புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மறைவு, தமிழ்கூறும் நல் உலகுக்குப் பேரிழப்பு _


   
   
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Mon Jul 18, 2011 3:53 pm

இலங்கையின் மூத்த நுண்கலை ஆய்வாளராக, விமர்சகராக, கவிஞராக, சிந்தனையாளராக அறியப்பட்டவர் கார்த்திகேசு சிவத்தம்பி. இவர் நல்லாசிரியனின் இயல்புகளை எல்லாம் தன்னுள் வாங்கி பேராசிரியராகத் திகழ்ந்த ஒரு மாமனிதராவார்.

மிகச் சிறந்த நாடக எழுத்தாளராகவும், நாடக நெறியாளராகவும் விளங்கியதுடன், ஈழத்து நாடக வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒருவராகவும் திகழ்ந்தார்.

டைனோசரின் எலும்பை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி டைனோசரை உருவாக்கினார்களோ அதே போல் கூத்தை வைத்துக் கொண்டு பழைய நாடக மரபை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகத்தை விதைத்தவர் பேராசிரியர் சிவத்தம்பி என, கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் நுண்கலை துறை தலைவர் பேராசிரியர் சி.மௌனகுரு புகழந்து கூறியிருக்கிறார்.

இலக்கிய வரலாற்றுக் காலப்பகுப்பு பற்றிய அவரது வேறுபட்ட கருத்துக்களை தனக்குரிய பாணியில் மிகவும் தெளிவாகவும் நுட்பமாகவும் நடத்தக் கூடிய வல்லமை மிக்கவராகவும் இவர் விளங்கினார். அவரது தமிழ் அறிவின் ஆழத்தினால் அனைவரும் வியக்கும் அளவுக்கு உயர்ந்தவராக விளங்கினார். தம் மாணவ சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய சேவைகள் அளப்பரியவை. நல்லதோர் ஆசிரியருக்கு சிறந்த எடுத்துக்காட்டு பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி.

மாணவர்களுடனான கண்டிப்பில்லாத கனிவான, அன்பான வார்த்தைகள் மூலம் அவர்களைத் தன் வழிக்கு ஈர்க்கும் சக்தி படைத்தவராகவும், ஏமாற்றுபவர்களின் எதிரியாகவும், மாணவர்களுக்கு உதவி செய்வதில் பேருபகாரியாகவும் விளங்கியவர் இவர். இப்படிப்பட்ட மாமனிதனுக்கு எதிராகவும் கண்டனக் குரல்கள் எழுப்பப்படாமல் இல்லை. ஆனால் அதற்கெல்லாம் சளைத்தவர் அல்லர் பேராசிரியர்.

'என்னைப் பற்றி எழுப்பப்படும் கண்டனக் குரல்களே என் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தன" என இகழ்ச்சியைக் கூட புகழ்ச்சியாக ஏற்று தன் பணியை தொடர்ந்தவர் இவர்.

அவர் தன் மாணவர்களுக்குப் பாடம் நடத்தி பரீட்சைக்கு மாத்திரம் தயார்படுத்துவதைவிட, அவர்களை புத்திஜீவிகளாகவும், பரந்த அறிவுடையவர்களாகவும் உருவாக்குவதையே தன் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார். ஆசிரியர்கள் என்றால், மாணவப் பரம்பரையை உருவாக்குபவர்கள,; எனவே கண்டிப்புடன் அவர்களை நடத்தினால்தான் தம் தொழிலுக்கு கௌரவம் என எண்ணியிருக்கும் ஆசிரியர்கள் மத்தியில் மாணவர்களைத் தம் பிள்ளைகளாய் ஆதரித்து, அவர்கள் மனதில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துக் கொண்டவர் பேராசிரியர்.

பேராசிரியரின் பெயரைச் சொன்னால் போதும்;, ஏனையோர் அவரிடம் பயின்ற மாணவர்களுக்கு அளிக்கும் மதிப்பும் மரியாதையும் அளப்பரியவை. அந்தளவுக்கு பேராசிரியரின் நற்பெயர் உலகம் முழுவதும் பரவியிருந்தது என்றால் மிகையாகாது.

ஆசிரியர் ஒருவர் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதற்கு பேராசிரியர் ஒரு சிறந்த முன்மாதிரி;. ஒரு சிறந்த ஆசிரியனாக மட்டுமல்லாது, பெற்றோருக்குச் சிறந்த மகனாக, மாணவனாக, நண்பனாக, சமூக சேவையாளனாக, கணவராக, தந்தையாக தன் பெறுப்புக்களை நிறைவேற்றி, தான் பிறந்த கரவை மண்ணுக்கும், நாட்டுக்கும் சிறப்பு சேர்த்தவர் பேராசிரியர் சிவத்தம்பி.

உலக நாடுகள் பலவற்றுக்குத் தன் புலமை காரணமான புலம்பெயர்ந்து சென்றாலும், தன் மண்ணின் மரபுகளைவிட்டு புலம்பெயராத மண்ணின் மைந்தனாகவும் இவர் விளங்கினார்.

இத்தகைய புலமைமிக்க, பெருமைமிக்க ஒருவரை தமிழ்கூறும் நல் உலகம் இழந்து தவிக்கின்றது. இவரது மறைவு தமிழ் உலகோருக்கு ஒரு பேரிழப்பு என்பதே நிதர்சனம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக