புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 03, 2024 3:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Aug 03, 2024 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Aug 03, 2024 2:22 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்...?  Poll_c10பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்...?  Poll_m10பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்...?  Poll_c10 
53 Posts - 47%
ayyasamy ram
பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்...?  Poll_c10பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்...?  Poll_m10பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்...?  Poll_c10 
47 Posts - 42%
mohamed nizamudeen
பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்...?  Poll_c10பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்...?  Poll_m10பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்...?  Poll_c10 
4 Posts - 4%
prajai
பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்...?  Poll_c10பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்...?  Poll_m10பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்...?  Poll_c10 
2 Posts - 2%
சுகவனேஷ்
பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்...?  Poll_c10பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்...?  Poll_m10பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்...?  Poll_c10 
2 Posts - 2%
mini
பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்...?  Poll_c10பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்...?  Poll_m10பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்...?  Poll_c10 
1 Post - 1%
Guna.D
பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்...?  Poll_c10பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்...?  Poll_m10பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்...?  Poll_c10 
1 Post - 1%
Barushree
பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்...?  Poll_c10பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்...?  Poll_m10பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்...?  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்...?  Poll_c10பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்...?  Poll_m10பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்...?  Poll_c10 
1 Post - 1%
Rutu
பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்...?  Poll_c10பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்...?  Poll_m10பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்...?  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்...?


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 08, 2011 1:31 am

"நிலா, நிலா ஓடிவா, நில்லாமல் ஓடிவா'' என்று தினமும் நாம் கூப்பிடும் நிலா, நம் வீட்டின் தென்னை மரத்துக்கு கொஞ்சம் மேலே இருப்பதுபோல் நம் கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால் அது பூமியிலிருந்து சுமார் நான்கு லட்சத்து ஆறாயிரத்து எழுநூறு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. நிலாவைக் காட்டிலும் இன்னும் அதிக தூரத்தில் நட்சத்திரங்கள் இருக்கிறது.

வீட்டு மாடியில் போய் உட்கார்ந்து, வானத்தைப் பார்த்தால், நட்சத்திரங்கள் கூட நம் கண்ணுக்கு மிக நன்றாகத் தெரிகிறது. "எவ்வளவோ தூரத்திலிருக்கும் நிலா மிக நன்றாகத் தெரிகிறது. ஆனால் ரோட்டில் வரும் பஸ்சின் நம்பர் சரியாக தெரியமாட்டேங்குது, நியூஸ் பேப்பரிலுள்ள சின்ன எழுத்துக்கள் சரியா தெரியமாட்டேங்குது, செல்போனிலுள்ள போன் நம்பர் சரியா தெரியமாட்டேங்குது, மருந்து பாட்டிலில் உள்ள காலாவதியாகும் தேதி சரியா தெரியமாட்டேங்குது, அரிசியில் கிடக்கும் கல் சரியா தெரியமாட்டேங்குது.

ஆனால் வயசு மட்டும் இப்பொழுதுதானே நாற்பதைத் தாண்டியிருக்கிறது. இதற்குள்ளாகவா கண் பார்வை குறைந்துவிட்டது? இப்பொழுதே நான் கண்ணாடி போட்டால், வயசாகிவிட்டது என்று எல்லோரும் சொல்லுவார்களே'' என்று நிறைய பேர் நினைப்பது உண்டு.

மேற்சொன்ன பிரச்சினைகள் உள்ள எல்லோருமே, கண் டாக்டரிடமும் டெஸ்ட் பண்ணிக் கொள்ளாமல், கண்ணாடியும் போட்டுக் கொள்ளாமல், நாளையும், பொழுதையும் போக்கிக் கொண்டிருக்கிறார்கள். சிலபேர் படிக்கும்போதோ, செல்போனில் நம்பரைப் பார்க்கும்போதோ மிகவும் கஷ்டப்பட்டு, கண்களை சுருக்கி, போனை கண்ணுக்குக் கிட்ட கொண்டு வந்துதான் நம்பரைப் பார்ப்பார்கள்.

இப்படி கிட்ட வைத்துப் பார்த்தால் தான், இவர்களுக்கு நம்பரும் தெரியும். இந்த மாதிரி பார்ப்பவர்களெல்லாம், கண்ணாடி போடவில்லை என்பதனால், அவர்களுக்கு கண் பார்வை கரெக்டாக இருக்கிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். கண்ணை நன்றாகத் திறந்து பார்ப்பதற்குப் பதிலாக, கண்ணை சுருக்கி, கிட்ட வைத்து பார்ப்பவர்கள் அனைவருக்குமே, பார்வைக் குறைபாடு இருக்கிறதென்று அர்த்தம்.

"எங்க தாத்தா, பாட்டி 80 வயதுக்கு மேலேயும் வாழ்ந்தாங்க. அவங்க யாரும் கண்ணாடி போட்டுக் கொள்ளவில்லையே'' என்று உடனே நீங்கள் கேட்கலாம். அந்தக் காலத்தில் நம் தாத்தா, பாட்டி மட்டுமல்ல, எல்லோருக்குமே, பெரிசு பெரிசாக இருக்கும் பொருட்களைத்தான் அதிகமாகப் பார்க்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது.

விவசாயத்தில் இருந்தவர்களுக்கு ஆடு, மாடு, வயல், வரப்பு இவைகள் கண்களுக்குத் தெரிந்தால் போதும். கணக்கு புத்தகத்தையும், கம்ப்யூட்டரையும் பார்க்க வேண்டிய தேவை அப்பொழுது இல்லை. அதனால் அவர்களும் `எனக்கு கண் பார்வை சரியாக இல்லை' என்று சொல்லவில்லை. ஒருவேளை அவர்களுக்கும் அந்தக் காலத்தில் கண் டெஸ்ட் பண்ணியிருந்தால், கண்டிப்பாக பார்வைக் குறைபாடு இருந்திருக்கலாம்.

ஆனால் இப்பொழுது எல்.கே.ஜி. வகுப்பிலேயே புத்தகம், டி.வி., கம்ப்யூட்டர் பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. எனவே, கண்ணில் குறை இருந்தால், உடனே தெரிந்து விடுகிறது. அதனால் கண் டெஸ்ட் பண்ணி, கண்ணாடியை போடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது.

நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்தில் இருந்து ஆழ்வார்குறிச்சிக்கு பஸ்சில் போகும்போது, இடது பக்கத்தில் வீடு, மரம், தோப்பு, பம்ப் செட், கட்டிடம் என்று இடையில் எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் பச்சைப் பசேல் என்று நெல் வயல்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பல கிலோ மீட்டர் தூரத்திற்கு நம் கண்ணிற்குத் தெரியும்.

இதை பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும். இந்த நெல் வயல்கள் பத்து, இருபது கிலோ மீட்டர் தூரம் பரவி இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட தூரத்துக்குத்தான் நம்மால் பார்க்க முடியும். பார்வை எத்தனை கிலோ மீட்டர் வரை பாய்ந்தாலும், துல்லியமான, கூர்மையான பார்வை என்பது கொஞ்ச தூரத்துக்குத்தான் இருக்கும்.

ஐந்து அடி ஏழு அங்குலம் உயரமுள்ள ஒருவர், அல்லது ஐந்து அடி ஏழு அங்குலம் உயரத்தில் ஒருவர் நின்று கொண்டு, சமமான ஒரு பரப்பைப் பார்த்தால், அவரால் சுமார் ஐந்து கி.மீ. தூரம் வரை பார்க்க முடியும். சுமார் நூறு மீட்டர் உயரமுள்ள ஒரு மலையின் மீதோ அல்லது ஒரு கட்டிடத்தின் மீதோ நின்று கொண்டு, ஒருவர் சமமான ஒரு பரப்பைப் பார்த்தால் அவரால் சுமார் முப்பத்து ஒன்பது கிலோ மீட்டர் வரை பார்க்க முடியும்.

உலகின் மிக உயரமான, துபாயிலுள்ள புர்ஜ் கலீபா என்கிற கட்டிடத்தில் நின்று கொண்டு, ஒருவர் சமமான ஒரு பரப்பைப் பார்த்தால், அவரால் சுமார் 11 கி.மீ. தூரம் வரை பார்க்க முடியும். கண்ணிலிருந்து சுமார் முப்பதில் இருந்து, நாற்பது செ.மீ. தூரத்தில் பேப்பரையோ, புத்தகத்தையோ வைத்துப் படித்தால், அவருக்கு கண் பார்வை சரியாக இருக்கிறதென்று அர்த்தம்.

இதற்குப் பதிலாக, கண்ணுக்கு ரொம்ப கிட்ட வைத்துப் பார்த்தாலோ, அல்லது ரொம்ப தள்ளி வைத்துப் பார்த்தாலோ அவருக்கு கண் பார்வையில் குறைபாடு இருக்கிறதென்று அர்த்தம். மனிதனைப் போன்று, பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் துல்லியமான, கூர்மையான கண் பார்வை கண்டிப்பாக தேவை.

குறிப்பாக பறவைகளுக்கு கண் பார்வை, மிக மிக நன்றாக தெளிவாக இருக்க வேண்டும். அதனால்தான், கழுகு எப்படி இருக்கும் என்று கேட்டால், "இரண்டு கண், இரண்டு இறக்கை உள்ளதுதான் கழுகு'' என்று சொல்வார்கள். கழுகுக்கு கண்கள் அந்த அளவுக்கு முக்கியம். உடலை ஒப்பிடும்போது, மிகப்பெரிய கண்களை உடையவை பறவைகள்.

யானையின் உடலை ஒப்பிடும்போது, அதன் கண்கள் மிக மிகச் சிறியவை. தரையில் வாழும் முதுகெலும்புள்ள பிராணிகளில் மிகப்பெரிய கண்களை உடைய பிராணி நெருப்புக்கோழி ஆகும். இதன் கண்களின் நீளம் சுமார் 5 செ.மீ. ஆகும். நாற்பத்தி ஆறு வயது நிரம்பிய அந்தப் பெண்மணி, கண்ணாடி அணிந்திருந்தார்.

"எத்தனை வயதிலிருந்து கண்ணாடி போடுகிறீர்கள்? எதற்காகப் போடுகிறீர்கள்? கிட்டத்தில் இருக்கும் பொருள் தெரியவில்லையா? அல்லது தூரத்தில் இருக்கும் பொருள் தெரியவில்லையா?" என்று கேட்டேன். "எனக்கு பதினாறு வயது ஆகும்போது, ஸ்கூலில் பவுதீக வகுப்பில், வெர்னியர் காலிப்பர் கருவியிலுள்ள சிறிய அளவுகளை என்னால் சரியாக பார்த்து சொல்ல முடியாமல் போனது.

டீச்சர் என்னை `முதலில் கண் டாக்டரைப் போய்ப் பார்த்து, கண்ணை நல்லா டெஸ்ட் பண்ணிக்கொண்டு வா' என்று அனுப்பி விட்டார்கள். கண் டாக்டரைப் பார்த்தேன். டெஸ்ட் பண்ணிய பிறகு, படிப்பதற்கும், எழுதுவதற்கும் கண்டிப்பாக கண்ணாடி போட்டுத்தான் ஆகவேண்டும் என்றார். அன்றிலிருந்து இன்றுவரை சுமார் முப்பது ஆண்டுகளாக படிப்பதற்கும், எழுதுவதற்கும் கண்ணாடி போட்டுக்கொள்கிறேன்.

மற்ற நேரங்களில் கண்ணாடி உபயோகிப்பதில்லை. இரவிலும் உபயோகிப்பதில்லை'' என்றார் அந்தப்பெண். "நன்றாகத்தான் சாப்பிடுகிறேன். உடம்பில் எந்த நோயும் இல்லை. ஆனால் திடீரென்று, இப்பொழுது பேப்பர் படிக்கும்போது, எழுத்துக்கள் தெளிவாக தெரியமாட்டேங்குது. கொஞ்சம் மங்கலாகவும் தெரிகிறது.

ஆனால் தூரத்திலுள்ள பொருட்களெல்லாம் கரெக்டாகத் தெரிகிறது. கண் டாக்டரைப் பார்த்து விடலாமே'' என்று கண் ஆஸ்பத்திரிக்குச் சென்றேன். `உங்களுக்கு வயது என்ன ஆகிறது' என்று டாக்டர் கேட்டார். நாற்பது என்று சொன்னேன். ஓஹோ, நாற்பது வயதா! உங்களுக்கு `சாளேஸ்வரம் அதாவது வெள்ளெழுத்து பிரச்சினை' வந்திருக்கிறது. வெள்ளெழுத்து என்றால் என்னவென்று தெரியுமா! இதற்கு முன் கேள்விப்பட்டிருக்கிறீர்களா! என்று கண் டாக்டர் கேட்டார்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்...?  Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 08, 2011 10:23 am

பகிர்விக்கு நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்...?  1357389பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்...?  59010615பார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்...?  Images3ijfபார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்...?  Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக