புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 3 Poll_c10காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 3 Poll_m10காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 3 Poll_c10 
68 Posts - 41%
heezulia

48 Posts - 29%
Dr.S.Soundarapandian

31 Posts - 19%
T.N.Balasubramanian

7 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%
Guna.D

manikavi

1 Post - 1%
prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

319 Posts - 50%

195 Posts - 31%

61 Posts - 10%

27 Posts - 4%

21 Posts - 3%

6 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Aug 03, 2011 4:09 pm

First topic message reminder :

காதல் சுரங்கம் குறுந்தொகை

காதல் உங்களை கடக்கவில்லை என்றாலும், காதலை நீங்கள் கடக்கவில்லை என்றாலும் வாழ்ந்ததுக்கான அர்த்தம் குறைவு. காதல் என்ற சொல் காதுக்கு இனிமையானது, பலரின் வாழ்க்கையில் கசப்பானது. காதல் என்ற சொல்லின் இருந்து தான் கவிதை, காவியம், கருணை, கல்யாணம், கலவி, காமம், கவலை, கண்ணீர், கைகலப்பு, கல்லறை என்ற சொல்லுக்கு வழி செல்கிறது. காதல் உச்சரிக்க, உணர சுகமானது, ஆனால் பலருக்கு வாழ கடினமானது. பட்டாம்பூச்சிகள் பறக்க, தேனீக்கள் ரீங்காரம் பாட, மலரினும் மென்மையாக தொடங்கி, பல சந்தோசத் தருணங்களை அள்ளித் தருவது.

காதல் இல்லை என்றால் இன்றைய சினிமாவில் டூயட் பாடல்களோ, சோகப் பாடல்களோ இடம் பெறாது. சிறகுகள் இல்லாமல் நம்மை பறக்கச் செய்வது, காயமோ, வெட்டோ இல்லாமல் வலிக்கச் செய்வது.

குறுந்தொகையின் சிறப்பு:

தமிழில் காதல் பற்றி கூறும் நூல்கள் ஏராளம். பதினெண் மேல் கணக்கு நூல்களுள் அகப் பாடல்களே அதிகம் இடம் பெற்றுள்ளன. அப்படி உள்ள பாடல்களில் காதலின் பல்வேறு கூறுகளை பற்றி கூறும் சிறப்பான தொகுப்பு (தொகை) நூல் குறுந்தொகை ஆகும். குறுந்தொகை நான்கு முதல் எட்டு அடிகள் கொண்ட பாடல்களை கொண்டு இருப்பதால் குறுந்தொகை என்று அழைக்கப் படுகிறது. கி.மு இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த சுமார் இருநூறு புலவர்களால் பாடப் பெற்ற நானூறு பாடல்கள் கொண்ட தொகுப்பு நூலாகும்.

காதலிப்பவர்கள், காதலிக்க நினைப்பவர்கள், காதலில் துன்பப்பட்டவர்கள், காதல் கவிதை எழுதுவோர் என்று அனைவருக்கும் இதில் பாடல்கள் உள்ளது.

புறப்பாடல்களில் அப்பாடல் யாருக்குக்காக பாடப்பட்டது என்ற குறிப்பு இருக்கும், இதை கொண்டு தான் நாம் அதியமானை, கபிலரை, வல் வில் ஓரியை, பாரியை அடையாளம் காண முடிகிறது. ஆனால் தொல்காப்பியம் கூறும் இலக்கண மரபுப்படி அகப்பாடல்களில் இன்னாருக்கு இது பாடப்பட்டது என்ற குறிப்பு குறுந்தொகை பாடல்களில் இல்லை. (இது இவர்களின் அந்தரங்க விஷயம் என்ற காரணத்தால், பாடப்பட்டவரின் குறிப்பு இல்லாமல் பாடும் நாகரீகம் தமிழ் மரபில் இருந்தது). தலைவன், தலைவி, பாங்கன், தோழி, செவிலி என்ற பாத்திரங்கள் அடிப்படையில் தான் பாடல்கள் எழுதப்பட்டது.

தமிழின் சிறப்பு

மற்ற மொழிகளில் இல்லாத ஒரு பெரும் சிறப்பு தமிழில் காணப்படும் திணை இலக்கணமும், அதற்குரிய பாடல் அமைப்பும் தான், பொதுவாக எல்லா மொழிகளும் கூறும் காலம் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று மூன்று கூறுகள் தான். இடம், காலம், நேரம் பொறுத்து மாறுவது மனித மனதின் குணமாகும். நன்றாக குளிர் உள்ள இடத்தில், பனிக்காலத்தில் இருக்கும் காதல் நெருக்கம், வறண்ட நிலத்தில், வேனிர் காலத்தில் இருப்பதில்லை. இப்படி உள்ள இடம், சூழ்நிலை, காலம், நேரம் ஆகியவைகளை பிரித்து ஐந்திணை இலக்கணமாக கூறுவது தமிழில் உள்ள தனிப் பெரும் சிறப்பாகும். மேலும் மறை பொருள் அல்லது இறைச்சி என்று கூறப்படும் உள்ளார்ந்த அர்த்தமும், ஆழ்ந்த கருத்துகளும் அகப்பாடல்களின் சிறப்பு அம்சமாகும்.

குறுந்தொகையை ரசிப்பதற்கு முன்னர் இந்த ஐந்திணை என்றால் என்ன, அவற்றின் உட்கூறுகள் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

வளரும்.........

[You must be registered and logged in to see this image.]

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Aug 31, 2011 7:52 pm

மிக்க நன்றி ஐயா [You must be registered and logged in to see this image.] ........பின் வரும் மூன்று சொற்களுக்கு அற்தம் கூறுங்கள் ஏ ஒத்து.............பரீ இ.........குரீ இ.................

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Sep 01, 2011 4:38 pm

பிஜிராமன் wrote:மிக்க நன்றி ஐயா [You must be registered and logged in to see this image.] ........பின் வரும் மூன்று சொற்களுக்கு அற்தம் கூறுங்கள் ஏ ஒத்து.............பரீ இ.........குரீ இ.................

ஏ ஒத்து ------ கொடிய வேலைகளை செய்யும் வேலை (கூரான வேல்) ஒத்து தலைவியின் கண்கள் இருந்ததாக தலைவன் கூறுகிறான். 'வேவொத்து" என்பது தான் சரியான சொல். வேல் ஒத்து என்று பதம் பிரிக்க வேண்டும், இணைய தளத்தில் இருந்த பாடலைப் அப்படியே பதிந்ததால் இந்த குழப்பம், மன்னிக்கவும்

பரி இ ------"பருத்தி வயலில் இடையே வளர்ந்த" என்பது பொருள் (இடையே திணை பயிர் இருப்பதாக, அதை உண்ண வரும் குருவியை விரட்டும், என் தலைவியின் கண்கள் குளிர்ச்சியானது என்பது போல் பொருள் கொள்ள வேண்டும்)

குரி இ -----குருவி என்பது பொருள்

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 01, 2011 6:21 pm

சதாசிவம் wrote:
பிஜிராமன் wrote:மிக்க நன்றி ஐயா [You must be registered and logged in to see this image.] ........பின் வரும் மூன்று சொற்களுக்கு அற்தம் கூறுங்கள் ஏ ஒத்து.............பரீ இ.........குரீ இ.................

ஏ ஒத்து ------ கொடிய வேலைகளை செய்யும் வேலை (கூரான வேல்) ஒத்து தலைவியின் கண்கள் இருந்ததாக தலைவன் கூறுகிறான். 'வேவொத்து" என்பது தான் சரியான சொல். வேல் ஒத்து என்று பதம் பிரிக்க வேண்டும், இணைய தளத்தில் இருந்த பாடலைப் அப்படியே பதிந்ததால் இந்த குழப்பம், மன்னிக்கவும்

பரி இ ------"பருத்தி வயலில் இடையே வளர்ந்த" என்பது பொருள் (இடையே திணை பயிர் இருப்பதாக, அதை உண்ண வரும் குருவியை விரட்டும், என் தலைவியின் கண்கள் குளிர்ச்சியானது என்பது போல் பொருள் கொள்ள வேண்டும்)

குரி இ -----குருவி என்பது பொருள்

மிக்க நன்றி ஐயா...... [You must be registered and logged in to see this image.]

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Sep 12, 2011 4:22 pm

உண்மை காதல்

காதல் ஏற்படும் போதும் ஆண்கள் படும் அவஸ்தை அளவிலாதது, காதலியின் இரக்கத்தை பெறுவதற்காக செய்யும் வேலைகள் அதிகம். தலைவிக்கு தன் மேல் இரக்கம் ஏற்படுவதற்காக தலைவியின் தோழியைச் சந்தித்து அவளிடம் தன் நிலைமையை எடுத்து கூறும் பாடல் இது, உண்மை காதல் எது என்று இந்த பாடல் இலைமறைக்காயாக எடுத்து கூறுகிறது.

திணை -குறிஞ்சி
பாடல் 6 - தோழியை நோக்கி தலைவன், தலைவி குறித்து பாடியது(பாடல் : 32)
பாடியவர் - அள்ளூர் நன்முல்லையார்

காலையும், பகலும், கையறு மாலையும்,
ஊர் துஞ்சு யாமமும், விடியலும், என்று இப்
பொழுது இடை தெரியின், பொய்யே காமம்:
மா என மடலொடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே;
வாழ்தலும் பழியே-பிரிவு தலைவரினே.

பொருள் விளக்கம்:

காலைப் பொழுதும், பகல் வேலையும், காதலர் வருந்தும் கையறு மாலையும், உலகம் உறங்கும் நடுநிசியும், உலகம் விழிக்கும் விடியற் காலைப் பொழுதுகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் நமக்கு தெரிந்தால் அந்த காதல் பொய்யானது. காதலை வெளிப்படுத்த நான் மடல் ஏறினால் தலைவிக்கு அவமானம் ஏற்படும், வெளிப்படுத்தாமல் இருந்தால் எனக்கு துன்பம் ஏற்படும். நான் தலைவியைப் பிரிந்திருக்க ஆற்றேன். நீ என் குறையை மறுத்தாயாயின் மடலேறித் தலைவியைப் பெறலாகும். ஆயினும் அது தலைவிக்குப் பழி தருவதாதலின் அது செய்யத் துணிந்தேனல்லன்; அது செய்யாது உயிர் வைத்துக் கொண்டு வாழ்தலும் எனக்கு அரிது; ஆதலின் உயிர் நீத்தலே நன்று’ என்று தலைவன் தோழிக்கு இரக்கம் உண்டாகும்படி கூறினான்.

காதல் வந்தால் தலைவி படும் அவஸ்தை என்ன?, அடுத்த பாடலில் காண்போம்.

காதல் வளரும் .........

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Sep 24, 2011 1:03 pm

காதலியின் நிலை

காதல் வந்த போது, ஆண்களால் காதலை வெளிப்படுத்த முடிகிறது. ஆனால் பெண்களுக்கு காதலை சுலபமாக வெளிப்படுத்த முடியவில்லை, எங்கே தன்னை தவறாக எண்ணி விடுவானோ என்றும் , அவனாக வந்து சொல்லட்டும் என்றும் காத்திருக்கிறார்கள், இப்படி காத்திருக்கும் காலத்தில் அவன் நினைவுகள் தான் முழுக்க இருக்கும், அவனை சுற்றி வளைய வருவார்கள், பட்டும் படாதும், சம்பந்தம் இல்லாமலும் பேசுவார்கள், பெண்கள் செய்யும் இந்த குழப்பத்தை, சைகைகள் பெரும்பாலான ஆண்களுக்கு புரிவதில்லை, எத்தனை புத்திசாலியான ஆண்களும் பெண்களிடம் வாங்கும் பட்டம் முட்டாள், மர மண்டை என்பதுதான்.....

இப்படி தவிக்கும் காதலி கூறும் பாடல் இது,

திணை -குறிஞ்சி
பாடல் 7- தலைவி தலைவன் குறித்து பாடியது (பாடல் : 74)
பாடியவர் - பெயர் தெரியவில்லை, ஆதலால் பாட்டில் உள்ள வரிகளை வைத்து அவருக்கு வைத்த பெயர் "விட்டகுதிரையார்"

விட்ட குதிரை விசைப்பின் அன்ன
விசும்பு தோய் பசுங் கழைக் குன்ற நாடன்
யாம் தற் படர்ந்தமை அறியான் தானும்
வேனில் ஆனேறு போலச்
சாயினன் என்ப நம் மாண் நலம் நயத்தே ....

பொருள் விளக்கம் :

அவிழ்த்து விட்ட குதிரை பாய்வதைப் போல வானத்தை நோக்கி
மூங்கில்கள் பாயும் மலை நாடன் என் தலைவன் ....
வெயிலில் நிற்கும் காளையைப் போல், எந்த உணர்வு இல்லாமல் நான் அவனை நினைத்து வருந்துவதை அறியாமல், அவனும் என்னை நினைத்து வருந்துகிறான்........

பாடலின் சிறப்பு :

காதலை சொல்ல முடியா பெண்ணின் நிலையும், காதலிக்கும் ஆண் தன்னை நினைக்கிறான், தன்னை எண்ணி வருந்துகிறான் ஆனால் வலிய வந்து காதலை சொல்லவில்லையே என்று வருத்தப்படும் காதலியின் தவிப்பை உணர்த்தும் அழகாக பாடல் இது . "வெயிலில் நிற்கும் எருமையை போல்" என்ற நாம் இன்று கையாளும் சொல்லைப் போல் வெயிலில் நிற்கும் காளை உதாரணமாக கூறப்படுகிறது, காளை வெயிலில் நிற்கும், வருத்தப்படும், ஆனால் அதில் இருந்து விலகாது..மரம் மாதிரி ..இப்படித் தான் ஆண்களின் நிலை ..............

இப்படி காதலை கழுத்துவரை வைத்துக் கொண்டு வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் பெண்ணின் நிலையை கூறும் "நற்றிணை" பாடல் இது

நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில்,
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்;
யானே, பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி-
கை வல் கம்மியன் கவின் பெறக் கழாஅ
மண்ணாப் பசு முத்து ஏய்ப்ப, குவி இணர்ப்
புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன்
என்ன மகன்கொல்-தோழி!-தன்வயின்
ஆர்வம் உடையர் ஆகி,
மார்பு அணங்குறுநரை அறியாதோனே

பொருள் விளக்கம்:

காதல் நோய் வந்து நம்மை தாக்கும் போது, அதை வெளியில் சொல்லுவது ஆண்களுக்கு சாத்தியம் , ஆனால் நானோ என் பெண்மையின் நாணத்தால் காதலை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறேன், கடலில் இருந்து எடுக்கப்பட்ட பசும்பொன், கைத்திறமை உள்ள பொற்கொல்லனால் சுத்தம் செய்யும் வரை மின்னாது, அது போல் மின்னாமல், அழுக்கு படிந்த வெண்மை நிறம் கொண்ட பூக்களை உடைய புன்னை மரங்கள் நிறைந்த நாட்டைச் சேர்ந்த என் தலைவன்,

அவன் மார்பை அணைக்க துடிக்கும், அவனோடு சேரக் காத்திருக்கும் என்னை அறியவில்லை தோழி ,,,,இதை என்னவென்று கூறுவது !!!!!!!!!!

[You must be registered and logged in to see this image.]

பாடலின் சிறப்பு :

பெண்மையின் தளுக்கான குணம் இந்த பாடலில் அழகாக வெளிப்படுகிறது, உலகையே ஆண்டாலும் பெண்ணின் மென்மையான பெண்மை பெண்மை தான் .....சுத்தம் செய்யாமல் கிடப்பது முத்தின் வேலை இல்லை, கொல்லனால் சுத்தம் செய்து அது உரிய காலத்தில் தங்கத்துடன் இணைந்து ஆபரணமாக மாறும் போது தான், அந்த முத்து அழகு பெறுகிறது ....அது போல் காதலில் தவிக்கும் பெண், அந்த ஆணுடன் சேர்வது தான் அழகு .....உன் மார்பில் சாயத்துடிக்கும் என் தவிப்பை உணர்ந்து சீக்கிரம் வா தவிக்க விடாதே ...என்பது போல் காதலியின் தவிப்பை அழகாக உணர்த்தும் பாடல் இது ....

உண்மையை கூறவேண்டுமானால், பெண்கள் காமத்தை விட காதலைத் தான் அதிகம் விரும்புகிறார்கள் ....ஆஸ்தி , நகை, பொருள் என்ற விஷயங்களை விட .......அன்பான பார்வை, அரவணைக்கும் தோள்கள், ஆசையாக சாய்ந்து கொள்ள மார்பு, பெண்மையின் மென்மையை உணரும் ஆண்மையும், உண்மையும் தான் ....இது போதும் .........ஆண்களின் கைகளிலும், மார்பிலும் குழந்தையாக உலவுவார்கள் ..........

இப்படி தவிப்பது பெண்கள் மட்டுமா? ஆண்களும் தான் ..ஆணின் தவிப்பை உணர்த்தும் குறுந்தொகைப் பாடலை அடுத்துக் காண்போம் ....

காதல் வளரும் .........

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Sep 30, 2011 4:10 pm

தலைவனின் தவிப்பு

காதல் தொடரும் போது, ஆணும் பெண்ணும் படும் மகிழ்ச்சியும், துக்கமும் அளவிலாதது. காதலில் முதல் நிலையில் ஆண் பெண்ணை நோக்கி செல்கிறான், காதலில் கடை நிலையில், பெண் ஆணை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார். காதலில் முதல் நிலையில் ஆண் பெண் சந்திப்பு, அவர்களிடையே நிகழும் பேச்சு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது, அதுவும் யாருக்கு தெரியாமல் சந்திக்கும் சந்திப்பும், பேசும் பேச்சும் சுவை மிகுந்தது. இப்படி சந்திக்கும் வேளையில், பெண்கள் தீடீரென சந்திப்பின் கால இடைவெளியை நீட்டுவதும், தவிர்ப்பதும் காதலில் இயல்பு, கொஞ்சம் காலம் தவிக்க விட்டாத் தான் தன் அருமை தெரியும் என்ற காரணத்திலோ, வீட்டுக்கு தெரிந்து விடும் என்ற காரணத்திலோ இது நிகழ்கிறது. இப்படி ஒரு சூழலில் தலைவியின் சந்திப்பை மறுக்கும் தோழியால் அவதிக்குள்ளான ஒரு தலைவன் புலம்பும் புலம்பல் இது..இன்றைய ஆண்கள் தலையனையையும், பெண்கள் கரடி பொம்மையையும் கட்டிக்கொண்டு தூங்குவது இது போல் உள்ள தவிப்பினால் தானோ?

திணை : குறிஞ்சி
பாடியவர் : ஔவையார்
பாடல் 8: மகவுடை மந்தி, தலைவியை சந்திக்க முடியாமல் இருக்கும் துன்பத்தில் தலைவன் பாடும் பாடல்

நல்லுரை யிகந்து புல்லுரை தாஅய்ப்
பெயனீர்க் கேற்ற பசுங்கலம் போல
உள்ளந் தாங்கா வெள்ள நீந்தி
அரிதவா வுற்றனை நெஞ்சே நன்றும்
பெரிதா லம்மநின் பூச லுயர்கோட்டு
மகவுடை மந்தி போல
அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே

பொருள் விளக்கம் :

சுடப்படாத பச்சை களிமண்ணால் செய்யப்பட்ட மண் பானை, நீர் பிடிக்க மழையில் வைத்தால், அந்த பானை நீரை உள்ளே வைத்துக் கொள்ள முடியாது, மொத்தமாக நீரை சிந்தவும் முடியாது, நீரின் ஈரம் தாங்க முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக நீரை சிந்தும், அது போல் நல்ல உரைகளை விட்டு, தலைவியை காண முடியாது என்று மனதுக்கு துன்பம் தரும் உரைகளை கேட்டு வருத்தப்படும் என் நெஞ்சே, காதலியை வேண்டாம் என்று தூக்கி போட முடியவில்லை, காதலியை நெருங்கவும் முடியவில்லை. அவளுடைய பிரிவு மனதுக்கு வருத்தத்தை தருகிறது. மரத்துக்கு மரம் தாவும் பொழுது தாயின் மார்பை கெட்டியாக கட்டிக் கொள்ளும் குரங்குக் குட்டியைப் போல், என் குறையை கேட்டு, என்னை தேற்றி, என்னை மார்போடு கெட்டியாக/நெருக்கமாக அணைத்துக் கொள்ள எப்போது என் தலைவி வருவாள் என்று அவளுக்குகாக வருத்தப்படும் நெஞ்சே உன் போராட்டம் மிக பெரியது , பெருமை உடையது.

காதல் வளரும்

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Oct 15, 2011 8:57 am

காதலியின் தன்மை

உண்மையாக காதலிக்கும் போது ஆண்களுக்கு தன் காதலி தேவதைப் போல் தான் காட்சி அளிக்கிறாள். அவளின் ஒவ்வொரு அசைவும் ஓராயிரம் கவிதைகளை சொல்கிறது, அவளின் நெருக்கம் சுகமாக இருக்கிறது, சிறிய பிரிவும் பெரிதாக வலிக்கிறது. கோபமும் சின்ன ஊடலும் கூட சுவையாகத் தான் இருக்கிறது. காதலில் விழும் போது ஒருவனின் இதயம் வேலை செய்யத் தொடங்குகிறது, ஆனால் அவன் மூளை வேலை செய்வதை நிறுத்திவிடுகிறது, இதனால் தான் உலகில் உள்ளோர் காதல் பித்து பிடித்தவன் என்று கூறுகின்றனர். இப்படி காதலியின் நெருக்கத்தை உணர்ந்து காதல் பித்தேறிய தலைவன் கூறும் அழகான பாடல் இது.

திணை : குறிஞ்சி
பாடியவர் : ஓரம் போகியார் (பாடல் : 70)
பாடல் 9: தலைவியை சந்தித்த தலைவன் அவளைப் பற்றி பாடும் பாடல்

ஒடுங்கு ஈர் ஓதி ஒள் நுதற் குறுமகள்
நறுந் தண் நீரள்; ஆர் அணங்கினளே;
இனையள் என்று அவட் புனை அளவு அறியேன்;
சில மெல்லியவே கிளவி;
அனை மெல்லியல் யான் முயங்குங்காலே
.

பொருள் விளக்கம்

அழகாக ஒடுங்கிய அடர்த்தியான கூந்தலை உடையவள், பிறை போல் வளைந்த வாசனை நெற்றியை உடைய சின்னப் பெண், சுவையான குளிர்ந்த நீரைப் போன்றவள் என் தலைவி , அவளைப் பிரிந்தால் வருத்தம் தருகிறாள், அவள் இப்படி பட்டவள் தான் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை , அவளைப் பற்றி சொல்ல வார்தையில்லை. கொஞ்சம் தான் பேசுகிறாள், ஆனால் திரும்ப திரும்ப அவள் பேச்சை கேட்க வேண்டும் என்று தோணுகிறது, அணைக்கும் போது மென்மையான இலவம் பஞ்சால் செய்யப்பட்ட தலையணை போல் மென்மையாக இருக்கிறாள்.

பாடலின் சிறப்பு

ஒரு ஆடவனுக்கு உள்ள ஐம்புலன்களும் பெண்ணால் சுகப்படுகிறது என்று இந்த பாடல் அழகாகக் கூறுகிறது. தலைவியின் கூந்தலை காண்பது கண்ணுக்கு விருந்தாகவும், அவளின் வாசனை நெற்றியை உச்சி நுகர்தல் மூக்கிற்கு இன்பமாகவும், சுவையான குளிர்ந்த நீர் போல் இருக்கும் அதரம் சுவைக்க இன்பமாகவும், அவளின் சுவையான பேச்சு காதுக்கு இன்பமாகவும், அவளின் மென்மையான உடலை கட்டித் தழுவுவது உடலுக்கு (மெய்யுக்கு) இன்பமாகவும் இருப்பதாக இந்த பாடல் கூறுகிறது, அவளின் நெருக்கம் இன்பத்தையும் பிரிவு துன்பத்தையும் தருகிறது.

வள்ளுவனும் இதைத் தான் கூறுகிறான் ..

"கண்டு கேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள" - 1101

இவளைக் கண்டு கண்கள் இன்புறுகிறது, இவளின் பேச்சை கேட்டு காதுகள் இன்புறுகிறது, இவளின் இதழை உண்டு நாக்கு இன்புறுகிறது, இவளின் வாசனை நுகர்ந்து மூக்கு இன்புறுகிறது, இவளின் அணைப்பி‌ல் என் உயிர் (மெய்) இன்புறுகிறது, என் ஐந்து புலன்களும் இன்பமும் இவளிடம் உள்ளது.

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள் -1104

இந்த உலகில் உள்ள அதிசயமான நெருப்பு என் தலைவி, பொதுவாக நெருப்பின் அருகில் சென்றால் சுடும், அதிலிருந்து தூரமாக விலகினால் குளிரும். ஆனால் இவள் அருகில் சென்றால் குளிர்கிறது, இவளை விட்டு துரமாகச் சென்றால் சுடுகிறது. இப்படி பட்ட வித்தியாசமான காதல் நெருப்பை எங்கு பெற்றாள் இவள் ?

காதல் வளரும் .....

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Oct 15, 2011 9:03 am

அருமையான தொடர்...இன்னும் விரிவாகப் படிக்கவேண்டும். இப்போதைக்கு நன்றி. மகிழ்ச்சி மகிழ்ச்சி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Oct 15, 2011 3:58 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:அருமையான தொடர்...இன்னும் விரிவாகப் படிக்கவேண்டும். இப்போதைக்கு நன்றி. மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி ஐயா, தமிழறிந்த உங்களின் பாராட்டு எனக்கு மிகுந்த உற்சாகத்தை தருகிறது..
நன்றி

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Oct 23, 2011 12:08 pm

காதலர் சந்திப்பு

காதல் அரும்பியவுடன் ஒருவரை ஒருவர் சந்தித்து தனிமையில் இனிமை காண்பது காதலின் சுகமான தருணம். இப்படி காதலியை சந்திக்க வேண்டும் என்றால், தோழியோ, தோழனோ உதவி செய்ய வேண்டும். ஆண்களுக்கு காதல் கைகூடும் வரை தோழர்கள் தேவைப்படுகிறார்கள், காதலி சரி என்று சொன்ன பிறகு தோழர்கள் அவர்களுக்கு அவசியம் இல்லை. ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை, காதலின் ஒவ்வொரு கட்டத்தையும் தன் தோழிகளுடன் பகிர்ந்து கொள்கிறார்கள், தன் காதலர் எப்படி எல்லாம் தன்னை காதலிக்கிறார் என்று பெருமை அடித்து கொள்ளவும், அவன் நல்லவனா, கெட்டவனா என்று தன் அனுபவத்தில் நடக்கும் விஷயங்களைக் கூறி தோழியின் சொந்த அனுபவத்தில் நடந்த காதல் கதைகளை வைத்து எடை போடுகின்றனர்.

காதலியை சந்திக்க விரும்பும் காதலனுக்கு காதலி எங்கு வருவாள், அந்த இடம் எப்படிப்பட்டது என்று அழகாக உரைக்கும் தோழியின் கூற்றில் அமைந்த பாடல் இது.

திணை : மருதம்
பாடல் 10: பெரும் பேதையே (எண் :113)
பாடியவர் : மாதீர்தனார்

ஊர்க்கும் அணித்தே, பொய்கை; பொய்கைக்குச்
சேய்த்தும் அன்றே, சிறு கான்யாறே:
இரை தேர் வெண் குருகு அல்லது யாவதும்
துன்னல் போகின்றால், பொழிலே; யாம் எம்
கூழைக்கு எருமணம் கொணர்கம் சேறும்;
ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே.

பொருள் விளக்கம்:

ஊருக்கு அருகே அழகான பொய்கை இருக்கிறது, அதன் அருகே சிறிய காட்டாறு ஓடுகிறது, இறை தேடும் வெண் கொக்கைத் தவிர அங்கு யாரும் இருக்க மாட்டார்கள். நாங்கள் கூந்தல் நன்கு வளர உதவும் ஒருவகை களி மண் சேர்க்க (எடுக்க) அங்கு வருவோம். உன் காதலியும் அங்கு வருவாள். வந்தால் அவளை சந்திக்கலாம்.

பாடலின் சிறப்பு:

தலைவனுக்கு உதவும் தலைவி, காட்டாறில் கிடைக்கும் ஒரு வகை களிமண் எடுத்து கூந்தலுக்கு பூசும் பழக்கம் இருப்பதை இந்த பாடல் கூறுகிறது. இன்று நாம் முல்தான் மட்டி என்று பூசுவதும் ஒருவகை களிமண் தான் . இதன் மூலம் பெண்கள் தங்களின் அழகைப் பராமரிப்பதில் வெகு கவனம் செலுத்துவது இன்றல்ல, சங்க காலம் முதல் வழக்கத்தில் உள்ளது என்பதை இந்த பாடல் எடுத்துக் கூறுகிறது.

காதல் வளரும்....

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக