புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_c10காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_m10காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_c10காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_m10காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 2 Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%
Srinivasan23

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Aug 03, 2011 4:09 pm

First topic message reminder :

காதல் சுரங்கம் குறுந்தொகை

காதல் உங்களை கடக்கவில்லை என்றாலும், காதலை நீங்கள் கடக்கவில்லை என்றாலும் வாழ்ந்ததுக்கான அர்த்தம் குறைவு. காதல் என்ற சொல் காதுக்கு இனிமையானது, பலரின் வாழ்க்கையில் கசப்பானது. காதல் என்ற சொல்லின் இருந்து தான் கவிதை, காவியம், கருணை, கல்யாணம், கலவி, காமம், கவலை, கண்ணீர், கைகலப்பு, கல்லறை என்ற சொல்லுக்கு வழி செல்கிறது. காதல் உச்சரிக்க, உணர சுகமானது, ஆனால் பலருக்கு வாழ கடினமானது. பட்டாம்பூச்சிகள் பறக்க, தேனீக்கள் ரீங்காரம் பாட, மலரினும் மென்மையாக தொடங்கி, பல சந்தோசத் தருணங்களை அள்ளித் தருவது.

காதல் இல்லை என்றால் இன்றைய சினிமாவில் டூயட் பாடல்களோ, சோகப் பாடல்களோ இடம் பெறாது. சிறகுகள் இல்லாமல் நம்மை பறக்கச் செய்வது, காயமோ, வெட்டோ இல்லாமல் வலிக்கச் செய்வது.

குறுந்தொகையின் சிறப்பு:

தமிழில் காதல் பற்றி கூறும் நூல்கள் ஏராளம். பதினெண் மேல் கணக்கு நூல்களுள் அகப் பாடல்களே அதிகம் இடம் பெற்றுள்ளன. அப்படி உள்ள பாடல்களில் காதலின் பல்வேறு கூறுகளை பற்றி கூறும் சிறப்பான தொகுப்பு (தொகை) நூல் குறுந்தொகை ஆகும். குறுந்தொகை நான்கு முதல் எட்டு அடிகள் கொண்ட பாடல்களை கொண்டு இருப்பதால் குறுந்தொகை என்று அழைக்கப் படுகிறது. கி.மு இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த சுமார் இருநூறு புலவர்களால் பாடப் பெற்ற நானூறு பாடல்கள் கொண்ட தொகுப்பு நூலாகும்.

காதலிப்பவர்கள், காதலிக்க நினைப்பவர்கள், காதலில் துன்பப்பட்டவர்கள், காதல் கவிதை எழுதுவோர் என்று அனைவருக்கும் இதில் பாடல்கள் உள்ளது.

புறப்பாடல்களில் அப்பாடல் யாருக்குக்காக பாடப்பட்டது என்ற குறிப்பு இருக்கும், இதை கொண்டு தான் நாம் அதியமானை, கபிலரை, வல் வில் ஓரியை, பாரியை அடையாளம் காண முடிகிறது. ஆனால் தொல்காப்பியம் கூறும் இலக்கண மரபுப்படி அகப்பாடல்களில் இன்னாருக்கு இது பாடப்பட்டது என்ற குறிப்பு குறுந்தொகை பாடல்களில் இல்லை. (இது இவர்களின் அந்தரங்க விஷயம் என்ற காரணத்தால், பாடப்பட்டவரின் குறிப்பு இல்லாமல் பாடும் நாகரீகம் தமிழ் மரபில் இருந்தது). தலைவன், தலைவி, பாங்கன், தோழி, செவிலி என்ற பாத்திரங்கள் அடிப்படையில் தான் பாடல்கள் எழுதப்பட்டது.

தமிழின் சிறப்பு

மற்ற மொழிகளில் இல்லாத ஒரு பெரும் சிறப்பு தமிழில் காணப்படும் திணை இலக்கணமும், அதற்குரிய பாடல் அமைப்பும் தான், பொதுவாக எல்லா மொழிகளும் கூறும் காலம் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று மூன்று கூறுகள் தான். இடம், காலம், நேரம் பொறுத்து மாறுவது மனித மனதின் குணமாகும். நன்றாக குளிர் உள்ள இடத்தில், பனிக்காலத்தில் இருக்கும் காதல் நெருக்கம், வறண்ட நிலத்தில், வேனிர் காலத்தில் இருப்பதில்லை. இப்படி உள்ள இடம், சூழ்நிலை, காலம், நேரம் ஆகியவைகளை பிரித்து ஐந்திணை இலக்கணமாக கூறுவது தமிழில் உள்ள தனிப் பெரும் சிறப்பாகும். மேலும் மறை பொருள் அல்லது இறைச்சி என்று கூறப்படும் உள்ளார்ந்த அர்த்தமும், ஆழ்ந்த கருத்துகளும் அகப்பாடல்களின் சிறப்பு அம்சமாகும்.

குறுந்தொகையை ரசிப்பதற்கு முன்னர் இந்த ஐந்திணை என்றால் என்ன, அவற்றின் உட்கூறுகள் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

வளரும்.........

[You must be registered and logged in to see this image.]

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Aug 05, 2011 2:56 pm

நன்றி தோழர்களே,
நன்றி

உண்மையில் தமிழ் ஒரு அற்புதமான மொழி, எத்தனை எத்தனை நூல்கள், எத்தனை விஷயங்கள், பேசி முடிக்க நம் ஆயுள் போதாது. இன்றைக்கு எழுதப்படும் அத்தனை காதல் கவிதைகள் குறுந்தொகை, அக நானூறு, நற்றிணை நானூறு போன்ற தமிழ் பாடல்களின் சாயல் தான்.

குறுகிய வரிகள் கொண்டதால் குறுந்தொகை படிக்க, ரசிக்க இனிமையானது.

தொடர்ந்து குறுந்தொகை & புறநானூறு நூல்களில் உள்ள தமிழின் இனிமையை பருகுவோம்.

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Aug 07, 2011 10:25 am

காதல் என்றால் என்ன

காதலில் வீழ்வதற்கு முன் நமக்கு ஒரு சிறு தயக்கம் இருக்கும், பல நேரங்களில் அது நம்மை அறியாமலேயே நடக்கிறது. இப்படி காதல் வரும் போது வேண்டாம் என்று அறிவு சொன்னாலும் மனது கேட்காது. சர்க்கரை வியாதிக்காரன் சர்க்கரையை விட்டாலும் இனிப்பை விடாமல் தவிக்கும் தவிப்பை போன்றது. காதல் வரும் போது அதை ஆதரிப்பவர்கள் நம் நண்பர்கள் அது போல் காதல் வேண்டாம் , அது ஆபத்து என்று எச்சரிப்பவர்களும் நம் நண்பர்கள் தான். இப்படி காதலில் விழப் போகும் தலைவனிடம் அவனது தோழன் கூறும் அறிவுரையாக எழுந்த பாடல் இது. காதல் எத்தன்மையானது, என்ன என்று இப்படால் அழகாக கூறுகிறது.

திணை -குறிஞ்சி
பாடல் 2 - தலைவனை நோக்கி பாங்கன் பாடியது
பாடியவர் - மிளைப்பெறுங் கந்தனார்

காமம் காமம் என்பே ; காமம்
அணங்கும் பிணியும் அன்றே ; நினைப்பின்
முதைச் சுவற் கலித்த முற்றா இளம் புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோளோயே !

பொருள் விளக்கம்:

காதல் காதல் என்றால் என்ன? -காதல்
நம்மை தொல்லை செய்யும் பேயா ?
நம்மை துன்புறுத்தும் நோயா?
பற்களை இழந்த வயது முதிர்ந்த பசு
தன்னால் உண்ண முடியாவிட்டாலும்,
பசும் புற்களை தன் நாவால் நக்கி சுவைக்க முயலுவது போல்
அது தீராத விருந்து,..................
நம்மால் அடைய முடிந்தாலும், அது தீராத விருந்து ,...............
பெரும் தோள்களை உடையவனே , ஆதலால் காதலில் வீழாதே

சரி, காதலில் வீழ்வது நம் கைகளிலா இருக்கிறது? இதற்கு தலைவன் கூறும் பதில் என்ன ?
அடுத்த பாடலில் காண்போம்

வளரும் ..............

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Aug 10, 2011 4:43 pm

காதல் என்றால் என்ன

வாழ்க்கையில் நாம் பல்வேறு மனிதர்களை சந்திக்கிறோம்,பல்வேறு
சூழ்நிலையை கடக்கிறோம். இப்படி கடந்து வரும் போது நம் நினைவில் நிற்பவர்கள் ஒரு
சிலரே. தினமும் நாம் கடந்து செல்லும் பாதையில் பார்க்கும் அனைத்தும் நம் மனதை கவருவதில்லை.
ஒவ்வொருவரையும் ஒரு விஷயம் கவர்கிறது.

ஏன்,இங்கு பதியும் ஒரு சில விஷயங்கள் நம்மை கவர்கிறது, ஒரு
சில பெயர்கள் நம்மை கவர்கிறது. அவர்கள் எழுதும் எழுத்துக்கள் நன்றாக இருப்பதாக
தோன்றுகிறது ஏன் இப்படி தோன்றுகிறது
,முன் பின் பார்க்காத நபர்களிடமும் ஒரு இணக்கம் ஏற்படுகிறது.காதலும் இது போல் தான். ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தங்கள் வாழ்க்கையில் பல நபர்களை
சந்திக்கிறார்கள். ஒரு சிலருடன் தான் இணக்கம் ஏற்படுகிறது. ஒருவரை தான்
(ஒரு
சிலரை தான்) காதலிக்க தோன்றுகிறது. இது ஏன்
?, விடை
தெரியாத கேள்வி இது
, பல அழகான வாலிபர்களை கடந்த பெண், ஒரு
சராசரி ஆணிடம் காதல் கொள்கிறாள்
, கட்டழகு வாலிபர் ஒரு சாதாரண
பெண்ணிடம் காதலில் வீழ்கிறான்.

ஒருவரை ஒருவர் கவர்வதில் உருவம் முக்கிய பங்கு வகித்தாலும்,காதலில் பல நேரம் நாம் காரணம் இல்லாமல் வீழ்கிறோம், வீழ்ந்தபின்னர் தான்,இவை இவை காரணங்கள் என்று நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்கிறோம்.இரவு வந்ததும் இலைகளில் மெல்ல படரும் பனித்துளி போல் அது சத்தம்இல்லாமல் நமக்குள் நுழைகிறது. அறிவியல் இதற்கு ஆயிரம் காரணம் சொல்கிறது. நம்ம ஊரு இலக்கியங்கள்
நல் ஊழ் காரணம் என்று கூறுகிறது. இது ஏன் எப்படி நிகழ்கிறது என்று நமக்கு தெரியாது
, ஆனாலும்
நாம் காதலில் விழுகிறோம்.

இதை தான் இந்த தலைவனும் கூறுகிறான்.

திணை -குறிஞ்சி
பாடல் 3- பாங்கனை நோக்கி தலைவன் பாடியது(பாடல் : 136)
பாடியவர் - மிளைப்பெருங்கந்தனார்

காமம் காமம் என்ப; காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிச்
கடுத்தலும் தணிதலும் இன்றே யானை
குளகு மென்று ஆள் மதம் போலப்
பாணியும் உடைத்து அது காணுநர்ப் பெறினே

பொருள் விளக்கம்

காதல் காதல் என்றால் என்ன ?
காதல் பேயுமில்லை, நோயுமில்லை
அது குறைவதில்லை, தனிவதில்லை
பசும் தழையை தின்ற யானைக்கு தானாக மதம் ஏற்படுவதை போல்
பார்ப்பவரைப் பார்த்தால் அது தானாக வரும்.

காதல் இன்னவரிடம் வருவது தான் நமக்கு தெரியாது, ஆனால் ஒருவர் காதலில் வீழ்தார், அல்லது விழப் போகிறார் என்பதை எவ்வாறு அறிவது? தொல்காப்பியம் கூறும் சில அறிகுறிகள் என்ன என்பதை அடுத்து பார்போம்.

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Aug 14, 2011 8:42 am

தமிழ் மொழி - நீ
எட்டி நீன்று பார்த்திட
தப்பிப்பாய் - நெருங்கிட்டால்
வெறி கொண்டு கற்றிடுவாய்
இம்மொழிதனையே

ஐயா, நான் சரியான நேரத்தில் தான் இந்த பதிவை பார்த்திருக்கிறேன்ன்....காரணம் நான் நேற்று தான் குறுந்தொகை பாடல்களை படிக்க ஆரம்பித்தேன்........அதன் விளக்கம் அதிலே தர படவில்லை.......அது நம் தளத்தில் உங்கள் மூலம் கிடைக்க பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 14, 2011 10:24 am

எண்ண எண்ண இனிக்கும் இனிய குறுந்தொகையை ருசுக்க ருசிக்கத் தரும் இன்சுவைப் பதிவு இது. என் எண்ணம் தங்கள் வழியாக நிறைவேறுகின்றது என்பதை நினைக்கும் போது நன்றியுடன் கலந்த விழித்துளி கண்ணின் விழித்திரையில் இருந்து கணினி திரையில் சொட்டித் தெறிக்கின்றது..... மிக்க நன்றி.. சதாசிவம் அவர்களே...தொடர்ந்து படிக்க ஆவலாக....

[You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 14, 2011 12:04 pm

நல்ல முயற்சி தொடருங்கள் சதாசிவம் [You must be registered and logged in to see this image.]

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Aug 15, 2011 9:49 am

நன்றி தோழர்களே,

உங்கள் ஊக்கத்திர்க்கு நன்றி
நன்றி

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Aug 19, 2011 4:56 pm

காதலின் அறிகுறிகள்
காதல் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது, ஆனால் "யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே" என்ற பழமொழி போல் காதல் வருவதற்கு முன் சில அறிகுறிகள் தோன்றும். இதை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய தொல்காப்பியம் நமக்கு எடுத்து கூறுகிறது. தொல்காப்பியம் ஆண் பெண் இணைவை கற்பு நெறி, களவு நெறி என்று இருவகைப்படுத்துகிறது. கற்பு என்பது பெரியவர்கள் சம்மதத்துடன் நடை பெறுவது. களவு (ஒருவர் உள்ளத்தை மற்றொருவர் களவாடுவதால் களவு என்று கூறப்படுகிறது) என்பது தலைவனும் தலைவியும் தன்னுள் தானாக இணைவது. இப்படி இணையும் போது ஏற்படும் உணர்வுகளை தொல்காப்பியம் ஐந்திணை இலக்கணமாக கூறுகிறது. இப்படி காதல் வசப்படும் போது ஏற்படும் உணர்வை இந்த பாடல் வரிகள் அழகாக எடுத்துக் கூறுகிறது. இன்றைக்கும் பொருந்தும் பாடல் இது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே தமிழர் அறிவில் சிறந்தவர்கள் என்று இந்த பாடல் மூலம் அறியலாம்.

பாடல் : தொல்காப்பியம் -களவியல்
பெண்ணுக்கு (ஆண்களுக்கும்)
வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்
ஆக்கம் செப்பல், நாணு வரை இறத்தல்
நோக்குவதெல்லாம் அவையே போறல்
மறத்தல் மயக்கம் சாக்காடு என்று இச்
சிறப்புடை மரபிணை களவு என மொழிப

பொருள் விளக்கம்

ஒரு ஆடவனை (பெண்ணை ) பார்க்க பார்க்க விருப்பம் எழுதல்
பேசலாமா, வேண்டாமா என்று ஒருதலையாக மனதுக்குள் யோசித்தல்
என்னடா, எப்படி ஆரம்பிக்குறது என்று யோசித்து வருந்தி மெலிதல்,
தன் மனதுக்குள் இது சரியா வரும் என்று நமக்கு நாமே ஊக்கம் செய்தல், சொல்லும் வரை இறப்பது போல் துன்பம் அடைதல், பார்க்கும் இடம் எல்லாம் அவன் (அவள்) பெயர், உருவம் தெரிதல், வழக்கமாக செய்யும் வேலையை மறத்தல் (அவன் நினைவாக இருத்தல்), எதிலும் கவனம் இல்லாமல் ஒரு மயக்கத்தில் இருத்தல், இப்படி இருப்பதற்கு செத்து போயிடலாமோ என்று யோசித்தல்.......இப்படி எல்லாம் இருப்பது ஒருவர் காதலில் வீழ்ந்து விட்டார் என்பதற்கு உள்ள அறிகுறிகள்.

ஆண்களுக்கு (பெண்களுக்கும்)

முன்னிலை ஆக்கல் சொல்வழிப்படுத்தல்
நல் நயம் உரைத்தல் நகை நனி உறா அ
அந்நிலை அறிதல் மெலிவு விளக்குறுத்தல்
தன் நிலை உரைத்தல் தெளிவு அகப்படுத்தல் என்று
இன்னவை நிகழும் என்மனார் புலவர்
.........
மெய்தொட்டுப் பயிரல் பொய் பாராட்டல்
இடம் பெற்றுத் தழா அல் இடையூறு கிளத்தல்
நீடு நினைந்து இரங்கல் கூடுதல் உறுதல் ......

பொருள் விளக்கம்

பெண் (ஆண்) முன்னால் வலிய சென்று அவள் (அவன்) கவனத்தை ஈர்த்தல்
பேசி பேசியே தன் வசப்படுத்த முயற்சி செய்தல்
நல்லபடியாக (நைசாக ) பேசுதல், சிரிக்கும் படி வேடிக்கை செய்தல்
அவர்களின் மனநிலையை அறிந்து சந்தர்ப்பம் பார்த்து மெல்ல எடுத்து தன்னை பற்றி எடுத்து உரைத்தல், தெளிவு ஏறுபடுத்துதல் (கேட்பதற்கு முன்னரே தான் யார், எதிர்கால திட்டம் என்ன, நல்லவன் வல்லவன் என்று கூறுதல்)......
பேசும் போது தொட்டு பேச முயற்சி செய்தல் (ரியாக்சன் எப்படி என்று தெரிந்து கொள்ள), நீ தேவதை, ராஜா குமரி என்று பொய்யாகப் பாராட்டுதல், இடம் கிடைத்தால் தழுவுதல், பிரச்சனையை போக்குதல், அவளை நினைத்து ஏங்குதல் , கூடுதல் , ஊடல் கொள்ளுதல்..........

இப்படி எல்லாம் காதல் வரும் போதும், வந்த பின்னும் நிகழும் என்று தொல்காப்பியம் கூறுகிறது.

காதலில் ஆணோ பெண்ணோ சொல்வதற்கு முன்னரே இருவருக்கும் ஒத்த மன உணர்வு வந்து விடுகிறது, இப்படி வந்த பிறகு தான் நாம் தைரியத்தை வரவழைத்து காதலை சொல்கிறோம். ஆணோ பெண்ணோ இப்படி சிக்னல் வராமல் பெரும்பாலும் யாரும்
காதலை வெளிப்படுத்துவதில்லை.

WHEN I SAW YOU I FELL IN LOVE
AND YOU SMILED BECAUSE YOU KNEW - William Shakespeare

காதலுக்கு முதல் தூது கண்கள் தான், குறுந்தொகை என்ன கூறுகிறது அடுத்த பாடலில் காண்போம்.

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Aug 20, 2011 12:33 pm

காதலியின் கண்கள்

காதலில் கண்கள் செய்யும் மாயம் ஆயிரம், சின்ன குறும் பார்வை ஆயிரம் வார்த்தைகளை விழுங்கி விடுகிறது, கோபம், சிருங்காரம் (காதல்/காமம் ), நகை (சிரிப்பு), ஆச்சரியம், பயம், அருவெறுப்பு, வீரம், கருணை, சாந்தம் என்ற நவரசங்களை மட்டும் அல்லாமல் வெட்கம், துக்கம், தவிப்பு என்று துணை ரசங்களையும் கண்கள் வெளிப்படுத்துகின்றது. மருளும் விழிக்கு மான்விழி என்றும், இமைத்து மலரும் விழிக்கு மலர் விழி என்றும், அங்கும் இங்கும் மீன் போல் தாவும் விழிக்கு கயல் விழி என்றும், இதயத்தை துளைக்கும் விழிக்கு வேல் விழி என்றும், குளிர்ந்த விழிகளை பனிவிழி என்றும், அங்கயற்கண்ணி, தாமரைக்கண்ணி என்றும், கண்களால் அருளும் விழிக்கு மீனாட்சி என்றும், அகலமான விழிகளை உடையவளை விசாலாட்சி என்றும், காதல் கொள்ளும் விழிகளை உடையவளை காமாட்சி என்றும், (மனிதர்களின் ஆசையை தன் கண்களால் நிறைவேற்றும் அருளும் பார்வை உடைய தெய்வத்தை காமாட்சி என்றும் ஆன்மீகம் பொருள் சொல்கிறது.) என்று கண்களைக் கொண்டு பல பெயர்களை அழைக்கிறோம், காதலியின் கண்ணை பார்த்து எழுதாத கவிஞனே இல்லை என்று கூறலாம்.

இப்படி ஒரு காந்தக் கண்கள் பற்றி தலைவன் கூறும் அழகான குறுந்தொகை பாடல் இது ...........

திணை : குறிஞ்சி
பாடல் 4 : பூ ஒத்து அலமரும்
பாடல் எழுதியவர் : மள்ளனார்
காதலியின் கண்களைப் பற்றி தலைவன் பாடுவது

"பூ ஒத்து அலமரும் தகைய ஏ ஒத்து
எல்லாரும் அறிய நோய் செய்தனவே
தே மொழித் திரண்ட மென்
தோள் மா மலைப் தோள்
பரீ இ வித்திய ஏனல்
குரீ இ ஒப்புவாள் பெரு மழைக் கண்ணே"

பொருள் விளக்கம்

பூ போல் சுழன்று, அம்பைப் போல் எல்லாரும் அறிய என்னை
துன்புறுத்துகின்றது அவள் விழிகள்,
தேன் போல் தித்திக்கும் குரல், திரண்ட தோள்கள் கொண்டு
பருந்திக் காட்டில் குருவி விரட்டும்
என் தலைவியின் குளிர்ந்த கண்கள்.

கம்ப ராமாயணத்தில் மிதிலைக் காட்சியில் அரண்மனை மாடத்தில் நின்று இருந்த சீதையின் கண்களைப் பார்த்து கம்பனும் இப்படித்தான் கூறுகிறான்........

"கொல்லும் வேலும் கூற்றமும்
என்னும் இவை எல்லாம்
வெல்லும் வெல்லும் எண்ண
மதர்க்கும் விழி கொண்டாள்
சொல்லும் தன்மைத்து அன்று அது
குன்றும் சுவரும் திண்
கல்லும் புல்லும் கண்டு உருகப்
பெண் கனி நின்றாள்"

பொருள் விளக்கம்
மனிதர்களை கொல்லக்கூடிய கூரான வேலும், உயிர்களை எடுக்கும் எமதர்மன் என்று கூறக்கூடிய உலகில் உள்ள கொடிய விஷயங்களை அனைத்தும் தோற்றுப் போகும் என்று கூறும் வகையில் அனைவரையும் கவரும் விழிகள் கொண்டாள் இவள், அப்படி இப்படி என்று வார்த்தைகளால் வர்ணனை செய்ய முடியாத அழகு விழிகள் இவை, பெரிய குன்றும் , கோட்டை சுவரும், உறுதியான கல்லும், பட்டுப் போன புல்லும் இவள் பார்வையில் உருகும் படி, பெண் கனியான சீதை நின்றாள்.

திருவள்ளுவர் கண் விதுப்பழிதல் (அதிகாரம் 117) என்று பத்து திருக்குறளை
கண்களுக்காக மட்டுமே செலவு செய்திருக்கிறார் என்றால் கண்களின் அருமையை
உணருங்கள்.

இப்படி கண்கள் பற்றி எழுந்த பாடல்கள் ஆயிரம்.........

ஆண்களைப் காப்பாற்ற வேண்டுமானால் பெண்களின் கண்களுக்கு மட்டும் திரை இடுங்கள். அது ஒன்று தான் அனைத்து அட்டகாசத்தையும் செய்கிறது.............அவர்களின் கடைக்கண் பார்வை ஒன்று போதும் ...

"கண்ணில் கடைக்கண் பார்வை கன்னியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமாரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்"
- பாரதிதாசன்

ஒரு பெண் கடைக்கண் பார்வை கட்டிவிட்டால் இளைஞர்களுக்கு மண்ணில் இருக்கும் பெரிய மலையும் ஒரு சிறிய கடுகு போல் இருக்கும்.

பெண்கள் கண்ணசைப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நம் பெரியவர்கள் கூறுவதும், பொம்பளை சிரிச்சாப் போச்சு புகையிலை விரிஞ்சாச் போச்சு என்று கூறுவதும் இதனால் தான்.

இப்படி ஒருவர் கண்கள் ஒருவரைப் பார்க்கும் பொழுது எண்ண நிகழும், கம்பன் என்ன சொல்கிறார் என்று அடுத்த பாடலில் காண்போம்

காதல் வளரும்......

[You must be registered and logged in to see this image.]

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Aug 31, 2011 2:19 pm

காதலர் பார்வை

காதல் வரும் போது, ஒருவரின் பார்வை ஒருவரை ஈர்க்கிறது, ஆணின் பார்வையை வைத்து அவன் மனதில் என்ன இருக்கும் என்று ஊகிக்கும் ஆற்றல் பெண்களுக்கு உண்டு, ஒரு ஆண் காதல் நோக்குடன் , வளைய வருவதும், அசட்டு சிரிப்பும் பெண்களால் சுலபமாக இனம் கண்டு கொள்ள முடிகிறது. விளையாட்டுத்தனமாக காதல் செய்யும் ஒருவன் எதையும் யோசிக்காமல் பெண்களிடம் பேச முடிகிறது, ஆனால் உண்மையில் காதல் செய்யும் ஆண்கள், பெண்களிடம் காதலை வெளிப்படுத்த மிகவும் கஷ்டப்படுகின்றனர், எங்கே தன்னை தவறாக எண்ணி விடுவாளோ என்று எண்ணி காதலை வெளிப்படுத்த சமயம் பார்த்து, சமயம் பார்த்து பல தடவை தோல்வி அடைகின்றனர். இப்படி காதல் நோக்குடன் இருக்கும் ஆடவனுக்கு பெண்கள் சொல்லும் சம்மதம் கண்கள் மூலம் தான், பிறகு ஒரு சிறு சிரிப்பு. இது போதும், ஆண்கள் அடையும் சந்தோசத்திற்கு அளவே இல்லை. காதலில் இந்த தருணம் தான் ஆயிரம் மகிழ்ச்சியை அளிக்ககூடியது.

" கண்கள் இரண்டால், உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய், இழுத்தாய்
போதாதென்று ஒரு சின்ன சிரிப்பில், கள்ளச் சிரிப்பில் .............."

இப்படி காதல் வந்து ஒருவர் கண்ணை ஒருவர் பார்க்கும் காட்சி தான் இந்த கம்ப ராமாயணப் பாடலில் வெளிப்படுகிறது. பாற்கடலில் பள்ளி கொண்டு உள்ள நாராயணனும், மலர் மேல் இருக்கும் மகா லஷ்மியும் பிரிந்து மீண்டும் சந்திப்பதால் அவர்களுக்கு வார்த்தை அவசியம் இல்லை என்று கம்பர் கூறுகிறார் . முதல் பார்வையில் காதல் அனைவருக்கும் சாத்தியம் இல்லை, ஆனால் ஏதோ ஒரு ஈர்ப்பு, பூர்வ ஜன்ம தொடர்ப்பு காதலர்க்கு முதல் சந்திப்பில் ஏற்படுகிறது.

இது என்ன ? முன் வினை தொடர்ப்பு என்று கம்ப ராமாயணம் பாடலும் இதை கூறுகிறது.

காதலர் பார்வையும், காதலியின் பார்வையின் சிறப்பை கூறும் பாடல்களை காண்போம்.

இராமபிரானும் சீதாதேவியும் ஒருவரையொருவர் கண்டுகொள்ளல்

598. எண் அரும் நலத்தினாள்
இனையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை
கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலை பெறாது
உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்!

அவளும் நோக்கினாள்.

பொருள் விளக்கம்

வார்த்தையில் சொல்லமுடியாத நலன்களை உடையவள், நல்ல இணையவள், கண்களால் கண்ணை கவ்வி, ஒரு கண் மற்றொரு கண்ணை உண்ண, வைத்த கண் மாறாமல், இருவரின் உணர்வும் ஒன்றிட இராமனும், சீதையும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

மருங்கு இலா நங்கையும்,
வசை இல் ஐயனும்,
ஒருங்கிய இரண்டு உடற்கு
உயிர் ஒன்று ஆயினார்,
கருங் கடல் பள்ளியில்
கலவி நீங்கிப் போய்ப்
பிரிந்தவர் கூடினால்,
பேசல் வேண்டுமோ.

பொருள் விளக்கம்

குறை இல்லாத திருமகளும், குற்றம் இல்லாத நாராயணனும் உயிர் ஒன்று, உடல் இரண்டாக ஆகினர், பாற்கடலில் பிரிந்து, பிறகு நீண்ட நாள் கழித்து மீண்டும் சந்தித்ததால் பேச இயலுமோ?

திணை -குறிஞ்சி
பாடல் 5 - தலைவியைத் தோழி வாயிலாகப் பெற நினைந்து அத் தோழியிடம் பணிவுடைய சொற்களைக் கூறி நின்ற தலைவன் தலைவிக்கும் தனக்கும் முன்னுள்ள பழக்கத்தைக் குறிப்பாக அறிவித்தது.)
(பாடல் : 286)
பாடியவர் - எயிற்றியினார்

"உள்ளிக் காண்பென் போல்வன் முள்ளெயிற்
றமிழ்த மூறுமஞ் செவ்வாய்க் கமழகில்
ஆர நாறு மறல்போற் கூந்தற்
பேரமர் மழைக்கட் கொடிச்சி
மூரன் முறுவலொடு மதைஇய நோக்கே".

பொருள் விளக்கம்

முல்லைப் பூப்போல் வரிசையாக இருக்கும் வெண்மை பற்கள், அமிழ்தம் ஊரும் செவ்வாய், அகில், சந்தனம் மனம் கமழும் கரிய மணல் போல் உள்ள கரிய கூந்தல், உயர்ந்த மலையில் உள்ள பனிபோல் உள்ள குளிர்ச்சியை உடைய கண்களால் அவள் பார்த்த பார்வையும், அவள் செய்த கள்ளச் சிரிப்பையும் எப்படி மறக்க முடியும்? அதை எண்ணி நான் மகிழ்வேன்....

காதல் வந்து விட்டது, காதலி பார்வையில் சிக்னல் கொடுத்துவிட்டால், அடுத்து என்ன, அனைத்து மகிழ்ச்சி தான், காதலில் மகிழ்வதற்க்கு முன் நம் காதல் உண்மையா என்று எவ்வாறு அறிவது? அடுத்த வரும் குறுந்தொகைப் பாடலில் காண்போம்.

காதல் வளரும் ..............

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக