புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10 
2 Posts - 1%
prajai
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10 
432 Posts - 48%
heezulia
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10 
29 Posts - 3%
prajai
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி


   
   

Page 9 of 13 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12, 13  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 5:28 am

First topic message reminder :

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Uyir

பழங்கால இந்தியாவில் செக்ஸை வாழ்க்கையின் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாக நினைத்தார்கள். சாப்பிடுவது, தூங்குவது மாதிரி அதுவும் ஒரு விஷயம். அதை ஒதுக்கி வைக்கவோ, ரகசிய பொருளாகப் பதுக்கி வைக்கவோ அவர்கள் நினைத்ததில்லை. ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே அரும்பும் அன்பு, காதலாக மலர்ந்த பிறகு அவர்கள் இணைந்து நடத்தும் திருமண வாழ்க்கை இந்த உறவில்தான் முழுமை பெறுகிறது என்பது அவர்களுக்குப் புரிந்திருந்தது.

இல்லறத்தில் ஆண், பெண் இடையே இருக்கும் உறவு, ஒளிவு மறைவில்லாதது. அன்பு செலுத்துவது, உண்மையாக இருப்பது, மரியாதை தருவது என எதுவுமே ஒன்வே டிராஃபிக் இல்லை. செக்ஸிலும் இப்படித்தான்... அது இருவரின் தேவைகளையுமே முழுமையாக பூர்த்தி செய்யும்படி அமைய வேண்டும் என்றனர் ரிஷிகள். ‘பெண் என்பவகள் ஆணுக்கு படுக்கையில் சந்தோஷம் தருவதற்காகப் படைக்கப்பட்டவகள் இல்லை. அந்த உறவில் சுகம் தேடும் உரிமை அவளுக்கும் இருக்கிறது. அந்த இன்பம் கிடைக்காதபட்சத்தில் அவகள் திருமண உறவுக்கு வெளியில் அதைத் தேட தயங்க மாட்டாகள். அதனால் குடும்பத்தில் மட்டுமில்லை... சமூகத்திலும் பிரச்னைகள் உருவாகும்’ என்பது அந்த ரிஷிகள் சொன்ன வாக்கு.

முடிவாக அவர்கள் சொன்ன நீதி... ‘இந்த உறவில் கொடுப்பவர், எடுப்பவர் என்ற வித்தியாசம் இல்லை!’ நமது ரிஷிகள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து வைத்திருந்த உண்மைகளை நாற்பது வருடங்களுக்கு முன்புதான் தீவிர ஆராய்ச்சிகளின் வாயிலாக மேற்கத்திய நாகரிகம் புரிந்து கொண்டிருக்கிறது.
வாழ்க்கையின் முழுமையான பரிமாணத்தை நமது மதிப்புக்குரிய முன்னோர் காட்டினார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நமது இந்த மரபு வேரைப் பிடுங்கி எறிந்து, "பாலுணர்வு" என்பதையே ஒரு மிகப் பெரிய கவர்ச்சி அம்சம் போல ஆக்கி, "ஒருவனுக்கு ஒருத்தி" என்பதன் புனிதத்தையும் இல்லாமல் ஆக்கி, அவர்களது "டேக் இட் ஈஸி" கலாசாரத்தை நமக்கும் விதைத்து விட்டனர்.

இதிலிருந்து மீண்டு வர என்ன வழி? நமது பாரம்பரிய ஞானத்தின் வேர்களைத் தேடி, செக்ஸ் தொடர்பான சிக்கல்களுக்கு அறிவியல்ரீதியான தீர்வுகளைக் காணும் முயற்சி தான் இந்தத் தொடர். மிகுந்த கண்ணி யத்தோடும், அளவற்ற ஜாக்கிரதை உணர்வோடும் இந்தத் தொடரை அணுகியிருக்கிறார் தன் ஆராய்ச்சிகளின் மூலம் உலகளவில் புகழ்பெற்ற செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி.

இந்தத் தொடரைப் படிக்கும் எவரும் "உணவு, தூக்கம் போலவே பாலுணர்வும்கூட உயிர்களின் தவிர்க்கமுடியாத அடிப்படைத் தேவை" என்பதையும், அதுபற்றி முழுமையாகத் தெரிந்து கொகள்வது எத்தனை அவசியம் என்பதையும் தெளிவாக உணர்வார்கள்.

அது ஒரு பெட்ரூம்... பகட்டான அலங்காரங்களோ, திகட்ட வைக்கும் ஆடம்பர வசதிகளோ இல்லாத மிகச் சாதாரணமான பெட்ரூம். ஆனாலும் அது சரித்திரத்தில் இடம் பிடித்து விட்டது. வெறும் பத்து ஆண்டுகளில் பத்தாயிரம் முறை பலபேர் வந்து பரவசமான கலவி இன்பத்தை அனுபவித்த படுக்கை அறை என்ற பெருமையை அது பெற்றது.

தங்கள் காதல் மனைவியைக் கட்டியணைத்தபடி வந்த அன்புக் கணவர்கள், கேர்கள் ஃபிரெண்டை முத்தமிட்டபடி நுழைந்த டீன்ஏஜ் காதலர்கள், தனியாக அறைக்குகள் நுழைந்து காத்திருந்து முன்பின் அறிமுகமில்லாத பெண்களை துணையாகத் தேடிக் கொண்டவர்கள், ‘வயது எங்கள் உணர்ச்சிகளுக்கு அணை போடவில்லை’ என்று நிரூபிக்கும் விதமாக தங்கள் மனைவியோடு வந்து அந்தப் படுக்கையைப் பயன்படுத்திக் கொண்ட கிழவர்கள், ‘எங்களுக்கு ஜோடியே தேவையில்லை’ என்ற படி தனி ஆட்களாக வந்து சுய இன்பத்தில் பரவசப்பட்டவர்கள்... இப்படி பலவிதமான மனிதர்களை அந்த அறை பத்து ஆண்டுகளில் பார்த்திருக்கிறது.

வெளிச்சம், இருட்டு என்ற வித்தியாசம் எல்லாம் அவர்களில் பலருக்கு இல்லை. ஒரேநாளில் வெவ்வேறு நேரங்களில் விதம்விதமான உணர்வுகளுடன் அந்த அறைக்கு பல ஜோடிகள் வந்தன. படுக்கை விரிப்பை மாற்றக்கூட அவகாசம் தராமல், அடுத்தடுத்து பத்து ஜோடிகள் வந்து போனதும் நடந்திருக்கிறது.
இவ்வளவு பிஸியான அந்த அறை.. ஒரு நட்சத்திர ஹோட் டலின் ‘தேனிலவு சூட்’ அல்லது ஏதாவது குளிர்பிரதேச சுற்றுலா தல ரிஸார்ட்ஸாக இருக்கும் என்று தானே நீங்கள் நினைத்தீர்கள்.

ஸாரி... அது தப்பு. அந்த அறை, ஒரு மருத்துவக் கல்லூரியின் பரிசோதனைக் கூடம். அங்கு இப்படி பத்தாயிரம் தடவை பலர் பரவச நிலையை அனுபவித்தது, ஓர் ஆராய்ச்சிக்காக! அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் இருக்கும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி... அதில் இருக்கும் மகப்பேறு மற்றும் பெண்கள்நலப் பிரிவில்தான் நடந்தது இந்த ஆராய்ச்சி.

‘இதில் போய் என்ன ஆராய்ச்சி!’ என முகத்தைச் சுளிப்பவர்கள், தவறாமல் அடுத்த பாராவுக்கு போங்கள்.

இந்த வித்தியாசமான ஆராய்ச்சி நடந்தது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால்... ‘இருண்ட கண்டம்’ என பெயர்பெற்று மர்மப் பிரதேசமாக இருந்த ஆப்பிரிக்க கண்டத்தைக்கூட மனித இனம் அலசி ஆராய்ந்து விட்ட நேரம் அது. எங்கோ தொலைதூரத்தில் இருந்தபடி மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களை
வகைப்படுத்தி பெயர் வைக்கும் அளவுக்கு அறிவியல் அப்போது உச்சத்தில் இருந்தது.

ஆனால், அப்போதும் புரியாத புதிராக இருந்தது, ஆண்பெண் நிகழ்த்தும் அந்தரங்க உறவின் அர்த்தங்கள். அந்த உறவின்போது எந்தெந்த உறுப்புகளுக்குகள் என்னவிதமான மாற்றங்கள் நிகழ்கின்றன? ஒட்டுமொத்த உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ்கின்றன? புதிய உயிரை உருவாக்கி அடுத்தடுத்த தலைமுறைகளை உலகுக்கு படைக்கும் ஆதார சக்தி எப்படி ஆணிடமிருந்து பெண்ணுக்குப் பரிமாறப்படுகிறது? பிரபஞ்சத்தை சிருஷ்டித்ததாகக் கூறப்படும் கடவுகள், ஒவ்வொரு ஜீவனையும் உயிர் கொடுத்து உருவாக்கும் பணியை மட்டும் ஏன் அந்தந்த ஜீவராசிகளிடமே கொடுத்தார்? அந்த உறவு என்பது வெறுமனே உயிர்களை உருவாக்க மட்டும்தானா? மனித இனத்தை எடுத்துக் கொண்டால், இதில் ஆணின் பங்கு என்ன... பெண்ணின் பங்கு என்ன? சுருக்கமாக சொல்லப் போனால் ஆண்களும், பெண்களும் இதை ஏன் தொடர்ந்துகொண்டே இருக்கிறார்கள்? இந்த உறவில் பலபேருக்கு நாட்டம் இல்லாமல் போவதற்கும், சிலர் மட்டும் எப்போதும் இதே நினைப்புடன் வெறியோடு திரிவதற்கும் காரணம் என்ன? பலபேருக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போவதற்கு என்ன காரணம்?



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 10:54 am

ஹோமோசெக்ஸ் பிரியர்களுக்கு உளவியல் ரீதியாக ஒரு பெரும் மனச்சிக்கல் இருக்கிறது. "எல்லோரும் தனக்கு எதிராக இருப்பதாக" (Victim Mentality) நினைக்கும் மனோபாவம்தான் அது. இந்த எண்ணம் இவர்களுக்கு இருப்பதினால்தான் இவர்கள், பொதுமக்களுக்கு அருவருப்பூட்டுகிற, முகம் சுளிக்க வைக்கிற செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆகவே அந்த எண்ணத்தை இவர்கள் விட்டொழிக்க வேண்டும். அப்போதுதான் சமுதாயத்திடம் இவர்களும், இவர்களிடம் சமுதாயமும் இணக்கத்துடன் நெருங்க முடியும். இந்த எண்ணத்தை விட்டொழிக்க, இவர்கள் தங்கள் மீது தாங்களே நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போதுதான் மனம் அமைதியாக இருக்கும். சமுதாயமும் இவர்களை ஒதுக்காது. பயந்து ஓடுபவனைத்தானே நாய் துரத்தும்?

ஹோமோசெக்ஸ் விருப்பத்தைக் குற்றமாகக் கருதி, சமுதாயம் தன்னை ஒதுக்கிவைக்கிறது என்று உள்ளுக்குள்ளேயே குமைந்து கல்வி கற்றல், பணி புரிதல், சம்பாதித்தல் போன்றவற்றிலிருந்தும், குடும்பப் பொறுப்புகளிலிருந்தும் விலகி நின்றால் அதனால் எந்த பயனும் இல்லை. சரியாக சொல்லப்போனால், சமுதாயத்திலிருந்து இன்னும் அந்நியமாகவே நேரிடும்.

ஓரினச்சேர்க்கை விருப்பத்தை மருத்துவச் சிகிச்சை மூலம் மாற்ற முடியும் என்ற கருத்தும் தவறானது. ஓரினச் சேர்க்கையில் ஒருவர் ஈடுபட, அறிவியல்ரீதியான காரணங்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படாதபோது, எதை வைத்து இவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்?

உலகில் பல மருத்துவ முறைகளில் பரிசோதனை அளவில் இதற்கான சிகிச்சை சோதிக்கப்பட்டது. ஆனால், எதுவுமே வெற்றி பெறவில்லை. இன்னொரு விஷயம்... அறிவியல் பூர்வமாக ஹோமோசெக்ஸை ஒரு நோயாக மருத்துவ உலகம் கருதாத நிலையில், எதற்காக இதற்கு சிகிச்சை செய்ய வேண்டும்? ஆனால், ஒரு ஓரின சேர்க்கையாளன் தன்னைத்தானே குற்றவாளியாகக் கருதிக்கொண்டு, மன சஞ்சலத்துடன் இருக்கும்போது அவனுக்கு அமைதியாக வாழ உளவியல்ரீதியிலான சிகிச்சையை, ஒரு ஆறுதலுக்காக தரலாம். மற்றபடி அது நோயே அல்ல!



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 11:13 am

வாழ்க்கை முழுவதும் ஒரே வேலையை ஒரே ஸ்டைலில் செய்வது சிலருக்கு பிடித்தமானதாக இருக்கலாம். ஆனால், சிலருக்கு அது "போர்" அடிக்கும் ஒரு விஷயம். ஸ்டைலை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதேபோலத்தான் செக்ஸ் விஷயத்திலும்! ஆண், பெண் பிறப்புறுப்புகளைப் பயன்படுத்தி செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபட்டு இன்பம் பெறுவதில் ஆர்வமுடையவர்கள் ஒரு வகை என்றால்... விதவிதமான ஸ்டைலில் உறவு கொண்டு இன்பம் துய்க்கப் பார்ப்பவர்கள் இன்னொரு வகையினர். பிறப்புறுப்புக்களைப் பயன்படுத்தி செக்ஸ் உறவு கொள்வதுதான் இயல்பான அதாவது நார்மல் செக்ஸ் (Normal Sex) என்று உலக மக்களில் கணிசமான பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அது அப்படித்தானா என்பதைப் பற்றி பிறகு பார்க்கலாம். அதற்கு முன்பு, இயல்புக்கு மாறான அதாவது "அப்நார்மல் செக்ஸ்" (Abnormal Sex) பற்றி சில விஷயங்களைப் புரிந்துகொள்வது மிக அவசியம்!

காம இச்சையைத் தீர்த்துக் கொள்ளும் செக்ஸ் செயல்பாட்டின் போது சிலருக்கு வித்தியாசமான, சமுதாயமும் சட்டமும் ஏற்றுக் கொள்ளாத செக்ஸ் தூண்டுதல் தேவைப்படும். இதுபோன்ற வித்தியாசமான செக்ஸ் செயல்பாடுகள் ஒருகாலத்தில், "அப்நார்மல் செக்ஸ் பிஹேவியர்", "செக்ஸுவல் பர்வெர்ஷன்", "டிவியன்ட்", "வேரியன்ட் பிஹேவியர்" என்று பலவாறு குறிப்பிடப்பட்டு வந்தது. கடைசியாக "பாரபீலியா" (Paraphilia) என்பதுதான் மிகச் சரியான பெயர் என்று செக்ஸ் ஆராய்ச்சியாளர்கள் இப்போது இறுதி முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

அதென்ன... பாரபீலியா?!

வியன்னாவில் இருந்த "வில் ஹெல்ம் ஸ்டெக் கெல்" என்ற புகழ்பெற்ற சைக்கோ தெரபிஸ்ட் 1925&ம் ஆண்டு, செக்ஸ் தொடர்பான புத்தகம் ஒன்றை எழுதினார். இதில், வித்தியாசமான செக்ஸ் செயல்பாடுகளைப் பற்றிய விளக்கங்களை குறிப்பிட்டிருந்த வில்ஹெல்ம், அதற்கு "பாரபீலியா" எனும் வார்த்தையைப் பயன்படுத்தி இருந்தார். இந்தச் சொல் கிரேக்க மொழியிலிருந்து வந்தது. "பார" என்பதற்கு பக்கத்தில் என்று அர்த்தம். அதேபோல் "பீலாஸ்" எனும் பதத்துக்கு "நேசித்தல்" என்று அர்த்தம். இந்த "பீலாஸ்"தான் பீலியா என்று மாறிவிட்டது.

பண்டைய கிரேக்கத்தில் பாரபீலியா மாதிரியான வித்தியாசமான செக்ஸ் செயல்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. "குடும்பம் என்கிற கட்டுமானம் சிதையாமல் எந்தவிதமான செக்ஸ் செயலில் ஈடுபட்டாலும் தவறே இல்லை" என்ற கோணத்தில்தான் இச்செயல்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. அதாவது, மனைவியுடன் வித்தியாசமான செக்ஸ் செயல்பாடுகளில் மனமுவந்து ஈடுபடலாம். ஆனால், மனைவியை தவிர்த்துவிட்டு வேறு பெண்களிடம் இதேபோல் இன்பம் பெறச் செல்வது தவறு என்று அப்போது கருதப்பட்டது.

பாரபீலியா எனும் பெயர் 1925&ம் ஆண்டிலேயே குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவக் கல்லூரியில் செக்ஸாலஜி துறையின் தலைமைப் பேராசிரியர் ஜான்மணி என்பவர்தான் 1950&ம் ஆண்டுக்குப் பிறகு பாரபீலியா என்பதைப் பெரிதும் புழக்கத்தில் கொண்டு வந்தார்.

"அமெரிக்க சைக்யாட்ரிக் அசோஷியேஸன்" ஆண்டுதோறும் மனநோய் தொடர்பாக DSM (Diagnostic and Statistical Manual of Mental Disorders) என்கிற ஒரு பட்டியலை வெளியிடுவார்கள். அப்படி 1980&ம் ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் முதன் முதலாக "பாரபீலியா" என்கிற பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக இந்த சொல் இன்னும் புகழடைந்தது.

பாரபீலியா குறிப்பிடும் வித்தியாசமான செயல்பாடுகள் என்ன? பெரும்பாலும் ஒரு பெண் எந்த நிலையில் இருந்தாலும் ஒரு ஆண் செக்ஸ் தூண்டுதல் அடைந்துவிடுவான். அரைகுறை ஆடையுடனோ அல்லது முழு நிர்வாணமாகவோ அவள் இருந்தால்தான் உணர்ச்சிவசப்பட முடியும் என்கிற கட்டாயம் இருக்காது.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 11:13 am

ஆனால், சிலர் இந்தப் பொதுப்பண்புக்கு விதிவிலக்காக இருக்கிறார்கள். "இப்படி இருந்தால் மட்டும்தான்... இப்படிச் செய்தால் மட்டும்தான்" செக்ஸ் மூலம் இன்பத்தை அடைய முடியும் என்கிற கட்டாயம் அவர்களுக்கு இருக்கும். ஆம்... பாரபீலியா என்பதே ஒரு கட்டாயத்தை அடிப்படையாக கொண்டதுதான். இவர்களுக்கு சட்டமும் சமுதாயமும் ஏற்றுக் கொள்ளாத குறிப்பிட்ட ஒரு நடவடிக்கை மட்டும்தான் செக்ஸ் தூண்டுதலை தரும். அது இல்லாதபட்சத்தில் அவர்கள் செக்ஸ் தூண்டுதல் அடையவே மாட்டார்கள்.

உடல் உறவுக்கு முன்பு முத்தமிடுதல், செல்லமாக கடித்தல், அணைத்தல், அன்பாக வருடுதல் போன்ற முன்விளையாட்டில் (Foreplay) தம்பதியர் ஈடுபடுவது சகஜம். சிலர் இப்படி முன்விளையாட்டில் ஈடுபடாமலேயேகூட உணர்ச்சிவசப்படுவதும் உண்டு.

ஆனால், பாரபீலியா விருப்பமுடையவர்களுக்கு இது போதாது. பெண்ணை வலியால் துடிக்க வைப்பது மாதிரியான செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபட்டால்தான் அவர்களுக்கு உணர்ச்சி ஏற்படும்; திருப்தி ஏற்படும். இது, ஓர் உதாரணம்தான். இதுபோல ஐம்பதுக்கும் மேலான வகைகள் பாரபீலியாவில் உள்ளன. ஒரு சிலவற்றை மட்டும் பார்ப்போம். பண்டைய கிரேக்கத்தில் கோயில்களில் கடவுளுக்கு உரிய சிறப்பு பூஜைகளின்போது, ஆண் பூசாரிகள் பெண் உடையையும், பெண் என்றால் ஆண் உடையையும் அணிந்து கொள்ளும் வழக்கம் இருந்தது. இதை, "கிராஸ் டிரஸ்ஸிங்" என்று சொல்வதுண்டு. அத்தகைய சிறப்பு பூஜைகளின்போது சிலர் மட்டும் தன்னைத்தானே துன்புறுத்தி ரத்தம் வரவழைத்துக் கொண்டு தங்கள் பக்தியை வெளியிடுவார்கள். இன்னும் சிலர் மற்றவர்களைத் துன்புறுத்தி அவர்களை வலியில் துடிக்கவைத்து ரத்தம் வரவழைத்துத் தங்கள் பக்தியை வெளியிடுவார்கள். இது மட்டுமின்றி, கிரேக்க புராணங்கள், இலக்கியங்களில் மற்ற உயிரினங்களுடன் உறவு வைத்துக் கொள்வதைப் பற்றி அற்புதமாக வருணித்துள்ளார்கள். குழந்தையைத் துன்புறுத்தி இன்பம் காணும் செய்திகள் இன்றைக்கு ஏடுகளில் நாம் காணும் ஒன்றாக இருக்கிறது. இதையெல்லாம் நாம் கேவலமான, மோசமான செயலாக நினைக்கிறோம். அதைத் தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதுகிறோம். ஆனால், அன்றைய கிரேக்க சமுதாயத்தில் குழந்தையைத் துன்புறுத்தி இன்பம் பெறுதல் சகஜமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.

ஜுலியஸ் சீஸருக்கு ஆண்களுடனும், பெண்களுடனும், பிற உயிரினங்களுடனும் உறவு கொள்ளும் பழக்கம் இருந்ததை வரலாற்றின் பக்கங்கள் சொல்கின்றன.
இவை எல்லாமே "பாரபீலியா" என்கிற வித்தியாசமான செக்ஸ் செயல்பாடுகளின் வெளிப்பாடுகளே. "பாரபீலியா" செக்ஸ் நடவடிக்கைகளில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது "சேடிஸம்" (Sadism) பற்றித்தான்.

"சேடிஸம்" எனும் பெயருக்கு ஒரு பின்னணி உண்டு. "மார்க்கிஸ்-டி-சேடு" (1740&1814) என்ற பிரெஞ்சு எழுத்தாளர் மதங்களை எதிர்த்துத் தீவிரமான கட்டுரைகளை எழுதி வந்தவர். அதேசமயம் இவர், குழந்தைகளைத் துன்புறுத்தி இன்பம் காண்பது, ஆசன வாய் வழியாக செக்ஸில் ஈடுபட்டு இன்பம் அடைவது, குழந்தைகளையும் பெண்களையும் சாட்டையால் அடித்து இன்பம் காண்பது போன்றவற்றை வரவேற்றதுடன் அதுபற்றி பாராட்டியும் எழுதி வந்தார்.

"மார்க்கிஸ்-டி-சேடு"வின் இந்த நடவடிக்கைளை எல்லாம் பார்த்து, இந்த கொடூரமான செக்ஸ் செயல்பாடுகளுக்கு "சேடிஸம்" என்ற பெயரைச் சூட்டினார், கிராஃப்ட் எபிங் என்ற ஆஸ்திரிய நாட்டு உளவியல் நிபுணர்.

சேடிஸ மனப்பான்மை கொண்டவர் களுக்கு பிற செயல்பாடுகள் எதுவும் செக்ஸ் உணர்வை தூண்டவோ, இன்பம் தரவோ செய்யாது. துன்புறுத்திக் கதறக்கதற துடிக்க வைத்தால்தான் இவர்கள் இன்பம் பெறுவார்கள்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 11:14 am

மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த மார்க்கிஸ்-டி-சேடு&வும் இப்படிப்பட்டவராகத்தான் இருந்தார். மனைவி முதல் வேலைக்காரர்கள், சேவகர்கள் வரை எல்லோரிடமும் கொடூரமான முறையில் செக்ஸில் ஈடுபட்டு இன்பம் அடைந்தார். ஒருகட்டத்தில் இவரது கொடூரத்தைத் தாங்க முடியாமல் மனம் வெறுத்துப்போன இவருடைய மனைவி, மார்க்கிஸை விவாகரத்து செய்துவிட்டாள்.

ஆனால், மார்க்கிஸ் அடங்கவில்லை. விலைமகளிரிடம் சென்று சேடிஸ முறையில் இன்பம் அடைந்தார். ஒருமுறை இவர் இப்படி காட்டுத்தனமாக நடந்துகொண்டதால் ஒரு விலைமாது இறந்தே போனார். இதற்காக சிறையில் அடைக்கப்பட்ட மார்க்கிஸ், அங்கிருந்து தப்பித்து வேறு நாட்டுக்கு ஓடினார். அங்கும் அவரது செக்ஸ் கொடூரங்கள் தொடரவே, தஞ்சம் புகுந்த நாடும் அவரை விரட்டியடித்தது. மறுபடியும் சொந்த நாட்டுக்குத் திரும்பிய மார்க்கிஸ் இரண்டு புத்தகங்கள் எழுதினார். இந்த இரண்டு புத்தகங்களும் அந்நாளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

1801-ல் மாவீரன் நெப்போலியன் மார்க்கிஸ்-டி-சேடுவை கைது செய்ய ஆணையிட்டார். இதனைத் தொடர்ந்து சிறைத் தண்டனை பெற்று தனிமை, விரக்தி போன்றவற்றால் உருக்குலைந்து நாதியற்று கடைசியில் மரணத்தைத் தழுவினார் மார்க்கிஸ்-டி-சேடு.

அந்நாட்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த இரண்டு புத்தகங்களுமே அச்சு வாகனம் ஏறாத கையெழுத்துப் பிரதிகள் என்றால் நம்ப முடிகிறதா? 1904&ம் ஆண்டில்தான் அந்த இரண்டு கையெழுத்துப் பிரதிகளும் அச்சடித்த புத்தகங்களாயின!

இவருடைய வாழ்க்கை மற்றும் எழுத்துகளைத் தழுவி ஹாலிவுட் படங்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது!

இயல்புக்கு மாறான செக்ஸ் ஆர்வமுடைய "பாரபீலியா" என்ற குணாதிசயத்தில் "சேடிஸம்" என்ற ஒன்று இருப்பது போலவே, அதன் ஒன்றுவிட்ட தம்பியாக இருக்கிறது "மஸோசிஸம்" (Masochism). இதைப்பற்றியும் குறிப்பிட்டே ஆகவேண்டும். மஸோசிஸம் என்ற பெயரை முதன்முதலில் பயன் படுத்தியவரும் கிராப்ட் எபிங்தான். மஸோசிஸம் என்ற பெயர் எப்படி வந்தது?

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய காலகட்டத்தில் ஆஸ்திரியா நாட்டின் மன்னர் குடும்பத்தில் பிறந்த ஒருவரின் பெயர்& "கவுன்ட் லெப்போல்டுவான் சாஸர் மேஸோ" என்பதாகும். மேஸோ, பிறந்த போதே தாயை இழந்து விட்டதால் "ஹன்ஸ்கா" என்ற ஆயாவிடம்தான் வளர்ந்தார். தினமும் அவரை கதை சொல்லித் தூங்க வைப்பாள் இந்த ஆயா. இந்தக் கதைகள் அத்தனையும் திகில் கதைகள்!

மேஸோவின் தந்தை, கறாரான ஒரு போலீஸ் அதிகாரி. இவரும் தன் பங்குக்கு போலீஸ் உத்தியோகத்தில் சந்தித்த பல கொடூரமான, கதைகளை மகனிடம் வந்து சொல்வார். வளரும் பருவத்தில் பீதியூட்டுகிற இதுபோன்ற கதைகளைக் கேட்டு கேட்டு... நாளடைவில் பாரபீலியா குணாதிசயம் கொண்டவராக மாறிப்போனார் மேஸோ. பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளராகவும், சட்டத் துறையில் டாக்டர் பட்டம் பெற்ற பிறகும்கூட இவருக்கு செக்ஸில் வித்தியாசமான முறையில் இன்பம் காண்பதில்தான் அதிக நாட் டம் இருந்தது. தன்னைத் துன்புறுத்தச் சொல்லி தன் மனைவியை வற்புறுத்தி, அதன் மூலம் இன்பம் அடைந்தார். இது பிடிக்காமல் இவர் மனைவி ஓடிப் போய்விட்டாள். மீண்டும் அடுத்தடுத்து, மூன்று பெண்களைத் திருமணம் செய்து கொண்டார் மேஸோ. அவர்களும் மேஸோவின் செக்ஸ் கொடூரம் தாங்க முடியாமல் அவரை விட்டு விலகி ஓட... திருமணம் செய்து கொள்ளாமல் ஆசை நாயகிகளை வைத்துக் கொள்ள ஆரம்பித்தார். 1886-ம் ஆண்டு "வீனஸ் இன் ஃபர்" என்றொரு புத்தகத்தை எழுதினார் மேஸோ. இந்தப் புத்தகத்தின் நாயகன் ஷவரின், நாயகி வாண்டா.

இந்தப் புத்தகம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம், ஷவரின் ஒரு பலாச்சுளை என்று வாண்டா நினைத்துக் கொண்டிருக்க, "நான் பலாச்சுளையல்ல, பலாமுள்" என்று தனது உண்மை முகத்தைக் காட்டிவிடுவான் ஷவரின்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 11:15 am

தன்னைத் துன்புறுத்தச் சொல்லி வாண்டாவை நிர்ப்பந்திப்பான். அவளும் அவன் விருப்பத்தை நிறைவேற்றினாள். ஆம்... அடி பின்னி எடுத்தாள்! இதுபோன்ற செயல்பாடுகளின்போது வாண்டாவை தோலாடை போன்ற ஒரு வகை உடையை அணிந்து கொள்ளச் சொல்லி, உரோமங்களால் ஆன (Fur) துணியால் தன்னை அடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவான் ஷவரின். அப்போதுதான் அவனுக்கு செக்ஸ் தூண்டுதல் அடைய முடியும். இது மேஸோவின் கதையில் வரும் சம்பவம்தான் என்றாலும்... அந்நாட்களில் தனது சொந்த அனுபவத்தைதான் உருமாற்றி, மேஸோ எழுதியிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஏனெனில், மேஸோவின் இம்சைகளுக்குப் பயந்து ஓடிய மனைவிகளின் குற்றச்சாட்டுகளும், இந்தப் புத்தகத்தில் வரும் சம்பவங்களும் ஒன்றாகவே இருந்ததுதான் காரணம்.

எனவேதான் இதுபோன்ற செக்ஸ் செயல்பாடுகளுக்கு மேஸோவின் பெயரையட்டி "மஸோசிஸம்" என்ற பெயர் வந்தது. மேலே குறிப்பிட்ட "வீனஸ் இன் ஃபர்" என்கிற நாவல் மூன்றுவிதமான திரைப்படங்களாக ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டது. மூன்றாவது முறையாக 1994&ல் எடுத்தார்கள். அதே ஆண்டு ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழாவில் "வீனஸ் இன் ஃபர்" திரைப்படம் விருது வாங்கியது.

இனி "ஃபிராட்டரிஸம்" (Frott eurism) என்றொரு பாரபீலியா குணாதிசயத்தைப் பார்க்கலாம். மக்கள் கூட்டம் கூட்டமாகப் பிதுங்கி வழியும் ஜன நெருக்கடியான இடங்களில், முன்பின் தெரியாத பெண்களை நெருங்கி அவர்களின் மேனியை நுகர்ந்து பார்த்தல், அவர்கள் மீது உரசி இன்பம் பெறுவது போன்றவைதான் பிராட்டரிஸம் எனப்படுகிறது. இந்தக் குணாம்சத்தை விளக்கமாக சொல்லத் தேவையில்லை. நம் மாநகர பேருந்துகளில் தினமும் நடக்கிற திருக்கூத்துதான் இது. நம்ம ஊர் இடிராஜாக்கள் எல்லாம் இப்படிப்பட்ட பிராட்டரிஸ்ட்கள்தான்!

பிராட்டரிஸம் என்பது பிராட்டர் என்கிற ஃபிரெஞ்சு வார்த்தையிலிருந்து வந்தது. "பிராட்டர்" என்றால், உரசல் என்று அர்த்தம்.

இந்த உரசல் இன்பம் பற்றி உலகம் முழுக்க பல்வேறு சம்பவங்களை உதாரணமாக காட்டமுடியும். ஜப்பானில் ஒரு காலத்தில் போக்குவரத்து வாகனமான பஸ், ரயில் களில் இந்தத் தொந்தரவு அதிகமாக இருந்தது. எனவே இதுபோன்ற இடிராஜாக்களிடமிருந்து எப்படி தப்பிப்பது? என்று பல்கலைக்கழக, கல்லூரி மாணவிகளுக்கு, அலுவலக பெண்களுக்கு... பிரத்தியேக வகுப்புகள்கூட எடுக்கப்பட்டன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 11:15 am

டோக்கியோவில் உள்ள ஒரு ஹோட்டல் அதிபரின் பெயர் சாமுயம மோட்டோ. இவரை "இடிராஜாக்களின் தலைவன்" என்றே சொல்லலாம். பெண்களின் பின்புறங் களைக் கையால் தட்டுவதிலும், நெரிசலான பஜார், சந்தை, பொதுக்கூட்டங்களில் பெண்களை உரசி இன்பம் அனுபவிப்பதும்தான் இவரின் பொழுதுபோக்கு.
1994&ம் ஆண்டு "டயரி ஆஃப் ஏ கிராப்பர்" (Diary of a Gropper) எனும் தன் சுயசரிதை புத்தகத்தில் தான் எப்படியெல்லாம் பிராட்டரிஸம் மூலம் இன்பம் அடைந்தார் என்று யம மோட்டோ வர்ணித்திருந்தார். ஜப்பானில் இந்தப் புத்தகம் ரொம்பவும் பாப்புலர்.

இதனைப் படித்த வாசகர்களில் பலர் யம மோட்டோவை சந்தித்து, "எங்களுக்கும் உங்கள் திருவிளையாடலைக் கற்றுத் தாருங்கள்" என்று கேட்டனர். தன்னுடைய அனுபவத்துக்கும், புத்தகத்துக்கும் கிடைத்த மாபெரும் ரத்தின கம்பள வரவேற்பால் உற்சாகமடைந்த யம மோட்டோ... இதற்கென்று ஒரு சிறப்பு மாலை வகுப்புகளை எடுக்க ஆரம்பித்துவிட்டார். இவரது வகுப்பில் சேர கூட்டம் முண்டியடித்தது. இந்த செய்தி அரசாங்கத்தின் காதுகளுக்குப் போக... உடனடியாக யாம மோட்டோவின் வகுப்புகள் தடை செய்யப்பட்டன.

பாரபீலியாவில் இன்னொரு வகை "எக்ஸிபிஷனிஸம்". (Exhibitionism) இந்த வகையினர் தன்னை அறிந்திராத, பெண்களிடம் தனது ஆடையை விலக்கித் தனது பிறப்புறுப்புகளைக் காட்டுவார்கள். அவ்வாறு உறுப்புகளைக் காட்டும்போது அவர்கள் அடையும் அதிர்ச்சியைப் பார்த்து இவர்கள் இன்பம் அடைவார்கள். இதன் மூலம் செக்ஸ் தூண்டுதலை இவர்கள் அடைவார்கள். இப்படிப்பட்ட மனிதர்களுமா இருக்கிறார்கள் என்று உங்களுக்கு திகைப்பும், சந்தேகமும் ஏற்படலாம். நெருக்கமான வீடுகளில் இருக்கும் ஆண்களில் சிலரிடம் இதுபோன்ற குணம் இருக்கத்தான் செய்கிறது.

"வாயரிஸம்" (Voyeurism) என்பது பாரபீலியாவில் இன்னொரு முக்கியமான குணாதிசயம். இவர்கள், மற்றவர்கள் உடல் உறவு கொள்வதை, நிர்வாணமாகக் குளிக்கும் பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் ஒளிந்திருந்து பார்ப்பார்கள். "வாயர்" என்ற பிரெஞ்சு வார்த்தைக்கு, பார்த்தல் என்று பொருள். எல்லா மனிதர்களிடத்திலும் இந்த வாயரிஸம் சிற்சில சதவிகிதங்கள் இருக்கவே செய்கிறது. நீலப்படம் பார்ப்பது, காபரே டான்ஸ் ரசிப்பது, போன்றவைகூட வாயரிஸ குணாம்சத்தின் சாயல்களே!

தெருக்களில் நாய்கள் புணர்ந்து கொண்டு இருப்பதை சிலர் எந்தவிதமான லஜ்ஜையுமின்றி வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதை நாம் கவனித்து இருப்போம். இதுவும் வாயரிஸத்தின் சாயலே. பிறர் குளிப்பதை, பிறர் ஆடை மாற்றுவதை, பிறர் புணர்வதைப் பார்ப்பதன் மூலம் கிடைக்கிற தூண்டுதலைப் போல வேறெந்த நடவடிக்கையும் இந்த வாயரிஸ குணாதிசயக்காரர்களைத் திருப்தி அடைய செய்யாது.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 11:36 am

தாய்லாந்தின் பாங்காக் நகரத்தில் காசு கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே போனால்... இருள் சூழ்ந்திருக்கும் ஒரு ஹாலில் மெல்லிய வெளிச்சத்தில் ஒரு ஆணும் பெண்ணும் அப்பட்டமாக உடல் உறவில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை ரசிக்கலாம். இந்தக் காட்சிகளுக்கு "லைவ் ஷோ" அல்லது "பீப் ஷோ" (Peep show) என்று பெயர். பாங்காக் நாட்டில் அரசாங்கம் சுற்றுலா விருந்தினர்களை சுண்டியிழுப்பதற்கென்று பிரத்தியேகமாக இது போன்ற கேளிக்கை விடுதிகளை அனுமதித்துள்ளது. இப்படி பல நாடுகளில் பல வகைகளில் வாயரிஸ பேர்வழிகளைக் குறிவைத்து பார்கள், கிளப்கள் இருக்கின்றன. ஒளிந்திருந்து ரசிப்பவர்களை "Peeping Tom" என்று தமாஷாக அழைப்பது உண்டு. இந்த பீப்பிங் டாம்க்கு சுவராஸ்யம் ததும்பும் ஒரு கதை உண்டு. அது... அடுத்த இதழில்! வாயரிஸ பேர்வழிகளை, அதாவது மற்றவர்கள் குளிப்பதை, புணர்வதை, உடை மாற்றுவதை மறைந்திருந்து பார்த்து இன்பம் அடையும் பேர்வழிகளை "பீப்பிங் டாம்" (Peeping Tom) என்று செல்லமாக அழைப்பதற்கு தமாஷான ஒரு கதை உண்டு!

கி.பி. 980-1067ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இங்கிலாந்தில் சிற்றரசன் அந்தஸ்தில் ஒருவன் இருந்தான். அவன் பெயர் லியோப்ரிக். "கோவன்ட்ரி" பகுதி மக்களிடம் வரிவசூலிக்கும் அதிகாரம் அவனிடமிருந்தது. மக்களின் தலையில் டன் கணக்கில் வரிச்சுமையை ஏற்றுவதில் அந்த சிற்றரசன்... பேரரசனாகவே இருந்தான்! லியோப்ரிக் விதித்த அதிகப் படியான வரிச்சுமையால் மக்கள் நொந்து கிடந்தனர். லியோப்ரிக்கின் மனைவியான கொடிவா, இதைக்கண்டு பெரும் மனவேதனை அடைந்தாள். தன் கணவரிடம் மக்களின் கவலையை எடுத்துரைத்து, வரிகளைக் குறைக்கச் சொல்லி நச்சரித்தாள். மனைவியின் நச்சரிப்பைத் தாங்கிக் கொள்ளமுடியாத லியோப்ரிக், ஒருகட்டத்தில் மனைவியுடன் ஒரு சமாதானத்துக்கு வந்தான். ""நான் வரிச்சுமையைக் குறைக்கத் தயார். ஆனால், ஒரு நிபந்தனை. மக்களுக்காக வேதனைப்படும் நீ முழு நிர்வாணமாக ஒரு குதிரையில் அமர்ந்து பட்டப்பகலில் கோவன்ட்ரி நகர தெருக்களைச் சுற்றிவர வேண்டும்... செய்வாயா?"" என்று கேட்டான். மனைவியின் வாயை அடைக்க சும்மா ஒரு பேச்சுக்குத்தான் லியோப்ரிக் அப்படி சொன்னான். ஆனால், மக்களின் மீது மாறாத அன்புகொண்ட கொடிவா, அப்படியே செய்வதாக உடனே ஒப்புக் கொண்டாள். தான் சொன்னதிலிருந்து பின்வாங்க முடியாத நிலையில் தானும் சம்மதித்தான் லியோப்ரிக்.

"கோவன்ட்ரி நகரம் முழுவதும் முழுநிர்வாணத்துடன் நகரத் தெருக்களை குதிரையில் கொடிவா வலம் வரப்போவதாக" தண்டோரா போடப்பட்டது! தங்கள் துயர் குறைவதற்காக கொடிவா நிர்வாணமாக நகர்வலம் வரப்போவதை அறிந்த மக்கள், யாரும் அவளை அந்த நிலையில் பார்க்கக்கூடாது என்று சபதம்பூண்டு ஜன்னல், கதவு களை எல்லாம் சாத்திக்கொண்டு வீட்டுக்குள்ளேயே இருந்தனர். கொடிவாவின் நிர்வாணக் கோலத்தைக் காண வெளிச்சமும் வெட்டவெளியுமே காத்திருந்தன.

ஆனால், கொடிவாவுக்கு ஆடைகள் தைத்துத் தரும் "டாம்" என்ற தையற்காரனால் மட்டும் மனதை அடக்க முடியவில்லை. "ஆடை அணிந்திருக்கும் போதே கொடிவா அவ்வளவு அழகென்றால்... ஆடைகளற்று அவள் எவ்வளவு அபாரமாக ஜொலிப்பாள்..." என மனதில் ஜொள்வடிக்க ஆரம்பித்தான். கடைசியில், தன் வீட்டுக் கதவில் சிறு துவாரம் போட்டு, அதன்வழியே கொடிவாவின் நிர்வாணத்தைப் பார்த்து ரசித்தான். டாம் இப்படி ஒளிந்திருந்து பார்த்ததனால்தான்... ஒளிந் திருந்து பார்த்து மனக்கிளர்ச்சி அடையும் வாயரிஸப் பேர்வழிகளுக்கு "பீப்பிங் டாம்" என்ற பெயர் வந்தது.

வாயரிஸம் போதும். பாரபீலியாவில் வரும் இன்னொரு வகையினரைப் பார்க்கலாம். இதற்குப் பெயர் "ஃபெடிஷிஸம்" (Fetishism). இந்த வகையினர் யாரையும் உடல்ரீதியாகத் துன்புறுத்த மாட்டார்கள். பெண்களின் நிர்வாணமோ, அரைகுறையான கவர்ச்சி ஆடைகளோ இவர்கள் மனதில் செக்ஸ் தூண்டலை நிகழ்த்தாது. அப்படியானால் எதுதான் இவர்களைத் தூண்டும்? ஃபெடிஷிஸக்காரர்கள் பெண் உடம்பின் குறிப்பிட்ட ஒரு பகுதியைப் பார்க்கும் போதோ, தொடும்போதோ மட்டுமே செக்ஸ் தூண்டுதல் அடைவார்கள். பெண்கள் குறிப்பிட்ட நிறத்தில் ஆடை உடுத்தியிருப்பதைப் பார்த் தால் மட்டும் சிலருக்கு ஆசை பிறக்கும். "கம் பூட்ஸ்" எனும் காலணியை அணிந்த பெண்களின் கால்களைப் பார்க்கும்போது சிலருக்கு உணர்ச்சி உந்தும். பெண்களின் தலைமுடி அல்லது கால்களில் கொசகொசவென்று இருக்கும் முடியைப் பார்த்தால் மனதில் படபடப்பு எகிறும். இப்படிப்பட்ட கிளர்ச்சியும் தூண்டுதலும் ஏற்பட்டால் மட்டுமே இவர்களால் செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். இதுபோல் காலின் கட்டை விரல், மார்பகம், இடுப்பின் பின்புறங்கள் போன்றவற்றின் மீது மட்டும் சிலருக்கு நாட்டம் இருக்கும். இதுவும் ஃபெடிஷிஸத்தின் ஓர் அங்கம்தான்.

1981ம் வருடம், அமெரிக்க போலீஸார், ஒருவனை கைது செய்தனர். பொது நூலகத்தில் புத்தகம் படித்துக் கொண்டிருக்கும் பெண்களின் கால் களுக்கு இடையே ஊர்ந்து சென்று, அவர் களுக்குத் தெரியாமல் அவர்களின் கால் நகங்களில் நெயில் பாலீஷை போடுவது, பிறகு அதைப் பார்த்து ரசித்துக்கொண்டே சுய இன்பம் அடைவது... இதுதான் அவன் செய்த குற்றம்! இதுவும் ஃபெடிஷிஸத்தின் வெளிப்பாடே.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 11:36 am

பொதுவாக மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான உறவு ஆதிகாலத்திலிருந்தே தொடர்கிறது. ஆதியில் ஆடு, மாடு, குதிரை போன்ற பிராணிகளைத் தன் சுயலாபத் துக்காகப் பழக்கப்படுத்திய மனிதன், கால ஓட்டத்தில் செல்லப் பிராணிகளையும் வளர்க்க ஆரம்பித்தான். இன்றும் நாய், பூனை, முயல் போன்ற பிராணிகள் உலகெங்கும் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படு கின்றன. ஆனால் அபூர்வமாக, வினோதமாக சிலர் விலங்குகளு டன் செக்ஸ் வைத்துக் கொள்ளும் பழக்கம் உண்டு. இதுவும் பாரபீலியாவின் ஒரு வகைதான். இதற்கு "ஜூபீலியா" (zoophilia) என்று பெயர். இதனை "பீஸ்டியாலிடி" (Bestiality) என்றும் அழைப்பது உண்டு. விலங்குகளு டன் உறவு கொண்டால் மட்டுமே இவர்கள் திருப்தியடைவார்கள். ரதி போன்ற பேரழகுப் பெண் இவர்கள் முன் நிர்வாண மாக நின்றாலும் அவளை சீண்ட மாட்டார் கள்; உணர்ச்சிவசப்பட மாட்டார்கள்!

ஜூபீலியா எனும் வார்த்தை, கிரேக்க மொழியிலிருந்து வந்தது. விலங்கை நேசித்தல் என்று இதற்கு அர்த்தம். இந்த வகை செக்ஸ் பழக்கம் ஆதிகாலத்திலிருந்தே மனிதர்களில் சிலருக்கு இருந்திருக்கிறது. எகிப்து நாட்டில் வினோதமான நேர்த்திக் கடன் ஒன்று புழக்கத்தில் இருந்தது. குழந்தை பிறக்காதவர்கள் கோயிலில் இருக்கும் ஆட்டுடன் உறவு கொண்டால், கடவுள் அருளால் குழந்தை பிறக்கும் என்கிற ஐதீகம் இருந்தது. இந்த நேர்த்திக் கடனுக்காகவே எகிப்து நாட்டு கோயில்களில் பிரத்யேகமாக ஆடுகளை வளர்த்து வந்தார்கள் என்று வரலாறு சொல்கிறது.

இந்தியாவில்கூட கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலகட்டத்தில் இதுபோன்ற நேர்த்திக்கடன், பழக்கத்தில் இருந்திருக்கி றது. நம்நாட்டில் உள்ள பல கோயில்களில் இருக்கும் சிற்பங்களில், குறிப்பாக கஜுராஹோவா, கோனார்க் கோயில்களில் விலங்குகளுடன் மனிதன் உறவு கொள்ளும் சிற்பங்கள் நிறைய உள்ளதை நாம் மறந்து விடக்கூடாது.

"ஹிரோடோட்டஸ்" என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர் எழுதிய வரலாற்று நூலில், "எகிப்திய மக்களிடம் ஒரு பழக்கம் இருந்தது. அதாவது, ஆண் முதலையும் பெண் முதலையும் புணர்ச்சியில் ஈடு பட்டுக் கொண்டிருக்கும்போது ஆண் முதலையை கல்லால் அடித்து விரட்டிவிட்டு, அந்த பெண் முதலையை ஐந்தாறு நபர்கள் அமுக்கிப் பிடித்து மாற்றி மாற்றி உடல் உறவு கொள்வார்கள். அவர்கள் இன்பம் அடைவதற்காக இப்படி முதலையிடம் உறவு கொள்ளவில்லை. அப்படி முதலையைப் புணர்ந்தால், செல்வம் கொழிக்கும் என்ற நம்பிக்கையால்தான்!" என்று எழுதியிருக்கிறார்.

முதலையுடன் இல்லாவிட்டாலும் ஆடு, நாய், மாடுகளுடன் உறவு கொள் ளும் வினோதப் பழக்கம் இன்றும் சிலரிடம் இருக்கத்தான் செய்கிறது.
சமீபகாலமாக ஒரு அதிர்ச்சியான தகவலை நாம் கேள்விப்படுகிறோம். ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள ஆப்பிரிக்க ஆண்கள் பலர், எய்ட்ஸிலிருந்து தப்பிக்க விலங்குகளுடன் உடலுறவு கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டு வருகிறார்களாம்.

விலங்குகளைப் புணர்வதைவிட அதிர்ச்சி தரக்கூடிய ஒரு ரகம் பாரபீலியாவில் இருக்கிறது. அதைக் கேட்டால் அருவருப்பில் உங்கள் முகம் சுளிக்கும்! ஆம், மிருகக் காதலைவிட படுபயங்கரமானது அது. அதன் பெயர் "நெக்ரோபீலியா" (Necrophilia). நெக்ரோஸ் என்ற கிரேக்கச் சொல்லில் இருந்துதான் இந்த வார்த்தை வந்தது. கிரேக்க மொழியில் "நெக்ரோஸ்" என்றால் "இறந்த..." என்று அர்த்தம். ஆம், பிணங்களைப் புணர்ந்து இன்பம் துய்க்கும் பாரபீலியாக்காரர்கள்தான் நெக்ரோபீலியாக்கள்!

இவர்களுக்கும் புராண "பேக்ரவுண்ட்" இருக்கிறது! கிரேக்கப் புராணங்களில் இன்றும் இமயம்போல் நிற்பது "இலியட்" என்ற காவியம். ஹோமர் எழுதிய இந்தக் காவியத்தின் கதாநாயகன் அகிலிஸ். மாவீரனான அகிலிஸ், எஃகு போன்ற உடலுடையவன். சண்டைக்கு அஞ்சாதவன். ஒருசமயம், இவனுக்கும் அமேஸான் இனத்தின் ராணிக்கும் தீரா சண்டை மூள்கிறது. இருவரும் எதிரெதிர் நின்று சண்டை போடுகிறார்கள். ஆனால், அகிலிஸின் வீரத்துக்கு முன்னால் அமேஸான் ராணி அடிபணிய நேர்கிறது. போரில் ராணி அகிலிஸால் கொல்லப்படுகிறாள். ஆனால், அவளது இறந்த உடலைப் பார்த்த அடுத்தகணமே அகிலிஸின் வெற்றி கொக்கரிப்பு அடங்கிவிடுகிறது. அவள் உடல் வனப்பின் மோகத்தில் அவன் வீரம் மண்டியிடுகிறது. மனதில், அறிவின் கரைமீறி ஆசையின் அலைகள் உக்கிரம் கொள்கின்றன. உடனே, இறந்துகிடக்கும் அமேஸான் ராணியின் உடலை மறைவான இடத்துக்குத் தூக்கிச் சென்று... மோகம் பீறிட... ஆசை தீர உடல் உறவு கொள்கிறான் அகிலிஸ்!



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 11:36 am

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் மும்பையில் ஒரு வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆட்டோ சங்கர் கொலை வழக்குக்கு இணையான வழக்கு அது. "ரமன் ராகவ் என்பவன் பதினெட்டு பெண்களைப் பலாத்காரம் செய்து கொன்றான்" என்பதுதான் அந்த வழக்கின் சாரம். ரமன் ராகவ்வை மும்பை போலீஸார் கையும் களவுமாக பிடித்து "எரவாடா" சிறையில் அடைத்து விசாரித்தார்கள். அப்போதுதான் அந்த அதிர்ச்சியான விஷயம் வெளிப்பட்டது. "ரமன் ராகவ் பதினெட்டு பெண்களையும் பலாத்காரம் செய்து கொல்லவில்லை. மாறாக, அவர்கள் அத்தனை பேரையும் கொலை செய்துவிட்டு, அவர்களின் சடலங்களுடன்தான் உடலுறவு கொண்டிருக்கிறான்". இதைக் கேட்டு ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்து போனது.

கிரேக்கப் புராணத்தில் வரும் அகிலிஸ், மும்பை குற்றவாளி ரமன் ராகவ் போன்று நெக்ரோபீலியா குணாம்சம் கொண்ட மனநலம் கெட்டவர்கள் உலகம் பூராவும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.

இதேபோல இன்னும் பலவகையான பாரபீலியாக்கள் உள்ளன. எல்லாவற்றையும் பட்டியலிட்டால் மனிதன் இன்னும் மிருக நிலையைக் கடக்கவில்லையோ என்ற அச்சமே தோன்றும். சரி... பாரபீலியா குணம் ஏன் ஏற்படுகிறது?



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 12:47 pm

மனித மனதைப் பகுத்துப் பார்த்து அதன் விசித்திர சுபாவங்களுக்கு ரிஷிமூலம் காண்பது இந்த விஞ்ஞான யுகத்திலும் ஆகப்பெரும் சவாலாகத்தான் இருக்கிறது. இயற்கையைப் பற்றி இன்றுவரை மனிதனால் பதிலறிய முடியாத பல கேள்விகள், இன்னும் வேதாளம் போல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. இத்தகைய பதிலறியா வேதாளக் கேள்விகளில் ஒன்றுதான், பாரபீலியாக்காரர்களின் வக்கிர சுபாவத்துக்கான காரணம் பற்றிய கேள்வியும்! என்னதான் விஞ்ஞானமும் மருத்துவமும் மனோதத்துவ ஆய்வுகளும் மார்தட்டிக் கொண்டு இவர்களின் மன செயல்பாட்டுக்கான காரணங்களைத் தேடி அலைந்தாலும், திருப்திகரமான பதிலை இன்றுவரை கண்டறிய முடியவில்லை என்பதுதான் நிதர்சனம்!

பாரபீலியா குணாதிசயத்தை எந்த மனித சமூகமும் ஏற்றுக் கொள்வதில்லை. எல்லா நாட்டு சட்டங்களும் இதைக் குற்றமாகத்தான் கருதுகின்றன. சமுதாயம் ஏற்றுக்கொள்ளாத, சட்டம் குற்றமாகக் கருதுகிற பாரபீலியா குணாம்சத்தை "ஒருவித மனநோய்" என்றே மருத்துவ உலகம் சொல்கிறது.

பாரபீலியா செக்ஸ் நடவடிக்கைகளுக்கு, மூளையில் ஒரு பகுதியாக இருக்கும் செக்ஸ் சென்டரின் வித்தியாசமான புரிந்துகொள்ளல்தான் காரணம் என்று சொல்லப்பட்டாலும், அது எதனால் இப்படி புரிந்து வைத்திருக்கிறது என்று இன்றுவரை எவராலும் கண்டறியப்படவே இல்லை. அண்மைக் காலத்தில் செக்ஸுவல் கிரவுண்டிங் (Sexual grounding) என்ற வார்த்தைப் பிரயோகம் செக்ஸாலஜி துறையில் புகழடைந்து வருகிறது. உலக அளவில் ஒருசில செக்ஸாலஜிஸ்ட்கள் மட்டுமே அறிந்திருக்கும் வார்த்தைப் பிரயோகம் இது. அதாவது, மனிதனின் மூளையில் ஒவ்வொரு வேலையை செய்யவும் தனித்தனிப் பகுதிகள் இருக்கின்றன. அதில், "செரிபிரல் செக்ஸ் சென்டர்" (Cerebral sex centre) என்ற ஒன்று முக்கியமானது. இந்த "செக்ஸ் சென்டர்" மனிதனுக்கு எதெல்லாம் செக்ஸ் தூண்டுதலை ஏற்படுத்தும், எதனைப் பார்த்தால் உணர்ச்சிவசப்பட வேண்டும், எதனைத் தொட்டால் காம இச்சைக்கு ஆட்பட வேண்டும் என்று புரிந்து அதைப் பதிவு செய்து வைத்திருக்கிறதோ, அதன் அடிப்படையில்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் செக்ஸ் தூண்டுதல் நிகழும் என்று சொல்லப்படுகிறது. அவ்வாறு இந்த "செக்ஸ் சென்டர்" புரிந்து வைத்திருப்பதற்கு ஏற்றவாறுதான் உடம்பு செக்ஸ் ஈடுபாட்டுக்குத் தயார் நிலைக்கு வரும்.

உதாரணத்துடன் சொன்னால்தான் இது விளங்கும். பெண்களின் கண்களையோ உதடுகளையோ மார்பகத்தையோ இடுப்பையோ பார்த்தால் ஆண்கள் உணர்ச்சிவசப்படுவார்கள், காம இச்சை அடைவார்கள் என்பது பொதுவான நம்பிக்கை. இந்தப் பொதுப்பண்பில் கணிசமான உண்மை இருந்தாலும், ஒரு
கேள்வி எழுகிறது. அதாவது, எல்லா பெண்களையும் பார்த்தால் நமக்கு காம இச்சை பிறக்கிறதா? உணர்ச்சிவசப்படுகிறோமா? இது என்ன கேள்வி என்று நீங்கள் நினைக்கலாம். நன்றாக யோசித்துப் பாருங்கள். அம்மா, மகள், சகோதரிகள் போன்ற உறவுநிலையில் இருப்பவர்களும் மற்ற பெண்களைப் போலத்தான். ஆனால், மற்றவர்களைப் பார்க்கிறபோது எழுகின்ற செக்ஸ் உந்துதல் ஏன் அம்மாவை, சகோதரியை, மகளைப் பார்க்கிறபோது எழுவதில்லை? அதாவது, ஒவ்வொரு மனிதனின் மூளையில் இருக்கும் "செக்ஸ் சென்டர்", யாரைப் பார்த்தால் செக்ஸ் தூண்டுதலை அடைய வேண்டும் என்று நன்றாகப் புரிந்து வைத்திருப்பதன் அடையாளம்தான் இது.
ஆம்... கண்கள் எல்லாப் பெண்களையும் பெண்ணாகவே பார்த்தாலும், மூளை (செக்ஸ் சென்டர்) "இது அம்மா", "இது மகள்" என்ற கூர்மையான வேறுபாடுகளை நினைவூட்டி அவர்களைப் பிற பெண்களிடமிருந்து வேறுபடுத்தி உணர வைக்கிறது. அக்காள் மகளைத் திருமணம் செய்துகொள்ள வீட்டினர் வற்புறுத்தும்போது சிலர், "சின்ன வயசிலிருந்து தொட்டுத் தூக்கி வளர்த்த புள்ளையை எப்படி நான் கட்டிக்கிறது? இந்தப் புள்ளையை என்னால சம்சாரமா நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை" என்று மறுத்துக் கூறுவதை இந்த இடத்தில் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 9 of 13 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக