புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_c10ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_m10ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_c10 
55 Posts - 63%
heezulia
ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_c10ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_m10ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_c10ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_m10ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_c10ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_m10ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_c10ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_m10ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_c10ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_m10ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_c10ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_m10ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_c10ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_m10ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_c10ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_m10ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_c10ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_m10ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_c10 
50 Posts - 63%
heezulia
ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_c10ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_m10ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_c10ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_m10ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_c10ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_m10ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_c10ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_m10ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_c10ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_m10ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_c10ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_m10ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_c10ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_m10ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_c10ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_m10ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jun 28, 2011 6:40 pm

ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Cutegirl

வயசுக்கு வந்த பிள்ளையை வளர்க்க வேண்டியது அம்மாவோட பொறுப்பு என நைஸாக நழுவும் அப்பாவா நீங்கள்? கொஞ்சம் நில்லுங்கள். உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை நீங்கள் தான். திருதிருவென்று முழிக்காதீங்க… உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவு தான் என்கிறார் ஒரு .ஃபிரான்ஸ் நாட்டு அறிஞர்.

தந்தையின் நேசம் கலந்த வழிகாட்டுதல் இல்லாத இளம் வயதுப் பெண்கள் பல்வேறு சிக்கல்களில் விழுகிறார்கள். சிறுவயதிலேயே அவர்கள் பாலியல் ரீதியாக பலவீனப்படுகிறார்கள். தேவையற்ற தாய்மையைப் பெற்றுக் கொள்கிறார்கள். இதையெல்லாம் விரிவான ஆராய்ச்சி ஒன்று சொல்கிறது.

இந்த ஆராய்ச்சியை முன் நின்று நடத்தியவர் நியூசிலாந்திலுள்ள கேண்டர்பர்க் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரான புரூஸ் ஜே எல்லிஸ். டீன் ஏஜ் பருவத்திலேயே செக்ஸ் பிரச்சினைகளில் மாட்டி கர்ப்பமாவது அமெரிக்கா மற்றும் நியூசிலாந்தில் சர்வ சாதாரணம். இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என அவர்கள் அலசி ஆராய்ந்தபோது தான் சிக்கியிருக்கிறது இந்த அதிர்ச்சியூட்டும் உண்மை. தந்தையின் சரியான வழிகாட்டுதல், அன்பு, அரவணைப்பு இல்லாதது தான் எல்லா பிரச்சினைக்கும் மூல காரணமாம். இப்போது சொல்லுங்கள், டீன் ஏஜ் பெண்ணின் வளர்ச்சிக்கு நீங்கள் தேவையா இல்லையா ?

ஒரு டீன் ஏஜ் மகளுக்கு அப்பா என்பவர் வெறும் ஒரு நபரல்ல. ஒரு நண்பன், பாதுகாவலன், ஊக்கமூட்டுபவர், உற்சாகப்படுத்துபவர், தன்னம்பிக்கை வளர்ப்பவர், நம்பிக்கை ஊட்டுபவர், பண்புகளை ஊட்டுபவர், வழிகாட்டி என எக்கச்சக்க முகங்கள் அவருக்கு இருக்க வேண்டும். ஒரு பெண் முதலில் சந்திக்கும் ஆண் அவளுடைய அப்பா தானே? அப்பாவிடமிருந்து தான் அவள் ஒரு ஆணுக்குரிய இலக்கணங்களைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவனின் குணாதிசயங்களைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவருடைய அளவீடுகளைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவரின் தேவையைக் கண்டு கொள்கிறாள். எனவே மகள் மழலையாய் இருக்கும் போதே எல்லா வகையிலும் முன் மாதிரியான வாழ்க்கை வாழவேண்டியது அப்பாவின் கடமையாகிறது.

சின்ன வயதில் மழலையாய் சிரித்துச் சிணுங்குகையில், அழகழகாய் ஆடைகள் வாங்கிக் கொடுப்பதானாலும் சரி, பென்சில், ரப்பர் வாங்குவதானாலும் சரி ரொம்பவே ஈடுபாடு காட்டுவீர்கள். எல்லாவற்றையும் தேடித் தேடி வாங்குவீர்கள். பாப்பாவும் ரொம்பவே சமர்த்தாய் உங்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் தருவாள். திடீரென ஒரு நாள் பார்த்தால், சட்டுபுட்டுன்னு வளர்ந்து நிர்ப்பாள். “என் டாடி சூப்பர்” என்று சொல்லிக் கொண்டிருந்தவள், “டாடிக்கு ஒரு மண்ணும் தெரியாது” என்று பல்டி அடிப்பாள். மூக்குத்தியை எடுத்து நாக்கில் மாட்டுவாள். டென்ஷன் ஆகாதீர்கள். எல்லாவற்றுக்கும் காரணம் அவளுடைய உடல், மன மாற்றங்கள் தான்.

என் பொண்ணுக்கு என்னைக் கண்டாலே புடிக்கல. அவளுக்கு நான் இனிமே தேவையில்லை என்றெல்லாம் உளறிக் கொட்டாதீர்கள். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் மகள் உங்கள் மகள் தான். உங்கள் மீதான பாசமும், அன்பும், கரிசனையும் எப்போதுமே அவளிடம் நிரம்பி இருக்கும். ஆனால் அவளுடைய வெளிப்படுத்தல்களில் தான் எக்கச் சக்க மாற்றங்கள் முண்டியடிக்கும்.

“டாடி பிளீஸ்…. டாடி… வாங்கிக் கொடுங்க டாடி” என்று சின்ன வயதில் கெஞ்சிய மகள் “டாட்…. எனக்கு இது வேணும். முடியுமா முடியாதா?” என பிடிவாதம் பிடிப்பாள். உடனே நீங்கள் பதட்டப்படுவீர்கள். ஆனால் உண்மையில் அவள் உங்களுடைய அனுமதியை எதிர்பார்த்து நிற்கிறாள். அப்பாவின் அனுமதி இருந்தால் தான் அவளுக்கு அதில் ஒரு ஆத்ம திருப்தி. நீங்க பாட்டுக்கு எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு நிராகரித்துத் தள்ளாதீர்கள். “நல்லதுன்னா அப்பா ஒத்துப்பார்” எனும் நிலமை தான் இருக்க வேண்டுமே தவிர “அவர் கிட்டே என்ன சொன்னாலும் வேலைக்காவாது” என்ற நிலைக்கு நீங்கள் வந்து விடவே கூடாது.

இது ஒரு நீச்சல் போல. கரையில் இருந்து கொண்டே நீங்கள் ஆர்டர் போட முடியாது. இன்னும் சொல்லப் போனால் டீன் ஏஜ் பருவத்தினருக்கு அட்வைஸ் எனும் வார்த்தையே அலர்ஜி. காரணம் பெரும்பாலும் அவளுடைய விருப்பத்துக்கு நேரானதாகத் தான் இருக்கிறது அப்பாக்களின் அட்வைஸ். அதற்காக நல்ல விஷயங்களைச் சொல்லக் கூடாதா என்பதல்ல. அதை செயலில் காட்டவேண்டும். அல்லது நாசூக்காக விளக்க வேண்டும். பேசுவதை விட மிக மிக அதிகமாய் மகள் பேசுவதைக் கேட்கவேண்டும். அது தான் முக்கியம்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், “என் அப்பா டெக்னாலஜியில் என்னைப் போல ஹைடெக்..” என கருதுவதில் உங்கள் மகளுக்கு இருக்கும் மகிழ்ச்சி அலாதியானது. நீங்கள் அந்த டெக்னாலஜி உலகுக்குள் நுழைந்தால் தான் அதிலுள்ள நன்மை தீமைகளை நாசூக்காக உங்கள் மகளுக்குச் சொல்லவும் முடியும்! அதை விட்டு விட்டு, “என்ன இவ சாப்பிடும்போ எஸ் எம் எஸ் அடிக்கிறா, பேசிகிட்டே எஸ் எம் எஸ் அடிக்கிறா, ஆர்குட், பேஸ் புக் என்னன்னவோ சொல்றா….” என புலம்பித் தள்ளாதீர்கள்.

இன்னொரு விஷயம், உங்கள் மகள் பருவத்துக்குரிய வனப்புடன் வளர்கிறாள் என்றதும் தள்ளியே நிற்காதீர்கள். அது மன அளவில் உங்கள் டீன் ஏஜ் மகளைப் பாதிக்கும் என்கின்றனர் உளவியலார்கள். உங்கள் மகளின் தோளைத் தட்டிப் பாராட்டுவதோ, தலையைக் கோதிப் பாராட்டுவதோ, செல்லமாய் அரவணைத்துக் கொள்தலோ அவளுக்கு ரொம்பவே தேவை.

அடிக்கடி வெளியே கூட்டிப் போங்கள். ஐஸ்கிரீம் பார்லர் போன்ற இடங்களுக்கு ஜாலியாகப் போய் வாருங்கள். மகளுடன் நிறைய நேரம் செலவிடுங்கள். நிறைய நேரத்தை நீங்கள் அவளுடன் செலவிடும்போது அவளுக்கு இயல்பான உரையாடல் சாத்தியப்படுகிறது. நினைத்ததை எப்படியேனும் வெளிப்படுத்தி விடுவாள். அவள் பள்ளியிலோ, கல்லூரியிலோ ஏதேனும் விழா நடக்கிறது , அழைக்கிறாள் என்றால் தவற விடாதீர்கள். வெறுமனே நீங்கள் அவளுடன் இருந்தால் போதும் அவள் உங்களை ரொம்பவே கொண்டாடுவாள்.

நீங்கள் அவளை அன்பு செய்கிறீர்கள். சரி! மதிக்கிறீர்கள். சரி! ஆனால் அதை அவளிடம் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறீர்களா? இல்லையேல் அதைச் சொல்லுங்கள் முதலில். டீன் ஏஜ் மனது எதிலும் வெளிப்படையாய் இருக்க விரும்பும் மனது. சுற்றி வளைத்து எதையும் பேசாமல், உங்கள் மகளை நீங்கள் மதிக்கிறீர்கள், அன்பு செய்கிறீர்கள் என்பதைச் சொல்லி விடுங்கள்.

டீன் ஏஜ் மகளின் தினசரிகள் பல்வேறு அனுபவங்களால் நிரம்பி வழியும். ஆனந்தம், கவலை, எரிச்சல், சோகம் என எக்கச் சக்க உணர்வுகள் நிரம்பி வழியும். சக தோழிகளின் கிண்டல், படிப்பு, அழகு என கண்டதுக்கும் கவலைப்படும் வயது அது. அதை முதலில் நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும். “எதுவானாலும் கவலையில்லை …. அப்பா இருக்கிறார்” எனும் நம்பிக்கையை நீங்கள் உங்கள் மகளிடம் ஊற்ற முடிந்தால் அதை விடப் பெரிய விஷயம் ஏதும் இல்லை. அதற்கு மகளிடம் உண்மையாய் இருக்க வேண்டியது உலக மகா தேவை!

மகளிடம் நீங்கள் எந்த அளவுக்கு உண்மையாய், நம்பிக்கைக்குரியவராய் இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு அவள் உங்களிடம் வெளிப்படையாய் பேசுவாள். உண்மையை உள்ளபடி பேசுவாள். அப்படி மனம் திறந்து பேசும் போது எந்தக் காரணம் கொண்டும் அவளைத் திட்டாதீர்கள். அவள் என்னதான் மிகப்பெரிய தவறு செய்திருந்தாலும் சரி, உணர்ச்சி வசப்படாதீர்கள். பிரச்சினைகள் – விளைவுகள் – தீர்வுகள் என சிந்தியுங்கள். நீங்கள் பதட்டப்பட்டு உங்கள் கோபத்தையும், ஆத்திரத்தையும் மகளிடம் காட்டி விட்டால் போச்சு. அது வீட்டைப் பூட்டி சாவியை தூர எறிவதற்குச் சமம். உங்கள் மகள் அதன் பின் உங்களிடம் எதையும் பேசுவாள் என்று சொல்வதற்கில்லை.

எப்போதும் அவளிடம் தோழமை உணர்வுடன் பழகுங்கள். அடிக்கடு உங்கள் மூடு மாறாமல் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம். “அப்பா எப்போ அமைதியா இருப்பாரு, எப்போ எரிஞ்சு விழுவாருன்னு தெரியாது” எனும் நிலமை வந்தால் சிக்கல் தான். அவளுடைய படிப்பு, நட்பு, எல்லாவற்றிலும் உங்கள் அளவான ஈடுபாடு இருக்கட்டும். “அவளுக்கு இதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை” என்று மட்டும் எப்போதும் நினைக்காதீர்கள். குறிப்பாக ஆண்களைப் பற்றியும், ஆண்களின் குணாதிசயங்கள், சிந்தனைகள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றைப் பற்றியும் அவளுக்குப் புரியும் வகையில் அவ்வப்போது சொல்வது அவசியம். வெளுத்ததெல்லாம் பாலல்ல, பாய்சன் கூட உண்டு என்பதை அவள் தெரிந்து கொள்ள வேண்டும், அதான் விஷயம்.

இந்த அப்பா மகள் பந்தத்தில் யாருக்கு அதிக பொறுப்பு என நினைக்கிறீர்கள்? அப்பாவுக்கு என்று சொன்னால் நீங்கள் ஒரு பொறுப்பான அப்பா என்று அர்த்தம். டீன் ஏஜ் மகளின் மனநிலையைப் புரிந்து கொண்டு பொறுமையாக வழிகாட்ட வேண்டியது உங்கள் கடமை. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். டீன் ஏஜ் பருவம் தொட்டால் வெடிக்கும் பருவம். அதனால் அவளை உசுப்பேற்றும் எந்த சண்டையையும் நடத்தாமல் இருப்பது நல்லது. குறிப்பாக அவளுடைய தோற்றம், அழகு, ஆடைகள் போன்றவற்றைக் கிண்டலடிக்காதீர்கள். மாறாக, பாராட்டுங்கள். பாராட்டுக்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும். அவளை வலுவாக்கும்.

சமூகம் சார்ந்த பல அறிதல்களையும் நீங்கள் தான் அவளுக்குச் சொல்லித் தர வேண்டும். அவற்றைப் பற்றிய தெளிவை மகளுக்குத் தரும் பொறுப்பும் உங்களிடமே.

ஒரு ஆச்சரிய உண்மை என்னவென்றால், பதின் வயதுத் தொடக்கத்தில் இருக்கும் மனோபாவம் நாள் செல்லச் செல்லப் பக்குவப்படும். பெண்ணின் திருமண வயது வரும்போது “அப்பா தான் உலகம்” எனும் நிலைக்குப் பெண்கள் வந்து விடுவார்கள். அதுவரை சலிக்காத வழிகாட்டலும், பொறுமையான அணுகு முறையும், நிபந்தனையற்றை அன்பும் நீங்கள் காட்ட வேண்டியது அவசியம்.

சின்ன வயதிலிருந்தே தந்தையின் வழிகாட்டுதலிலும், அன்பிலும் வளரும் குழந்தைகள் நல்ல மன வளர்ச்சி அடையும் என்கிறார் எழுத்தாளரும் மருத்துவருமான மெக் மீக்கர். “ஸ்ட்ராங் ஃபாதர்ஸ், ஸ்ட்ராங் டாட்டர்ஸ்” எனும் நூலில் அப்பாவின் வழிகாட்டுதலே டீன் ஏஜ் பெண்களுக்கு மிக மிகத் தேவை என்கிறார். “என் பொண்ணோட வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் நான்” எனும் எண்ணம் அப்பாக்களுக்கு வரவேண்டியது தான் முதல் தேவை என்கிறார் இவர்.

இன்னொரு முக்கியமான விஷயம், நீங்கள் உங்கள் மகளை எப்படி நடத்துகிறீர்கள் என்பதை வைத்து மட்டும் உங்கள் மகள் உங்களை எடை போடுவதில்லை. உங்கள் மனைவியை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள், மற்றவர்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பதையெல்லாம் அவள் கூட்டிக் கழித்துப் பார்ப்பாள். நீங்கள் எல்லா இடத்திலும் வலுவாக இல்லையேல் நீங்கள் அவளிடம் காட்டும் அன்பை போலித்தனம் கலந்ததாக அவள் கருதிக் கொள்ள வாய்ப்பு உண்டு.

கடைசியாக ஒன்று. “என் அப்பாவைப் போல நல்ல ஒரு ஆண் எனக்குக் கணவனாக வர வேண்டும்” என உங்கள் மகள் நினைக்க வேண்டும். அப்படி நடந்தால் நீங்கள் ஒரு அப்பாவாக வெற்றி பெற்று விட்டீர்கள் என்று பொருள்! வெற்றி பெற வாழ்த்துக்கள்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தன் மகள் இந்திரா காந்திக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கினார் என்பது வரலாறு. அவர் தனது மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்கள் எதிர்காலத்தில் அவரை முதல் பெண் பிரதமராக மிளிர்வதற்கு துணை நின்றது என்றுகூட சொல்லலாம். சிறையில் இருந்தபோதுகூட தன் மகளான இந்திராவுக்கு கடிதம் எழுத நேரு தவறியதில்லை
.

நன்றி சகோதரர் ஷேக் முகமது

கடயநல்லூர்.org



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Aஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Bஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Dஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Uஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Lஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Lஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Aஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  H
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Jun 28, 2011 9:36 pm

மிக மிக அருமையான பதிவு. நல்ல தந்தையாக இருக்க முயற்சி செய்வேன் .
positivekarthick
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் positivekarthick



ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Pஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Oஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Sஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Iஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Tஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Iஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Vஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Eஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Emptyஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Kஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Aஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Rஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Tஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Hஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Iஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  Cஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  K
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Tue Jun 28, 2011 10:06 pm

positivekarthick wrote:மிக மிக அருமையான பதிவு. நல்ல தந்தையாக இருக்க முயற்சி செய்வேன் .


realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Tue Jun 28, 2011 11:57 pm

வாய்பே இல்ல சார்.. இந்த திரியை லைக் பண்ணுனது நான் தான்..
ஏன்னா பொண்ணுக்களுக்கு ஆண் குழந்தைண புடிக்கும் ஆம்பளைகளுக்கு பெண் குழந்தைண புடிக்கும் என எங்கோ படிச்சது..
ஆனா அது உண்மைதான் சார்.. ஏன்னா எனக்கு பெண் குழந்தை தான் வேணும்.. பெயர் எல்லாம் யோசிச்சாச்சு ஆனா கல்யாணதான் ஆகல..
புதிய தத்துவவும் 10501 : "பொண்ணு அழகுக்கு ,ஆண் பெயருக்கு"

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jun 29, 2011 12:33 am

என் துணைவியார் மட்டும் சரினு சொன்னக்கண (வழி எனக்கு தெரியும்) பெண் குழந்தை தான் எனக்கு.. கண்டிப்பாக!!!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 29, 2011 12:38 am

எல்லோரும் படித்து அறிய வேண்டிய அருமையான பகிர்வு அப்துல்லாஹ் சார். அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஹலோ டாடி - ஒரு தந்தையா நீங்க?கட்டாயம் படியுங்கள்  47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக