புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திரை விமர்சனம்- ஆடை Poll_c10திரை விமர்சனம்- ஆடை Poll_m10திரை விமர்சனம்- ஆடை Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
திரை விமர்சனம்- ஆடை Poll_c10திரை விமர்சனம்- ஆடை Poll_m10திரை விமர்சனம்- ஆடை Poll_c10 
13 Posts - 25%
Baarushree
திரை விமர்சனம்- ஆடை Poll_c10திரை விமர்சனம்- ஆடை Poll_m10திரை விமர்சனம்- ஆடை Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
திரை விமர்சனம்- ஆடை Poll_c10திரை விமர்சனம்- ஆடை Poll_m10திரை விமர்சனம்- ஆடை Poll_c10 
2 Posts - 4%
prajai
திரை விமர்சனம்- ஆடை Poll_c10திரை விமர்சனம்- ஆடை Poll_m10திரை விமர்சனம்- ஆடை Poll_c10 
2 Posts - 4%
Rutu
திரை விமர்சனம்- ஆடை Poll_c10திரை விமர்சனம்- ஆடை Poll_m10திரை விமர்சனம்- ஆடை Poll_c10 
1 Post - 2%
சிவா
திரை விமர்சனம்- ஆடை Poll_c10திரை விமர்சனம்- ஆடை Poll_m10திரை விமர்சனம்- ஆடை Poll_c10 
1 Post - 2%
viyasan
திரை விமர்சனம்- ஆடை Poll_c10திரை விமர்சனம்- ஆடை Poll_m10திரை விமர்சனம்- ஆடை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரை விமர்சனம்- ஆடை Poll_c10திரை விமர்சனம்- ஆடை Poll_m10திரை விமர்சனம்- ஆடை Poll_c10 
10 Posts - 83%
Rutu
திரை விமர்சனம்- ஆடை Poll_c10திரை விமர்சனம்- ஆடை Poll_m10திரை விமர்சனம்- ஆடை Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
திரை விமர்சனம்- ஆடை Poll_c10திரை விமர்சனம்- ஆடை Poll_m10திரை விமர்சனம்- ஆடை Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை விமர்சனம்- ஆடை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 30, 2019 6:08 pm

திரை விமர்சனம்- ஆடை 508420
=எல்லாவற்றுக்கும் பந்தயம் கட்டி வெற்றியை ருசிப்பவர்
அமலாபால். இவர் தனியார் டிவியில் ‘தொப்பி தொப்பி’
என்ற குறும்பு நிகழ்ச்சியை நடத்துகிறார்.

நீதிமன்ற உத்தரவு காரணமாக, டிவி அலுவலகத்தை காலி
செய்ய நேரிடுகிறது. எல்லோரும் வெளியேறிவிட, அமலாபால்,
தோழி ரம்யா, 4 ஆண் நண்பர்கள் மட்டும் அந்த
கட்டிடத்திலேயே குடித்து கும்மாளமாக இரவு முழுவதும்
கழிக்க முடிவெடுக்கின்றனர்.

போதையில் முதலில் ஆட்டம் பாட்டமாக தொடங்குவது,
ஒரு கட்டத்தில் சண்டை சச்சரவாக மாறு கிறது. இந்த
நிலையில், நிர்வாண மாக செய்தி வாசிப்பதாக அமலா பால்
கட்டிய பந்தயத்தை நினை வூட்டுகிறார் ரம்யா.

போதை ஏறிய அமலாபால், ‘செய்தி வாசிப்பது என்ன..
இரவு முழுவதும் இந்த கட்டிடத்தில் நிர்வாணமாக
இருக்கிறேன்’ என்று சொல்லி, அவ்வாறே செய்கிறார்.

மறுநாள் பொழுது விடியும்போது, தான் மட்டும் அங்கு
தன்னந்தனியாக நிர்வாணமாகப் படுத்திருப்பதை
அறிந்து அதிர்ச்சி அடைகிறார். அந்த கட்டிடத்தில் இருந்து
அவர் தப்பினாரா? உடன் இருந்த நண்பர்கள் என்ன
ஆனார்கள்? இந்த கேள்விகளின் விடையாக இருக் கிறது
‘ஆடை’.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 30, 2019 6:08 pm


ஆடையின் அவசியம் பற்றி கூறுவதற்காக,
19-ம் நூற்றாண்டில் கேரளாவில் நடந்த தோள்சீலைப்
போராட்டம் தொட்டுக் காட்டப்படு கிறது. வரலாற்று
நாயகி நங்கேலி யின் கதையோடு படம் தொடங்குவது,
இது பெண்ணியக் கதை என் பதற்கான கட்டியத்தை
துணிச்ச லாக கூறுகிறது. பிறகு, எப்படியான பெண்ணியம்
இன்றைய தேவை என்பதை மலைவாழ் பெண்
கதாபாத்திரத்தின் ஊடாகக் காட்ட முற்பட்டிருக்கிறார்
இயக்குநர் ரத்னகுமார்.


டிவி நிகழ்ச்சி சம்பவங்கள் சற்று நீளம் என்றபோதும்,
இடைவேளை வரை படம் வேகமாக நகர்கிறது. அதன்
பிறகு, கட்டிடத்தில் இருந்து தப்பிக்க அமலாபால்
மேற்கொள் ளும் முயற்சிகள் காரணமாக சிறிது தொய்வு
ஏற்படுகிறது. இறுதியில் எதிர்பார்க்காத வகையில்
திரைக் கதை சென்று முடிகிறது.

தமிழ் சினிமாவில் கதாநாயகன் அறிமுகக் காட்சிக்கு
இணையாக, கதாநாயகி அமலாபாலுக்கு
கொடுக்கப்படும் வர்ணனை ரசிக்கவே வைக்கிறது.
அமலாபாலை நம்பித்தான் படம் முழுவதுமே நகர்கிறது.

அவரும் இதை உணர்ந்து கொண்டு, அழுத்தமான
நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இடை வேளைக்குப்
பிறகு பெரும்பாலும் ஆடை இல்லாமலே வருகிறார்.

ஆனால், எந்த காட்சியும் கவர்ச்சி யாகவோ,
ஆபாசமாகவோ இல்லாமல் படமாக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் பார்வையில் இருந்து உடலைக் காட்ட
முனைந்தது பாராட்டுக்குரியது.

பெண்ணியம் தொடர்பாக கருத்து சொல்ல ஆசைப்பட்ட
இயக்குநர், படம் போரடித்துவிடக் கூடாது; மெசேஜ்
சொல்லும் படமாக மாறிவிடக் கூடாது என்பதிலும்
ஜாக்கிரதையாகவே இருக் கிறார்.

ஆங்காங்கே அரசியல் நையாண்டிகள், இரட்டை அர்த்த
காமெடி துணுக்குகள் என படத்தை நகர்த்தியிருக்கிறார்.
இறுதியில் நங்கேலியின் அறிவுரை கொஞ்சம் அதிகம்.

ஊர் தப்பாக பேசிவிடக் கூடாதே என்று பதைபதைக்கும்
சராசரி அம்மாவாக ஸ்ரீரஞ்சனி சிறப்பான நடிப்பை
தந்திருக்கிறார். விவேக் பிரசன்னா, ‘வி.ஜே’ ரம்யா,
சரித் திரன், ரோஹித் நந்தகுமார் ஆகி யோரும் படத்தைச்
சுவாரஸ்யப் படுத்த உதவுகின்றனர்.

விவேக் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு, படத்துக்கு
பலம். பாடகர் பிரதீப் குமாரின் பின்னணி இசையும்,
தனது ‘ஊர்கா’ இசை பேண்டு மூலமாக அவர்
தந் திருக்கும் பாடல்களும் சில கட்டங்களை
விறுவிறுப்பாக்க உதவுகின்றன. ‘நீ வானவில்லா’ பாடல் ர
சனை.

எதிர்ப்படும் மக்களை திடீ ரென அதிர்ச்சியில் ஆழ்த்தி,
கடைசி யாக, மறைத்து வைத்திருக்கும் கேமராவை காட்டி
அவர்களை முட்டாளாக்கும் டிவி நிகழ்ச்சிதான் படத்தின்
மையம். இது வெறும் கேளிக்கை அல்ல; சக மனிதர்கள்
இடையே உள்ள நம்பகத் தன்மையை சுக்குநூறாக்கும்
விபரீத விளையாட்டு என்று ஊடகங்களின் தலையில்
குட்டு வைத்திருக்கிறார் இயக்குநர்.

விளையாட்டு வினையாகிவிடக் கூடாது என்ற எ
ச்சரிக்கையை, பெண்ணின் சுதந்திரம் எதுவரை என்ற
கருத்தை பொழுதுபோக்காக எடுத்துரைக்கிறது ‘ஆடை’.
-
------------------------------
நன்றி- இந்து - தமிழ் திசை



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக