புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 3 Poll_c10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 3 Poll_m10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 3 Poll_c10 
101 Posts - 69%
heezulia

27 Posts - 18%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
prajai

Balaurushya

2 Posts - 1%
Barushree

nahoor

1 Post - 1%
kavithasankar

Tamilmozhi09

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 75%

27 Posts - 13%

9 Posts - 4%

5 Posts - 2%

3 Posts - 1%

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை

Page 3 of 17 Previous  1, 2, 3, 4 ... 10 ... 17  Next

avatar
Guest
Guest

PostGuest Tue Dec 06, 2011 2:50 pm

First topic message reminder :

தாக்குதல் தொடர்ந்தால் ஒரு லாரியும் கேரளாவுக்குப் போகாது- தமிழக லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை

நாமக்கல்: தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் லாரிகளை தொடர்ந்து தாக்கினால் ஒரு லாரி கூட கேரளாவுக்கு போகாது. அதேபோல அங்கிருந்து ஒரு லாரியையும் இங்கேவர விட மாட்டோம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் நல்லதம்பி நாமக்கல்லில் கூறுகையில், தமிழகத்திலிருந்துதான் கேரளாவுக்கு அரிசி, பருப்பு என அனைத்துப் பொருட்களும் போகின்றன. தினசரி தமிழகத்திலிருந்து 1000 லாரிகள் வரை கேரளாவுக்குப் போய் வருகின்றன.

ஆனால் தற்போது முல்லைப் பெரியாறு பிரச்சினை என்ற பெயரில் தமிழக லாரிகளைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். குமுளியில் தமிழக லாரிகளைத் தாக்கியதோடு,அதன் டிரைவர்களையும் ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது.

இந்த சம்பவத்தால் தமிழக லாரிகளுக்கும், எங்களின் டிரைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை கேரளாவில் நிலவுகிறது. எனவே எங்களது லாரிகளை இயக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.

இந்தநிலை தொடர்ந்தால் தமிழகத்திலிருந்து ஒரு லாரி கூட கேரளாவுக்குப் போகாது. எந்தப் பொருளையும் கேரளாவுக்கு எடுத்துச் செல்ல மாட்டோம். அதேபோல கேரளாவிலிருந்து ஒரு லாரியையும் இங்கே நுழைய அனுமதிக்க மாட்டோம்.

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு வரும் லாரிகளுக்கும், அதன் டிரைவர்களுக்கும், கிளீனர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது கேரள அரசு மற்றும் காவல்துறையின் பொறுப்பாகும் என்றார் நல்லதம்பி.

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 07, 2011 12:31 pm

தமிழக பெண் தொழிலாளிகளை கேவலமாக திட்டி, புடவை இழுத்து கேரளத்தவர் மானபங்கம்

தேனி: முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் தேனி மாவட்டத்தில் இருந்து இடுக்கி ஏலக்காய் எஸ்டேட்டிற்கு வேலைக்கு சென்ற பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். தப்பிவந்த பெண்கள் தங்களை கேரளத்தைச் சேர்ந்தவர்கள் மிக மோசமான முறையில் நடத்தியதாக கூறியுள்ளனர். அவர்களில் பலருக்கு இன்னும் அந்த கொடுமையின் பயங்கரம் கண்ணிலிருந்து விலகவில்லை.

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரள அரசின் முடிவுக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனையடுத்து அணையைப்பற்றி கேரள ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்ப்ப் படுகின்றன. கேரளமாநிலத்தவரால் சபரிமலைக்குச் செல்லும் தமிழக ஐயப்ப பக்தர்களும் தாக்கப்பட்டு வருகின்றனர்.

பெண் தொழிலாளர்கள் மானபங்கம்

இந்த நிலையில் தேனி, கம்பம், மாவட்டத்தில் இருந்து இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் எஸ்டேட்டிற்கு வேலைக்குச் சென்ற பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்ட பெண்களை கேரளமாநிலத்தவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறையின் நடவடிக்கையைத் தொடர்ந்து அவர்கள் மீட்கப்பட்டு திரும்பியுள்ளனர்.

கேரளா மாநிலத்தவரால் பாதிக்கப்பட்ட 50 வயதுப் பெண் கருப்பாயி கூறுகையில்,

ஏலக்காய் தோட்டத்தில் வேலைக்காக சென்றிருந்தோம் திங்கட்கிழமை மதியம் 2 மணிக்கு எங்கள் வீட்டில் இருந்து போன் வந்தது. ஐயப்ப பக்தர்களை தாக்கப்படுவதால் உடனே வீடு திரும்புங்கள் எங்கள் வீட்டில் இருந்து போனில் கூறினர். நாங்கள் உடனே வேலையை விட்டு விட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த கேரளமாநிலத்தவர் சிலர் எங்களை மறித்தனர். எங்களில் சிறுவயதுடைய பெண்களை தனியாக அழைத்து அனைவரின் முன்னிலையிலும் புடவைகளை அவிழ்க்க சொல்லி சிரித்தனர். நாங்கள் பயந்து அழுதுவிட்டோம். எங்களுக்கு வேலைக்கு போகவே அச்சமாக இருக்கிறது என்றார்.

கம்பத்தை சேர்ந்த முத்துப்பேச்சி கூறியதாவது,

எங்கள் முன் வந்து நின்ற மலையாளிகள் சிலர் தமிழர்களை திட்டுவதற்கு கேரளத்தவர்கள் உபயோகப்படுத்தும் கொச்சையான சொல்லான ‘பாண்டி’ என்ற வார்த்தையால் எங்களை திட்டினர். சொல்ல முடியாத பல பாலியல் சம்பங்களை நிகழ்த்தினர். எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை நாங்கள் கஷ்டப்பட்டு ஒரு வாகனத்தின் மூலம் தேக்கடிக்கு வந்துவிட்டோம் என்றார்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ். பழனிச்சாமி, திங்கட்கிழமை இரவு தேனி மாவட்டத்தில் இருந்து இடுக்கி மாவட்டத்திற்கு எஸ்டேட் பணிக்கு சென்ற 500க்கும் மேற்பட்ட பெண்கள் பாதுகாப்புடன் மீட்கப்பட்டதாக கூறியுள்ளார்.

கும்பகோணத்திலும் தாக்குதல்

இதேபோல கும்பகோணத்திலும் கேரளக்காரர்களின் நிறுவனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அங்குள்ள ஜாய் மற்றும் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடைகள் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் கண்ணாடிகள் உடைந்து நிறஉவன மேலாளர் உள்பட 2 பேர் காயமடைந்தனர்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Dec 07, 2011 12:41 pm

இரு பிரிவினரும் கொஞ்சம் அமைதி காண வேண்டும்.
நிச்சயம் ஒரு செய்தி வரும்.

கருணாநிதி மட்டும் இப்பொழுது முதல்வராக இருந்திருந்தால், இன்னேரம் கப்தி கபடா வுடன் போரில் இறங்கி இருப்பார்.

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 07, 2011 12:44 pm

மாணிக்கம் நடேசன் wrote:இரு பிரிவினரும் கொஞ்சம் அமைதி காண வேண்டும்.
நிச்சயம் ஒரு செய்தி வரும்.

கருணாநிதி மட்டும் இப்பொழுது முதல்வராக இருந்திருந்தால், இன்னேரம் கப்தி கபடா வுடன் போரில் இறங்கி இருப்பார்.

செய்தி திரியில் நகைசுவையா ? ஒன்னும் புரியல சியர்ஸ் ஓகே!!!!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 07, 2011 1:11 pm

மாணிக்கம் நடேசன் wrote:கருணாநிதி மட்டும் இப்பொழுது முதல்வராக இருந்திருந்தால், இன்னேரம் கப்தி, கபடா வுடன் போரில் இறங்கி இருப்பார்.
இவங்க ரெண்டு பெரும் யாருன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு .அப்படியே ஒரு ஏர் கூளர் , மெத்தை சகிதம் ஒரு உண்ணாவிரதம் இருந்து பிரச்சினையை வெற்றிகரமா முடிச்சுடுவார்.

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 07, 2011 6:15 pm

வேடசந்தூரில் முத்தூட் நிதி நிறுவனம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு

வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வடமதுரையில் கேரளாவைச் சேர்ந்த முத்தூட் நிதி நிறுவனத்தின் அலுவலகம் மீது ஆட்டோ டிரைவர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசித் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழர்களின் கடைகள் உள்ளிட்டவை கேரளாவில் தாக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களும் தாக்கப்படுகிறார்கள். தமிழக வாகனங்களையும் அவர்கள் விடவில்லை.

இதையடுத்து தமிழகத்திலும் கேரளாக்காரர்களுக்கு எதிராக வன்முறை வெடித்துள்ளது. சென்னை, கோவை, தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஆலுக்காஸ் நகைக் கடைகள், டீக் கடைகள், ஸ்வீட் ஸ்டால் உள்ளிட்டவை தாக்கப்பட்டன.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரையில் முத்தூட் நிதி நிறுவனம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

தமிழக வாகனங்களை கேரளாவில் தாக்குவதைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் இந்த குண்டு வீச்சை நடத்தினார். இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்தனர்.

அவர் வீசிய பாட்டிலில் இருந்த பெட்ரோல் தீப்பிடிக்காமல் போனதால் அதிர்ஷ்டவசமாக முத்தூட் நிறுவன அலுவலகம் தப்பியது. அதில் இருந்தவர்களும் உயிர் தப்பினர்.

இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 07, 2011 6:16 pm

சென்னை, தஞ்சை, கோவை, குடந்தையில் கேரளக் கடைகள் தாக்கப்பட்டன- ஆலுக்காஸும் கடைகளும் தப்பவில்லை
சென்னை: சென்னை, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று கேரளாக்காரர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. சென்னை, கோவையில் உள்ள ஆலுக்காஸ் நகைக் கடைகளையும் தாக்கி முற்றுகைப் போராட்டம் நடந்தது.

குமுளியில் தமிழர்கள் மீது கேரளத்தினர் சிலர் வெறித் தாக்குதலில் ஈடுபட்டு கடைகளை அடித்து நொறுக்கினர். பெண்களையும் மானபங்கப்படுத்தியதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து கம்பத்தில் கேரளாக்காரர்களின் கடைகள், நிறுவனங்களை சிலர் சூறையாடினர். லாரி, வேன் ஆகியவை தீவைத்து எரிக்கப்பட்டன. திராட்சைத் தோட்டத்திற்கும் தீவைக்கப்பட்டது.

தஞ்சாவூரில் டீக்கடைகள் சூறை

இந்த நிலையில் தஞ்சாவூரில் இன்று கேரள வியாபாரிகளின் கடைகளை தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சியினர் தாக்கி சூறையாடினர். ராயல் காபி பார் மற்றும் ஒரு குளிர்பானக் கடை ஆகியவை தாக்கி சூறையாடப்பட்டன. இதனால் அந்த இடமே போர்க்களம் போலக் காணப்பட்டது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தஞ்சை முழுவதும் உள்ள கேரள வியாபாரிகள் தங்களது கடைகளை மூடி விட்டனர்.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், கேரளாவில் தமிழர்களையும், அவர்களது கடைகளையும் தாக்கியதற்கு இது பதிலடி என்று கோஷமிட்டனர்.

இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்து வந்தனர். தஞ்சையில் உள்ள ஆலுக்காஸ் நகைக் கடை முன்பு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில்

இதேபோல சென்னையிலும் தாக்குதல் நடந்துள்ளது. சைதாப்பேட்டையில் உள்ள கேரள வியாபாரிக்குச் சொந்தமான ஸ்வீட் ஸ்டாலை 7 பேர் கொண்ட ஒரு கும்பல் புகுந்து தாக்கி அங்கிருந்த ஷோ கேஸ்களை அடித்து உடைத்தது. இதில் கண்ணாடி குத்தி கடை ஊழியருக்கு கையில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கடைக்குப் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது.

ஜாய் ஆலுக்காஸ் கடை முற்றுகை

இதேபோல தி.நகரில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் நகைக் கடையை தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சியினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் அவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.

கோவையில் தடியடி

கோவையில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் நகைக் கடையையும் தமிழ் தேச பொதுவுடமைக் கட்சியினர் முற்றுகையிட்டனர். கடை மீது கல்வீசித் தாக்கினர். இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் அவர்களை தடியடி நடத்திக் கலைத்தனர்.

பேக்கரி உடைப்பு

இதேபோல கோவையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே கே.ஆர். பேக்கரி என்ற கடை உள்ளது. இது கேரளாக்காரர்கள் நடத்தும் கடையாகும். இங்கு மாணவர் கழகத்தினர், நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவற்றைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கடையை அடித்து நொறுக்கினர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் அனைவரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

தட்ஸ் தமிழ்

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 07, 2011 6:17 pm

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசு சரியாகவே நடக்கிறது- வைகோ பாராட்டு

மதுரை: கேரள அரசு தமிழன் தலையில் கல்லை போட நினைத்தால், 15 நாட்கள் கூட ஆகாது. ஒட்டுமொத்த கேரளாவுக்கு செல்லும் உணவு பொருட்களை தடுத்துவிட்டால் உங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவைக் கண்டித்து மதுரையிலிருந்து தேனிக்கு வைகோ இன்று விழிப்புணர்வுப் பிரசாரத்தைத் தொடங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்தப்போகிறோம் என்று பொய்யான தகவலை கூறிவிட்டு, முல்லைப் பெரியாறு அணையை உடைக்க சதி செய்கிறது கேரள அரசு. பேபி அணையை வலுப்படுத்தப்போகிறோம் என்று சொல்லிவிட்டு ஒட்டுமொத்த அணையையும் உடைப்பதற்காக கடந்த 2006ம் ஆண்டு 1200 கிலோ வெடிபொருளை தயாராக வைத்துள்ளது கேரள அரசு.

இந்த சதியை முறியடிக்க மத்திய ரிசர்வ் போலீசை பாதுகாப்புக்கு போட வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் அனைத்து நிலைப்பாடுகளும் சரியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு கொந்தளிப்பை உருவாக்க வேண்டும் என்று கேரள அரசு ஒரு நாடகத்தை நடத்தியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது. 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும்கூட அணை தாங்கும் என வல்லுநர்கள் நிரூபித்துள்ளனர். ஆனால் இந்த பகுதியில் 3 ரிக்டர் அளவுகூட நிலநடுக்கம் ஏற்படாது.

கேரளத்தில் உள்ள அரசியல் கட்சியினர் அணை உடைந்துவிடும் என அந்த மாநில மக்கள் மத்தியில் பொய்யான பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த மக்களுக்கு அணைகளுடைய நிலையை விளக்க இந்த பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் இல்லாவிட்டால் மதுரை உள்ளிட்ட 6 தென்மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். மேலும் 85 லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும். இந்தப் பிரச்னையில் தமிழக அரசு சரியான பாதையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழ்நாட்டில் அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தக் கூடாது என்று உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆனால் கேரளாவில் மூன்று இடங்களில் மட்டுமே அந்த தடை உத்தரவு உள்ளது.

கேரள மக்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இதற்கு ஆதரவு கரம் நீட்டாதீர்கள். கேரள அரசு தமிழன் தலையில் கல்லை போட நினைத்தால், 15 நாட்கள் கூட ஆகாது. ஒட்டுமொத்த கேரளாவுக்கு செல்லும் உணவு பொருட்களை தடுத்துவிட்டால் உங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும்.

முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க கேரள காவல்துறையினரால் முடியாது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையை இங்கு நிறுத்த வேண்டும். இதை பிரதமரிடமும் நான் வலியுறுத்தி உள்ளேன்.

நான் முப்பது வருடங்களுக்கு முன்பு இருந்த வைகோவாக இருந்தால் ஆவேசமாக பேசிவிட்டு போயிருப்பேன். அடிக்கு அடி, உதைக்கு உதை. குண்டுக்கு குண்டு. ஆனால் தற்போது அப்படி பேசபோவதில்லை. நான் நல்லது செய்தால் யாரையும் பாராட்டுவேன். ஆனால் தப்பு செய்தால் யாரையும் எதிர்க்க தயங்க மாட்டேன்.

வரும் 21ஆம் தேதி பொருளாதார முற்றுகை போராட்டம் நிச்சயமாக நடைபெறும். கேரளா செல்லும் அத்தனை வாகனங்களும் மறிக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், கட்சி பாகுபாடின்றி ஒன்று சேர வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்த 40 கோடி ரூபாயும், புதிய அணையை கட்ட 600 கோடி ரூபாயும் கேரள அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

கேரளாவில் என்னுடைய கொடும்பாவியை 32 இடங்களில் எரிக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றி நான் கவலைப்படபோவதில்லை என்றார் வைகோ.

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 07, 2011 8:59 pm

சென்னை, தஞ்சை, கோவை, குடந்தையில் கேரளக் கடைகள் தாக்கப்பட்டன- ஆலுக்காஸும் கடைகளும் தப்பவில்லை

சென்னை: சென்னை, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று கேரளாக்காரர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. சென்னை, கோவையில் உள்ள ஆலுக்காஸ் நகைக் கடைகளையும் தாக்கி முற்றுகைப் போராட்டம் நடந்தது.

குமுளியில் தமிழர்கள் மீது கேரளத்தினர் சிலர் வெறித் தாக்குதலில் ஈடுபட்டு கடைகளை அடித்து நொறுக்கினர். பெண்களையும் மானபங்கப்படுத்தியதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து கம்பத்தில் கேரளாக்காரர்களின் கடைகள், நிறுவனங்களை சிலர் சூறையாடினர். லாரி, வேன் ஆகியவை தீவைத்து எரிக்கப்பட்டன. திராட்சைத் தோட்டத்திற்கும் தீவைக்கப்பட்டது.

தஞ்சாவூரில் டீக்கடைகள் சூறை

இந்த நிலையில் தஞ்சாவூரில் இன்று கேரள வியாபாரிகளின் கடைகளை தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சியினர் தாக்கி சூறையாடினர். ராயல் காபி பார் மற்றும் ஒரு குளிர்பானக் கடை ஆகியவை தாக்கி சூறையாடப்பட்டன. இதனால் அந்த இடமே போர்க்களம் போலக் காணப்பட்டது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தஞ்சை முழுவதும் உள்ள கேரள வியாபாரிகள் தங்களது கடைகளை மூடி விட்டனர்.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், கேரளாவில் தமிழர்களையும், அவர்களது கடைகளையும் தாக்கியதற்கு இது பதிலடி என்று கோஷமிட்டனர்.

இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்து வந்தனர். தஞ்சையில் உள்ள ஆலுக்காஸ் நகைக் கடை முன்பு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில்

இதேபோல சென்னையிலும் தாக்குதல் நடந்துள்ளது. சைதாப்பேட்டையில் உள்ள கேரள வியாபாரிக்குச் சொந்தமான ஸ்வீட் ஸ்டாலை 7 பேர் கொண்ட ஒரு கும்பல் புகுந்து தாக்கி அங்கிருந்த ஷோ கேஸ்களை அடித்து உடைத்தது. இதில் கண்ணாடி குத்தி கடை ஊழியருக்கு கையில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கடைக்குப் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது.

ஜாய் ஆலுக்காஸ் கடை முற்றுகை

இதேபோல தி.நகரில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் நகைக் கடையை தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சியினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் அவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.

கோவையில் தடியடி

கோவையில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் நகைக் கடையையும் தமிழ் தேச பொதுவுடமைக் கட்சியினர் முற்றுகையிட்டனர். கடை மீது கல்வீசித் தாக்கினர். இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் அவர்களை தடியடி நடத்திக் கலைத்தனர்.

பேக்கரி உடைப்பு

இதேபோல கோவையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே கே.ஆர். பேக்கரி என்ற கடை உள்ளது. இது கேரளாக்காரர்கள் நடத்தும் கடையாகும். இங்கு மாணவர் கழகத்தினர், நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவற்றைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கடையை அடித்து நொறுக்கினர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் அனைவரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

கோடம்பாக்கத்தில் மலபார் டீக்கடை நாசம்

அதேபோல சென்னை கோடம்பாக்கத்தில் மலபார் டீக்கடை என்ற கேரளாக்காரர்களின் டீக்கடையை சிலர் அடித்து உடைத்து துவம்சம் செய்தனர்.

இதேபோல தி.நகர் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு குளிர்பானக் கடையை 10 பேர் கொண்ட கும்பல் அடித்து உடைத்து சூறையாடியது. இதனால் கடையே சின்னாபின்னமானது.

தட்ஸ் தமிழ்

avatar
Guest
Guest

PostGuest Thu Dec 08, 2011 7:55 am

புதிய அணை கட்டுவதில் கேரளா பிடிவாதம்: பிரதமரை சந்திக்க தயார்

திருவனந்தபுரம்: "தமிழக-கேரள மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி, முல்லை பெரியாறு அணை பிரச்னையை தீர்க்கவே விரும்புகிறோம்' என கேரள முதல்வர் உம்மன் சாண்டி நேற்று கூறினாலும், அனைத்துக் கட்சியினருடன் டில்லியில் பிரதமரை சந்தித்து, புதிய அணை கட்டப்படவேண்டும், அணையின் நீர்மட்டத்தை குறைக்கவேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளனர். இதனால் இவ்விஷயத்தில், கேரளா தனது பிடிவாதப் போக்கை கைவிட மறுத்து வருகிறது என்பது புலனாகிறது.

தமிழக-கேரள எல்லையில்,116 ஆண்டுகளாக முல்லை பெரியாறு அணை செயல்பட்டு வருகிறது. இந்த அணை பலமிழந்து விட்டதாகவும், அணையை அகற்றி விட்டு, புதிய அணை கட்ட வேண்டும், தற்போதுள்ள அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாக குறைக்கவேண்டும் என, கேரள ஆளும் கட்சியினரும், எதிர்கட்சியினரும் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், இரு மாநில எல்லையிலும், பதட்டம் நீடித்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை திருவனந்தபுரத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பின் பேசிய முதல்வர் உம்மன் சாண்டிகூறியதாவது : அணை சம்பந்தமாக இரு மாநில நல்லுறவு கெடாமல், இரு மாநில மக்களுக்கும் எந்தவித பாதிப்புமின்றி பிரச்னையை தீர்க்கவே, கேரள அரசு விரும்புகிறது. இரு மாநில எல்லையிலும் ஏற்பட்டுள்ள பதட்டத்தை தவிர்க்க, கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி. ஜேக்கப் புன்னூஸ், தமிழக போலீஸ் டி.ஜி.பி.யுடன் பேசி இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

நாங்கள் உயர்ந்த நோக்கத்திற்காக அனைவரும் இணைந்து பாடுபடுகிறோம். அதில் வெற்றியும் பெறுவோம். அணை உடைந்தால் இடுக்கி அணையில் நீரை தேக்கி வைக்க முடியும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருப்பது, முல்லை பெரியாறு அணை சேதமடைந்துள்ளதை அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பதையே காட்டுகிறது. கேரள அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் விரைவில் டில்லி சென்று பிரதமரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம். அதற்கான தேதி பிரதமரை சந்திப்பதற்கான தேதி கிடைத்ததும், முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

நீர்மட்டத்தை குறைக்க வலியுறுத்தல்: கேரளா மனுத்தாக்கல் முல்லை பெரியாறு அணை தொடர்பாக, நேற்று கேரள அரசு சார்பில், அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120அடியாக குறைக்கவேண்டும் எனக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

avatar
Guest
Guest

PostGuest Thu Dec 08, 2011 2:42 pm

தேனியில் வைகோ உண்ணாவிரதம்

தேனி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளின் அரசின் போக்கைக் கண்டித்து தேனியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் போக்கைக் கண்டித்து நேற்று மதுரையிலிருந்து விழிப்புணர்வுப் பிரசாரத்தை தொடங்கினார் வைகோ. இந்தப் பிரசாரம் முதலில் கூடலூரில் முடிவடைதாகவும், பின்னர் கம்பத்தில் உண்ணாவிரதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் தற்போது நிலவும் மோசமான நிலையைக் கருத்தில் கொண்டு வைகோவின் போராட்டம் தேனிக்கு மாற்றப்பட்டது. அதன்படி இன்று காலை வைகோ தனது உண்ணாவிரதத்தை தேனியில் தொடங்கினார்.

அவருடன் கொளத்தூர் மணி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர். இன்று மாலை உண்ணாவிரதப் போராட்டம் முடிவடைகிறது. பழ. நெடுமாறன் உண்ணாவிரதத்தை முடித்து வைப்பார்.

Sponsored content

PostSponsored content

Page 3 of 17 Previous  1, 2, 3, 4 ... 10 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக