புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 3 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 3 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 3 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 3 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 3 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 3 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 3 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 3 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 3 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 3 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 3 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 3 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 3 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 3 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 3 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 3 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 3 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 3 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 3 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 3 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 3 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 3 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 3 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 3 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 3 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 3 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 3 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 3 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள்


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:15 am

First topic message reminder :

அல்லாஹ், வானவர், வேதம், நபிமார்கள், மறுமைநாள், விதி ஆகிய ஆறின் மீதும் முழுமையான நம்பிக்கை கொள்வது ஒவ்வொரு முஸ்லிம்; மீதுள்ள கடமையாகும். இதில் ஒன்றை நம்பி, ஒன்றை எற்க மறுத்தாலும் ஒருவன் இறை நம்பிக்கையாளனாக முடியாது.

இந்த ஆறின் மீதும் முழுமையான நம்பிக்கை உள்ள ஒருவனே இறை நம்பிக்கையானன் என்ற பெயர் பெறலாம். இஸ்லாம் எனும் வட்டத்திற்குள் இருக்கலாம். இதில் எந்த ஒன்றை மறுத்தாலும் அவன் ‘இறை நம்பிக்கையாளன் இல்லை’ என இஸ்லாம் அறிவிக்கிறது.

மக்காவில் வாழ்ந்த இணைவைப்போர், அல்லாஹ்வை நம்பி இருந்தனர். இறை மறுப்பாளர்கள், நரகத்திற்குரியவர்கள் என அறிவிக்கப்பட்ட அபூஜஹல், அபூலஹப், உத்பா, ஷைபா போன்றோர் ‘அல்லாஹ்’வையும் கடவுள் என நம்பினர் என்பதை திருக்குர்ஆன் மூலமே நாம் அறியமுடிகிறது.

அவர்களைப் படைத்தது யார்? என அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று தான் கூறுவார்கள்… (அல்குர்ஆன் 43:87)

வானங்களையும், பூமியையும் படைத்தது யார்? ஏன அவர்களிடம் நீர் கேட்டால், ‘அல்லாஹ்’ என்று தான் பதில் கூறுவார்கள்.. (அல்குர்ஆன் 31:25. 39:38)


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:27 am

செல்வம் பெருகும்.

இப்பூமி தனது ஈரல் துண்டை தங்கம், வெள்ளியை தூண்களைப் போல் வாந்தியெடுக்கும் (வெளிப்படுத்தும்) ஒரு திருடன் வந்து ‘இதற்காகத் தான் என் கை வெட்டப்பட்டது’ என்பான். கொலைக்காரன் வந்து, ‘இதற்காத்தான் நான் கொலை செய்தேன்’ என்பான். உறவுகளைப் பிரிந்து வாழ்பவன் வந்து, ‘இதற்காகத்தான் என் உறவுவினர்களைப் பகைத்தேன்’ என்பான் (இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள் என) அவர்களை அழைத்தாலும் அவற்றில் எதனையும் எடுக்க மாட்டார்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப+ ஹ{ரைரா (ரலி) நூல்: முஸ்லிம், திர்மிதீ.

செல்வத்தை அதிகப்படுத்திட திருடியவனும், அதற்காக கொலை செய்தவனும், இதற்காக உறவினர்களைப் பகைத்து வாழ்ந்தவனும், ‘கண்முன் தங்கப் புதைலே குவிந்து கிடந்தாலும், அதை எடுக்க முன் வர மாட்டார்கள். அவர்களிடம் அந்த அளவுக்கு செல்வம் பெருகி நிற்கும். இனி தேவை இல்லை என்று கூறும் அளவுக்கு பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றிருப்பார்கள். இப்படி சொத்தை அதிக அளவில் பெற்றவர்கள் ஒரு சிலர் மட்டுமல்ல, அனைத்து மக்களும் செல்வந்தர்களாக இருப்பார்கள்.

‘நீங்கள் தர்மம் செய்யுங்கள். மக்களிடையே ஒரு காலம் வரும். தன் தர்மப் பொருளை எடுத்துக் கொண்டு செல்வான், ஆனால் அதை வாங்குவோர் எவரும் இருக்கமாட்டார்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஹாரிஸா இப்னு வஹ்ப் (ரலி) நூல்-புகாரீ 7120.

தர்மம் செய்தால் நன்மை பல உண்டு, தர்மம் செய்வது மனிதனின் இயல்பான குணங்களில் ஒன்று. அதை இப்போதே செய்து கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி, அதற்கரிய காரணமாக இனி வருங்காலத்தில் தர்மப் பொருளை வாங்க ஆள் இல்லாத அளவுக்கு எல்லோரும் செல்வந்தர்களாக இருப்பார்கள்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

இன்றைய அரவு மக்களைப் பாருங்கள், ஒரு காலத்தில் குடிசைவாசிகள் இன்று கோபுரத்தில் வாழும் சீமான்கள். ஒரு காலத்தில் வெளியூர் சென்று வியாபாரம் செய்தாலே வழி என்றிருந்தவர்கள் இன்றோ, மற்ற ஊர்க்காரர்கள் அவர்கள் வாழும் பகுதிக்க வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களிடையே தர்மப் பொருள் வாங்கும் நிலையில் உள்ளவர்கள் மிகக்குறைவுதான். அவர்களின் தர்மப்பொருள், மற்ற மற்ற பகுதிகளுக்கு அனுப்பும் நிலைதான் உள்ளது. மறுமை நாள் மிக சமீபத்தில் உள்ளது என்பதற்கு இதுவும் சான்றாக உள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:28 am

கஞ்சனத்தனம் ஏற்படும்

‘(மறுமைநாள் நெருங்கும் போது) காலம் சுருங்கும் செயல்கள் குறையும், மக்களின் உள்ளங்களில் கஞ்சத்தனம் உருவாகும் குழப்பமே தோன்றும், கொலை பெருகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ ஹ{ரைரா (ரலி) நூல் - புகாரீ 7061.

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் ‘கஞ்சத்தனம் உருவாகும்’ என்று கூறுகிறார்க்ள. செல்வம் பெருகி, தர்மம் செய்ய நினைத்து, தர்மப் பொருளைச் சுமந்து சென்று கொடுக்க முன் வந்து, வாங்க ஆளில்லை என்று நிலை ஏறப்படும் போது, விரக்தி காரணமாக கொடுப்பதும் குறையும். கொடுப்பது குறையக்குறைய ‘கஞ்சத்தனம்’ உள்ளத்தில் குடிபுகும் என்பதே உண்மை. எனவே மறுமையின் அடையாளமாக மனிதனின் உள்ளத்தில் கஞ்சத்தனம் ஏற்படுவதும் ஒன்றாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:28 am

கட்டிடம் கட்டுவதில் போட்டி உருவாகும்

‘மேலும், மக்கள் கட்டிடங்களை (போட்டி போட்டுக் கொண்டு) உயரமாக கட்டாதவரை மறுமை நாள் வராது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ ஹ{ரைரா (ரலி) (இது புகாரீயில் இடம் பெறும் ஹதீஸின் ஒரு பகுதி).

தர்மப் பொருளையும் வாங்க ஆளில்லை என்ற அளவுக்கு செல்வம் பெருகும் போது, அதை செலவழிக்க வழிகான முயல்வது இயற்கைதான். இருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு, தன் வீட்டை பெரிய அளவில் கட்ட முனைவான். தன் வீட்டை விட பக்கத்து வீட்டானின் வீடு அழகாக இருந்து விடக்கூடாது என எண்ணுவான்.

இவனின் வீட்டைப் பார்த்து, தன் வீட்டையும் அழகாக அமைத்திட அவன் முயல்வான். உடனே இவன் சமீபத்தில் கட்டிய வீட்டையே இடித்து மீண்டும் கட்ட முயல்வான். இப்படி போட்டி போட்டு கட்டிடங்களை அழகாக அமைக்க முயல்வதும்;, உயராமான கட்டிடங்களை கட்ட முனைவதும் இப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதுவும் மறுமை நாளின் அடையாளம் என்று நபி (ஸல்) கூறிக் காட்டுகிறார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:28 am

நபி என்று கூறுவோர் வருவர்

‘இருபெரும் குழுக்களிடையே பெரும் போர் ஏற்பட்டு, அவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்ளாதவரை மறுமை நாள் வராது. அந்த இரு குழுக்கள் முன் வைக்கும் வாதமும் ஒன்றாகவே இருக்கும். மேலும், ஏறத்தாழ முப்பது பெரும் பொய்யர்களாக தஜ்ஜால்கள் (உலகில்) தோன்றாத வரை மறுமை நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவரும் தன்னை ‘நபி’ என்று வாதாடுவான்’ என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ|ஹ{ரைரா (ரலி) நூல்-புகாரீ 3609.

நபி (ஸல்) அவர்கள்தான் இறுதி நபி என்பது இஸ்லாமிய நம்பிக்கை ஆகும். தன்னை நபி என்று சிலர் வாதிட்ட நிலை நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே ஏற்பட்டது. யமாமாப் பகுதியில் முஸைலமா என்பவன் தன்னை நபி என்று வாதிட்டான். இவன் அபூபக்கர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்டான். இதே போல் யமன் பகுதியில் அஸ்வத் இப்னு அன்ஸிய்யு என்பவன் தன்னை நபி என்று அறிவித்தான். இவனும் நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே கொல்லப்பட்டான். அபூபக்கர் (ரலி) அவர்களின் காலத்தில் துலைஹா இப்னு குவைலித் என்பவன் தன்னை ‘நபி’ என்றான். ஸஜாஹ் என்ற பெண்ணும் தன்னை நபி என்று கூறினாள். இந்த இருவரும் பின்னர் மனம் திருந்தி இஸ்லாத்தில் இணைந்து விட்டனர் என அறியமுடிகிறது.

ஹிஜ்ரீ 60 ஆம் ஆண்டுகளில் முக்தார் இப்னு அபீ உமைத் ஸகஃபீ என்பவன் தன்னை நபி என்று வாதிட்டான். அவனும் கொல்லப்படான். அப்துல் மலிக் இப்னு மர்வான் அவர்களின் காலத்தில் ‘ஹாரிஸ்’ என்பவன் தன்னை நபி என்றான், அவனும் கொல்லப்பட்டான். அப்பாஸியாக்களின் ஆட்சியின் போதும் பலர் தங்களை நபி என்று வாதிட்டதாகப் பார்க்கிறோம்.

இதே போல் தன்னை நபி என பஞ்சாப் மாநிலம் காதியான் எனும் ஊரில் பிறந்த மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவன் வாதிட்டான். 1839-1908ல் வாழ்ந்தவன் இவன். அஹ்மதியா என்ற பெயரில் புதிய மதம் கண்டான். இன்றும் கூட அவனின் கருத்தை ஏற்றுக் கொண்ட சிலர் உண்டு. இப்படி பலரும் தன்னை நபி என வாதிட்டோர் உண்டு. பலரும் ‘நபி’ என வாதிட்டாலும் சற்று பலமான இன்று வாதிடுவோர் முப்பது பொய்யர்கள் தான். நபி (ஸல்) அவர்களும் இதனால் தான் முப்பது என்று எண்ணிக்கையைக் குறிப்பிடுகிறார்கள்.

தன்னை நபி எனக் கூறி கொள்ளும் நபர்கள் வருவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து, அப்படிக் கூறியவர்கள் வந்துள்ளனர் என்பதை அறிவதிலிருந்தும் மறுமை நாள் வெகு விரைவில் வரும் என்பது உறுதியாகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:29 am

பூகம்பம் அதிகரிக்கும்

கல்வி அகற்றப்படும், பூகம்பங்கள் அதிகரிக்கும், காலம் சுருங்கும், குழப்பங்கள் தோன்றும், கொலை அதிகரிக்கும், செல்வம் கொழிக்கும் அதுவரை மறுமை நிகழாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர் : அபூஹ{ரைரா (ரலி) நூல்-புகாரீ.

ஈரான், எகிப்து, இந்தோனேசியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் பெரும்பெரும் பூகம்பங்கள் நிகழ்ந்தன. இதுமாதிரி இனி பூகம்பங்கள் அடிக்கடி அதிக அளவில் நிகழும் என விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். பூகம்பங்கள் அதிக அளவில் நிகழ்வதும் மறுமை நாள் சமீபத்தில் வர உள்ளது என்பதை பறைசாற்றுகின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:29 am

தவறான தொழிலும் நல்லது என ஆகும்

‘ஒரு காலம் வரும், அப்போது மக்கள் தாங்கள் சம்பாதிப்பவை ஹலாலா ஹராமா? (அனுமதிக்கப்பட்டவையா இல்லையா?) என்பதை பொருட்படுத்த மாட்டார்கள்’ என்று நபி (ஸல்) கூறினார்கள் - அறிவிப்பாளர் : அபூ ஹ{ரைரா (ரலி) நூல் - புகாரீ.

நல்ல வழியில் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்த காலம் எல்லாம் போய்விட்டது. ‘பணம் வேண்டும், சொத்துப் பெருக வேண்டும்’ அதற்கு எந்த தொழிலாயினும் செய்யத் தயார் என்ற எண்ணத்தற்கு மனிதன் வந்துவிட்டான். தான் செய்யும் தொழில் மூலம் சமூகமே பாதிக்கும் என்று தெரிந்தாலும் அந்தத் தொழிலையே செய்கிறான்.

‘இறைவனின் கோபத்தைப் பெற்றுத்தரும் தொழில் இது’ எனத் தெரிந்தும் அந்தத் தொழிலையே செய்கிறான். அனுமதிக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்ற சிந்தனை எல்லாம் போய் விட்டது. ‘நாய் விற்றக் காசு குறைக்கப்போவதில்லை’ என்றும், ‘ சாராயம் விற்றகாசு போதையாகிவிடப் போவதில்லை’ ‘கருவாடு விற்றக் காசு நாறாது’ என்று கூறும் அளவுக்கு தவறான தொழிலும் நல்ல தொழில் என ஆகி விட்டது. இதுவும் ‘மறுமை நாள் இதோ வரப் போகிறது’ என்று கட்டியம் கூறுகிறது எனலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:30 am

பள்ளிவாசல்கள் பெருமைக்காக அமையும்

மக்கள் தங்களுக்குள் பெருமையடித்துக் கொள்ளும் வகையில் பள்ளிவாசலைக் கட்டுவர். இது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அறிப்பாளர் – அனஸ் (ரலி) நூல் - நஸயீ.

பள்ளிவாசல் தொழுவதற்காக அமைக்கபடுகின்ற ஒன்று. இறைச் சிந்தனை சிந்திக்க, இறைவனை வணங்க, அவனை நினைவு கூற பள்ளிவாசல் அவசியம் ஆகும். ஆனால் இன்று பள்ளிவாசல்களோ ஆடம்பர அடையாளங்களாக மாறி நிற்கின்றன.

100 பேர் மட்டும் வாழும் பகுதிகளில் 10,000 பேர் நின்று தொழும் அளவுக்கு பள்ளிவாசல் அமைவதைக் காணலாம். சுpல ஊர்களிலோ பள்ளிவாசலை அழகு படுத்துகிறோம் என்ற பெயரில் கோடிக்கணக்கில் கொட்டிச் சீரழிப்பதைக் காணலாம். ‘எங்க@ர் பள்ளிவாசலே பெரும் பள்ளி’ என்று கூறிட பெருமை கொள்ள பள்ளிவாசல் கட்டிடங்கள் அமைக்கப்படுகிறது என்பதே உண்மை. இதுவும் ‘மறுமை வர உள்ளது’ என்பதை அறிவுறுத்துகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:30 am

இறை நம்பிக்கை (ஈமானில்) தடுமாற்றம்

‘கியாமத் நாளின் ஆரம்பத்தில் (தோன்றுவதற்கு முன்) இரவின் இருள் போல் குழப்பங்கள் ஏற்படும். காலையில் மூஃமினாக இருந்தவன், மாலையில் காபிராகி விடுவான். சிலர் தங்களின் மார்க்கத்தை இவ்வுலகப் பொருட்களுக்காக விற்பார்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி) நூல் - திர்மிதீ, அஹ்மத்.

காலையில் மூஃமினாக இருந்தவன் மாலையில் காபிராகி விடுவான். மாலையில் மூஃமினாக இருந்தவன், காலையில் காபிராகி விடுவான் என்பதை ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் விளக்கும் போது, ‘பிறரது உயிர், உடமை, மரியாதை ஆகியவற்றைப் பேணுபவனாக காலையில் இருந்தவன், மாலையில் அவற்றைப் பறிக்கக் கூடியவனாக ஆவான். அதுபோல் மாலையில் பிறரது உயிர், உடமை, கண்ணியம் ஆகியவற்றைப் பேணியவன், காலையில் அவற்றைப் பறிப்பவனாக இருப்பான்’ என்று கூறினார்கள். அறிவிப்பாளர் : ஹிஷாம் - நூல் : திர்மிதீ.

தன்னை மூஃமின் என்றும் கூறும் பலரிடம், ஈமான் இவர்களிடம் உள்ளதா? என்று எண்ணும் அளவுக்கு அவர்களின் செயல்கள் அமைந்திருப்பதைக் காணலாம். மார்க்கத்தை அற்பக்காசுக்கும், பதவிக்கும் மாற்றிக் கொள்வோர் உண்டு. இது மூஃமின்களிடம் ஈமானில் ஏற்படும் தடுமாற்றம் எனலாம். இத்தகையத் தடுமாற்ற நிலை மறுமை நாள் வரப் போகிறது என்பதையே உறுதிப்படுத்துகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:31 am

முஸ்லிமாக இருக்கமாட்டான்

‘தவ்ஸ்’ இனப் பெண்களின் புட்டங்கள், ‘துல்கலஸா கடவுள் சிலைகயைச் சுற்றி அசையாத வரை மறுமை நாள் வராது. ‘துல்கலஸா’ என்பது அறியாமைக் காலத்தில் ‘தவ்ஸ்’ இன மக்கள் வழிபட்டு வந்த நிலையாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர் : அபூ ஹ{ரைரா (ரலி) நூல் - புகாரீ 7116).

அபூ ஹ{ரைரா (ரலி) அவர்கள் இந்த ‘தவ்ஸ்’ குலத்தைச் சேர்ந்தவர்களே. இக்குலத்தார் இஸ்லாத்தைக் கைவிட்டு இறைமறுப்புக்குத் திரும்பிவிடுவர். ஒழிக்கப்பட்ட ‘துல்கலஸா’ சிலை வழிபாடு மீண்டும் தலைதூக்கும். அக்குலப் பெண்கள் போட்டியிட்டுக் கொண்டு நெரிசலில் அந்தச் சிலையைச் சுற்றிச் சுற்றி வருவர். நிலைமை இவ்வளவு தூரம் மோசமாகும் அளவுக்கு மார்க்கம் ஆதரவற்றுப் போய்விடும். அதன் பின்னரே உலக அழிவுநாள் வரும். (ஃபத்ஹ{ல் பாரீ).

‘இப்பூமியில் ‘அல்லாஹ், அல்லாஹ் என்று கூறக்கூடியவர் இல்லாமல் போகும் வரை மறுமை நாள் வராது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) நூல்கள் - முஸ்லிம், திர்மிதீ, அஹ்மத்.

மறுமை நாள் நெருங்கும் வேளையில் மூஃமின்களை தேடி அலைய வேண்டியதே ஏற்படும். இப்போதும் கூட மூஃமின்கள் என்று தங்களைச் கூறிக் கொள்வோரிடம் ஈமானிய அடையாளங்களோ, இஸ்லாமிய நடவடிக்கைகளோ இருப்பது அரிதுதான்.

இஸ்லாத்தில் இணையும் முன் தங்களின் குலதெய்வமாக வணங்கிய சிலைகளுக்கு, முக்கியத்துவம் தரும் அளவுக்கு முஸ்லிம்கள் என்று கூறிக் கொள்வோரின் நபர்களின் நிலை மாறிவிடும். இதற்கு உதாரணமாகவே ‘தவ்ஸ்’ இனத்தவர் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சிறிய அளவிலான மாற்றம், காலப்போக்கில் ‘அல்லாஹ்’ என்று கூறும் நபர்களே இல்லாமல் போகும் அளவுக்கு மாறிவிடும். அப்போது மறுமைநாள் வரும் என்று நபி (ஸல்) கூறுவதிலிருந்தும், அந்த மாற்றத்தை நோக்கி முஸ்லிம்களில் பலர் சென்று கொண்டிருக்கின்றனர் என்பதிலிருந்தும் மறுமை நாள் மிக சமீபத்தில் நிகழப் போகிறது என்பதை அறியலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:31 am

(பெரிய) பத்து அடையாளங்கள்

சிறிய அளவில் ஏற்படும் அடையாளங்கள் அல்லாமல் பெரும் அடையாளங்களாக பத்து அடையாளங்களையும் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

‘புகை மூட்டம், தஜ்ஜால், (அதிசயப்) பிராணி, சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது, ஈஸா நபி (அலை இறங்கி வருவது, யஹ்ஜுஜ் - மஹ்ஜுஜ் கூட்டத்தினர் வருவது. கிழக்கே ஒன்று, மேற்கே ஒன்று, அரபு தீபப்பகுதியில் ஒன்று என மூன்று நிலச்சரிவுகள் (பூகம்பங்கள்) நிகழ்வது. இவற்றில் இறுதியாக யமனிலிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டி ஒன்றிணைக்குதல் ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை மறுமை நாள் வராது’ என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : ஹ{தைபா (ரலி) நூல் - முஸ்லிம்.

இந்த பத்து அடையாளங்களும் தொடர்ந்து ஏற்பட்டதும், அதன் பின் உலகம் அழியும். மறுமை நிகழும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

‘சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது, தஜ்ஜால், அதிசயப் பிராணி ஆகிய மூன்று அடையாளங்கள் தோன்றி விடுமாயின், அவற்றுக்கும் முன் இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டிருந்தால் தவிர, எவருக்கும் அவரது ஈமான் (இறை நம்பிக்கை) பயனளிக்காது’ என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அப+ ஹ{ரைரா (ரலி) நூல்கள் - முஸ்லிம், இப்னுமாஜா.

‘சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் வரை அந்த நாள் வராது. அவ்வாறு உதிப்பதை மக்கள் காணும் போது ஈமான் கொள்வார்கள். ஆனால் அது எவருக்கும் ஈமான் பயனளிக்காத நேரமாகும்’ என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ ஹ{ரைரா (ரலி) நூல்கள் - புகாரீ, முஸ்லிம், இப்னுமாஜா.

அந்த பத்து அடையாளங்களின் மிக பிரதானமான மூன்று அடையாளங்கள் ஏற்படுமாயின் ஈமான் கொள்வது கூட பயனளிக்காது என்பதிலிருந்து அந்த அடையாளங்களின் முக்கியத்துவம் புரியலாம்.

Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக