புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  Poll_c10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  Poll_m10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  Poll_c10 
40 Posts - 63%
heezulia

19 Posts - 30%
mohamed nizamudeen

2 Posts - 3%
வேல்முருகன் காசி

viyasan

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  Poll_c10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  Poll_m10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  Poll_c10 
232 Posts - 42%

216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  Poll_c10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  Poll_m10ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்  Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஔவையார் பக்கம் - ஒளவையார் பற்றிய செவி வழி செய்திகளும் சுவாரஸ்ய தகவல்களும்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 11, 2010 10:05 pm

ஒரு சமயம், அரசனொருவன் புலவர்களை அழைத்து, நாளை அரசவையில் நாலுகோடிப் பாடல் சொல்ல வேண்டுமென பணித்தான். இந்தக் கட்டளை கேட்டு திக்கு முக்காடிப் போன புலவர்களில் ஒருவரை ஒளவையார் சந்திக்கிறார்.

கவலையை மறந்து விடுங்கள், நான் உங்களுக்கு நான்கு கோடிப் பாடல்களை ஒரு நொடியில் சொல்கிறேன் என பாடல்வரிகளை ஒளவையார் சொல்லி முடிக்கிறார்.

1.
மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்.

மதியாதவர் வாசலை மதித்து சென்று மிதிக்காமல் இருப்பது கோடிப் பொருளைத் தருவதாகும்.

2.
உண்ணீர் உண்ணீரென்று ஊட்டாதார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்.

நம்மை அன்புடன் உபசரித்து உண்ணுங்கள் உண்ணுங்கள் என்று உணவிடாதோர் வீட்டில் சென்று உண்ணாமை கோடிப்பொருளைத் தரும்.

3.
கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்.

எத்தனை கோடிப்பணம் கொட்டிக்கொடுத்தாலும் தமக்குத்தகுதியற்றோருடன் கூடி வாழுதல் இல்லாமல் ஒத்த இயல்புடையோருடன் கூடிவாழுதல் கோடிப் பொருளைத் தரும்.

4.
கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.

எத்தனை கோடிகள் கொட்டிக்கிடைத்தாலும் தம் நாவினை அடக்கி வாழுதுல கோடிப்பொருளைத்தரும்.

ஔவையாரைப்பற்றிய அறிந்த தகவல்களைப்பகிரும் இந்த திரியில் ஔவையாரின் பாடல்கள் சம்பவஙகளை பகிர்ந்துகொள்வோம் நண்பர்களே,,, [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 11, 2010 10:18 pm

[You must be registered and logged in to see this image.]

அருமை சார்.

ஒருமுறை புலவர் ஒருவர் ஔவையாரிடம்

"ஒருகாலிலே நாலு பந்தலடி"
என்று, விடுகதை கேட்டாராம்.

கவனியுங்கள் "டி" என்று கூறியிருக்கிறார் (புலவர் பெயர் தெரியவில்லை)

ஔவையார் யாரையடா சொன்ன ஆளை
கீரையடா என்று இருமுறை டா
போட்டு விடையை சொன்னாராம்.

சரியான பதிலடி.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 11, 2010 10:41 pm

ஒருமுறை காளமேகப்புலவர் ஆரைக்கீரைக்கு ஔவையை ஒப்பிட்டு சிலேடையாக “ஒரு காலடி, நாலிலைப் பந்தலடி” எனப்பாடினாராம். அதற்குப் பதிலடியாக ஔவை பாடியது அவரது கவிதைத் திறனை மட்டுமல்லாது அஞ்சாநெஞ்சையும் காட்டுகிறது--

“எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமேற்
கூரையில்லா வீடே குலராமன் துாதுவனே
ஆரையடா சொன்னா யது!”

தமிழில் "அ" என்ற எழுத்து "எட்டு" என்ற எண்ணைக் குறிக்கும். அதேபோல் "வ" என்பது "1/4" ஐ குறிக்கும். அப்படியானால் "எட்டேகால்" என்பது "அவ" என்றாகிறது. முதல் சொற்றொடர் "அவ லட்சணமே" என்று பொருள் தருகிறது.

எமன் ஏவும் பரி என்பது "எருமை". பெரியம்மை என்பது "லட்சுமியின் தமக்கையான மூதேவி".

முட்டமுட்ட கூரையில்லா வீடு என்பது "மேகம்" (அதாவது காளமேகம்). குலராமன் தூதுவன் "குரங்கு". அப்படியே "யாரையடா சொன்னாய் அது". அதாவது காளமேகம் கேட்டதற்கு விடை ஆரைக்கீரை என்பதே ஆகும்.

அ என்பதற்கு தமிழ் எண் - எட்டு, வ என்பது - கால் அதாவது எட்டேகால் என்பது “அவ” என அர்த்தமாகும். பெரியம்மை - மூதேவி, கூரையில்லா - குட்டிச்சுவர், குலராமன் தூதுவன் - குரங்கு.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 11, 2010 10:47 pm

அருமை கலைசார் சிறந்த விளக்கத்துடன் நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 11, 2010 10:59 pm

பிச்ச wrote:[You must be registered and logged in to see this image.]

அருமை சார்.

ஒருமுறை புலவர் ஒருவர் ஔவையாரிடம்

"ஒருகாலிலே நாலு பந்தலடி"
என்று, விடுகதை கேட்டாராம்.

கவனியுங்கள் "டி" என்று கூறியிருக்கிறார் (புலவர் பெயர் தெரியவில்லை)

ஔவையார் யாரையடா சொன்ன ஆளை
கீரையடா என்று இருமுறை டா
போட்டு விடையை சொன்னாராம்.

சரியான பதிலடி.

அருமையாக சொன்னீர்கள் சரண். எப்படி இதையெல்லாம் நினைவு வைத்திருக்கிறீர்கள்?
அது ஒளவைக்கும் கம்பருக்கும் இடையில் நடந்தது என்று ஒருசாரர் கூறுவர். ஒருசாரர் ஒளவைக்கும் ஒட்டக்கூத்தருக்கும் இடையில் நடந்தது என்றும் கூறுவர். இவர்கள் மூவரும் சம காலப் புலவர்களே.
இந்தப் பாடல் தாசிக்காக தாம் முடிக்காது விட்டுச்சென்ற பாடலைக் சிறிது கூழைப் பெற்று ஒளவை முடித்துவிட்டதை அறிந்த கம்பர் கோபமுற்று ஒளவையாரை ‘அடி’ என்று கூற நினைத்து ‘ஒரு காலடி நாலிலைப் பந்தலடி’ என்று பாட ஒளவை
“எட்டேகா லட்சணமே! யெமனே றும்பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே! - முட்டமேற்
கூரையில்லா வீடே! குலராமன் தூதுவனே!
ஆரையடா சொன்னாய் அடா”
என்று பாடி முடித்தாராம்.

[You must be registered and logged in to see this link.]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 11, 2010 11:05 pm

Aathira wrote:

ஒட்டக்கூத்தர் என்றுதான் நானும் நினைக்கிறேன். நான் நான்காவது படிக்கும்
போது என்னுடைய ஆசிரியர் சொன்னது. நன்றி...

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 11, 2010 11:07 pm

பிச்ச wrote:
Aathira wrote:
பிச்ச wrote:[You must be registered and logged in to see this image.]

அருமை சார்.

ஒருமுறை புலவர் ஒருவர் ஔவையாரிடம்

"ஒருகாலிலே நாலு பந்தலடி"
என்று, விடுகதை கேட்டாராம்.

கவனியுங்கள் "டி" என்று கூறியிருக்கிறார் (புலவர் பெயர் தெரியவில்லை)

ஔவையார் யாரையடா சொன்ன ஆளை
கீரையடா என்று இருமுறை டா
போட்டு விடையை சொன்னாராம்.

சரியான பதிலடி.

அருமையாக சொன்னீர்கள் சரண். எப்படி இதையெல்லாம் நினைவு வைத்திருக்கிறீர்கள்?
அது ஒளவைக்கும் கம்பருக்கும் இடையில் நடந்தது என்று ஒருசாரர் கூறுவர். ஒருசாரர் ஒளவைக்கும் ஒட்டக்கூத்தருக்கும் இடையில் நடந்தது என்றும் கூறுவர். இவர்கள் மூவரும் சம காலப் புலவர்களே.
இந்தப் பாடல் தாசிக்காக தாம் முடிக்காது விட்டுச்சென்ற பாடலைக் சிறிது கூழைப் பெற்று ஒளவை முடித்துவிட்டதை அறிந்த கம்பர் கோபமுற்று ஒளவையாரை ‘அடி’ என்று கூற நினைத்து ‘ஒரு காலடி நாலிலைப் பந்தலடி’ என்று பாட ஒளவை
“எட்டேகா லட்சணமே! யெமனே றும்பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே! - முட்டமேற்
கூரையில்லா வீடே! குலராமன் தூதுவனே!
ஆரையடா சொன்னாய் அடா”
என்று பாடி முடித்தாராம்.

ஒட்டக்கூத்தர் என்றுதான் நானும் நினைக்கிறேன். நான் நான்காவது படிக்கும்
போது என்னுடைய ஆசிரியர் சொன்னது. நன்றி...

எப்புடி சரண்? இப்படி?? [You must be registered and logged in to see this image.]
நான் புத்தகத்தைப் பார்த்துத்தான் சொன்னேன். [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Apr 11, 2010 11:13 pm

ஔவையாரைப்பற்றிய அறிந்த தகவல்களைப்பகிரும் இந்த திரியில் ஔவையாரின் பாடல்கள் சம்பவஙகளை பகிர்ந்துகொள்வோம் நண்பர்களே,,,

அருமை தொடருங்கள் .படிக்க காத்திருக்கிறோம்.நன்றி தோழரே.
ஔவை சொன்ன மொழியை, உங்கள் வழியில் காண காத்திருக்கிறோம். நன்றி நன்றி

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 11, 2010 11:20 pm

Aathira wrote:
எப்புடி சரண்? இப்படி?? [You must be registered and logged in to see this image.]  [You must be registered and logged in to see this image.]
நான் புத்தகத்தைப் பார்த்துத்தான் சொன்னேன்.  [You must be registered and logged in to see this image.]  [You must be registered and logged in to see this image.]

உங்களை மாதிரி, கலை சார் மாதிரி ஆசிரியர்கள் கிடைக்கும் மாணவர்கள்
அனைவருமே, இதுபோன்ற சுவையான விடயங்களை மறக்கமாட்டார்கள்.
ஔவையாரின்  சிறப்புகள் மேலும் ஏதேனும் இருந்தால் கூறுங்கள்.

நன்றி!!! [You must be registered and logged in to see this image.]  [You must be registered and logged in to see this image.]  [You must be registered and logged in to see this image.]

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 11, 2010 11:21 pm

ஔவையார் ஒருநாள் சோழ நாட்டி லிருந்து ‘அம்பர்’ என்ற ஒரு ஊரின் ஒரு தெரு வழியே நடந்து சென்றுகொண்டி ருந்தார். களைப்பு மிகுதியால் அந்தத் தெரிவிலிருந்த ஒரு வீட்டின் திண்ணை யில் சற்றே அமர்ந்தார்.

ஔவையார் அமர்ந்த திண்ணையைக் கொண்ட வீட்டில் ‘சிலம்பி’ என்ற தாசி இருந்தாள். தன் வீட்டின் திண்ணையில் ஒரு மூதாட்டி அமர்ந்திருப்பதைக் கண்ட சிலம்பி தான் குடிப்பதற்காக வைத்திருந்த கூழைக் கொணர்ந்து ஔவையாருக்குக் கொடுத்தாள்.

கூழை அருந்திய ஔவையார் அந்த வீட்டின் சுவற்றிலே கரிக் கட்டியினால் எழுதியிருந்த இரண்டு வரிகளைக் கவனித்தார்.

“தண்ணீருங் காவிரியே தார் வேந்தன் சோழனே மண்ணாவதுஞ் சோழ மண்டலமே”

தனக்குப் பசியாறக் கூழ் கொடுத்த சிலம்பியை நோக்கி “இது என்ன?” என்று கேட்டார் ஔவையார்.

“குலோத்துங்க சோழ மன்னனின் அவைக்களப் புலவரான கம்பர் வாயால் பாடல் பெற்றவர்கள் மிகவும் சீரோடும் சிறப்போடும் வாழ்வதாகக் கேள்விப்பட்டு நான் சேர்த்து வைத்திருந்த 500 பொற்காசுகளைக் கொடுத்து என் மீது ஒரு பாடல் பாட வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொண்டேன். அதற்குக் கம்பர், ‘ஒரு பாடலுக்கு ஆயிரம் பொன் தரவேண்டுமென்றும் 500 பொன்னுக்கு அரைப் பாடல் தான் கிடைக்கும்’ என்றும் கூறிக் கரிக் கட்டியால் இவ்விரண்டு வரிகளைச் சுவற்றில் எழுதி விட்டுப் போய்விட்டார். கையிலிருந்த 500 பொன்னும் பறிபோனதால் நான் அன்றிலிருந்து வறுமையில் வாடுகிறேன்” என்று கூறினாள் சிலம்பி.

அதைக் கேட்ட ஔவையார் அவ்விரண்டு வரிகளின் கீழே

“பெண்ணாவாள் அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்

செம்பொற் சிலம்பே சிலம்பு” என எழுதினார்.

ஔவையார் வாயால் பாடல் பெற்றதும் சிலம்பியின் புகழ் நாடெங்கும் பரவியது. அவள் கால்களில் செம்பொன்னிலான சிலம்பணியுமளவிற்குப் பெரிய செல்வச் சீமாட்டியாக ஆனாள்.

தான் 500 பொன் பெற்று ஏழையாக்கிய சிலம்பியை ஔவையார் கூழுக்குப் பாடிச் செல்வச் செழிப்பு மிக்கவளாக்கி விட்டதைக் கேள்வியுற்ற கம்பர் ஔவையார் மீது துவேஷம் கொண்டார். ஒரு நாள் ஔவையார் அரசவைக்கு வருகை தந்தார். அப்பொழுது கம்பர் அவரை நோக்கி ஆரைக் கீரைக்கும் ஔவைக்கும் சிலேடையாக அதாவது இரு பொருள்படும் படியாக ஔவையையும் ஆரக்கீரையையும் ஒப்பிட்டு.

“ஒரு கால, நாலிலைப் பந்தலடீ” என்று கூறினார். இதற்கு உத்தரமாக ஔவையார்,

“எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்க் கூறையில்லா வீடே, குலராமன் தூதுவனே ஆரையடா சொன்னாயது”

தமிழில் “அ” அன்பது எண் 8ஐக் குறிக்கும் “வ” 1/4 ஐக் குறிக்கும். 8, 1/4 இரண்டையும் சேர்த்தால் “அவ” என வரும்.

எட்டேகால் லட்சணமே என்றால் “அவ லட்சணமே” எனப் பொருள்படும். எமனேறும் பரி எருமை எமனேறும் பரியே என்றால் “எருமையே” எனப் பொருள் படும். மட்டில் பெரியம்மை வாகனமே என்றால் “மூதேவியின் வாகனமே” என்று பொருள். கூரையில்லா வீடு குட்டிச் சுவர். கூரையில்லா வீடே என்றால் “குட்டிச் சுவரே” என்று பொருள் படப்பாடியுள்ளார்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக