புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'அவசர போலீஸ்' நடத்திய கூத்து Poll_c10'அவசர போலீஸ்' நடத்திய கூத்து Poll_m10'அவசர போலீஸ்' நடத்திய கூத்து Poll_c10 
5 Posts - 63%
heezulia
'அவசர போலீஸ்' நடத்திய கூத்து Poll_c10'அவசர போலீஸ்' நடத்திய கூத்து Poll_m10'அவசர போலீஸ்' நடத்திய கூத்து Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
'அவசர போலீஸ்' நடத்திய கூத்து Poll_c10'அவசர போலீஸ்' நடத்திய கூத்து Poll_m10'அவசர போலீஸ்' நடத்திய கூத்து Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

'அவசர போலீஸ்' நடத்திய கூத்து


   
   

Page 1 of 2 1, 2  Next

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Oct 01, 2009 1:45 pm

'அவசர போலீஸ்' நடத்திய கூத்து Tblfpnnews_59320795537கோவையில், 5.50 கோடி ரூபாய் மதிப்பிலான ஆறரை கிலோ "பிரவுன் சுகரை' பறிமுதல் செய்து, 10 பேரை கைது செய்திருப்பதாக போலீசும், போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவும் அடுத்தடுத்து அதிரடியாக அறிவித்தன. ஆனால், அந்த பவுடர், பிரவுன் சுகர் அல்ல; கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்படும் உப்பு (சோடியம் குளோரைடு) என பரிசோதனையில் அம்பலமாகியுள்ளது. "அவசர போலீசார்' நடத்திய கூத்து, உயரதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


கோவை அரசு மருத்துவமனை அருகில், நவீன கழிப்பறைகள் உள்ளன. இங்கு சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான "பிரவுன் சுகர்' போதைப் பொருளை கைமாற்றுவதாக கோவை தெற்கு உதவிக் கமிஷனர் பாலாஜி சரவணனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.அங்கு திடீர் சோதனை நடத்திய போலீசார், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, குமாரமங்கலத்தைச் சேர்ந்த ரவி(33), சேலம், ராக்கிப்பட்டி, புதுப்பாளையத்தைச் சேர்ந்த புவனேஸ்வரன் (27), கோவை, சிங்காநல்லூரைச் சேர்ந்த வினோத்குமார் (25) ஆகியோரை கைது செய்தனர். ஒரு கிலோ பவுடர் பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது.


அதன் மீது, சிவப்புற நிறத்தில், அபாய முத்திரை (மண்டை ஓடு) அச்சிடப்பட்டு, ஆப்கானிஸ்தான் 100 பர்சென்டேஜ்' என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. இது தொடர்பாக, பிடிபட்ட மூவரிடமும் விசாரணை நடத்திய போலீசார், பறிமுதல் செய்யப் பட்ட பவுடர், சர்வதேச மார்க்கெட்டில் கிலோ ஒரு கோடி ரூபாய்க்கு விலை போகும் "பிரவுன் சுகர்' என்ற முடிவுக்கு வந்து, பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தனர்.பிடிபட்ட நபர்கள் மீது, போதைப் பொருள் தடுப்பு சட்டத்தில் ரேஸ் கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அதன் பின், போதை பவுடர் என சந்தேகிக்கப்படும் பொருளை, ஆய்வக பரிசோத�னைக்கு அனுப்பினர்.


அடுத்த அதிரடி: போலீசார் பிரவுன் சுகர் பறிமுதல் செய்திருப்பதாக தகவல் வெளியானதும், கோவை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு (என்.ஐ.பி. சி.ஐ.டி.,) போலீசாரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. போதைப் பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க, பிரத்யேகமாக செயல்படும் தங்கள் மீது உயரதிகாரிகளுக்கு அதிருப்தி கிளம்பிவிடுமே என உஷாரடைந்து, தங்கள் பங்குக்கு அதிரடியை அரங்கேற்றினர். "காந்திபுரம், டாக்டர் நஞ்சப்பா ரோட்டில், ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு 4.50 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கரை கிலோ "பிரவுன் சுகர்' பறிமுதல் செய்துள்ளோம். இது தொடர்பாக, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கராஜ், லோகநாதனை போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்துள் ளோம்' என, பத்திரிகைகளுக்கு செய்திக்குறிப்பு அனுப்பினர்.போலீசாரும் அடுத்த அதிரடியில் இறங்கி, மேலும் ஒரு கிலோ பிரவுன் சுகரை பறிமுதல் செய்து, ஐந்து பேரை கைது செய்ததாக தெரிவித்தனர். ஒரே நாளில் 5.50 கோடி ரூபாய் மதிப்பிலான ஆறரை கிலோ பிரவுன் சுகர் பறிமுதல் செய்யப்பட்டதாக, வெளியான தகவல் உயரதிகாரிகளை திடுக்கிட வைத்தது. மத்திய, மாநில உளவு ஏஜன்சிகள் மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு விசாரணையில் இறங்கியது.


ஆரம்பமே சந்தேகம்: நகர போலீஸ் மற்றும் என்.ஐ.பி. சி.ஐ.டி.,யால் அடுத்தடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பவுடர் மீது, போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்கும் பிரத்யேக புலனாய்வு ஏஜன்சிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது."சர்வதேச அளவில் கடத்தலில் ஈடுபடும் நபர்கள், பிரவுன் சுகர் பாக்கெட் மீது, மண்டை ஓடு படம் போட்டு, 100 சதவீத நம்பகத் தன்மை வாய்ந்தது; ஆப்கானிஸ்தானில் இருந்து வருகிறது' எனக்கூறும் முட்டாள் தனமான வாசகங்களை பிரின்ட் செய்திருக்க மாட்டார்கள்; பிடிபட்ட நபர்கள் மோசடியான முறையில் பணம் சம்பாதிக்க, பிரவுன் சுகர் போன்று பவுடரை பாக் கெட்டில் அடைத்து யாரையோ ஏமாற்ற முயற்சித்திருக்கின்றனர்' என தெரிவித்தனர்.


இது குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்த போது, "ஆய்வில் உண்மை தெரியவரும்' என்று பதிலளித்தனர். இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பவுடர், பிரவுன் சுகர் அல்ல என்றும், சோடியம் குளோரைடு (உப்பு) என்றும் ஆய் வக முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக, போலீஸ் உயரதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார். பெரிய அளவிலான வேட்டையில் ஈடுபட்டதாக கருதிய போலீசாரின் எதிர்பார்ப்பு புஸ்வாணமாகிப் போனது.


போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:பிடிபட்டது பிரவுன் சுகர் அல்ல; உப்பு பவுடர் என, தெரியவந்ததை தொடர்ந்து, வேறு கோணத்தில் விசாரணையை திருப்பியுள்ளோம். "சால்ட்' டை பிரவுன் சுகர் எனக்கூறி, பல கோடிக்கு விற்று, ஆடம்பர வாழ்க்கை வாழ, மோசடி நபர்கள் திட்டமிட்டிருக்கலாம். ஆய்வக பரிசோதனை முடிவு எழுத்துப் பூர்வமாக வந்த பின், சிறையிலுள்ள மோசடி கும்பலை கஸ்டடியில் எடுத்து விசாரிப்போம்.எங்களுக்கு கிடைத்த முதல் தகவலின் அடிப்படையில், போதைப் பொருள் தடுப்பு சட்டத்தில் முன்பு வழக்கு பதிவு செய்துள்ளோம். தற் போது, அது போதைப் பொருள் அல்ல என தெரியவந்துள்ளதால், மோசடி வழக்காக மாற்றி விசாரணை நடத்துவோம்.இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.


வீராப்பு குறையல: பிடிபட்டது போதைப் பொருள் அல்ல என்ற முடிவுக்கு வந்துள்ள போலீசார், மோசடி கும்பல் மீதான அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான ஆலோசனையில் இறங்கியுள்ளனர். அதே வேளையில், அதே சால்ட் பவுடரை கைப்பற்றி, இருவரை கைது செய்த என்.ஐ.பி சி.ஐ.டி.,யினர், "நாங்கள் பிடித்தது பிரவுன் சுகர் தான்' என கூறி வருகின்றனர்.முதலில் பிடித்த போலீசாரே, தவறை ஒப்புக்கொண்டு பத்திரிகைகளுக்கு விளக்கம் அளித்து விட்டனர். அதன் பிறகும் கூட, என்.ஐ.பி.சி.ஐ.டி., போலீசார், தமது குளறுபடியை சரிசெய்து கொள்ளாமல் உள்ளனர். மாநகர போலீசார் பிரவுன் சுகரை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியான அடுத்த ஒரு மணி நேரத்தில், என்.ஐ.பி. சி.ஐ.டி.,போலீசாரால் நான்கரை கிலோ பவுடரை எவ்வாறு பிடிக்க முடிந்தது, பின்னணி என்ன? என்ற கேள்விகளுக்கு இதுவரை விடையில்லை.


இது குறித்து, என்.ஐ.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் தங்கவேலு கூறியதாவது:பறிமுதல் செய்த பவுடரை "லேப் டெஸ்ட்'டுக்கு அனுப்புவோம். நகர போலீசார் நடவடிக்கையில் ஈடுபடும் முன்னரே, நாங்கள் நான்கரை கிலோ பிரவுன் சுகரை பறிமுதல் செய்துவிட்டோம். தற்போது, அதன் மீது சந்தேகம் எழுந்துள்ளது. எனினும், "அது பிரவுன் சுகராக இருக்கலாம்' என்ற நம்பிக்கை 1 சதவீதம் உள்ளது.இவ்வாறு தங்கவேலு தெரிவித்தார்.


அவசர கோலத்தால் வீண் குழப்பம் :தங்களுக்கு தொடர்பு இல்லாத, அனுபவத்தில் இல்லாத பொருட்களை பறிமுதல் செய்யும்போது, அதை, ஆரம்ப கட்ட ஆய்வுக்கு அனுப்பியோ அல்லது முன்அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் மற்றும் நிபுணர்களின் பார்வைக்கு அனுப்பியோ, போதைப் பொருளா, இல்லையா என உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். அதைவிடுத்து, அவசர, அவசரமாக தவறான தகவல்களை வெளியிட்டு மக்களிடையே வீண் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.மாநகர போலீசாருக்கு போதைப் பொருள் தொடர்பான முன் அனுபவம் இல்லை என கருதினாலும் கூட, என்.ஐ.பி.சி.ஐ.டி., போலீசார் அப்படியல்ல. அவர்கள், போதைப் பொருட்களை பிடிப்பதற்கென்றே பிரத்யேகமாக செயல்படும் பிரிவில் பணியாற்றுபவர்கள். அவர்களும் கூட, பிரவுன் சுகருக்கும், உப்புக்கும் வித்தியாசம் தெரியாமல் வழக்கு பதிவு செய்திருப்பது கேலிக்குள்ளாகியுள்ளது.

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Oct 01, 2009 1:49 pm

அவசர போலீசார்' நடத்திய கூத்து, உயரதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 'அவசர போலீஸ்' நடத்திய கூத்து 705463 'அவசர போலீஸ்' நடத்திய கூத்து 705463 'அவசர போலீஸ்' நடத்திய கூத்து 705463 'அவசர போலீஸ்' நடத்திய கூத்து 705463 'அவசர போலீஸ்' நடத்திய கூத்து 705463 'அவசர போலீஸ்' நடத்திய கூத்து 705463



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 01, 2009 1:50 pm

காமெடி போலீஸ் ஆகிட்டாங்களே .... 'அவசர போலீஸ்' நடத்திய கூத்து 677196

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Oct 01, 2009 1:53 pm

Kraja29 wrote:காமெடி போலீஸ் ஆகிட்டாங்களே .... 'அவசர போலீஸ்' நடத்திய கூத்து 677196
'அவசர போலீஸ்' நடத்திய கூத்து 359383



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Oct 01, 2009 1:54 pm

பிடிச்சதெல்லாம் orginalலாதான் இருக்கும் இடையில் யாரோ மந்திரம் போட்டு உப்பாக மாற்றி விட்டார்கள்

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Thu Oct 01, 2009 1:56 pm

யாரு கண்டா, ஒருவேளை உண்மை பொருள் வெளியேறி பொய்யானதை கண்க்கில் காட்டியிருப்பார்கலோ????????? 'அவசர போலீஸ்' நடத்திய கூத்து 502589



இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Thu Oct 01, 2009 1:56 pm

நல்ல காமெடி

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Oct 01, 2009 1:56 pm

கோவைசிவா wrote:பிடிச்சதெல்லாம் orginalலாதான் இருக்கும் இடையில் யாரோ மந்திரம் போட்டு உப்பாக மாற்றி விட்டார்கள்
கோ சிவா போலீசை நல்லா புரிந்து வைத்துள்ளீர்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Oct 01, 2009 1:58 pm

'அவசர போலீஸ்' நடத்திய கூத்து 230655

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Thu Oct 01, 2009 2:00 pm

என்ன இப்படி ஓட்டம், பின்னாடி வெள்ளை வேன் வருது 'அவசர போலீஸ்' நடத்திய கூத்து 128872 'அவசர போலீஸ்' நடத்திய கூத்து 128872 'அவசர போலீஸ்' நடத்திய கூத்து 740322



இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக