புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10 
96 Posts - 49%
heezulia
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10 
7 Posts - 4%
prajai
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Barushree
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10 
223 Posts - 52%
heezulia
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10 
16 Posts - 4%
prajai
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_m10இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய சிந்தனை - பைபிள்


   
   

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Sep 04, 2011 12:05 am

First topic message reminder :

நண்பர்களே

இன்றைய சிந்தனை என்னும் தலைப்பில் தினமும் பைபிளில் இருந்து வாசகம் ஒன்று இடலாம் என்று எண்ணுகிறேன் உங்கள் கருத்துக்கள் சொல்லுங்களேன்


உதாரணமாக 03/செப்டம்பர் 2011

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1:
21-23


சகோதரர் சகோதரிகளே, முன்பு நீங்கள் இறைவனோடு உறவற்றவர்களாய்
இருந்தீர்கள்; அவரைப் பகைக்கும் உள்ளம் உடையோராய்த் தீச்செயல்கள் புரிந்து
வந்தீர்கள். இப்பொழுது, நீங்கள் தூயோராகவும் மாசற்றோராகவும் குறைச் சொல்லுக்கு
ஆளாகாதோராகவும் தம்முன் விளங்குமாறு ஊனுடல் எடுத்த தம் மகனது சாவின் வழியாகக்
கடவுள் உங்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். நீங்கள் நற்செய்தியைக் கேட்டுப்
பெற்றுக்கொண்ட எதிர்நோக்கை இழந்துவிடாமல் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு அதில்
உறுதியாக நிலைத்திருங்கள்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Ila

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 09, 2011 11:14 am

09/09/2011


பொதுக்காலம், வாரம் 23 வெள்ளி




39 மேலும் இயேசு அவர்களுக்கு உவமையாகக் கூறியது; "பார்வையற்ற
ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில்
விழுவரல்லவா?

40 சீடர் குருவைவிட மேலானவர் அல்ல. ஆனால் தேர்ச்சி பெற்ற
எவரும் தம் குருவைப் போலிருப்பர்.

41 "நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப்
பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக்
கூர்ந்து கவனிப்பதேன்?

42 உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையையே நீங்கள்
பார்க்காமல் இருந்து கொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம், "உம் கண்ணில்
இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?" என்று எப்படிக் கேட்க முடியும்? வெளி
வேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையை எடுத்து
எறியுங்கள்.அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை
எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.




அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- நம்மில் இருக்கின்ற குறைகளை நாம் பெரிதாகக் கருதாமல்
பிறருடைய குறைகளைப் பற்றியே அலட்டிக்கொள்வது ஓர் அனுபவ உண்மை. மனிதரிடையே நிலவும்
இப்போக்கினை ஒரு சிறிய உவமை வழியாக விளக்குகிறார் இயேசு. நம் கண்கள் தெளிவாக
இருந்தால்தான் நம் பார்வையும் தெளிவாக இருக்கும். கண்ணில் ஒரு சிறிய தூசு
விழுந்தால்கூட கண் தானாகவே மூடிக்கொள்ளும்; அப்போது நம் பார்வையும் தெளிவு
குன்றிவிடும். ஆனால் ஒரு பெரிய மரத்துண்டை எடுத்துக் கண்ணில் போட்டால் நம் பார்வை
முற்றிலுமாக மறைந்துபோய் நாம் பார்வையற்றோர் போல ஆகிவிடுவோம். நமது பார்வை தெளிவாக
இருக்கவேண்டும் என்றால் நம் கண் தெளிவாக இருக்க வேண்டும். அதற்கு ஒரே வழி நம்
கண்ணில் இருக்கின்ற மரக்கட்டையை அகற்றுவதுதான். நம் குறைகள் மரக்கட்டை போல இருந்து
நம்மைப் பற்றிய உண்மையை நாம் உணராமல் இருக்கச் செய்துவிடக்கூடும். அதே நேரத்தில்
பிறருடைய வாழ்வில் நிலவுகின்ற சிறுசிறு குறைகளை நாம் பெரிதுபடுத்துவதோடு கூட
அவர்கள்மீது குறைகாணவும் தொடங்கிவிடுவோம். இதுவே பெரிய மரக்கட்டைக்கும் சிறிய
துரும்புக்கும் இடையே உள்ள வேறுபாடு.

-- பிறரைத் திருத்துவதற்கு முன் நம்மில் என்ன மாற்றம்
தேவைப்படுகிறது என நாம் கேட்டுப்பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். நம் குற்றங்களைத்
திருத்தும்போது நாம் பிறருக்கும் ஒரு புதிய முன்மாதிரியாக மாறுவோம். அதைக் கண்டு
அவர்களும் கடவுளிடம் திரும்புகின்ற வாய்ப்புப் பிறக்கலாம். எனவே, சகோதர அன்பின் ஒரு
முக்கியமான அம்சம் நம் பகைவரையும் அன்புசெய்து, நம் சகோதரர் சகோதரிகளிடம் இன்னின்ன
குறைகள் உள்ளன என்று சுட்டிக்காட்டி அவர்களைத் திருத்துவதற்குச் செய்யப்படுகின்ற
முயற்சி ஆகும். குற்றம் காணும் போக்கினை நாம் தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் நம்
சகோதரர் சகோதரிகள் மன மாற்றம் பெற்று நல்மனிதராக மாறிட வேண்டும் என்னும்
நோக்கத்தோடு அவர்களைத் திருத்திடவும் நாம் முயல வேண்டும். அப்போது சிறிய துரும்பைப்
பெரிதுபடுத்தாமல், பெரிய மரக்கட்டையைக் கவனியாது விட்டுவிடாமல் நாம் தெளிந்த பார்வை
உடைய மனிதராக மாறுவோம்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Sep 10, 2011 2:40 pm

10/09/2011
லூக்கா 6:43-49

பொதுக்காலம், வாரம் 23 சனி




43 "கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட
மரமுமில்லை.

44 ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால்
முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை; முட்புதர்களில் திராட்சைக்
குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை.

45 நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை
எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின்
நிறைவையே வாய் பேசும்.

46 "நான் சொல்பவற்றைச் செய்யாது என்னை, "ஆண்டவரே, ஆண்டவரே"
என ஏன் கூப்பிடுகிறீர்கள்?

47 என்னிடம் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவற்றின்படி
செயல்படும் எவரும் யாருக்கு ஒப்பாவார் என உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன்;

48 அவர் ஆழமாய்த் தோண்டி, பாறையின் மீது அடித்தளம் அமைத்து,
வீடு கட்டிய ஒருவருக்கு ஒப்பாவார். வெள்ளம் ஆறாகப் பெருக்கெடுத்து அந்த
வீட்டின்மேல் மோதியும் அதை அசைக்க முடியவில்லை; ஏனென்றால் அது நன்றாகக்
கட்டப்பட்டிருந்தது.

49 நான் சொல்வதைக் கேட்டும் அதன்படி செயல்படாதவரோ, அடித்தளம்
இல்லாமல் மண்மீது வீடு கட்டியவருக்கு ஒப்பாவார். ஆறு பெருக்கெடுத்து அதன்மேல் மோதிய
உடனே அது விழுந்தது; அவ்வீட்டுக்குப் பேரழிவு ஏற்பட்டது.




அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது தமிழ்ப் பொன்மொழி.
அகத்தின் அழகு நம் வாய் பேசும் சொற்களில் இருக்கிறது என்கிறது விவிலியம். நல்ல மரம்
நல்ல கனி கொடுக்கும். கெட்ட மரம் கெட்ட கனி கொடுக்கும். உள்ளத்தின் நிறைவையே வாய்
பேசும் என்கிறார் ஆண்டவர். நமது வாயிலிருந்து வரும் சொற்கள்தான் நமது உள்ளத்தின்
நிறைவை, அல்லது குறைவைச் சுட்டிக்காட்டுகின்றன. நமது சொற்கள் குறைவுள்ளவையாக,
கண்ணியம் குறைந்தவையாக, இழிவானவையாக, புண்படுத்துவனவாக இருக்கின்றனவா?
அப்படியென்றால், அது நம் உள்ளத்தின் குறைவைத்தான் காட்டுகிறது.

எனவே, நமது சொற்களின்மீது ஒரு கண் வைப்போமா? நல்ல சொற்களைப்
பேசி நமது உள்ளத்தின் நிறைவை வெளிப்படுத்துவோம். நமது உள்ளத்தையும் நல்ல
எண்ணங்களால் நிரப்பி, நிறைவு செய்வோம்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Sep 11, 2011 5:21 pm

11/09/2011

மத்தேயு 18:21-35

ஆண்டின் பொதுக்காலம் 24 ஆம் ஞாயிறு


நற்செய்தி வாசகம்

மத்தேயு
எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 21-35


அக்காலத்தில் பேதுரு இயேசுவை அணுகி, ``ஆண்டவரே, என் சகோதரர்
சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை
மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா''? எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம்
கூறியது: ``ஏழு முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழு முறை என நான் உனக்குச் சொல்கிறேன்.
விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; ஓர் அரசர் தம் பணியாளர்களிடம்
கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கிய பொழுது, அவரிடம்
பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக்
கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு
அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார்.
உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, `என்னைப் பொறுத்தருள்க;
எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன்' என்றான். அப்பணியாளின்
தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.
ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த
உடன்பணியாளர் ஒருவரைக் கண்டு, `நீ பட்ட கடனைத் திருப்பித் தா' எனக் கூறி அவரைப்
பிடித்துக் கழுத்தை நெரித்தான். உடனே அவனுடைய உடன்பணியாளர் காலில் விழுந்து,
என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்' என்று அவனைக் கெஞ்சிக்
கேட்டார். ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச்
சிறையில் அடைத்தான். அவருடைய உடன்பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித்
தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள். அப்போது தலைவர் அவனை
வரவழைத்து, `பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக்கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும்
உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன்
உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?' என்று கேட்டார்.
அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை
வதைப்போரிடம் ஒப்படைத்தார். உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார
மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க
மாட்டார்.''







''மன்னிக்க மறுத்த பணியாளர் உவமை'' என்னும் தலைப்பில் வருகின்ற கதை வழியாக இயேசு
நமக்கு மன்னிப்பின் மேன்மையைக் கற்பிக்கிறார். இக்கதையில் வருகின்ற ''அரசர்''
தமக்கு மிகப் பெரிய தொகை கடன்பட்டிருந்த ஒருவருக்கு அக்கடனை மன்னிக்கிறார். ஆனால்
மன்னிப்புப் பெற்ற மனிதரோ தன் உடன்பணியாளர் தமக்குச் செலுத்த வேண்டிய ஒரு சிறு
தொகையை மன்னிக்க மறுத்துவிடுகிறார். கடவுள் நம் குற்றங்களையும் பாவங்களையும்
(''கடன்'') தாராள மனத்தோடு மன்னிக்கிறார். ஆனால் நாமோ நம் சகோதர சகோதரிகளின் சிறு
பிழைகளையும் மன்னிக்கத் தயக்கம் காட்டுகிறோம். இதற்கு அடிப்படைக் காரணம் நாம்
மன்னிப்பின் உண்மையான பொருளை உணராமல் இருப்பதே. மன்னிப்பு என்பது அன்பின்
உச்சக்கட்டம்.

-- கடவுள் வழங்குகின்ற மன்னிப்பை நாம் பிறரோடு பகிர்ந்திட
அழைக்கப்படுகிறோம். கடவுளுக்கு எதிராக நாம் செய்கின்ற குற்றங்கள் எவ்வளவுதான்
கொடியனவாக இருந்தாலும் அவற்றையெல்லாம் மன்னிக்கக் கடவுள் எப்போதுமே
தயாராயிருக்கிறார். ஆனால், நமக்கு எதிராக யாராவது குற்றம் செய்தால் நாம் மன்னிக்க
மறுக்கிறோம். உண்மையிலேயே மன்னிப்பு என்னும் கொடையை நாம் கடவுளிடமிருந்து நன்றியோடு
ஏற்றுக்கொண்டால் அக்கொடையைப் பிறரோடு பகிர்ந்துகொள்வது நமக்கு மகிழ்ச்சிதரும் ஒரு
நிகழ்வாக அமையும். அதற்கு மாறாக, நாமே கடவுள் நமக்கு அளிக்கின்ற மன்னிப்பைப்
பற்றிச் சிறிதேனும் கவலைப்படாமல், அம்மன்னிப்பின் மதிப்பை உணராமல் செயல்படும்போது
பிறருடைய குற்றங்களை மன்னிக்கின்ற மனப்பான்மை நம்மில் தோன்றாது. எனவே மன்னிப்புப்
பெற்ற நாம் மன்னிப்பை மகிழ்வுடன் வழங்கிட முன்வருவோம்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Ila
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sun Sep 11, 2011 6:12 pm

நல்லதொரு திரிஐ தொடங்கி இருக்கிர்கள்.....ரொம்ப நன்றி நண்பரே...
மிகவும் பையனுள்ளதாக இருக்கிறது.

நன்றி அன்பு மலர்



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 154550 இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 154550 இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Sep 11, 2011 9:29 pm

jesudoss wrote:நல்லதொரு திரிஐ தொடங்கி இருக்கிர்கள்.....ரொம்ப நன்றி நண்பரே...
மிகவும் பையனுள்ளதாக இருக்கிறது.

இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 678642
இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 154550 இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Sep 13, 2011 12:20 am

12/09/2011

லூக்கா 7:1-10

பொதுக்காலம் 24 வாரம் தி;ங்கள்




1 இயேசு இவற்றை எல்லா மக்களுக்கும் சொல்லி முடித்த பின்பு,
கப்பர்நாகுமுக்குச் சென்றார்..

2 அங்கே நூற்றுவர் தலைவர் ஒருவரின் பணியாளர் ஒருவர்
நோயுற்றுச் சாகும் தறுவாயிலிருந்தார். அவர்மீது தலைவர் மதிப்பு வைத்திருந்தார்.

3 அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு யூதரின் மூப்பர்களை
அவரிடம் அனுப்பித் தம் பணியாளரைக் காப்பாற்ற வருமாறு வேண்டினார்.

4 அவர்கள் இயேசுவிடம் வந்து, "நீர் இவ்வுதவி செய்வதற்கு அவர்
தகுதியுள்ளவரே. அவர் நம் மக்கள் மீது அன்புள்ளவர்;

5 எங்களுக்கு ஒரு தொழுகைக்கூடமும் கட்டித் தந்திருக்கிறார்"
என்று சொல்லி அவரை ஆர்வமாய் அழைத்தார்கள்.

6 இயேசு அவர்களோடு சென்றார். வீட்டுக்குச் சற்றுத் தொலையில்
வந்துகொண்டிருந்தபோதே நூற்றுவர் தலைவர் தம் நண்பர்கள் சிலரை அனுப்பிப் பின்வருமாறு
கூறச் சொன்னார்; "ஐயா, உமக்குத் தொந்தரவு வேண்டாம்; நீர் என் வீட்டிற்குள்
அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன்.

7 உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை.
ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார்.

8 நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு
உட்பட்ட படை வீரரும் உள்ளனர். நான் ஒருவரிடம் "செல்க" என்றால் அவர் செல்கிறார்;
வேறு ஒருவரிடம் "வருக" என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து "இதைச்
செய்க" என்றால் அவர் செய்கிறார். "

9 இவற்றைக் கேட்ட இயேசு அவரைக்குறித்து வியப்புற்றார்.
தம்மைப் பின்தொடரும் மக்கள்கூட்டத்தினரைத் திரும்பிப் பார்த்து,"
இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை என உங்களுக்குச்
சொல்கிறேன்" என்றார்.

10 அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது
அப்பணியாளர் நலமுற்றிருப்பதைக் கண்டார்கள்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Sep 13, 2011 11:12 am

13/09/2011

லுக்கா 07:11-17

பொதுக்காலம், வாரம் 24 செவ்வாய்




நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய
நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 11-17


அக்காலத்தில் இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார்.
அவருடைய சீடரும் பெருந்திரளான மக்களும் அவருடன் சென்றனர். அவர் அவ்வூர் வாயிலை
நெருங்கி வந்தபோது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். தாய்க்கு அவர் ஒரே மகன்;
அத்தாயோ கைம்பெண். அவ்வூரைச் சேர்ந்த பெருந்திரளான மக்களும் அவரோடு இருந்தனர்.
அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவு கொண்டு, ``அழாதீர்'' என்றார். அருகில் சென்று
பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நின்றார்கள். அப்பொழுது அவர்,
``இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு'' என்றார். இறந்தவர் எழுந்து
உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார். அனைவரும்
அச்சமுற்று, ``நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம்
மக்களைத் தேடி வந்திருக்கிறார்'' என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
அவரைப் பற்றிய இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும்
பரவியது.


உலகத்தில் மக்கள் அனுபவிக்கின்ற துன்பங்கள் கணக்கிலடங்கா. பசியும் பட்டினியும்,
வறுமையும் ஏழ்மையும், நோயும் நோக்காடும், வீடின்மையும் கல்வியறிவின்மையும் என்று
மனிதரை வாட்டி வதைக்கின்ற இழிநிலைகள் இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் பாரெங்கும்
பரவியிருப்பது கவலையானதே. எத்தனையோ தேவைகள் இருக்கின்ற போது நம்மை அடுத்திருக்கின்ற
மனிதரின் வேதனைகளை நாம் கண்டுகொள்ளாமல் போகின்ற ஆபத்து உள்ளது. உதவி கேட்டுப் பலர்
வரும்போது நம் அருகிலிருப்பவருக்கு உதவி தேவை என்பதை நாம் மறந்துவிடக் கூடும்.
இயேசுவிடம் உதவி கேட்டு எத்தனையோ மனிதர் வந்தனர். கும்பல் கும்பலாக அவரைத் தேடிச்
சென்றனர். தம்மை நெருக்கிய கூட்டத்தின் நடுவிலும் இயேசு ஓர் எளிய கைம்பெண்ணின்
வேதனையைக் கவனிக்கத் தவறவில்லை. அப்பெண்ணின் ஒரே மகன் இறந்துவிட்டிருந்தார்.
கணவனும் இல்லை, மக்களும் இல்லை என்ற அவல நிலைக்குத் தள்ளப்பட்ட அப்பெண்ணைக் கண்டு
இயேசு இரக்கம் கொள்கிறார். அவருடைய மகனுக்கு உயிர் அளிக்கிறார். இச்செயல் வழியாக
இயேசுவின் வல்லமை விளங்கியது ஒருபுறமிருக்க, அவருடைய இரக்க மனப்பான்மையும் இளகிய
மனதும் இங்கே தோன்றுவதையும் நாம் கவனிக்க வேண்டும்.

-- எத்தனையோ அலுவல்கள் நமக்கு இருந்தாலும் நம்மை
அடுத்திருக்கின்ற ஒருவருடைய தேவையை உணர்ந்து அவருக்கு உதவிசெய்ய நாம் நேரம் ஒதுக்க
வேண்டும். பல அலுவல்களில் ஈடுபட்டு சுறுசுறுப்பாக உழைப்பவர்களுக்கு மேன்மேலும்
பொறுப்புக்கள் வந்து சேரும் என்பது அனுபவ உண்மை. அந்த வேளைகளிலும் பிறருடைய
தேவைகளைக் கண்டு, அவர்கள் நம்மை அணுகுவதற்கு முன்னரே உதவி செய்ய முன்வருவது
இயேசுவின் சீடருக்கு அழகு. தம் ஒரே மகனை இழந்த கைம்பெண் இயேசுவிடம் உதவி கேட்டுக்
கைநீட்டவில்லை; ஆனாலும் இயேசு அவருடைய தேவையைத் தாமாகவே உணர்ந்து அவருக்கு
உதவிசெய்ய முன்வந்தார். வள்ளுவரும் நட்புப் பற்றிப் பேசும் போது ''உடுக்கை இழந்தவன்
கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு'' என்று போற்றியுரைப்பார் (குறள் 788).
நட்பையும் விஞ்சிச் செல்வது இயேசு நம்மிடம் எதிர்பார்க்கின்ற அன்பு. கடவுளின் பண்பே
அன்புதானே!



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Ila
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Tue Sep 13, 2011 12:20 pm

அப்பொழுது அவர்,
``இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு'' என்றார். இறந்தவர் எழுந்து
உட்கார்ந்து பேசத் தொடங்கினார்.

:வணக்கம்: அருமை



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Mgr
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Sep 15, 2011 10:32 pm



15/09/11

யோவான் 19:25-27

வியாகுல அன்னை விழா



நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 25-27

அக்காலத்தில் சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்றுகொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், ``அம்மா, இவரே உம் மகன்'' என்றார். பின்னர் தம் சீடரிடம், ``இவரே உம் தாய்'' என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.


தூய வியாகுல அன்னையின் விழாவைக் கொண்டாடும் இன்று நம் இல்லங்களிலுள்ள வியாகுல அன்னையரைக் கொஞ்சம் எண்ணிப் பார்ப்பது நலம். நமது வீடுகளில் காலங் காலமாக அன்னையரின் நிலை வியாகுலம் நிறைந்ததாகவே இருந்துவருகிறது. கணவர்கள் தம் மனைவியரைத் துணைவியராகவும், குடும்ப வாழ்வில் பங்காளிகளாகவும், நடத்தாமல் அடிமைகள்போல நடத்துவது இன்றளவும் பல குடும்பங்களில் நடப்பதுதானே! அதுபோல, பிள்ளைகளும் அன்னை சொல்லை மதியாமல், விருப்பம்போல் செயல்பட்டு, சில வேளைகளில் தீய பழக்கங்களில் ஈடுபட்டுப் பெற்ற தாய்க்குச் சொல்லொண்ணாத் துயரம் தருவதும் பல குடும்பங்களில் நடந்துவருவதுதான்.

சிலுவையடியிலும், அதற்கு முன்பு வாழ்வு முழுவதும், அன்னை மரியா அனுபவித்த துன்பங்களை எண்ணிப் பார்க்கும் நாம், நமது அன்னையரையும் கண்ணோக்கிப் பார்த்து அவர்களின் துன்பங்களைக் குறைக்க முன்வருவோம். ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்னும் குறள் மொழிக்கேற்ப, அன்னையரைப் பெருமைப்படுத்தும் பிள்ளைகளாக வாழ்வோம்




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 16, 2011 11:15 am

16/09/2011

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 2-12

அன்பிற்குரியவரே, இவற்றை நீ கற்பித்து ஊக்குவி. மாற்றுக் கொள்கைகளைக் கற்பித்து, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நலம் தரும் வார்த்தைகளுக்கும், இறைப் பற்றுக்குரிய போதனைகளுக்கும் ஒத்துப்போகாதவர்கள், தற்பெருமை கொண்டவர்கள்; ஒன்றும் தெரியாதவர்கள்; விவாதங்களிலும் சொற்போர்களிலும் பைத்தியம் கொண்டவர்கள். பொறாமை, போட்டி மனப்பான்மை, பழிச்சொல், பொல்லாத ஊகங்கள், ஓயாத மோதல்கள் முதலியன இவற்றிலிருந்தே உண்டாகின்றன. உண்மையை இழந்தவர்களிடமும் சீரழிந்த மனத்தைக் கொண்டவரிடமும் இவை காணப்படுகின்றன. இறைப் பற்று பெரும் ஆதாயம் தருவதுதான்; ஆனால் மனநிறைவுள்ளவர்களுக்கே தரும். உலகத்திற்கு நாம் எதையும் கொண்டு வந்ததில்லை. உலகத்தை விட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது. எனவே, உணவும் உடையும் நமக்கு இருந்தால் அவற்றில் நாம் மனநிறைவு கொள்வோம். செல்வத்தைச் சேர்க்க விரும்புபவர்கள் சோதனையாகிய கண்ணியில் சிக்கிக்கொள்கிறார்கள்; அறிவீனமான, தீமை விளைவிக்கக் கூடிய பல்வேறு தீய நாட்டங்களில் வீழ்ந்து விடுகிறார்கள். இவை மனிதரைக் கேட்டிலும் அழிவிலும் ஆழ்த்துபவை. பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர். அந்த ஆசையால் சிலர் விசுவாசத்தினின்று பிறழ்ந்து திரிந்து பல வேதனைகளைத் தாங்களாகவே தங்கள்மேல் வருவித்துக்கொள்கிறார்கள். கடவுளின் மனிதனாகிய நீ, இவற்றிலிருந்து தப்பி ஓடு. நீதி, இறைப் பற்று, நம்பிக்கை, மன உறுதி, பணிவு ஆகியவற்றை நாடித் தேடு. விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு. நிலைவாழ்வைப் பற்றிக்கொள். அதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறாய். அதனை முன்னிட்டே பல சாட்சிகள் முன்னிலையில் விசுவாசத்தைச் சிறப்பாக அறிக்கையிட்டாய்.




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றைய சிந்தனை  - பைபிள் - Page 2 Ila
Sponsored content

PostSponsored content



Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக