புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கஞ்சமலை  Poll_c10கஞ்சமலை  Poll_m10கஞ்சமலை  Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
கஞ்சமலை  Poll_c10கஞ்சமலை  Poll_m10கஞ்சமலை  Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஞ்சமலை  Poll_c10கஞ்சமலை  Poll_m10கஞ்சமலை  Poll_c10 
284 Posts - 45%
heezulia
கஞ்சமலை  Poll_c10கஞ்சமலை  Poll_m10கஞ்சமலை  Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
கஞ்சமலை  Poll_c10கஞ்சமலை  Poll_m10கஞ்சமலை  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கஞ்சமலை  Poll_c10கஞ்சமலை  Poll_m10கஞ்சமலை  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கஞ்சமலை  Poll_c10கஞ்சமலை  Poll_m10கஞ்சமலை  Poll_c10 
20 Posts - 3%
prajai
கஞ்சமலை  Poll_c10கஞ்சமலை  Poll_m10கஞ்சமலை  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கஞ்சமலை  Poll_c10கஞ்சமலை  Poll_m10கஞ்சமலை  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கஞ்சமலை  Poll_c10கஞ்சமலை  Poll_m10கஞ்சமலை  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கஞ்சமலை  Poll_c10கஞ்சமலை  Poll_m10கஞ்சமலை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கஞ்சமலை  Poll_c10கஞ்சமலை  Poll_m10கஞ்சமலை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஞ்சமலை


   
   
ramkey
ramkey
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 25/12/2011

Postramkey Sun Dec 25, 2011 12:46 pm

கஞ்சமலை, இதன் அமைவிடம் இந்தியாவின் தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் சேலம் நகரில் இருந்து சுமார் 15 கி.மீ , தொலைவில் அமைந்துள்ளது .இங்கு அருள்மிகு கஞ்சமலை சித்தேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது , சேலம் பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து 68 ஏ, 68 பி, 29 ஏ ஆகிய தடம் எண் கொண்ட பஸ்கள் கிளம்புகின்றன.இக் கோவிலின் மூலவர் அருள்மிகு சித்தேஸ்வரர் ஆவார் . இக் கோவில் தீர்த்தம் , காந்ததீர்த்த குளம் ஆகும் , இக் கோவில் சுமார் 1000-2000 வருடங்கள் பழமை வாய்ந்தது ஆகும் . இக் கோவிலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் விசேச வழிபாடுகள் நடை பெறுகின்றன .சித்தர் கோயில் ஒன்றில், கிரிவலம் நடப்பது இக் கோவிலின் தல சிறப்பம்சமாகும்..இக் கோவில் காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். இக் கஞ்சமலையில் அழகிய விமானத்துடன் கூடிய சிறிய கோயில் உள்ளது. காலாங்கிசித்தரும், திருமூலரும் மலை உச்சியில் இருந்த கோயிலுக்கும் பாதை இருக்கிறது. இங்கு நடந்து தான் செல்ல முடியும். கோயிலுக்குள் சித்தர் சன்னதியைத் தவிர விநாயகர், சுப்பிரமணியர் மட்டுமே உள்ளனர். கி.மு.5ம் நூற்றாண்டு கால கோயில் இது.

மலையடிவாரத்தில் இருந்து சற்று தூரம் நடந்தால் சமீபத்தில் உருவாக்கப்பட்ட முருகன் கோயில் உள்ளது. "ஞானசற்குரு பால முருகன்' என இவரை அழைக்கின்றனர். நாரதர், சிவனுக்கு உபதேசிக்கும் முருகன் சிலைகள் சிறப்பாக இருக்கின்றன.வியாதிகள் குணமாகவும், முகத்தில் உள்ள பரு நீங்கவும் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.பிரார்த்தனை நிறைவேறியதும் உப்பு, மிளகு வாங்கி போட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். இங்குள்ள மலையில் ஏராளமான மூலிகைகள் இருப்பதால், இங்கு கிரிவலம் வந்தால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.
இக் கோவிலின் தலபெருமை மிகவும் விசேசமாகும் இந்த கோயில் அருகே ஓடும் பொன்னி ஓடை எக்காலமும் வற்றுவதில்லை. பக்தர்கள் இதில் நீராடுகின்றனர். கோயிலுக்குள் இருக்கும் காந்ததீர்த்த குளத்து நீர் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இக்குளத்து நீரை தலையில் தெளித்தாலே வியாதிகள் தீரும் என்பது நம்பிக்கை. முகத்தில் பரு உள்ளவர்கள் உப்பு, மிளகு வாங்கிப் போட்டு இந்த குளத்து நீரால் முகம் கழுவினால் பரு வருவதில்லை என்கிறார்கள். சில டாக்டர்களும் இங்கு போகச் சொல்லி நோயாளிகளை பரிந்துரை செய்வதாக சொல்கிறார்கள் கோயில் நிர்வாகத்தினர்.

இக்கோயிலுக்கு அமாவாசையன்று தான் பக்தர்கள் ஏராளமாக வருகின்றனர்."அமாவாசை கோயில்' என்ற பெயர் கூட இதற்கு உண்டு. தீராத நோயுள்ளவர்கள் அன்று சித்தேஸ்வரரை வணங்கி, கோயிலில் உள்ள தீர்த்தத்தை தலையில் தெளித்து நலம் பெற வேண்டலாம். பவுர்ணமியன்று பக்தர்கள் மாலை 5 மணியில் இருந்து கிரிவலம் துவங்குகிறார்கள். 18 கி.மீ., சுற்றளவுள்ள மலையை சித்தேஸ்வரர் நாமம் சொல்லி சுற்றி வருகின்றனர். இரவு வேளையில், சுற்றுச்சூழல் மாசில்லாத இம்மலையைச் சுற்றி வருவதன் மூலம் மூலிகை காற்று பட்டு, பல நோய்கள் தீர்வதாக நம்புகின்றனர். மேலும் காலங்கி சித்தர் என்பவர் பழநியில் நவபாஷாண முருகன் சிலையை பிரதிஷ்டை செய்த போகரின் குரு ஆவார். திருமந்திரம் எழுதிய திருமூலரின் மரபில் வந்தவர். கூடுவிட்டு கூடு பாய்வது உள்ளிட்ட அஷ்டமாசித்திகளை அறிந்தவர். ஏழு மடங்களை ஸ்தாபித்தவர்.

"கஞ்சம்' என்றால் "தாமரை' எனப் பொருள். மேலிருந்து பார்த்தால் தாமரை போன்ற தோற்றமுடையதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். அனுமான் சஞ்சீவி மலையுடன், தென் இலங்கைக்கு செல்லும் வழியில், அதன் ஒரு பகுதி மிகமிக குறைந்த அளவில் கீழே விழுந்ததாகவும், அதுவே கஞ்சமலை ஆயிற்று என்றும் சொல்வர். குறைந்து விழுந்ததால் "கஞ்சம்' என்ற பொருளிலும் இந்த மலைக்கு பெயர் வந்திருக்கலாம்.

சித்தர் வந்த கதை : காலாங்கி சித்தரும், அவருடைய குரு திருமூலரும் மலைப்பகுதிகளில் மூலிகை தேடி அலைந்தனர்.அவ்வாறு மூலிகை தேடி அலையும் போது கஞ்சமலைக்கும் வந்தனர். திருமூலர், தன் சிஷ்யன் காலாங்கியை சமைக்கச் சொல்லி விட்டு, மூலிகை தேடி காட்டுக்குள் போய்விட்டார். அரிசி வெந்து கொண்டிருந்த போது, அதைக் கிளறுவதற்கு அகப்பை ஏதும் இல்லாததால், அருகிலுள்ள ஒரு செடியிலிருந்து ஒரு குச்சியை ஒடித்துக் கிளறினார். அவ்வளவு தான் சோறு கருப்பாகி விட்டது.

""ஐயையோ! குரு வந்தால் கோபிப்பாரே,'' என்ற பயம் ஏற்பட்டது காலாங்கிக்கு. உடனே, அவர் சமைத்த சோறு முழுவதையும் சாப்பிட்டு விட்டார். சிறிது நேரத்தில் அவரது உடலில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. நடுத்தர வயதில் இருந்த காலாங்கி, வாலிபனைப் போல் மாறி விட்டார். தன்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். எல்லாம், அந்த மூலிகைக்கம்பு படுத்திய பாடு தான்.

காட்டுக்குச் சென்ற திருமூலர் திரும்பி வந்தார். சீடனைக் காண வில்லை. யாரோ ஒரு இளைஞர் நின்று கொண்டிருந்தார்.

""அடேய்! இங்கே என் சீடன் ஒருவன் இருந்தான் பார்த்தாயா? பசிக்கிறது. சாப்பாடு போடாமல் எங்கே போய் விட்டான்?'' என்றார்.

இளைஞர் திருமூலரின் காலில் விழுந்தார்.

""குருவே! நான் தான் காலாங்கி,'' என்றவர் நடந்ததை எல்லாம் சொன்னார்.

திருமூலருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இருந்தாலும், அதை மறைத்துக் கொண்டு, ""அடேய்! நான் வருவதற்குள் சாப்பிட்டு விட்டாயே. இதற்கு பரிகாரத்தை நீயே செய்து கொள்,'' என்றார்.

காலாங்கி வேறு வழியின்றி கை விரலைக் தொண்டைக்குழிக்குள் வைத்து சாப்பிட்டதை எல்லாம் வாந்தி எடுத்து விட்டார். திருமூலர் அவர் வாந்தி எடுத்ததை எடுத்துச் சாப்பிட்டார். அதன் பின் அவரும் இளைஞராகி விட்டார்.

இருவரும் இனைஞர்களான இடம், தற்போது கூட உள்ளது. இந்த ஊருக்கு பெயரே "இளம் பிள்ளை'. கஞ்சமலை அருகில் இந்த ஊர் இருக்கிறது. பின்னர் காலாங்கிக்கு சித்தர் என்ற அந்தஸ்தை அளித்து, அங்கு வரும் மக்களின் நோய்க்கு தருந்தபடி தகுந்த சிகிச்சையளிக்க உத்தரவிட்டார். காலாங்கியும் அங்கேயே தங்கி விட்டார். மக்கள் அவரை "காலாங்கி சித்தர்' என் அழைத்தனர். ஒரு கால கட்டத்தில் அவர் இரும்புக்கல் தாதுவாக மாறி அப்படியே அமர்ந்து விட்டார். இவர் சிவனை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்ததாகவும், இவரது தவத்திற்கு இரங்கிய சிவன், இவருக்கு ஈஸ்வரபட்டம் கொடுத்து "சித்தேஸ்வரர்" என பெயர் மாற்றியதாகவும் தல வரலாறு கூறுகிறது. இதனால் லிங்கவடிவிலேயே சித்தரின் சன்னதி தற்போது இருக்கிறது.

இத்தலத்தில் எழுந்தருளி தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சித்தேஸ்வர சுவாமி, திருமூலரின் சீடரான கஞ்சமலை சித்தர் என்று அழைக்கப்படும் காலங்கி நாதர் என்று சொல்கிறார்கள். சித்தேஸ்வரராகிய காலங்கி நாதர் பறக்கும் தன்மை பெற்றவர். சித்து நிலையில் தன் சரீரத்தை இரும்புக்கல் தாதுவாக்கி, காந்த நீர் சுழற்சியில் உள்ளிட்டு, ஓட்டகதியில் மின்காந்த சக்தியாக இன்றும் கஞ்சமலையில் வாழ்ந்து வருகிறார் என்று கூறுகிறார்கள்.

சுமார் அறுபது ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மலைப்பகுதியில் எங்கு தோண்டினாலும் நீர் வளம் நிறைந்து காணப்படுகிறது.

இத்திருக்கோவில் உள்ள பகுதியில் புனிதத் தீர்த்தக் குளங்கள் உள்ளன. நாம் முதலில் இப்பகுதியில் நுழைந்ததும் இரண்டு தீர்த்தக் கிணறுகளைக் காண்கிறோம். இதனை ராகு- கேது தோஷம் நீக்கும் தீர்த்தக் குளம் என்று சொல்கிறார்கள்.

இங்கு நீராடுவதற்கு கயிறு கட்டிய வாளி ஒன்றினை வாடகைக்குத் தருகிறார்கள். அதன் உதவியால் வேண்டிய அளவு நீரை எடுத்து நீராடலாம். சத்துக்கள் பல உள்ளதாகச் சொல்லப் படும் இந்தப் புனித நீர் மிக சுத்தமாக உள்ளது. இது எந்தக் காலத்திலும் வற்றுவதில்லையாம். மலையிலிருந்து சுனை வழியாக ஊற்று நீர் வருகிறது என்கிறார்கள். ராகு- கேது பெயர்ச்சி அன்று மக்கள் கூட்டம் இங்கு நிறைந்து காணப் படுகிறது.

இக்கோவிலின் கருவறைக்குப் பின் படிக்கட்டுகள் அமைந்த ஒரு தீர்த்தக் கிணறு உள்ளது. படிக்கட்டுக்கு அருகில் சுதையாலான பெரிய நந்தி ஒன்றும் உள்ளது. இங்கு சகல தோஷங்களும் கழிக்கப்படு கின்றன. அங்கு விற்கப்படும் உப்புப் பொட்டலங் களை வாங்கி நம் தலையில் வைத்துக் கொண்டு, பிறகு தலையைச் சுற்றி இந்தக் கிணற்றில் எறிந்து விட்டுத் திரும்பிப் பார்க்காமல் வரவேண்டும்.

ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோது கிறது. ஆங்காங்கே அன்னதானமும் நடைபெறு கிறது. இக்கோவிலுக்கு அருகே சிற்றோடை உள்ளது. இது எந்தக் காலத்திலும் வற்றாமல் தெளிந்த நீராக ஓடிக் கொண்டிருக்குமாம். இந்த ஓடைக்கு அருகில் பல நாழிக் கிணறுகள் உள்ளன. இக்கிணறுகளில் கைக்கு எட்டும் ஆழத்திலேயே நீர் உள்ளதால், வாளிகள் மூலம் நீர் எடுத்துக் குளிக்கிறார்கள்.


இத்தலத்தில் அருள் புரியும் சித்தேஸ்வரரைப் பற்றி கர்ண பரம்பரைக் கதை ஒன்றும் உள்ளது.

கஞ்சமலை அடி வாரத்தில் உள்ளது நல்ல ணம்பட்டி என்னும் ஊர். இங்குள்ள சிறுவர் கள் மாடுகளை மேய்ப்பதற்காகக் காட்டிற்குச் செல்வது வழக்கம். பொழுதுபோக்கிற்காக அவர்கள் விளையாடும்போது, தோற்றவன் தலையில் வென்றவன் குட்டுவான். அப்போது ஒரு புதிய சிறுவன் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டான். தினமும் அவனே வெற்றி பெற்று தோற்றவர்கள் தலையில் குட்டுவான். மாடு மேய்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்த உணவினை நண்பகலில் சாப்பிடும்போது, அந்தப் புதிய சிறுவன் அங்கிருந்து விலகிச் சென்று மாடுகளின் மடியில் வாய் வைத்துப் பாலை உறிஞ்சிக் குடிப்பான். இதனைக் கண்ட ஒரு சிறுவன் தன் தந்தையிடம் கூறவே, மறுநாள் இந்தக் காட்சியை மறைந்திருந்து பார்த்தார் அவர். அந்தச் சிறுவன் மாடுகளின் மடியில் பால் குடிப்பதைக் கண்டதும், கோபமுற்ற அவர் பக்கத்திலிருந்த கயிற்றினால் அவனை அடித்தார். அடிபட்ட சிறுவன் இப்பொழுது கருவறை உள்ள இடத்தில் தவக்கோலத்தில் அமர்ந் தானாம். பல நாட்கள் தவத்தில் அமர்ந்த அந்தச் சிறுவன்தான் சித்தேஸ்வர சுவாமியாகக் காட்சி தருகிறார் என்கிறார்கள்.

அன்று கயிற்றால் அடிபட்ட நிகழ்ச்சியைக் கொண்டு இங்கு சித்திரை மாதத்தில் விழா நடைபெறுகிறது. அந்தச் சிறுவனை அடித்தவர் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் விரதம் மேற் கொண்டு, விழா சமயத்தில் முடி எடுத்து நீராடி, அங்கப் பிரதட்சணம் செய்து கோவிலின்முன் அமர்வார். அப்போது அவரை மெல்லிய கயிற்றி னால் அடிப்பார்கள். அடிப்பவர்கள், அடிபடுபவரி டம் எப்பொழுது மழை பெய்யும் என்பது போன்ற பல கேள்விகளைக் கேட்பார்கள். அதற்கு அவர் பதில் கூறுவார். அவரது அருள்வாக்கு பலிக்குமாம். இந்த நிகழ்ச்சிதான் இந்த விழாவின் உச்சகட்டம் என்கிறார்கள்.

சித்திரை மாதப் பௌர்ணமி அன்றும் அதற்கு அடுத்த நாளும் இத்திருக்கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சமையல் செய்து அன்னதானம் வழங்குகிறார்கள். வாழை இலைக்குப் பதில் பாக்கு மட்டை பயன்படுத்தப்படுகிறது.

சித்தேஸ்வர சுவாமி கோவிலுக்கு கிழக்கே ஒரு சிறிய மலை உள்ளது. இதனை தியான மலை என்கிறார்கள். இம்மலையின் மேல் ஏறுவதற்குப் பாதை இல்லை. கரடுமுரடான பகுதியில் சிரமப் பட்டு ஏறினால் சுமார் பதினைந்து நிமிடங்களில் மேலே போய்விடலாம். அங்கே சுமார் பத்தடிக்கு பத்தடி அளவில் சமதளம் உள்ளது. அதன் நடுவில் ஒரு பாறை உள்ளது. அதனை தியானப் பாறை என்பர். அந்தத் தியானப் பாறைக்கு எதிரில் ஒரு சிறிய கோவில் உள்ளது. அதில் சந்தன மகாலிங்க சுவாமி சிறிய திருவுருவில் எழுந்தருளியுள்ளார். அவரைச் சுற்றி சில தெய்வங் களும் உள்ளன. அருகில் தல மரமான சந்தன மரச்செடி உள்ளது.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று அந்தத் தியானப் பாறையில் யாராவது ஒரு சித்தர் அமர்ந்து விடியும்வரை தியானம் செய்வது வழக்கமாம். புகை வடிவில் உருவில்லாத வெள்ளை நிற நிழல்போல் காட்சி தருவதை அந்த ஊர் மக்களும் பக்தர்களும் அடிவாரத்திலிருந்து தரிசித்திருக்கிறார்கள். அந்தச் சமயத்தில் யாரும் அந்த மலைமீது ஏறிச் செல்வதில்லை. காலை ஆறு மணிக்கு மேல் அங்கு சென்று பார்த்தால், சித்தர் அமர்ந்து தவம் செய்த அந்தப் பாறையிலிருந்து ஒரு மெல்லிய ஒலி எழும்பு வதையும் அந்தப் பாறை லேசாக அதிர்வது போலவும் இருக்கும் என்கிறார்கள். இந்த நிலை காலை ஏழு மணி வரை- அதாவது சூரிய ஒளி அந்தப் பாறைமீது விழும்வரை நீடிக்குமாம். இந்தத் தியானப் பாறை உள்ள மலைமீதிருந்து பார்த்தால் கஞ்சமலையின் முழுத்தோற்றத்தையும் தரிசிக்கலாம். இங்கும் மலைமேல் அன்னதானம் நடைபெறுகிறது.

இன்னொரு அதிசயமான செய்தியும் உண்டு. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கஞ்சமலையில் வகிக்கும் சித்த புருஷர்கள் ஜோதி வடிவில் கஞ்சமலையை வலம் வருவதைத் தரிசிக்கலாம். இரவு பதினோரு மணிக்கு மேல் கஞ்சமலையின் மேல்பகுதியில் சிறிய அளவில் நட்சத்திரம்போல் ஜோதிகள் காணப்படுமாம். அவை மெதுவாக நகர்ந்து மலையை வலம் வரும் என்று சொல்லப்படுகிறது. எல்லாரது கண்களுக்கும் ஜோதி தென்படாதாம். இந்தத் தரிசனத்தைக் காண்பவர்கள் பாக்கியவான்கள்.

அற்புதமான உயிர்காக்கும் மூலிகைகள்- குறிப்பாக காயகல்ப மூலிகைகள் நிறைந்த வியத்தகு செய்திகளைக் கொண்ட இந்த மலை மிகவும் போற்றக் கூடியது என்றால் மிகையல்ல.

இந்த மலைப்பகுதியில் கனிமங்கள் நிறைந்து காணப்படுவதால்தான், இந்த மலைக்கு அருகே சேலம் இரும்பாலை (உருக்காலை) அமைந்துள் ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ramkey
ramkey
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 25/12/2011

Postramkey Sun Dec 25, 2011 12:59 pm

அடுத்து வரும் பதிவுகளில் கஞ்சமலை பற்றி இன்னும் மேலதிக தகவல்களை அந்த ஆதி சிவன் ,மற்றும் சிவ சித்தர்களின் அருளசியுடன் பகிர்த்து கொள்கிறேன் , உங்களுக்கு தெரிந்த தகவல்களையும் அருள் கூர்ந்து அளிக்கவும், அன்புடன் சிவ் தொண்டில் அடியேன்,...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 25, 2011 1:42 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி ராம்கி , தொடர்ந்து உங்களுடன் பயணிக்க ஆவலுடன் உள்ளோம்.

உறுப்பினர் அறிமுகம் பகுதியில் உங்களை பற்றி ஒரு அறிமுகம் கொடுங்களேன் கஞ்சமலை  678642

ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Postஆத்மசூரியன் Sun Dec 25, 2011 11:58 pm

அருமையான பதிவு பதிவிற்க்கு நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக