புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_c10தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_m10தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_c10 
35 Posts - 74%
heezulia
தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_c10தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_m10தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_c10 
10 Posts - 21%
ஆனந்திபழனியப்பன்
தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_c10தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_m10தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_c10தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_m10தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_c10தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_m10தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_c10 
371 Posts - 78%
heezulia
தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_c10தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_m10தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_c10தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_m10தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_c10தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_m10தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_c10தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_m10தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_c10தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_m10தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_c10தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_m10தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_c10தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_m10தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_c10தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_m10தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_c10தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_m10தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக பட்ஜெட் 2012


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 26 Mar 2012 - 14:29

First topic message reminder :

தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Gallerye_122027335_435108

சென்னை: தமிழக பட்ஜெட் இன்று காலை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அடிப்பøடை கட்டமைப்பு, கல்வி, சுகாதாரத்திற்கு முன்னுரிமை என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. வி.ஏ.,ஓ.,க்களுக்கு லேப்டாப் வழங்குதல், பயிர்க்ககடனுக்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு , 1 முதல் 10 ம் வகுப்பு வரையிலான பள்ளி குழந்தைகளுக்கு விலையில்லா நோட்டு புத்தகம் வழங்கப்படும், இதற்கு அரசுக்கு ரூ. 150 கோடி இழப்பு ஏற்படும் என்றும் , இது வரை இல்லாத அளவிற்கு கல்வித்துறைக்கு ரூ. 14 ஆயிரத்து 552 கோடி ஒதுக்கப்படுகிறது என்றும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவித்தார். சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்னதாக அறிவிப்பு வெளியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க,. எம்,எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

பட்ஜெட் கூட்டம் துவங்கியதும் தமிழக முதல்வருக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து பன்னீர்செல்வம் பேசுகையில்: தமிழக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதல்வர் ஜெ.,தயாரித்துள்ள தொலைநோக்கு திட்டம் வழிகாட்டுதலின்படி இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்றார்.

தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள் விவரம் வருமாறு: வரும் நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9. 3 சதமாக இருக்கும். அதன்படி அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ. ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. தனிநபர் வருமானத்தை பெருக்கிட முக்கிய வழிமுறை காணப்படும். ஏற்றத்தாழ்வுகளை களைந்திட சுகாதாரம், கல்வி, உள்ளிட்ட பின்தங்கிய பகுதிகளை கண்டறிந்து சீரான வளர்ச்சி அடைய 100 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. 12 ம் திட்ட நிதியை 1.85 லட்சம் கோடியை 2 லட்சம் கோடியாக உயர்த்தப்படுகிறது.

ஆதிதிராவிட மற்றும் கிராமப்புற வறுமையை களைந்திட கூடுதல் நிதி ஒதுக்கீடு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார திட்டம் துவக்கப்படும். பெண்கள், மாற்றுத்திறனாளிக்கு முன்னுரிமை வழங்கப்படும் இந்த திட்டத்திற்கு ரூ. 200 கோடி ஒதுக்கப்படுகிறது. இளைஞர்களின் வேலை வாய்ப்பு பெருக்கிட தனியார் நிறுவன துணையுடன் புதிய திட்டம் செயல்படுத்த ரூ.. 193 .2 லட்சம் ஒதுக்கப்படுகிறது. மின் ஆளுமைக்கு புதிய கொள்கை விரைவில் வெளியிடப்படும், வருவாய், பதிவு, சமூக, வேலை வாய்ப்பு ஊரக துறைகளில் ஒட்டுமொத்த கணினி மையம் கொண்டு வரப்படும்.

ஒரு லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டா : * நகர்ப்புற மையங்களில் பொதுச்சேவை மன்றங்கள் அமைக்கப்படும், ஒரு லட்சம் பட்டாமனை வழங்க திட்டம்

* மடிக்கணினி வரும் ஆண்டில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்படும்

* சட்டம் ஒழுங்கு முக்கிய குறிக்கோள் ஆகும். கடந்த 10 மாதங்களில்சட்டம் ஒழுங்கு சிறப்பாக பேணப்பட்டுள்ளது. முதல்வர் இதில் முழு உறுதி யாக உள்ளார். நில அபகரிப்பு தொடர்பான வழக்குகள் மூலம் 724 கோடிக்கும் மேலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. காவலர் குடியிருப்பு வசதிகள் 100 சதம் நிறைவேற்றப்படும்

* ரோந்து படை உயர்த்தப்படும்

* தீயணைப்பு நிலையங்கள் மேம்படுத்திட 197.58 கோடி ஒதுக்கீடு

* வேளாண்உற்பத்தி 120 லட்சம் டன் உற்பத்தி இலக்கு

* இ, செல்லான் திட்டம் விரிவாக்ககம்

* ஓட்டுனர் பயிற்சி பள்ளிக்கு ரூ. 15 கோடி

* வேளாண்மை துறைக்கு 3 ஆயிரத்து 804 கோடி ஒதுக்கீடு

* வேளாண் பன்முனைத்திட்டம் அறிமுகம்

*உரம் குறைந்த விலையில் வழங்கிட ஏற்பாடு : விசாயிகளுக்கு வழங்கப்படும் உரத்தை குறைந்த விலையில் வழங்கிட இணையத்திற்கு 150 கோடி உயர்த்த வழங்கப்படும்

* பயிர்க்கடன் இலக்கு 4ஆயிரம் கோடி

* கால்நடை துறைக்கு 816. 3 கோடியாக உயர்த்துதல்

* மீனவர்கள் நிவாரண தொகை தொடர்ந்து வழங்ப்படும்

* வெள்ளாடுகள் வழங்குவதற்கு ரூ. 244 கோடி ஒதுக்கீடு

* பயிர்காப்பீட்டு திட்டம்

*சூரிய ஒளி மின்சக்தி பூங்காக்கள் : அணை பராமரிப்புக்கு ரூ. 745 கோடி

* சென்னை பள்ளிக்கரணையில் சதுப்பு நிலக்காடு மேம்படுத்த திட்டம்

* வடக்கு சென்னை துறைமுகம் இணைக்கும் திட்டம்

* தொழில் முனைவோர் ஆயிரம் பேருக்கு பயிற்சி வழங்கிட 100 கோடி முதலீட்டு மாநியம்

* திருப்பூர் கழிவு நீர் வெளியேற்றத்தில் புதிய திட்டங்கள்

* யானை தடுப்பு அகழிகள்

* 100 கோடி செலவில் பிளாஸ்டிக் சாலைகள்

* சூரிய மின் ஒளி கொண்ட பசுமை வீட்டுக்கு மேலும் 60 ஆயிரம் வீடுகள் அமைக்க ரூ. 150 கோடி செலவு

* மின் உற்பத்தியை பெருக்கிட சூரிய ஒளி மின்சக்தி பூங்காக்கள் அமைக்கப்படும்

* சூரிய மின் உற்பத்திகள் ஊக்குவிக்கப்படும்

* மின் சேமிப்பு நோக்கில் சி,எல்.எப்.,பல்புகள் வழங்கப்படும்

* ஸ்ரீரங்கம், பழநி திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும்.

தினமலர்



தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 27 Mar 2012 - 2:49

தமிழக பட்ஜெட் 2012 முக்கிய அம்சங்கள்

ஆதி திராவிட மாணவர் விடுதிகளில் மாணவர்களுக்கு கட்டில் வசதி

ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு ரூ. 740 கோடி ஒதுக்கீடு

7000 கிராமங்களில் குடிநீர் வசதியை மேம்படுத்த சிறப்புத் திட்டம்

சென்னை பெருநகர வளர்ச்சிக்கு ரூ. 500 கோடி

மதுரை மாநகராட்சியில் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 250 கோடி

மாணவர்களுக்கு ஜியாமெட்ரி பாக்ஸ், ஸ்கேல், பென்சில், அட்லஸ் உள்ளிட்டவையும் இலவசமாக வழங்கப்படும்

1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும்

கிராமப்புற பெண்களுக்கு விலையில்லா நாப்கின்கள் வழங்க ரூ. 55 கோடி ஒதுக்கீடு

மதுரை, கோவையில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும்

அண்ணா, எம்.ஜி.ஆர். நினைவிடங்களைப் புதுப்பிக்க ரூ. 6.83 கோடி

தமிழறிஞர்களுக்கு கபிலர், உ.வே.சா விருது

தமிழ் ஆராய்ச்சிக்கு ரூ. 1 கோடி ஒதுக்கீடு

புதிய காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ. 750 கோடி ஒதுக்கீடு

மருத்துவத் துறைக்கு ரூ. 5569 கோடி

பழனி, ஸ்ரீரங்கம் கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம்-புதிய திட்டம்

1006 கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறை மூலம் புதுப்பிக்கப்படும்

மேலும் 50 கோவில்களுக்கு திருக்கோவில் அன்னதானத் திட்டம் விரிவுபடுத்தப்படும்

கோவில் சொத்துக்களை மீட்கர நடவடிக்கை எடுக்கப்படும்

தானே புயல் பாதித்த பகுதிகளில் மின் கட்டமைப்பை சீரமைக்க ரூ. 300 கோடி ஒதுக்கீடு

ரூ. 8000 கோடியில் உடன்குடி மின் திட்டம் செயல்படுத்தப்படும்

உடன்குடி திட்டத்திற்கு ரூ. 1500 கோடி ஒதுக்கீடு

வெளி மாநிலத்திலிருந்து மின்சாரம் கொண்டு வர வழியில்லை

புதிய பேருந்துகள் வாங்க ரூ. 508 கோடி நிதி

அனைத்துப் அரசு பஸ்களிலும் மின்னணு பயணச்சீட்டு வழங்கும் முறை அமல்

மோனோ ரயில் திட்டத்தில் 4வது வழித்தடமாக வண்டலூர்-புழல் இணைக்கப்படும்

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ. 250 கோடி ஒதுக்கீடு

விரைவில் சென்னையிலும் அரசு கேபிள் சேவை

2வது கட்ட சென்னை புற வழிச் சாலை மேம்பாட்டுத் திட்டம்- மாநில அரசே நிறைவேற்றும்

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொழிற்பேட்டைகளுக்கு மாற்றப்படும்

ரூ. 20 ஆயிரம் கோடியில் புதிய முதலீடுளை ஈர்க்க புதிய திட்டம்

பிளாஸ்டிக் சாலைகள் அமைக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு

உணவு மானியத்திற்கு ரூ. 4900 கோடி ஒதுக்கீடு

துவரை உள்ளிட்ட பருப்புகள் சலுகை விலையில் தரப்படும்

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும்

ரூ. 50 கோடியில் விலைக் கட்டுப்பாட்டு நிதியம்

3 ஆண்டுகளில் 3307 ஏரிகள் மேம்படுத்தப்படும்

காண்டூர் கால்வாய் திட்டம் 2013 ஆகஸ்ட்டில் நிறைவடையும்

காவிரி உள்ளிட்ட நதி நீர்ப் பிரச்சினைகளில் தமிழக உரிமை பாதுகாக்கப்படும்

நதி நீர் இணைப்புக்கு ரூ. 50 கோடி ஒதுக்கீடு

அணைகளை மேம்படுத்த ரூ. 50 கோடி

விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ. 4000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும்

49 விரைவு நீதிமன்றங்கள் நிரந்தர நீதிமன்றங்களாக்கப்படும்.

2012-13ல் 1 லட்சம் வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்படும்

விவசாயிகளின் வட்டி்ச சலுகைக்கு ரூ. 160 கோடி ஒதுக்கீடு

சங்கரன்கோவில், விழுப்புரத்தில் கறிக்கோழி, முட்டைக் கோழி வளர்ப்பு ஊக்குவிப்புத் திட்டம்

கால்நடை பராமரிப்புத் துறைக்கு ரூ. 814.03 கோடி ஒதுக்கீடு

ரூ. 244 கோடியில் 12,000 பேருக்கு கறவைப் பசுக்கள், 1.5 லட்சம் பெண்களுக்கு தலா 4 வெள்ளாடு அல்லது செம்மறியாடு

நெல்லுக்கு ஊக்கத் தொகை வழங்க ரூ.200 கோடி

10 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவர்

ஓட்டுப் பயிற்சிப் பள்ளி அமைக்க ரூ. 15 கோடி ஒதுக்கீடு

நீதித்துறை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ. 736 கோடி

வேளாண்துறைக்கு ரூ.3804.96 கோடி ஒதுக்கீடு

சாலைப் பாதுகாப்பு நிதி ரூ. 65 கோடி உயர்வு

டி.கல்லுப்பட்டி, ஆலங்குளம், சின்னசேலத்தில் புதிய தீயணைப்பு நிலையங்கள்

தீயணைப்புத் துறைக்கு ரூ. 197.58 கோடி ஒதுக்கீடு

ரூ.400 கோடியில் 4340 கூடுதல் காவலர் குடியிருப்புகள் அமைக்கப்படும்

சென்னை போக்குவரத்துக் காவலுக்கு 87 கூடுதல் ரோந்து வாகனங்கள் ஒதுக்கீடு

சென்னையில் ரூ. 150 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மைத் திட்டம்

ரூ. 20.75 கோடியில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு

நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க 25 சிறப்பு நீதிமன்றங்கள்

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரூ. 22.49 கோடியில் லேப்டாப், பிரிண்டர்கள் வழங்கப்படும்

ரூ. 1.93 கோடியில் தனியார் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்க அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட உதவி மையங்கள்

பேரிடர்களை சமாளிக்க சிறப்புப் பயிற்சி பெற்ற அமைப்பு உருவாக்கப்படும்.

தமிழ்நாடு கட்டமைப்பு வாரியம் அமைக்க விரைவில் சட்டத் திருத்தம்

தானே புயல் பாதித்த கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் வீடுகள் கட்ட ரூ. 1000 கோடி ஒதுக்கீடு

பட்ஜெட் உரையைப் புறக்கணித்து திமுக வெளிநடப்பு

தொடர்ந்து 5 நிமிடம் ஜெயலலிதாவைப் பாராட்டி புகழ் மாலை 'பாடினார்' ஓ.பன்னீர் செல்வம்!

சங்கரன்கோவில் வெற்றி: ஜெயலலிதாவை பாராட்டி சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் நீண்ண்ண்ண்ட நேரம் மேசைத் தட்டு!



தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 27 Mar 2012 - 2:50

1-10 வரை மாணவர்களுக்கு செருப்பு முதல் பென்சில் வரை இனி அத்தனையும் இலவசம்!

சென்னை: 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு அத்தனையும் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

12-ம் வகுப்பு படிப்பவர்களுக்கு 2,000 ரூபாய் அரசு நிதி நிறுவனத்தில் வைப்பீடு செய்யப்பட்டு அவர்கள் பள்ளிப்படிப்பை முடித்தபின் வட்டியுடன் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 313.13 கோடி ரூபாய் மாணவர்கள் பெயரில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில் 21.36 லட்சம் மாணவ- மாணவிகள் பயனடையும் வகையில் இத்திட்டத்திற்கு இந்த வரவு- செலவுத் திட்டத்தில் 366.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டவாறு இந்த அரசு 2012-2013ம் ஆண்டிலிருந்து பள்ளி மாணவ - மாணவிகளுக்கு விலை ஏதுமின்றி நான்கு ஜோடி சீருடைகளை வழங்கும்.மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு 6-ம் வகுப்பில் இருந்து பயிலும் மாணவர்களுக்கு அரைக்கால் சட்டைக்குப் பதிலாக முழுக்கால் சட்டையும், பெண்களுக்கு சல்வார் கமீசும் வழங்கப்படும். 48.63 லட்சம் குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்குவதற்காக இந்த வரவு- செலவுத்திட்ட மதிப்பீடுகளில் 329.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல், 1-ம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து பள்ளிக் குழந்தைகளுக்கும் விலையில்லாக் காலணிகள் வழங்கும் திட்டத்தையும், 2012-2013-ம் ஆண்டிலிருந்து இந்த அரசு தொடங்கி செயல்படுத்தும். இத்திட்டத்திற்காக இந்த வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் 81 லட்சம் குழந்தைகள் பயன் அடைவார்கள்.

1-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு புத்தகப்பைகளும், 6-ம் வகுப்பிலிருந்து 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு ஜியாமெட்ரி பெட்டிகளும், ஒன்றாம் வகுப்பில் இருந்து 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு வண்ணப் பென்சில்களும், 6-ம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு உலக வரை படம் புத்தகமும் வழங்கப்படும்.

இதற்காக இந்த வரவு- செலவு திட்டத்தில் 136.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கம் செய்யப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட அத்தனைப் பொருள்களும் விலையில்லாமல் மாணவர்களுக்கு வழங்கிய பிறகு, மாணவர் தேவைக்கு எஞ்சியிருப்பது நோட்டுப் புத்தகம் மட்டுமே. எனவே, நோட்டு புத்தகங்களையும் விலையில்லாமல் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு வரும் கல்வி ஆண்டு முதல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கென 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நமது மாநிலத்தில் பிற துறைகளுக்கு ஒதுக்கப்படும் தொகையைவிட அதிகமாக, எப்போதும் வழங்கப்படாத உயர் அளவாக, பள்ளிக் கல்வித் துறைக்கு இந்த 2012-2013ம் ஆண்டு வரவு- செலவு திட்டத்தில் 14, 552.82 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளோம் என்றார் அவர்.

இதன் மூலம் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்கள் முற்றிலும் இலவசமாக படிப்பு தொடர்பான பொருட்களைப் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.



தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 27 Mar 2012 - 2:52

நிலத்தின் விலை உயரும்.. மரக்குச்சி விலை குறையும்!

சென்னை: நிலத்துக்கான வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நிலத்தை வாங்குவோர் அதற்கு பதிவு செய்ய அதிக கட்டணம் செலுத்த வேண்டி வருவதோடு, நிலத்தின் விலையும் உயரலாம்.

இன்று சட்டசபையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:

வாகனங்கள் மீதான வரியை சீரமைக்கும் பொருட்டு சுற்றுலா பயண வாகனங்கள், மாக்சி வாகனங்கள், தனியார் சேவை வாகனங்கள், மாற்று பேருந்து வாகனங்கள், கட்டுமானம் போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள், பிற மாநில ஒப்பந்த வாகனங்கள் ஆகியவை மீதான வரிகள் சீரமைக்கப்படும் (அதாவது, வரிகள் உயரும்)

விருப்ப எண்களை பதிவு செய்வதற்கான கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்படும். இந்த மாற்றங்கள் இரு சக்கர வாகனங்களுக்கு பொருந்தாது.

சொத்துக்களின் சந்தை மதிப்பு (market value) கணிசமாக உயர்ந்துள்ள போதிலும் வழிகாட்டி மதிப்பு (government guidance value) இதற்கேற்றால் போல் உயர்த்தப்படாத காரணத்தினால் அரசின் வருவாயில் பெருமளவில் இழப்பு ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு, வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகளை அமல்படுத்தப்படும் (உயர்த்தப்படும்)

(அதாவது, நமது ஏரியாவில் ஒரு சதுர அடி நிலம் 3000 ரூபாய் என்று மார்க்கெட் ரேட்டும், அரசின் வழிகாட்டி மதிப்பு 600 ரூபாயாகவும் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த இடத்தை சதுர அடி ரூ. 3000க்கு வாங்கினாலும் அரசின் வழிகாட்டி மதிப்பான 600 ரூபாய்க்குத் தான் ரிஜிஸ்டர் செய்கிறார்கள் மக்கள். இதன் மூலம் ஸ்டாம்ப் டூட்டியை குறைவாக செலுத்துகிறார்கள். இனி வழிகாட்டி மதிப்பே உயர்த்தப்பட்டால், ஸ்டாம்ப் டூட்டி அதிகரிக்கும். அது மட்டுமல்ல, அரசின் வழிகாட்டி மதிப்பே ரூ. 600க்கு மேல் உயர்த்தப்பட்டுவிட்டால், அந்த இடத்தின் மார்க்கெட் விலையையும் புரோக்கர்களும் நில முதலாளிகளும் உயர்த்தி விடுவார்கள் என்பதும் நிச்சயம். ஆக, மொத்தத்தில் இந்த பட்ஜெட் மூலம் நிலத்தின் விலை அதிகரிக்கப் போகிறது)

அதே சமயம் பொது மக்களின் சுமையைக் குறைக்கும் பொருட்டு விற்பனை ஆவணங்கள் மற்றும் அதே நிலையில் முத்திரைத் தீர்வை (ஸ்டாம்ப் டூட்டி) விதிக்கப்படும் ஆவணங்களுக்கு தற்போது விதிக்கப்படும் 6 சதவீத முத்திரைத் தீர்வை வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 5 சதவீதமாகக் குறைக்கப்படும்.

தற்போது உள்ளூர் திட்ட அமைப்புகள் மூலம் வசூலிக்கப்பட்டு வரும் கட்டமைப்பு மற்றும் அடிப்படைக் கட்டணம் தற்போதுள்ள கட்டண அளவில் 50 சதவீதம் உயர்த்தி நிர்ணயிக்கப்படும். கூடுதல் வருவாயைத் திரட்ட எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளின் காரணமாக மாநில அரசு சுமார் 1,500 கோடி ரூபாய் கூடுதலாக கிடைக்கும. இதன் மூலம், இந்த அரசு, மக்கள் நலத்திட்டங்களையும் வளர்ச்சித் திட்டங்களையும் நிதிப்பற்றாக்குறை ஏதுமின்றி சிறப்பாக செயல்படுத்த இயலும்.

வரி விலக்குகள்:

மின்சக்தியால் இயங்கும் வாகனங்களுக்கு வரி 14.5 சதவீதத்திலிருந்து 5% ஆகக் குறைப்பு

உள்ளூர் தீக்குச்சித் தொழிற்சாலைகள் வெளிச்சந்தைப் போட்டியை சமாளிக்கும் வண்ணம், மரக்குச்சிகள் மற்றும் மரப்பட்டைகளுக்கு தற்போது விதிக்கப்படும் 14.5 சதவீத மதிப்புக் கூட்டு வரி 5 சதவிதமாக குறைக்கப்படும்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.



தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 27 Mar 2012 - 10:04

ஞானதேசிகன்

தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் 2012-13-க்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். குறிப்பாக கோதுமை, ஓட்ஸ், இன்சுலின், கையினால் தயாரிக்கப்படும் பூட்டு, பாலூட்டும் புட்டிகள், தலைகவசத்திற்கான மதிப்பு கூட்டு வரி விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க அறிவிப்புகளாகும். பத்திரிகையாளர், ஓய்வூதியதாரர், அரசு அலுவலர்களுக்கு வீட்டுக்கடன் ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்வு போன்றவைகள் வரவேற்கத்தக்க அம்சங்களாகும். கன்னியாகுமரியில் உள்ள காமராஜர் மண்டபம், சென்னையில் உள்ள காமராஜர் இல்லம் ஆகியவற்றை புதுப்பிப்பதற்கான முயற்சி என்கிற அறிவிப்பு மிக்க மகிழ்ச்சி தரக்கூடிய அறிவிப்பாகும். பொதுவாக தமிழக அரசின் இந்த நிதி நிலை அறிக்கை பழையதும், புதியதும் சோந்த ஒரு கலவை என்று கூறியுள்ளார்.



தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 27 Mar 2012 - 10:04

சரத்குமார்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சமீபத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்தின் வளர்ச்சியையும், எய்த வேண்டிய இலக்குகளையும் மனதில் கொண்டு, ரூ.15 லட்சம் கோடி மதிப்பீட்டில் அறிவித்த தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023 சிறப்பாக நிறைவேற இன்றைய பட்ஜெட் நல்லதொரு தொடக்கமாக அமையும் என்ற நம்பிக்கையை அளிப்பதாக உள்ளது.

இயற்கை இடர்பாடுகளில் பேரிடர் நேரிடும்போது விரைவாகவும், திறமையாகவும் செயல்படக்கூடிய சிறப்பு பயிற்சி பெற்ற மாநில பேரிடர் மீட்டுப்படை ஏற்படுத்த இருப்பதை பாராட்டி வரவேற்கிறேன். தனியார் துறையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதற்காக 32 மாவட்டங்களிலும் மாவட்ட உதவி மையங்கள் அமைத்து இளைஞர்களுக்கு திறன் உருவாக்கும் பயிற்சியும், திறன் மேம்பாட்டுப்பயிற்சியும் அளிக்க இருப்பது வரவேற்கத்தக்கது. வேளாண் துறைக்கு முன் எப்போதும் இல்லாத அளவாக ரூ.3,804.96 கோடி ஒதுக்கியிருப்பதும், வரும் நிதி ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 120 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு இலக்கு நிர்ணயம் செய்திருப்பதும் சிறப்பு அம்சங்களாகும்.

மின் உற்பத்தியைப் பெருக்கி மின்பற்றாக்குறையை சமாளிக்க 1600 மெகாவாட் உடன்குடி அனல் மின் நிலையத் திட்டப்பணிகளை தொடங்குவதற்காக இந்த நிதியாண்டில் ரூ.1,500 கோடி ஒதுக்கியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. கன்னியாகுமரியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபத்தையும், சென்னையில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தையும் புதுப்பிக்கும் பணிகளை அரசு மேற்கொள்ள இருப்பதற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பள்ளி மாணவர்களுக்குத் தேவையான பல்வேறு பொருட்களை விலையில்லாமல் வழங்கி வரும் தமிழக அரசு, இந்த ஆண்டு முதல் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு விலையில்லா நோட்டுப் புத்தகங்களையும் வழங்க இருப்பதை பாராட்டி வரவேற்கிறேன். தமிழக மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றாமல், மாநிலத்தின் நிதி நிலையை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது என்ற அடிப்படையில் முதல்-அமைச்சருக்கும், நிதி அமைச்சருக்கும், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் எனது பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.



தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 27 Mar 2012 - 10:05

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் சில வரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்த போதும், மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிக்காத அறிக்கையாகவே உள்ளது. தமிழக அரசின் 2012-2013-ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை புதிய முயற்சிகளும், திட்டங்களுமின்றி கடந்த காலத்தைப்போலவே சில வெற்று வாக்குறுதிகளும், சுய தம்பட்டமும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வையும் முன்வைக்காததாகவும் அதே சமயம் புதிய தாராளமயக் கொள்கைகளை அடிபிசகாமல் பின்பற்றுவதாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.



தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 27 Mar 2012 - 10:05

ஏ.சி.சண்முகம்

புதிய நீதிக்கட்சி நிறுவனர்-தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `ஏழை-எளியோருக்கு ஒரு லட்சம் வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்றும் அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டில வாழும் விவசாயிகளின் வாழ்வில் பெரும் அக்கறை கொண்டு, வேளாண் வளர்ச்சிக்காக முன் எப்போதும் இல்லாத அளவில், ரூ.3804.96 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.2100 வழங்கப்படும் என்னும் அறிவிப்பு மகிழ்ச்சிக்குரியது, வரவேற்கத்தக்கது.



தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 27 Mar 2012 - 10:05

இந்திய ஜனநாயக கட்சி

இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் டி.ஆர்.பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `பட்ஜெட் என்பது ஆளும் அரசுகளால் ஆண்டுக்கு ஆண்டு வாசிக்கப்படும் சாதாரண வரவு - செலவு நிதிநிலை அறிக்கையாக மட்டுமே இல்லாமல், மாறாக பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள ஒட்டுமொத்த சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும் போக்கக்கூடிய ஒரு சிறந்த கருவியாக பயன்படவேண்டும். அப்படிப் பயன்தரக்கூடிய அல்லது ஏற்றத்தாழ்வுகளை போக்கக்கூடிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் காணாதது பெருத்த ஏமாற்றத்தையே அளிக்கிறது. மொத்தத்தில், இலவச திட்டங்களுக்காக தாராள நிதி ஒதுக்கீடு தவிர்த்திருக்கலாம், மின்தட்டுப்பாடு தீர்வுக்கு போதிய கவனம் செலுத்தப்படவில்லை, விவசாயம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.



தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 27 Mar 2012 - 10:06

மூவேந்தர் முன்னணி கழகம்

தமிழக பட்ஜெட் குறித்து அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவன தலைவர் டாக்டர் சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை, கோவையில் மண்டல அளவிலான புற்றுநோய் சிகிச்சை மேம்பாட்டுக்கு ரூ.24 கோடி ஒதுக்கீடு, பழனி, ஸ்ரீரங்கத்தில் நாள்தோறும் அன்னதானம், தமிழ்ப்பணியாற்றும் தமிழ் அமைப்புகளுக்கு தமிழ்தாய் விருது போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவையாகும் என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில் சங்க தலைவர் கே.ஆர்.தங்கராஜ், பொதுச் செயலாளர் டி.எஸ்.எம்.ஜெயராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தொடர் மின்வெட்டை குறைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தோம் ஆனால் சிறு மற்றும் குறுந்தொழில்களின் கோரிக்கைகளை அரசு அமல்படுத்தாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசு அலுவலர் கழக மாநில தலைவர் சவுந்திரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசு அலுவலர்களுக்குரிய மருத்துவ காப்பீடு திட்டம் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தியுள்ளதுடன், காப்பீடு திட்டத்தில் மாற்றம் செய்து நடைமுறைப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதை மனதார வரவேற்கிறோம். அரசு அலுவலர்கள் வீடு வாங்குவதற்கு கடன் தொகை ரூ.15 லட்சத்தை உயர்த்தி ரூ.25 லட்சம் கடன் பெறும் வகையில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இது அரசு அலுவலர்கள் வீடு வாங்கும் கனவு நனவாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.



தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 27 Mar 2012 - 10:06

கேபிள் டிவி உரிமையாளர் சங்கம்

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் காயல் ஆர்.எஸ்.இளவரசு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகர கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குரியதாகிவிட்டிருக்கிறது. என்ற அச்சத்தை, மாயையை தோற்றுவித்து குளிர்காய்ந்தவர்களின் குரல்வளையை நெறித்திருக்கும் முதல்வரின் சீரிய வழிகாட்டுதலின்பேரில் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் பட்ஜெட் நெகிழ்ச்சிக்குரியது.

டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலமாக சென்னை மாநகர கேபிள் டிவி ஆபரேட்டர்களும் பொது மக்களும் பயனடைவர் என்ற அரசின் பட்ஜெட் அறிக்கைக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியையும் மகிழ்ச்சியையும் உரித்தாக்குகிறது.



தமிழக பட்ஜெட் 2012 - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக