புதிய பதிவுகள்
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_c10 
57 Posts - 68%
heezulia
கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_c10 
22 Posts - 26%
வேல்முருகன் காசி
கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
viyasan
கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_c10 
234 Posts - 42%
heezulia
கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_c10 
21 Posts - 4%
prajai
கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_c10 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசன் எனும் காவியம்


   
   

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 12:05 am

First topic message reminder :

- சத்தி சக்திதாசன்



கவிஞர் கண்ணதாசனைப் பற்றி இலக்கிய ரீதியில் ஆராயக்கூடிய அளவிற்கு பாண்டித்தியம் பெற்றவனல்ல நான். சாதரண பாடல்களின் கருத்தால் கவரப்பட்ட ஓர் சராசரி ரசிகன்தான் நான். கண்ணதாசனின் பாடல்கள்களில் சொந்த அனுபவங்களின் வாயிலாக எழுந்தவையே மிகவும் பிரபல்யம் வாய்ந்தவையாக அமைந்தன. சாதாரண மக்களின் அன்றாட அனுபங்களைத் தொட்டு இந்தப் பாடல்கள் அமைந்ததின் காரணமே இவைகளின் வெற்றிக்குக் காரணம். எட்டாவது வகுப்பு மட்டுமே படித்த முத்தையா என்ற இயற்பெயர் கொண்ட கண்ணதாசன் பிறந்தது வணிகத்திலே புகழ் பெற்ற செட்டி நாட்டைச் சேர்ந்த சிறுகூடல்பட்டி எனும் கிராமமேயாகும். தான் சிறுவயதினிலேயே சுவீகாரம் கொடுக்கப் பட்டதை மனதில் வைத்து எழுதப்பட்ட " ஒருத்தி மகனாய் பிறந்தவனாம் ஒருத்தி மகனாய் வளர்ந்தவனாம் " என்ற பாடல் இந்த கவிதைத் தலைவனின் அனுபவ கவிக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும் .

வாழ்வினிலே எடுப்பார் கைபிள்ளை போன்று எல்லோரையும் நம்பி தன் வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்களை தானே தனது சுயசரிதையில் மிகவும் அழகான எளிய தமிழில் எடுத்துரைத்து இருந்தார் கவிஞர். அவரது வாழ்க்கைப் பாதை பல முட்புதர்கள் நிறைந்த கடுமையான ஒன்றாக அமைந்தது. அவர் தானாகவே ஏற்படுத்திக் கொண்ட இடர்கள் ஏராளம் , அதை அவரே பல இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் தான் வாழ்க்கையில் செய்த தவறுகளை பகிரங்கமாக மக்களுடன் பகிர்ந்து , தன்னைத் தானே சுயவிமர்சனம் செய்யும் மனப்பக்குவததை தன்னுடைய வாழ்வின் இறுதிப் பாகத்தில் அடைந்திருந்தார். இக்கசந்த அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவதனால் ஒரு சிலருக்காவது நன்மை கிடைக்குமானால் அதுவே தமக்கு திருப்தி அளிக்கும் என்னும் கருத்தைக் கொண்டிருந்தார்.

கண்ணதாசனுக்கு இருந்த தமிழாற்றல் தமிழன்னையால் அவருக்கு அளிக்கப்பட்ட ஓர் உன்னத வரப்பிரசாதம். அதை அவர் பலவழிகளில் உபயோகித்தார்.அரசியல் எனும் அந்த அழமறியா சமுத்திரத்திலே அவர் மூழ்கும்போது தமிழையே அவர் கரைசேர்க்கும் தோணியாக பாவித்தார். தமிழ்நாட்டின் மூத்த தலைவர்கள் அனைவருமே இவரின் புகழ் மாலைக்கும் பின் ஒருபோது வசை மாலைக்கும் இலக்காகியிருக்கின்றார்கள். இதை அழகாக கலைஞர் கருணாநிதி அவர்கள் குறிப்பிடுகையில் " கண்ணதாசன் என்னை உயர தூக்கி வைத்து புகழ்பாடிய காலங்களும் உண்டு பின் மேலிருந்து என்னைத் தொப்பென்று கீழே போட்ட காலங்களும் உண்டு. ஆனால் கீழே விழுந்தபோது அவனது தமிழின் அழகு எனக்கு மெத்தையாக இருந்தது " என்ற பொருள் பட கூறியுள்ளார்.

பலர் இவரை அரசியலில் ஓர் பகடைக்காயாக பயன் படுத்தியுள்ளார்கள்.

ஆரம்பகாலங்களில் பத்திரிக்கைகளில் எழுத்தாளராக வாழ்க்கையை ஆரம்பித்தவர் , பின்பு கவிதைகளிலும் , பாடல்களிலும் தனது கவனத்தைச் செலுத்தினார். அவருக்கு முதன்முதலில் பாடல் எழுதும் சந்தர்ப்பங்கள் அந்நாளில் திமுகவின் கோட்டையாக விளங்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் மூலமே கிடைத்தது . பின்பு படங்களுக்கு வசனம் எழுதும் சந்தர்ப்பமும் கிடைத்தது . தானே சொந்தமாக படங்களையும் தயாரித்துள்ளார். அவர் தயாரித்த படங்களில் வானம்பாடி , மாலையிட்டமங்கை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

தென்றல் எனும் பத்திரிக்கையில் எழுத ஆரம்பித்தவர், பின்பு அந்தப் பத்திரிக்கையை வாங்கி தானே நடத்தியுள்ளார். இப்படி பல துறைகளிலும் இறங்கிய அவருக்கு அழியாப்புகழை அளித்தது அவரது பாடல்கள்தான். தமிழ்பேசும் சமூகம் வாழும் எந்த மூலைமுடுக்குகளிலும் இவரது பாடல்கள் முனுமுணுக்கப்படாத இடமே கிடையாது.


avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:00 am

இந்த அறிவு முதிர்ச்சியினால், சாவதற்கு முன் வாழ்ந்து பார்க்க வேண்டும் எனும் ஆவல் கொண்டு மனதில் இலட்சியம் வகுத்து முன்னேற மனிதன் துடிக்கிறான் என்பது கவிஞரது வாதம்.

"முதற் சங்கு அமுதூட்டும், மெய்குழலார்
நடுச் சங்கு நல் விலங்கு பூட்டும் - கடைச் சங்கம்
ஆம்போ ததூதும், அம்மட்டோ? இம்மட்டோ?
நாம்பூமி வாழ்ந்த நலம்"

எனும் பட்டினத்தார் பாடலை எடுத்து வாழ்வை எளிய நடையில் விளக்க முற்படுகிறார் கவிஞர். வாழ்க்கை மூன்று சங்குகளால் வரைவிலக்கணம் அமைக்கப்படுகிறது. சடங்குகளில் சங்கூதப் படுவதைப் பார்த்திருக்கிறீர்கள். எமது வாழ்வின் கதை மூன்று சங்குகளில் அடங்குமாம்.

முதற் சங்கு எதைக் குறிக்கிறது? முதற் சங்கு அமுதூட்டும்! ஆமாம் நாம் பிறந்த போது எமக்குப் பாலூட்டப் பயன்படும் முதற் சங்கு. இது எமது பிறப்பைக் குறிக்கிறது.

இரண்டாவது சங்கு. அது என்ன? “மொய்குழலார் ஆசை இடைச் சங்கம்". ஆமாம் நங்கையர் பால் ஈட்டம் கொண்டு திருமணம் எனும் பந்தத்தினுள் நுழையும் போது, திருமணச் சடங்கில் சங்கு ஊதப் படுகிறது. இது எமது இடை வாழ்க்கையைக் குறிக்கிறதாம்.

அப்போ அடுத்தது கடைச் சங்கம் தானே! ஆமாம் இவ்வுலகத்தை விட்டு நாம் பறக்கும், இறைவன் கொடுத்த கடனை அமீனா வசூலித்த பின்னே, நடக்கும் மரணச் சடங்கில் சங்கு ஊதப் படுகிறது.

என்ன அழகாகப் பட்டினத்தார் பாடலை எடுத்துக் கவியரசர் எளிமையான விளக்கத்தின் மூலம் வாழ்க்கையின் நிலையாமைய விளக்கி எமது வாழ்வின் கதை மூன்று சங்கூதல்களிலே அடங்கி விடுகிறது என்று மதச் சடங்கின் அர்த்தத்தை மனிதனின் அன்றாட வாழ்க்கையுடன் பிணைத்து விடுகிறார்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:00 am

கண்ணதாசன் காலத்தால் அழியாத ஒரு கவிஞர். கற்பனையை மட்டுமே வைத்துத் தனது கவிதைக் கப்பலை ஓட்டியவர் அல்ல கண்ணதாசன். வாழ்க்கையின் உண்மை நிலையை, மொழியை ரசிப்பவர் அனைவரும் உணர்ந்து கொள்ளும் வண்ணம், மக்களின் நெஞ்சங்களைத் தொட்டவர்.

தீயைத் தீண்டினேன். அது என்னைச் சுட்டது. அந்தப் புண் கொடுத்த வேதனையால் வெந்தேன் எனத் தான் வாழ்க்கையில் செய்த தவறுகளை உளச்சுத்தியோடு கூறினார். அது மட்டுமல்ல, அத்தகைய தவறுகளைச் செய்யும் போது தனது நெஞ்சத்திலிருந்த உணர்ச்சிகளை விளக்கி மற்றையோர் அதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுரைகளை வாரி வழங்கினார்.

கவிஞரின் அருமையான வாழ்வின் யதார்த்ததை விளக்கும் ஒரு கவிதையில் எனது மனதுக்குப் பிடித்த சில பகுதிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இக்கவிதை கவிஞரின் "கண்ணதாசன் கவிதைகள்" எனும் நூலின் தொகுப்பு ஐந்திலிருந்து எடுக்கப்பட்டது. இதைப் படிக்கும் போது ஏனோ எனது மனம் தாலாட்டப்பட்டது. இந்தக் கவிதையின் தலைப்பு "அவனைத் தூங்க விடுங்கள்" என்பதாகும்.

எங்கே சில பகுதிகளைச் சுவைப்போம் வாருங்கள் !

அவனை எழுப்பாதீர்
அப்படியே தூங்கட்டும்
ஆழ்ந்த துயிலினிலே
அமைதியினைக் காணட்டும்
அன்புக் குழந்தையவன்
அரையாண்டுச் செல்வனவன்
இந்த வயதினிலே
இப்போது தூங்குவதே
சுகமான தூக்கம், அவன்
சுகமாகத் தூங்கட்டும் !


என்ன அருமையான, எளிமையான வரிகள். காதுகளில் தேனை வார்க்கும் இனிமையான தமிழருவி. 6 மாதக் குழந்தையை ஏன் எழுப்புகிறீர்கள் என வினவுகிறார். அவனது துயில் ஆழமானது, அதில் காணும் நிம்மதியே மகத்தானது எனும் நிதர்சனமான உண்மையை நீக்கமறத் தருகிறார் நித்தியக் கவிஞர். வயது முதிர்ந்ததும், அவன் வளர்ந்ததும் வாழ்க்கை எனும் கடலிலே பிரச்சனைகள் எனும் அலைகளுடன் அவன் போராடுவது தவிர்க்கப்பட முடியாததே எனும் தீர்க்கமான யதார்த்தத்தைத் துல்லியமாகக் கூறுகிறார் கவிஞர்.

இந்த வயதினிலே தூக்கத்தைத் தவற விட்டால் பின் எப்போது கிடைக்கும் இந்தப் பஞ்சணைச் சுகம்? எனக் கேள்விகளை வீசி, சிந்தனைச் சக்கரத்தைச் சுழற்றுகிறார், இந்தச் சிந்தனைச் சிற்பி.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:01 am

எங்கே அடுத்தொரு பகுதிக்குள் நுழைவோம்!

கண்ணை விழித்திந்தக்
காசினியைப் பார்க்குங்கால்
என்ன துயர்வருமோ
எங்கெங்கே அடிவிழுமோ
காதல் வருமோ
காதலுக்குத் தடைவருமோ
மோதல் வருமோ
முறைகெடுவார் துணைவருமோ?
நன்றியிலா நண்பர்கள்தாம்
நாற்புறமும் சூழ்வாரோ
நலமிழந்த பெண்ணொருத்தி
நாயகியாய் வருவாளோ
செய்யத் தொழில்வருமோ
திண்டாட்டந்தான் வருமோ
வெய்யில் அழைத்துவரும்
வியர்வையிலே நீராடி
"ஐயா பசி" என்
றலைகின்ற நிலைவருமோ?
என்ன வருமென்று
இப்போது யாரறிவார்

அவனை எழுப்பாதீர்
அப்படியே தூங்கட்டும் !


அந்தக் குழந்தை வளர்ந்து தன் அகலக் கண்களால் புவியைப் பார்க்கும் போது அவனடையக் கூடிய துன்பத்தின் சாயல்களை மிகவும் எளிமையாக எமக்குப் புரியவைத்திருக்கிறார்..

தையலைப் பார்த்து மையல் கொள்வான். மையலோடு பின்னிப் பிணைந்து சிக்கலும் வரும், அப்போது இழந்து விடுவானே தூக்கத்தை!

காதலிக்கத்தானே உரிமையுண்டு, அத்தோடு கூட வரும் தடைகளைத் தகர்க்கச் சமுதாயம் இடம் கொடுக்குமா என்ன? அவை கொடுக்கப்போகும் அந்தச் சோகத்தினாலே அவன் இழக்கப்போவதும் தூக்கத்தைத் தானே!

நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு ஒரு நயவஞ்சகக் கூட்டம் அவனைப் படுகுழியில் தள்ளுமே, காதலெனும் பாதையைத் தாண்டி இவன் திருமணத்தினுள் நுழையும் போது, நாயகியாய் ஒருவள் வருவாளே! நாம் எவ்வளவு தான் வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளை அவனுக்குக் கற்றுத் தந்திருந்தாலும், அந்த நாயகி நலமிலாதிருந்தவளாயிருந்தால் புரட்டி விடுவாளே அவனை!

அது மட்டுமா!

படிக்கிறான், படிப்பிக்க மட்டும்தானே எம்மால் முடிகிறது, அதைத் தொடர்ந்து அவனுக்கு ஒரு தொழில் தேவை, அது இல்லையென்றால் பட்டினிதானே, பாழும் வெய்யிலில் அலைந்து பிச்சை கேட்கும் நிலைக்கு வந்து விட்டால்!

அப்பப்பா! தூக்கத்தை இழக்க ஆயிரம் காரணங்கள் இருக்கும் இந்தப் புவியில், ஏன் நீங்கள் அவசரமாய் அவனை எழுப்புகிறீர்கள்? நயமாக வினவுகிறார் எமது நட்சத்திரக் கவி.

நண்பர்களே! பெற்றோர்களாக இருக்கும் போது, அதுவும் வாழ்க்கை எனும் கரடுமுரடான பாதையில் நடந்து களைத்தவர்க்கு, பிள்ளை எனும் அந்தக் குலக் கொழுந்து , வளரும் போது நுழைந்து, வெளிவரவேண்டிய சிக்கல்களை அழகுற எடுத்தியம்பி எம்மையெல்லாம் அந்த உணர்ச்சிக் குவியலுக்குள் முழுக்கி எடுத்து விட்டார் கண்ணதாசன்.

இது ஒரு நீண்ட கவிதை, இதன் அழகிய அடுத்த பகுதிகளை அடுத்த இதழில் பார்ப்போம், காத்திருங்கள் உங்களைத் தேடி நான் வருவேன், மீண்டும் கவிஞரின் கவியின்பம் சுவைப்போம்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:06 am

தேனைச் சுவைத்தபின் எஞ்சியிருக்கும் கொஞ்சத்தை நாவால், அதரங்களைத் தடவிச் சுவைப்பதுபோல, இதோ எஞ்சியிருக்கும் அந்த இனிப்பைப் பருகுவோமா?

கோடிக் கதிபனெனக்
குறையாது வந்தாலும்
நாட்டுத் தலைவனென
நல்வாழ்வு பெற்றாலும்
கேட்ட பொருளெல்லாம்
கிடைத்தாலும், அவன் வீட்டு
மாட்டுக்கும் கூட
மரியாதை கிடைத்தாலும்
பஞ்சணைகள் இருந்தாலும்
பால்பழங்கள் உண்டாலும்
சொத்துள்ள காரணத்தால்
தூக்கம் பிடிக்காது!

அவனை எழுப்பாதீர்
அப்படியே தூங்கட்டும்!



காதல் வழி வந்த சோதனைகளைத் தூக்கிக் காட்டி, வாழ்வின் பஞ்சத்தின் வழி வரும் பல தடங்களைத் தட்டிக்காட்டி எமக்கு ஞானப்பால் ஊட்டிய கவித்தலைவன் இங்கே எதை நமக்கு எடுத்தியம்ப முயல்கிறான்?

பணத்தில் அவனுக்குப் பலமில்லை என்னும் நிலையில்லாமல், வாரி வாரிக் கொட்டிக் குவிக்கும் நிலையில் இருக்கிறான் என்றே வைத்துக் கொள்ளுங்கள். அதில் கூட மிகவும் நயமாக "நாட்டுத் தலைவனென நல்வாழ்வு பெற்றாலும்" எனும் வரியின் மூலம் அரசியல் வாழ்வில் லாபம் தேடும் பலரைப் பற்றிப் பூடகமாகச் சொல்கின்றான் சொல்வேந்தன்.

அப்படி ஒரு நிலையை அந்தக் குழந்தை அடைகின்றதாக வைத்துக் கொள்ளுங்களேன். அவனைச் சுற்றிக் காக்கைக் கூட்டம் போல சுரண்டத் திரியும் கும்பல்கள் ஒருபுறம் அவனை வம்த்தும். சோம்பேறிகளுக்கு உதவி செய்வது பாபம் எனும் காரணத்தால், உதவ மறுத்து, மனம் நிம்மதி இழந்து தவிக்கக்கூடுமே, பிற்காலவாழ்வில் அந்தக் குழந்தை!

அப்போது அவன் இழக்கப் போவது அவன் தூக்கத்தைதானே! பின் ஏன் இப்போது அவசரமாய் அவனை எழுப்புகிறீர் என வாழ்க்கையின் உண்மை நிலையை எடுத்தியம்பி விளிக்கிறார் இந்த கவி விற்பன்னர்.

அதாவது பணம் இல்லாவிடாலும் கஷ்டம், அது அளவுக்கதிமாக இருந்தாலும் கஷ்டம். அதன் விளைவு தூக்கம் பற்¢போவதுதானே, பாவம் குழந்தையாயிருக்கும்போதாவது தூங்கட்டுமே என்கிறார்.

பூப்போலத் தூங்குகிறான்
பூமியிலே உள்ளதெல்லாம்
பார்க்காமல் தூங்குகிறான்
பாவிகளை இன்றுவரை
சேராமல் தூங்குகிறான்;
தெய்வத்தின் காதினிலே
ரகசியங்கள் பேசுகிறான்;
"லாலிலா" பாடுகிறான்!
வெள்ளை மலர்முகத்தை
வெள்ளிநிலாப் பெட்டகத்தைப்
பிள்ளைக் கனியமுதைப்
பேதையீர் எழுப்பாதீர்!


அவனை எழுப்பாதீர்
அப்படியே தூங்கட்டும்!



குழந்தை மனமுடைய பிள்ளை, பெரியவனாதும், பாவிகள் அவனை வளைத்துப் போட்டு விடுவார்கள். அது மட்டுமா! இந்தப் பூமியிலே நம் கண்முன்னாலே காணும் அநீதிகள்தான் எத்தனை! அவைகளைக் காணாமல் இருக்கிறானே இந்தக் குழந்தை அந்த மட்டிலாவது மகிழ்வுறுங்கள் என்கிறார் இந்தத் தமிழ்த்தென்றல்.

நீங்கள் என்னப்பா கோவில் குளங்கள் என்று போய்த் தெய்வத்தைத் தேடுகிறீர்கள், ஆனால் இந்தக் குழந்தை பேசும் மொழி தெய்வத்தின் மொழிதானே! அந்தக் குழந்தை நீங்கள் தேடும் தெய்வத்தின் காதுகளில் கண்களை மூடிக்கொண்டே எத்தனை ரகசியங்கள் பேசி விட்டது.

பேதை மனிதர்களே! அவன் பேசாமல் தூங்கட்டும், பிற்காலத்தில் தூக்கமின்றி அவன் தவிக்கும்போது உங்களால் அவனைத் தூங்க வைக்க முடியாதே!

கவியரசர் கண்ணதாசனின் அளவிலா அனுபவச் செல்வச்செழிப்புக்கு இது நல்ல எடுத்துக்காட்டு. தமிழைச் சுவைக்கும்போது கூடவே, வாழ்க்கையின் யதார்த்தம் எனும் உண்மையை நமக்குத் தெட்டத் தெளிவாக விளக்குகிறார்.

உண்மையான கவிஞன் அழகான கவிதைகள் எழுதுவதோடு மட்டுமல்லாமல் அதன் மூலம் ஒரு செய்தியைத் தருவான். அந்த வழக்கத்தைக் கவியரசர் அழகாகக் கையாண்டிருப்பதை ரசித்திருப்பீர்கள்!

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:07 am

ஒரு விசித்திரமான கற்பனை. கவியுலகின் மைந்தன், காதல் பெண்களின் பெருந் தலைவன், மரணத்தை வென்றவன் கவிச் சக்கரவர்த்தி கண்ணதாசனை நேரில் கண்டேனென்றால் உரையாடல் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தேன்!

நீங்கள் அவன் பாடல்களை ரசித்தது போதும், இனி நான் ரசிக்க வேண்டாமா? என அந்த ஆண்டவனே கவியரசைத் தன்னுடன் அழைத்த பின்னால் எப்படிக் காண்பேன் என் கவித் தலைவனை, எவ்வாறு உரையாடுவேன் அந்தத் தமிழ் அருவியுடன்?



கவியுள்ளம் கொண்டவர்கள் விளையாடும் திடலான கற்பனை உலகை எனது உதவிக்கு அழைத்தேன். ஆம்! கனவுலகில் கவியரசோடு உரையாடுவது சாத்தியமே!

வாருங்கள் கனவுலகிற்குள் நுழைவோம்!

கண்களை மூடினேன். கனவு வந்தது. கவிஞனும் வந்தான். சுனாமி எழுந்து உயிர் பறித்துக் களைத்து அமைதியாய் ஆடிக் கொண்டிருந்த அந்தக் கடற்கரைதனிலே ஒரு பாறை மீது தனியனாய் உட்கார்ந்திருந்தேன். அதோ பளீரென்று கண்ணைப் பறிக்கும் வெள்ளை வேட்டி சட்டையுடன் அருகே வருவது யார்?

கவியரசர் கண்ணதாசனல்லவா? திடுக்கிட்டு எழுந்தேன்.

"என்னப்பா அவசரம், உட்கார்" என்றார் கனிவாக. தயங்கியவாறே திரும்பவும் அந்தக் கற்பாறையின் மீது உட்கார்ந்தேன். "எதிர்த்தாற் போல இருந்த பாறையில் தானும் அமர்ந்தார்.

"என்ன சக்திதாசா? என்ன பலமான யோசனை?" கனிவான விசாரணை. "நீ சிந்திப்பது எனக்குப் புரிகிறது, நான் களிக்கும் கவிஞனை என் முன்னே கொண்டு வந்து நிறுத்திய காலத்தின் கனிவு எப்படி இந்த அமைதியான கடலலையைச் சுனாமியாக மாற்றியது என்பதுதானே?" என்றார் முகத்தில் என்றும் தவழும் அந்தக் கள்ளமில்லாச் சிரிப்புடன்.

திடுக்கிட்டு விட்டேன்! எப்படி என் மனதின் ஆதங்கத்தைப் படம் பிடித்துக் காட்டி விட்டார் கவிஞர்!

அகலத் திறந்த கண்களைச் சுருக்க முடியாமல் "ஆமாம் கவிஞரே ! அப்படியே என் மனிதிலுள்ளவற்றை உரைத்து விட்டீர்களே!" என்றேன் நான்.

சிரித்தார் கவிஞர்.

"கறையுடைய நெஞ்சினரும்
திறனுடைய கவிஞர்களைக்
காலால் உதைக்கும் நேரம்
கடல் பெருகி மழை பெருகிக்
காற்றுப்புய லாகவரும்
கலியுகம் முடியும் நேரம்!"


என்னப்பா! திகைத்து விட்டயா? இது எனது கலியுகம் முடியும் நேரம் எனும் கவிதையில் ஒரு பகுதி, கவிதை எழுதும் ஆற்றல் உள்ளவனாக இருந்தால் அர்த்தம் புரிந்திருக்குமேயப்பா?" என்றார்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:07 am

"எனது உள்ளத்துக் கவி மழையின் மேகமே! தங்களுக்கு முன்னால் நானெல்லாம் கவியா?" என்றேன் நான்.

சிரித்தவாறே! "உலகம் முன்னேற்றம் எனும் பதையில் மூர்க்கத்தனமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இருக்கும் உள்ளங்களில் சிலவும் மனிதத் தன்மையை இழந்து விட்டால், மனிதனின் இருப்புக்கு அர்த்தமேயில்லாமல் போய் விடாதா?" என்றார் கவிஞர்.

"திரும்பும் இடமெல்லாம் துரோகம், பார்க்குமிடமெல்லாம் பரம வஞ்சம், எப்படி வாழ்ந்தீர்கள் உலகிலே?" அறிவு ஏழை விசிறினேன் கேள்வியை.

"என்னைப் பற்றி பல விடயங்களை அறிந்து வைத்திருக்கிறாயே, இதை அறியவில்லையா?" என்று கேட்டு விட்டு,

கடவுள் செய்த பாவம் - இங்கு
காணும் துன்பம் யாவும் என்ன
மனமோ - என்ன குணமோ - அந்த
மனிதன் கொண்ட கோலம்


இதைச் சிந்தித்துப் பார்த்தாயா? உன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளுக்கு, எமக்கு அப்பாற்பட்ட சக்தியின் பெயரால் நியாயத்தைக் கற்பித்து விடு, மனம் இலேசாகி விடும்" என்றார்.

எனது மனமோ ஆச்சர்யத்தால் மலர்ந்தது. இந்தக் கவிஞனின் மீது நான் கொண்ட அபிமானம் வீணானது அன்று, எவ்வளவு துல்லியமாக பதிலளித்து விட்டார்!

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:08 am

"மனிதர்கள் மதத்தின் மீது கொண்ட "மதத்தினால்" மற்றையோரின் மனம் நோகும் வண்ணம் நடப்பது ஆன்மீகத்திற்கு இழுக்காகுமே கவியரசே! அப்படியான பல சந்தர்ப்பங்களை நான் காணுகின்றேனே, தாங்கள் இதை எப்போதாவது எதிர் கொண்டீர்களா? அத்தகைய சந்தர்ப்பங்களை எப்படிக் கையாண்டீர்கள்?" ஆவல் ததும்பும் கேள்வி பிறந்தது என்னிடமிருந்து.

மீண்டும் புன்சிரிப்பு! புண்ணான நெஞ்சத்தின் பொன்னான ஆபரணமே புன்சிரிப்புத்தானோ?


"இந்து மதத்தின் மீது நான் கொண்ட அபிமானம் அளவு கடந்ததே! நான் என் மதத்தைச் சுவாசிக்கிறேன் அது காற்றாக எனது உயிருக்கு வடிவம் கொடுக்கிறது, எனது வாழ்க்கையின் அர்த்தத்தை எனக்குக் கற்பிக்கிறது. என்னைச் சுற்றிப் படரும் துன்ப வலையை எனக்கு விபரித்து அதிலிருந்து அறுத்துக் கொண்டு வெளியே வருவதற்கான கத்தரிக் கோலைக் கொடுக்கிறது. ஆனால் அதை அறுக்க வேண்டியவன் நானே, அது தானாகவே அறுபட முடியாதது. அந்த ஆயுதத்தால் எனது துன்ப வலையை அறுப்பதை விடுத்து அடுத்தவனைக் குத்தவும் முடியும், ஆனால் அப்படிச் செய்யும் போது அந்த உபகரணம் தனது மகிமையை இழப்பதோடு, துன்ப வலையில் சிக்குண்ட நான் வெளியே வர வழி கிடையாது தவிக்கிறேன்.

அன்பனே! சக்திதாசா, நீ கேட்ட கேள்விக்கு விடை கூறி விட்டேன். ஒரே வரியில் சொன்னால், மதம் வெறியாக மாறினால் அங்கே மனிதத் தன்மை சிதைந்து விடுகிறது, அதற்கப்புறம் நாம் மனிதர்களைப் பற்றிப் பேசவில்லை.

ஆக ! என்னே ஒரு அருமையான விளக்கம் இதைக் கவிஞசரைத் தவிர வேறு எந்த அனுபவச் சிற்பியால் கொடுக்க முடியும், திகைப்பில் ஆழ்கிறேன் நான்.

திடீரெனக் கவிஞரின் வாயசைகிறது, அவரிடமிருந்து ஒரு பாடல் பிறக்கிறது!

"பரமசிவன் கழுத்திலிருந்து
பாம்பு கேட்டது கருடா செளக்கியமா? - யாரும்
இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் செளக்கியமே, கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது."


கேட்டதும் மகுடி கேட்ட நாகம் போல எனை மறந்தேன். என்னே தத்துவம், என்னே உயரிய அனுபவத்தின் உள்ளர்த்தம்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:09 am

"கவிஞரே! ஒரு சாதாரண மனிதன் எனும் கோட்பாட்டுக்குள் இருந்து கொண்டு உங்கள் பாடல்களில் பொதிந்திருக்கும் அர்த்தங்களையும் அது தரும் ஆத்மார்த்த உணர்வுகளையும் ஆசை தீரப் பருகிக் கொண்டும் ஏனோ, அன்றாட ஆசாபாசங்களுக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றேனே இது சரியாகுமா?"

மீண்டும் அவருக்கேயுரித்தான ஒரு அர்த்தம் பொதிந்த சிரிப்பு!

"லெளகீக வாழ்க்கையின் தேவைகளைத் துறந்தவன்தான் என் பாடல்களை ரசிக்க முடியுமானால் எனக்கு ரசிகர்களே இருந்திருக்க வாய்ப்பில்லை. நான் பெற்ற அனுபவங்களைப் பாடலாக்கினேன். ஆனால் அவைகளைத் திரும்பக் கேட்கும் போது நான் அவைகளைக் கடந்து விட்டேன். ஆனால் உன்னைப் போன்ற ரசிகர்களோ அந்த வாழ்க்கையின் வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் போதே உங்கள் மனதைச் சாந்தப் படுத்தும் வகையில் எனது பாடல்கள் மூலம் ஆறுதல் அடைவீர்களானால் என்னைவிட பாக்கியசாலிகள் நீங்களே."

மீண்டும் எத்தகைய அர்த்தம் பொதிந்த அனுபவ வாயிலான ஒரு விளக்கம்!

"நன் புறப்படும் நேரம் வந்து விட்டதப்பா! இன்னும் ஒரேயொரு கேள்வியை எடுத்து விடு. அத்துடன் நான் என்னுலகம் செல்லுகிறேன்" என்றார் கவிஞர்.

"கவியரசே! அரசியல்வாதி, ஆன்மீகவாதி, கவிஞர், சினிமாப் பாடலாசிரியார் இவைகளில் நீங்கள் மனம் நிறைவாக ஆற்றிய பாத்திரம் எதுவெனக் கூறுவீர்களா?" மீண்டும் ஆவலுடன் அடியேன்.

பலமாகச் சிரிக்கிறார் "இதற்கு விடையறிந்திருந்தால் என் நிலைமை வேறாக இருந்திராதா? மனிதாபிமானமிக்க அரசியல்வாதியாக, நடைமுறை ஞானத்தைப் போதிக்கும் ஆன்மீக வாதியாக, உண்மையைப் பாடும்
கவிஞனாக, மக்கள் மனதைத் தொடும் பாடலாசிரியனாக, இனியொரு பிறப்பெடுத்தால் வாழ வேண்டும் எனும் நம்பிக்கை பொதிந்த அனுபவத்தைப் பெற்ற ஒரு மனிதனாக வாழ்ந்தேன் என்பதே எனக்கு மனநிறைவைத் தருகிறது" கூறியவாறே எழுந்து நடந்த கவியரசரின் உருவம் சிறுத்துக் கொண்டே வந்தது.

திடுக்கிட்டு விழித்தேன். நிஜ உலகம், நிம்மதி மறைந்தது!

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:10 am

கண்ணதாசன் எனும் இந்தக் கலைஞரின் வாழ்வில் அடித்த புயல்கள் ஆயிரம். ஆயினும் தான் அனுபவித்த அந்தப் புயற் காற்றின் வேகத்தை இனிமையான தென்றல் காற்றாக மாற்றி எமது வரண்ட மனமெனும் பாலவனத்தைச் சோலையாக்கினார்.வாழ்வெனும் இந்தப் பயங்கர வனத்தைக் கடக்கும் போது எதிர்ப்படும் துன்பமெனும் விலங்குகளை எதிர்கொண்டு பயணத்தை இனிமையாக்குவதற்குத் தமிழ் எனும் இனிமை தடவிய அழகிய வார்த்தைக் கோப்புக்களைத் துணையாக்கினார்.

கவிஞர் கண்ணதாசன் கம்பனைத் தனக்குத் துணையாக்கிய சம்பவங்கள் பலவுண்டு. ஒரு சிறு உதாரணத்தைக் கீழே பார்ப்போம்.

"அற்றைத் திங்கள் அவ் வெண்ணிலவில்"

என்று தொடங்கும் கம்பனின் கவியை எவ்வாறு எமது கவிஞர் எமது வாய்களில் உருள விடுகிறார் என்று பாருங்கள்.

"அன்றொருநாள் இதே நிலவில்
அவள் இருந்தாள் என்னருகே!"



அருமையாக நாடோடி எனும் திரைப்பட வாயிலாக எமது நெஞ்சங்களைக் கம்பனின் கருத்துக்களோடு கலந்து விடுகிறார் இந்தக் கவித் தலைவர்.

பல நூல்களைப் படித்து அதன் உள்ளார்ந்த அர்த்தங்களைப் புரிந்து அதை எமக்கு இலகுவாகப் புரியக் கூடிய வகையில் தமிழ் மணம் பூசி அள்ளித் தெளிக்கும் இந்த வித்தகரின் விளையாட்டை இன்னுமொரு இலக்கியச் சுனையில் பறித்த தாமரையாகப் பார்ப்போம்.

புறநானுற்றில் புலர்ந்த கவிதையை எவ்வாறு எமக்குப் புலப்படுத்துகிறார் பாருங்கள்!
இதோ புறநானூற்றுப்பாடல்

யானும் நீயும் யாராகி யாரோ
யென்னிதயம் உம்மிடையும் எவன் கொல்லோ
செம்புலப் பெயர் நீர் போல
அன்புடை நெஞ்சங்கள் தாம் கலந்தாடுவவே!


இதைக் கவிஞர் எவ்வாறு எமக்கு ஊட்டுகிறார் பாருங்கள்!

நேற்றுவரை நீ யாரோ? நான் யாரோ?
இன்று முதல் நீ வேறோ? நான் வேறோ?


தமிழூறும் மனம் கொண்ட உன்னதக் கவிஞரின் படைப்புக்கு உவமை எங்குண்டு?

இதோ கவியரசரின் வாழ்வினிலே நடந்ததாகக் கூறப்படும் இன்னுமொரு சம்பவத்தைப் பார்ப்போம். "பாவ மன்னிப்பு" எனும் படத்திற்காகப் பாடல் எழுதும் போது டைரக்டர் பீம்சிங், இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.வி., ராமமூர்த்தி ஆகியோருடன் கண்ணதாசனும் பாடல் எழுவதற்காக அமர்ந்திருக்கும் போது கண்ணதாசன் வீட்டிலிருந்து அவருக்கு ஒரு தொலை பேசி அழைப்பு வந்திருந்ததாம்.

அந்தத் தொலை பேசி அழைப்பிலிருந்து திரும்பியவரின் முகத்திலிருந்த களை மறைந்திருந்ததைக் கண்ட எம்.எஸ்.வி, கேட்டபோது எதையும் கூற மறுத்த கவிஞர், பாடலை எழுதிக் கொடுத்து விட்டுத் தனது வீடு திரும்பினாராம். பின்பு அவரது இல்லத்திற்குச் சென்ற எம்.எஸ்.விக்கு அப்போதுதான் தெரிந்ததாம், கவிஞரின் வீட்டின் மீது ஜப்தி கொடுத்த செய்திதான் அந்தத் தொலை பேசி அழைப்பில் அறிவிக்கப் பட்டதாம்.

அப்போது அவருக்குக் கூறப்பட்ட கதையின் காட்சிக்கு எழுதப்பட்ட பாடல் என்னவென்று எண்ணுகிறீர்கள்?

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்
நான் அழுது கொண்டே சிரிக்கின்றேன்.


அப்போது அவருக்குத் தொலை பேசியில் கிடைத்த அந்தச் செய்தியையும் அவரது மனதிலிருந்து அந்த வேளையில் உதித்த பாடலையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அந்த அனுபவக் கவிஞனின் ஆற்றலுக்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:11 am

கண்ணதாசனை ஒரு தமிழ் அகராதி என்று கூடச் சொல்லலாம். எப்படி என்கிறீர்களா? ஒவ்வொரு சொல்லையும் எந்தப் பதத்தில் எங்கே உபயோகித்தால் எப்படியான ஒரு மனநிலையை, கேட்பவர், படிப்பவர் மனங்களில் ஏற்படுத்தலாம் என்பதைத் துல்லியமாகத் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தார்.

அதனால்தான் அவரது பாடல்கள் காலத்தையும் வென்று மக்கள் மனங்களை ஆண்டு கொண்டிருக்கின்றன. ஒரு பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது அவர் என்ன உணர்ச்சியை எமது மனதினில் தோன்ற வைக்க அந்தப் பாடலை எழுதினாரோ, அது அப்படியே அரங்கேறுகிறது.

இனி வரும் நான்கு வாரங்களுக்கு வாரம் ஒன்றாகக் கவிஞரின் திரை கானங்களில் அருமையான தமிழ்ச் சொற்களைக் காதல், தத்துவம், ஆன்மீகம், சோகம் எனும் உணர்ச்சிகளை விவரிக்க எவ்வகையாக உபயோகித்துள்ளார் என்பதைப் பார்ப்போம்.

அந்த வரிசையில் இவ்வாரம் காதலைச் சுவைப்போமா?


நான் தெரிவு செய்த பாடல் டி.எம்.எஸ்., சுசீலா குரலில் ஒலித்த "அந்த சிவகாமி மகனிடமும் சேதி சொல்லடி" எனும் பாடலாகும். இதற்குக் காரணங்கள் இரண்டு. முதலாவது இந்த பாடல் பிறந்ததன் பின்னணியாகும்.காங்கிரஸ் கட்சியிலிருந்து கண்ணதாசன் பிரிந்த காலத்தில், கர்ம வீரர் காமராஜரிடத்தில் ஒரு தனி மரியாதை வைத்திருந்த கவியரசர், அவரை மனதில் நிறுத்தி எழுதிய பாடலாம். அதாவது காமராஜரின் அன்னையின் பெயர் சிவகாமியாகும். அத்தோடு அழகான காதல் வரிகள் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றன.

காதலனின் பிரிவால் காதலி வருந்துகிறாள். அவனை எண்ணி மிகவும் மனம் நொந்து போகிறாள். அங்கே பிறக்கிறது அந்த அழகிய தமிழ்ப்பாடல்:

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி?
வேலன் இல்லாமல் தோகை ஏதடி?


தோழியின் மூலம் தன் காதலனுக்குச் சேதி அனுப்புகிறாளாம். தன் தலைவனிடம் போய்த் தன்னை மணமுடிக்க நாள் குறிக்கும்படிக் கூறுகிறாள். அது மட்டுமா?

மயிலின் தோகை எவ்வளவு அழகானது? அதன் வர்ணங்கள் உயிர் பெறுவது அந்தத் தோகை விரிக்கப்படும் போதே. ஆனால் அந்த மயில் தனது முழு அழகையும் தன் தலைவனான அந்த முருகப் பெருமான், வேலன், அவனுக்கு முன்னால் தானே காட்சிக்கு வைக்கும், அவனில்லா விட்டால் எப்படி அங்கே தோகையின் அழகு பெருமை பெறும்? அதே போலத் தன் தலைவனின் முன்னால் மட்டுமே மலரும் தன் அழகிற்கு, மயிலின் தோகையை ஒப்பிடுகிறாள் அந்தத் தலைவி.

தொடருகிறாள் காதல் வேதனையில் துவளும் தலைவி,

கண்கள் சரவணன் சூடிடும் மாலை
கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை
பெண்ணெனப் பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல் வேறென்ன வேலை


அவளுடைய விழிகள் பூ விழிகள் தானே, அவை மலர்வது எதற்காக? அவளது தலைவன் அவைகளைக் கோர்த்து மாலையாய் அணிந்து கொள்வதற்கே, அது மட்டுமா? கண் விழிகள் மலர்கள் என்றால் அவைகளைத் தாங்கி நிற்கும் கன்னங்கள் வேறென்ன சோலைதானே!

தன்மீது உள்ள காதலினால் உருகும் காதலியின் நிலையறிந்து காதலன் மனதில் உருவாகும் பாடல் வரிகள்

மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்


நிலப் பரப்புக்களிலே உயர்ந்ததாம் மலையின் உச்சியில் பிறந்த சந்தனம், அதனடியில் வாழும் மனிதனின் மார்புக்குத் தானே சொந்தமாகிறது. அத்தகைய உயரிய இதயத்தைக் கொண்ட அவன் காதலியின் இதயம் தனக்கே சொந்தம் என்று பெருமையில் பூரிக்கிறான் தலைவன்.

Sponsored content

PostSponsored content



Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக