புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிவு நிரந்தரமா? Poll_c10பிரிவு நிரந்தரமா? Poll_m10பிரிவு நிரந்தரமா? Poll_c10 
107 Posts - 49%
heezulia
பிரிவு நிரந்தரமா? Poll_c10பிரிவு நிரந்தரமா? Poll_m10பிரிவு நிரந்தரமா? Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பிரிவு நிரந்தரமா? Poll_c10பிரிவு நிரந்தரமா? Poll_m10பிரிவு நிரந்தரமா? Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
பிரிவு நிரந்தரமா? Poll_c10பிரிவு நிரந்தரமா? Poll_m10பிரிவு நிரந்தரமா? Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பிரிவு நிரந்தரமா? Poll_c10பிரிவு நிரந்தரமா? Poll_m10பிரிவு நிரந்தரமா? Poll_c10 
7 Posts - 3%
prajai
பிரிவு நிரந்தரமா? Poll_c10பிரிவு நிரந்தரமா? Poll_m10பிரிவு நிரந்தரமா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
பிரிவு நிரந்தரமா? Poll_c10பிரிவு நிரந்தரமா? Poll_m10பிரிவு நிரந்தரமா? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிரிவு நிரந்தரமா? Poll_c10பிரிவு நிரந்தரமா? Poll_m10பிரிவு நிரந்தரமா? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பிரிவு நிரந்தரமா? Poll_c10பிரிவு நிரந்தரமா? Poll_m10பிரிவு நிரந்தரமா? Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
பிரிவு நிரந்தரமா? Poll_c10பிரிவு நிரந்தரமா? Poll_m10பிரிவு நிரந்தரமா? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிவு நிரந்தரமா? Poll_c10பிரிவு நிரந்தரமா? Poll_m10பிரிவு நிரந்தரமா? Poll_c10 
234 Posts - 52%
heezulia
பிரிவு நிரந்தரமா? Poll_c10பிரிவு நிரந்தரமா? Poll_m10பிரிவு நிரந்தரமா? Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பிரிவு நிரந்தரமா? Poll_c10பிரிவு நிரந்தரமா? Poll_m10பிரிவு நிரந்தரமா? Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
பிரிவு நிரந்தரமா? Poll_c10பிரிவு நிரந்தரமா? Poll_m10பிரிவு நிரந்தரமா? Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
பிரிவு நிரந்தரமா? Poll_c10பிரிவு நிரந்தரமா? Poll_m10பிரிவு நிரந்தரமா? Poll_c10 
18 Posts - 4%
prajai
பிரிவு நிரந்தரமா? Poll_c10பிரிவு நிரந்தரமா? Poll_m10பிரிவு நிரந்தரமா? Poll_c10 
5 Posts - 1%
Barushree
பிரிவு நிரந்தரமா? Poll_c10பிரிவு நிரந்தரமா? Poll_m10பிரிவு நிரந்தரமா? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பிரிவு நிரந்தரமா? Poll_c10பிரிவு நிரந்தரமா? Poll_m10பிரிவு நிரந்தரமா? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பிரிவு நிரந்தரமா? Poll_c10பிரிவு நிரந்தரமா? Poll_m10பிரிவு நிரந்தரமா? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பிரிவு நிரந்தரமா? Poll_c10பிரிவு நிரந்தரமா? Poll_m10பிரிவு நிரந்தரமா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிவு நிரந்தரமா?


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Jan 03, 2012 11:31 am

பிரிவு நிரந்தரமா?

திங்கட்கிழமை (டிசம்பர் 19) நண்பகலில் அந்தச் செய்தி வெளியானபோது திகைப்படைந்தவர்கள் சிலர்; ஆச்சரியப்பட்டவர்கள் பலர். அத்தனையும் நாடகம் என நம்பிக்கையின்றி முறுவலித்தவர்கள் அநேகம். வாழ்வில் எந்த உறவும் நிரந்தரமானதல்ல என தத்துவ முத்து உதிர்த்த அறிவுஜீவிகளும் உண்டு.


தனது 30 ஆண்டுகாலத் தோழி, ‘உடன்பிறவா சகோதரி’ என்று அவராலேயே வர்ணிக்கப்பட்ட சசிகலா நடராஜனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கியுள்ளதாகவும் அவரோடு, கட்சியினர் எந்தவிதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார். அவரோடு சேர்த்து மேலும் 13 பேர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர், அவரது கணவர் உட்பட நெருங்கிய உறவினர்கள்.

இந்த நடவடிக்கைக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதிரடி நடவடிக்கை என பரபரப்பான செய்திப்பசி கொண்ட ஊடகங்கள் உரத்து முழங்கினாலும் சிறிது காலமாகவே இருவருக்கும் இடையில் ஒருவித இறுக்கம் இருந்து வந்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கசிந்து கொண்டிருந்தன.

முதல்வரது அலுவலகத்தில் சிறப்புத் திட்டங்களை நிர்வகிக்க, சிறப்புப் பணி அதிகாரி (Officer On Special Duty)யாக நியமிக்கப்பட்டிருந்த பன்னீர்செல்வம் சில நாட்களுக்கு முன், ராஜினாமா செய்தார். அவர், சசிகலாவின் நம்பிக்கையைப் பெற்றவர் என்றும், முதலமைச்சரின் அனுமதியைப் பெறாமலே சில முடிவுகளை எடுத்ததாகவும் அதன் காரணமாக முதல்வரின் சினத்திற்கு உள்ளானார் என்றும் கோட்டை வட்டாரத்தில் தகவல்கள் உலவின. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம், பணி மாற்றம் இவற்றில் சசிகலா குடும்பத்தினரின் தலையீடுகள் அதிக அளவில் இருப்பதாகவும் முணுமுணுப்புகள் எழுந்தன.

சசிகலாவின் நீக்கத்தை அடுத்து, சில நாளிதழ்களின் இணையதளங்களில் வெளியான தகவல்கள் அதிர்ச்சி அளிப்பவையாக இருந்தன. ‘பெங்களூரு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. அப்போது அவருக்கு எதிராக தீர்ப்பு அமைந்து, அவர் சிறைக்குச் செல்ல நேரிட்டால் அந்த நேரத்தில் என்ன செய்வது என்பது குறித்தும், அதிமுகவையும், ஆட்சியையும் தங்கள் வசம் கொண்டுவர சசிகலா குடும்பத்தினர் திட்டமிட்டதாகவும் தெரிகிறது. மேலும் அதிமுகவை தங்கள் வசம் கொண்டுவர கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் என தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை நியமிக்க, நடராஜன் நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவல்கள் எல்லாம் உளவுத்துறை மூலம் முதல்வரின் கவனத்துக்கு வந்ததாகவும், அதையடுத்தே அவர் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன’ என்கிறது அந்த இணையதளம்.

இதில் உண்மை எவ்வளவு, கற்பனை எவ்வளவு, உளவுத்துறை அல்லது வேண்டப்பட்டவர்கள் வேண்டுமென்றே ‘கசிய விட்ட’ தகவல்கள் எவ்வளவு என உடனடியாகக் கண்டுபிடிப்பது கடினம்.

ஆனால், கண்கூடாகத் தெரிகிற உண்மைகள் சில உண்டு. ஜெயலலிதா மீதான வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் சசிகலாவும் ஒருவர். நீண்ட நாள்களாக பல்வேறு முறை, பல்வேறு காரணங்களுக்காக ஒத்திப் போடப்பட்டு வந்த இந்த வழக்கின் விசாரணை இப்போது சூடு பிடித்துள்ளது. நீதிமன்றத்தில் இரு முறை ஆஜராகி, சுமார் 1,000 கேள்விகளுக்குமேல் ஜெயலலிதா பதில் அளித்து விட்டார். அடுத்து, பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருப்பவர் சசிகலா.

தனக்கு ஆங்கிலம் தெரியாததால், இந்த வழக்கில் தமிழில் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்யக்கோரி சசிகலா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை, டிசம்பர் 14ம் தேதியன்று நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார். அவரது இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி, மற்றொரு மனுவைத் தாக்கல் செய்தார் சசிகலா. அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டு வழக்கு, டிசம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, சசிகலா விரைவில் நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தன்னிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு தெரியாது என பதிலளித்த ஜெயலலிதா, சசிகலாவோடு அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் பற்றிக் கேட்டபோது அதில், தான் ஸ்லீப்பிங் பார்ட்னர்தான் எனவும், அன்றாட நடவடிக்கைகளை, தான் கவனித்து வரவில்லை எனவும், சசிகலாதான் கவனித்து வந்தார் எனவும் பதிலளித்தார் என செய்திகள் வெளியாயின.

அதேபோல ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு நடைபெற்ற திருமணத்திற்கு செலவிடப்பட்ட ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் பற்றிக் கேட்டபோது அதில் பெரும் பங்கு, பெண் வீட்டாரால் செலவிடப்பட்டதாகச் சொன்னதாகவும் தகவல்கள் வெளியாயின.

இந்தச் சூழ்நிலையில் சசிகலா சந்திக்கும் கேள்விகள் இக்கட்டானவையாக இருக்கும் என கருதப்படுகிறது.

லண்டனில் இருந்து டயோட்டா லெக்சஸ் கார் இறக்குமதி செய்ததில், அன்னியச் செலாவணி ஒழுங்கு முறை சட்டத்தை மீறியதாக, சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் மீது குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு, 2002ம் ஆண்டு மே 21ம் தேதி, நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தனது திருமணத்துக்கான பரிசாக,லண்டனில் உள்ள டாக்டர் பாலகிருஷ்ணன் என்பவர் வழங்கியதாகக் கூறிய பாஸ்கரன், தனக்கு அமலாக்கப் பிரிவு அனுப்பிய நோட்டீசை எதிர்த்து, ஐகோர்ட்டில் மனு செய்தார். இதை, தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். அதை எதிர்த்து, பாஸ்கரன் மேல் முறையீடு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், சுப்பையா அடங்கிய ‘டிவிஷன் பெஞ்ச்’ மனுதாரர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க, ஆரம்ப முகாந்திரங்கள் உள்ளன என சொல்லி மேல் முறையீட்டு மனுவை டிசம்பர் 14ம் தேதி தள்ளுபடி செய்தது. எனவே, பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை தொடரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன், அவரது சகோதரர் பாஸ்கரன் ஆகியோர் சட்ட ரீதியாக நெருக்கடிகளைச் சந்திக்கும் இந்த நேரத்தில், ஜெயலலிதா இந்த முடிவுகளை எடுத்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. இதன் மூலம் அவர், மீட்க முடியாமல் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளவர்களிடம் இருந்து விலகி நின்று, அரசியலில் தன் இமேஜைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறார் என்றொரு கருத்து நிலவுகிறது. ‘முன்பு ஒரு குடும்பத்தின் ஆட்சி நடந்தது, இப்போது ஒரு கும்பலின் ஆட்சி நடக்கிறது’ என்று விஜயகாந்த் விமர்சித்து வருவது கவனிக்கத்தக்கது.

அரசியல் ரீதியாக வேறொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதிமுகவிற்கு முக்கியப் போட்டியாக உள்ள திமுகவை பலவீனப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன. நிலப்பறி வழக்குகளில் சிக்கி, அதன் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் சிறை சென்று ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்கள். கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் மீது புகார் ஒன்று பதிவாகி, சாட்சியங்கள் திரட்டப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, கடந்த ஆட்சியின்போது அதிமுகவிலிருந்து திமுகவிற்குத் தாவியவர்களை மீண்டும் அதிமுகவிற்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கு முட்டுக்கட்டையாக மன்னார்குடிக் குடும்பம் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள். வெளியேறியவர்களில் பலர், அந்தக் குடும்பத்தின் தலையீடு தாங்க முடியாமல் வெளியேறியவர்கள்தான்.

அதைத் தவிர வேறு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன. கடந்த ஆட்சியின் மீது மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற சில பிரச்சினைகளை முன்வைத்துத்தான் கடந்த தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். ஆனால், அவற்றில் கடந்த ஆறு மாதங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு என நிலைமை மேலும் சிக்கலாகி இருக்கிறது. நீதிமன்றங்களில் அரசின்பல அறிவிப்புகள் அடி வாங்கி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் மக்களின் கவனத்தைத் திசை திருப்ப மேற்கொள்ளப்படும் நாடகம் என சிலர் சொல்கிறார்கள்.

அதை அவ்வளவு சுலபமாக ஒதுக்கித் தள்ளிவிட முடியவில்லை. காரணம், 1996ம் ஆண்டு தேர்தலில் அதிமுக பெரும் தோல்வியைச் சந்தித்தபோது சசிகலா குடும்பத்தினரின் தலையீட்டைக் குறை சொன்னார் ஜெயலலிதா. இனி அந்தத் தலையீடு இருக்காது என அப்போது ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் ஜெயலலிதா. ஆனால், ஒரு மாதத்திற்குள்ளாகவே சசிகலாவின் ‘தலையீடு’ ஜெயலலிதாவின் அனுமதியோடு துவங்கி விட்டது.

அதிமுகவில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது என்பது புதிதல்ல. ஜெயலலிதாவை அரசியலுக்கு அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆர். ஒரு காலத்தில், ஜெயலலிதாவோடு கட்சிக்காரர்கள் எந்தவிதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அறிக்கை வெளியிட்டார். அவருக்குக் கட்சியிலிருந்து கொடுக்கப்பட்ட தொலைபேசி இணைப்பைத் துண்டித்தார். ஆனால், இன்று அதிமுகவினர் ஜெயலலிதாவை எம்.ஜி.ஆரின் வாரிசாகக் காண்கிறார்கள்.

இது நாடகமா, திருப்புமுனையா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம். ஆனால், ஒன்றை நிச்சயமாகச் சொல்லலாம். அது: அரசியலில் இதெல்லாம்சகஜமப்பா!

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Jan 03, 2012 11:33 am

அரசியலில் இதெல்லாம்சகஜமப்பா!

இந்த ஒரு வர்தயா வச்சிக்கிட்டு இவனுங்க பண்ணுற கூத்து இருக்கே??? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக