புதிய பதிவுகள்
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10 
52 Posts - 45%
heezulia
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10 
47 Posts - 41%
mohamed nizamudeen
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10 
3 Posts - 3%
Manimegala
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10 
2 Posts - 2%
prajai
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10 
416 Posts - 49%
heezulia
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10 
28 Posts - 3%
prajai
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_m10"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு


   
   

Page 8 of 12 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat May 19, 2012 2:10 pm

First topic message reminder :

ராஜ் சிவா !

ஈகரை அன்பர்களுக்கு நன்கு தெரிந்த பெயர் ,,,,

2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' என்ற சுவாரசியமான கட்டுரையின் ஆசிரியர் .
அவர் வேறொரு கட்டுரை தொடரை உயிரோசையில் ஆரம்பித்துள்ளார் அதுதான்

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன"

இந்த கட்டுரை பற்றிய அறிமுகத்தில் ராஜ் சிவா இப்படி குறிப்பிடுகிறார்

நான் எழுதப் போகும் அனைத்தும் உங்களால் நம்ப முடியாதவையாகவே இருக்கும். ஆனால் ஒரு நேரத்தில் நம்ப வேண்டிய கட்டாயங்கள் உங்களுக்கு வந்தே தீரும். இவற்றை நீங்கள் நம்ப வேண்டும், நம்பாமல் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் தாண்டி, இப்படியெல்லாம் உலகில் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியப்படுத்துவதே என் முதல் நோக்கமாக இருக்கிறது.

அப்படி என்ன தான் சொல்லபோகிறார் ராஜ் சிவா!

உங்களோடு அறிய நானும் ஆவல்கொண்டிருக்கிறேன் ..படிப்பதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்

இதோ முதல் பகுதி .......

நன்றி :உயிரோசை






வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Aug 02, 2012 9:51 pm

ராஜ்சிவா

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" PART-11









"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo%201
இந்துக்களின் 'ஓம்' என்னும் வடிவம் பயிர்வட்டங்களில் இருந்தது நம்மை மட்டுமல்ல, உலகம் முழுவதையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்பது என்னவோ உண்மைதான். அதுவும் பயிர்வட்டங்களின் வரலாற்றிலேயே மிகவும் ஆணித்தரமாக, மனிதனால் உருவாக்கப்படவில்லை என்று சொல்லப்படும் ஒன்றாக, 'ஓம்' வடிவப் பயிர்வட்டம் இருக்கிறது என்கிறார்கள். உண்மையில் அந்த வடிவம் 'ஓம்' தானா அல்லது வேறு ஒன்றைக் குறிப்பதா? என்பது இன்றுவரை புரியவில்லை. 'ஓம்' என்னும் வடிவத்துக்கு இருக்க வேண்டிய அனைத்துக் கோடுகளும் அந்தப் பயிர்வட்டத்தில் உருவாக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, அது 'ஓம்'தான் என்று அடித்துச் சொல்கிறார்கள் சிலர். ஒரு பேச்சுக்கு அதை 'ஓம்' என்று நாம் எடுத்துக் கொண்டால், ஏலியன்களுக்கும்  'ஓம்' வடிவத்துக்கும் என்ன சம்பந்தம் என்ற ஆராய்ச்சிக்குப் போக வேண்டும். அப்படிப் பார்க்கும்போது, புராதன ஏலியன்களின்  (Ancient Aliens) ஆராய்ச்சியில் இந்து மதப் புராணக் கதைகளும், கடவுளர்களும்தான் மேற்குலக ஆராய்ச்சியாளர்களால் முதன்மைப்படுத்திச் சொல்லப்படுவதாக இருக்கிறது. 'புராதன ஏலியன்களும், இந்து மதமும்' என்று இன்னுமொரு தொடரையே உங்களுக்கு நான் தரும் அளவுக்குத் தகவல்கள் அவை பற்றி நிறைந்திருக்கின்றன. முடிந்தால் வேறொரு தொடர் மூலம் அதைத் தருகிறேன்.


மேலே சொல்லப்பட்ட 'ஓம்' வடிவப் பயிர்வட்டத்துக்கு இன்னுமொரு சிறப்பும் உண்டு. அது 07.07.07 இல் என்று எல்லாமே ஏழில் வரும் திகதியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. நிச்சயம் இது இந்துக்களின் 'ஓம்'தான் என்று சிலர் அடித்துச் சொல்வதற்கு, சாட்சியாக வேறொரு வட்டச் சித்திரத்தைக் காட்டுகிறார்கள். இந்தப் பயிர்வட்டச் சித்திர அமைப்புகள் பயிர்களினால் மட்டுமல்ல, மணல், ஐஸ் போன்றவற்றினாலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறேன். அமெரிக்காவின் ஆரிகனில் (Oregon) 1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஒரு ஆற்றுப்படுகைக்கு அருகே இருக்கும் மணல்பரப்பில் ஒரு சித்திரம் உருவாக்கப்பட்டிருந்தது. அந்தச் சித்திரம் ஒரே இரவில் உருவாக்கப்பட்டிருந்தது. "ஆற்று மணலில் சித்திரம் வரைவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது. மனிதர்கள் சுலபமாக அதை வரைந்துவிடலாமே" என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அந்தச் சித்திரம் நீங்கள் நினைப்பது போலல்ல. மிகவும் சிக்கல் வாய்ந்த ஒரு சித்திரம் அது. அந்தச் சித்திரத்தில் வரையப்பட்டிருக்கும் கோடுகளின் மொத்த நீளம் 21 கிலோமீட்டர் என்றால் அதன் பிரமாண்டத்தைக் கற்பனை பண்ணிப் பார்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு கோடும் 10 அங்குலம் அகலமுள்ள மிகவும் பிரமாண்டமான சித்திரம் அது. அந்தச் சித்திரம் என்ன வடிவத்தில் இருந்தது என்பதுதான் இங்கு ஆச்சரியமே! அந்த வடிவம் என்ன தெரியுமா? இந்துக்களின் 'இயந்திரம்' (Sri Yantra) என்று சொல்வோமே அந்த வடிவத்தில் அது இருந்தது. 







"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo%202




"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo%203

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo%204
ஒரே இரவில் இவ்வளவு பெரியதொரு சித்திரத்தை மனிதர்களால் உருவாக்கவே முடியாது. அதுமட்டுமல்லாமல், அந்தச் சித்திரம் அமைக்கப்பட்ட இடம், ஈரமான சேற்று மண்ணில். அங்கு யாராவது சித்திரத்தை அமைத்திருந்தால்,  அவர்களது காலடித் தடம் எல்லா இடங்களிலும் இருந்திருக்க வேண்டும். அந்தச் சித்திரம் அமைந்த இடம் மட்டுமில்லாமல், அதைச் சுற்றிவர எங்குமே எந்தக் காலடித் தடங்களும் காணப்படவில்லை. மனிதர்கள் செய்திருந்தால், செய்தவர்களின் காலடித் தடத்தில் ஒன்றாவது அங்கு இருந்திருக்க வேண்டுமல்லவா? சேற்று மணலில் தடங்களை அழித்துவிட்டு எப்படிச் செல்ல முடியும்? சித்திரத்தின் உள்ளேயும் எந்தக் காலடிகளும் இல்லை. எப்படி இது சாத்தியம்? அந்தச் சித்திரம் அமைக்கப்பட்டதும் மக்கள் கூட்டமாக வந்து அதைக் கவனிக்கத் தொடங்கியபோது, இருவர் தாங்கள்தான் அதை உருவாக்கியது என்று சேறு படிந்த காலணிகளுடன் வந்தார்கள். அவர்கள் அதை வரைந்த விதத்தை விளக்கியபோதே சந்தேகம் தோன்றியது. அவர்களிடம் இது போல ஒன்றைச் சாதாரண காகிதத்தில், அல்லது நிலத்தில் மீண்டும் வரைந்து காட்டினால், தகுந்த பரிசு அளிக்கிறோம் என்று கூறியதும், போக்குக் காட்டிவிட்டு அவர்கள் நழுவியதும் நடந்தது.


உலகமெங்கும் மனிதர்கள் அறிய முடியாத இது போன்ற மர்மங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அப்படி நடக்கும் மர்மங்களில் பல, மனிதர்கள் சம்பந்தப்படாத போதும் நம்பக்கூடிய வகையிலேயே அமைந்துவிடுகின்றன. இங்கு நடந்திருப்பதும் மனிதர்களல்லாத ஏதோ ஒரு சக்தியால் உருவாக்கப்பட்டதாகவே சொல்கிறார்கள். அதுவும் அங்கு வரையப்பட்டிருக்கும் சித்திரம் இந்துக்களின் 'ப்ரீ இயந்திரம்'  என்று சொல்லும் வடிவில் அமைந்திருந்தது. ப்ரீ இயந்திரச் சித்திரத்துடன் முடிச்சுப் போட்டே, 'ஓம்' என்னும் பயிர் வட்டத்தையும் இந்துக்களுடைய வடிவம்தான் என்கிறார்கள் சிலர். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் 'ஓம்' பயிர் வட்டத்தில் இரவு பகலாக தியானங்களும், இந்துப் பஜனைகளும் பல நாட்களாக நடந்து வந்தது தனிக் கதை.





"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo%205
பயிர்வட்டங்கள் மனிதனால் உருவாக்கப்படுகின்றன அல்லது வேறு ஒரு சக்தியினால் உருவாக்கப்படுகின்றன என்பதைவிட, ஏன் உருவாக்கப்படுகின்றன என்னும் கேள்விக்குத்தான் எந்தப் பதிலும் கிடைப்பதில்லை. ஆனால் உருவாக்கப்படும் ஒவ்வொரு பயிர்வட்டத்துக்கும் ஏதோ ஒரு அர்த்தம் இருப்பதாகவே, அவற்றை ஆராய்பவர்கள் நினைக்கிறார்கள்.  இதுவரை உருவாக்கப்பட்ட பத்தாயிரத்துக்கும் அதிகமான பயிர்வட்டங்களுக்கு, அவை என்னென்ன அர்த்தங்களைக் கொடுக்கின்றனவோ, அதைப் பொறுத்துத் தனித்தனிப் பெயர்களை அதை ஆராய்பவர்கள் சூட்டியிருக்கின்றனர். பல சிக்கலான கணித வரைவுகளையுடைய பயிர்வட்டங்கள் இதுவரை உருவாக்கப்பட்டிருக்கின்றன. பயிர்வட்டங்களுக்கும் 'கேத்திரகணித' வரைவுகளுக்கும் (Geometry) நிறையவே சம்பந்தங்கள் இருப்பது, அவற்றின் அமைப்பின் மூலம் இலகுவாகப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. ஒரு பேச்சுக்கு இந்தப் பயிர்வட்டங்களை ஏலியன்கள்தான் உருவாக்குகின்றன என்று வைத்துக் கொண்டால், 'ஏலியன்களுக்கும், ஜியாமட்ரிக்கும் அப்படி என்னதான் சம்பந்தம் இருக்கும்?' என்ற கேள்வி நம்மை எப்போதும் ஆச்சரியப்பட வைக்கும்.  


இந்த வகையில் 2008ம் ஆண்டு ஜூன் மாதம் 1ம் திகதி, இங்கிலாந்தில் உள்ள 'பார்பர்ரி காஸில்' (Barbury Castle) என்னுமிடத்தில் ஒரு பயிர்வட்டம் தோன்றியது. பல பரிசோதனைகளின் பின்னர் அது மனிதர்களால் உருவாக்கப்படவில்லை என்ற முடிவுக்கு அதை ஆராய்ந்தவர்கள் வந்திருந்தனர். ஆனால் அந்தப் பயிர்வட்டத்தின் அமைப்பு அனைவரையும் குழப்பத்திலாழ்த்தியது. வட்டவடிவமாகக் காட்சிதரும் அந்தச் சித்திரத்தில், ஒரு கோடு மையத்திலிருந்து ஆரம்பித்து, வட்டத்தின் விளிம்புவரை வளைந்தும் திரும்பியும் செல்வது போல  அமைக்கப்பட்டிருக்கிறது. மைய வட்டத்தில் ஆரம்பிக்கும் கோட்டின் ஆரம்பத்திலேயே ஒரு சிறு புள்ளி போன்ற வட்டமும், முடிவில் மூன்று வட்டங்களும் காணப்படுகின்றன. இது அந்தப் பயிர்வட்டத்தில் ஒரு வித்தியாசமான தோற்றதைக் கொடுத்தது. அந்தச் சித்திரத்தின் படம் மேலே கொடுக்கப்பட்டிருக்கிறது.


அந்தப் பயிர்வட்டம் மனிதனால் செய்யப்படவில்லை என்று உறுதிசெய்யப்பட்ட பின்னர், அந்தப் பயிர்வட்ட அமைப்புக்கு என்ன அர்த்தம் என்பதை அறிவதற்கு மிகவும் ஆவலுடன் முயன்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஆனால், என்ன முயன்றும் சுலபமாக அதன் அர்த்தத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 150 அடிகள் அகலமான அந்தப் பயிர்வட்டம், பார்லி (Barley) பயிரினால் உருவாக்கப்பட்டிருந்தது. இதுவரை உருவாக்கப்பட்ட சிக்கலான பயிர்வட்டங்களில், முதன்மையான பயிர்வட்டமாக அது கருதப்படுகிறது. யாருக்கும் அதன் அர்த்தம் புரியவில்லை. அதன் அர்த்தம் புரியாததனால், 'நாங்கள்தான் உருவாக்கினோம்' என்று சொல்லி அதைச் சொந்தம் கொண்டாட யாரும் வரவுமில்லை. சில காலங்களின் பின்னர் நார்த் கரோலினாவைச் (North Carolina) சேர்ந்த ஆஸ்ட்ரோ பிசிஸிஸ்ட்டான 'மைக் ரீட்' (Dr.Mike Reed) என்பவர் அதற்கான அர்த்தத்தைக் கண்டுபிடித்தார். அவர் கண்டுபிடித்த அர்த்தம் அனைவரையும் மலைக்க வைத்தது. "அடக்கடவுளே! இது எப்படிச் சாத்தியம்?" என்று பலரையும் திகைக்க வைத்தது. "மனிதனுக்கு மட்டுமே தெரிந்திருந்தது எப்படி ஏலியன்களுக்குத் தெரிந்திருக்க முடியும்?" என்று நினைக்க வைத்தது? "இது மனிதன் உருவாக்கியதுதானோ?" என்றும் சந்தேகப்பட வைத்தது. ஆனால், 'மனிதனால் இப்படிச் சிந்தித்து சிக்கலாக இதுபோல ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கவே முடியாது' என்றே பின்னர் முடிவுக்கு வந்தனர். இவ்வளவு சிந்திக்க வைத்த அந்தப் பயிர்வட்டத்தின் அர்த்தம் என்ன தெரியுமா?





"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo%206
நாம் கணிதத்தில், வட்டங்களின் சமன்பாடுகளில் (Equations) பயன்படுத்தும் 'பை' அதாவது 'π' என்பதுதான் அது. கணிதம் படித்தவர்களுக்கு 'பை' (Pi) என்றால், 22/7 அல்லது 3.141592654... என்பது தெரியும். கணிதத்தில் 'பை' என்பதை நாம் பல இடங்களில் பயன்படுத்தி வந்திருக்கின்றோம். அதே 'பை' யை, அந்தப் பயிர்வட்டத்தில், அதன் கணிதப் பெறுமானத்தைக் கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு வட்டத்தை, அதன் மையத்திலிருந்து பத்துச் சமபங்குகளாகப் பிரித்து, ஒவ்வொன்றுக்கும் ஒன்று என்னும் எண்ணிக்கையைக் கொடுத்து 3.141592654... என்னும் பெறுமானத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதை வாசிக்கும்போது, நான் மேலே கொடுத்திருக்கும் வர்ணப் படத்தைச் சற்று நிதானமாக அவதானித்துப் பாருங்கள், நான் சொல்ல வருவது முழுமையாகப் புரியும். 




"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo%207
'பை'யினது பெறுமதியைப் பத்து இலக்கங்களுக்குக் கொடுத்தது மட்டுமல்லாமல், அதன் தொடர்ச்சியாக மூன்று புள்ளிகளையும் கொடுத்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் விட ஆச்சரியம் என்னவென்றால், மூன்றுக்குப் பக்கத்தில் வரும் தசம புள்ளியைக் குறிப்பதற்கு, பயிர்வட்டத்தில் ஒரு சிறிய புள்ளி போன்ற வட்டத்தை, மையத்தின் ஆரம்பத்திலேயே அமைத்திருக்கிறார்கள். இந்தப் பயிர்வட்டத்தை மனிதன் அமைத்தானோ, ஏலியன் அமைத்ததோ என்று சிந்திப்பதை விட, அது அமைக்கப்பட்டிருக்கும் சிறப்புத்தான் பலராலும் பேசப்படுகிறது. பயிர்வட்டங்களிலேயே ஒரு மைல்கல்லாக அமைந்த சித்திரமாக அது கணிக்கப்படுகிறது. அதை மனிதன் செய்யவே இல்லையென்ற முடிவுதான் ஆராய்ந்தவர்களின் முடிவாக உள்ளது. ஒருவேளை மனிதன் இதைச் செய்திருந்தால், அந்த மனிதன் பயிர்வட்டத்தைச் செய்து கொண்டிருக்கும் ஒருவனாக இருக்கவே தேவையில்லை. அவன் உலகில் மாபெரும் கணிதவியலாளனாக எல்லாராலும் மதிக்கப்பட்டிருப்பான். இப்படி ஒளிந்திருந்து பயிர்வட்டங்களை அவன் அமைக்கவே தேவையில்லை.  ஆனால் கிடைத்த அனைத்துத் தகவல்களும் அந்தப் பயிர்வட்டத்தை மனிதர்கள் உருவாக்கவில்லை என்று அடித்துக் கூறுகிறது. அந்த வகையில் அதை ஏலியன்கள் உருவாக்கினார்கள் என்றே நம்ப வேண்டியிருக்கிறது. அப்படி இருக்கும்பட்சத்தில், ஏலியன்கள் 'பை' என்பதை எப்படித் தெரிந்துகொண்டார்கள்? கணிதம் என்பது உலக ரீதியாக இல்லாமல், பிரபஞ்ச ரீதியாக ஒரே மாதிரியானதுதானா அல்லது ஏலியன்கள் 'பை' மூலமாக நமக்கு ஏதாவது செய்திகளைக் கூற விரும்புகின்றனரா?  

இவையெல்லாம் நம்மைத் துளைத்தெடுக்கும் கேள்விகளாகவே இருக்கின்றன. இவற்றிற்கான பதில்களை நாம் எப்போதுதான் பெற்றுக் கொள்ளப் போகிறோம்? விடை தெரியாத மர்மச்சுழல்கள் நம்மை மேலும் மேலும் அழுத்தியபடியே இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், மனிதனால் செய்யப்பட்ட பயிர்வட்டங்கள் எவை? மனிதனால் செய்யப்படாதவை எவை? என்று ஆராய்ச்சியாளர்கள் எப்படி உறுதி செய்கின்றனர் என்பதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.



எப்படி அவற்றைப் பிரித்துக் கண்டுபிடிக்கிறார்கள்? அதை அடுத்த வாரம் பார்க்கலாமா..? 





வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Aug 02, 2012 10:09 pm

'புராதன ஏலியன்களும், இந்து மதமும்' இந்த தொடரையும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் மாயன் தொடரில் கூறியது போல் 21.12.2012 அன்று எதுவும் நடக்காமல் இருந்தால்... புன்னகை
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 224747944 பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா... "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 678642



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Aug 03, 2012 8:38 am

வியப்பூட்டும் தகவல்கள் நன்றி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Aug 03, 2012 11:00 am

ரா.ரமேஷ்குமார் wrote:'புராதன ஏலியன்களும், இந்து மதமும்' இந்த தொடரையும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் மாயன் தொடரில் கூறியது போல் 21.12.2012 அன்று எதுவும் நடக்காமல் இருந்தால்... புன்னகை
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 224747944 பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா... "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 678642
புன்னகை "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 678642ரமேஷ்!



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Aug 06, 2012 9:09 pm

இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? பாகம் :12

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo 1 
இதுவரை நாம் பயிர்வட்டங்களைப் பற்றி நிறையப் பார்த்திருக்கின்றோம். ஆனால் அவை யாரால் உருவாக்கப்படுகின்றன என்னும் கேள்விக்குத்தான் தெளிவான பதில்கள் நமக்குத் தெரியவில்லை. மனிதனால் உருவாக்கப்பட்டவை, மனிதனால் உருவாக்கப்படாதவை என்ற மேலோட்டமான இரு நிலைகளில் நின்று ஊசலாடிக் கொண்டிருந்திருக்கிறோம். பயிர்வட்டங்களை மனிதர்கள் உருவாக்கினார்கள் என்றால், 'ஏன் உருவாக்கினார்கள்?', 'எப்படி உருவாக்கினார்கள்?', 'மனிதர்கள் உருவாக்கியதை நாம் எப்படிக் கண்டுகொள்கிறோம்?' என்னும் கேள்விகள் நம் முன்னே வந்து நிற்கும். மனிதர்களால் அவை உருவாக்கப்படவில்லை என்றால், 'அவை யாரால் உருவாக்கப்படுகின்றன?', 'தாமாகவே இயற்கையாக உருவாகின்றனவா?', 'தெய்வசக்தி போல, ஏதாவது ஒரு சக்தி இவற்றை உருவாக்குகின்றதா?' என்ற கேள்விகளும் அடுத்து எழுகின்றன. இந்த நிலையில், பயிர்வட்டங்களைப் பற்றி மேலும் பார்ப்பதற்கு முன்னர், நாம் மேலே உள்ள கேள்விகளுக்கு முழுமையான பதில்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. பயிர்வட்டங்கள் பற்றி நாம் இதுவரை பார்த்த தகவல்கள் அனைத்தும், அவை பற்றிய புரிதல்களுக்காக அங்கொன்றும், இங்கொன்றுமாகத் தொட்டுச் செல்வதாகவே அமைந்திருந்தது. அதனால், பயிர்வட்டங்களின் மேல் ஒரு முழுமையான பார்வையைச் செலுத்தவேண்டிய கட்டாயத்துக்கு இப்போது நாம் வந்திருக்கிறோம். 

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo 2



புராதன காலத்திலேயே பயிர்வட்டங்கள் உருவாக்கியதற்கான சான்றுகள் நம்மிடையே இருக்கின்றன. தென்னாபிரிக்கா, சீனா, மேற்கிந்தியா ஆகிய நாட்டவர்களின் புராதனக் கதைகளில் இவை பற்றிய குறிப்புகள் காணப்பட்டாலும், 1590ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி, இங்கிலாந்தில் பயிர்வட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது என்ற குறிப்பு முதன்முதலாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, 1633 இல் இங்கிலாந்திலுள்ள ஒரு பாடசாலை ஆசிரியை பயிர்வட்டத்தைக் கண்டதாகவும், அதற்கு அப்புறம் 1678 இல் பிசாசு ஒன்று, விவசாயிக்கு பயிர்வட்டத்தை உருவாக்கியதாகவும் குறிப்புகள் உள்ளன. அதற்குப் பின்னர் அப்படியே ஓய்ந்துவிட்ட இந்தப் பயிர்வட்டச் சரித்திரம், மீண்டும் 1970 தொடக்கம் 1990 வரையுள்ள காலங்களில் அதிகளவில் சூடுபிடிக்கத் தொடங்கியது. அதன் பின்னர் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கில் பயிர்வட்டங்கள் தோன்றத் தொடங்கின. உலகளாவிய ரீதியில் இதுவரை 10000 க்கும் அதிகமான பயிர்வட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்ற கணக்கு இருந்தாலும், 6000 பயிர்வட்டங்கள் முழுமையாக ஆராயப்பட்டு, ஆவணப்படுத்தப் பட்டிருக்கின்றன. பயிர்வட்டங்களின் வடிவம், தன்மை, அர்த்தம், நம்பகத்தன்மை போன்றவை அனைத்தும் முழுமையாகப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு ஆவணங்களாகப் பாதுகாக்கப்படுகின்றன. இவற்றை ஆராய்வதற்கென்றே, 'பயிர்வட்ட ஆய்வாளர்கள்' என்னும் ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்கிறது. பயிர்வட்டங்கள் உருவாகும் போது, தாங்கள் நேரிலேயே கண்டதாகப் பலர் சொல்லியிருந்தாலும், மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த 80 பேர் சொன்ன சாட்சியங்கள் மட்டும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. அப்படிச் சாட்சி சொன்னார்கள். அனைவருமே மதிப்பும், மரியாதையும் வாய்ந்த பிரஜைகளாக இருப்பது மேலதிக தகவலாகவும் இருக்கிறது.


"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo 3



1970 முதல் 1990 வரையுள்ள காலப்பகுதியில் பயிர்வட்டங்கள் உருவாக்கப்பட்டபோது, உலகம் முழுவதும் அந்தச் செய்தி பரவி, மிகப்பிரபலமாகப் பேசப்படத் தொடங்கியது. பயிர்வட்டங்கள் உருவாகிய ஆரம்ப காலங்களில், அவை ஆச்சரியமான, அதிசயமான, மர்மமானவையாகவும் பார்க்கப்படத் தொடங்கின. இந்த அதிசயத்தினால் கவரப்பட்டு, உலகில் பல மூலைகளிலுமிருந்தும் பார்வையாளர்கள் வர ஆரம்பித்தனர். படிப்படியாக அவற்றின் செல்வாக்குகளும் அதிகரிக்க ஆரம்பித்தன. வந்தவர்கள் அனைவரிடமும் ஒரே ஒரு கேள்வி மட்டுமே இருந்தது. "இந்தப் பயிர்வட்டங்களை உருவாக்குவது யார்?" என்பதே அந்தக் கேள்வி. தொடர்ந்து உருவான பயிர்வட்டங்களின் வடிவங்களில் படிப்படியாகச் சிக்கலான கணித அமைப்புகளும் தோன்ற ஆரம்பித்தன. இதனால். பயிர்வட்டங்களை உருவாக்குபவர்கள் மிகுந்த அறிவாளிகள், சக்தி வாய்ந்தவர்கள் என்ற பேச்சும் வளர ஆரம்பித்தது. இந்தப் பேச்செல்லாம், அயல் கிரகவாசிகள் (ஏலியன்கள்) அவற்றை உருவாக்குகிறார்கள் என்னும் நம்பிக்கையிலேயே பேசப்பட்டன. 


"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo 4


இந்தக் காலகட்டத்தில்தான், அதாவது 1991ம் ஆண்டு செப்டம்பர் 9ம் திகதியன்று இங்கிலாந்தில், 'டக் போவெர்' (Doug Bower), டேவிட் ஷோர்லி (David Chorley) என்னும் இரண்டு 67, 62 வயதுடையவர்கள் தாங்கள்தான் அனைத்துப் பயிர்வட்டங்களையும் உருவாக்கியவர்கள் என்று பத்திரிக்கைகளுக்குப் பேட்டி கொடுத்தனர். உலகமே நம்பலாமா? வேண்டாமா? என்று பிரமித்தபடி தவித்துக் கொண்டிருந்த ஒரு மாபெரும் சிக்கலுக்கு விடையளிப்பது போல இருந்தது அவர்கள் பேட்டி. இவர்கள் மூலம் கிடைத்த பதிலால் நிம்மதியடைந்தனர் பலர். "நாம் பயந்தது போல, இவற்றை ஏலியன்கள் செய்யவில்லை" என்ற திருப்தி பலரிடமிருந்து வெளிப்படலாயிற்று. டக், டேவிட் இருவரும் கொடுத்த பேட்டியில், "தாங்கள் இருவரும் 1978ம் ஆண்டிலிருந்தே பயிர்வட்டங்களை உருவாக்க ஆரம்பித்ததாகவும், ஒருநாள் ஒரு ரெஸ்ட்டாரென்டில் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்த போது, இந்த ஐடியா தோன்றியது" என்றும் சொன்னார்கள். அத்துடன், அவர்கள் கையுடன் கொண்டுவந்திருந்த, கயிற்றால் இருபக்கமும் கட்டப்பட்டிருக்கும் ஒன்றரை மீட்டர் நீளமான பலகையைக் காட்டி, அந்தப் பலகையை ஒருகாலில் வைத்துக்கொண்டு பயிர்களை அழுத்துவதன் மூலம், பயிர்வட்டங்களை உருவாக்கியதாகவும் சொன்னார்கள். 


ஒருவழியாக எல்லாமே சுமுகமான முடிவுக்கு வந்தது என்றுதான் எல்லாரும் நினைத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் இருவரும் கொடுத்த தொடர்ச்சியான பேட்டிகளில் ஏற்பட்ட முரண்பாடுகள் பலரை மீண்டும் சிந்திக்க வைத்தன. 1978ம் ஆண்டிலிருந்து அவர்கள் உருவாக்கிய பயிர்வட்டங்களின் எண்ணிக்கையைக் கவனத்தில் எடுத்தாலும், ஆயிரக் கணக்கான பயிர்வட்டங்கள் எண்ணிக்கையில் வராமல் எஞ்சின. அவற்றை யார் செய்தார்கள் என்ற கேள்வி மீண்டும் எழுந்தது. இவர்கள் உருவாக்கியதாகச் சொல்லும் எண்ணிக்கையும் நம்பமுடியாததாக இருந்தது. காரணம், இங்கிலாந்தின் பல இடங்களில், பரவலாகப் பயிர்வட்டங்களைத் தாங்கள் உருவாக்கியதாக அவர்கள் சொல்லியிருந்தனர். இந்த இரண்டு பேரால் அவ்வளவு தூர இடங்களுக்குப் பிரயாணம் செய்து, இரவுகளில் உள்ள சில மணி நேரங்களில், அனைத்தையும் உருவாக்கியிருக்க முடியாது என்று சுலபமாகக் கண்டுபிடிக்க முடிந்தது.  இதில் அவர்கள் சொன்ன இன்னுமொரு விசயமும் சந்தேகத்தைத் தந்தது. அவர்கள் இருவரின் மனைவிகளுக்குத் தெரியாமலே, இரவிரவாகப் பயிர்வட்டங்களை உருவாக்கிவிட்டு, வீட்டுக்கு வந்து நித்திரைக்குப் போய்விடுவதாகவும் சொன்னார்கள். எதுவுமே நம்பக் கூடியதாக இருக்கவில்லை. அவர்கள் இருவரையும் அழைத்து, மிகவும் எளிமையானதொரு வடிவத்தை வரையுமாறு கூறியபோது, அவர்கள் உருவாக்கிய பயிர்வட்டம் அவர்களின் போலித்தனத்தை வெளிக்கொண்டு வந்தது. இந்தச் சித்திரத்தை அவர்களால் ஒரு காகிதத்திலேயே வரையமுடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் உருவாக்கிய பயிர்வட்டம் இதுதான்.


"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo 5

டக், டேவிட் இருவரும் கொடுத்தது பொய்யான வாக்குமூலம் என்று தெரிந்ததும், பழையபடி பதட்டம் இங்கிலாந்து மக்களைத் தொற்றிக் கொண்டது. ஆனால் டக், டேவ் இருவரும் போலியானவர்கள் என்று தெரிந்தாலும், அவர்களால் ஒரு மாபெரும் சிக்கலுக்கும் வித்திடப்பட்டது. பயிர்வட்டங்களை உருவாக்குவதற்கு அவர்கள் பயன்படுத்தியதாகச் சொல்லிய, அந்த நீளமான பலகையும், கயிறும் சில இளைஞர்களின் சிந்தனையைத் தூண்டி விட்டது. "அட! இது நல்ல உத்தியாக இருக்கிறதே!" என்று இளைஞர்கள் ஆங்காங்கே சிந்திக்க ஆரம்பித்தனர். டக், டேவிட் கூறியது போல, நாமும் செய்து பார்த்தால் என்ன என்று முடிவெடுத்தார்கள். அவர்களது கணித அறிவுக்கும், புத்திசாலித்தனங்களுக்கும் அது ஒரு சவாலாகவும் இருந்தது. பல இடங்களில், சில இளைஞர்கள் சேர்ந்து, பல பயிர்வட்டங்களை உருவாக்கத் தொடங்கினார்கள். இளைஞர்கள் என்று சொன்னால், அது எந்த நாட்டு இளைஞர்களாக இருந்தாலும், அவர்களிடம் இருப்பது குறும்புதானே! அதனால் பயிர்வட்டங்கள் பல இடங்களிலும் சரமாரியாகத் தோன்றத் தொடங்கின. இந்த நேரத்தில் ஆராய்ச்சியாளர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்ப ஆரம்பித்தார்கள். எது மனிதன் உருவாக்கியது, எது மனிதன் உருவாக்கியதல்ல என்று புரியாமல் திகைத்தனர். அது போதாதென்று, 'பயிர்வட்டம் உருவாக்குபவர்கள்' என்று ஒரு அமைப்பையே அந்த இளைஞர்கள் ஆரம்பித்தனர். இப்படி அவர்கள் வெளிப்படையாக அமைப்புகளை உருவாக்க வேறு ஒரு முக்கிய காரணமும் இருந்தது. 


பயிர்வட்டங்களின் அதிசயத்தினால், மக்கள் கூட்டம் கூட்டமாக, உலகெங்குமிருந்து பார்வையாளர்களாக, இங்கிலாந்தை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர்கள் அல்லவா? இதுவே விளம்பரக் கம்பெனிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. எதையும் விளம்பரப்படுத்தி, விற்பனை செய்யும் தந்திரம்தான் அவர்களுக்கு கைவந்த கலையாயிற்றே! அவர்கள் பயிர்வட்டங்களை உருவாக்கும் இந்தக் குறும்புக்கார இளைஞர்களைக் குறி வைத்தனர். இலட்சக்கணக்கில் பணம் கைமாறியது. கம்பெனிகளின் விளம்பரங்கள், பயிர்வட்டங்களாக உருவாக ஆரம்பித்தன. ஃபயர்பாக்ஸ், ஸ்விஸ் எயார், பியர் கம்பெனிகள், கார் கம்பெனிகள் என அனைத்துக் கம்பெனிகளும் பயிர்வட்டப் பிரதேசங்களுக்குப் படையெடுக்கத் தொடங்கின. மொத்தத்தில் விடையே கண்டுபிடிக்க முடியாமல் இருந்த அதிசயச் சம்பவம் ஒன்று, கேலிக்குரிய நகைச்சுவயாக மாறத் தொடங்கியது. கடைசியில் எது உண்மை, எது பொய்யெனத் தெரியமுடியாத அளவுக்கு பயிர்வட்டங்கள் பெருகத் தொடங்கின. இதனால் மக்களுக்கு அதில் உள்ள ஆர்வமும் படிப்படியாகக் குறையவும் தொடங்கியது.


"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo 6


"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo 7


"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo 8

பயிவட்டங்களை உருவாக்கும் இளைஞர்களிடம், 'ஏன் இப்படியெல்லாம் செய்கிறீர்கள்?' என்று கேட்ட போது, தங்கள் குற்ற உணர்ச்சியை மறைப்பதற்காக, 'ஒட்டுமொத்தப் பயிர்வட்டங்களையும் மனிதர்கள்தான் உருவாக்குகிறார்கள். அவற்றை ஏலியன்கள் உருவாக்குகின்றன என்று சொல்வது பச்சைப் பொய்' என்று சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனால் படிப்படியாக அவர்கள் அனவரையும் கிலியில் ஆழ்த்திய சம்பவங்கள் நடக்கத் தொடங்கின. பணத்துக்காகவும், குறும்புக்காகவும் இரவில் பயிர்வட்டங்களை இளைஞர்கள் உருவாக்கிக்கொண்டிருந்தபோது, அவர்களைச் சுற்றி பந்து போன்ற ஒளிவட்டங்கள் தோன்றத் தொடங்கின. ஒன்று, இரண்டு, மூன்று, பலவென ஒளிப்பந்துகள் அவர்கள் நிற்கும் வயல்வெளிகளில் அலையத் தொடங்கின. ஆனால் அந்த ஒளிவட்டங்களால் அவர்களுக்கு எந்தப் பாதிப்புகளும் ஏற்படவில்லை. இரவினில் பயிர்வட்டங்களை உருவாக்கிய அனைத்து இளைஞர்களும் வேறு வேறு இடங்களில் இந்த ஒளிவட்டங்களைக் கண்டிருக்கிறார்கள். யார் வாயால் பயிர்வட்டங்களை ஏலியன்கள் உருவாக்கவில்லை என்று சொல்லப்பட்டதோ, அவர்கள் அனைவரும் ஒளிப்பந்துகளைக் கண்டதாக ஒத்துக் கொண்டனர். இது விடை சொல்ல முடியாத ஆச்சரியமாக அமைந்தது.

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo 9





இப்படிப்பட்ட இளைஞர்களின் குரூரமான நகைச்சுவைகளால் பல உண்மைகளை நாம் அறிந்துவிடாமல் தவறவிட வேண்டிய சூழ்நிலைகளுக்குத் தள்ளப்படுகிறோம். இப்படித்தான், 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் திகதி ஹாலந்து நாட்டில் ஒரு மிகப்பெரிய பயிர்வட்டம் உருவாகியது. இதுவரை உருவாக்கப்பட்ட பயிர்வட்டங்களிலேயே மிகவும் பெரியது அது. அரைக் கிலோமீட்டருக்கும் (530 X 450 மீட்டர்) அதிகமான அளவுடையதாக இருந்தது. அத்துடன் மிகவும் அழகானதும், சிந்திக்க வைக்கும் உருவத்துடனும் அது காணப்பட்டது. டாவின்சியின் 'Vitruvian Man' என்னும் அடையாளம் போல, இரண்டு கைகளையும் ஒரு மனிதன் விரித்தபடி நிற்க, வண்ணத்துப்பூச்சியாக மாறுவது போன்ற பயிர்வட்டம் அது. ஐரோப்பா, அமெரிக்கா போன்ற அனைத்து நாடுகளையும் அதிர வைத்தது அந்தச் சித்திரம். மனிதனால் உருவாக்கியிருக்கவே முடியாது என்று எண்ணும்படி, மிகவும் ஆச்சரியத்தைத் தந்த அந்தப் பயிர்வட்டத்தையும் தாங்கள்தான் செய்தோம் என்று சொல்லிக் கொண்டு ஒரு இளைஞர்கள் கூட்டம் வந்தது. அதைச் செய்வதற்கு தாங்கள் ஆயத்தப்படுத்தியதாக ஒரு சிறிய காணொளியையும், அவர்கள் போட்டுக் காட்டினார்கள். ஆனால் அந்தக் காணொளியில் அதை உருவாக்கியதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இவர்கள் செய்த இந்தக் குழப்பத்தால், அதைச் சரியாக ஆராயவே முடியாமல் போயிற்று. அதனால், இன்றும் அதை மனிதன் செய்தானா? இல்லை. வேறு யாரும் செய்தார்களா என்ற கேள்விக்கு விடை இல்லாமலே இருக்கிறது. ஆராய்ச்சியாளர்களின் கணிப்புப்படி, மனிதர்களால் அது செய்யப்பட்டிருக்க முடியாது என்றுதான் சொல்லப்படுகிறது. அரைக் கிலோமீட்டர் நீளமான இந்தச் சித்திரத்தை இவ்வளவு நேர்த்தியாக ஒரே இரவில் உருவாக்க நூற்றுக்கும் அதிகமானவர்கள் அங்கே வேலை செய்திருக்க வேண்டும்  என்கிறார்கள். ஒருவேளை இந்தப் பயிர்வட்டம் மனிதனால் செய்யப்படாததாக இருந்தால், மனிதன் பற்றிய அனைத்துத் தகவல்களும் ஏலியன்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியிருக்கும். டாவின்சியின் இந்த மனித அடையாளத்தை அவர்கள் தெரிந்து வைத்திர



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Aug 06, 2012 9:37 pm

மதன் அவர்களின் மனிதனும் மர்மங்களும் படிக்கும் பொழுது ஏலியன்கள் இருக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் இந்த தொடரை தொடர்ந்து படித்ததில் நிச்சயம் ஏலியன்கள் இருக்க வாய்ப்புள்ளது என்று நினைக்க தோன்றுகிறது... சிரி

டாவின்சியின் 'Vitruvian Man' இதை இவ்வளவு பெரியதாக வரையும் பொழுது மனிதர்களாக இருந்தால் சற்று உயரத்தில் இருந்து(இந்த படம் எடுக்க பட்ட இடத்தில் இருந்தாவது) சரியாக வருகிறதா என பார்க்க வேண்டும் என நினைக்கிறேன்... புன்னகை

பகிர்வுக்கு நன்றி அண்ணா... "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 678642



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Aug 24, 2012 2:01 pm

இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? (13)

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo 1

நம்ப முடியாத ஆச்சரியங்களையும், மர்மங்களையும் தகுந்த ஆதாரமில்லாமல், நம்ப வைப்பது போல எழுதுவது கூட, மூடநம்பிக்கைகளை
விதைப்பதற்குச் சமமான ஒன்றுதான். பயிர்வட்டங்களிலும் நம்ப முடியாத
ஆச்சரியங்கள்தான் நிறைந்திருக்கின்றன. இனி நான் எழுதப் போகும் அனைத்தும்
, பயிர்வட்டங்கள் மனிதர்களால் உருவாக்கப்படாமல், வேறு
ஒரு அமானுஷ்யமான சக்தியினால் உருவாக்கப்படுகின்றன என்பதைச் சாதிக்கும்
விதமாகவே அமையும். இப்படி நான் எழுதுவதை மட்டும் வைத்து நீங்கள் எந்த
முடிவுக்கும் வந்துவிட முடியாது. வரவும் கூடாது. இப்படியெல்லாம் இருக்கக்
கூடிய சாத்தியக்கூறுகளாக
, இவை என்னால் சுட்டிக் காட்டப்படுகின்றனவேயன்றி, இவையே
முடிந்த முடிவுகளல்ல. முடிந்தவரை நான் இரண்டு பக்கச் சாத்தியக்கூறுகளையும்
எழுதவே முயற்சிக்கிறேன். சாத்தியக் கூறுகளெல்லாம் உண்மையாக இருக்க
வேண்டும் என்ற அவசியம் எப்போதும் கிடையாது. உதாரணமாக
, 'வானம் நீல நிறம்' என்பவர்கள் இருக்கிறார்கள். அதுபோல, 'வானம் நீல நிறம் இல்லை' என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இவையிரண்டும் தவிர்த்து, 'வானம் என்ற ஒன்றே கிடையாது' என்பவர்களும் இருக்கிறார்கள். இந்த மூன்று கூற்றுகளில் மூன்றுமே அவரவர் பார்வையில் சரியானவைதான். மூன்றும் 'வானம்' பற்றிய உண்மைக்குரிய சாத்தியங்களைக் கொண்டவை. ஆனால், இதில் முன்று சாத்தியங்களுமே உண்மையாக இருக்க முடியாது. மூன்றில் ஒன்று மட்டும் உண்மையாக இருக்கவோ,


"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo 2

பயிர்வட்டங்கள் மனிதனால்தான் உருவாக்கப்படுகின்றன என்பதற்குச் சான்றாக முன்வைக்கப்படும் முக்கிய காரணங்கள் இரண்டு. 1. பயிர்வட்டங்களை நாங்கள்தான் உருவாக்கினோம் என்று, அதை உருவாக்கியவர்களே முன்வந்து சொல்வது. 2. உருவாக்கப்பட்ட பயிர்வட்டங்களில், மனிதன் செய்ததற்கான அடையாளங்கள் காணப்படுவது. தங்களது பெயர் விளம்பரப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக, போலியாக வந்து பயிர்வட்டங்களைத் தாமே உருவாக்கியதாக இதுவரை பலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும், சிலர் பயிர்வட்டங்களை உருவாக்கியுமிருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். மனிதர்கள் உருவாக்கிய பயிர்வட்டங்களை, மனிதர்கள் செய்ததற்கான அடையாளங்கள் மூலம் இலகுவில் கண்டுகொள்ளலாம். குறிப்பாக, மனிதர்கள் பலகையையும், கயிற்றையும் பயன்படுத்திப் பயிர்களை அழுத்துவதன் மூலம் பயிர்வட்டங்களை உருவாக்குகிறார்கள். அப்படி அழுத்தும்போது, பயிர்களில்
பலகைகளின் விளிம்புகள் ஏற்படுத்தும் அடையாளங்கள் இலகுவாகப் பரிசோதனைகள்
மூலம் கண்டுபிடிக்கப்படுகின்றன. அத்துடன் மனிதன் உருவாக்கும்போது
, பயிர்கள்
ஒழுங்கற்ற வகையில் அழுத்தப்படுகின்றன. அப்படி அழுத்தப்படும் பயிர்களின்
தண்டுகள் இடையே முறிந்து நாசமாகின்றன. ஆனால் மனிதனால் செய்யப்படாதவை
அப்படிப்பட்டவை அல்ல.


"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo 3

மனிதனால் உருவாக்கப்படாத பயிர்வட்டங்களை, அதற்கென இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தபோது, கற்பனையே
பண்ணமுடியாத அளவுக்கு ஆச்சரியமான விடைகள் அவர்களுக்குக் கிடைத்தன. மிகவும்
ஆற்றலுள்ள ஒரு சக்தியே பயிர்வட்டங்களை உருவாக்குகின்றது என்று அவர்கள்
அடித்துச் சொல்கிறார்கள். மனிதனால் உருவாக்கப்படாத பயிர்வட்டங்களில்
, பயிர்கள்
நீராவி போன்ற அதிக வெப்பமுள்ள ஏதோ ஒன்றினால் வெப்பமாக்கப்பட்டு
அழுத்தப்படுகின்றன என்று கண்டுபிடித்துள்ளார்கள். அப்படி அழுத்தப்படும்
பயிர்கள்
90 பாகைகளிலும் 135 பாகைகளிலும் வளைக்கப்படுகின்றன.அப்படி வளைக்கப்படும்போது, பயிர்களுக்கு
எந்தவித சேதங்களும் ஏற்படுவதே இல்லை என்பது இன்னுமொரு ஆச்சரியம். அந்தப்
பயிர்கள் தொடர்ந்து வளரக் கூடிய வகையிலேயே வளைக்கப்படுகின்றன. பயிர்கள்
வளைக்கப்படும் இடங்களில் அதியுயர் வெப்பநிலையால்
, சிறு முடிச்சுப் போன்ற ஒன்று பயிரின் தண்டில் தோன்றுகிறது. அனைத்துப் பயிர்களும் ஒரே சீராக, ஒரே அளவுகளிலும், கோணங்களிலும் வளைக்கப்படுகின்றன. ஒரு பயிராவது முறிந்து போவதில்லை. இந்த வகையில் மனிதனால் செய்ய முடியுமா? ஒவ்வொரு பயிரையும் தனித்தனியே நீராவியாலோ அல்லது வேறு ஒன்றின் மூலமாகவோ வெப்பமாக்கி, வளைத்தெடுக்க மனிதனால் முடியவே முடியாது. அதற்குச் சாத்தியமே இல்லை. நான் கொடுக்கும் படங்களைப் பார்க்கும் வரை, நான் எதைப் பற்றிப் பேசுகிறேன் என்று உங்களுக்குப் புரிவதுகூடக் கடினமாகவே இருக்கும். அதனால், அதற்குரிய படங்களைப் பாருங்கள்.


"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo 4

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo 5

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo 6

இதைவிட ஆச்சரியம் ஒன்றும் உண்டு. வயல்வெளிகளில் கதிர்கள் முற்றியதும், எடை தாங்காமல் தலை குனிந்தது போல, வளைந்தபடியே எப்போதும் இருக்கும். ஆனால் அந்த மர்மமான சக்தியினால் உருவாக்கப்படும் பயிர்வட்டங்களை ஆராய்ந்தபோது, பயிர்களில் உள்ள கதிர்கள், எடையினால் வளைந்தபடி இல்லாமல், இஸ்திரிப்பெட்டியினால் (Ironbox) அழுத்தியது போல, நேராக
நிமிர்ந்து காணப்படுகின்றன. அதிகளவு வெப்பநிலையுள்ள நீராவி போன்ற ஏதோ
ஒன்றின் மூலமாகவே அப்படிச் செய்ய முடியும் எனச் சந்தேகிக்கிறார்கள்
ஆராய்ச்சியாளர்கள். நான் கீழே தந்திருக்கும் இரண்டு படங்களையும் சரியாகப்
பாருங்கள். முதலாவதாக உள்ள படத்தில்
, உள்ளே பயிர்வட்டமாக அழுத்தப்பட்டிருக்கும் பயிர்களுக்கும், அழுத்தப்படாமல்
வெளியே நிற்கும் பயிர்களுக்கும் உள்ள வித்தியாசம் துல்லியமாகத் தெரியும்.
வட்டத்துக்கு வெளியே இருக்கும் பயிர்களின் கதிர்கள் எல்லாம் எடையினால்
வளைந்து காணப்படுவதாகவும்
, வட்டத்துக்கு
உள்ளே அழுத்தப்பட்டிருக்கும் கதிர்கள் நேராகக் காணப்படுவதாகவும்
இருக்கும். இரண்டாவதாக இருக்கும் படத்தில் உள்ள பயிர்வட்டம் மனிதனால்
உருவாக்கப்பட்டது. அதில் உள்ள பயிர்கள்
, வட்டத்தின் உள்ளேயும், வெளியேயும் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி இருப்பது தெரியும்.


"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo 7

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo 8

பயிர்களை அமானுஷ்யமான சக்தி கொண்டு வளைக்கும்போது, அந்தப் பயிர்களின் தண்டுகளின் தோல் பகுதி மட்டுமே பழுதடைகின்றன. உள்ளே தண்டுகள் பழுதடையாமல், பயிர்கள் தொடர்ந்து வளர்வதற்குரியது போலக் காணப்படுகின்றன. இப்படியெல்லாம் பலகை கொண்டு அழுத்தும் போது, மனிதனால் செய்யமுடியுமா?பயிர்வட்டங்களை மனிதன் உருவாக்குவதன் மூலம், ஒரு விவசாயியின் பயிர்களை நாசம் செய்கிறான். ஆனால் அந்த அமானுஷ்ய சக்தியோ, விவசாயிக்கு எந்தப் பாதிப்பும் வராமல் பயிர்வட்டங்களை உருவாக்குகிறது. இவையெல்லாமே, பயிர்வட்டங்களை ஆராய்ச்சி செய்தவர்களினால் நுணுக்கமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo 9

உலகில் எந்த இடத்திலும், மனிதன் அல்லாமல் உருவான பயிர்வட்டங்களை ஆராய்ந்தபோதும், அந்த மண்ணில் மிகவும் சிறிய உருண்டை வடிவ இரும்புத் துகள்கள் போல, ஏதோ ஒன்று மண்ணுடன் கலந்திருப்பதைக் கண்டுபிடித்தார்கள். இந்தத் துகள்கள் பயிர்வட்டத்தினுள்ளேதான் இருந்தனவேயொழிய, பயிர்வட்டத்திற்கு வெளியே எங்கும் காணப்படவில்லை. இது ஆராய்ச்சியாளர்களின் முடிவுகளை மேலும் உறுதியாக்கியது. இவை 10 இலிருந்து 40 வரையிலான மைக்ரோன் விட்டங்களைக் கொண்ட காந்த துகள்களாகக் காணப்பட்டன. இந்த மண் வகைகள், அமெரிக்காவில்
இருக்கும் மண்ணை ஆராய்ச்சி செய்யும் நிபுணர்களிடம் அனுப்பப்பட்டது.
அவர்களும் இதை ஆராய்ச்சியின் முடிவில் உறுதிப்படுத்தினர்.


"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo 10

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo 11





அதுமட்டுமல்ல, பயிர்வட்டங்களின் மத்தியில் ஒருவிதமான கதிர்வீச்சுகளும் உணரப்பட்டன. இதைப் பல ஆராய்ச்சியாளர்கள் கருவிகள் மூலம் அளந்து பார்த்து, கதிர்வீச்சு இருப்பதாக ஒத்துக் கொண்டனர். 'கதிர்கள் எங்கும் கதிர்வீச்சுகள் காணப்பட்டன' என்று தமிழில் விளையாடும் அளவுக்குக் கதிர்வீச்சுகள் காணப்பட்டன. பலரின் காமெராக்கள், கைக்கடிகாரங்கள், மின்னியல் சாதனங்கள் எல்லாம் பயிர்வட்டங்களின் நடுவே நிற்கும்போது, செயல்படாமல் போனது ஆச்சரியத்தை அளித்தது. இதுவும் மனிதனால் பயிர்வட்டங்கள் உருவாக்கப்படவில்லை என்பதற்கு ஆதாரமாக இருந்தது. இவற்றுடன், கண்களால் பார்த்த பலரின் சாட்சியங்களும், பயிர்வட்டங்களின் நேர்த்திகளும், அவற்றின் பாரிய அளவுகளும், அவை உருவாக்கப்பட்டு வந்த குறைந்த அளவு நேரங்களும், பயிர்வட்டங்களில்
சில மனிதனால் உருவாக்கப்படவில்லை என்று ஆணித்தரமாக முடிவெடுக்க உதவியது.
பத்தாயிரம் பயிர்வட்டங்களில் சில நூறு பயிர்வட்டங்கள் மனிதனால்
உருவாக்கப்படவில்லை என்று திட்டவட்டமாக முடிவு செய்யப்பட்டது. மனிதனால்
செய்யப்படவில்லை என்று அவர்களால் சொல்லப்படுவதன் காரணமே
, அவை
ஏலியன்களால்தான் செய்யப்படுகின்றன என்பதை மறைமுகமாக
சுட்டிக்காட்டுவதுதான். பயிர்வட்டங்களை உருவாக்குவது ஏலியன்கள்தான்
என்பதற்கு அவர்களிடம் மாற்றுக் கருத்துகளே கிடையாது. ஆனால் அதை அவர்களால்
நேரடியான வாக்குமூலங்களாகத் தரமுடிவதில்லை.


"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo 12

ஏலியன்கள் பயிர்வட்டங்களை உருவாக்குகின்றன என்ற முடிவுக்கு நாம் வருவதென்றால், ஏலியன்கள்
இருக்கிறது என்னும் முடிவுக்கு முதலில் வரவேண்டும். அதற்கு ஏலியன்கள்
இருக்கின்றனவா என்பது நிரூபிக்கப்பட வேண்டும். ஏலியன்கள் உண்மையில்
இருக்கின்றனவா
? அவை இருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கின்றனவா என்னும் கேள்விகளுக்குப் பதில் தெரிந்தால், பயிர்வட்டங்கள் உருவாவது சம்பந்தமான அநேகமான மர்மங்கள் விலகிவிடும்.


அந்த மர்மங்கள் விலகுமா? அவற்றை அடுத்த வாரத்தில் பார்க்கலாமா...?
[/size]




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Oct 20, 2012 10:45 pm

'Crop Circles' என்று சொல்லப்படும் பயிர்வட்டங்களில், மனிதர்களால் செய்யப்பட்டவை போக மிகுதியாக எஞ்சி இருப்பவற்றை, மனிதனால் செய்யப்படாதவை என்று சொல்வதுதான் நிதர்சனமானது. இயற்கை தவிர்ந்து, உலகத்தில் உள்ள எதுவானாலும், மனிதனால் உருவாக்கப்படாமல், வேறு ஒரு மாற்று சக்தியினால் உருவாக்கப்பட்டன என்று சொன்னால், அது மிகச் சாதாரணமான ஒரு விசயமல்ல. அந்த மாற்றுச் சக்தி, அமானுஷ்யமானதாக இருப்பதால், நிச்சயம் அது வியப்பானதும், விந்தையானதும், நம்பவே முடியாததுமான ஒன்றாகத்தான் இருக்கும். பயிர்வட்டங்களிலும், நூற்றுக்கணக்கானவை அமானுஷ்ய சக்தியினால்தான் உருவாக்கப்பட்டன என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதியாக முடிவெடுத்துள்ளார்கள். அதிகம் ஏன், பத்தாயிரம் பயிர்வட்டங்களில் ஒரேயொரு பயிர்வட்டமாவது மனிதனால் செய்யப்படாமல், அமானுஷ்ய சக்தியால் செய்யப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டாலே, அப்படியொரு சக்தி உலகத்தில் உண்டு என்பது உறுதியாகிவிடும். இதற்குக் காரணமாகச் சொல்லப்படும் அமானுஷ்ய சக்தியை வேற்றுக்கிரகவாசிகள் (Aliens) என்றுதான் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இதுவே நமது நாடுகளில் நடந்திருந்தால், இவற்றிற்கெல்லாம் காரணமாக கடவுள் என்னும் விதையை ஊன்றி, அந்த இடங்களில் கோவில்கள் கட்டப்பட்டு, திருவிழா வரைக்கும் சென்றிருக்கும். அதன் பின்னர் ஆராய்ச்சியென்ற ஒன்றே நடக்க முடியாதபடியுமாகியிருக்கும். இதனால்தானோ என்னவோ, புராதன காலங்களில் ஏலியன்கள் வந்ததாக மிகவும் பலமாக ஆராய்ச்சியாளர்களால் நம்பப்படும் இந்தியாவுக்கு, அப்புறம் ஏலியன்கள் வராமல் போய்விட்டார்களோ தெரியவில்லை.

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo%202

ஏலியன்கள்தான் பயிர்வட்டங்களை உருவாக்குகின்றன என்று சொன்னால், ஏலியன்கள் இருக்கின்றன என்று சொல்வதை ஒப்புக் கொள்வதாகிவிடும். உண்மையில் ஏலியன்கள் இருக்கின்றனவா என்னும் கேள்விக்கு ஆமாம் என்னும் பதிலைத் திடமாக யாராலும் சொல்லிவிட முடியாது. காரணம், அறிவியல் எப்போதும் கண்ணால் கண்டாலோ அல்லது இயற்பியல் விதிகளுக்குட்பட்டு அதை நிரூபிக்க முடிந்தாலோ மட்டும்தான், அப்படி ஒன்று இருக்கிறது என்று ஒத்துக்கொள்ளும். ஆனால் ஏலியன்கள் இருக்கின்றன என்பதை அறிவியல், நூறு வீதம் அல்ல ஆயிரம் வீதம் நம்புகிறது. என்ன குழப்புகிறேனா? நம்பிக்கை என்பது வேறு, இருக்கிறது என்னும் முடிவுக்கு வருவது வேறு. 'கடவுள் இருக்கிறார்' என்னும் கருத்தும் கூட, இந்த இரண்டு தளங்களில் இருந்துதான் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. கடவுள் இருக்கிறார் என்று ஆன்மீகவாதிகள் நூறு வீதம் நம்புகிறார்கள். ஆனால் கடவுள் இருக்கிறார் என்று அவர்களால் இயற்பியல் விதிகளுக்குட்பட்டு நிரூபிக்க முடிவதில்லை. கடவுள் இருக்கிறார் என்ற ஆராய்ச்சியிலும் யாரும் ஈடுபடுவதில்லை. ஆனால், ஏலியன்கள் இருக்கின்றனவா என்பதைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக்கென, உலக நாடுகள் அத்தனையும் கோடிக்கனக்கான பணத்தைக் கொட்டிச் செலவழித்துக் கொண்டிருக்கின்றன. விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள், அதியுயர் நவீன தொலைநோக்கிக் கருவிகள், விண்வெளியை ஆராயும் சாட்டிலைட் டெலஸ்கோப்கள், ஆராய்ச்சிக் கூடங்கள் என உலகம் பூராவும் பல ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள், கோடிகளைக் கொட்டி, தங்கள் நேரங்களையும், படிப்புகளையும் அதற்கென்றே செலவழித்து ஏலியனைக் கண்டுபிடிக்க முயல்கின்றனர். அதிகம் ஏன், கடந்த வாரம் செவ்வாயில் இறங்கிய 'க்யூரியாசிட்டி' (Curiosity) என்னும் ஆளில்லா விண்கலத்தின் மிக முக்கிய பணிகூட, செவ்வாயில் உயிரினம் இருப்பதற்கான அல்லது இருந்ததற்கான சாத்தியங்கள் உண்டா என ஆராய்வதுதான். இந்த இடத்தில் ஒன்று சொல்லியே ஆகவேண்டும். ஏலியன்கள் உண்டா? பறக்கும் தட்டுகள் பூமிக்கு வந்திருக்கின்றனவா என்று நாம் ஆராய்ந்து கொண்டிருக்கும்போது, மனிதனால் உருவாக்கப்பட்ட பறக்கும் தட்டு ஒன்று பூமியின் அயல்கிரகத்தில் இறங்கியிருக்கிறது. இதற்கு நாஸாவைப் பாராட்டியே தீர வேண்டும்.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo%203
ஏலியன்கள் இருக்கின்றன என்று விஞ்ஞானிகள் ஏன் இவ்வளவு திடமாக நம்புகிறார்கள் தெரியுமா? சொல்கிறேன்! நமது பூமியின் அபூர்வமான அமைவினால், அதில் உயிரினங்கள் உருவாகிப் பெருகி வாழ்கின்றன. அபூர்வமான அமைப்பென்றால், அப்படி ஒரு அபூர்வம். ஆச்சரியகரமான பல நிலைகள் பூமிக்கு அமைந்ததால், அந்த அபூர்வமான, உயிர்கள் தோன்றக்கூடிய தன்மை பூமிக்கு எற்பட்டது. சூரியனில் இருந்து தூரவும் இல்லாமல் கிட்டவும் இல்லாமல் மிகச் சரியான தூரத்தில் இருப்பது, 23½ பாகை கோணத்தில் சாய்ந்திருப்பது, சரியான தூரத்தில் சந்திரன் இருப்பது, 'அட்மாஸ்பியர்' எனப்படும் வளிமண்டலம் இருப்பது, நீர், ஆக்சிஜன், காபனீரொக்ஸைட், நைதரசன் போன்றவை சரியான விகிதத்தில் கலந்து இருப்பது, கடல் இருப்பது போன்ற பல காரணிகள் ஒன்றாகப் பூமிக்கு அமைந்ததால், பூமியில் உயிரினம் தோன்ற ஏதுவாக இருந்தது. இவற்றில் ஒன்று கூட இல்லாவிட்டாலும், பூமியில் உயிரினமோ, மனித இனமோ வாழ முடியாது என்னும் அளவுக்கு இவை முக்கியமானவை. இப்படிப் பூமிக்கு அனைத்து காரணிகளும் ஒன்றாகச் சரியான அளவில் அமைந்தது போல, பிரபஞ்சத்தில் வேறு எங்காவது ஒரு 'கோள்' (Planet) இருக்கும் பட்சத்தில், அங்கும் உயிரினங்கள் வாழ சாத்தியங்கள் உண்டு. அப்படிப்பட்ட கோள்களைக் கடந்த ஐம்பது வருடங்களாகத் தேடிக்கொண்டிருக்கின்றனர் விஞ்ஞானிகள். ஆச்சரியகரமாக சில கோள்கள் அப்படிக் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அவை மனித சாத்தியங்களுக்கு எட்டாத அளவு மிகவும் தூரத்தில் இருப்பதால், அவைபற்றி மேலதிகமாக ஆராய முடியாமல், அங்கு உயிரினங்கள் உண்டா, இல்லையா என்ற முடிவுக்கு வரமுடியாமல் இருக்கின்றனர்.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo%204
கணிதத்தில் 'நிகழ்தகவு' (Probability) என்னும் பகுதி ஒன்று உள்ளது. அதாவது, ஒரு நிகழ்வு எந்த அளவுக்கு நடைபெறக்கூடும் என்னும் சாத்தியக்கூறுகளை ஆராய்வதை 'நிகழ்தகவு' என்பார்கள். உதாரணமாக, ஒன்றிலிருந்து ஆறு புள்ளிகள் உள்ள தாயக்கட்டையை உருட்டும் போது, எத்தனை தரம் உருட்டினால் '5' விழலாம் என்பதை நிகழ்தகவு மூலம் சொல்லலாம். அதாவது, நிகழ்தகவின்படி, ஆறில் ஒரு பங்கு (⅙) சாத்தியம் உண்டு என்று கணிதம் சொல்கிறது. அது போல, அதே '5' மீண்டும் இரண்டாம் தடவை விழுவதற்கு, 36 இல் ஒரு பங்கு சாத்தியம் உண்டு. இது போல இன்னுமொரு உதாரணத்தையும் சொல்கிறேன். ஜெர்மனியில் ஒரு லாட்டரிச் சீட்டு இருக்கின்றது. 1 இலிருந்து 49 வரையிலான இலக்கங்களில், நீங்கள் விரும்பிய ஏதாவது ஆறு இலக்கங்களைத் தெரிவு செய்து, அந்த லாட்டரிச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம். பின்னர், லாட்டரி சீட்டுக் குலுக்கும் தேதியில், ஆறு இலக்கங்களை, அவர்கள் தெரிவு செய்வார்கள். அந்த ஆறு இலக்கங்களும், நீங்கள் தெரிவு செய்த ஆறு இலக்கங்களும் சரியாக இருந்தால், முதல் பரிசு உங்களுக்குத்தான். கோடிக்கணக்கான ரூபாயை அள்ளிக் கொண்டுவரலாம். ஆனால் இந்த லாட்டரிச் சீட்டில், நீங்கள் தெரிவு செய்த ஆறு இலக்கங்கள் வருவதற்கு பதினான்கு மில்லியன்களில் ஒன்று என்னும் சாத்தியமே உண்டு. அப்படிப் பதினான்கு மில்லியனில் ஒருவராக நீங்கள் அமைந்துவிட்டால், பரிசு உங்களுக்கே! இது போல, பூமி போன்று, அதே அமைவுகளுடன் பிரபஞ்சத்தில் இன்னுமொரு கோள் இருப்பதற்கான நிகழ்தகவுச சாத்தியங்கள் நிச்சயம் இருக்கிறது. உதாரணத்துக்கு இப்படி வைத்துக் கொள்ளலாம், பூமி போன்ற இன்னுமொரு கோள் பிரபஞ்சத்தில் இருப்பதற்கு, ஆயிரம் கோடியில் ஒரு கோளுக்குத்தான் சாத்தியம் உண்டு என நாம் வைத்துக் கொண்டால், பிரபஞ்சத்தில் அதைவிட அதிகமான கோள்கள் உள்ளன. சொல்லப் போனால், கோடான கோடி மடங்குகளுக்கு, ஆயிரம் கோடி கோள்கள் உள்ளன. பிரபஞ்சத்தில் அந்த அளவுக்கு நட்சத்திரங்களும், கோள்களும், உபகோள்களும் நிரம்பி வழிகின்றன. பூமியில் உள்ள கடற்கரைகளில் இருக்கும் மணல் துணிக்கைகள் எவ்வளவு உண்டோ, அதைவிட அதிகமான கோள்களும், உபகோள்களும், நட்சத்திரங்களும் பிரபஞ்சத்தில் உண்டு. அதனால், நிகழ்தகவின்படி பார்த்தாலும், பூமி போன்ற கோள்களும், அதில் உயிரினங்களும் இருப்பதற்குக் கோடிக்கணக்கான மடங்குகள் சாத்தியங்கள் உண்டு.

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo%205
நமது சூரியக் குடும்பத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், கோள்கள், துணைக்கோள்கள் என நூற்றுக்கும் அதிகமானவை உண்டு. அவற்றில் சந்திரனைப் பற்றியும், தற்போது செவ்வாயைப் பற்றியும் மட்டுமே நமக்கு முழுமையாகத் தெரியும். மற்றவையெல்லாம் ஒரு மேலோட்டமான கணிப்புகள்தான். இந்தக் கோள்களிலும், துணைக்கோள்களிலும் கூட உயிரினங்கள் உண்டா, இல்லையா என்பது நமக்குத் தெரியாது. நமது சூரியனைப் போல, 200 பில்லியன்களுக்கும் அதிகமான நட்சத்திரங்கள், நமது சூரியன் இருக்கும் காலக்ஸியான பால்வெளி மண்டலத்தில் (Milkyway) உண்டு. பால்வெளி மண்டலத்தைப் போல, 500 பில்லியன் காலக்ஸிகள் பிரபஞ்சத்தில் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறோம். 3க்கு அருகில் 23 பூச்சியங்களை இட்டால் என்ன இலக்கம் வருமோ, அதைவிட அதிகமான நட்சத்திரங்கள் நமது பிரபஞ்சத்தில் உண்டு. சூரியனுக்கு எப்படி நூறுக்கும் அதிகமான கோள்களும், துணைக் கோள்களும் இருக்கிறதோ, அதுபோலப் பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்கள் அனைத்துக்கும் இருக்கும் அல்லவா? அப்படியெனில், அவை எந்த அளவுக்கு இருக்கலாம் என்று நீங்களே கணித்துப் பாருங்கள். இந்த எண்ணிக்கைகள் கூட நாம் இதுவரை கண்டுபிடித்தவைகளை மட்டும் வைத்துத்தான் சொல்கிறோம். ஆனால், கண்டுபிடிக்காதவை இன்னும் எவ்வளவோ உண்டு என்கிறார்கள் விஞ்ஞானிகள். பிரபஞ்சம் போன்றே பல பிரபஞ்சங்கள் உண்டு எனவும், நமது பிரபஞ்சத்துக்குச் சமாந்தரமாக இன்னுமொரு பிரபஞ்சம் (Parallel universe) உண்டு என்றுகூடச் சொல்கிறார்கள். இதையெல்லாம் சொன்னவர்கள் சாதாரணமானவர்கள் கிடையாது. சும்மா பொழுதுபோக்கிற்காகவும் அவர்கள் சொல்லிவிட்டுப் போகவில்லை. ஐண்ஸ்டைன் போன்ற மாமேதைகள் பல ஆராய்ச்சிகளின் முடிவில் சொன்னது இது.

இவ்வளவு எண்ணிக்கையில் பிரபஞ்சத்தில் சாத்தியங்கள் இருக்கும்போது, உயிரினங்கள் அங்கே எங்காவது வாழாது என்று சொல்ல விஞ்ஞானிகளால் முடியவில்லை. அதை அவர்கள் மிகவும் திடமாக நம்புகின்றனர். ஆனால் நம்பிக்கை மட்டும் போதாது. அதை நிரூபித்தால் மட்டுமே அறிவியல் அடித்துச் சொல்லும். அதுவரை அடக்கியே வாசித்துக் கொண்டிருக்கும். சமீபத்தில் கூட, மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட 'கடவுள் துகள்' என்று அழைக்கப்படும் 'ஹிக்ஸ் போஸான்' (Higgs boson) கூட இருக்கிறது என்று விஞ்ஞானிகள் நம்பினார்களே ஒழிய, இருக்கிறது என்று அடித்துச் சொல்ல முடியவில்லை. ஆனால் இறுதியில் அதைக் கண்டுபிடித்தே விட்டார்கள். இந்த நிலை ஏலியன்களுக்கும் நிச்சயம் வரும். ஏலியன்கள் உண்டு என்று நம்பும் நம்பிக்கையை ஒருநாள் நிரூபித்துக் காட்டுவார்கள். ஆனால் நம்முன்னே தற்போது இருக்கும் பிரச்சினை அதுவல்ல.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo%207
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo%208
ஏலியன்கள் இருக்கின்றன என்பதல்ல இப்போது பிரச்சினை. பூமியில் ஏலியன்கள் உள்ளனவா? அல்லது பூமிக்கு ஏலியன்கள் வந்தனவா அல்லது இப்போதும் வந்துகொண்டிருக்கின்றனவா? அப்படி ஏலியன்கள் பூமிக்கு வந்தால், பலர் சொல்வது போல 'பறக்கும் தட்டு' (UFO) என்பதன் மூலமாகத்தான் வருகிறதா அல்லது வேறு வழிகளில் வருகிறதா? இவைதான் தற்போது நம்முன்னே இருக்கும் பிரச்சினை. இதற்கான பதில்தான், பயிர்வட்டங்களின் மர்ம முடிச்சுகளையும் அவிழ்க்க முடியும். ஆகையால், இந்தக் கேள்விகளுக்கெல்லாம் மிகச் சாதாரணமாக, 'ஆம்', 'இல்லை' என்பது போலப் பதில்களைச் சொல்லிவிட்டு நகர்ந்துவிட முடியாது. இவற்றையெல்லாம் நாம் விபரமாகவே பார்க்க வேண்டும்.

எனவே இந்தக் கேள்விகளுக்கான பதில்களை வரும் வாரத்தில் பார்ப்போமா...!

ரா.ரமேஷ்குமார்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரமேஷ்குமார்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Oct 26, 2012 2:01 pm

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo%201

பயிர்வட்டங்கள் உருவாவதன் மூலகாரணம் என்ன என்பதை அறியும் கட்டத்தில், ஏலியன்கள் பூமிக்கு வந்திருக்கின்றனவா என்னும் பெரும் கேள்வி நம்மைப் பல இடங்களிலிருந்து தாக்குகின்றது. ஏலியன்கள் பூமிக்கு வந்தனவா என்பதில், 'நம்புவதா? நம்பாமலிருப்பதா?' என்று நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்துவது போலப் பல சம்பவங்கள் சொல்லப்படுகின்றன. 'வாயால் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள். இதோ இந்தக் காணொளிகளைப் பாருங்கள்' என்று கூறியபடி, ஆயிரக்கணக்கான காணொளிகள் உலகைச் சுற்றி வலம் வருகின்றன. ஆரம்பத்தில் இந்தக் காணொளிகள் எல்லாம் புகைப்படத் தொழில் நுட்பங்களினால், போலியாக உருவாக்கப்பட்டுள்ளன என்று சொல்லி வந்த அரசுகள், அவற்றின் வீரியம் தாங்காமல் கொஞ்சம் கொஞ்சமாக அடக்கி வாசிக்கத் தொடங்கின. காணொளிகள் போலியானவை என்று அரசுகள் சொல்லியதில் அர்த்தமும் இல்லாமலில்லை. புகைப்படத் தொழில்நுட்பத்தினாலும், கணினித் தொழில்நுட்பத்தினாலும் பலர் இப்படியான காணொளிகளையும், புகைப்படங்களையும் பெரும்படியாக உருவாக்கியது நடந்துதான் இருக்கின்றன. இவர்கள் பொழுதுபோக்கிற்காகச் செய்யும் இந்தச் செயல்கள், பல உண்மைகள் மறைக்கப்படவும், அலட்சியப்படுத்தப் படவும் காரணமாக அமைந்துவிடுகின்றன. இந்த விசயத்தில் பொதிந்திருக்கும் உண்மை எதுவெனப் புரிந்துகொள்ள முடியாமல், ஒரு குழப்ப நிலையிலேயே மக்களை வைத்திருக்க இவை ஏதுவாகின.

ஏலியன்கள் பூமிக்கு வந்திருக்கின்றனவா? என்பதை நாம் ஆராய்ந்து கொண்டிருக்கும்போது, சில அறிஞர்கள் சொல்லும் இன்னுமொரு கோட்பாடு அதைவிட அதிர்ச்சியளிக்கிறது. அவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? "ஏலியன்கள் பூமிக்கு வந்து போனது மட்டுமல்ல, அவை பூமியில் தற்போது வாழ்ந்தும் கொண்டிருக்கின்றன" என்கிறார்கள். இதை வாசிக்கும்போது, உங்களையறியாமலே ஒரு புன்னகை உங்கள் மனதில் தோன்றியிருக்க வாய்ப்புண்டு. 'ஏலியன்கள் பற்றி ஏதோ சொல்வதை நாம் கேட்கிறோம் என்பதற்காக, நம் காதில் பூவுக்குப் பதிலாகப் பூச்சாடியையே இவர் வைக்கப் பார்க்கிறாரே' என்று நீங்கள் நினைக்கலாம். உண்மைதான், இதை யாருமே நம்ப முடியாதுதான். நானே நம்புகிறேனா என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் இதைச் சொல்பவர்கள் ஏதோ நகைச்சுவைக்காக நமக்கு இதைச் சொல்கிறார்கள் என்று நாம் நினைப்பதும் ரொம்பத் தப்பு. காரணம், அவர்கள் எடுத்து வைக்கும் ஆழமான, ஆணித்தரமான ஆதாரங்களும், அவற்றை ஒட்டிய விவாதங்களும்தான். அதிகம் ஏன், இந்தப் பயிர்வட்டம் சம்பந்தமாகவே அசைக்க முடியாத ஆணித்தரமான ஒரு ஆதாரம் கிடைத்துள்ளது. அதை மறுத்துப் பேச எந்த அரசும் முன்வரவில்லை. வரவும் முடியாது என்றுதான் சொல்கிறார்கள். காரணம், அந்த ஆதாரம் அவ்வளவு திடமான ஆதாரமாக இருந்தது. அது என்ன ஆதாரம் என்றுதானே கேட்கிறீர்கள்? சொல்கிறேன்.......!
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo%202


இதுவரை பயிர்வட்டங்கள் இங்கிலாந்தில்தான் அதிகளவு உருவாக்கப்பட்டிருக்கிறது என்று பார்த்தோம். அங்கு தோன்றுவதாலேயே சிலர் அதை நம்பவும் மறுக்க ஆரம்பித்தனர். காரணம், அங்கிருக்கும் யாரோதான் இவற்றுக்குக் காரணம் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். என்னதான் மனிதன் செய்யமுடியாது என்று ஆதாரங்களை முன்வைத்தாலும், அவநம்பிக்கை நீடித்துக் கொண்டேதான் வந்தது. ஆனால், ஆச்சரியமாக, ஜேர்மனியில் ஒரு பயிர்வட்டம் உருவாகியது. இந்தப் பயிர்வட்டம் ஜெர்மனியில் தோன்றியது மட்டும் ஆச்சரியமில்லை. அதன் தாக்கம் தந்த ஆச்சரியம், பயிர்வட்ட மர்மங்களுக்கே உச்சமாக அமைந்தது. இது பற்றி விளக்கமாகவே நான் உங்களுக்கு சொல்ல வேண்டும்.

ஜெர்மனியில் கிராஸ்டோர்ஃப் (Grasdorf) என்னுமிடத்தில், வேர்னர் ஹாரென்பேர்க் (Werner Harenberg) என்னும் விவசாயிக்குச் சொந்தமான விளைநிலத்தில் கோதுமைப் பயிர் விளைவிக்கப்பட்டிருந்தது. 23ம் திகதி ஜூன் மாதம் 1991இல் மிகப்பெரிய பயிர்வட்டமாக அது உருவாக்கப்பட்டிருந்தது. 6000 சதுரமீட்டர் பரப்பளவில் அந்தப் பயிர்வட்டம் உருவாகியிருந்தது. மனிதனால் செய்யப்படாமல் இருக்கும் பயிர்வட்டங்களின் அனைத்துத் தன்மைகளும் அந்தப் பயிர்வட்டத்துக்கும் இருந்தது. மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்த அந்தப் பயிர்வட்டத்தின் சித்திரம், சூரியக் குடும்பத்தைக் குறிப்பதாக அமைந்திருந்தது. 'வழமையான பயிர்வட்டங்கள் போலத்தானே இருக்கின்றன, இதில் எங்கே ஏலியன் வந்தது?' என்றுதானே நினைக்கிறீர்கள்.

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo%203

இந்தப் பயிர்வட்டத்தை ஆராய்ந்தபோது, அதில் கதிர்வீச்சு போன்ற ஒன்று இருக்கலாம் என்ற உணர்வு தோன்றியதால், உலோகங்கள் கண்டுபிடிக்கும் கருவி கொண்டு (Metal detector) அதை ஆராய்ந்தார்கள். அந்தப் பயிர்வட்டச் சித்திரத்தின் மூன்று இடங்களில் கருவி அலறியது. குறிப்பாக அந்தப் பயிர்வட்டத்தில் எங்கே அரைவட்டங்கள் காணப்பட்டனவோ, அந்த மூன்று அரைவட்டங்களின் மத்தியில் உலோகம் இருப்பதாகக் காட்டியது கருவி. அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது, அரை மீட்டர் நிலத்தின் கீழே மூன்று உலோகத் தகடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு அடிக்கும் அதிகமான விட்டமுடைய வட்டவடிவ உலோகத் தகடுகளாக அவை காணப்பட்டன. அதில் ஒன்று தங்கத்தினாலும், இன்னுமொன்று வெள்ளியினாலும், மூன்றாவது பித்தளை போன்ற ஒரு கலப்பு உலோகத்தினாலும் செய்யப்பட்டிருந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்தத் தகடுகளில் உருவாக்கப்பட்டிருந்த பயிர்வட்டம் அச்சுப் போல அமைக்கப்பட்டிருந்ததுதான்.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo%204

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo%205

பித்தளை போன்ற கலப்புலோகத்தால் செய்யப்பட்டிருந்த தகடு மூன்று கிலோக்கள் எடையும், வெள்ளியால் செய்யப்பட்டிருந்த தகடு ஐந்து கிலோக்களும், தங்கத்தினால் செய்யப்பட்டிருந்த தகடு ஏழரைக் கிலோக்களும் இருந்தன. ஜெர்மனியில் உள்ள உலோக ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன், எலெக்ட்ரான் மைக்ராஸ்கோப்பினால் ஆராய்ந்தபோது, தங்கமும், வெள்ளியும் தரத்தில் மிகவும் கூடியதாகவும், தூய்மையானதாகவும் காணப்பட்டன. அவ்வளவு தூய்மையான தங்கமோ, வெள்ளியோ பூமியில் இதுவரை யாரும் பயன்படுத்தியது இல்லை. பலர் இவற்றை அந்த விவசாயிடமிருந்து வாங்குவதற்கு முயன்றதனால், அதிக விலைக்கு அவற்றை அவர் விற்கக் கூடியதாக அமைந்தது. இந்த உலோகத் தகடுகளை ஆராய்ந்தவர்கள் குறைந்தபட்சம் இவை 300 ஆண்டுகளிலிருந்து 1500 ஆண்டுகளுக்கு முன்னரே நிலத்தில் புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo%206
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo%207
இங்கு இருக்கும் முக்கிய செய்தி என்ன தெரியுமா? மனிதன் இந்தப் பயிர்வட்டத்தை உருவாக்கியிருந்தால், தனது லட்சக்கணக்கான பணத்தை வீணாக்கி இப்படி ஒன்றை உருவாக்குவானா? ஏழரைக் கிலோ தங்கத்தை யாருக்காகவும் தாரைவார்த்துக் கொடுப்பானா? இவ்வளவு தூய்மையான தங்கமோ, வெள்ளியோ அவனுக்கு எப்படிக் கிடைத்தது என்பதே பெரும் கேள்வியாக அமைந்துவிடும் அல்லவா? அல்லது ஆராய்ச்சியாளர்கள் சொன்னது போல, பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே இவை புதைக்கப்பட்டிருந்தால், அந்த உலோகங்களில் இந்தப் பயிர்வட்டச் சித்திரம் எப்படி வந்தது? இப்படிப் பதில் தெரியாக் கேள்விகளையே, மிகவும் அசைக்க முடியாத ஆதாரங்களாக, ஏலியன்கள்தான் பயிர்வட்டங்களை உருவாக்குகின்றன என்று சொல்வதற்குச் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால் நமது பிரச்சினை தற்போது பயிர்வட்டங்கள் அல்ல. ஏலியன்கள் பூமியில் இருக்கின்றனவா என்பதுதான்.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo%208
இந்தப் பயிர்வட்டங்களைத் தாண்டி, விஞ்ஞானிகள் அனைவரும் ஒன்று சேர்ந்த நிலையில், ஏலியன்கள் பூமியில் வாழ்கின்றன என்பதற்குச் சான்றாக ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறார்கள். அது ஒரு மிகச் சிறிய உயிரினம். 'நீர்க்கரடி' (Water Bear) என்ற அர்த்தத்தில் குறிப்பிடப்படும் அந்த உயிரினத்தின் உயிரியல் பெயர் Tardigrade. பெயர்தான் கரடியேயொழிய, 1.5 மி.மீ. நீளம்தான் இருக்கும். உப்புநீர், நன்னீர், சேற்றுநிலம், பனி என அனைத்து இடங்களிலும் வாழக் கூடியது. உலகின் எல்லாக் கண்டங்களிலும், துருவம் உட்பட இவை காணப்படுகின்றன. எட்டுக் கால்களும், அந்தக் கால்களில் 4 லிருந்து 8 விரல்களையும் கொண்டவை இவை. இமயமலையில் 6000 மீட்டரில் கூட வாழும் இந்த உயிரினம், விஞ்ஞானிகளைக் கொஞ்சம் ஆச்சரியப்படுத்தியது. இவற்றைத் தொடர்ந்து ஆராய்ந்ததில் வியப்பான முடிவுகள் பல வெளிவந்தன. அதாவது, -272 சதமபாகைக் குளிரிலும் இவை உயிர்வாழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் ஆறு மாதங்கள் தொடர்ந்து எதையும் உள்ளெடுக்காமல் உயிர்வாழ்ந்தன. உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் கூர்ப்பின் (Evolution) கொள்கைப்படி பூமியின் தட்ப வெப்ப நிலைகளுக்கேற்ப வாழும்படியே தம்மை அமைத்துக் கொள்கின்றன. பூமியில் எந்த எந்த இடங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவோ, வாழ்ந்தனவோ அதையொட்டி தம்மை அவை வடிவமைத்துக் கொள்கின்றன. இதுவரை எந்த உயிரினமும் இதுதாண்டி உயிர்வாழ்வதாக விஞ்ஞானிகள் அறியவில்லை. ஆனால் ஒரு உயிரினம் பூச்சியத்துக்குக் கீழே -272 பாகைகள் குளிரில் பூமியில் வாழவேண்டிய அவசியம் ஏன் வந்தது? அதற்கு அவசியமே இல்லை. அப்படி ஒரு இடமும் பூமியில் இல்லவேயில்லை. பூமியில் அப்படி ஒரு இடம் இல்லாத பட்சத்தில், இந்த நீர்க்கரடி மட்டும் தன்னை அந்த அளவுக்குக் குளிரில் வாழும்படி ஏன் வடிவமைத்துக் கொண்டது? இந்தக் கேள்வி இதை வாசிக்கும் சிலருக்குச் சாதாரணமாகத் தோன்றினாலும், உயிரியல் விஞ்ஞானிகளுக்கு இது ஒரு மாபெரும் அதிசயம். இந்த அதிசயம் மேலும் அவர்களின் சிந்தனையைத் தூண்ட, ஜெர்மனியின் விஞ்ஞானிகள், ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிகளுடன் இணைந்து ஒரு பரிசோதனையைச் செய்து பார்க்க முயன்றனர்.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo%209

'ESA' (European Space Agency) என்னும் விண்வெளி அமைப்பில் ரஷ்யாவின் உதவியுடன், ஸ்வீடன் நாட்டுடன் இணைந்த ஜெர்மன் நாடு, இந்த நீர்க்கரடிகளை, 'Tardis' (Tardigrades in Space) என்னும் திட்டத்தின் கீழ், ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பி வைத்தது. விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்த நீர்க்கரடிகள், எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் அப்படியே திறந்த நிலையில் விண்வெளியில் வெளியே வைக்கப்பட்டன. அதாவது காற்றின்மை, அதிகக் குளிர் என்பன மட்டுமில்லாமல், எந்த உயிரினமுமே உயிருடன் தப்பிவிடமுடியாத நேரடிக் கதிர்வீச்சுகள் படும்படியாகப் பதினொரு நாட்கள் விடப்பட்டன. இந்த நீர்க்கரடிகளைச் சுமந்த வண்ணம் சென்ற விண்வெளிக்கப்பல், பூமியை 189 தடவை சுற்றியபடி, 11.8 நாட்கள் பிரயாணம் செய்தபின்னர் பூமிக்குக் கொண்டுவரப்பட்டது.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo%2010


பூமிக்கு மீண்டும் கொண்டுவரப்பட்ட நீர்க்கரடிகளைப் பரிசோதித்த விஞ்ஞானிகள் ஆச்சரியத்திலும், ஆனந்தத்திலும் துள்ளிக் குதித்தனர். 'கிரிப்டோபையோசிஸ்' (Cryptobiosys) என்னும் ஒருவித, 'இறந்தது போல தன்னைத்தானே ஆக்கிக் கொள்ளும்' முறையால் உறைந்திருந்த நீர்க்கரடிகள் மீண்டும் உயிர்த்தெழுந்து நடக்கத் தொடங்கின. தங்களுக்கு எதுவுமே நடக்கவில்லை என்பது போன்ற பாவனையுடன் அவை நடமாடின. விண்வெளியில் உள்ள கதிர்வீச்சுக்கு பூமியில் வாழும் எந்த உயிரினமும் தப்பவே முடியாது. கதிர்வீச்சு என்பது அவ்வளவு மோசமான விளைவுகளை உயிரினங்களுக்கு ஏற்படுத்தவல்லது. அத்துடன் காற்றில்லா வெளியில் வாழ்வதும் எந்த உயிரினத்துக்கும் சாத்தியமில்லாதது. சரி, அப்படிக் கதிர்வீச்சில் தப்பினாலும், நீர்க்கரடிகள் அடுத்ததாகச் செய்த காரியம்தான் பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. அதாவது, உறக்கத்திலிருந்து எழுந்த நீர்க்கரடிகள், தங்களை இனப்பெருக்கத்துக்குத் தயார்ப்படுத்த ஆரம்பித்தன. விண்வெளிக்குச் சென்ற ஆண், பெண் நீர்க்கரடிகள் இரண்டும் ஒன்று சேர்ந்தது மட்டுமில்லாமல், குட்டிகளையும் பெற்றுக் கொண்டன. இது சாத்தியமே இல்லாத ஒன்று. பூமியில் வாழும், வாழ்ந்த எந்த உயிரினத்துக்கும் இந்தச் சாத்தியம் இல்லவே இல்லை. இந்தக் காரணத்தினால்தான் அந்தச் சந்தேகம் விஞ்ஞானிகளுக்கு வந்தது. 'அட! இவை வேற்றுக் கிரகங்களிலிருந்து வந்திருக்கலாமோ?' என்னும் சந்தேகம் வலுவாக அவர்களுக்கு முளைத்தது.

நீர்க்கரடிகள் வேற்றுக் கிரகங்களில் இருந்து வந்திருக்கலாம் என்பதற்கு வேறு காரணமும் இருக்கலாமா? இவை போல, வேறு பல உயிரினங்களும் வேற்றுக் கிரகங்களிலிருந்து வந்திருக்கலாமா? என்னும் கேள்விகள் இப்போது தலையைக் குடைய ஆரம்பிக்கின்றன. அப்படி வேற்றுக் கிரகங்களிலிருந்து உயிரினங்கள் வந்திருந்தாலும் அவை எங்கே வாழலாம் என்பது போன்ற கேள்விகளுக்கான விடைகளுடன் அடுத்த வாரம் சந்திப்போம்.....!




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Oct 27, 2012 5:59 am

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo%201
'பூமியில் வேற்றுக்கிரக உயிரினங்கள் இருக்கின்றனவா?' என்னும் கேள்விக்குப் பதிலளிக்கும் வண்ணமாக, நீர்க்கரடி (Tardigrade) பற்றிச் சொல்லியிருந்தேன். இந்த நீர்க்கரடி பற்றி மேலும் சில விசயங்கள் சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனாலும் இந்த வாரம் மிக முக்கியமான வேறு ஒன்றைப் பற்றிச் சொல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இதைச் சூழ்நிலை என்று சொல்வதைவிட, உலகையே உலுக்கிவிடப் போகும் நிகழ்வு என்றே சொல்லலாம். இந்தச் செய்தி மட்டும் உண்மையாக இருந்தால், அவிழ்க்க முடியாமல் இருக்கும் பல மர்மங்கள் சுலபமாக அவிழ்ந்து போகக் கூடியவாறு அமைந்துவிடும். அல்லது வழமை போல இதுவும் எதுவுமே இல்லாமல் அமிழ்ந்து போகும் ஒன்றாகலாம். தொடர்ந்து இதுபற்றி மேலே எழுதுவதற்கு முன்னர், மீண்டும் ஒருமுறை நான் ஒரு தன்னிலை விளக்கத்தை உங்களுக்குத் தரவிரும்புகிறேன். என்னிடம் பலர் கேட்கும் கேள்விகள், "ஏலியன்கள் பூமிக்கு வந்து போயிருக்கின்றனவா? நீங்கள் ஏலியன்கள் இருப்பதை நம்புகிறீர்களா?" என்பவைதான். இதற்கான எனது பதிலை, நான் இப்பொழுதே தெளிவாகச் சொல்லிவிடுகிறேன்.

பிரபஞ்சத்தில் உள்ள வேற்றுக் கிரகங்களில் நம்மை விட அறிவுள்ள ஜீவராசிகள் வாழ்வதற்கான சாத்தியம் உண்டு என்பதை நான் சந்தேகமின்றி நம்புகின்றேன். ஆனால், அவை பூமிக்கு வந்தனவா என்பதை நான் இன்னும் நம்பவில்லை. ஆனாலும் ஏலியன்கள் பூமிக்கு வந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை என்னால் மறுக்க முடியவில்லை. ஏலியன் விசயத்தில் உள்ள பிரச்சினை என்னவென்றால், 'ஏலியன்கள் பூமிக்கு வந்தார்கள்' என்று சொல்பவர்கள், 'இல்லை அப்படி யாரும் வரவில்லை' என்று சொல்பவர்கள் இருவருமே அறிவியல் அறிஞர்கள்தான். இதற்குள் மதங்களோ அல்லது மாற்று சக்திகளோ வந்து கலக்கவில்லை. இரண்டு விதமான கருத்துகளையும் இவர்கள்தான் சொல்கிறார்கள். ஏலியன்கள் இருக்கின்றன என்று சொல்லும் அறிஞர்கள், உலகில் நடந்த மர்மங்களையும், அதிசயச் சம்பவங்களையும் தமக்குச் சாட்சியங்களாக முன் வைக்கிறார்கள். ஆனால் இல்லை என்று சொல்பவர்கள் எப்போதும், இருக்கிறது என்று சொல்பவர்களின் சாத்தியங்களை முறியடிக்கும் வாதங்களை மட்டுமே முன்வைக்கிறார்கள். நடந்த சம்பவங்களுக்குரிய வலிமையான காரணங்களைச் சொல்வதுமில்லை. அவை பற்றி மேலும் ஆராய்வதுமில்லை. ஏலியன்கள் இல்லை என்று எதிர்ப்பவர்கள் எப்போதும் அரசுகள் சார்ந்த அமைப்புகளில் உள்ளவர்களாகவே இருக்கின்றார்கள். இதற்கு உதாரணமாக நாஸாவைச் சொல்லலாம். ஆனால் இதே நாஸாதான் கோடிக்கணக்கான டாலரைக் கொட்டி ஏலியன்களைத் தேடவும் செய்கிறது. ஏலியன்கள் இருக்கின்றன என்று மக்களுக்குத் தெரிந்தால், அது மிகப்பெரிய குழப்பத்தை விளைவிக்கும் என்பதாலும், அமெரிக்கா போன்ற அதியுயர் சக்திவாய்ந்த அரசுகளை விடவும் சக்தியுள்ளவர்கள் இருக்கிறார்கள் என்று மக்கள் அறிந்தால், அரசுகளின் மீது நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என்பதாலுமே, இவர்கள் இந்த ஏலியன் சமாச்சாரத்தை வன்மையாக எதிர்க்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

அறிவியல் அறிஞர்களான இவர்கள் இருவருமே இரண்டாகப் பிரிந்து, நம்மைப் போன்ற சாதாரண மக்களுக்கு இரண்டு வகையான செய்திகளைச் சொல்லும்போது, நாம் ஒரு முடிவுக்கு வரமுடியாமல், அவற்றை மிஸ்டரிகளாகவும், அதிசயங்களாகவும் பார்க்கிறோம். இதனாலேயே நாம் எப்போதும் குழப்பத்தில் இவர்கள் இருவரினாலும் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இவர்கள் இருவரது நோக்கமும் கூட அதுவாகத்தான் இருக்குமோ தெரியவில்லை. அதனால்தான் பல உண்மைகள் நமக்குத் தெரியாமல் மறைக்கப்படுவதாகவும் இருக்கலாம். சொல்லப் போனால் இந்தத் தொடரின் கேள்வியே, "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?" என்பதுதானே! அதனால், நான் ஏலியன்கள் பற்றித் தெரிந்துகொண்ட அனைத்து சம்பவங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறேன். நானும், நீங்களும் சேர்ந்து இது பற்றிய உண்மைக்கு அருகில் சென்று பார்த்து வரலாம். நிச்சயம் உண்மையென்பது இந்த இரண்டில் ஒன்றுதான் என்பதில் சந்தேகமே இல்லை. ஆகவே இரண்டுவிதமான சாத்தியங்களையும் நாம் விரிவாகப் பார்க்கலாம். இந்த அளவுக்கு விளக்கத்தை இப்போது நான் ஏன் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். அதற்கும் காரணம் ஒன்று உண்டு. இனி நான் சொல்லப் போகும் பல சம்பவங்கள் அமெரிக்க 'ஹாலிவுட்' திரைப்படங்களின் கதைகள் போல இருக்கும். நம்பவே முடியாததாக இருக்கும். படிக்கும்போது சிறுபிள்ளைத்தனமாகவும் உங்களுக்கு இருக்கும். ஆனால் அவையெல்லாம் ஆதாரங்களுடன் இருந்தாலும், அவற்றில் ஒரு நம்பகத்தண்மை இருந்தாலும் மட்டுமே, அவற்றை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்வேன். நான் கொடுக்கும் தகவல்கள் அனைத்தையும் நீங்கள் இணையத்தளங்களிலோ, நூல்களிலோ தேடும்போது, அவற்றின் பதிவுகள் உங்களுக்குக் கிடைக்கும் வகையிலேயே இருக்கும். சரி, இனி விசயத்துக்கு வரலாம்.

"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo%202
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo%203

2012 ஆகஸ்ட் 6ம் திகதி, செவ்வாயில் நாஸா அனுப்பிய விண்கலமான 'க்யூரியாசிட்டி' (Curiosity) தரையிறங்கியது. மனித வரலாற்றில் மிகமுக்கியமான ஒரு சம்பவமாக அது தன்னை அமைத்துக் கொண்டது. அந்தக் க்யூரியாசிட்டி தற்போது செவ்வாய்க் கிரகத்தின் படங்களை எடுத்துப் பூமிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது. அது அனுப்பிய படம் ஒன்றுதான் இப்போது ஒரு பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. நான் மேலே கொடுத்திருக்கும் இரண்டு படங்களையும் உற்றுப் பாருங்கள். செவ்வாயின் நிலப்பகுதியும், செவ்வாயின் வான்வெளியும் அந்தப் படத்தில் தெரிகிறது. முதலில் உள்ள படத்தை க்யூரியாசிட்டி அனுப்பியபோது, நாஸா அதில் பெரிதாக ஒன்றையும் கவனிக்கவில்லை. ஆனால் அதைப் பார்த்த வேறு சிலர், அதில் ஏதோ வித்தியாசமாகத் தெரிவதாகச் சந்தேகப்பட்டனர். கணனி மூலம், அந்தப் படத்தை ஒளி, வர்ண மாற்றங்கள் செய்து பார்த்தபோது, சில புள்ளிகள் போன்ற வடிவங்கள் செவ்வாயின் வானில் காணப்பட்டதை அவதானித்தனர். அவற்றைப் பெரிதாக்கிப் பார்த்தபோது, ஒளியுடன் அவை மின்னிக் கொண்டிருந்தன. மனிதன் அனுப்பிய க்யூரியாசிட்டியை வானில் இருந்து யாரோ அவதானித்துக் கொண்டிருப்பது போல அவை காணப்பட்டன. அந்தப் புள்ளிகள் அயல் கிரகவாசிகளின் பறக்கும்தட்டு என்று அவர்கள் நிச்சயமாகச் சொல்கின்றனர். அவர்கள் சொல்வதில் ஒருவித நியாயம் இருப்பதை நாமும் மறுக்க முடியாததாகவே இருக்கிறது.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo%204
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo%205
"இவர்களுக்கு வேற வேலையே இல்லையா? எதையெடுத்தாலும் அதில் ஒரு மிஸ்டரியைப் புகுத்துவதே இவர்கள் வேலையாகப் போய்விட்டது" என்று நாம் நினைக்கலாம். ஆனால் அவர்கள் அப்படிச் சந்தேகப்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அதற்குக் காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அந்தக் காரணங்கள் எவையென்று நாம் பார்ப்பதற்கு முன்னர், இந்தப் படத்திலிருப்பவை பறக்கும் தட்டுகள்தானா என்று கேட்பதற்கு, இவற்றை மறுப்பவர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்று பார்த்தால், வழமை போல 'க்யூரியாசிட்டி எடுத்து அனுப்பிய படங்களில் பிக்ஸல் (Pixel) தவறுகள் ஏற்பட்டிருக்கின்றன' என்று சொல்லிச் சமாளிக்கிறார்கள். அந்தப் படத்தில் தெரியும் புள்ளிகள் ஒன்று போல மற்ற ஒன்று காணப்படவில்லை. வடிவத்திலேயோ, பருமனிலேயோ அவை வேறாகத்தான் இருக்கின்றன என்பது தெளிவாகவே தெரிகின்றது. அதுமட்டுமில்லாமல், க்யூரியாசிட்டியில் அமைக்கப்பட்ட காமெரா மிகவும் துல்லியம் வாய்ந்த உயர் தொழில்நுட்பம் கொண்டது. 'MARDI' (Mars Descent Imager) என்று சொல்லப்படும், இதற்கென்றே பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட காமெரா அது. அதில் பிக்ஸல் தப்புகள் நடந்தன என்று சொல்வதுதான் பலரால் நம்ப முடியாமல் இருக்கின்றது. இப்படியான தவறுகள் காமெராக்களில் ஏற்படுவது உண்மைதான் என்றாலும், எப்போதும் இது போன்ற சம்பவங்களில் இதையே காரணம் காட்டி நழுவியும் விடுகிறார்கள். ஆனால் ஆச்சரியப்படும் வகையில் நாஸா இதுபற்றி இதுவரை வாயே திறக்கவில்லை.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo%206
செவ்வாயில் பறக்கும் தட்டுகள் இருக்கின்றன என்று சந்தேகப்படுவதற்கு வேறு காரணங்களும் இருக்கின்றன என்று சொன்னேன் அல்லவா? அவை கொஞ்சம் சுவாரஸ்யமானவைதான். 1996ம் ஆண்டு அண்டார்டிகாவில் ஆராய்ச்சியாளர்களால் ஒரு எரிகல் (Meteor) கண்டெடுக்கப்பட்டது. விண்வெளியில் சுற்றிவரும் சிறிய விண்கல் (Meteoroid) பூமியின் வளிமண்டலத்தில் நுழைவதால் அது எரிந்து மிஞ்சும் பகுதிகள், எரிகற்களாக பூமியில் சிதறி விழும். 'Meteoroid' என்று அழைக்கப்படும் பெரிய கல்லொன்று, பூமியில் நுழைந்து எரிந்து, சிதறி விழுந்த பின் அது 'Meteor' என்று அழைக்கப்படும். 1996ம் ஆண்டு அண்டார்ட்டிகாவில் கண்டெடுக்கப்பட்ட எரிகல்லை ஆராய்ந்தபோது, அதில் ஒரு ஆச்சரியமான செய்தி ஒன்று காத்திருந்தது. 13,000 வருசங்களுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் இருந்து வெடித்து வந்த அந்தக் கல்லில் பாக்டீரியா போன்ற ஒரு உயிரினம், படிமமாகப் (Fossil) பதிந்திருந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்லுடன் கல்லாக, படிமமாக மாறிவிட்ட அந்த பாக்டீரியா போன்ற உயிரினம், சிக்கலான சேதனத்தைக் கொண்டிருந்தது. இதற்கு ALH84001 என்று பெயரிட்டிருக்கிறார்கள். அந்த உயிரினத்துக்கு கலம் (Cell) இருந்ததோடு, அது இரண்டு கலங்களாகப் பிரிந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் உள்ள இரசாயன மூலக்கூறுகள் பூமியின் உயிரினங்களுக்கு மிகவும் அண்மையில் உள்ளவாறு இருந்தன. இந்த ALH84001 என்ற ஒன்றே, உயிரினம் பூமி தாண்டி, அயல் கிரகங்களிலும் இருக்கின்றன என்பதற்கு சான்றாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக செவ்வாயில் உயிரினம் இருக்கின்றது என்பதை இந்தச் சம்பவம் நம்பவும் வைக்கிறது.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo%207
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo%208
"இது பாக்டீரியா போன்ற சிறிய நுண்ணுயிர். இதை வைத்துக் கொண்டு எப்படிச் செவ்வாயில் பறக்கும் தட்டும், புத்திசாலியான ஏலியன்களும் இருக்கின்றன என்று நீங்கள் சொல்லலாம்?" என்னும் கேள்வி இப்போது உங்களுக்கு நிச்சயம் தோன்றியிருக்கும். அதற்கும் கைவசம் பதில்கள் இருக்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன்னர் அதாவது 25.08.2012 சனிக்கிழமை இரவு, உலக சரித்திரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சாதனை மனிதர் மரணமடைந்தார். அவரை அறியாதவர்கள் எவருமில்லை என்னும் அளவுக்குப் பிரசித்தி பெற்றவர். அவர் பெயர் நீல் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong). நிலவில் காலடி பதித்த முதல் மனிதர் என்று பெயர் பெற்றவர். மொத்தமாக பன்னிரண்டு பேர் நிலவில் கால் பதித்திருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் இல்லாத பெயர் இவருக்கு உண்டு. 1969ம் ஆண்டு ஜூலை மாதம் 21ம் திகதி, 'அப்போலோ 11' (Apollo 11) என்னும் விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong), எட்வின் ஆல்ட்ரின் (Edwin Buzz Aldrin), மைக்கேல் காலின்ஸ் (Michael Collins) ஆகிய மூவரும் நிலவுக்கு முதல் மனிதர்களாகப் பயணம் செய்து வரலாற்றுச் சாதனை படைத்தனர். சந்திரனில் மனிதன் கால் பதித்தது என்று சொல்வது, ஒரு மாபெரும் ஏமாற்று வேலை என்ற பலமான எதிர்ப்புக் குரல்கள் ஒலித்தாலும், கால் பதித்ததை அனைவரும் நம்பத்தான் செய்கிறார்கள். ஆனால் நான் இப்போது சொல்ல வந்தது, ஆம்ஸ்ட்ராங் நிலாவில் முதலில் கால் பதித்தது பற்றியோ, அப்போலோ 11 பற்றியோ, நிலாவில் மனிதன் கால் வைக்கவில்லை என்பது பற்றியோ இல்லை. நான் சொல்ல வந்த விசயமே வேறு.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo%209
ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்ட்ரினும் நிலவில் நடந்தபோது, தங்களுக்கு மேலே சில ஒளி வட்டங்களைக் கண்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதுமட்டுமமல்லாமல் அவற்றைப் படங்களும் எடுத்திருக்கிறார்கள். நிலவில் இருந்துகொண்டு பூமியுடன் அவர்கள் பேசியபோது, தங்களை யாரோ அவதானிக்கிறார்கள் என்று சொல்லியும் இருக்கிறார்கள். ஏலியன்களின் விண்கலங்களையும், அவர்கள் நிலவில் அமைத்திருந்த அமைப்புகளையும் கூட, ஆம்ஸ்ட்ராங் படங்கள் எடுத்ததாகச் சொல்கிறார்கள். இவையெல்லாம் ஒரு வதந்தி என்னும் நிலையில் உலகம் நம்பாமல் இருந்தபோது, துணிச்சலாக ஆல்ட்ரின் இதைத் தொலைக்காட்சிகளுக்கும், பத்திரிககைகளுக்கும் வெளிப்படையாகச் சொன்னார். ஆல்ட்ரின் கொடுத்த பேட்டிகள் பலரை அதிர வைத்தது. இது பற்றிய விபரங்கள் காணொளிகளாகவும், செய்திகளாகவும் இணையம் எங்கும் பரவியிருப்பதை நீங்கள் பார்க்கலாம். உலகின் பாதுகாப்பான இடமாகக் கருதப்படும் நாஸாவில் அதற்கு அப்புறம் ஒரு சம்பவம் நடந்தது. அப்போலோ 11 இல் சென்றவர்கள், நாஸாவுடன் உரையாடிய ஒலி, ஒளிநாடா திடீரெனக காணாமல் போனது. குறிப்பிட்ட நிமிடங்கள் உள்ள அனைத்துப் பதிவுகளும் அவற்றிலிருந்து அழிக்கப்பட்டன. இவை ஏன் நடந்தது என்பது இதுவரை தெரியாத மர்மமாகவே இருக்கிறது. ஆல்ட்ரின், ஆம்ஸ்ட்ராங் இருவரும் நிலவுக்குச் சென்ற சாதாரண மனிதர்களல்ல. இருவருமே அறிவியலில் மிகையறிவு படைத்தவர்கள். ஆஸ்ட்ராநாட்ஸ் என்னும் பதவி யாருக்கும் சுலபமாகக் கிடைத்துவிடும் பதவியல்ல. கல்வியிலும், தகுதியிலும் சிறந்தவர்கள் மட்டும்தான் அதற்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அப்படிப்பட்ட இருவருமே ஏலியன்கள் உண்டு என்று சொல்லும் போது, மற்றவர்கள் எம்மாத்திரம்?
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo%2010
ஆச்சரியம் இத்துடன் முடிந்து போய்விடவில்லை. நிலவில் கால் பதித்த ஆறாவது நபரும், அப்போலோ 14 விண்கலத்தின் மூலம் சந்திரனுக்குச் சென்றவருமான 'எட்கார் மிட்ஜெல்' (Dr.Edgar Mitchell) என்பவர் ஏலியன் இருப்பதாகச் சொல்வதை முழுமையாக ஆதரிக்கிறார். தங்களுக்கு நடந்த சம்பவங்களையும், நாஸாவில் தான் பணிபுரிந்தபோது அறிந்து கொண்டவைகளையும் வைத்து, பூமிக்கு ஏலியன்கள் பல தடவை வந்து போனது நாஸாவுக்குத் தெரியும் என்றும், அதை 60 வருட காலங்களாக நாஸா மறைத்து வைத்திருக்கிறது என்றும் பேட்டியில் அவர் சொல்லியுள்ளார். இவர் கூறியுள்ள தகவல்கள் ஏலியன் விசயத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. ஏலியன்கள் மனிதர்களின் உருவத்தைப் போலவே இருந்தாலும், சிறிய உருவமாக இருந்ததாகவும், அவற்றின் கண்கள் பெரிதாக இருந்ததாகவும் அவர் சொல்லியிருக்கிறார்.
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" - தொடர்பதிவு - Page 8 Photo%2011
இப்படிப் பல நிகழ்வுகள் நடந்த நிலையில்தான், செவ்வாய்க் கிரகத்தின் வான்வெளியில் ஒளிப்பந்துகள் காணப்படுகின்றன. அவற்றைப் பறக்கும் தட்டு என்றும், மனிதர்களின் செயல்பாட்டை ஏலியன்கள் கண்காணிக்கின்றன என்றும் சொல்கின்றனர். எது உண்மை, எது பொய் என்று தெரியாத நிலையில் நாம் தவிக்க விடப்படுகிறோம். நாஸாவில் பணிபுரிந்தவர்களில் பலர், நாஸா உண்மைகளை மறைக்கின்றது என்று அடிக்கடி சொல்வதை வதந்திகள் என்று நம்மால் ஒதுக்கிவிடவும் முடியவில்லை. அதனால் ஏலியன்கள் பூமியில் இருப்பதற்கான சாத்தியங்களைத் தொடர்ந்து நாம் பார்த்தால்தான் நமக்கென ஒரு விளக்கம் கிடைக்கும். எனவே அந்த விளக்கங்களை அடுத்த வாரத்தில் பார்ப்போமா?




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 8 of 12 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக