புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_c10 
40 Posts - 63%
heezulia
கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_c10 
2 Posts - 3%
viyasan
கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_c10 
232 Posts - 42%
heezulia
கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_c10 
21 Posts - 4%
prajai
கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 9 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசன் எனும் காவியம்


   
   

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 12:05 am

First topic message reminder :

- சத்தி சக்திதாசன்



கவிஞர் கண்ணதாசனைப் பற்றி இலக்கிய ரீதியில் ஆராயக்கூடிய அளவிற்கு பாண்டித்தியம் பெற்றவனல்ல நான். சாதரண பாடல்களின் கருத்தால் கவரப்பட்ட ஓர் சராசரி ரசிகன்தான் நான். கண்ணதாசனின் பாடல்கள்களில் சொந்த அனுபவங்களின் வாயிலாக எழுந்தவையே மிகவும் பிரபல்யம் வாய்ந்தவையாக அமைந்தன. சாதாரண மக்களின் அன்றாட அனுபங்களைத் தொட்டு இந்தப் பாடல்கள் அமைந்ததின் காரணமே இவைகளின் வெற்றிக்குக் காரணம். எட்டாவது வகுப்பு மட்டுமே படித்த முத்தையா என்ற இயற்பெயர் கொண்ட கண்ணதாசன் பிறந்தது வணிகத்திலே புகழ் பெற்ற செட்டி நாட்டைச் சேர்ந்த சிறுகூடல்பட்டி எனும் கிராமமேயாகும். தான் சிறுவயதினிலேயே சுவீகாரம் கொடுக்கப் பட்டதை மனதில் வைத்து எழுதப்பட்ட " ஒருத்தி மகனாய் பிறந்தவனாம் ஒருத்தி மகனாய் வளர்ந்தவனாம் " என்ற பாடல் இந்த கவிதைத் தலைவனின் அனுபவ கவிக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும் .

வாழ்வினிலே எடுப்பார் கைபிள்ளை போன்று எல்லோரையும் நம்பி தன் வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்களை தானே தனது சுயசரிதையில் மிகவும் அழகான எளிய தமிழில் எடுத்துரைத்து இருந்தார் கவிஞர். அவரது வாழ்க்கைப் பாதை பல முட்புதர்கள் நிறைந்த கடுமையான ஒன்றாக அமைந்தது. அவர் தானாகவே ஏற்படுத்திக் கொண்ட இடர்கள் ஏராளம் , அதை அவரே பல இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் தான் வாழ்க்கையில் செய்த தவறுகளை பகிரங்கமாக மக்களுடன் பகிர்ந்து , தன்னைத் தானே சுயவிமர்சனம் செய்யும் மனப்பக்குவததை தன்னுடைய வாழ்வின் இறுதிப் பாகத்தில் அடைந்திருந்தார். இக்கசந்த அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவதனால் ஒரு சிலருக்காவது நன்மை கிடைக்குமானால் அதுவே தமக்கு திருப்தி அளிக்கும் என்னும் கருத்தைக் கொண்டிருந்தார்.

கண்ணதாசனுக்கு இருந்த தமிழாற்றல் தமிழன்னையால் அவருக்கு அளிக்கப்பட்ட ஓர் உன்னத வரப்பிரசாதம். அதை அவர் பலவழிகளில் உபயோகித்தார்.அரசியல் எனும் அந்த அழமறியா சமுத்திரத்திலே அவர் மூழ்கும்போது தமிழையே அவர் கரைசேர்க்கும் தோணியாக பாவித்தார். தமிழ்நாட்டின் மூத்த தலைவர்கள் அனைவருமே இவரின் புகழ் மாலைக்கும் பின் ஒருபோது வசை மாலைக்கும் இலக்காகியிருக்கின்றார்கள். இதை அழகாக கலைஞர் கருணாநிதி அவர்கள் குறிப்பிடுகையில் " கண்ணதாசன் என்னை உயர தூக்கி வைத்து புகழ்பாடிய காலங்களும் உண்டு பின் மேலிருந்து என்னைத் தொப்பென்று கீழே போட்ட காலங்களும் உண்டு. ஆனால் கீழே விழுந்தபோது அவனது தமிழின் அழகு எனக்கு மெத்தையாக இருந்தது " என்ற பொருள் பட கூறியுள்ளார்.

பலர் இவரை அரசியலில் ஓர் பகடைக்காயாக பயன் படுத்தியுள்ளார்கள்.

ஆரம்பகாலங்களில் பத்திரிக்கைகளில் எழுத்தாளராக வாழ்க்கையை ஆரம்பித்தவர் , பின்பு கவிதைகளிலும் , பாடல்களிலும் தனது கவனத்தைச் செலுத்தினார். அவருக்கு முதன்முதலில் பாடல் எழுதும் சந்தர்ப்பங்கள் அந்நாளில் திமுகவின் கோட்டையாக விளங்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் மூலமே கிடைத்தது . பின்பு படங்களுக்கு வசனம் எழுதும் சந்தர்ப்பமும் கிடைத்தது . தானே சொந்தமாக படங்களையும் தயாரித்துள்ளார். அவர் தயாரித்த படங்களில் வானம்பாடி , மாலையிட்டமங்கை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

தென்றல் எனும் பத்திரிக்கையில் எழுத ஆரம்பித்தவர், பின்பு அந்தப் பத்திரிக்கையை வாங்கி தானே நடத்தியுள்ளார். இப்படி பல துறைகளிலும் இறங்கிய அவருக்கு அழியாப்புகழை அளித்தது அவரது பாடல்கள்தான். தமிழ்பேசும் சமூகம் வாழும் எந்த மூலைமுடுக்குகளிலும் இவரது பாடல்கள் முனுமுணுக்கப்படாத இடமே கிடையாது.


avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:58 am

ஒரு சில கேள்வி பதில்களை இங்கே பார்ப்போம்:

கேள்வி: வேலை மெனக்கேட்டு வந்தான் என்கிறார்களே! இந்த வேலை மெனக்கேட்டுக்கு என்ன பொருள்?

பதில்: அது வேலை மெனக்கேட்டு அல்ல 'வேலை மினுக்கிட்டு'. அதாவது வீரன் ஒருவன் வேலுக்குப் 'பாலீஷ்' போடுவது எவ்வளவு உபயோகமற்றதோ அதைப் போன்றதே இவன் வரவும் என்று பொருள்படும். வீரர்கள் எப்போதும் பகைவர்களின் மார்போடு விளையாடுவார்கள். இது பழைய காலப் பாடல்களில் சொல்லப்பட்டு இருக்கிறது.

கேள்வி: மின்னல் இடை என்கிறார்களே பளிச்சென்று மின்னி விட்டு ஓடி விடுமோ?

பதில்: ஆமாம், அதோடு கண்ணையும் பறித்துக் கொண்டு காதலில் தள்ளி விடும். காமத்துக்குக் கண் இல்லையென்கிறார்களே, அது ஏன்? அந்தக் கண்ணை இடையாகிய மின்னல் கெடுத்து விட்டது என்கிறான் கவி என்று கூடக் கொள்ளலாம்.

கேள்வி: "ஒருமைக்கண் தான் கற்ற கல்வி யொருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து" எனும் குறளுக்குப் புதுமைப் பொருள் தருக.

பதில்: ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வி எழு பிறப்புக்கும் உதவும் தன்மையுடையதாகும் என வரதராசனார் உள்ளிட்ட பல உரையாசிரியர்கள் உரை கூறியுள்ளனர். இது தவறு, "ஒருமை" என்பது தனிமையைக் குறிப்பது. "தனிமையில் தான் கற்ற கல்வி ஒருவர்க்கு உயர்வையும், பலத்தையும் கொடுக்கக் கூடிய தன்மை வாய்ந்தது" எனப் பொருத்தம் கொள்ளலாம். இது குறளினின்றும் பிசகாத பொருள்தான். "எழுமையும் ஏமாப்பு உடைத்து" என்பதில் "உம்" எனும் அசை கெட்டு வரல் இலக்கணத்தில் உள்ள முறைதான். மேலும் தனிமை, நிறைந்த சிந்தனைக்கு வழி வகுக்கிறது என்பது பழந்தமிழ் மரபு.

நண்பர்களே! இது கவியரசர் கண்ணதாசனை இன்னொரு கோணத்தில் காட்டுகிறது. தமிழின் பால் அவர் கொண்ட தீராத பற்று, அவரைத் தன் வழியே தமிழ் இலக்கியப் பாதையில் இழுத்துச் சென்றது. தமிழ் மொழியின் அழகை அள்ளிப்பருகிய எமது காவிய நாயகன், அதை இனிய தேனாக மாற்றி எம் மனங்குளிர எமக்களித்து மகிழ்கின்றார்.

கண்ணதாசனின் புகழ், அவரின் திறன் சொல்லச் சொல்லப் பெருகும் ஒன்று. அது இவ்வளவுதான் என்று வரையறுத்துச் சொல்லிவிட முடியாது. ஒளவை மூதாட்டி கூறியதைப் போல, கற்றது கையளவு, கல்லாதது கடலளவு என்பதற்கிணங்க கவியரசரைப் பற்றி நானறிந்தது கையளவே.

என் கைக்கெட்டியதன் சுவையை நன்கனுபவித்த நான், அதை நண்பர்களாகிய உங்களோடும் பகிர்ந்து கொள்ளும் அவாவே எனது இச் சிறுமுயற்சி.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:59 am

இத்தனை வாரங்கள் எழுதிய கண்ணதாசன் ஆக்கங்களுக்கும், இப்போது எழுதிக்கொண்டிருக்கும் கண்ணதாசன் ஆக்கத்திற்கும் ஒரு மாபெரும் வித்தியாசமிருக்கிறது.

ஆமாம் இந்தத் தொடரில் இதுவே இறுதி அத்தியாயமாகிறது. மாங்கனியைச் சுவைத்து விட்டு, அந்தச் சுவையைப் பற்றிக் கூறுகிறாயா? என்று ஒருவனைக் கேட்கும்போது, அவனுக்கு அது எத்துணை இனிமையாக இருக்குமோ, அதே போலத்தான் கவியரசரின் படைப்புக்களைப் படித்து விட்டு அதை நண்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்வதும் என்பேன்.

ஆனால் நான் திரும்பவும் வருவேன்... கண்ணதாசன் எனும் அந்தக் காவியக் கடலினுள் மீண்டும் முழுகி கைநிறைய முத்துக்களுடன் வருகிறேன், அவை முத்துக்களா அல்லது வெறும் பிளாஸ்டிக் கற்களா என நிர்மாணிக்கும் தகுதி வாசகர்களாகிய உங்களுக்கே உள்ளது.

கவியரசர் ஒரு இலக்கியக் கடல். அவரைப் பற்றிப் பலரும் பலவிதமாக விமர்சிப்பார்கள். ஆனால் அவரது ஆக்கங்கள் மக்கள் மனதை ஈர்த்தது போல், அவரது பாடல்கள் சாமான்ய மக்களைக் கவர்ந்தது போல், அவரது எழுத்துக்கள் இளைஞர் சமுதாயத்தை இலக்கியத்தின்பால் திருப்பியது போல் மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் சொற்பம் என்றே கூறுவேன்.

கவியரசர் நவரசங்களில் சில ரசங்களை தன் பாடல்களில் எவ்வளவு லாவகமாய்க் கையாளுகிறார் என்பதை இந்த வாரம் காண்போம்.

காதல் எனும் அந்த உணர்வினை எத்தனையோ நடிக, நடிகையர் தமது முகபாவத்தின் மூலம் எமது கண்களுக்கு விருந்தாக்கியுள்ளனர். ஆனால் எமது கவியரசரோ இந்த உணர்ச்சியினை பல பாடல்களில் எமது செவிகளுக்குள்ளால் உட்புகுத்தி உணர்ச்சிக் கடலினுள் அமிழ்த்தியுள்ளார்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:59 am

பெண்கள் காதல் வயப்படும் போது அவர்களின் உணர்வுகளை அடக்க மிகவும் எத்தனிப்பார்கள். அப்படியிருந்தும் தனது மனதைக் கொள்ளை கொண்டவனின் நினைவுகள் தலைதூக்கும் போது தன்னையும் அறியாமல் வார்த்தைகளாக வெளிப்படும் ஒரு நிகழ்வாக கவியரசர் 'காதல்' எனும் அந்த ரசத்தைப் பிழிந்து எமக்குப் பானமாகத் தருகிறார் பாருங்கள்.

கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கள்ளும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
எண்ணம் என்னும் ஆசைப்படகுச் செல்லச் செல்ல
வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம் துள்ளத் துள்ள


தமிழெனும் கனியெடுத்து, சந்தமெனும் தேன் தடவி தவிக்கின்ற வாய்க்கு விருந்தாக்கும் வல்லமை கவியரசரின் தனித்திறமை.

அடுத்தொரு ரசமான 'கோபம்' எனும் அந்த ரசத்தின் திறத்தைக் கவியரசரின் கவித்திறமையில் பார்ப்போமா? இனி வரும் இந்த உதாரணத்திற்கு மற்றுமொரு சிறப்புமுண்டாம். கவிஞரின் திறமையில் பொறாமை கொண்டவர்கள் அவரின் பாடல்களைப் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்த காலத்தில் தன் பதிலைப் பாடலாகப் பிரதிபலிக்கக் கூடிய வகையில் இந்தப் பாடலை யாத்திருந்தார் என்றொரு கருத்து நிலவுகிறது. பாடலைப் பார்ப்போமா?

நான் போட்டால் தெரியும் போடு
தமிழ்ப்பாட்டால் அடிப்பேன் ஓடு
இந்தக் கவிதையைக் குறை சொல்லுவோரை
இந்தக் கழியால் அடிப்பேன் வாடா
நீ கம்பனைப் படித்தவனோடா இல்லைக்
காகிதம் தின்னும் மூடா மூடா

ஆமெனும் முன்னே ஆயிரம் பாட்டை
அள்ளி அள்ளி வீசட்டுமா
அப்போதும் கூட புரியல்லையென்னா
சொல்லிச் சொல்லி உதைக்கட்டுமா
வல்லினம், மெல்லினம்
நல்ல இடையினம் என்னும் கம்பை எடுத்து
வெண்பா, அரசி எனும் விதம் விதமான சாட்டை தொடுத்து (நான் போட்டால்)


இறுதியான ரசமாக நவரசங்களில் 'கருணை' எனும் அந்த அன்பின் நெகிழ்வைக் கவியரசர் எப்படிக் கையாண்டிருக்கிறார் என்று பார்ப்போம் வாருங்கள். ஒரு சகோதரனின் அன்பைக் கருணையின் வடிவாக விளக்கேற்றிக் காட்டுகிறார் கவிஞர்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:59 am


தாயின் முகமிங்கு நிழலாடுது
தந்தை மனமிங்கு உறவாடுது
கோயில் விளக்கொன்று கூடப்பிறப்பென்று
பாடும் குரல் கேட்குது


ஆமாம் இந்தப் பாடலில் கருணையை தாயின் வடிவாகத், தந்தையின் மனமாக, கோவில் விளக்காக உருவகப்படுத்தி அவையனைத்தும் ஒருங்கிணைந்த கருணைத் தெய்வமாக அவதரித்ததே தனது உடன்பிறப்பென்று ஒரு தங்கை தனது அண்ணனைப் பற்றி அழகாய் எடுத்துரைப்பதாய் கவியரசர் கவிமழை பொழிந்திருக்கிறார்.

நண்பர்களே! இதுதான் இந்தத் தொடரில் இறுதிப் பாகம். இங்கே எனது மனதைத் தொட்ட கவிஞரின் ஆக்கம் ஒன்றை அளிக்க விரும்புகிறேன். கவிஞர், எப்போதுமே கற்பனையுலகில் கொடிகட்டிப் பறந்து, கவிதையுலகில் தேரோட்டியவர்.

தான் மறைந்த பின் தனது நண்பர்கள் எப்படிக் கண்ணீர் சிந்துகிறார்கள் எனப் பார்க்க நினைந்து, உயிரோடிருந்து கொண்டே மறைந்து விட்டதாக ஒரு புரளியைக் கிளப்பி ரசித்தவர். தனது இறுதி ஊர்வலத்தில் படிக்கப்படவேண்டும் என்று தான் உயிரோடிருக்கும் போதே கவிதை யாத்து வைத்திருந்தவர்.

இந்தப்பாடலைத் தனது சவ ஊர்வலத்தின் போது சீர்காழி கோவிந்தராஜன் அவரது கணீரென்ற குரலினால் பாட வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்ததாம். கண்ணதாசன் ஒரு காவியம் என்பதை இனிவரும் கவிதையே உரக்கக் கூவுகின்றது!

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:00 am


தேனார் செந்தமிழமுதைத்
திகட்டாமல் செய்தவன்
மெய் தீயில் வேக
போனாற் போகட்டுமெனப்
பொழிந்த திரு
வாய் தீயிற் புகைந்து போக
மானார் தம் முத்தமொடும்
மதுக் கோப்பை
மாந்தியவன் மறைந்து போக
தானே எந் தமிழினிமேல்
தடம் பார்த்துப்
போகுமிடம் தனிமைதானே!
கூற்றுவன் தன் அழைப்பிதழைக்
கொடுத்தவுடன்
படுத்தவனைக் குவித்துப் போட்டு
நீ எரிவதிலும்
அவன் பாட்டை
எழுந்து பாடு


தனக்குத் தானே இரங்கற்பா தான் மறைவதற்குப் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னாலேயே எழுதி வைத்த அந்தக் கவித்தலைமகன் நிச்சயமாய் உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறான். அனைத்து உள்ளங்களையும் தமிழால் கட்டிப்போட்டு வைத்துள்ளான்.

இங்கே மீண்டும் கவியரசரின் வார்த்தைகளில்,


வாழ்க்கையில் என் சிறகுகள் கவிந்து கொண்டு இருக்கும். எந்த நேரமும் இவை விரியும்.

சலனம் இல்லாமல், சபலம் இல்லாமல் அவை பறந்து போகும்.

முடிவின் எல்லை நோக்கி அவை பயணம் போகும் போது, நான் இன்னொரு முறை பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுவேன்.

நான் மீண்டும் பிறப்பேன்

பிறந்து முதலில் இருந்தே துவங்குவேன்

மீண்டும் ஆரம்பத்தில் இருந்தே வாழ்வேன்.




avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 2:00 am

ஆமாம் இந்தக் காவியம் மறையவில்லை, தூங்கிக் கொண்டுதானிருக்கின்றது. ஒவ்வொரு முறையும் தமிழ்க்கவி கருக்கொள்ளும் போதும் அந்த மனங்களில் மறுபடியும் பிறந்து தவழ்கின்றது, அது தமிழாய் வளர்கின்றது, கவியாய்ப் பறக்கின்றது.

கண்ணதாசன் ஓர் பெருங்காவியம் என்று பெருமையுடன் உரத்த குரலில் உலகின் நடுவில் நின்று உரிமையுடன் சொல்லுவேன்.

நண்பர்களே! இந்தத் தொடரை நிலாச்சாரலில் தொடர்ந்து 52 வாரங்கள் எழுத உந்துகோலாயிருந்த நிலாச்சாரல் ஆசிரியருக்கும், அனைத்து வகையிலும் உதவியாகவிருந்த நிலாச்சாரல் குடும்பத்தினருக்கும், அனைத்துக்கும் மேலாக தமது ஆதரவை நல்கியதன் மூலம் இலக்கிய உலகில் தவழும் எனக்கு அளப்பரிய சந்தர்ப்பத்தையளித்த அனைத்து வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைக் கூறிக்கொண்டு, இது இடைவேளைதான் மீண்டும் முத்துக்களைக் கொண்டு கோர்த்த மாலையுடன் உங்களிடம் வருவேன் என்றே விடைபெறுகிறேன்.

(இத்துடன் நிறைவடைகிறது)

மூலம்:நிலாச்சாரல்

avatar
k.v.suresh
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 13/07/2009
http://kayveeyes@yahoo.com

Postk.v.suresh Sat Aug 29, 2009 8:58 pm

Really super, Thank you - K.V.Suresh, Chennai-20

avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Thu Jun 23, 2011 6:38 am

கவியரசு பற்றிய நுட்பமான செய்திகளை பொதித்து வைத்திருக்கும் பொக்கிஷ பதிவிது. சக்திதாசன் அவர்களுக்கு பாராட்டுக்கள் பற்பல.

Sponsored content

PostSponsored content



Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக