புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'Slumdog Millionaire' - திரை விமர்சனம் Poll_c10'Slumdog Millionaire' - திரை விமர்சனம் Poll_m10'Slumdog Millionaire' - திரை விமர்சனம் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
'Slumdog Millionaire' - திரை விமர்சனம் Poll_c10'Slumdog Millionaire' - திரை விமர்சனம் Poll_m10'Slumdog Millionaire' - திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 8%
heezulia
'Slumdog Millionaire' - திரை விமர்சனம் Poll_c10'Slumdog Millionaire' - திரை விமர்சனம் Poll_m10'Slumdog Millionaire' - திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
'Slumdog Millionaire' - திரை விமர்சனம் Poll_c10'Slumdog Millionaire' - திரை விமர்சனம் Poll_m10'Slumdog Millionaire' - திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
'Slumdog Millionaire' - திரை விமர்சனம் Poll_c10'Slumdog Millionaire' - திரை விமர்சனம் Poll_m10'Slumdog Millionaire' - திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

'Slumdog Millionaire' - திரை விமர்சனம்


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Jan 18, 2009 11:35 pm

'ஸ்லம் டோக் மில்லியனியர்' ஹாலிவுட்டின் புகழ் பெற்ற 'த மூவி டைம்ஸின்' தர வரிசையில் 12 ஆம் இடத்திலுள்ள 'Twillight' ஐ ஒரு படி பின்னுக்குத் தள்ளியும் உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டு்ம் ஓடிக் கொண்டிருக்கிறது.ஆனால் இந்தியர்களைப் பொறுத்தமட்டில் வெறுமனே கேட்கும் காதுகளுக்குச் சொந்தமான உள்ளங்களனைத்தையும் இசையின்பால்

ஈடுபாட்டை ஏற்படுத்த வல்ல நம் இசைப்புயல் A.R.ரஹ்மானுக்கு ஹாலிவுட் விருதைப் பெற்றுத் தந்த படம் என்பதுடன் நின்று விடாது அனைத்து அம்சங்களிலும் இன்னுமொரு லகான் ஆகவே உருவாகியிருக்கிறது.

அதிகம் அறியப்படாத அதேநேரம் நன்கறியப்பட்ட படங்களைக் கொடுத்த இயக்குநர் 'டானி பாயில்' (Trainspotting(1996), 28 Days Later(2002)) இன் இயக்கத்தில் 2008 நவம்பரில் ஹாலிவுட்டில் வெளியான இத்திரைப்படம், 2006 ம் ஆண்டின் கதாசிரியருக்கான காமன் வெல்த் விருதைத் தட்டிய 'விகாஷ் ஸ்வரூப்' இன் 'Qand A' எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு சிறந்த படம், சிறந்த திரைக்கதை,சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பு ஆகியவற்றுக்கான கோல்டன் குளோப் விருதுகளையும் அள்ளிக் கொண்டிருக்கிறது.

மும்பையில் வறுமைக்கோட்டிற்கு கீழே அன்றாட வாழ்க்கைக்கே அவதிப்படும் சேரியில் பிறந்த ஜமால் மாலிக், சாலிம் மாலிக் என்ற இரு இளைஞர்களின் வாழ்வில் கிடைக்கும் அதிர்ஷ்டமும்,காதலும் அவர்கள் முன்னேற்றத்தையும்,அழிவையும் எப்படித் தீர்மானிக்கிறது என்பதை விறுவிறுப்பான கதையம்சத்துடன் சொல்கிறது இந்தப்படம். தன் காதலியைக் கண்டுபிடிப்பதற்காகக் 'குரோர்பதி' (Who wants to be a millionaire? எனும் புகழ் பெற்ற ஆங்கிலத் தொலைக்காட்சி நிகழ்ச்சியி்ன் ஹிந்திப் பதிப்பு) நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜமால் மாலிக் அதிகபட்சத் தொகையான 20 மில்லியன் ரூபாயை எப்படி வென்றான் என்பதே இந்த 'Slum dog Millionaire' சொல்ல வரும் சேதி.

படம் ஆரம்பித்த கணம் தொட்டு இறுதிவரை ஒரு சந்தேகம் நாம் பார்ப்பது 'Pulse 3' யா அல்லது பாலிவுட் பாணியிலான பாலிவுட்ஹாலிவுட் திரைப்படமா? என. டானி பாயிலின் கைவரிசை இதில் அப்படி. படம் துவங்கிச் சில நிமிடங்களில் எம்மை இருக்கை நுனிக்கு கொண்டுவந்து விடுகிறது. அதாவது காவல் நிலையத்தில் கடுமையாகத் தாக்கப்படும் ஜமால் 'குரோர்பதி' நிகழ்ச்சியில் 10 மில்லியனை வென்று இறுதிக் கேள்விக்கு ஏற்கனவே தகுதியும் பெற்றிருக்கின்றான். எப்படி? A.ஏமாற்றியுள்ளான் B. அதிர்ஷ்டசாலி C.நேர்மையானவன் D.விதி இவ்வாறு திரையிற் காட்டப்படுகிறது. அதன்பின் ஏற்றப்பட்ட எமது இதயத்துடிப்பைக் குறையவிடாது இறுதிவரை விறுவிறுப்பாகக் கொண்டு சென்றதில் டைரக்டரும், திரைக்கதையும் புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களையே பின்னுக்குத் தள்ளிவிடுகிறார்கள்.

முக்கியமாக திரைக்கதையைப் (screenplay - Simon Beaufoy) பாரட்ட வேண்டிய அவசியம் எதுவெனில் இந்தியாவின்இரு வேறு தரப்பட்ட மக்கட் பிரிவையும் கோர்த்து புதுமையாக அதை நகர்த்தியிருப்பதுதான். ஆடம்பரத்துக்கும் கேளிக்கைக்கும் விலைபோகும் செல்வந்தர்களின் வாழ்க்கை முறையும், அவர்களின் சீண்டல்களும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வின் விளிம்பு நிலையில் நிற்கும் மக்களின் கதியும் ஒரே கோட்டில் பயணித்து நம் புருவங்களை உயர்த்தி விடுகின்றன. இவ்வுத்தியை 'டைட்டானிக்' போன்ற ஒரு சில ஹாலிவுட் திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருப்போம்.

அதிலும் கடைப்பட்ட மக்களின் கண்ணீரையும், இந்தியாவில் இமயத்தை விட உயர்ந்து நிற்கும் ஜாதியையும், இன்னும் அழியாது வாழும் சில அரக்கக் கூட்டங்களையும், வெள்ளையனின் பண்பாட்டையும், உலகப் பொது மொழியான காதலையும் டைரக்டர் சித்தரிக்கும் விதம் அசர வைக்கிறது. இன்னொரு பக்கம் ரஹ்மானும் தன் பங்கிற்கு பிண்ணனி இசையில் நிமிர வைக்கின்றார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Jan 18, 2009 11:36 pm

கதையின் ஹீரோவான ஜமால் பாத்திரம் உட்பட அனைத்துப் பாத்திரங்களினதும் நடிப்பிலும் திறமை நன்கு பளிச்சிடுகின்றது. குறிப்பாகச் சொன்னால் ஜமாலாக நடித்த அறிமுகம் டேவ் பட்டேலும் அவனது காதலியாக(லத்திகா) நடித்த ப்fரைடா பிண்டோவும் சலீமின் சிறு வயதுப் பாத்திரம் ஏற்று நடித்த அஸாருடின் முஹமட் ஸ்மையிலும் நடிப்பில் பிண்ணுகிறார்கள்.

இதற்குச் சான்றாக கிளைமேக்ஸில் வரும் முத்தக் காட்சியையும், மும்பையில் அநாதரவான குழந்தைகளை வஞ்சமாகக் கடத்திச் சென்று பிச்சையெடுக்கச் செய்து அதில் பிழைப்பு நடத்தும் தாதாவை ஏமாற்றி சலீம் தம்பியுடன் தப்பிச்செல்லும் காட்சியையும் கூறமுடியும்.

புத்திசாலியான ஜமால் தாஜ்மஹாலில் தன்னிடம் விளக்கம் கேட்கும் ஆங்கி்லத் தம்பதியினரிடம் மும்தாஜ் வாகன விபத்தில் இறந்ததாகச் சொல்லும் விதமும் பின்னர் மும்தாஜ் பிரசவத்தில் இறந்த உண்மையை அவர்கள் கூற வரலாறே தெரியாத அவன் அதை மறுக்காது பிரசவத்தின்போது மருத்துவம் பார்க்க முடியாது வாகன நெரிசலில் சிக்கி இறந்ததாக யதார்த்தமாகச் சொல்லும்போது சிரிப்பை அடக்காமலிருக்க முடியவில்லை.

இதே சிறுவன் வேறொரு அமெரிக்கத் தம்பதியினரைக் காரில் சேரிக்குக் கூட்டிவந்து கங்கை ஆற்றைப் பற்றி விவரிக்கும்போது சலீம் தன் நண்பர்களுடன் வந்து காரைப் பகுதிபகுதியாகப் பெயர்த்துச் சென்று விடுகின்றான். திரும்பி வந்த அவர்கள் திகைத்துப் போய்விட கூட வந்த காவலாளி ஜமாலைப் பதம் பார்த்துவிட அவன் அழுதவாறே இதுதான் இந்தியா என்று வெறுப்புடன் தூற்றுகிறான். சற்றும் தாமதிக்காது சம்பவத்தைத் தடுத்து ஜமாலைத் தேற்றிய அமெரிக்க ஜோடி அவனிடம் 50 டாலரை நீட்டி இதுதான் ரியல் அமெரிக்கா என்று பதிலுரைக்கையில் டைரக்டர் மட்டுமல்லாது படம்பார்க்கும் அமெரிக்கர்களும் நிச்சயம் காலரை நிமிர்த்திக் கொள்வார்கள்

இன்னும் பல விடயங்களைக் கூறலாம். ஜமால் பத்து வயதில் அமிதாப்பச்சனிடம் ஆட்டோகிராப் வாங்க மலச்சாக்கடையில் குதித்து ஓடிவருவதும்; நிழல் உலகத் தாதாவான 'மாமன்' என்பவனைக் சுட்டுக் கொன்றுவிட்டு லத்திகாவை சலிம் மீட்பதும் பின் அவனது எதிரியிடமே சென்று வேலைக்குச் சேர்வதும் அதன்பின் அவள்மீது ஆசைப்பட்டுத் தம்பியைத் துரத்தி விடுவதும் ரஹ்மானின் பிண்ணனி இசையுடன் சேர்ந்து பல்ஸை எகிற வைக்கின்றன.

இவ்வளவுமிருந்தும் படத்தில் ஒரே ஓர் சஸ்பண்ட். அதாவது குரோர்பதி நிகழ்ச்சியில் 'அனில் கபூர்' இன் வினாக்கள் அனைத்திற்கும் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு மறக்க முடியாத தருணங்களிலிருந்தும் பதிலைக் கண்டு பிடிக்கும் ஜமால் இறுதிக் கேள்விக்கு மட்டும் எப்படி பதில் சொன்னான் என்பதே அது.

இதற்கான பதிலும் படம் தொடங்க முன்பே திரையில் கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலும் ஒன்றே எனக் கூறி பாலிவுட் பாணியிலான டூயட் பாடலுடன் (இது மட்டுமே ஹிந்திப் பாடல்) முடிவடைகின்றது இந்த 'ஸ்லம் டோக்.'

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Jan 18, 2009 11:46 pm

பொங்கலுக்கு வெளியான் அனைத்து சிறந்த படங்களுடனும் சேர்த்துப் பார்க்கப்பட வேண்டிய படம்.. இந்தியாவில் வரும் 23ம் திகதியே வெளியாகின்றது என்பதுகுறிப்பிடத்தக்கது.

http://www.4tamilmedia.com

'Slumdog Millionaire' - திரை விமர்சனம் Slumdogdec22_full

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Jan 18, 2009 11:46 pm

'Slumdog Millionaire' - திரை விமர்சனம் Slum_0

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Jan 18, 2009 11:46 pm

'Slumdog Millionaire' - திரை விமர்சனம் Slum_4

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Jan 18, 2009 11:46 pm

'Slumdog Millionaire' - திரை விமர்சனம் Slum_5

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Jan 18, 2009 11:47 pm

'Slumdog Millionaire' - திரை விமர்சனம் Slum_6

'Slumdog Millionaire' - திரை விமர்சனம் Slumdog__1231732899_5022

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Jan 18, 2009 11:47 pm

'Slumdog Millionaire' - திரை விமர்சனம் 254

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Jan 18, 2009 11:47 pm

'Slumdog Millionaire' - திரை விமர்சனம் Argolden1_

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக