புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 10 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 10 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
89 Posts - 38%
heezulia

83 Posts - 36%
Dr.S.Soundarapandian

36 Posts - 15%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
ayyamperumal

3 Posts - 1%
manikavi

2 Posts - 1%
Anitha Anbarasan

Guna.D

rajuselvam

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 10 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 10 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
340 Posts - 48%

230 Posts - 33%

66 Posts - 9%

29 Posts - 4%

24 Posts - 3%
prajai

6 Posts - 1%
Srinivasan23
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 10 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 10 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
3 Posts - 0%

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !

Page 10 of 12 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Nov 12, 2011 6:08 pm

First topic message reminder :

தமிழர் வாழ்வில் இன்றியமையாத விஷயங்களாகக் கருதுவது  ஒழுக்கம், வீரம், காதல்  ஆகிய மூன்றும்  தான். பண்டைய தமிழ் இலக்கியங்களில் இந்த மூன்று விஷயங்களைப் பற்றித் தான் அதிகப் பாடல்கள் உள்ளன. 6 முதல் 9ஆம்  நூற்றாண்டு வரை உள்ள இலக்கியங்களில் தான் பக்தியை மையமாக வைத்து எழுந்த பாடல்கள் அதிகம் காணப்படுகிறது.

சங்கத்தமிழ் நூல்களின் பெரும்பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள் & மேல் கணக்கு நூல்கள் ஆக  18 + 18 =36 நூல்கள் ஆகும். இதில் கீழ் கணக்கு நூல்கள் பெரும்பாலும் நீதி, ஒழுக்கம், வாழ்க்கை நெறிமுறைப் பற்றி அதிகம் கூறுகிறது. அவற்றுள் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, திரிகடுகம் போல் விளங்கும் சிறந்த நூல் ஆசாரக் கோவை ஆகும். இவை வடமொழியில் உள்ள ஸ்மிருதிகளை அடிப்படையாக வைத்து எழுதிய நூல் என்று மூத்தோர் கூறுகின்றனர்.

வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார். ஆசாரங்களை (ஒழுக்கங்கள்) அழகான மாலைப்போல் கோவையாக கோர்த்து (சேர்த்து) எழுதி உள்ளதால் இது ஆசாரக் கோவை என்று பெயர் பெறுகிறது. பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விஷயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது.

இன்று நமக்கு எழும் பல சந்தேகங்கள் ஆன , எந்த திசையில் படுக்க வேண்டும், எந்த திசையில் சாப்பிட வேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும்,  எப்போது குளிக்க வேண்டும், நீராடும் முறை என்ன , யாரை வணங்க வேண்டும், பெரியவர்களுடன் பழகும் போது , உண்ணும் போது செய்ய வேண்டிய ஒழுக்க நெறிகள் (மேனர்ஸ்) என்னென்ன என்பது போன்ற பல கேள்விகளுக்கு இதில் விடை உள்ளது. இது மட்டுமல்லாது மலம், ஜலம் கழிக்க வேண்டிய இடங்கள், எந்த நாள்கள் பெண்ணுடன் சேர்வது நல்லது, எந்த நாள் தவிர்க்க வேண்டும் பற்றியும் இதில் பாடல்கள் உள்ளன.

தமிழன் பல நூற்றாண்டு முன்னரே அறிவியல், வாழ்க்கை நெறிமுறை, ஆரோக்கியமாக வாழும் வழிகள் கண்டு அறிந்திருந்தான் என்பதற்கு இந்த நூல் சிறந்த சான்றாகும்.  

ஔவையின் மூதுரை, நல்வழியைப் போல் ஆசாரக்கோவை அனைவரிடமும் பிரபலமாகவில்லை. நம் பள்ளிக்கூட புத்தங்களிலும் இவை அரிதாகவே இடம் பெறுகிறது, பலருக்கு தமிழில் இப்படி ஒரு நூல் இருக்கிறது என்று தெரியவில்லை.  

இணையதளத்தில் பல இடங்களிலும் இதில் உள்ள பாடல்களின் மூலம் மட்டுமே கிடைக்கிறது. மூதுரை, நல்வழியைத் தொடர்ந்து ஈகரை உறவுகளுக்கு இந்த அற்புத நூலை அனைவரும் அறிந்து கொள்ள, அனைவரும் சுலபமாக படிக்க, பொருளுடன் பதிக்கும் முயற்சியை தொடங்கியுள்ளேன்.

உங்களின் ஆதரவும் ,தவறு ஏற்படின் எடுத்துக் கூறும் நட்பையும் நாடி தொடர்கிறேன்.

அன்புடன்......

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jan 19, 2012 9:06 pm

சதாசிவம் wrote:ஆக, அந்த தருணத்தில் நாம் அமைதி காத்து நிற்பதே சிறந்தது. நன்றிகள் ஐயா. ஆயினும், ஒருவர் கூறும் பொழுது நாம் எந்த வித மறுமொழியும் இடாமல் இருப்பது. நன்றாக இருக்குமா ஐயா......

இன்றைக்கு கூறும் பல கல்விப் பாடங்களின் மூலம் நம் இந்திய மரபில், அதிலும் தமிழில் மிகுந்து உள்ளது. பல உளவியல் கோட்பாடுகள் உட்பட.

மறுமொழி இடுவது நாம் பழகும் அதிகாரியின் தனித்தன்மைப் பொருத்தும், நம்முடைய பதவியைப் பொருத்தும் அமைய வேண்டும். குறிப்பாக ஒரு மேலதிகாரி தான் கீழ் உள்ளவன் சொல்வதை கேட்காமல் போகலாம், ஆனால் அவனுடைய காரியதரிசி கூறுவதன் படி செயல்படுகிறார். யூனியன் லீடர் சொல்லுக்கு தலைச் சாய்கிறார். மன்னுனும் தன் தவறுகளை இடிந்துரைக்கும் அமைச்சனின் சொல்லை கேட்க வேண்டும், கேட்கவில்லை என்றால் எதிரியே தேவையில்லை அவன் தானாகவே கெடுவான் என்று வள்ளுவன் கூறுகிறார்.

ஆதலால் உங்களின் பணி நிலையும், நீங்கள் பணி புரியும் அதிகாரியின் குணத்தையும் பொறுத்து அவர் சொல்லுக்கு மறுமொழி இடலாம். அவர் தன் தவறை உணராதவர் என்று உணர்ந்தால் அமைதியாக இருப்பது நமக்கு சிறந்தது என்றும், கடிந்துரைக்கும் நண்பர்களின் சொல் கேட்டு நடப்பது மன்னனுக்கு (அனைத்து அதிகாரிக்கும்) நல்லது என்றும் தமிழ் கூறுகிறது. உங்களின் கீழ் உள்ளவர்களிடம் எப்படி நடக்க வேண்டும் என்றும், மேல் உள்ளவர்களிடம் எப்படி நடப்பது சிறந்தது என்றும் தமிழ் கூறுகிறது.

அருமையான விளக்கம் ஐயா......மிகவும் தெளிவாக விளங்கியது...... புன்னகை நன்றி நமக்கு அருகில் இருக்கும் ஆளைப் பொறுத்து மாறுபட்டு செயல் படவேண்டும் என்பது தெளிவாகிறது. நன்றிகள் ஐயா புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jan 20, 2012 4:12 pm

நன்றி ராமன், சந்தேகம் இருப்பின் தயங்காமல் கேளுங்கள்.
:நல்வரவு:

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Jan 21, 2012 6:09 pm

பாடல் 74 ஆசிரியரிடம் நடக்கும் முறைமை
(இன்னிசை வெண்பா)

நின்றக்கால், நிற்க, அடக்கத்தால்! என்றும்
இருந்தக்கால், ஏவாமை ஏகார்; பெருந்தக்கார்
சொல்லின் செவி கொடுத்துக் கேட்டீக! மீட்டும்
வினாவற்க, சொல் ஒழிந்தக்கால்!

பொருள் விளக்கம்

சிறந்த குணமுள்ள மாணவர்கள் எப்போதும் அடக்கத்தால் ஆசிரியர் பாடம் சொல்லாமல் சும்மா இருக்கும் போது அமைதியுடன் இருப்பர். என்றும் இருந்து அமரும் இருக்கும் போது அவர் சொல்லாமல் எழுந்து செல்ல மாட்டார். அவர் பாடம் சொல்லும் போது செவி கொடுத்து கவனமாக கேட்பர். கவனிக்காமல் பாடம் சொல்லி முடித்தவுடன் அது குறித்து வினவக்கூடாது.

பாடல் 75 சான்றோர் அவையில் செய்யக் கூடாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

உடுக்கை இகவார், செவி சொறண்டார்; கை மேல்-
எடுத்து உரையார்; பெண்டிர்மேல் நோக்கார்; செவிச் சொல்லும்
கொள்ளார்; பெரியார் அகத்து.

பொருள் விளக்கம்

பெரியவர்கள் இருக்கும் சபையில் உடையை கழட்ட மாட்டார்கள். காதை சொறிந்து நிற்கக் கூடாது. கையை உயர்த்தி பேசக்கூடாது. அங்குள்ள பெண்கள் மேல் கண்கள் செல்லக்கூடாது. அங்கு அவர்கள் பிறர் காதில் சொல்லும் ரகசியத்தை காது கொடுத்துக் கேட்கக்கூடாது.

பாடல் 76 சொல்லும் முறைமை
(இன்னிசை வெண்பா)

விரைந்து உரையார்; மேன்மேல் உரையார்; பொய் ஆய
பரந்து உரையார்; பாரித்து உரையார்; - ஒருங்கு எனைத்தும்
சில் எழுத்தினானே, பொருள் அடங்க, காலத்தால்
சொல்லுக, செவ்வி அறிந்து!

பொருள் விளக்கம்

ஒருவர் ஒரு விஷயம் குறித்து கேட்கும் போது, விரைவாக அவசரத்துடன் பதில் அளிக்கக் கூடாது. சொன்னதை திரும்ப திரும்ப சொல்லக் கூடாது. பொய்யாக உரைக்கக் கூடாது. பலவாறு விவரித்து உரைக்கக் கூடாது. மொத்த கருத்தின் விஷயத்தை சுருக்கமாக சிறிய சொற்றொடர்களால் பொருள் அடங்குமாறு காலம் அறிந்து சொல்ல வேண்டும்.

தொடரும்

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 21, 2012 6:56 pm

ஒருவர் ஒரு விஷயம் குறித்து கேட்கும் போது, விரைவாக அவசரத்துடன் பதில் அளிக்கக் கூடாது.

மிகவும் நன்று ஐயா, எனக்கு கடைசியாக உள்ள ஆசாரம் பொருந்தும்........அதிலும், மேலுள்ள வரிகள் மிகவும் பொருந்தும், இனி இதை தவிர்த்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றிகள் ஐயா...... புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jan 22, 2012 3:24 pm

பிஜிராமன் wrote:

ஒருவர் ஒரு விஷயம் குறித்து கேட்கும் போது, விரைவாக அவசரத்துடன் பதில் அளிக்கக் கூடாது.

மிகவும் நன்று ஐயா, எனக்கு கடைசியாக உள்ள ஆசாரம் பொருந்தும்........அதிலும், மேலுள்ள வரிகள் மிகவும் பொருந்தும், இனி இதை தவிர்த்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றிகள் ஐயா...... புன்னகை நன்றி

நன்றி ராமன்..... :நல்வரவு:

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jan 22, 2012 3:54 pm

பாடல் 77 நல்ல குலப்பெண்டிர் இயல்பு
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

தம் மேனி நோக்கார்; தலை உளரார்; கைந் நொடியார்,
எம் மேனி ஆயினும் நோக்கார்; தலைமகன்-
தம் மேனி அல்லால் பிற

பொருள் விளக்கம்

நல்ல குலத்தில் பிறந்த, கற்பு நெறி தவறாத மங்கையர்
தங்கள் உடல் பிறருக்கு அழகாக தெரிய வேண்டும் என்று தங்கள் உடலை பார்த்து அலங்காரம் செய்ய மாட்டார்கள். பிறர் முன்னிலையில் தலைமுடியை உலர மாட்டார்கள், கையை நொடிக்க மாட்டார்கள். தங்கள் கணவனைத் தவிர எத்துணை அழகனாய் இருந்தாலும் பிற ஆடவனைப் பார்க்க மாட்டார்கள்.

பாடல் 78 மன்னர் அவையில் செய்யக் கூடாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

பிறரொடு மந்திரம் கொள்ளார்; இறைவனைச்
சாரார்; செவி ஓரார்; சாரின், பிறிது ஒன்று
தேர்வார்போல் நிற்க, திரிந்து!

பொருள் விளக்கம்

அரசன், உயர் அதிகாரிகள் இருக்கும் இடங்களில் இருக்கும் சபையில் பிறருடன் ரகசியம் பேசக்கூடாது, அரசன் ஒருவருக்கு கூறும் ரகசியத்தை காது கொடுத்து கேட்கக் கூடாது. கேட்கும் படி நிற்க் நேர்ந்தால் அவர் பேசுவதை கண்டு கொள்ளாமல், அதிலிருந்து விலகி வேறு ஒன்றை கவனிப்பது போல் மாறி நிற்க வேண்டும்.

பாடல் 79 பெரியோரிடம் உள்ள முச்செயல்கள்
(நேரிசை வெண்பா)

துன்பத்துள் துன்புற்று வாழ்தலும், இன்பத்துள்
இன்ப வகையான் ஒழுகலும், அன்பின்
செறப்பட்டார் இல்லம் புகாமை, - இம் மூன்றும்
திறப்பட்டார் கண்ணே உள.

பொருள் விளக்கம்

நன்கு கற்று உணர்ந்து அடங்கிய திறம் நிறைந்த பெரியவர்களிடம் தங்களுக்கு துன்பம் ஏற்படும் வேளையில் துன்பத்தை கண்டு துவளாமல் வாழ்வதும், இன்பம் வரும் வேளையில் இன்பத்தை கண்டு பெரு மகிழ்ச்சி அடையாமல் அமைதியாக இருப்பதும், அன்பில்லாத மனிதர்கள் வீட்டில் நுழையாமல் இருப்பதும் ஆகிய மூன்றும் குணங்களும் நிறைந்து இருக்கும்.

பாடல் 80 சான்றோர் பெயர் முதலியவற்றைக் கூறாமை
(நேரிசை வெண்பா)

தெறுவந்தும் தம் குரவர் பேர் உரையார்; இல்லத்து
உறுமி நெடிதும் இராஅர்; பெரியாரை
என்றும் முறை கொண்டு கூறார்; புலையரையும்
நன்கு அறிவார் கூறார், முறை

பொருள் விளக்கம்

கோபம் வந்த போதும் பெரியவர்களை பேர் சொல்லி அழைக்கக்கூடாது. இல்லத்தரசியிடம் கோபம் கொண்டு நீண்ட நேரம் பேசாமல் இருக்கக்கூடாது. பெரியவர்களை முறை இல்லாமல் பேசக்கூடாது. அது போல் நன்கு விஷயம் அறிந்தவர்கள் துன்பம் விளைவிக்கும் சிறிய குணத்தை உடையவரையும் முறை இல்லாமல் பேச மாட்டார். இதுவே நல்ல நெறி என்று கூறப்படும் முறை ஆகும்.

தொடரும்...

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jan 22, 2012 4:08 pm

நல்ல விளக்கங்கள் ஐயா, மிக்க நன்றிகள்.

ஐயா, குரவர் என்ற வார்த்தை வருகிறதே, அது பெரியோர்களைக் குறிக்கிறதா....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jan 22, 2012 5:02 pm

பிஜிராமன் wrote:நல்ல விளக்கங்கள் ஐயா, மிக்க நன்றிகள்.

ஐயா, குரவர் என்ற வார்த்தை வருகிறதே, அது பெரியோர்களைக் குறிக்கிறதா....

ஆம் ராமன்,
குரவர் என்றால் பெரியவர், ஆசான், ஆசாரியன் என்ற பொருளைக் குறிக்கும்.
சைவச் சமயக் குரவர் நால்வர் என்று அப்பர், சம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரரை குறிப்பிடுகிறோம்.

நன்றி

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Jan 23, 2012 1:29 pm

பாடல் 81 ஆன்றோர் செய்யாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

புழைக்கடைப் பின் புகார்; கோட்டி, உரிமை,
இவற்றுக்கண் செவ்வியார், நோக்காரே, அவ்வத்
தொழிற்கு உரியர் அல்லாதவர்

பொருள் விளக்கம்

அந்தந்த தொழிலுக்கு உரியவர் அல்லாத பெரியவர்கள் ஒரு வீட்டின் பின் வாசல் வழியே நுழைய மாட்டார். அரசன் நாட்டியம், கூத்து என்று சந்தோஷமாக இருக்கும் சமயத்தில் அவரை சென்று சந்திக்க மாட்டார்.

பாடல் 82 மனைவியின் உள்ளம் மாறுபடுதல்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

வண்ணமகளிர் இடத்தொடு தம் இடம்,
ஒள்ளியம் என்பார், இடம் கொள்ளார்; தெள்ளி,
மிகக் கிழமை உண்டுஎனினும், வேண்டாவே; - பெண்டிர்க்கு
உவப்பன வேறாய்விடும்.

பொருள் விளக்கம்

தங்களை அழகு செய்து ஆண்களை கவரும் பெண்கள் இருக்கும் இடத்தில் நல்ல குணம் உள்ளவர் வீடு அமைக்க மாட்டார்கள். அந்த பெண்கள் தங்கும் இடம் தங்களுக்கு உரிமையானதாக இருக்கும் தருணத்திலும் அங்கு தங்கள் மனைவியின் மனம் கோணும் படி அங்கே வீடு அமைக்க மாட்டார், உரிமை கொண்டாட மாட்டார்.

பாடல் 83 கடைபோக வாழ்வோம் என எண்ணுபவர் மேற்கொள்ள வேண்டியவை
(இன்னிசை வெண்பா)

நிரல்படச் செல்லார்; நிழல் மிதித்து நில்லார்;
உரையிடை ஆய்ந்து உரையார், ஊர் முனிவ செய்யார்;
அரசர் படை அளவும் சொல்லாரே; - என்றும்,
'கடைபோக வாழ்தும்!' என்பார்

பொருள் விளக்கம்

வாழ்க்கையில் இறுதி வரை நல்லமுறையில் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒருவர் செல்லும் பொது அவருடன் ஒரே வரிசையில் உரசும் படி செல்ல மாட்டார். ஒருவருடைய நிழலை மிதித்து நிற்க மாட்டார். ஊரார் வருத்தப்படும் செயலைச் செய்ய மாட்டார். அரசனின் பகைவரிடம் ஆதாயம் கருதி சேர மாட்டார்.

தொடரும்

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Jan 23, 2012 1:50 pm

பாடல் 84 பழகியவை என இகழத் தகாதவை
(இன்னிசை வெண்பா)

அளை உறை பாம்பும், அரசும், நெருப்பும்,
முழை உறை சீயமும், என்று இவை நான்கும்,
இளைய, எளிய, பயின்றன, என்று எண்ணி,
இகழின், இழுக்கம் தரும்.

பொருள் விளக்கம்

புற்றில் தங்கும் பாம்பும், அரசனும் , நெருப்பும், குகையில் வசிக்கும் சிங்கம் ஆகிய நான்கிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவை நமக்கு பழக்கமானவை, உருவத்தில்/வயதில் சிறியது, எளிமையானது என்று எண்ணக்கூடாது. அப்படி எண்ணி கவனம் இல்லாமல் இருந்தால் துன்பம் விளையும்.

பாடல் 85 செல்வம் கெடும் வழி
(நேரிசை வெண்பா)

அறத்தொடு, கல்யாணம், ஆள்வினை, கூரை,
இறப்பப் பெருகியக்கண்ணும், திறப்பட்டார்
மன்னரின் மேம்படச் செய்யற்க! செய்பவேல்,
மன்னிய செல்வம் கெடும்

பொருள் விளக்கம்

அறிவுத்திறம் நிறைந்த பெரியவர்கள் தங்களிடம் உள்ள செல்வம் நிலை பெற வேண்டுமானால் அரசனை விட அதிகமாக தர்ம காரியங்கள், கல்யாணம், ஆடம்பரம், வீடு ஆகியவற்றுக்கு செலவு செய்ய மாட்டார்கள். செய்தால் சேர்த்து வைத்த செல்வம் வீணாகி விடும்.

பாடல் 86 பெரியவரை 'உண்டது யாது' என வினவக் கூடாது
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

உண்டது கேளார், குரவரை, மிக்காரை,
கண்டுழி; கண்டால், முகம் திரியார், புல்லரையும்
உண்டது கேளார் விடல்

பொருள் விளக்கம்

பெரியவர்களை காணும் பொழுது நீங்கள் சாப்பிட்டது என்ன என்று கேட்கக்கூடாது. அதே போல் கீழ் குணம் உள்ள சிரியவரை கண்டவுடன் முகம் திரியக்கூடாது, அவர்களையும் சாப்பிட்டது என்ன என்று கேட்கக்கூடாது.

தொடரும்

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

Page 10 of 12 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக