புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 2 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 2 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 2 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 2 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 2 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 2 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 2 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 2 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 2 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 2 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 2 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 2 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 2 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 2 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 2 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 2 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள்


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:15 am

First topic message reminder :

அல்லாஹ், வானவர், வேதம், நபிமார்கள், மறுமைநாள், விதி ஆகிய ஆறின் மீதும் முழுமையான நம்பிக்கை கொள்வது ஒவ்வொரு முஸ்லிம்; மீதுள்ள கடமையாகும். இதில் ஒன்றை நம்பி, ஒன்றை எற்க மறுத்தாலும் ஒருவன் இறை நம்பிக்கையாளனாக முடியாது.

இந்த ஆறின் மீதும் முழுமையான நம்பிக்கை உள்ள ஒருவனே இறை நம்பிக்கையானன் என்ற பெயர் பெறலாம். இஸ்லாம் எனும் வட்டத்திற்குள் இருக்கலாம். இதில் எந்த ஒன்றை மறுத்தாலும் அவன் ‘இறை நம்பிக்கையாளன் இல்லை’ என இஸ்லாம் அறிவிக்கிறது.

மக்காவில் வாழ்ந்த இணைவைப்போர், அல்லாஹ்வை நம்பி இருந்தனர். இறை மறுப்பாளர்கள், நரகத்திற்குரியவர்கள் என அறிவிக்கப்பட்ட அபூஜஹல், அபூலஹப், உத்பா, ஷைபா போன்றோர் ‘அல்லாஹ்’வையும் கடவுள் என நம்பினர் என்பதை திருக்குர்ஆன் மூலமே நாம் அறியமுடிகிறது.

அவர்களைப் படைத்தது யார்? என அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று தான் கூறுவார்கள்… (அல்குர்ஆன் 43:87)

வானங்களையும், பூமியையும் படைத்தது யார்? ஏன அவர்களிடம் நீர் கேட்டால், ‘அல்லாஹ்’ என்று தான் பதில் கூறுவார்கள்.. (அல்குர்ஆன் 31:25. 39:38)


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:23 am

காலம் சுருங்கும்!

காலம் சுருங்கும் வரை மறுமை நாள் ஏற்படாது. ஒரு வருடம், ஒரு மாதம் போன்றும், ஒரு மாதம் ஒரு வாரம் போன்றும், ஒரு வாரம் ஒரு நாள் போன்றும், ஒரு நாள் ஒரு மணி போன்றும், ஒரு மணி நேரம் என்பது உலர்ந்த பேரீச்ச மர இலை எரியும் நேரம் போன்றதாகவும் இருக்கும் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹ{ரைரா (ரலி), நூல் அஹ்மத்.

(மறுமை நாள் வரும் முன்) காலம் சுருங்கி விடும். செயல்பாடு குறைந்து போகும். மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்படும். குழப்பங்கள் தோன்றும். ஹர்ஜ் (கொலை) பெருகிவிடும் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹ{ரைரா (ரலி), நூல் - புஹாரி 7061.

காலம் சுருங்கி உள்ளது உண்மைதான். ஒரு காலத்தில் ஒரு ஊருக்குப் பயணம் எனில் பலமாதம், பலவாரம், பல மணிநேரம் என செலவழித்து ஒட்டகை-குதிரை என பயணம் புறப்பட வேண்டும். ஆனால், ஒரு மாத காலம் பணம் செய்து போய் சேர வேண்டிய காலத்தை, சிலமணி நேரங்களில் போய் சேரும் அளவுக்கு விமான வழிபோக்குவரத்து மூலம் காலத்தைச் சுருக்கி விட்டோம்.

செய்திகள் பரிமாற பறவை, மிருகம் போன்வற்றைப் பயன்படுத்தி சில வாரங்களுக்குப் பின் அச்செய்தியை சேர்க்க படாதபாடு பட்ட மனித இனம், இன்று ஈமெயில், இன்டர்நெட் என செய்திகளை உடனுக்குடன் பரிமாறிக் கொள்வது, காலம் சுருங்கி விட்டது, மறுமை வரப்போகிறது என்பதை உணர்த்துகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:23 am

குழப்பங்கள் மலியும்

விரைவில் குழப்பங்கள் சில தோன்றும். அப்போது அவற்றுக்கிடையே (மௌனமாக) உட்கார்ந்திருப்பவன், (அதற்காக) எழுந்து நிற்பவனைவிடவும், அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன், நடப்பவனை விடவும், அதற்காக நடப்பவன்-அவற்றில், ஈடுபவனை விடவும் சிறந்தவன் ஆவான். எவர் இதில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறாரோ, அவரை அவை அழிக்க முயலும். அப்போது ஒருவர் ஒரு புகலிடத்தையோ, பாதுகாப்பிடத்தையோ பெற்றால், அவர் அதன் மூலம் தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹ{ரைரா (ரலி), நூல் - புஹாரி 7081.

குழப்பம் ஏற்படும்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் சொல்லித்தருகிறார்கள். குழப்பநிலை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் குழப்பமே மிகைத்து நிற்கிறது. நபித்தோழர்களின் காலத்திலேயே, ஆட்சியதிகராப் போட்டி துவங்கியது முதல் இன்று வரை குழப்பம் இருக்கவே செய்கிறது.

மேலும் குழப்ப நிலைகள் தோன்றும் என்பதும் உறுதியாகிறது. அந்த குழப்பத்தின் போது மனிதன் தன்னை விலக்கிக் கொள்வதே சரியான செயலாகும். குழப்பம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது, இருக்கும் என்பதை கவனிக்கும் போது, மறுமை நாள் மிக நெருக்கத்தில் வர உள்ளது என்பது உறுதியாகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:23 am

தனிமையே விருப்பமாகும்

மக்களுக்கு ஒரு காலம் வரும். அப்போது ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வங்களிலேயே ஆடுதான் சிறந்ததாக இருக்கும். குழப்பங்களில் இருந்து தமது மார்க்க (விசுவா)த்தைக் காப்பாற்ற அந்த ஆட்டை ஓட்டிக் கொண்டு அவர் மலை உச்சிக்கும், மழைத் துளிகள் விழும் (கணவாய், பள்ளத்தாக்கு) பகுதிகளுக்கும் சென்று வாழ்வார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர்: அபுஸயீத் அல் குத்ரி (ரலி), நூல் - புஹாரி 6495.

குழப்பம் மலிந்து ஈமானை பாதுகாத்திட வழி இருக்காதா? என எண்ணும் நிலை வரும். அப்போது தன் ஈமானைப் பாதுகாக்க ஒரு முஸ்லிம் தன் ஆட்டை ஓட்டிக்கொண்டு, மக்களை விட்டும் தனியே போய் இருக்கும் அளவுக்கு சூழல் அமையும்.

இப்போது இந்த நிலை வந்துவிட்டது. நமக்கேன் வம்பு? என்று எண்ணும் நிலை உருவாகி, தனிமையே நல்லது என்றாகிவிட்டது. இதுவும் மறுமைநாள் நெருங்கி விட்டதற்குச் சான்றாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:24 am

வாழும் ஆசை அற்றுப் போய் விடும்

ஒரு மனிதர், மற்றொரு மனிதரின் மண்ணறையை (கப்ரை)க் கடந்து செல்லும் போது, அந்தோ நான் அவரின் இடத்தில் (மண்ணறைக்குள்) இருந்திருக்க வேண்டாமா? என்று (ஏக்கத்துடன்) சொல்லும் காலம் வராத வரை மறுமை நாள் வராது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர்: அபூஹ{ரைரா (ரலி), நூல் - புஹாரி 7115.

தனிமையை விரும்பும் மனிதன் இறுதியில், மரணித்து விட்டால், இந்த குழப்பத்திலிருந்து தப்பிக்கலாமே! என்று கருதும் அளவுக்கு குழப்பம் மலிந்து போய் இருக்கும். அப்படி ஒரு சூழல் உருவாகிக் கொண்டு வருவதை உணர முடிகிறது.

எதிர்காலத்தில் இது அதிகமாகலாம். குழப்ப நிலை ஏற்பட்டு, தனிமை என்றாகி இறுதியில் மரணித்தால் நலம் என்று எண்ணும் அளவுக்கு குழப்பம் ஏற்படுவதும் மறுமை றாளின் அடையாளமாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:24 am

தகுதியற்றவனிடம் ஆட்சி இருக்கும்

நம்பகத்தன்மை பாழ்படுத்தப்பட்டால் மறுமை நாளை எதிர்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் நம்பகத்தன்மை பாழ்படுவது என்றால் என்ன? இறைத்தூதர் அவர்களே! என்று கேட்டார் (ஆட்சியும் அதிகராமும் என) பொறுப்பு, தகுதியற்றவனிடம் ஒப்படைக்கப்படும் போது மறுமை நாளை எதிர்பார்த்துக்கொள் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹ{ரைரா (ரலி), நூல் - புஹாரி 6496.

தகுதியற்றவனிடம் ஆட்சியும் அதிகாரமும், நீதி நிர்வாகமும் ஒப்படைக்கப்படும் அவலம் தற்போது ஏற்பட்டுவிட்டது என்பதை எவரும் மறுக்க மாட்டார். இறையச்சமும், நேர்மையும் உள்ள ஒருவனே அதிகாரம் பெற்றவனாக இருக்க வேண்டும். இன்றோ, தகுதி இல்லாத நபர்கள் எல்லாம் ஆட்சியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படும் நிலையைக் காண்கிறோம். இதுவும் மறுமை நாள் சமீபித்து விட்டது என்பதற்கான அடையாளமாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:25 am

மோசமான ஆட்சியாளர்கள் வருவர்.

ஹஜ்ஜாஜ் ஆளுநர் மூலம் நாங்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் பற்றி நாங்கள் இப்னு மாலிக் (ரலி) அவர்களிடம் முறையிட்டோம். அப்பேது, அவர்கள் நீங்கள் பொறுமையாக இருங்கள். உங்களிடம் உள்ள இந்த காலத்திற்குப்பின், இதனையும் விட மிக மோசமான காலம் வராமல் இருக்காது. இது உங்களின் இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை தொடரும். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள் அறிவிப்பளர்: சுபைர் இப்னு அதீ (ரஹ்) நூல்-புஹாh- 7068.

எனது உயிரை தன்கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக, உங்கள் இமாமை நீங்கள் கொன்று, சண்டை செய்து கொண்டு உங்களின் உலகத்தை உங்களில் கெட்டவர் ஆட்சி செய்யும்வரை மறுமை நாள் வராது என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: ஹ{தைபா (ரலி) நூல்-இப்னுமாஜா.

காலம் செல்லச்செல்ல ஆட்சியாளிடம் மோசமான நடவடிக்கை பெருகும். நல்ல ஆட்சியாளரைக் காண்பது அரிதாகும். மறுமை நாள் வரை இது தொடரும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய நிலையை நாம் கண்கூடாகக் காண்கிறோம். மோசமான ஆட்சியாளர்கள் ஆளும் நிலை தொடர்கிறது. இதுவும் மறுமை நாள் மிகமிக அருகில் வந்து விட்டதற்கான அத்தாட்சியாகி விட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:25 am

போர் மூளும்

மயிர்களால் ஆன செருப்புகளை அணிந்துள்ள ஒரு சமுதாயத்தவருடன் நீங்கள் போர் செய்யாத வரை மறுமை நாள் வராது. உறுதியான கேடயம் போன்ற முக அமைப்புள்ள ஒரு கூட்டத்தாருடன் நீங்கள் போர் செய்யாத வரை மறுமை நாள் ஏற்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹ{ரைரா (ரலி), நூல் - புஹாரி, திர்மிதி, முஸ்லிம்.

தகுதியற்றவனிடம் ஆட்சி தரப்பட்டு, அவனும் மோசமான செயல் உடையவனாக அமையும் போது, அவனது நடவடிக்கைகள் முழுக்க முழுக்க முஸ்லிம்களுக்கு எதிராகவே இருக்கும். இதன் காரணமாக முஸ்லிம்கள் தாக்கப்படும் அவலம் நீடிக்கும் முஸ்லிம்களும் போர் புரியும் நிர்பந்தத்திற்கு ஆளாவார்கள்.

இந்தப் போரின் உச்சக்கட்டமாக நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட ஹதீஸில் குறிப்பிடும் சமூகத்தவருடன் போரிடும் காலம் வரும், அப்போது மறுமை நாள்வரும் அடையாளமாக அது அமையும்.

இப்போதும் கூட முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் பலவற்றில் முஸ்லிம்களுக்கு எதிரான சூழ்ச்சிகள் தொடர்நது கொண்டே இருக்கின்றன. இதனால் சில முஸ்லிம்கள் அந்த நாடுகளில் ஆயுதம் தாங்கி போர் புரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதையும் விட கொடுமை ஒரே வாதத்தை வைத்தே இருதரப்பார் சண்டை போடுவார்கள் என்பதுதான்.

ஒரே வார்த்தையை முன் வைக்கின்ற இரு குழுவினர் ஒருவருடன் ஒருவர் போரிட்டுக் கொள்ளாதவரை மறுமை நாள் வராது என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹ{ரைரா (ரலி), நூல் - புஹாரி 3608.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:26 am

ஆண்களின் எண்ணிக்கை குறையும்.

எனக்குப் பின்னர் வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத நபிமொழி ஒன்றை (இப்போது) நான் உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன் என்று சொல்லி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூற நான் கேட்டுள்ளேன்.

கல்வி அகற்றப்படுவதும், அறியாமை வெளிப்படுவதும், மது (அதிகமாக) அருந்தப்படுவதும், விபச்சாரம் பகிரங்கமாக நடைபெறுவதும், ஐம்பது பெண்களுக்கு ஒரே ஆண் நிhவாகியாக இருப்பான் என்ற அளவுக்கு ஆண்கள் (எண்ணிக்கை) குறைந்து, பெண்கள் (எண்ணிக்கை) அதிகமாவதும் மறுமை நாளின் அடையாளமாகும். இவை ஏற்படாதவரை மறுமை நாள் வராது என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன். அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) நூல் - புஹாரி 6808.

பயணங்களில் ஏற்படும் விபத்து, போர் கால மரணம் என மரணத்தை அதிகம் அனுபவிப்பது ஆண்கள்தான். இதனால் ஆண் இனம் அழிக்கப்பட்டு வருவது என்பது உண்மை. வரதட்சணை போன்ற காரணங்களுக்காக குழந்தைப் பருவத்திலேயே பெண்கள் கொலை செய்யப்பட்டாலும், இன்றும் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களே அதிகம் உள்ளனர். காலப்போக்கில் இன்னும் கூடுதலாக பெண்களின் எண்ணிக்கை பெருகி ஆண்களின் எண்ணிக்கை குறையும். இதனால் ஐம்பதுக்கு ஒன்று என்ற கணக்கில் பெண்-ஆண் விகிதாச்சாரம் அமையும்.

அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவித்து, முஸ்லிமில் பதிவு செய்யப்படுள்ள ஹதீஸில் ஓர் ஆணை நாற்பது பெண்கள் இச்சைக் கொண்டு பின் தொடர்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உள்ளது. இதிலிருந்து பெண்களின் நிலை எந்த அளவுக்கு மோசமாகும் என்பதையும் புரியலாம். இதுபோன்ற நிலை ஏற்படும் போது மறுமை நாள் நெருங்கி விட்டது என்று உணரலாம். இப்போதே ஆண்கள் குறைந்து போவதற்கான அறிகுறியும் தென்படத்துவங்கி விட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:26 am

தாய்க்கு எஜமானியாக மகள் இருப்பாள்

(மறுமை நாளின் அடையாளமாக) ஒரு பெண். தன் எஜமானியைப் பெற்றெடுப்பாள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: உமர் (ரலி) முஸ்லிம் நூலில் உள்ள நீணட ஹதீஸல் ஒரு பகுதி)

எத்தனையோ ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தாலும் இறுதியில் நிர்பந்தம் காரணமாக தன் மகளின் கீழ்வாழும் நிலை ஏற்படும். அப்போது அவள் தன் தாயிடம் எஜமானி போல் நடந்து கொள்வாள்.

பெண் ஒருத்தி, தன் மகளின் ஆதிக்கத்தின் கீழ் வாழும் நிலை உள்ளது என்பதை எவரும் மறுக்க இயலாது. இதுவும் மறுமைநாள் சமீபத்தில் உள்ளது என்பதை உறுதிபடுத்துகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:27 am

சாதாரண மனிதன் உயர் நிலையை அடைவான்.

‘ஆடுகள் மேய்க்கும் ஏழைகள், நிர்வாணமாகத் திரிவோர், செருப்பணியாதவர்கள் மிக உயர்ந்த மாளிகைகளை எழுப்புவதும், மறுமை நாளின் அடையாளங்களாகும’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

‘செருப்பணியாத, நிர்வாணமாகத் திரிவோர், மக்களின் தலைவர்களாக ஆவதும், மறுமைநாளின் அடையாளங்களாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ ஹ{ரைரா (ரலி).

(இந்த இரண்டும் முஸ்லிம் நூலில் இடம்பெறும் ஹதீஸின் ஒரு பகுதியாகும்.).

‘அற்பனுக்குப் பிறந்த அற்பன் இவ்வுலகிலேயே பாக்கியசாலியாக ஆகாதவரை மறுமைநாள் ஏற்படாது’ என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: ஹ{பைதா இப்னு யமான் (ரலி) நூல்-திர்மிதீ, அஹ்மத்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக