Owen Garriott) ஆகிய மூவரும் பல நாட்கள் 'ஸ்கைலாப் 3' இல் தங்கியிருந்து விண்வெளியை ஆராய்ச்சி செய்து வந்தனர். 1973ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி இவர்கள் மூவரும் விண்வெளியில் ஒரு அதிசயத்தைக் கண்டனர். சிவப்பு நிறத்தில், ஒளிர்ந்தபடி பூமிக்கு அருகே பறந்த மிகப்பெரிய பறக்கும்தட்டு ஒன்றை அவர்கள் மூவரும் ஒன்றுசேரக் கண்டிருக்கிறார்கள். விண்வெளியில் இருந்து கொண்டு பூமியையும், வானையும் ஆராய்ந்து கொண்டிருந்தவர்கள், தமக்கு மிக அருகிலேயே இன்னுமொரு விண்கலம் வந்த போது, அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அந்தக் காலங்களில் ஸ்கைலாப்தான் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட மிகப்பெரிய விண்கலமாக இருந்தது. 'ஸ்கைலாப் 3' இன் நீளம் சுமார் 150 அடியாகும். ஆனால் இவர்களுக்கு 35 மைல்கள் தொலைவில் கிட்டத்தட்ட 1000 அடிகள் நீளத்தில் மிகப்பெரிய விண்கலமாய் அந்தப் பறக்கும்தட்டு காணப்பட்டது. சுமார் 10 நிமிடங்கள் அவர்கள் பார்வையில் இருந்த அந்தப் பறக்கும்தட்டு நகர்ந்து மறைந்தது.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%207
தங்கள் முன்னால் காட்சிதரும் பறக்கும்தட்டுப் பற்றி உடனடியாக ஹ்யூஸ்டனுடன் தொடர்பு கொண்டு மூவரும் தகவல்களைத் தெரிவித்தனர். காரியட் அந்தப் பறக்கும்தட்டைப் பல தடவை புகைப்படங்களும் எடுத்தார். தகவல்கள் அனைத்துமே ஒலி, ஒளி, புகைப்பட வடிவங்களில் ஆவணமாக நாஸாவில் பதியப்பட்டது. ஆனால், இந்தச் சம்பவத்தை நாஸா 'டாப் சீக்ரெட்' என்னும் வகையில் அடக்கி, இரகசியமாகப் பூட்டிக் கொண்டது. எந்த நாஸா பறக்கும் தட்டுகள் பற்றிய இரகசியங்களை மறைக்கின்றது என்று நாம் சந்தேகப்படுகின்றோமோ, அதே நாஸாவின் அஸ்ட்ராநாட்டுகள் மூலமாகவே பறக்கும்தட்டு பற்றிய இந்தச் சம்பவம், ஃபோட்டோ ஆதாரத்துடன் பின்னர் வெளிவந்தது. இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் ஓய்வு பெற்ற பின்னர் ஆதாரங்களுடன் இந்த இரகசியங்களை வெளியிட்டனர். இவற்றை நாஸா மறுக்க முடியாமல் தற்போது அமைதியாக நிற்கின்றது. பூமியில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருந்தாலாவது ஏதாவது வெளிச்சம் என்று சாட்டுகளைச் சொல்லி மறுத்துவிடலாம். ஆனால் இது நடந்தது யாருமே இல்லாத விண்வெளிப் பிரதேசத்தில். இப்போது அங்கு வந்தது யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்னும் கேள்விகளே எஞ்சி நிற்கின்றன. பதில் தெரியாத இந்தக் கேள்விகளில், அவர்கள் வந்தது மட்டும் மறுக்கவே முடியாத உண்மையாகும். இந்தப் பறக்கும் தட்டின் ஆச்சரியம் நம்மை மிரட்ட, அடுத்ததாக வந்த தகவல் அதைவிட மிரட்டலானது. 

1976ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைந்த விமானப்படைத் தளமான Imperial Iranian Airforce க்கு நூற்றுக் கணக்கானவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்தன. அனைத்து அழைப்புகளும் தாங்கள் மிகப்பெரிய சிகப்பு ஒளியை வானத்தில் கண்டதாகத் தெரிவித்தன. நேரம் நடுநிசி பன்னிரண்டரை மணி. ராடர் திரைகளின் மூலம் அந்த ஒளியை தேடியபோது, வானத்தில் அப்படி ஒன்று பறந்து கொண்டிருப்பது ஊர்ஜிதமாகியது. உடனே விமானப்படைக் கமாண்டர் அதை நோட்டமிடும்படி, F4 விமானம் ஒன்றை அனுப்பி வைத்தார். அந்த ஒளியைத் நெருங்கிய போதுதான், அது ஒரு பறக்கும்தட்டு என்பதை விமானி உணர்கிறார். ஆனால் அதன் பிரகாசமான ஒளியில் பறக்கும் தட்டின் வடிவங்கள் தெரியவில்லை. இதில் இன்னுமொரு ஆச்சரியமும் காத்திருந்தது. மிகவும் தாழ்வாகப் பறந்த அந்தப் பறக்கும்தட்டிலிருந்து பறப்பதற்கான எந்த ஒரு சத்தமும் கேட்கவில்லை. மிக அமைதியாகச் சென்றது அது. தனக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைப்படி விமானத்தைப் பறக்கும்தட்டுக்கு மிகவும் அருகில் கொண்டு சென்றார் விமானி. கிட்டத்தட்ட 25 நாட்டிகல் மைல்கள் தூரத்துக்கு வந்ததும் ஆச்சரியமாக விமானத்தில் உள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளும் பழுதடைந்தன போல செயலிழக்கின்றன. பயந்துபோன விமானி, விமானத்தை, விமானத்தளத்தை நோக்கித் திருப்புகிறார். திரும்பிய சில நிமிடங்களில் அனைத்துக் கட்டுப்பாடுகளும் மீண்டும் தொழிற்பட ஆரம்பிக்கின்றன. உடனடியாக விமானப்படைக் கமாண்டர், இரண்டாவது F4 விமானத்தை அந்தப் பறக்கும் தட்டு நோக்கி அனுப்புகிறார். இரண்டாவது விமானம் அந்தப் பறக்கும்தட்டை நெருங்கிய போது, எந்த விதப் பதட்டமுமில்லாமல் மிகச் சரியாக 25 நாட்டிகல் மைல்கள் இடைவெளி இருக்கும்படி, அந்தப் பறக்கும் தட்டு முன்னே நிதானமாக நகர்கிறது. சிறிது தூரம் சென்ற பறக்கும்தட்டை விமானி நெருங்க முயல்கையில், திடீரென அந்தப் பறக்கும் தட்டின் பெரிய ஒளியில் இருந்து ஒரு சிறிய ஒளி பிரிந்து விமானம் நோக்கி வர ஆரம்பிக்கிறது. விமானி, தனைத் தாக்குவதற்கான ஆயுதம் என்று அஞ்சி விமானத்தைத் திருப்புகிறார். ஆனால் அந்த சிறிய ஒளி விமானத்துக்கு அருகில் வந்ததும் முன்னைய விமானம் போல, இந்த விமானத்தின் கட்டுப்பாடுகள் அனைத்தும் செயலிழக்கின்றன. பயந்தபடி மிக விரைவாக விமானி விமானத்தைச் செலுத்த, மீண்டும் கட்டுப்பாடுகள் கிடைக்கின்றன. அந்தச் சிறிய ஒளி, பெரிய ஒளியுடன் இணைகிறது. 

ஹாலிவூட் திரைப்படமொன்றின் கற்பனை செய்யப்பட்ட கதை போலக் காட்சி தரும் இந்தச் சம்பவம் ராடர்கள், படங்கள், சாட்சிகள் என அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்ட ஒரு சம்பவமாகப் பதியப்பட்டுள்ளது. இதை ஆயிரக்கணக்கான மக்களும் கண்டிருக்கிறார்கள். ஈரான் விமானப்படையின் பல அதிகாரிகள் இந்தச் சம்பவத்துக்குச் சாட்சிகளாகவும் இருக்கின்றனர். அமெரிக்க Defence Inteligence Agency யினால் நான்கு பக்க அறிக்கையாக இது இன்றும் பாதுகாப்பாய் வைக்கப்பட்டிருக்கிறது. அப்போது இருந்த ஈரான் அமெரிக்க சார்பான ஈரானாக இருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதனால், யாருமே மறுக்கவும், மறைக்கவும் முடியாத பறக்கும்தட்டு பற்றிய ஒரு உண்மையாக இந்த சம்பவம் அமைந்து போனது. 

ஏலியன்கள் பற்றி அடுத்து நான் சொல்லப் போகும் சம்பவம் "இந்த உண்மைகள் எப்படித் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன?" என்பதற்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்கும். மிகவும் ஆச்சரியமான அந்தச் சம்பவம் ஒரு சதி போல அமெரிக்க அரசினால் மறைக்கப்பட்டது. இன்று கூட பலரால் விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சம்பவம் அது. அது என்ன சம்பவம்? எப்படி அது மறைக்கப்பட்டது என்று அடுத்த வாரம் பார்க்கலாமா?




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Nov 06, 2012 6:52 am

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%201
'பறக்கும் தட்டுகள் பூமிக்கு வந்தனவா என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா?' என்று ஆராயப் புறப்பட்டாலே, அனைவரும் ஒட்டு மொத்தமாகச் சுட்டிக்காட்டும் சம்பவம் ஒன்று அமெரிக்காவில் நடந்தது. நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல், இது பற்றி ஆராய்பவர்கள் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தி, ஒரு முடிவுக்கு வராமல் செய்தது அந்தச் சம்பவம். அந்தச் சம்பவம், என்ன சம்பவம் என்பதைச் சொல்வதற்கு முன்னர், கடந்த பதிவுகள் சம்பந்தமாகச் சில சந்தேகங்களைக் கேட்டு அனுப்பியுள்ள வாசகர்கள் மணி தனுஷ்கோடிக்கும், துபாயில் வசிக்கும் ஆனந்துக்கும் சிறிய விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. பல கேள்விகளை ஆனந்த் கேட்டிருந்தாலும், முக்கியமான சில கேள்விகளுக்கு மட்டும் பதிலைக் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

1. நீங்கள் குறிப்பிட்ட நீர்க்கரடியின் அரிய தன்மையை பூமியில் வாழும் உயிரினத்தின் மேல் செலுத்தி ஆராய்ச்சி செய்திருக்கிறார்களா? அவ்வாறு செய்திருப்பின் அதில் எந்தளவு மனிதன் வெற்றி பெற்று இருக்கிறான்.


2. மேற்சொன்ன ஆராய்ச்சி வெற்றியடைந்தால் மனிதன் இந்த அண்டசராசரத்தில் இன்னும் என்னென்ன விந்தைகள் செய்வானோ?


3. வேற்றுக் கிரகவாசிகளுடன் மனிதன் திரும்பவும் தொடர்பு கொள்ளவில்லையா? இல்லை அதுவும் மறைக்கப்பட்டுவிட்டனவா?


4. நாம் அனுப்பிய தகவல்கள் வேற்றுக் கிரகம் சென்றடைந்த கால அளவை விட அவர்கள் தொடர்பு கொண்ட கால அளவு மிகக்குறைவு என்ற போது, (அது எப்படி என்று தங்கள் விளக்கங்களைத் தாண்டி) ஏன் மனிதன் அதே முறையில் தொடர்பு கொண்டு இன்னும் பல தகவல்கள் பெற முனையவில்லை? இதற்குப் பின்னால் ஏதோ பெரிதாகப் புதைந்துள்ளதாக எனக்குப் படுகிறது. தங்களுக்குத் தெரிந்ததைப் பகிரும்படி கேட்டுக்கொள்கிறேன்.


'நீர்க்கரடி' (Tardigrade) பற்றிய முதல் இரண்டு கேள்விகளுக்கும் பதில் ஒன்றுதான். நவீனமான இந்த உலகில் அனைத்துமே வியாபாரமாக ஆகிவிட்டன. எந்தத் துறையிலும் எப்படிப் பணம் பண்னலாம் என்னும் ஒரு நோக்கம் மறைமுகமாக வந்துவிடுகிறது. இதில் ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் கூட, விதிவிலக்கில்லை என்று காட்டிக் கொண்டு வருகின்றனர். முன்னர் எல்லாம் ஒரு கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்ததும் மக்களின் பாவனைக்காகவும், பயன்பாட்டுக்காகவும் கண்டுபிடிப்பாளர் அதை வெளிவிடுவது சகஜமானதாக இருந்தது. மக்கள் அதனால் மிகுந்த பயனையும் அடைந்தனர். ஆனால் இப்போதுள்ள வியாபார உலகில், ஒருவர் ஒரு கண்டுபிடிப்பைக் கண்டுடித்தாலோ அல்லது அந்தக் கண்டுபிடிப்பைப் பற்றிய ஆராய்ச்சியை ஆரம்பித்தாலோ, முதலில் செய்வது அதன் காப்புரிமையைப் (Patant) பெற்றுக் கொள்வதுதான். இது ஒரு விதத்தில் தேவையானதும் கூட என்பதையும் இங்கு ஒத்துக் கொள்ள வேண்டும். உலகிலேயே அதிகப் பணம் புரளும் இடங்கள் எதுவென்று பார்த்தால், அது விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மையங்கள்தான். அங்கு அரசுகளும், தனியார் நிறுவனங்களும் கோடிக்கணக்கான டாலர்களைக் கொட்டி ஆராய்ச்சிகளை வழிநடத்துகின்றன. கிருமியிலிருந்து, ராக்கெட் வரை செய்யப்படும் அனைத்து ஆராய்ச்சிகளுக்கும் பணம் கொட்டிக் கொட்டிச் செலவழிக்கப்படுகிறது. அதனால் செய்யப்படும் அல்லது ஆரம்பிக்கப்படும் ஆராய்ச்சிகளை அவர்கள் காப்புரிமை செய்து விடுவதால், அந்த ஆராய்ச்சி முழுமையடையும் வரை, அவை பற்றிய முக்கிய செய்திகள் எவையும் வெளியே வந்துவிடாது. அனைத்தும் இரகசியமாகக் காக்கப்படும். ஆராய்ச்சி வெற்றியடையும் பட்சத்தில் அது வெற்றியடைந்ததாகச் சொல்லப்படும். தோல்வியடைந்தால் தொடர்ச்சியான ஆராய்ச்சிகளுக்கு அவை அமுக்கப்பட்டுவிடும். இந்த நடைமுறை நீர்க்கரடியின் ஆராய்ச்சிக்கும் சாத்தியமாகலாம். அவை பற்றிய ஆராய்ச்சிகள் ஏதோ ஒரு இடத்தில் நடந்துகொண்டே இருக்கும். ஆனால் உண்மையான நிலவரம் வெற்றியின் பின்னரே வெளியிடப்படும். அதற்கு அப்புறம்தான் மனிதன் செய்யப் போகும் விந்தைகளை நாம் அறிய முடியும். ஆனந்தின் மூன்றாவது, நான்காவது கேள்விகளுக்கான பதில்களை இந்தத் தொடரின் இறுதிப் பகுதிகளில் தெளிவாகச் சொல்ல இருக்கிறேன். சொல்லப் போனால் இந்தத் தொடரின் நோக்கமே அவை பற்றிய விளக்கத்தை அளிப்பதுதான்.

அடுத்து மணி தனுஷ்கோடியின் சந்தேகம் இது. அவர் 'டிஎன்ஏ' (DNA) பரிசோதனை பற்றிய ஒரு எளிமையான கேள்வியைக் கேட்டிருந்தார். "டிஎன்ஏ டெஸ்ட்டுகளில் 100 சதவீத ஒற்றுமை கிடைக்க வாய்ப்பில்லையா?" என்பதுதான் அவர் கேள்வி. கேள்வி மிகச் சாதாரணமாக இருந்தாலும், மிகவும் அர்த்தமுள்ளது. அதனால், அதற்குரிய விளக்கமான பதிலை நான் இங்கு கொடுக்க வேண்டும்.

ஒரு 'டிஎன்ஏ' பரிசோதனை என்பதைப் பரிசோதனை என்று சொல்வதை விட, ஒப்பிடுதல் என்றே சொல்ல வேண்டும். ஒரு குற்றம் நடந்தபோது, அந்த இடத்தில் இருக்கும் கைரேகைகளை எடுத்து, கணினியில் பதிந்து வைத்திருக்கும் அனைத்துக் குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்களல்லவா? அது போன்ற ஒரு முறைதான் இதுவும். அதனாலேயே இந்த DNA ஒப்பீட்டுப் பரிசோதனையையும் 'DNA fingerprint Analysis' என்பார்கள். ஆதிகால மனிதன் என்று நம்மால் கண்டுபிடிக்கப்பட்ட, பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மனிதனின் சுவடுகளில் உள்ள பரம்பரை அலகுகள் முதல், சிம்பன்ஸி, கொரில்லா போன்ற உலகின் அனைத்து உயிரினங்களினதும் பரம்பரை அலகுகள், தகவல் நிரல்களாகக் கணினியில் சேர்த்து வைக்கப் பட்டிருக்கின்றன. உதாரணமாக புராதன எலும்புக் கூடொன்று நமக்குக் கிடைத்தால் அது மனிதனுடையதா, குரங்கினுடையதா, ஹோமோ சாபியனுடையதா, ஹோமோ எரக்டஸினுடையதா என்று வித்தியாசப்படுத்திப் பார்க்க அந்தத் தகவல் நிரலின் ஒப்பீடு நமக்கு உதவும். இப்படி ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக, மில்லியன் கணக்கான செய்திகளைக் கொண்ட டேட்டாபேஸை கணினி மூலம் அமைத்திருக்கிறார்கள். அதை இயக்க 'Blast' போன்ற மென்பொருட்களும் உண்டு. ஒரு கற்கால எலும்புக் கூட்டின் தடயம் நமக்குக் கிடைக்கும் போது, அதன் பரம்பரை அலகை எடுத்து, கணினியில் உள்ள அனைத்து தகவல்களுடன் ஒப்பிடும் போது, அந்த எலும்புக் கூடு, யாருடையதுடன் அதிகம் ஒத்துவருகின்றது என்ற முடிவுக்கு நாம் வரலாம். இந்த முடிவுகளில் எப்போதும் நூறு வீதமான ஒற்றுமை இருக்க சாத்தியங்கள் இல்லவே இல்லை. ஒரேயொரு சமயத்தில் மட்டுமே இந்த டிஎன்ஏ பரிசோதனை முடிவு நூறுவீதம் ஒத்துப் போகும்.

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%202
தற்கால மனிதர்களின் செல்லில் மரபணுப பரிசோதனைகளைச் செய்யும்போது, ஆயிரக் கணக்காகப் பதியப்பட்டிருக்கும் அந்தச் செய்திகளில், 90 வீதமானவை தேவையற்ற தகவல்களாகவே இருக்கின்றன.10 வீதமான தகவல்கள் மட்டும் தேவையானவையாகக் காணப்படுகின்றன. ஒரு மனிதனின் DNA வில், அந்த மனிதன் உருவான பரிணாம வளர்ச்சியின் கிளையில் உள்ள விலங்குகள் அனைத்தின் மரபு அடையாளங்களும் செய்திகளாகப் பதிந்திருக்கும். இவற்றில் நூறு வீத தகவல்கள் ஒத்துப் போவது எப்போது என்றால், ஒரு மனிதன் விபத்தினாலேயோ, கொலையுண்டோ இறந்துவிட்டால், அந்த மனிதனின் முகம் சிதைந்து போய், அவன் யாரென்று கண்டுபிடிக்க முடியாத ஒரு நிலையில், முன்னர் எடுத்த அந்த மனிதனின் டிஎன்ஏ பதிவுகள் கிடைத்தால் மட்டும், இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நூறு வீதம் சமமாக இருக்கும். தாயின் கருவில் ஒரே முட்டையில் உருவான இரட்டையர்களுக்கும் இந்த டிஎன்ஏ, 90 சதவிகிதத்துக்கும் அதிகமாகப் பொருந்தி வரச் சாத்தியங்கள் உண்டு. பிள்ளைகள, பெற்றோர்கள், சகோதரர்கள் போன்ற உறவுகளில் ஒற்றுமை குறைந்த வீதத்தில், அடுத்த வரிசையில் வரும். கீழே இருக்கும் படத்தில் பச்சை நிறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டாவது மகளையும் (D2), கடைசிப் பையனையும் (S2) யாரென்று நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்
.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%203
இனி மீண்டும் நாம் பறக்கும் தட்டு சம்பவத்துக்கு வரலாம். அமெரிக்காவின் 'நியூ மெக்ஸிகோ' (New Mexico) மாநிலத்தில் ரோஸ்வெல் (Roswell) என்னும் கிராமத்தில் 2ம் தேதி ஜூலை மாதம் 1947ம் ஆண்டு நடந்த சம்பவத்தைத்தான் பறக்கும் தட்டு வரலாற்றிலேயே யாருமே நம்ப முடியாத சம்பவமாகக் கருதுகிறார்கள். ரோஸ்வெல் பறக்கும் தட்டு மர்மத்தை மூன்று சம்பவங்களாகப் பிரித்துப் பார்க்கும் வகையில், அங்கு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அந்த மூன்று சம்பவங்களையும் உங்கள் வாசிப்புக்காகத் நான் இங்கு தருகிறேன். படித்ததும் நம்பமுடியாத அவற்றை நீங்கள் நடந்ததாக ஏற்றுக் கொள்ளவே போவதில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் அனைத்தையும் சொல்லி முடிக்கும் வரை பொறுமையாகப் படியுங்கள். அந்தச் சம்பவங்கள் நடந்தவை என்ற முடிவுக்குத்தான் அங்கு வெளியான அனைத்துச் செய்திகளும் நம்மை இட்டுச் செல்கின்றன. சம்பவங்கள் மூன்றாக இருந்தாலும், அவை ஒன்றுடன் ஒன்று இணைந்த, ஒரே சம்பவமாகத்தான் கருதுகிறார்கள். இனி அவை பற்றிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பை உங்களிடமே விட்டுவிட்டு சம்பவங்களுக்குச் செல்கிறேன்.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%204
சம்பவம் 1:

மாக் பார்ஸெல் (Mac Barzel) என்னும் 'கௌபாய்' (Cowboy) சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரோஸ்வெல் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இரவு உணவு உண்டு கொண்டிருந்தபோது, இடி போன்ற பேரிரைச்சல் ஒன்றையும் பெரிய வெளிச்சத்தையும் அவதானித்தார். மழை பெய்வதற்காக இடியுடன் மின்னலடிக்கிறது என்ற நினைப்புடன் அவர் இருந்துவிட்டார். ஆனால் அடுத்த நாள் ஏதோ ஒரு விபரீதத்தைத் தான் காணப்போகிறோம் என்று அந்தச் சமயத்தில் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அடுத்த நாள் அவர் குதிரையில் ஆளரவமற்ற பரந்திருந்த வெளியினூடாகச் சென்றபோது, அந்த இடமெங்கும் சூரிய ஒளியில் மின்னியபடி, சிறு சிறு துண்டுகளாகச் சிதறிய நிலையில் பல உலோகத் தகடுகளும், உலோகத் துண்டுகளும் கிடப்பதை அவதானித்தார். 400 அடி அகலத்துக்கும், ¾ மைல் நீளத்துக்கும் இடைப்பட்ட சமவெளியெங்கும், மிக மிக மெல்லிய பாலித்தீன் போன்ற வடிவில், வெள்ளி நிறத்தில் அந்தத் தகடுகள் காணப்பட்டன. அவை ஆயிரக் கணக்கில் எங்கும் சிதறிக் கிடந்தன. தகடுகளுடன், என்னவென்று சொல்ல முடியாத உலோகத் துண்டுகளும் சிதறிக் கிடந்தன. குதிரையில் இருந்து இறங்கிய மாக், அந்த உலோகத் துண்டுகளையும், பாலித்தீன் போன்ற உலோகத் தகடுகளையும் எடுத்துப் பார்த்தார். சுற்றிவர எங்கும் நிலத்துடன் எதுவும் மோதியது போல அடையாளம் இருக்கவில்லை. ஆனால் ஏதோ வெடித்துச் சிதறியிருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. பாலித்தீன் போன்ற அந்த பொருளைக் கையில் எடுத்துப் பார்த்தார். அப்படி ஒரு மென்மையான பாரமற்ற, இலகுவான ஒன்றை அவர் தன் வாழ்நாளில் அதுவரை கண்டதே இல்லை. எடுத்ததைக் கைகளுக்குள் வைத்துக் கசக்கிப் பார்த்த போது, ஒரு அதிசயம் அவரின் கண் முன்னே நடந்தது. அந்தப் பொருள் கசங்கிய பின்னர் தானாகவே மீண்டும் நேராகி பழைய நிலைக்கு வந்தது. கிட்டத்தட்ட ஒரு மெட்டல் தகடு போன்று காணப்பட்ட அந்த பாலித்தீன் பொருள், மிகவும் கடினமான ஒன்றாகக் காணப்பட்டது. அதை அவரால் கிழிக்கவோ, வளைக்கவோ, அதிகம் ஏன் எரிக்கவோ கூட இயலாமல் போயிற்று. அப்போதுதான் அவருக்கு மனதில் அந்த விபரீதப் பயம் தோன்றியது. இது நிச்சயம் பூமிக்குச் சொந்தமான பொருளல்ல என்னும் பயம் அவரைத் தொற்றிக் கொண்டது. பார் பிரேட்ஸெல் உடனடியாக அந்தத் துண்டுகளில் சிலவற்றை எடுத்துக் கொண்டு, அந்த நகரத்து செரீஃபின் உதவியுடன் ரோஸ்வெல் நகரத்து இராணுவத்தின் விமானத் தளத்துக்கு (Roswell Army Airbase) தகவலை அறிவித்தார்.

தகவல் அறிவிக்கப்பட்டதும், விமானங்கள் பற்றிய நுண்ணிய அறிவுடைய மேஜர் ஜெஸ்ஸி மார்செல் (Major Jesse Marcel) என்னும் இளைஞர் தனது லெப்டின்ட்டுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தார். ஜெஸ்ஸி விமானங்களின் விபத்துகள் பற்றிச் சிறப்புப் பயிற்சி பெற்றிருந்தார். சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த ஜெஸ்ஸி அங்கிருந்த உலோகத் துண்டுகளைப் பார்த்து அதிர்ந்துவிட்டார். பல விமானங்களைப் பார்த்த அவருக்கு, அந்தத் துண்டுகள் எந்த விமானத்தின் துண்டுகளோ, அல்லது பூமியில் இருக்கும் வேறு எதனுடையதோ இல்லையென்று உடனே புரிந்து போனது. அவர் உடனடியாக ஒன்றைச் செய்து பார்த்தார். மிக மெல்லியதாக இருந்த அந்தத் தகடுகளில் ஒன்றை எடுத்து, ஒரு சுத்தியலால் அடித்துப் பார்த்தார். அந்தத் தகடு அசைந்துகூடக் கொடுக்கவில்லை. அதில் ஒரு சிறிய கீறல் கூட ஏற்படவில்லை. இத்தனைக்கும் அவர் பாவித்த சுத்தியல் 16 இறாத்தல் எடையுள்ளது. இப்படி ஒரு அதிசயத்தை அவர் கண்டதே இல்லை. இந்தச் சம்பவத்துக்கு மாக்கும், அவருடன் கூட வந்த லெப்டின்டும் சாட்சிகளாக இருந்தார்கள். அங்கிருந்து எடுத்த உலோகத் துண்டுகளில், தகடுகள் மட்டுமல்லாமல், உலோகத் தண்டுகளும் பல காணப்பட்டன. அவற்றில் தன்னால் எடுக்கக் கூடியவற்றை எடுத்துக் கொண்டு இராணுவத் தளத்துக்குச் சென்றார். ஆனால் அவர் செல்லும் வழியில் தனது வீட்டிற்குச் சென்று அந்தப் பொருட்களை தனது மனைவிக்கும், மகனுக்கும் காட்டிவிட்டுச் சென்றார். ஜெஸ்ஸி தன்னுடய மகனிடமும், மனைவியிடமும், "உலகத்தில் இல்லாத ஒரு பொருளை நீங்கள் இப்போது பார்க்கிறீர்கள். மீண்டும் இதைப் பார்க்கப் போவதில்லை" என்று சொல்லியுமிருக்கிறார். அப்போதுதான் அவரது மகன் அந்த உலோகத் தண்டுகளில் இருந்த விசித்திர எழுத்துகளை ஜெஸ்ஸிக்குக் காட்டியிருக்கிறார். அந்த உலோகத் தண்டுகளில், புள்ளிகள் கோடுகளாலான சித்திர எழுத்துகள் போன்றவை காணப்பட்டன. இது அவரை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மறுநாள் ஜெஸ்ஸி கொடுத்த ஆதாரங்கள், தகவல்கள் அடிப்படையில் இராணுவத் தளத்தின் தளபதியான வில்லியம் பிராண்டி (William Brandy) பத்திரிக்கைகளுக்கு பறக்கும் தட்டு ஒன்று ரோஸ்வெல்லில் வீழ்ந்து வெடித்துச் சிதறியிருப்பதாகப் பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டி அமெரிக்காவையே அதிரவைத்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்கள்தான் அமெரிக்க அரசின் மூடி மறைக்கும் தந்திரத்துக்கு ஒரு உதாரணமாக அமைந்தது. இன்றுவரை நாஸாவை உலகமே நம்பாமல் இருப்பதற்குக் காரணமாகவும் அது அமைந்தது. இந்தத் தொடரின் "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?" என்னும் தலைப்புக் கூட இதிலிருந்துதான் புறப்பட்டது என்று கூடச் சொல்லலாம்
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%205
வில்லியம் பிராண்டியின் பத்திரிகைப் பேட்டிக்கு அடுத்த தினமான 8ம் தேதி யூலை மாதம் 1947ம் ஆண்டு, ரோஸ்வெல் நகரமே அமெரிக்க இராணுவத்தால் முற்றுகையிட்டது போலச் சூழப்பட்டது. எங்கும் மிலிட்டரி போலீஸ் என்று சொல்லப்படும் இராணுவத்துக்கே காவலதிகாரிகளாக கடமையாற்றும் இராணுவக் காவல் படையால் சூழப்பட்டது. அதிரடியாக பிரிகேடியர் ஜெனரலான ரோஜர் ரமி (Brig. Gen. Roger Ramey) பத்திரிகைகளை அழைத்து, அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தார். அவர் சமர்ப்பித்த அறிக்கையில், "ரோஸ்வெல் நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வானிலையை அறிய ஏவவிடப்பட்ட பலூன் (Weather Baloon) ஒன்று வெடித்துச் சிதறியது. அதைத் தவறுதலாகப் பறக்கும் தட்டு என்று அவசரப்பட்டு அறிவித்து விட்டோம். தவறுக்கு மன்னிக்கவும். அது பறக்கும் தட்டே இல்லை. சாதாரண பலூன்தான்" என்றிருந்தது. சில மணி நேரங்களிலேயே அனைத்தும் மாறின. எல்லாமே வேறு தடத்துக்குத் திரும்பின.

இங்கு முக்கியமாகச் சொல்ல வேண்டிய விசயம் ஒன்று உண்டு. மேலே கூறிய ரோஸ்வெல் பறக்கும் தட்டு மர்மத்தில் சம்மந்தப்பட்ட அனைவரும் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்கள். வாழ்க்கையிலும், பதவியிலும் நல்லதொரு இடத்தில் இருந்தவர்கள். பறக்கும் தட்டு சம்பந்தமாக அவர்களில் ஒருவர் பொய் சொல்லியிருக்கலாம். ஆனால் ஒருவரோடு ஒருவர் சம்பந்தமே இல்லாத பல நபர்கள் கூட்டுச் சேர்ந்து அப்படி ஒரு கதையைச் சொல்லியிருக்க முடியுமா? கதை இத்துடன் முடிந்துவிடவில்லை. காற்று நிறைந்த பையை ஒரு பக்கம் அழுத்தும்போது, அது மறு பக்கத்தில் பீறிட்டு வெளியே வரத் துடிக்குமே அது போல, ரோஸ்வெல் சம்பவம் வேறு ஒரு வடிவத்தை எடுத்தது. அந்த வடிவம் இன்னும் மோசமான வடிவமாக இருந்தது. இதுவரை நாம் அறிந்ததே மலைப்பாக இருக்க, இது அதைவிடப் பெரிய மலைப்பைத் தந்தது. ரோஸ்வெல் பறக்கும் தட்டின் இரண்டாவது சம்பவம் அது.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%206
மாக் பார்ஸெல் வெடித்துச் சிதறிய துண்டுகளைக் கண்ட அதே தினங்களில், பார்னி பார்னெட் (Barney Barnett) என்னும் எஞ்சினியர், நியூ மெக்ஸிகோவின் இன்னுமொரு இடத்தில் கீழே விழுந்த ஒரு ஒரு மிகப்பெரிய பொருளைக் கண்டார். அவர் கண்டது என்ன தெரியுமா? பறக்கும் தட்டேதான். முழுமையான பறக்கும் தட்டு ஒன்று பூமியில் விழுந்து கிடந்ததை பார்னி கண்டார். அது மட்டுமில்லை அந்தப் பறக்கும் தட்டுக்கு அருகே, கீழே இறந்து விழுந்த நிலையில் அவர் எதைக் கண்டார் தெரியுமா? 'ஏலியன்' என்று சொல்லப்படும் வேற்றுக் கிரக மனிதனின் முழு உடலை. "பூவைத்தான் காதில் வைப்பார்கள். நான் பூச்சாடியையே உங்கள் காதில் வைக்கப் பார்க்கிறேன்" என்று நீங்கள் நினைக்கிறீர்கள் அல்லவா? ஆனால் இவையெல்லாமே உண்மையென்றுதான் சம்பவங்கள் அனைத்தும் சொல்கின்றன.

இரண்டாவது சம்பவத்தில் கண்ட ஏலியனுக்கும், முதல் சம்பவத்துக்கும் சம்பந்தம் உண்டா? முதல் சம்பவத்தில் அதன் பின்னர் என்ன நடந்தது? உண்மையில் இரண்டாவது சம்பவத்தில் ஏலியனை பார்னி கண்டாரா? அந்த ஏலியனுக்கு அப்புறம் என்ன நடந்தது? அந்த மூன்றாவது சம்பவம் என்ன? என்னும் கேள்விகளுக்கான பதிலுடன் அடுத்த வாரம் சந்திப்போம்
.



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Nov 06, 2012 10:11 am

இத்தொடர் இப்பொழுது தான் படிக்க ஆரம்பித்தேன், மிகவும் சுவாரசியமாக உள்ளது.
பகிரும் பாலா சாருக்கு மிக்க நன்றி...




சதாசிவம்
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Nov 08, 2012 1:19 am

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%201

இல்லாத ஏலியன்களையும், பறக்கும் தட்டுகளையும் இருப்பது போல, நான் கதை சொல்வதாகப் பலர் நினைக்கலாம். ஹாலிவுட்டில் படமெடுப்பவர்கள் கதையளப்பது போல, நானும் உங்களிடையே கதையளக்கிறேன் என்றும் நீங்கள் நினைக்கலாம். ஆனால் மீண்டும் மீண்டும் மீண்டும் நான் வலியுறுத்திச் சொல்வது இதுதான். நானும் உங்களைப் போல, அறிவியலை முழுமையாக நம்பும் ஒருவன்தான். எந்த ஒரு சூழ்நிலையிலும் மூட நம்பிக்கைகளுக்கு இடம் கொடுப்பவனல்ல. ஆனால் இப்போது ஏலியன்கள் இருக்கின்றன என்று நான் எழுதுவது, மூட நம்பிக்கையாக, முரண்பாடாய் உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் இன்று அறிவியலில் மிக உச்சத்தில் இருக்கும் ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking) முதல், அனைத்து விஞ்ஞானிகளும் ஏலியன்கள் உண்டு என்று உறுதியாகச் சொல்கிறார்கள். ஏலியன்கள் இருப்பதை எந்த ஒரு விஞ்ஞானியும் மறுக்கவில்லை. ஏலியன்கள் பூமிக்கு வந்தனவா என்பதில்தான் இப்போது பிரச்சினைகள். ஆனால் நான் சொல்லும் சம்பவங்கள் அனைத்தும், பூமியில் ஏலியன்கள் வந்ததற்குச் சாட்சிகளாக நடந்தவை. அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சாட்சிகள் என்று நான் சொல்வது தனிமனித சாட்சிகளையல்ல. பலர் சேர்ந்த கூட்டமான சாட்சிகள். அத்துடன் அந்தச் சாட்சிகள், அரசின் மிக முக்கியமான பதவிகளில் இருப்பவர்கள். மதிக்கப்படும் பிரஜைகள்.

இந்த வகையில் பறக்கும் தட்டு விவகாரத்தில் உலகையே அதிர வைத்த சம்பவம்தான் ரோஸ்வெல் (Roswell) பறக்கும் தட்டு மர்மம். ஐநூறுக்கும் அதிகமான, ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாதவர்களைச் சாட்சிகளாகக் கொண்ட சம்பவம் அது. ஒருவர் பொய் சொல்லலாம், இருவர், மூவராவது ஒன்று சேர்ந்து பொய் சொல்லலாம். ஐநூறு பேர் பொய் சொல்வார்களா? அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அனைத்தையும் இன்று வரை தெளிவில்லாமல், ஒரு முடிவுக்கு வரமுடியாமல் மர்மத்திலும், குழப்பத்திலும் வைத்திருக்கும் ரோஸ்வெல்லைப் பற்றி நம்மவர்கள் யாரும் அறிந்திருக்கவில்லை என்பதுதான் மிகுந்த வேதனையானது. இது பற்றி ஆயிரக் கணக்கான புத்தகங்களும், பல திரைப்படங்களும் கூட வந்துவிட்டன. ரோஸ்வெல் பறக்கும் தட்டுச் சம்பவம் பற்றிய டாக்குமெண்டரி வராத அமெரிக்க, ஐரோப்பியத் தொலைக்காட்சி நிறுவனங்களே இல்லை என்று சொல்லலாம். உலகப் பிரசித்திபெற்ற 'டைம்' (Time) இதழ் போன்ற பிரபலமான அனைத்து இதழ்களிலும், பத்திரிகைகளிலும் ரோஸ்வெல் பற்றித் தெளிவான கட்டுரைகள் வந்திருக்கின்றன. அதிகம் ஏன், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'லாரி கிங்' (Larry King) டாக் ஷோவில் கூட இது பற்றிப் பேசிச் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்கள். ஹாலிவுட்டில் சார்ளி ஷீனின் (Charly Sheen) அப்பாவான மார்ட்டின் ஷீன் (Martin Sheen) நடித்து வெளியான 'Roswell, the UFO Cover-up' என்னும் படம் அதில் பிரபலமானது. அதுமட்டுமல்ல, 'Roswell' என்ற பெயரில் 1999ம் ஆண்டிலிருந்து 2002ம் ஆண்டு வரை, தொலைக் காட்சித் தொடர் ஒன்று வெளியாகிச் சக்கை போடு போட்டது என்றால் பாருங்கள். இவை இப்படியிருக்க, நமது நாட்டில் இந்தத் தகவல்கள் எதுவும் பெரும்பான்மையானவர்களுக்குத் தெரிந்திருக்கவேயில்லை. இப்போது அது பற்றி நான் சொல்லும்போது, புதிதாகக் கதை விடுவது போல நினைக்கிறார்கள். இன்னுமொன்றையும் நான் சொல்லிவிட வேண்டும். இதுவரை நான் விட்ட கதையாவது பரவாயில்லை. இனிமேல் நான் விடப் போகும் கதைதான் மிகப் பயங்கரமானது. அதற்கு உங்களைத் தயார் படுத்துவதற்காகவே இவ்வளவு எழுத வேண்டியிருக்கிறது. இனி நாம் ரோஸ்வெல்லுக்குச் செல்லலாம்.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%202
கடந்த வாரம் ரோஸ்வெல்லில் நடந்ததாகச் சொல்லிய 'சம்பவம் 1' இல், பிரிகேடியர் ஜெனரலான ரோஜர் ரமி (Birg.Gen.Roger Ramey), விழுந்து வெடித்தது பறக்கும் தட்டு அல்ல, வானிலை ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தும் பலூன்தான் என்று சொன்னாரல்லவா? அப்படிச் சொல்வதற்குச் சற்று முன்னர் அமெரிக்க அரசினால் அரங்கேற்றப்பட்ட நாடகத்தைப் பார்ப்போமா....?

வானிலை ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட பலூன், ரோஸ்வெல்லில் வெடித்துச் சிதறியது என்ற கதை பிரிகேடியர் ஜெனரல் ரோஜர் ரமியால்  வெளியிடப்பட்டது. ஆனால் இந்தக் கதையை யாருமே நம்பவில்லை. இரண்டாம் உலக யுத்தங்கள் நடந்து ஓய்திருந்த வேளையென்பதால், மக்கள் இதைத் தட்டிக் கேட்கும் நிலையில் இருக்கவில்லை. ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல, அமெரிக்காவில் நிலைமைகள் சீரடைந்து கொண்டு வந்த நேரங்களில் ரோஸ்வெல் பற்றிய உண்மையை வெளியிட வெண்டும் என மக்கள் கேட்கத் தொடங்கினர். வெள்ளை மாளிகைக்கு முன்னால், ஆர்ப்பாட்ட முறையில் மக்கள் போராட்டங்களும் நடத்தப்பட்டன. ஊடகங்களும் தொடர்ச்சியாக இது பற்றிப் பேச ஆரம்பித்தன. இதனால், 47 வருடங்களுக்குப் பின்னர், 1994ம் ஆண்டு ரோஸ்வெல் சம்பவத்துக்குப் புதிதாகக் கதையொன்று தயார்படுத்தப்பட்டது. சாதாரண வானிலை பலூன் என்பது எடுபடவில்லையென்பதால், சோவியத் ரஷ்யாவின் அணுகுண்டு ஆராய்ச்சிகளை உளவு பார்ப்பதற்கென மிகவும் விசேசமாக வடிவமைக்கப்பட்ட பலூன், 1947ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்றும், ராடார் சாதனங்களில் அகப்பட முடியாதபடி அது இருந்தது என்றும் சொன்னார்கள். அப்படி ரஷ்யாவை பலூன் மூலம் உளவு பார்ப்பதை 'ஆபரேசன் மொகுல்' (Operation Mogul) என்ற பெயரில் அழைத்ததாகவும் அந்தப் புதுக்கதையில் சொன்னார்கள். அப்படிப்பட்ட பலூனைப் பறக்கவிட்டுப் பரீட்சிக்கும் போதுதான் அது சாதனங்களுடன் வெடித்துச் சிதறியது என்றார்கள். 

மேஜர்.ஜெஸி மார்செல் (Jesse Marcel) வெடித்துச் சிதறியிருந்த துண்டுகளில் தன்னால் எடுக்கக் கூடியவற்றை எடுத்துக் கொண்டு இராணுவத் தளத்துக்குச் சென்றார். போகும் வழியில் தனது மனைவிக்கும், மகனுக்கும் (ஜூனியர் ஜெஸி மார்செல்) அவற்றைக் காட்டிவிட்டுச் சென்றார். பின்னர் அவற்றை முறைப்படியாக இராணுவத் தளத்தில் ஒப்படைத்தார். அதன் பின்னர்தான் வில்லியம் பிளாஞ்சார்ட் (William Blanchard) என்னும் இராணுவத் தள அதிகாரி பத்திரிகைகளுக்குப் பறக்கும் தட்டுப் பற்றிப் பேட்டி கொடுத்தார். இந்தப் பேட்டியினால் அமெரிக்க அரசு அதிர்ந்து போனது. உடனடியாக, பெரும்படை மிலிட்டரிப் போலீஸ் ரோஸ்வெல்லுக்கு அனுப்பப்பட்டது. பிளாஞ்சார்ட்டால் கொடுக்கப்பட்ட பேட்டியை எப்படி மறுக்கலாம் எனத் திட்டங்கள் தீட்டப்பட்டன. முதலில், சம்பவ இடத்தில் வெடித்துச் சிதறிய துண்டுகள் அனைத்தும் இராணுவப் போலீஸாரினால் ஒன்று கூட மிச்சம் வைக்காமல் அகற்றப்பட்டன. அதற்கு மட்டும் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் களத்தில் இறக்கப்பட்டனர். யாரும் எதையும் எடுத்துப் பாக்கெட்டில் வைக்க முடியாதவாறு அவர்களும் கண்காணிக்கப்பட்டனர். 
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%203
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%204
பிரிகேடியர் ஜெனரல் ரோஜர் ரமியால், ஜெஸி மார்செல் உடனடியாக ராணுவத் தளத்துக்கு அழைக்கப்பட்டார். அவர் சேகரித்த துண்டுகளை ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டி, இராணுவத் தளத்தில் முதல் நாள்தான் ஒப்படைத்திருந்தார். அந்தப் பெட்டியை அவரையே திறக்கச் சொல்லி உத்தரவிடப்பட்டார். பெட்டியைத் திறந்த ஜெஸி அதிர்ந்தேவிட்டார். அந்தப் பெட்டிக்குள் இருந்தவை எதுவுமே அவர் முதல் நாள் கொடுத்தவை அல்ல. உண்மையான ஒரு வானிலை ஆராய்ச்சி பலூனின் துண்டுகள் அங்கே காணப்பட்டன. அவரது முகம் மாறுவதை அவதானித்த உயரதிகாரி, 'இவைதான் அவர் கண்டெடுத்த பொருட்கள் எனவும். அதையே அவர் இனிச் சொல்ல வேண்டும்' எனவும் ஜெஸிக்குக் கட்டளையிட்டார். இவையெல்லாம் இனி அமெரிக்க அரசின் இராணுவ இரகசியமான 'டாப் சீக்ரெட்' வகையில் அடங்கும் எனவும் இது பற்றி அவர் இனி வாயே திறக்கக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டார். கட்டளைகளின் கடுமை அதிக தாக்கங்களைக் கொடுக்கக் கூடிய நேரம் அது. தான் ஏதோ ஒரு பெரிய சதி வலைக்குள் அகப்படுகிறோம் என்று ஜெஸிக்குத் தெரிந்தது. ஆனாலும் எதுவும் செய்ய முடியாத மௌன சாட்சியாக அடங்கிப் போனார். 

இராணுவத்தில் இருக்கும் வரை ஜெஸி மார்செல்லால் எதுவும் சொல்ல முடியவில்லை. அமெரிக்க அரசின் கட்டுக் கதைகளைப் பல காரணங்களினால் (அவை என்ன காரணங்கள் என்பது சம்பவம் 2, 3 ஆகியவற்றில் தெரிய வரும்) மக்கள் யாருமே நம்பத் தயாராக இருக்கவில்லை. இவையெல்லாவற்றுக்கும் முற்றுப் புள்ளியாகத் தன் வாயைத் திறந்தார் ஜெஸி மார்செல். அவர் வாயைத் திறந்தது 32 வருடங்களுக்குப் பின்னர் 1979ம் ஆண்டு. அதாவது அவர் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற பின்னர். தொலைக் காட்சிக்கும் பத்திரிகைகளுக்கும் நடந்த உண்மையை அப்படியே வெளியிட்டார் அவர். நடந்த உண்மைகளை ஜெஸி மாத்திரம் சொல்லவில்லை. ரோஸ்வெல் சம்பவத்தை முதன் முதலாகப் பார்த்த மாக் பிரேட்ஷெலும் (Mac Brazel) பத்திரிகைகளுக்குப் பேட்டிகளைக் கொடுத்தார். ரோஸ்வெல்லில் இந்தப் பரபரப்புகள் நடந்து கொண்டிருந்த போது, ரோஸ்வெல்லுக்கு அருகே, நியூ மெக்ஸிகோ மாநிலத்தின் சான் அகஸ்டின் (San Agustin) என்னுமிடத்தில் மற்றொரு சம்பவம் நடந்தது.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%205
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%206
சம்பவம் 2:

பார்னி பார்னெட் (Barney Barnett) என்னும் பொறியியலாளர் ஒருவர் தனது வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, தூரத்தே ஒரு வித்தியாசமான ஒரு பொருளைக் கண்டார். அந்தப் பொருளின் வடிவம் அவருக்கு ஒரு ஈர்ப்பைக் கொடுக்க, வாகனத்தை நிறுத்திவிட்டு, அந்தப் பொருளை நோக்கி நடக்கத் தொடங்கினார். கிட்ட நெருங்கிய போதுதான் அந்தப் பொருளின் பிரமாண்டம் அவருக்குத் தெரிந்தது. அவர் கண் முன்னே, மிகப்பெரிய பறக்கும் தட்டு ஒன்று நிலத்தில் விழுந்து மோதியது போலக் கிடந்தது. வட்ட வடிவமாக்க் காணப்பட்ட அந்தப் பறக்கும் தட்டு அவருக்குள் பதட்டத்தைத் தோற்றுவித்தது. பார்வையை சற்று நகர்த்திப் பார்த்த போது, நிலத்தில் விழுந்து கிடந்த உருவம் பயத்தின் உச்சிக்கே அவரைக் கொண்டு சென்றது. பெரிய தலை, அது போலவே நீண்ட பெரிய கண்கள், சிறிய மெல்லிய உடல், நீண்ட கைகளில் நான்கே நான்கு விரல்கள். ஒட்டு மொத்தத்தில் மனிதனைப் போன்ற உருவமாக இருந்தாலும், நாம் ஏலியன் என்று தற்போது கற்பனை செய்யும் வடிவத்தில் காணப்பட்டது அந்த உருவம். ஆனால் உயிரற்ற நிலையில் காணப்பட்டது. மொத்தமாக நான்கு ஏலியன்கள் அங்கு காணப்பட்டன. பயத்தால் என்ன செய்வதென்றே தெரியாமல் திரும்ப நினைக்கும் போது, அந்த வழியில் இளைஞர்கள் சிலர் நடந்து வந்தது அவருக்கு ஆறுதலளித்தது. அவர்களும் இந்தக் காட்சியைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் அருகே வந்தனர். விசாரித்ததில், அவர்கள் தொல்லியல் ஆராய்ச்சி மாணவர்கள் என்று தெரிய வந்தது. அனைவரும் பறக்கும் தட்டையும், ஏலியன்களையும் பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கு இராணுவ வாகனங்களில் இராணுவப் போலீஸார் வந்து இறங்கினர். பார்னி உட்பட அனைவரும் குற்றவாளிகள் போல அவர்களால் சுற்றி வளைக்கப்பட்டனர். அனைவரும் கமாண்டரிடம் அழைத்துச் செல்லப்பட்டனர். கமாண்டர் அவர்களிடம், "நீங்கள் இப்போது எதையும் காணவில்லை. நீங்கள் கண்டதாக எந்தச் சம்பவமும் இங்கு நடைபெறவில்லை. இது அமெரிக்க அரசாங்கத்தினால் இடப்படும் கட்டளை. இதை மீறுவது அரச குற்றம் புரிந்தவர்களாவார்கள்" என்று மிகக் கடுமையான, மிரட்டும் குரலில் சொன்னார். மிரட்டப்பட்ட விதம், மிரட்டப்பட்ட தொனி ஆகியவை அவர்கள் அனைவருக்கும் உயிர்பயத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே ஏலியன்களைக் கண்ட மிரட்சி அவர்களிடமிருந்து விடைபெறு முன்னர் வந்த அடுத்த பயமுறுத்தல் அவர்களை அப்படியே ஒடுங்கப்பண்ணியது. யாரும், எதையும் அதற்கு அப்புறம் வெளியே சொல்லவில்லை. பார்னி மட்டும் தனது நெருங்கிய நண்பனிடம் இரகசியமாக இது பற்றிச் சொல்லி வைத்தார்.

பார்னி 1969ம் ஆண்டு இறந்தார். ஆனால் அவர் இறப்பதற்கு முன்னர், தான் பார்த்ததை அப்படியே பத்திரிகைகளுக்குப் பேட்டியாகக் கொடுத்தார். 'சம்பவம் 1' ஐ நம்பும் பலர், பார்னி கண்டதாகச் சொல்வதை ஒருபோதும் நம்பத் தயாராக இருக்க மாட்டார்கள். ஆனால் அந்தச் சந்தேகத்தை 'சம்பவம் 3' முறியடித்தது. 'சம்பவம் 3' பற்றிச் சொல்வதற்கு முன்னர், நான் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். 1, 2, 3 சம்பவங்களில் வரும் நபர்கள் எவரும், ஒருவருடன் ஒருவர் சம்பந்தப்பட்டவர்கள் கிடையாது. அதற்குப் பின்னரும் சம்பந்தப்படவில்லை. ஆனால் ரோஸ்வெல்லைச் சுற்றி அதே தினங்களில் நடந்த சம்பவங்கள் இவை. 'சம்பவம்1', 'சம்பவம் 2' ஆகியவற்றை நீங்கள் சரியாகப் பார்த்தீர்களானால், பூமியில் விழுந்த பறக்கும் தட்டு, ஒன்று அல்ல இரண்டு என்பது தெரிய வரும். ஒரு பறக்கும் தட்டு முழுமையாகச் சுக்கு நூறாக ரோஸ்வெல்லில் வெடித்துச் சிதற, மற்றது சான் அகஸ்டினில் முழுமையாகக் கிடைத்ததாகவும் தெரிய வருகிறது. இனி நாம் 'சம்பவம் 3 ' க்குப் போகலாம்.  
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%207
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%208
ரோஸ்வெல்லில் இறந்தவர்களின் அடக்கத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யும் இல்லமான Ballard இல் பணிபுரிந்த க்ளென் டெனிஸ் (Glenn Dennis) என்பவருக்கு, அவரசரமாக ரோஸ்வெல் இராணுவ வைத்தியசாலைக்கு வருமாறு அழைப்பு வருகிறது. அழைப்பை ஏற்று, உடனே அங்கு செல்கிறார். அங்கு சென்றபோது வைத்தியசாலைக்கு முன்னால் நிறுத்தப்பட்ட வாகனங்களில் இருந்த பொருட்கள் ஒருவித நெருடலை அவருக்கு ஏற்படுத்தின. தற்செயலாக அதைப் பார்த்த போது, மிக மிக வித்தியாசமான உடலமைப்புடன், ஒரு இறந்து போன உருவத்தை என்றுமே பார்த்திராத வெள்ளி நிறத் துணியினால் சுற்றி வைத்திருந்தது தெரிந்தது. எல்லாம் சில செக்கன்ட்களுக்குள் நடந்தது. அவர் அழைக்கப்பட்டதோ வேறு ஒருவரால் வேறு ஒரு காரியத்துக்காக. ஆனால் அவர் அங்கு சென்ற போது, வைத்தியசாலை எங்கும் இராணுவப்' போலீஸார் குவித்து வைக்கப்பட்டிருந்தனர். அந்த வைத்தியசாலைக்குப் பலமுறை அவர் வந்திருந்தபடியால், நேராக உள்ளே சென்றார். ஒரு குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றதும் அவரை இராணுவப் போலீஸார் வழிமறித்தனர். இங்கு எதற்காக வந்தார்' என்று விசாரித்தனர். அதற்கு அவர், தான் வந்த காரணத்தைச் சொன்ன போது, 'இப்போது அவற்றுக்கு அவசியமில்லை. உடனே இங்கிருந்து சென்றுவிடவும்' என்று அவருக்குக் கட்டளையிட்டனர். வெளியே இறந்த ஒரு உடலைக் கண்டதால், ஏதோ ஒரு ஆர்வத்தில், "வெளியே இருக்கும் இறந்த உடல் சம்மந்தமாக ஏதாவது உதவி தேவைப்பட்டால் நான் உதவத் தயாராக இருக்கின்றேன்" என்று அவர்களிடம் கூறினார். மிகவும் கோபம் கொண்ட அவர்கள், 'அவரது உதவி எதுவும் தேவையில்லை’யெனச் சொல்லி, அவரை வெளியே தள்ளிக் கொண்டு வந்தனர். அப்போது அங்கு வந்த இராணுவ உயரதிகாரி, மீண்டும் அவரை அழைத்துவரும்படி கூறினார். க்ளென் டெனிஸ் வந்ததும், "இங்கு நீ எதையும் பார்க்கவில்லை. அப்படிப் பார்த்ததாக வெளியே சொல்லக் கூடாது. இது அரச கட்டளை" என்று கடுமையான குரலில் சொன்னார். அதற்கு க்ளென் டெனிஸ், "நான் ஒரு அமெரிக்கப் பிரஜை. என்னை நீங்கள் இப்படிப் பயமுறுத்த முடியாது" என்றார். உயரதிகாரி மிகவும் மூர்க்கமாக, அவரை தாக்குவது போலச் சென்று, "உயிருடன் இருக்க விருப்பமிருந்தால் வாயை மூடிக்கொண்டு நீ இருக்க வேண்டும். இல்லையென்றால் நடப்பதே வேறு" என்று கடும் குரலில் எச்சரித்தார். அவரை வெளியே தள்ளி விடும்படி உத்தரவும் கொடுக்கப்பட்டது. அதன்படி வெளியே கொண்டுவந்து விடப்பட்டார் டெனிஸ். இதையெல்லாம் சில நர்ஸ்கள் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு நர்ஸ் அவரின் அருகே வந்து, " இங்கே நீங்கள் நிற்க வேண்டாம். இங்கு நிற்பது உங்கள் உயிருக்கே ஆபத்தானது. முடிந்தால் நாளை மாலை ரெஸ்ட்டாரெண்டில் என்னைச் சந்தியுங்கள்" என்று குறிப்பிட்ட ரெஸ்டாரெண்டின் பெயரையும் சொன்னாள்.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%209
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%2010
குறிப்பிட்ட ரெஸ்டாரெண்டில் அந்த நர்ஸை டெனிஸ் சந்தித்தார். அவள் மிகவும் பதட்டத்துடனும், பயத்துடனும் காணப்பட்டாள். அவள் அந்த இராணுவ ஹாஸ்பிடலில் நர்ஸாக இருப்பதாகவும், தன்னுடன் மேலும் ஐந்து நர்ஸுகள் பணிபுரிவதாகவும் கூறினாள். ஏனோ டெனிஸைக் கண்டதும் பேசவேண்டும் போல இருந்ததாகவும் சொன்னாள். அவள் பேச விரும்பியதுதான் பயங்கரமான விசயமாக இருந்தது. இராணுவ வைத்தியசாலைக்குத் திடீரென இராணுவப் போலீஸார் வந்ததாகவும், அவர்கள் விசித்திரமான உடலமைப்புடைய நான்கு உடல்களைக் கொண்டு வந்ததாகவும், அதில் மூன்று பேர் இறந்துவிட்டதாகவும், ஒருவருக்கு உயிர் இருக்கலாம் என்றும் சொன்னாள். அத்துடன் அந்த மூன்று இறந்த உடல்களையும், பிரேதங்களை வெட்டிப் பரிசோதனை செய்வது போலப் பரிசோதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், தானும் சில நிமிடங்கள் அங்கே நின்றதாகவும் சொன்னாள். அந்தக் காட்சியே மிகவும் அருவெறுப்பாகவும், பயங்கரமாகவும் இருந்ததாகச் சொன்னாள். அத்துடன் அங்கிருந்த காகிதம் ஒன்றை எடுத்து, அந்த உருவங்கள் எப்படி இருந்தன என்று வரைந்தும் காட்டினாள். 'சம்பவம் 2' இல் பார்னி கூறியது போன்ற வடிவிலேயே அந்த உருவங்களும் காணப்பட்டன. அத்துடன் நான்கு விரல்கள் இருந்ததாகவும் வரைந்த காகிதத்தில் காணப்பட்டது. காகிதத்தை டெனிஸிடம் கொடுத்துவிட்டு, மிகவும் பயத்துடன் விடைபெற்றாள் அந்த நர்ஸ். 

அந்த நர்ஸை அதற்குப் பின்னர் டெனிஸ் காணவே இல்லை. விசாரித்ததில் மிகுதி ஐந்து நர்ஸ்கள் மட்டுமே இருந்தார்கள். ஆறாவதாக இருந்த அந்த நர்ஸ் காணாமல் போய்விட்டார். அவருக்கு என்ன நடந்தது? உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? எந்தச் செய்தியும் தெரியவில்லை. நிலைமையின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாக டெனிசுக்குப் புரியத் தொடங்கியது. பயத்தினால் 1989ம் ஆண்டுவரை வாயே திறக்காத டெனிஸ் அதன் பின்னர் நடந்தவற்றை வெளியே சொல்லத் தொடங்கினார். அவர் குறிப்பிட்ட இராணுவ அதிகாரி முதல் நர்ஸுகள் வரை அங்கு இருந்ததைப் பின்னர் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்றே உறுதி செய்தது. டெனிஸ் சொன்ன சம்பவம் உண்மைதான் என அதுவே நம்ப வைத்தது.  

இவ்வளவு விசயங்களும் ரோஸ்வெல்லில் நடந்தபோது, யார்தான் பறக்கும் தட்டுகள் இருக்கிறது என்று நம்ப மறுப்பார்கள்? ஆனாலும் இவையெல்லாவற்றுக்கும் அரசாங்கம் மறுப்பாக பதில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது. அந்த அறிக்கையில், முதல் சம்பவத்தில் வெடித்துச் சிதறியது பலூன் எனவும், இரண்டாவது சம்பவத்தில் பார்னி பார்த்தது, இராணுவத்தளத்தில் விபத்துக்களின் பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தும் டம்மி பொம்மைகள் என்றும், மூன்றாவது சம்பவத்தில், இராணுவ அதிகாரி வேறொரு விமான விபத்தில் சிக்கிய இராணுவத்தினரைக் கொண்டு வந்ததாகவும், அந்தச் சம்பவ நேரத்தில்தான் டெனிஸ் அங்கு வந்ததாகவும் சொல்லியிருந்தது. மொத்தத்தில் மூன்று சம்பவங்களையும் இல்லை என்று அமெரிக்க அரசு மறுக்கவில்லை. அவற்றுக்கு எப்படிச் சரியான பதில் சொல்லலாம் என்று அறிக்கையை மட்டும் சமர்ப்பித்தார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அமெரிக்க அரசைப் பெரும்பான்மையாக மக்கள் நம்பவில்லை.

மேலே சொல்லப்பட்ட சம்பவங்களெல்லாம், விக்கிரமாதித்தன் கதைகளில் வருபவை போலவே உங்களுக்குத் தோன்றும். எந்த வகையிலும் நம்ப முடியாத வகையில் அவை அமைந்திருப்பது இன்னும் சந்தேகச் சூழலிலேயே உங்களை வைத்திருக்கும். ஆனால் இத்துடன் சம்பவங்கள் முடிந்து விடவில்லை. இதைத் தொடர்ந்து நடந்த நான்காவதும், ஐந்தாவதும் சம்பவங்கள் இன்னும் ஆச்சரியமானவை. அவை நிச்சயம் உங்களை நம்பிக்கையின் நுனிக்குக் கொண்டு செல்லும். அந்த சம்பவம் ஒன்றில் சம்பந்தப்பட்டவர் வேறு யாருமல்ல, அமெரிக்க ஜனாதிபதியே சம்பந்தப்பட்டிருக்கிறார்.  

அவை என்ன சம்பவங்கள் என்றுதானே கேட்கிறீர்கள்? அடுத்த வாரம் வரை பொறுத்திருங்கள்.




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Nov 10, 2012 7:11 am

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%201
ஏலியன்கள் என்று சொல்லும்போது அனைவருக்கும் முன்னால் வந்து நிற்கும் ஒரே பெயர் 'ரோஸ்வெல்'. இன்று கூட ரோஸ்வெல் நகரத்துக்கு நீங்கள் சென்றால், அந்த நகரம் எங்கும் பறக்கும் தட்டுகளையும், ஏலியன்களையும் காணலாம். பொம்மைகளாகவும், விளம்பரங்களாகவும் ஒவ்வொரு கடைகளிலும், வீடுகளிலும், பெரும் சந்தைகளிலும் அங்குள்ள மக்கள் வைத்திருப்பார்கள். அந்த நகரமே தன்னை ஒரு ஏலியன் நகரமாக மாற்றிக் கொண்டுள்ளது. ஏலியன்களுக்கென காட்சிச்சாலைகளும் அங்கே அமைக்கப்பட்டுள்ளன. அந்த அளவுக்கு ஏலியன்கள் பூமிக்கு, குறிப்பாக ரோஸ்வெல்லுக்கு வந்ததை அந்த நகர மக்கள் நம்புகிறார்கள்.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%202

ரோஸ்வெல் சம்பவங்களை நாம் எடுத்துக் கொண்டால், ஒரு இடத்தில் முக்கால் மைல் பரப்பளவுக்கு இனந்தெரியாத ஏதோ ஒன்று வெடித்துச் சிதறியிருந்தது. இன்னுமொரு இடத்தில் வெடிக்காத முழுமையான பறக்கும் தட்டு ஒன்றும், நான்கு ஏலியன்களும் இருந்தன. அவற்றில் மூன்று இறந்து போயிருந்தன. நான்காவது மிகவும் அடிபட்டிருந்தும், உயிர் இருந்ததாகத் தெரிந்தது. மூன்றாவது இடத்தில் ஏலியன்கள் கொண்டு வரப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்த மூன்று சம்பவங்களிலும் சம்மந்தப்பட்டவர்கள் வேறு வேறு நபர்கள். ஒருவரை ஒருவர் சந்திக்காதவர்கள். இவர்கள் அனைவரும் எப்படி ஒரே விதமான பொய்யைச் சொல்ல முடியும்? மூன்று சம்பவங்களிலும் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் இராணுவப் போலீசாரினால் ஒரே மாதிரி மிரட்டப்பட்டுமிருக்கின்றனர். அரசு சொல்வது போல முதல் சம்பவத்தில் வெடித்தது வானிலையை ஆராயும் பலூன்தான் என்றால், அதன் பகுதிகளை அகற்ற அரசு ஏன் அவ்வளவு தீவிரம் காட்ட வேண்டும்? சாதாரண பலூன்தானே! வெடித்த பலூனின் சிறிய துண்டுகள் கூட அந்த இடத்தில் இருக்காமல் ஏன் அகற்றப்பட வேண்டும்? இரண்டாவது சம்பவத்தில் அந்த இன்ஜினியர் கண்டது ஏலியன்கள் இல்லை, டம்மிப் பொம்மைகள்தான் என்றால், ஒரு பொம்மையைக் கூட சரியாகக் கணிப்பிட முடியாத அளவுக்கு ஒரு பொறியியலாளர் இருக்க முடியுமா? 1947ம் ஆண்டு அவ்வளவு தத்ரூபமாக பொம்மைகள் தயாரிக்கப்பட்டனவா என்ற கேள்விகள் மேலும் மேலும் சந்தேகங்களையே வலுக்கப்பண்ணுகின்றன.  

அரசு சொல்லும் சாட்டுகளை மக்கள் யாரும் நம்பவில்லை. ஆனால், இவற்றை ஆராய்ந்தவர்கள் ஏலியன்கள் வந்ததாகவும், பறக்கும் தட்டுகள் விழுந்து வெடித்ததாகவும் முழுமையாக நம்புகின்றனர். அத்துடன் ரோஸ்வெல் சம்பவத்தில் இரண்டு பறக்கும் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதியதாகவும் நம்புகிறார்கள். அந்த இரண்டு பறக்கும் தட்டுகளும், எதிரிகளாகவோ அல்லது ஒரே இனத்தைச் சேர்ந்தவையாகவோ இருக்கலாம். எதிரிகளாக இருந்து, இரண்டும் சண்டையிட்ட போது, வெடித்தும், கீழே விழுந்தும் விபத்துகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. விபத்து நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஏலியன்களை அமெரிக்க அரசு பாதுகாப்பாக இன்றும் 'ஏரியா 51' (Aria 51) என்னுமிடத்தில் வைத்திருக்கிறது என்றும், அதில் உயிருடன் ஒரு ஏலியன் இப்போதும் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். கண்டெடுக்கப்பட்ட பறக்கும்தட்டையும் 'ஏரியா 51' க்குக் கொண்டு சென்று, அதைப் பல விதங்களில் பரிசோதனைகளும் செய்திருக்கிறார்கள் என்றும், பல புதிய நவீன தொழில்நுட்பங்களை அதன் மூலம்தான் அமெரிக்கா பெற்றது என்றும் சொல்கிறார்கள். மிகக் குறுகிய காலத்தில் அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சித் துறையில் அறிவைப் பெற்றதும், அணுசக்தி பற்றிய அறிவைப் பெற்றதும் இதன் மூலம்தான் என்கிறார்கள். இவற்றில் எவ்வளவு உண்மை, எவ்வளவு பொய் இருக்கிறது என்று நாம் குழம்பிப் போகிறோம். இந்த நிலையில் நமக்குக் கிடைக்கும் வேறு ஒரு தகவல் நம்மை ஒட்டுமொத்தமாகப் பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு கொண்டு செல்கிறது. அமெரிக்க ஜனாதிபதியுடன் இணைந்ததாக அந்தத் தகவல் இருப்பதால் மேலதிக உறுத்தலும் அதில் ஏற்படுகிறது.

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%203

1953ம் ஆண்டிலிருந்து 1963ம் ஆண்டு வரை அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தவர் ஐசன்ஹோவர் (Dwight Eisenhower). இவர் இரண்டாம் உலகப் போரின்போது, உயர் இராணுவத் தளபதியாக விளங்கியவர். ஐந்து நட்சத்திரங்கள் பெற்ற ஜெனரல் பட்டம் பெற்றவரும் கூட. இந்தத் தகுதிகளால் அமெரிக்காவின் ஜனாதிபதி பதவியை அடைந்தவர் இவர். இவர் ஏலியன்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்று சொல்லப்படுவதுதான் இன்று மாபெரும் பிரச்சினையாகப் பார்க்கப்படுகின்றது. ஆமாம்! அமெரிக்க ஜனாதிபதியான ஐசன்ஹோவர் மூன்று முறை ஏலியன்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது, அமெரிக்க அரச அதிகாரிகள் மூலமாகவே வெளிவந்திருக்கிறது. இதை நம்புவதா விடுவதா என்பதை உங்கள் பொறுப்பில் விட்டுவிடுகிறேன். ஆனால் உலகெங்கும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் சூடான செய்திகளில் இதுவும் ஒன்றாக இருப்பது என்னவோ நிஜம். நமக்குத்தான் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றனவே. அதில் இவை பற்றி அறிய ஏது நேரம்? இங்கு இவற்றை நான் சொல்வது, இவையெல்லாம் உண்மை, பொய் என்பதைத் தாண்டி, இப்படியும் உலகத்தில் செய்திகள் இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டத்தான்.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%204

அமெரிக்க ஜனாதிபதியான ஐசன்ஹோவர் ஏலியன்களுடன் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தியபோது, தானும் அங்கு இருந்ததாகச் சொல்கிறார் கேர்க்ளின் மானுவேல் (Kirklin Manuel). ஐசன்ஹோவர் 1955ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ம் தேதி, நியூ மெக்ஸிகோவில் இருக்கும் ஹொலோமான் விமானப் படைத்தளத்தில் (AFB Holloman) ஏலியன்களைச் சந்தித்தார் என்கிறார் கேர்க்ளின். அதே விமானப் படைத்தளத்தில் உயர் பதவியில் இருந்தவர்தான் இந்த கேர்க்ளின். அது மட்டுமில்லாமல், அப்போலோ மிசனின் பயிற்சியாளராகவும் இருந்தவர் இவர். இவ்வளவு உயர் பதவியில் இருப்பவர் இப்படிப்பட்ட பொய்யைச் சொல்வாரா என்று நாம் சிந்திக்க வேண்டும். இதில் ஆச்சரியம் என்னவென்றால், அதே நியூ மெக்ஸிகோவில்தான் பறக்கும் தட்டு விழுந்த சம்பவங்கள் நடந்த இடங்களும் இருக்கின்றன. அடிப்படையில் ஐசன்ஹோவர் மிகவும் துணிச்சலானவர். அவர் ஜனாதிபதியாக இருந்தும் ஏலியன்களைச் சந்திக்க அவரது துணிச்சலும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. ஏலியன்கள் ஐசன்ஹோவருடன் 'டெலிபதி' (Telepathy) முறையில் பேசியதாகவும் தகவல்கள் சொல்கின்றன.

யாருமே நம்ப முடியாத கதைதான் இது. ஆனால் அடுத்தடுத்து நடந்த பல சம்பவங்களும், அந்தச் சம்பவங்களை வெளியில் கொண்டு வந்த நபர்களும் இவையெல்லாம் உண்மையாக இருக்குமோ என்ற முடிவுக்கு நம்மைக் கொண்டு செல்கின்றன. நான்கூட, இந்த ஐசன்ஹோவர் சம்பவம் கொஞ்சம் ஓவராக இருக்குமோ என்றே சந்தேகப்பட்டேன். பறக்கும் தட்டு விழுந்ததைக் கூட நம்பலாம். ஆனால் ஏலியன்களை உயிருடன் சந்தித்துப் பேசியதை எப்படி நம்ப முடியும் என்றே எண்ணினேன். ஆனால் அதையும் இன்னுமொரு சம்பவம் உடைத்தெறிந்தது. ஒன்றைப் பொய் என்று சொல்லலாம். இரண்டைப் பொய்யென்று சொல்லலாம், மூன்றைப் பொய்யென்று சொல்லலாம். கேள்விப்படும் அனைத்தையும் எப்படிப் பொய்யென்று சொல்ல முடியும்? அடுத்த சம்பவம் இவையெல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு ஆச்சரியமாக இருந்தது. சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர் நேரடியாகக் கொடுத்த பேட்டிகளுடன், சாட்சியத்துடன் அது வெளிவந்திருக்கிறது. எந்த இடத்தில் ஏலியன்களையும், பறக்கும் தட்டையும் வைத்து, அமெரிக்க அரசு இரகசியமாக ஆராய்ச்சி செய்கிறது என்று உலகம் முழுவதும் சந்தேகப்படுகிறதோ, அந்த இடத்திலிருந்தே இந்தச் சாட்சி வெளிவந்திருக்கிறது. இந்தச் சாட்சி சொல்வதை நீங்கள் நம்பினால், நான் ஏலியன்கள் பற்றிச் சொன்ன அனைத்தையும் நீங்கள் நம்புவீர்கள். இல்லை இதுவும் பொய்தான் என்று நீங்கள் சொல்வீர்களேயானால், இனி நான் எது சொன்னாலும் உங்களால் நம்ப முடியாது."இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%205
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%206
டேவிட் அடேர் (David Adair) சர்வதேச ரீதியாக விண்வெளித் தொழில்நுட்பத்தில் முதல்தர விற்பன்னர். உலகில் வாழும் புத்திஜீவி எனப்படும் ஜீனியஸ்களில் இவரும் ஒருவர். தனது பதினோராவது வயதில் முதல் ராக்கெட்டை இவர் தயாரித்தார். 17வது வயதில் ராக்கெட் தயாரிப்பில் அமெரிக்க விமானப்படையின் பரிசுகளை வென்றார். அவர் மிகவும் நூதனமான, புதுமையான ஒரு ராக்கெட் தொழில்நுட்பத்தைப் பரிசோதனைக்குக் கொண்டுவந்தார். Electro Magnetig Fusion மூலமாகத் தொழிற்படும் ராக்கெட் எஞ்சினைத் தயாரித்தார். அவர் தயாரித்த ராக்கெட்டுக்கு நிதியுதவி அளித்தவர் அமெரிக்க காங்கிரஸில் இருக்கும் ஒரு பிரபலமானவர். அந்தப் பிரபலத்தின் மூலம் இந்த ராக்கெட்டைப் பரீட்சித்துப் பார்க்க, 'ஏரியா 51' இல் அனுமதி வாங்கிக் கொண்டார். அவர் தயாரித்த ராக்கெட் சில செக்கன்களுக்குள் பல ஆயிரம் கிலோ மீட்டர் வேகம் எடுக்கக் கூடியது. இவரின் இந்தத் திறமையைப் பார்த்து வியந்த 'ஏரியா 51' இன் அதிகாரிகள் சிலர், சில முடிவுகளை எடுத்தனர்.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%207
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%208
'ஏரியா 51' இன் அதிகாரிகள் எடுத்த முடிவின்படி, 1971ம் ஆண்டு ஜூன் மாதம் 20ம் தேதி, ஜெனரல் கர்டிஸ் லெமே (Gen. Curtis Lemay) என்பவரால் 'ஏரியா 51' க்கு அடேர் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த இடத்தில் 'ஏரியா 51' பற்றி நான் சிறிது சொல்ல வேண்டும். அமெரிக்காவின் நிவாடா (Nevada) பகுதியில் அமெரிக்க அரசால் அமைக்கப்பட்ட இரகசியத் தளம் ஒன்றுதான் 'ஏரியா 51' (Aria 51). தன்னுள்ளே ஒரு பாலைவனம் போல ஒரு பகுதியையும், மிகப்பெரிய ஏரியையும் கொண்டது 'ஏரியா 51'. இது எவ்வளவு கிலோமீட்டர் பரப்பளவுள்ளது என்பதே தெரியாத அளவுக்கு மிகப் பெரியது. இந்த 'ஏரியா 51' இல்தான் அமெரிக்காவின் இராணுவ, விமான, விண்வெளிப் பரிசோதனைகள் அனைத்தும் செய்யப்படுகின்றன. 'ஏரியா 51' இன் எல்லைக்குள் அனுமதியின்றி நுழைபவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்ற மிகக் கடுமையான வாக்கியங்களுடன் எல்லைப் பகுதி வேலிகள் காணப்படுகின்றன. அங்கே என்ன நடக்கின்றன என்பது யாருக்குமே தெரியாத இரகசியம். அங்கு பணிபுரிபவர்கள் அனைவரும் மிகக் கடுமையான சட்டதிட்டங்களுடன் வழி நடத்தப்படுகிறார்கள். இங்கு ஏலியன்கள் உயிருடன், காவலில் வைக்கப்பட்டிருக்கின்றன என்றும், பறக்கும் தட்டுகள் இருக்கின்றன என்றும் பரவலான வதந்திகள் இருக்கின்றன.

'ஏரியா 51' க்கு ஜெனரல் கர்ட்டிஸ் லெமே என்பவரால் அடேர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சென்றதும் அந்தக் கட்டடத்தின் பிரமாண்டத்தைக் கண்டு பிரமித்துப் போனார் அடேர். பல விமானங்களை ஒன்றாக நிறுத்தி வைத்திருக்கும் அளவுக்கு அது பிரமாண்டமாக இருந்தது. அந்தக் கட்டடத்தின் நிலத்தடிச் சுரங்கத்தினுள் அடேர் அழைத்துச் செல்லப்பட்டார். பல நூறு மீட்டர் கீழே சென்றதும் அங்கும் பிரமாண்டமான கட்டட அமைப்புக் காணப்பட்டது. நிலத்துக்குக் கீழே இவ்வளவு பெரிய கட்டடம் இருக்கும் என்பதை அவரால் கற்பனை பண்னவே முடியவில்லை. இவர்களை அழைத்துச் சென்றவர் கட்டடத்தின் பூட்டப்பட்ட வாசலில் இருந்த ஏதோ ஒன்றில் கையை வைத்தார். அது உடனே தற்சமயம் இருக்கும் ஸ்கானர் போல அவரது கைகளை ஒளியினால் வருடியது. கண்ணிலும் காமெரா வெளிச்சம் போல மின்னியது. உடன் கதவு திறந்து கொண்டது. அதாவது கைகளில் உள்ள கைரேகைகளை ஸ்கான் செய்து, பின்னர் கண்களைப் படம்பிடித்து, அந்த நபரைக் கண்டுகொள்ளும் தொழில்நுட்பத்தால், கதவுகள் திறந்தன. நன்றாகக் கவனியுங்கள், இது நடக்கும் காலம் 1971ம் ஆண்டு. அந்தக் காலத்தில் லாப்டாப்புகள் இல்லை. மோடம்கள் இல்லை, ஃபாக்ஸ் இயந்திரம் இல்லை, செல்ஃபோன்கள் இல்லை. வீடியோ காசட் ரிக்கார்டர்கள் இல்லை, ஸ்கானர்கள் இல்லை, அதிகம் ஏன் கையடக்கமான கால்குலேட்டர்களே இல்லை. இவையெல்லாம் பல ஆண்டுகளுக்கு அப்பால்தான் வெளிவந்தன. அப்படி இருக்கையில் கைகளை ஆராயும் ஸ்கானரும், கண்களின் ரெட்டினாவைக் கண்டறியும் ஸ்கானருமான தொழில்நுட்பம் 1971ம் ஆண்டு எப்படி 'ஏரியா 51' இல் சாத்தியமாயிற்று? இதை யார் இவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள்? வாசிப்பதை நிறுத்திவிட்டு சற்றுக் காலத்தால் பின்னோக்கிச் சென்று சிந்தித்துப் பாருங்கள். இன்று சொல்லும்போது சாத்தியம் போல இருக்கும் இவை, நாற்பது வருடங்களுக்கு முன்னர் எப்படிச் சாத்தியம்?
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%209

கதவுகளைத் திறந்து உள்ளே சென்ற அடேர், அங்கே இருந்த வித்தியாசமான சூழ்நிலையை அவதானித்தார். மிகப்பெரிய ஹாலின் நடுவே மேடை போன்ற ஒன்றில், ஒரு பாடசாலை பஸ் அளவுக்குப் பெரிய, பச்சை நிறமான ஏதோ ஒன்று இருக்கக் கண்டார். அது என்ன என்றே முதலில் அடேர் புரிந்து கொள்ளவில்லை. பின்னர் சமாளித்துக் கொண்ட அவர், அது 'ஏரியா 51' இல் பணிபுரிபவர்களால் வடிவமைக்கப்பட்ட ராக்கெட் சம்பந்தமான ஒன்று என்ற முடிவுக்கு வந்தார். 'அதன் அருகே செல்லலாமா?' என்று அவர் கேட்டதற்கு, 'போகலாம்' என அவர்கள் அனுமதியளித்தனர். அதன் அருகே சென்று அதைப் பார்த்ததும் மிகவும் வித்தியாசமான மனநிலை தோன்றுவது போன்ற உணர்வு அவருக்குத் தோன்றியது. 'அதைத் தொட்டுப் பார்க்கலாமா?' என்று மீண்டும் அவர்களிடம் கேட்டார். அதற்கும் அவர்கள் அவருக்கு அனுமதி அளித்தனர். சொல்லப் போனால், இவரை அவர்கள் அழைத்தது கூட அதற்குத்தான்.

அடேர் மெதுவாக அதன் மேல் தனது கையை வைத்தார். அப்போதுதான் அந்த அதிசயத்தை அடேர் கண்டார். அந்தப் பிரமாண்டமான பொருளில், இவர் கைவைத்த இடத்தில் நீலமும் வெள்ளையுமாக வெளிச்சங்கள் வளையங்களாக, அவர் கைகளில் இருந்து அலை அலையாகத் தோன்றியது. ஆடிப் போனார் அடேர். அத்துடன் அந்தப் பொருள் இதுவரை தான் எங்கும் தொட்டறியாத ஒரு உலோகத்தால் உருவானது என்றும் புரிந்து கொண்டார். ஏற்கனவே ராக்கெட் தயாரிப்பில் ஈடுபட்டிருந்ததால், பல உலோகங்களின் பரிச்சயம் அவருக்கு இருந்தது. ஆனால் இது மிகவும் கடினமானதும், அதே நேரம் மிகவும் மிருதுவானதுமாகத் தோன்றியது. உடனடியாகக் கையை எடுத்த அடேர், அந்தப் பொருளின் உள்ளே எட்டிப் பார்க்க விரும்பினார். அந்தப் பொருளின் ஒரு பக்கத்தில், மோதி வெடித்தது போலப் பெரிய ஓட்டையொன்று காணப்பட்டது. அதன் மூலம் தனது கையை வைத்து எட்டிப் பார்த்தார். அதனுள்ளே, வண்ண வண்ணமான திரவங்கள் நிரம்பிய ஃபைபர் குழாய்கள் போன்ற மிக நுண்ணிய குழாய்கள் ஒளிர்ந்தபடி லட்சக்கணக்கில் ஒன்றுடன் ஒன்று இணைந்து, நடுப்பகுதியைப் போய் அடைந்தன. கிட்டத்தட்ட ஒரு மனிதனின் மூளையில் நரம்புகள் மின்னைக் கடத்துவது போல அவை தொழில்பட்டன. அடேர் உடனே கையை எடுத்துவிட்டார். உடனடியாக அவருக்கு அது என்னவென்று புரிந்து போயிற்று. அவர் அங்கிருந்தவர்களிடம், "இது நிச்சயமாகப் பூமிக்குச் சொந்தமான பொருளல்ல. இது வேற்றுக் கிரகவாசிகளின் ராக்கெட்டின் எஞ்சினாக இருக்க வேண்டும். இது பூமியின் தொழில்நுட்பமே இல்லை" என்றார். இதைக் கேட்டதும் அவர்கள் முகம் கறுக்கத் தொடங்கியது. அதனால் சில வாக்குவாதங்கள் அடேருக்கும் அவர்களுக்கும் ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் ஏற்பட்ட நேரத்தில் அந்தப் பொருளின் மீது தற்செயலாகக் கையை வைத்தார் அடேர். ஆனால் இப்போது சிவப்பும் ஆரஞ்சும் கலந்த ஒளி வளையங்கள் கைகள் பட்ட இடத்தில் தோன்றின. ஆனால், இதற்கு முன்னர் இதே இடத்தில் நீலமும் வெள்ளையுமாக ஒளி வளையங்கள் இருந்தன. அந்த விவாதங்களில் தன்னை விடுவித்துக் கொண்டு சிறிது நேரத்தில் மீண்டும் கை வைத்தபோது, பழையபடி நீலமும் வெள்ளையுமாக ஒளி வளையங்கள் தோன்றின. அதாவது தான் அமைதியாக இருக்கும் மனநிலையில் அது நீலமும் வெள்ளையும் கலந்த ஒளி வளையங்களாகவும், கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்ட நிலையில், சிவப்பும் ஆரஞ்சும் கலந்த ஒளி வளையங்களாகவும் தன்னை மாற்றுகின்றது என அடேர் கண்டுகொண்டார். மனிதனின் மனநிலையை அறியும் தொழில்நுட்பம் அதில் உள்ளதைப் புரிந்துகொண்டார்.   

அந்தப் பிரமாண்டமான பொருள் ஒரு பறக்கும் தட்டின் எஞ்சின் என்றும் அந்த எஞ்சின் அதை ஓட்டுபவரின் எண்ணங்களின் முடிவுகளுக்கும், வேகத்துக்கும் ஏற்ப இயங்கும் எனவும், அந்தப் பறக்கும் தட்டு பூமியில் மோதியதால் இவர்களுக்குக் கிடைத்திருக்கிறது என்றும் அடேர் புரிந்து கொண்டார். மனதின் கட்டுப்பாட்டால் இயங்கும் எஞ்சினை 'சிம்பையாட்டிக்' (Symbiotic) எஞ்சின் என்று சொல்வார்கள். இது பற்றிய ஆராய்ச்சிகள் மனிதர்களிடையே இப்போது இருக்கிறது. பறக்கும் தட்டில் அமர்ந்து செல்பவர்களின் எண்ணங்களுடன் இந்த சிம்பையாட்டிக் எஞ்சின் தொடர்புபட்டு, அவர்கள் நினைப்பது போலப் பறக்க ஆரம்பிக்கும். இதற்கு எந்த ஒலியும் இருக்காது. தனக்கு நடந்தவற்றையெல்லாம், தனது கடமைக் காலம் முடிவடைந்ததும் வெளியுலகத்துக்குக் கொண்டு வந்தார் அடேர். பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் பேட்டிகளாகச் சொன்னார். இவர் சொன்னதை இதுவரை அரசு ரீதியாக யாரும் மறுக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம். 

இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால், இவற்றை நம்புவதா? விடுவதா என்பதே பெரும் சர்ச்சையாக மனதில் ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் இவையெல்லாம் உண்மையாக இருக்க முடியாது, பொய்தான் என்று சொல்வதற்கும் நம்மிடம் ஒரு காரணம் உண்டு. இந்த ஏலியன்கள் ஏன் அமெரிக்காவில் மட்டும் வரவேண்டும்? ஏன் அவை மற்ற நாடுகளுக்கு வரவில்லை? அமெரிக்கர்கள் எப்போதும் விளம்பரப் பிரியர்கள். அந்த விளம்பரங்களினால் ஏற்படும் பிரபலத்துக்காகப் பொய் சொல்பவர்கள். அதனால்தான் இவர்கள் எல்லாரும் இந்த ஏலியன், பறக்கும் தட்டுகள் விசயத்தில் பொய் சொல்கிறார்கள் என்ற காரணம், அர்த்தம் உள்ளதாகவே இருக்கிறது. ஏலியன்கள் ஏன் அமெரிக்காவைச் சுற்றியே வருகின்றன? மற்ற நாடுகளுக்கு அவை ஏன் வரவில்லை என்பது ஒரு சரியான கேள்வியாகவே படுகிறது. ஆனால் உண்மையாகவே ஏலியன்கள் அமெரிக்காவுக்கு மட்டும்தான் வந்து போனவையா என்று நாம் ஆராய்ந்தபோது, நாம் நினைத்தே பார்க்க முடியாத சம்பவங்கள் அமெரிக்கா தவிர்ந்த மற்ற நாடுகளிலும் நடந்துதான் இருக்கின்றன. இந்தச் செய்திகள் நாம் மேலே சொன்ன காரணத்தை அடித்து நொறுக்குகின்றன.

சொல்லப் போனால், ரோஸ்வெல்லை விட அதிக நம்பிக்கையும், உண்மைத் தன்மையும் வாய்ந்த பறக்கும் தட்டுச் சம்பவம் ஐரோப்பாவில் நடந்திருக்கிறது. அந்தச் சம்பவம் நடந்தபோது, அதை அறிந்த உயிருள்ள சாட்சியாக நானே உங்கள் முன் இருக்கிறேன். அந்தச் சம்பவம் நடந்தபோது, வெளிவந்த செய்திகளை அறிந்து அதிர்ந்து போன நபர்களில் நானும் ஒருவன். அந்தச் சம்பவத்தை நான் நேரில் பார்க்காவிட்டாலும், அது நடந்த போது, பத்திரிகைச் செய்திகளிலும், தொலைக்காட்சி செய்திகளிலும் பரபரப்பாக வெளிவந்த போது, நம்பட்டுமா? வேண்டாமா? என்று தவித்த சாட்சி நான். ஆம்! அந்தச் சம்பவம் நான் வாழும் ஜெர்மன் நாட்டையும், பெல்ஜியம் நாட்டையும் பிரிக்கும் எல்லையில் உள்ள, பெல்ஜியம் நாட்டுக்குச் சொந்தமான ஒரு ஊரில் நடந்தது. அந்தச் சம்பவம் என்னவென்றுதானே கேட்கிறீர்கள்? அதை அடுத்த வாரம் சொல்கிறேன்.




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Nov 13, 2012 11:55 am

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%201
ரோஸ்வெல்லில் நடந்தவை, பறக்கும் தட்டு சம்பவங்களில் ஒரு மைல்கல் என்றால், நான் இப்போது சொல்லப் போவது பறக்கும் தட்டு சம்பவங்களின் உச்சம் என்று சொல்லலாம். அமெரிக்காவில் பறக்கும் தட்டுகள் வந்து போனதாகப் பல சம்பவங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் பல கட்டுக் கதைகள் ரகம்தான். ஆனால்  உண்மைக்கு மிக அருகிலும் சில சம்பவங்கள் இருந்ததை யாரும் மறுக்க முடியாது. மிக நம்பிக்கையானவர்களின் வாக்குமூலத்தைச் சாட்சியாக வைத்து அவற்றைக் கூட நாம் நம்பினாலும், அவையெல்லாம் மனிதர்கள் தங்கள் வாயால் சொன்ன சாட்சியங்கள்தான். அதனால் எவ்வளவு நம்பிக்கையான சாட்சிகளாக இருந்தாலும் அவர்கள் ஏன் பொய் சொல்லியிருக்கக் கூடாது என்ற கேள்வி இறுதியில் அங்கு எழும். அதற்குப் பதில் சொல்ல யாராலும் முடியாது. ஆனால் பெல்ஜியத்தில் நடந்த பறக்கும் தட்டு சம்பவம் அந்த வகை அல்ல. எந்தக் கேள்விக்கும் இடம் வைக்காமல் முழுமையான சம்பவமாக அது இருந்தது. ரோஸ்வெல்லைச் சந்தேகமாகப் பார்த்து அதை மறுத்தவர்களால் கூட, பெல்ஜியம் சம்பவத்தை மறுக்க முடியவில்லை. அந்த அளவுக்கு 99 சதவீதம் உண்மைத் தன்மையைக் கொண்டது அது. இவையெல்லாம் தாண்டி இந்தச் சம்பவத்துக்கு இன்னுமொரு அடையாளமும் உண்டு. நான் இந்தச் சம்பவம் நடந்த இடத்துக்கு மிக அருகில், சம்பவம் நடந்த காலங்களில் வாழ்ந்து வந்தேன். பலரால் பரபரப்பாகப் பேசப்பட்டு, ஐரோப்பாவையே அதிர வைத்த சம்பவத்துக்குச் சாட்சியாக நானே உங்கள் முன் நிற்கிறேன். இப்போது அந்தச் சம்பவம் பற்றி உங்களுக்கும் சொல்கிறேன். 
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%202
ஐரோப்பிய கூட்டமைப்பில் பெல்ஜியம் என்பது மிகச் சிறிய நாடு. ஜெர்மனி, நெதர்லாந்து, லக்ஸம்பேர்க், ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளை நான்கு பக்கத்திலும், ஐந்தாவது பக்கத்தில் வட கடலையும் எல்லையாகக் கொண்ட நாடு இது. பெல்ஜியம், நெதர்லாந்து, லக்ஸம்பர்க் ஆகிய நாடுகள் மூன்றும் தமக்குள் 'பெனலக்ஸ்' (Benelux) என்னும் கூட்டமைப்பையும் கொண்டவை. பெல்ஜியத்துக்கும், ஜெர்மனிக்கும் எல்லை ஊராக அமைந்ததுதான் ஒய்ப்பன் (Eupen). ஜேர்மனியில் இருந்து வெறும் 7 மைல்கள் தூரத்தில் இருந்த இந்த ஒய்ப்பனில், 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி இரவு அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இரவு நகரை சுற்றிக் காவலுக்குச் சென்ற இரண்டு போலீஸ்காரர்கள் திடீரென வானத்தில் பிரகாசமான ஒளியைக் கண்டனர். வானம் என்று சொன்னால் வானத்தில் எங்கோ தூரத்தில் அல்ல. பூமியில் இருந்து சில நூறுமீட்டர் உயரத்தில் அந்த ஒளி தெரிந்தது. ஆம்! மிகத் தாழ்வாகப் பறந்து கொண்டிருந்த பறக்கும் தட்டு அது. பறந்து கொண்டிருந்தது என்று சொல்வது கூடத் தப்பு. மிக மெதுவாக மிதந்தபடி இருந்தது அது. ஹைன்ரிக் நிக்கோல் (Heinrich Nicoll), 'ஹூபேர்ட் மொன்டினி' (Hubert Montigny) ஆகிய இரண்டு போலீஸ்காரர்கள்தான் அந்தப் பறக்கும் தட்டை முதலில் பார்த்தவர்கள். இந்த இடத்தில் நான் ஒன்றைச் சொல்ல வேண்டும். நான் இந்தத் தொடரின் ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை ஒவ்வொரு சம்பவத்தின்போதும், சம்பவம் நடந்த இடம், அதில் சம்மந்தப்பட்டவர்களின் பெயர் அனைத்தையும் தமிழில் தருவது மட்டுமில்லாமல், ஆங்கிலத்திலும் தந்து கொண்டிருக்கிறேன். அதற்குக் காரணம் இவற்றை நீங்கள் இணையத்தில் தேடிப் பார்க்க வேண்டும் என்பதுதான். நான் சொல்வதை எல்லாம் நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு நம்பிவிடவோ, மறுக்கவோ வேண்டாம். நீங்களும் இணையத்தில் தேடிப் பார்க்க வேண்டும். நான் சொல்பவை ஒரு வீதமாகத்தான் இருக்கும். நீங்கள் இவற்றை இணையத்தில் தேடிப் பார்க்கும் போது, நான் சொல்லாத பல தகவல்கள் உங்களுக்குக் கிடைக்கும். 
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%203
ஹைன்ரிக் நிக்கோலும், ஹூபேர்ட் மொண்டினியும் தங்களது வாகனத்தைப் பறக்கும் தட்டு நின்ற இடத்துக்கு மிக அருகில் நிறுத்திவிட்டு அதை அவதானித்தனர். முக்கோண வடிவில், ஒரு உதைபந்தாட்ட மைதான அளவுக்குப் பிரமாண்டமானதாக அது இருந்தது. முக்கோணத்தின் மூன்று மூலைகளிலும் வெள்ளை நிறமான ஒளி வந்து கொண்டிருந்தது. அதன் நடுவே வட்ட வடிவமான ஆரஞ்சு நிறத்தில் பிரகாசமான ஒளி, விட்டு விட்டு எரிந்தபடி இருந்தது. அந்தப் பறக்கும் தட்டு மிக மிக மெதுவாக நகர்ந்தது. ஆனால் அதிலிருந்து எந்த விதமான சத்தமும் வரவில்லை. நகரும் போதோ, நிற்கும் போதோ கூட அமைதியாகவே இருந்தது. காற்றில் உராயும் சத்தம் கூட வரவில்லை. ஒய்ப்பன் என்னும் இடம் விவசாயிகள் வசிக்கும் இடம். அங்கு இருப்பவை எல்லாம் விவசாயப் பண்ணைகளே! ஒவ்வொரு விவசாய நிலத்திலும் எதையோ தேடுவது போலவும், அவற்றை அளப்பது போலவும் அந்தப் பறக்கும் தட்டின் செயல் இருந்தது. உடனே போலீஸ் நிலையத்தில் இருந்த அதிகாரியுடன் இருவரும் தொடர்பு கொண்டார்கள். தொடர்பு கொண்ட அதிகாரியின் பெயர் அல்பேர்ட் குரொய்ட்ஸ் (Albert Creutz). இவர்கள் இருவரும் வயர்லெஸ் கருவி மூலம் அறிவித்ததைக் கேட்டு முதலில் அல்பேர்ட் குரொய்ட்ஸ் சிரித்தார். அது கிருஸ்துமஸ் நெருங்கும் காலமாதலால், 'சாண்டா கிளாஸ் வந்திருப்பார் பாருங்கள்' என்று வேடிக்கையாக அவர்களுக்குப் பதில் சொன்னார் அல்பேர்ட். ஆனால் பின்னர் அவர்கள் இருவரிடமிருந்த பதட்டத்தை அவதானித்த அவர், அவர்கள் நின்றதாகச் சொன்ன திசையில் ஜன்னலினூடாக வானத்தைப் பார்த்தார். பார்த்தவர் நடுங்கிப் போய்விட்டார். அங்கே மூன்று வெளிச்சங்களுடன் ஏதோ வானத்தில் மிதப்பது தெரிந்தது.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%204
ஹைன்ரிக்கும், ஹூபேர்ட்டும் நின்ற இடத்தில் 20 நிமிடங்கள் நின்று ஆராய்ந்த பறக்கும் தட்டு, மெல்ல நகரத் தொடங்கியது. உடன் அவர்களும் அதைத் தொடர்ந்து செல்லலானார்கள். ஏனோ அவர்களுக்கு அதன் மர்மத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது. இவர்கள் காரில் பறக்கும் தட்டைத் தொடர்கிறார்கள் என்று பறக்கும் தட்டில் இருப்பவர்களுக்குத் தெரிந்ததோ இல்லையோ, பறக்கும் தட்டும் காரின் வேகத்தில் மிக மெதுவாக நகரத் தொடங்கியது. பறக்கும் தட்டிலிருந்து யாரோ தம்மைக் கவனிக்கிறார்கள் என்ற உணர்வு இருவருக்கும் தோன்றியது. இதே நேரத்தில் போலீஸ் நிலையத்திலிருந்து இவற்றை அல்பேர்ட் அவதானித்துக் கொண்டே இருந்தார். அங்கிருந்து கிளம்பிய பறக்கும் தட்டு, மீண்டும் ஒரு பெரிய விவசாய நிலத்தின் மேல் வந்ததும் அப்படியே அந்தரத்தில் நின்றது. இவர்களும் தங்கள் காரை நிறுத்திவிட்டு, இறங்கி நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். அதற்கு அப்புறம் பறக்கும் தட்டில் என்ன நடந்தது என்று நான் சொன்னால், நீங்கள் யாரும் நம்பப் போவதில்லை. அது எங்கு போய் தொடர்பு ஆகின்றது என்பதைப் பார்த்ததும் உங்களுக்கே சிரிப்போ, ஆச்சரியமோ வரும். இப்போது கூடச் சொல்கிறேன். நான் சொல்லும் எதையும் நீங்கள் நம்ப வேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை. சரி, அங்கு என்ன நடந்தது தெரியுமா..?

சிறிய பந்து போன்ற வடிவில், வெள்ளை நிற ஒளிப்பந்து ஒன்று அந்தப் பறக்கும் தட்டிலிருந்து கீழே இறங்கியது. அது கீழே இறங்கி, வயல் வெளிக்குச் சற்று மேலே அதை அளப்பது போல, அங்கும் இங்கும் அலைந்தது. சிறிது நேரத்தின் பின்னர் மெலே போய் பறக்கும் தட்டுடன் சேர்ந்து கொண்டது. இந்த ஒளிப்பந்து கீழே இறங்கி அலையும் போது, பறக்கும் தட்டிலிருந்தும் லேசர் போன்ற சிவப்பு நிறக் கதிர்கள் அந்த ஒளி வட்டம் அலையும் இடத்தை எல்லையாக காத்துக் கொண்டிருந்தன. இந்த மாதிரி ஒளிப்பந்துகளை முன்னரும் நாம் பார்த்திருக்கிறோம். சுலபத்தில் அவற்றை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இங்கிலாந்தின், வைல்ட் ஷையரில் பயிர் வட்டங்கள் உருவாக்கப்படும் போது, இப்படிப்பட்ட ஒளிப்பந்துகளைக் கண்டதாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சொன்னது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். இந்த ஒளிப்பந்துகளும் அவை போலவே காணப்பட்டன. ஆனால் ஒய்ப்பனில் பயிர் வட்டம் எதுவும் உருவாகவில்லை. அந்தப் பறக்கும் தட்டு மெது மெதுவாக ஒவ்வொரு வயல் வெளியாக ஆராய்ந்தது மட்டும்தான் நடந்தது. அது ஏன் என்று தெரியவில்லை. ஒளிப்பந்துகளும், லேசர் வெளிச்சமும் தெரிந்ததும் இரண்டு போலீஸ்காரர்களும் பயந்து விட்டனர். அதுவரை அமைதியாக இருந்துவிட்டு, தங்களைத் தாக்கத்தான் அந்த ஒளிவட்டங்களைப் பறக்கும் தட்டு அனுப்புகிறதோ என்று முதலில் நினைத்தவர்கள். அப்படி நடக்காவிட்டாலும், அடுத்து என்ன நடக்கும் என்ற பயத்தில் காரில் ஏறி அமர்ந்துவிட்டார்கள். ஆனால் ஒளிப்பந்து பறக்கும் தட்டை மீண்டும் வந்து அடைந்ததும், திடீரெனப் பறக்கும் தட்டு வேகமெடுத்து விண்வெளியில் மறைந்தது. அவ்வளவு வேகத்தை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. நினைக்க முடியாத வேகம். ஆனால், அந்த வேகத்திலும் எந்தச் சந்தமும் அவர்களுக்குக் கேட்கவில்லை.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 9 Photo%205
பெல்ஜியத்தில் முதன் முதலாக நடந்த பறக்கும் தட்டுச் சம்பவம் இது. இதை வெளியில் சொன்னவர்கள் மூவரும் பெல்ஜியம் போலீஸில் பணிபுரிபவர்கள். இவர்கள் மூவரும் பொய் சொல்ல மாட்டார்கள் என்றாலும், இப்படி ஒரு சம்பவத்தை எப்படி நம்புவது என்றே பலர் நினைத்தார்கள். ஆனால் அமெரிக்கா போல, இதை மறைக்க முயற்சி செய்யாமல் வெளிப்படையாகப் பத்திரிகைகளுக்கு போலீஸ் அறிக்கை கொடுத்தது. பலர் இதை நம்பவில்லை. பணிபுரியும் நேரத்தில் போலீஸார் மூவரும் ஆல்கஹால் பாவித்து விட்டு உளறுகிறார்களோ என்று மக்கள் நினைத்தார்கள். முதலில் இந்தச் செய்தி பெல்ஜியத்தில்தான் பரவியது. பெல்ஜியம் மக்கள் யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் இதே பறக்கும் தட்டைப் பெல்ஜியத்தின் தலைநகரான ப்ரஸெல்ஸில் உள்ள மக்கள் அனைவரும் பார்க்கப் போகிறார்கள் என்று அவர்களுக்கு அன்று தெரிந்திருக்கவில்லை. 

ஆம்! அதே முக்கோண வடிவப் பறக்கும் தட்டை பெல்ஜியத்தில் இருக்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பார்த்திருக்கிறார்கள். உண்மையாக லட்சக்கணக்கான மக்கள் பார்த்திருந்தாலும், உத்தியோகபூர்வமாக அதைப் பார்த்தவர்கள் என்று கூறியவர்கள் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள். அது மட்டுமில்லை, 1989ம் ஆண்டு கடைசிப் பகுதியில் பெல்ஜியத்தில் தெரிய ஆரம்பித்த பறக்கும் தட்டு, தொடர்ச்சியாக 1992ம் ஆண்டு நடுப்பகுதி வரை பெல்ஜியத்தையே கலக்கத்தில் வைத்திருந்தது. இப்போது நீங்கள் நினைக்கலாம், 'அட! இதைக் கூட முன்று போலீஸ்காரர்கள்தானே கண்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களும் பொய் சொல்லலாம்தானே! அத்துடன் மக்களும் எதையோ கண்டுவிட்டு, பறக்கும் தட்டு என்று நினைத்திருக்கலாம்' என்று. அனால் விசயம் இத்துடன் நின்று விடவில்லை. நம்மை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காகவே, பல சம்பவங்கள் பெல்ஜியத்தில் நடந்தன. பறக்கும் தட்டுகளுக்கான அசைக்க முடியாத அத்தாட்சிகளாக அவை அமைந்தன. அரசே முன்னின்று அவற்றைச் சமர்ப்பித்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

அவை என்ன ஆதாரங்கள் என்றுதானே யோசிக்கிறீர்கள்? அதையும், பெல்ஜியத்தில் தொடர்ச்சியாக என்ன நடந்தது என்பதையும் அடுத்த வாரம் பார்க்கலாம்........!




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Nov 13, 2012 10:33 pm

மிகவும் விறுவிறுப்பாக உள்ளது. தொடருங்கள்

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Tue Nov 13, 2012 11:14 pm

அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



Page 9 of 12 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக