புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_c10 
85 Posts - 79%
heezulia
கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_c10 
250 Posts - 77%
heezulia
கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_c10 
8 Posts - 2%
prajai
கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 8 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டதேவிப் புராணம்


   
   

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:03 am

First topic message reminder :

கண்டதேவிப் புராணம்
திரிசிரபுரம் மஹாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றியது.



இஃது சிவநேசம் பொருந்திய வெளிமுத்தி வயிரவ ஐயாவவர்கள் அநுமதிப்படி தேவகோட்டை மு.குப்பான் செட்டியாரவர்கள் குமாரர் முத்தரசப்பசெட்டியாரால் சென்னை இலக்ஷ்மீவிலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.


கடவுள் வாழ்த்து


1 விநாயகர்
பூமேவு பரையொருபாற் பெருமான்பின் பாற்றழுவிப் புணர்ந்தொன் றாய
மாமேவு பெண்பாலாண் பாலொடுமா றுற்றெரிந்து மாறு றாமே
தூமேவு முன்பால்வந் துறத்தழீஇ யொருமருப்பாற் றுணைப்பா லாய
தேமேவு முகமலரும் வலம்புரிக்குஞ் சரத்திருதாள் சேர்ந்து வாழ்வாம் 1

2 சொர்ன்னவருடேசர்
மாமேவு கடவுளருந் தடவுளருஞ் சுரும்பமர்பூ மாலை வேந்துங்
கோமேவு மலரானும் பலரானும் புகழ்திகிரிக் குரிசி றானுந்
தேமேவு பண்ணவரு நண்ணவருள் சுரந்துகண்ட தேவி மேவும்
பாமேவு புகழ்ச்செம்பொன் மாரிபொழிந் தவர்மலர்த்தாள் பரசி வாழ்வாம் 2

3 தேமாரி யமன்பதைக ளுளங்கருதி யன்னையுஞ்சீர் திகழ்பி தாவு
மாமாரி யனுமுலவாப் பெருங்கதியு நீயேயென் றடைந்து போற்றக்
காமாரி யாயிருந்துங் கவுமாரி யொடுங்கலந்த கருணை மூர்த்தி
பூமாரி சுரர்பொழியப் பொன்மாரி பொழிந்தபிரான் பொற்றாள் போற்றி 3

4 பெரியநாயகி
சொற்றபெரும் புவனமெலா மொருங்கீன்ற பெருந்தலைமைத் தோற்றத் தானோ
கொற்றமிகு பெருங்கருணை சுரக்குமிறை மையினானோ குமரி யாயுங்
கற்றமையிப் பெயர்பூண்டா யெனுமருத வாணரெதிர் கனிவா யுள்ளாற்
சற்றமைய முறுவலித்து மகிழ்பெரிய நாயகிதா டலைமேற் கொள்வாம் 4

5 வாய்ந்தபர சத்தியாய் விந்துவாய் மனோன்மணியாய் மகேசை யாய்ச்சீர்
வேய்ந்தவுமை யாய்த்திருவாய்ப் பாரதியா யிவரன்றி வேறா யின்னு
மேய்ந்தசிறை யிலிநாத னெத்திறநிற் பானதனுக் கியைய நின்றே
தோய்ந்தவுயிர்க் கின்புதவும் பெரியநா யகிதுணைத்தா டொழுது வாழ்வாம் 5

6 சபாநாயகர்.
மறையாதியியம்புகுறிகுணங்கடந்தோரைந்தெழுத்தேவடிவமாகி
நிறையாதிபடைப்பாதிதுடியாதியோரைந்துநிகழ்த்தநாளு
மிறையாதிதவிர்ந்திருவர்வியந்தேத்தவுமைதிருக்கண்விழைந்துசாத்த
வறையாதிமணிமன்றுண்டநவிலும்பெருவாழ்வையடுத்துவாழ்வாம் 6

7 சிவகாமியம்மை.
ஆன்றதாயடைந்தசுகங்கருவுமடைதருமாலென்றறைகூற்றிற்கோர்
சான்றதாயெவ்வுயிருமடையின்பந்தானடையுந்தவாலின்பாக
நான்றதாய்மிளிர்சடிலநாதனியற்றானந்தநடனங்காணு
மீன்றதாய்சிவகாமவல்லியிருதாமரைத்தாளிறைஞ்சிவாழ்வாம் 7

8 தட்சணாமூர்த்தி.
வேறு.
ஆய்தருபொருளுமாராய்ந்தடிநிழலடங்குமாண்பும்
வேய்தருமலர்நேரங்கைவிரலிருகூற்றிற்றேற்றித்
தோய்தருமுனிவர்நால்வர்துதித்திடக்கல்லாலென்னும்
பாய்தருவடிவாழ்முக்கட்பரனடிக்கன்புசெய்வாம் 8

9 வயிரவர்.
புகர்படுசெருக்குமேவல்புன்மையென்றெவருந்தேறப்
பகர்மறைகமழாநிற்கும்பரிகலமங்கையேந்தி
நிகரின்மான்முதலோர்மேனிநெய்த்தோர்கொண்டொளிர்பொன்மாரி
நகரினிதமர்ந்துவாழும்வடுகனைநயந்துவாழ்வாம் 9

10 மருதவிருட்சம்.
வேறு.
பரவியநாதமூலமாப்பராரைபணைகிளைகொம்பொடுவளாரும்
விரவியபஞ்சசத்தியாத்தளிர்கள்வேதமாமலர்களாகமமாக்
கரவியலாதவாசமைந்தெழுத்தாக்காமருசுகோதயமதுவா
வுரவியன்ஞானசொரூபமேயாகியொளிர்தருமருதினைத்துதிப்பாம் 10

11 வலம்புரிவிநாயகர்.
வேறு.
ஓங்குபெருந்தனக்கினமாயுற்றமதவாரணங்களொருங்குதேம்பி
யேங்குதிறமுறவருத்திவணக்கிடுமங்குசபாசமென்னுநாமந்
தாங்குபடையிரண்டுமொருதனைவணங்கக்கரத்தேந்தித்தலைமைபூண்டு
தேங்குநெடுங்கருணைபொழிவலம்புரிக்குஞ்சரத்திருதாள்சென்னிசேர்ப்பாம் 11

12 சுப்பிரமணியர்.
வெயிலேறவிரிக்குமுடிவானவர்விண்குடியேறவெள்ளையானை
குயிலேறவரிபிரமர்புள்ளேறவம்மனைவேர்கூடாமாதர்
கயிலேறமிளர்கடக்கையேறமெய்யேறக்கவினார்தன்கை
யயிலேறவமர்ந்துசிறைமயிலேறும்பெருமானையடுத்துவாழ்வாம். 12

13 திருநந்திதேவர்.
வேறு.
வரைபொடிபடுக்கும்வச்சிரப்படையும்வலிசெழுதண்டவெம்படையும்
விரைசெலற்றிறத்தின்மாற்றலர்நடுங்கும்விளங்கொளித்திகிரியம்படையும்
புரையமைசமழ்ப்புப்பொருந்தவில்வீசிப்பொலியும்வேத்திரப்படைதாங்கி
யுரையமைகயிலைகாத்தருணந்தியொருவனைமருவியேத்தெடுப்பாம். 13

14 தமிழாசிரியர்.
வேறு.
பன்னிருதடங்கைச்செம்மல்பாற்சிவஞானம்பெற்றுப்
பன்னிருகதிருமொன்றாம்பான்மையின்விளங்கிநாளும்
பன்னிருதவமாணாக்கர்பழிச்சிடமலையமேவப்
பன்னிருசரணநாளுந்தலைக்கொடுபரவுவோமே. 14

15 திருஞானசம்பந்தசுவாமிகள்.
அறைவடமொழிநவின்றபாணினியகத்துநாண
விறையமர்மயிலைமூதூரிருந்தவோர்தாதுகொண்டே
நிறைதரவொராறுமேலுநிரப்புதென்மொழிநவின்ற
மறையவன்காழிவேந்தன்மலரடிக்கன்புசெய்வாம். 15

16 திருநாவுக்கரசுசுவாமிகள்.
நீற்றுமெய்ச்சிவனேயென்றுமவனினுநிறைந்தாரென்றுஞ்
சாற்றுதற்கியையத்தந்தைதன்பரியாயப்பேரு
ளீற்றுமெய்கெடுத்தொன்றிற்பன்னிரண்டன்மெய்கொடுத்துக்கூறத்
தோற்றுமெய்ப்புகழ்சானாவிற்கரசினைத்தொழுதுவாழ்வாம். 16

17 சுந்தரமூர்த்திசுவாமிகள்.
எண்ணியமறுமைப்பேறுமிம்மையேயுற்றதென்ன
மண்ணியவியங்கும்வெள்ளிமால்வரையெருத்தமேறி
யண்ணியவியங்காவெள்ளிமால்வரையடைந்துவாழும்
புண்ணியமூர்த்திநாவற்புலனைப்போற்றிவாழ்வாம். 17

18 மாணிக்கவாசக சுவாமிகள்.
மாயவனறியாப்பாதமலரவன்மனைவிமேனி
தோயவுமலரோன்காணாச்சுடர்முடியனையானீன்ற
பாயநீருடுத்தமங்கையிவரவுமுருகிப்பாடுந்
தூயவர்கமலபாதத்துணையுளத்திருத்திவாழ்வாம். 18

19 தண்டீசநாயனார்.
மலர்புரைகுடங்கைவெள்வாய்மழுப்படையொன்றுதாங்கி
யலர்பசுவோம்பியின்னுமுண்ணுதலாதியாவும்
பலர்புகழ்தனக்கென்றொன்றும்வேண்டிலாப்பரன்போற்கொண்ட
நலர்செறிசேய்ஞலூர்வாழ்பிள்ளையைநயத்தல்செய்வாம். 19

20 அறுபத்துமூன்றுநாயன்மார்.
வேறு.
பூன்றதன்மையில்புன்மையேநெஞ்சகத்
தேன்றவஞ்சகமாதியிருப்பினுந்
தோன்றவோர்புரஞ்சூழ்ந்துறவாழ்வரா
லான்றமேன்மையறுபத்துமூவரே. 20

21 பஞ்சாக்கரதேசிகர்.
பூதங்கடந்துபொறிகடந்துபுலனுங்கடந்துபுகல்காண
பேதங்கடந்துகாலமுதலனைத்துங்கடந்துபெருவிந்து
நாதங்கடந்துவளர்துறைசைநமச்சிவாயதேசிகன்பொற்
பாதங்கடந்துபற்றறுத்தானினிமேலல்லற்படலிலையே. 21

22 அம்பலவாண்தேசிகர்.
வேறு.
மருடருவினைகடேய்த்தோமாமலக்குறும்புமாய்த்தோ
மிருடருபிறப்பில்வாரோமென்றுமோரியல்பிற்றீரோ
மருடருதுறைசைமேவுமம்பலவாணதேவன்
பொருடருகமலத்தாளெந்தலைமிசைப்புனைந்தபோதே. 22

23 சித்தாந்தசைவர்கள்.
பண்ணியபுறமார்க்கங்கள்பாழ்படவொழித்துமேலாம்
புண்ணியவிபூதியக்கமணியொடைந்தெழுத்தும்போற்றி
யண்ணியசிவானந்தத்தேனிரம்பவுண்டமையாநிற்கும்
தண்ணியகுணசித்தாந்தசைவரைவணக்கஞ்செய்வாம். 23

24 ஆலப்பணிசெய்வோர்கள்.
அரவுநீர்ச்சடையானெங்களம்மையோடகிலமெல்லாம்
பரவுமாறமர்பொன்மாரிப்பதிப்பெருந்தளியிற்றொண்டின்
விரவுநான்மறையோராதியலகிடல்விழைந்தோரீறா
முரவுசேர்தவத்தர்யாருமுவந்தியாந்தொழுந்தேவாவார். 24


கடவுள் வாழ்த்து முற்றிற்று.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:39 am


14. சந்திரதீர்த்தப்படலம் (701- 727)


701 மதியெனுங்கடவு, டுதிபுரிகுரவன்,
பதிமனையவடன், பொதிநலனகர்ந்தான். 1

702 அதுதெரிகுரவன், விதுமுகநோக்கி,
முதுசினங்கடவக், கதுமெனவைதான். 2

703 நீகயரோகி, யாகவென்றுரைத்த,
மோகமிலுரைகேட், டாகமிக்குளைந்தான். 3

704 என்னினிச்செய்வ, தென்னநைந்தழிந்தே,
யென்னவந்தறின, மென்னரனுளனால். 4

705 என்றுளந்துணிந்தா, னன்றுவந்தடைந்தான்,
றொன்றுவெவ்வினைதீர்த், தொன்றுபொன்மாரி. 5

706 மருதடிமேய, வொருதனிக்கடவு,
ளிருசரண்போற்றிப், பருவரறீர்ப்பான். 6

707 தூயவள்பெரிய, நாயகிபதமு,
நேயமிக்குருகி, யாயறப்பணிந்தான். 7

708 மடக்கொடிபாகற், கிடப்புறமாகக்,
கடப்படுரெயா, டடத்தொருகீழ்பால். 8

709 ஒருதடமாற்றி, வெருவறமூழ்கித்,
திருவமர்நீறு, மருவமெய்ப்பூசி. 9

710 வாலியவக்க, மாலிகைபுனைந்து,
கோலியவெழத்தைந், தாலியவெண்ணி. 10

711 அப்பனன்முகந்து, வெப்பமில்பெருமான்,
றிப்பியமுடிமே, லொப்பறவாட்டி. 11

712 மலர்பலசூட்டி, யலர்கனியூட்டி,
யலர்சுடர்கோட்டி, நலர்கொளத்துதிப்பான். 12

713 அறிவிலிநாயேன், செறிதரப்புரிந்த,
முறிவில்வெம்பழியைப், பிறிதுசெய்பெரும. 13

714 குணமிலிொாயேனணவுறப்புரிந்த,
தணவரும்பழியை, யுணவுசெய்யொருவ. 14

715 கோடியநாயேன், றேடியபழியை,
வாடியபுரிதி, நீடியநிமல. 15

716 சிறுமருதூர்வாழ், மறுவறுதேவே,
கறுவுசெய்நாயேன், பெறுபழிதவிர்த்தி. 16

717 என்றுரையாட, வன்றுநங்கோமான்,
முன்றனித்தோன்றி, நின்றனனுவந்தே. 17

718 கண்டனனாலோன், றண்டருமுவப்பின்,
மண்டனிற்றோயத், தெண்டனிட்டெழுந்தான். 18

719 குரவனெப்பிழைத்த, வுரவுடைப்பாவம்,
விரவியித்தேயத்துப், பரவலிற்றீர்த்தோம். 19

720 தேய்தலும்வளர்வு, மாய்தரலின்றி,
யாய்தரப்பொலிதி, பாய்மதித்தேவே. 20

721 வேண்டுவதினியென், னீண்டுரையென்னக்,
காண்டகுதிரத்தாள், பூண்டிஃதுரைப்பான். 21

722 தோற்றியநாயே, னாற்றியதீர்த்தம்,
போற்றியமேலோர், பாற்றிருவுறுக. 22

723 இதுதருகெ்ன்றா, னதுநனியருளிக்,
கதுமெனமறைந்தான், விதுமுடிப்பெருமான். 23

724 மதிதனதுலகம், பதிதரப்புகுந்தான்,
றுதியவன்றீர்த்தம், விதியொடுதோய்வார். 24

725 வேண்டியசெல்வம், பூண்டினிதமர்வா,
ராண்டவன்வார, மூண்டுறப்படிவோர். 25

726 எண்ணியதடைவார், புண்ணிமதிநீர்,
நண்ணியதிதுமேற், கண்ணியகதையும். 26

727 சொற்றிடக்கேட்டி, நற்றவனேயென்,
றுற்றுரைசெய்வான், சொற்றகுசூதன். 27

சந்திரதீர்த்தப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 13-க்கு, திருவிருத்தம். - 727.




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:40 am

15. சடாயுபூசைப்படலம் (728 - 767 )

728 முராரிமுற்பிருகுமாமுனிவன்சாபத்தாற்,
றராதலித்தயோத்தியாடசாதற்கிணை
யராவளைதிகிரிகளனுகராயுற,
விராமனென்பெயர்புனையெச்சமாயினான். 1

729 நிறைபெருங்கலையெலாநிரம்பக்கற்றபின்,
குறையொழியிளவல்பின்றொடரக்கோசிக
னறைமகச்சாலையையடைந்துதாடகை,
முறைமகனோடுயிர்முடியப்பாற்றியே. 2

730 மகவினைநிரம்புறக்காத்துமாமைசா,
லகலிகைகல்லுருவகற்றியாய்வள
மிகலுடைமிதுலையிற்புகுந்துவில்லிறுத்,
திகல்விழிச்சீதைகையினிதபற்றியே. 3

731 மழுப்படையிராமனைவழியினேற்றவன்,
கொழுப்படைதரப்பறித்தகன்றுகூடிய
முழுப்படையொடுமதிலயோத்திமுன்னினான்,
விழுப்படையேந்தியவீரர்வீரனே. 4

732 இளையதாய்கலாம்புரிந்திடலிற்சீதையும்,
வளைசிலைத்தம்பியுந்தொடரமன்னனெஞ்
சுளைதரநகரநீத்துவந்துபோயொரு,
விளைவலிக்குகனையம்விரும்பிநட்டரோ. 5

733 பாதுகைகொடுத்தழும்பரதற்போக்கியே,
மோதுவல்விராதனைமுடித்துமாதவச்
சாதுமாமுனிவர்தம்மைப்போற்றிநட்,
டோதுகோதாவிரிதீரத்துற்றனன். 6

734 ஆவயினரக்கிமூக்கரிந்துபோக்கிட,
மேவியகரன்முதலோரைவீட்டிமெய்
சார்வருநவ்விமாரீசன்சார்தரக்,
கூர்வரும்பகழியொன்றேவிக்கொன்றனன். 7

735 வையமேத்திளவன்முன்மாட்டுச்சென்றிடக்,
குய்யம்வைத்ததிதிபோற்குறுகிநோக்கிய
வெய்யவாளரக்கர்கோன்விரும்புசீதையை,
யையகொண்டேகலுமவள்பலம்புவாள். 8

736 ஓதரும்பேதமையுறைத்தநீர்மையாற்,
றீதமையும்படிசிந்தைசெய்துளெ
னாதகாதெனவிவணடைந்துகாத்தியென்,
னாதனேநாதனேயென்றுநையுமால். 9

737 வளமிலைமாயமான்வண்ணமென்னவு,
மளமருமனத்தொடுமவாவப்பட்டயான
களமிகுமரக்கனாற்கலங்கிநொந்துளே,
னிளவலேயிளவலேயென்றுதேம்புமால். 10



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:40 am

738 வேறு.
சீதையிங்ஙனமழுதழுதிரங்குபுதேம்பு
மோதையஞ்செவியூடழற்சலாகையினுறல
மாதையாவனோகொடுசெல்வானெனமதித்திராமன்
றாதையாகியநெடுவலிப்பெருஞ்சிறைச்சடாயு. 11

739 எழுந்துவான்மிசைப்பறந்தனனேகுதேரெதிருற்
றழுந்துதுன்பமுற்றயர்தருமருகியைக்கண்டான்
விழந்துதேம்பிநீமெலியற்கமெல்லியலென்று
கொழுந்துகொண்டெழுவெகுளியான்கொடியனைநோக்கி. 12

740 என்னகாரியஞ்செய்தனைகொழுந்தழுலெடுத்துத்
தன்னதாடையிற்பொதிபவர்தம்மைநீநிகர்த்தாய்
மன்னன்மைந்தனீதுணர்தரின்வாழுவைகொல்லோ
வன்னனோருமுன்னணங்கைவிட்டகலுதியாக்க. 13

741 என்றுகூறலுநீயொருசழுகுமற்றெனக்கு
நன்றுகூறுதனன்றுநன்றாலெனநகைத்தான்
வென்றுமேம்படுமென்னுரைவிழைந்திலைநகைத்தாய்
கொன்றுநின்னுயிர்குடிப்பலென்றுருத்தனன்சடாயு. 14

742 வில்வளைத்தனனன்வெஞ்சரம்பற்பலதொடுத்தான்
மல்வளைத்ததோளிராவணன்மற்றதுநோக்கிச்
சொல்வளைத்தவெஞ்சிறைவலிச்சடாயுவுந்துனைந்து
கொல்வளைத்தனனலகினாற்குலைதரக்கறித்தான். 15

743 மீட்டும்பற்பலவெஞ்சரந்தொடுத்தனன்றோட்டி
காட்டுமூக்கினுங்காலினுஞ்சிதர்தரக்கழித்துப்
பாட்டுவண்டுளர்மாலைமற்றவன்கரம்பரித்த
கோட்டுவெஞ்சிலைப்பறித்ததுமுறித்ததுகுருகு. 16

744 புள்ளுவன்மைமிக்கழகிதானென்றிறும்பூது
கொள்ளுநெஞ்சினன்மூட்டுமோர்கொடுஞ்சிலைகொண்டு
தெள்ளுகூர்ங்கணைபற்பலவுடம்பெலாஞ்செறிந்து
நள்ளுமாறுதொட்டார்த்தனன்வானமுநடுங்க 17

745 ஆர்த்தகாலையினெருவையுந்தனதுமெய்யடங்கப்
போர்த்தவாளிகளனைத்தையுமுதறுபுபோக்கிக்
கூர்த்தமூக்கினாற்குண்டலமணிமுடிபுயத்துச்
சேர்த்தபூண்முதற்பறித்துமட்சிதறியதன்றே. 18

746 கொடியவெஞ்சினங்கொதித்தெழவேலொன்றுகொண்டு
நெடியவன்சிறைச்சடாயுமேல்விடுத்தனனிருதன்
மடியமற்றதுசிறைவலிக்காற்றினான்மாற்றிப்
படியமண்ணிடைப்பாகனைச்செகுத்ததுபறவை. 19

747 தண்டமொன்றுகொண்டெறிந்தனனரக்கர்தந்தலைவ
னண்டம்விண்டதென்றறைதரவதுவிரைந்தணுகல்
கண்டபுள்ளுமற்றென்செயுமிதுவெனக்கடுகித்
துண்டம்வைத்திருதுண்டமாக்கியதவன்சோர. 20



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:40 am

748 நாட்டுமன்னவன்மருகியுணலிதரப்பொழுது
நீட்டுகின்றதென்னென்றுவெஞ்சினங்கொடுநிமிர்ந்து
கோட்டுவார்சிலைதூணியாழ்க்கொடியையுங்குறைத்துப்
பூட்டுவாம்பரிமுழுமையுங்கொன்றதுபுள்ளே. 21

749 இனையவெஞ்சமராற்றுழியிராவணனெண்ணின்
முனையவெம்படைசெலுத்தியுமொருமயிர்முனையு
நினையமாய்ந்திலதென்னினிச்செயலெனநினைந்து
வினையமொன்றனால்வெல்லுவான்குறித்திதுவிளம்பும். 22

750 வருதிவீரருள்வீரனீயுயிர்நிலைமதித்தே
பொருதனன்றுநின்னுயிர்நிலைபுகலெனப்புகன்றான்
கருதல்வேறிலானின்னுயிர்நிலைகழறென்றா
னிருதனென்வலத்தாட்பெருவிரனிலையென்றான். 23

751 வஞ்சமில்லவனிருஞ்சிறையடியெனவகுத்து
நஞ்சமன்னவனகுபெருவிரற்றலைமோதத்
துஞ்சறீர்ந்தவனிருந்தனன்சுடர்வடிவாள்கொண்
டெஞ்சுறாதிருசிறையையுமறுத்துமண்ணிட்டான். 24

752 சடாயுவீழ்தலுஞ்சாநகிதனைக்கொடுபோனான்
கடாவுவாள்வலியரக்கன்மற் றிவணிலைகலங்கிப்
படாதமெய்யுரைத்திறத்தலின்வெற்றியென்பாற்றே
கெடாதசீருமுண்டாயதென்றுவந்ததுகிளர்புள். 25

753 உண்மைகூறுதலெங்குநன்றாயினுமுறாரை
யண்மையாரெனமதித்ததுகூறுதலடாதா
லெண்மையாயினேன்படையிடத்தஃதிசைத்தெனினும்
வண்மைசால்புகழ்க்கீறிலையென்றுளமகிழ்ந்தான். 26

754 கறைவிடந்தருகூரெயிறிழந்தகட்செவியும்
பிறைநிகர்த்திடுமருப்பிழந்துழன்றபேருவாவு
மிறைசெயேதிகையிழந்தவோர்வீரனும்விசைக்குஞ்
சிறையிழந்தமற்றியானுமொப்பினிச்செயலென்னே. 27

755 மண்ணின்மீமிசையிருந்துயிர்வாழ்தலின்மதிப்பா
ரெண்ணின்மேவியசிவபிரான்பூசனையியற்றி
விண்ணின்மேலெனுமவனடியடைவதேமேன்மை
கண்ணினீங்கிதிற்சிறந்ததுவேறொன்றுகாணேன். 28

756 என்றுதேறினன்மென்மெலநடந்துவந்திமையோர்
சென்றுபோற்றிடுமருச்சுனவனத்தினைச்சேர்ந்தான்
கன்றுமாலயற்கறிவரியான்பெருங்கருணை
நன்றுசெய்திடப்பூசனைபுரிதிறநயந்தான். 29

757 மன்னுதம்பிரான்பச்சிமதிசையுமைவகுத்த
துன்னுதீர்த்தத்தின்குணதிசையொருதடந்தொட்டான்
முன்னுமத்தடமுழுகிவாயப்புனன்முகந்து
மின்னுநீண்முடியாட்டினன்வேடர்கோமகன்போல். 30



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:41 am

758 நறிய கூவிள மாதி கணயந் துகொய்தெடுத்துச்
செறியச் சூட்டி னன்காய் கனியூட் டினன்சேவித்
தறிய முன்ன நின்றன் புறவடிக் கடிபணிந்து
நிறிய மேன்மை யிற்புகுந் திடுதோத் திரநிகழ்த்தும் 31

759 சிறையி லாத வென்பவத் துறுசிறை தவிர்ப்பதற்கே
குறையி லாத விக்கான் மருதடிக் குடிகொண்டாய்
மிறையி லாத வெம்மழுப் படைவித் தகவிமல
கறையி லாத நின்கண் ணருள்வழங் கிடக்கடவை 32

760 அரிய சான்புகுந் தருந்தவ மாற்றி லேனந்தோ
பிரிய மேமிகுந் தூனுகர் வாழ்க்கை யேபெற்றேன்
றெரிய நின்னடிக் கடிய னாயடைந் தனன்சீர்சால்
பெரிய நாயகி மணாள நின்பே ரருள்புரிதி 33

761 என்று வேண்டலு மெம்பிரான் பெரிய நாயகியோ
டன்று மால்விடை மேற்பொலி காட்சி தந்தருள
நன்று போற்றுபு நின்றன னாய கனோக்கி
யொன்று பத்தியிற் புரிந்தநின் பூச னையுவந்தேம் 34

762 யாது வேண்டினுங் கொடுப்ப தற்கொரு தடையின்றா
லோது கென்றலுஞ் சடாயு மற்றுவப் பொடுபணிந்து
சாது மாமறைத் தலைவ நின்னிரு சரண்சார்ந்தேன்
போது மேயநின் னடித்த லம்புணர் தலேவேண்டும் 35

763 சிறையி லாதவென் பூசனை யேற்ற லிற்செழுந்தே
னுறைசெய் கொன்றையாய் சிறையிலி நாத னென்றொருபேர்
நிறைய நின்றனக் காக யானிய மித்ததீர்த்தத்
துறையின் மூழ்குவோர் தூய ராய்ப்பொலி வதுவேண்டும் 36

764 இன்ன மூவகை வரமுந் தந்தரு ளெனவிரந்தா
னன்ன தாகென வருளு புமறைந் தனனமலன்
பின்ன ராவயிற் பெயர்ந்தி ராகவன் வரல்பேண
முன்னர் வந்தன னடந்த காரிய மெலாமொழிந்து 37

765 பொத்தை யூன்பொதி புலையுடம் பொழித்த னன்பொலிந்து
மித்தை யாகிய பவஞ்ச வாழ்வனைத் தையும்வெறுத்து
நத்தை யேந்தினோன் முதலி யோர்நணு குதற்குரிய
சித்தை மேயினன் சிவானந்த போக மேதிளைத்தான் 38

766 ஒற்றை மேருவில் வாங்கி முப்புரத் தெரியூட்டுங்
கற்றை வார்சடை மருத வாணரைக் கடவுளர்க
ளற்றை நாண்முதற் சிறையிலி நாத ரென்றறைவார்
பற்றை யார்மனு வெனப்படும் பகர்ப வர்க்கப்பேர் 39

767 சடாயுதீர்த்தநீர்மூழ்குவோர்தவாவினைதணந்து
படாதபேரின்பவாரியுண்மூழ்குவர்பத்தி
விடாதபுள்புரிபூசைசொற்றனமொருவேந்தன்
கெடாதபூசைசெய்மாட்சிகேளெனச்சொலுஞ்சூதன். 40

சடாயுபூசைப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 15 - க்கு, திருவிருத்தம் - 767.




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:42 am

16. காங்கேயன்பூசைப்படலம் (768 - 798)

768 அருண்முகத்தமைந்தநெஞ்சிற்பாண்டிநாடடங்கவாழ்வோ
னிருண்முகந்துண்டுமேற்செலிலங்கிலையலங்கல்வேலான்
பொருண்முகந்தெடுத்துவீசிப்புவியெலாம்புரக்குங்கையான்
வெருண்முகந்தொழியாவென்றிக்காங்கேயனெனுமோர்வேந்தன். 1

769 தாறுபாய்களிற்றானேற்றதரியலர்மகுடமேலா
லேறுபாய்பரியானெங்குமெதிர்ந்துசெலிவுளித்தேரான்
மாறுபாய்வயவர்வெள்ளமகிதலமுழுதும்போர்க்கப்
பாறுபாய்களத்துச்சென்றுபகைப்புறங்காணவல்லான். 2

770 செழுமணிப்பூணான்சார்ந்தவுயிர்க்கெலாஞ்செய்யுநீழன்
முழுமதிக்குடையானெல்லாக்கலைகளுமுற்றக்கற்றான்
பழுதில்வெண்ணீற்றுச்செல்வம்பாலிக்கும்பண்புமிக்கான்
றொழுதகுசிவமேமேலாம்பரமெனத்துணிந்தநீரான். 3

771 காமருகண்டதேவி ெஇனுநகர்கலந்துநாளு
மாமருமனைவிமக்கண்மலிதரவாழுநீரான்
பூமருவீசுமாலைப்புயாசலன்கடுஞ்சொலில்லான்
றேமருவடைந்தார்காட்சிக்கெளியவன்றிறத்தான்மிக்கான். 4

772 அனையவன்மதியான்மிக்கவமைச்சராதியர்தற்சூழ
நினைதருசெங்கோலோச்சிநீடுலகளிக்குநாளின்
வினையுறுவலியென்சொல்வாமேவுகோணிலைதிரிந்து
வனைதருமாரியின்றிவற்கடநிரம்பிற்றன்றே. 5

773 பரவுசோதிடநூல்வல்லார்பற்பலர்தம்மைக்கூவி
யுரவுநீர்ஞாலத்தென்னோமழைபெயலொழிந்ததென்றான்
புரவுசேரளியாயாண்டுபன்னிரண்டொழிந்துபோனால்
விரவுநீர்பொழியுமேகமென்றனர்வேந்தன்சோர்ந்தான். 6

774 உற்றபல்லுயிருமந்தோவுணவின்றிவருந்துமேயென்
றற்றமிலரசன்வேறுகளைகணுமறியானாகிச்
சொற்றடுமாறவீழ்ந்துசோர்ந்தனன்சோராநின்ற
மற்றவனுயிருண்கூற்றின்வற்கடம்பரந்ததன்றே. 7

775 கருமுகிலேட்டிலன்றிக்ககனத்துக்காண்பாரில்லை
யொருவிறம்பாணியன்றியுண்டிடும்பாணியில்லை
மருவுவெந்தாகநோயும்பசிநோயும்வருத்தலாலே
பொருவில்வெங்காமவேளும்போர்த்தொழிலொழிந்தானன்றே. 8

776 உழுதொழின்மறந்தாரெல்லாவுழவருமுழன்றுவெம்போர்க்
கெழுதொழின்மறந்தாரெல்லாவீரருமெரியுட்டெய்வந்
தொழுதொழின்மறந்தாரெல்லாப்பனவறுஞ்சோறுசோறென்
றழுதொழின்மறந்தாரில்லையகலிடத்தெவருமம்மா. 9

777 பூசைசெய்தன்றியொன்றும்புரிதராப்புந்தியோர்க்கு
மாசைதம்முயிர்போகாமற்காப்பதையன்றியில்லை
மாசையேவிகை்குஞ்சோரமரீஇப்புணர்மடந்தைமாரு
மோசைகூர்கற்பின்மிக்கமாதரொத்திருந்தாரண்றே. 10



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:42 am

778 கமர்பலவுடையவாகிக்கடும்பணியுலகந்தோற்றி
யமர்பலவேரியெல்லாமறல்கவர்நசைமீக்கஐொண்டே
யிமிழ்முகிலினங்காள்வேட்கையிரிதரவொருங்குநீலி
ருமிழ்புனலென்றுகாண்போமென்றுவாய்திறத்தலொக்கும். 11

779 விரும்புசெஞ்சாலிமற்றைவெண்சாலியரம்பையிஞ்சி
கரும்புகள்விளையாநின்றகாமருகழனியெல்லாம்
வரம்புபோய்நின்னதென்னதெனக்கொளும்வழக்குமாறிக்
கரம்புகளாயவென்றாலுயிர்நிலைகரைதற்பாற்றோ. 12

780 பாதலம்புகுதற்காயபாதையொன்றமைப்பார்போலப்
பூதலங்குடைந்துதண்டமாயிரமகழ்ந்துபோந்துங்
காதலம்புனல்கண்காணார்காணிலங்கவருமுன்னர்
மீதலம்பயிலும்வெய்யோன்வெப்பமுண்டொழிக்குமன்றே. 13

781 நகர்வயினில்லந்தோறுநகுமடைப்பள்ளியெல்லாந்
தகரருமடுப்பினூடுதழைந்தனமுளைத்தவாம்பி
புகர்படுமாணைபல்லிபுகுந்தனமுட்டையிட்டு
நிகரறக்கிடக்குமேன்றானிகழ்த்துவதின்னுமென்னே. 14

782 விழைதருகுளகிலாதுமெலிதருகளிநல்யானை
மழைபொழிதுவாரம்போலமதம்பொழிதுவாரமாகிக்
குழைதருதூங்கலாயுங்குறித்துரையத்தியாயும்
பிழைகண்முற்றுறுதோலாயுமொழிந்தனபெயர்தலற்றே. 15

783 கடுவிசைமுரணிற்றாவுங்கவனவாம்பரிகளெல்லாம்
படுபுனலுணவோடற்றுப்பசித்தழல்வெதுப்பப்பட்டு
நெடுவிலாவெகும்புதோற்றிநெட்டுயிர்ப்பெறிந்துதேம்பி
முடுவல்போனாக்குநீட்டிமுயங்கினவியைமாதோ. 16

784 குடம்புரைசெருத்தலாக்கள்கோதனமீனாவாகி
விடம்புரைகருங்கட்செவ்வாய்த்தெய்வமெல்லியலாரொத்த
கடம்புரைபறவையெல்லாங்கடுப்பொடுபறத்தலற்றுத்
தடம்புரைசடாயுவேபோற்றரைத்தலைநடந்தமாதோ. 17

785 ஒருவர்மற்றரிதுபெற்றசிற்றமுதொருகலத்து
மருவவைத்துண்ணுங்காலைமனங்கொளார்மிச்சிலென்று
வெருவவந்தொருவரீர்ப்பர்விரைந்திருவரும்வந்தீர்ப்பர்
கருதருமிதனைநோக்கிக்கரந்துவெத்துண்பாராரும். 18

786 முன்னவர்வேதமோதுமுறைமையுமறந்தார்செங்கோன்
மன்னவர்படையெடுக்குமாட்சியுமறந்தார்நாய்க
ரென்னவர்துலைக்கோறூக்குமியற்கையுமறந்தார்மற்றைப்
பின்னவருழுதலென்னும்பெற்றியுமறந்தாரம்மா. 19

787 காய்பசிதணிக்கவேண்டிக்காட்டகத்தூடுபுக்கு
மாய்தருவனைத்துநோக்கித்தழைகளுமாண்டவென்பா
ராய்தருமாயோன்முன்னாண்மண்முழுதள்ளியுண்டா
னேய்தருமுணவிலாதவித்தகுகாலத்தென்பார்.. 20



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:43 am

788 இன்னணமுயிர்கள்சாம்பல்கண்டிரங்குறகாங்கேய
மன்னவன்றன்பண்டாரமன்னியநிதிகளெல்லா
முன்னரிதாகமொண்டுமொண்டுபல்லிடத்தும்வீசி
யன்னனும்வறியனானானாரினித்தாங்கவல்லார். 21

789 நிதியெலாமாண்டபின்னர்நெடுமணிப்பணிகளெனப்
பதியெலாம்விற்றுவிற்றுப்பாருயிரோம்பிவந்தான்
றுதியெலாப்பொருளும்விற்றுத்தோற்றபினியாதுசெய்வான்
றிதியெலாவுயிர்க்குஞ்செய்யுந்திருநெடுமாலைச்சார்ந்தான். 22

790 ஆண்டவனருளினாலேயலங்குமிந்நகரத்துள்ளாற்
காண்டகநிருதித்திக்கிற்கவின்றவோர்கோயில்கொண்டு
பூண்டநற்கருணையாலேபோற்றுவையுயிர்களெல்லா
மீண்டவந்தடுத்தவெய்யகலியிரித்திடாமையென்னே. 23

791 என்றளியரசன்றாழ்ந்துவேண்டலுமிணர்த்துழாய்மா
னன்றுளமிரங்கியன்னான்காணமுன்னணுகிமன்னா
வொன்றுவெங்காலத்தீமைக்கியற்றலொன்றில்லையேனுஞ்
சென்றுநம்பிரானைத்தாழ்ந்துதெரியவிண்ணப்பஞ்செய்வோம். 24

792 வருதியென்றரசனோடுமருதமர்நீழன்மேய
பெருவிறலடிகட்சார்ந்துபெய்மலர்ப்பாதம்போற்றி
முருகமர்மாலைவேந்தன்முகிழ்த்தவற்கடத்தினாலே
யிருநிலத்துயிர்கள்சாம்புமெனப்பெருந்துயரத்தாழ்வான். 25

793 அன்னவன்றுயரந்தீரவாரருள்சுரத்தல்வேண்டு
மென்னரும்பரவிப்போற்றவிணர்மருதடியில்வாழு
முன்னவவென்றுபோற்றிமுகுந்தன்மிக்கிரத்தலோடுந்
தன்னருள்சரந்துமுக்கட்டம்பிரானருளிச்செய்வான். 24

794 மாயநீயிரந்தவாறேமன்னவற்கருளிச்செய்வோ
மாயவெங்கலியைத்தாங்குமளிதலைக்கொண்டுநம்பான்
மேயநீயின்றுதொட்டுக்கலிதாங்கியெனவிளம்புந்
தூயபேரொன்றுகோடியென்றனன்றெழுதான்மாலே. 27

795 தொழுதுமானிருதித்திக்கிற்றோன்றுதன்கோயிலுற்றான்
பழுதுதீரன்றுதொட்டுக்கலிதாங்கிப்பகவனென்று
முழுதுலகவனையோதுமுழங்குமப்பெயர்சொல்வார்க
ளெழுதுசீர்த்தியராய்வெய்யகலியிரித்திருப்பரன்றே. 28

796 அளிகிளர்திருமாலேகவண்ணல்காங்கேயனென்பான்
களிகிளர்நிருதிமூலைகலந்தொருநீர்த்தமாக்கித்
தெளிகிளரந்நீர்மூழ்கித்திப்பியநீறுபூசி
யொளிகிளருருத்திராக்கம்பூண்டெழுத்தைந்துமுன்னி. 29

797 அன்னபுண்ணியநன்னீர்மொண்டமலனையாட்டியாட்டிப்
பன்னரும்வில்வமாதிப்பற்பலமலருஞ்சூட்டிச்
சொன்னபல்லுணவுமூட்டித்தொக்கபல்லுபசாரங்க
ளென்னவுமினிதுசெய்துதிருமுனரிறைஞ்சிநின்றான். 30

798 இன்னணம்பூசையாற்றியிலங்கிலைவேற்காங்கேய
மன்னவன்வருநாண்முக்கண்வானவன்மருதநீழன்
முன்னவனருளிச்செய்ததிறமினிமொழிவாமென்று
பன்னருஞ்சூதன்சொல்வான்சவுநகமுனியைப்பார்த்தே. 31

காங்யேன்பூசைப்படல முற்றிற்று.
ஆக படலம் - 16 - க்கு, திருவிருத்தம் - 798.




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:44 am

17. பொன்மாரி பொழிந்த படலம் (799 - 835)

799 வட்டவெண்குடைக்காங்கேயமன்னவன்றன்னாலாக்கப்
பட்டநீராட்டியாட்டிப்பரம்பரன்றன்னைப்பூசித்
திட்டமிக்குறுநாளோர்நாளருளுவதெந்நாளென்று
முட்டகலன்பினோடுமுன்னின்றுதுதிக்கலுற்றான். 1

800 வற்கடகாலமேலிட்டுயிரெலாமயங்கச்சாடி
யற்குதலுடையதாகவடியனேவருந்திச்சோர்வே
னொற்கமிலுணர்ச்சியாளர்க்குள்ளொளியாகிநிற்குஞ்
சிற்கனசொரூபவென்றோதிருவருள்செய்யுநாளே. 2

801 உறுகலிவருத்தாநிற்கவுயிரெலாம்வாடநோக்கித்
தெறுவகையில்லேனாயசிதடனேன்வருந்துகின்றேன்
மறுவறதவத்தோருள்ளம்வயங்குபுமன்னாநிற்குஞ்
சிறுமருதூரவென்றோதிருவருள்செய்யுநாளே. 3

802 வாவிமேன்மேலும்வந்துவற்கடம்வருத்தாநிற்கப்
பாவியேன்வருந்துகின்றேன்பளகிலாக்குணத்தோர்தம்மைக்
கூவியாட்கொள்ளுந்தெய்வக்குணப்பெருங்கடலேகண்ட
தேவிவாழ்பரமவென்றோதிருவருள்செய்யுநாளே. 4

803 என்றுநெஞ்சுருகிநையவிருகணீரருவிபாய
நின்றுதன்வருத்தமோம்பனினைந்துவிண்ணப்பஞ்செய்யும்
பொன்றுதலில்லாவன்பற்கிரக்கமில்லாரேபோல
வொன்றும்வாய்மலராதையரிருந்தனருடைந்துபோனான். 5

804 போனவன்கிரகம்புக்குப்புந்திசெய்யுணவும்வேண்டா
னானவன்றரைமேல்வீழ்ந்துகிடந்தனனனையபோது
வானவனருளினாலேநித்திரைவந்ததாக
வூனவன்மயக்கந்தீர்ப்பான்கனவகத்துற்றானன்றே. 6

805 நரைபொலிசிகைமுடிந்துநாலநெற்றியில்வெண்ணீறுந்
திரைபொலிமார்பிற்பூண்டதெய்வப்பூணூலுமல்க
வரைபொலிசழங்கற்பின்போக்காடையுத்தரீயத்தோடு
தரைபொலிதாளராகித்தண்டமொன்றூன்றிச்சென்றார். 7

806 விருத்தவேதியராய்ச்சென்றார்வேந்தர்கோன்முன்னநின்று
கருத்தமைதுயரமெல்லாங்காற்றுதிபெரியாளோடும்
வருத்தமொன்றின்றித்தெய்வமருதர்சிவம்யாங்கண்டாய்
பொருத்lமின்றுன்னைவாட்டிப்பொருகலிக்கின்றுதொட்டு. 8

807 நிலவுநாமமர்வன்மீகநின்றொர்பொற்கொடிமேற்றோன்றுங்
கலவமற்றதையரிந்துகோடிநாடோறுநின்பாற்
கலவுவார்தமக்குநல்கக்காணுமென்றருளிவானோர்
பலவுபாயத்துங்காணாப்பரமனார்மறைந்துபோனார். 9

808 கற்றைவார்சடிலத்தையர்கனவில்வந்தருளிச்செய்த
வற்றைநாண்முதற்கொண்டியாருமவர்தமைவிரத்தரென்பார்
புற்றையார்பிரானோவென்றுபொருக்கெனவிழித்தான்வேந்த
னொற்றையாழியந்தேரோனுமொத்துடன்விழித்தானன்றே. 10



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:44 am

809 அதிசயம்பயப்பமன்னன்சிரமிசையங்கைகூப்பி
மதிமகிழ்சிறப்பவான்றமந்திரர்முதலோர்க்கூவிப்
புதியதன்கனவுகூறிப்பொருக்கெனவெழுந்துசென்று
கதியருடெய்வமேன்மைச்சிவகங்கைகலந்துமூழ்கி. 11

810 நித்திய கரும முற்றி நிறைந்துபே ரன்பு பொங்கச்
சத்திய ஞானா னந்தத் தனிப்பரஞ் சோதி வைகும்
பொத்திய திருவன் மீகத் தெதிர்புகுந் திறைஞ்சிக் கண்டான்
மெத்திய தேசு மிக்கோர் பொற்கொடி விளங்கா நிற்றல். 12

811 கனவிடை யையர் வந்து கட்டுரைத் திட்ட வாறே
நனவிடை நிரம்பக் கண்டு நயந்துகா ரேனக் கோடு
மனவிடை யமைத்தார் செய்த திருவருண் மதிக்குந் தோறப்
புனவிடை யாரைப் பல்காற் போற்றுவான் றுதிப்பான் மன்னன். 13

812 பூசைமுன் போலச் செய்து புற்றின்மேற் றோன்றா நிற்கு
மாசையங் கொடியை வாளா லரிந்துகைக் கொண்டு மாடத்
தோசையங் கழலான் சென்றா னற்றைநா ளுற்றோர்க் கெல்லா
மீசைபங் குடையான் றன்பே ரருணிகர்த் திருந்த தன்றே. 14

813 வழிவரு நாளு முன்போல் வந்துபூ சித்துச் செம்பொன்
பொழிகொடி முன்னை நாள்போற் பொலிந்திருந் திடவ ரிந்து
கழிமகிழ் சிறப்பக் கொண்டு கலந்தவர்க் கிலையென் னாது
பழிதப வன்று நல்கும் படிநிறைந் திருந்த தம்மா. 15

814 பற்பல நாளு மிந்தப் படியரிந் தரிந்தெ டுத்துப்
பொற்புற வருவோர்க் கெல்லாம் வறுமைபோக் கிடுவா னேனு
மற்புற வற்றைக் கன்றி மறுதினத் திற்க வாவும்
பெற்றிமற் றொழிந்த தின்றே யுயிர்க்கெனப் பெரிது முள்வான். 16

815 ஒருதினம் பண்டு போல வுற்றுவண் கொடியைப் பற்ற
மருதமர் முக்கண் மூர்த்தி மற்றவன் கவலை தீர்ப்பான்
கருதுபைங் கொடியை யுள்ளாற் செலுத்தினன் கவலை யோடு
வெருவுமுள் ளலைப்பப் பற்றி விடாதிழுத் தனன்பார் வேந்தன். 17

816 இழுத்தலும் புற்று விண்டு சிதர்ந்ததங் கிலிங்க மாய
முழுத்தசெஞ் சோதி தோன்ற முகிழ்த்தபொற் கொடியை விட்டே
யெழுத்தடந் தோளா னஞ்சி யிருகரங் குவித்து வீழ்ந்தான்
பழுத்தபே ரன்பன் காணும் படிவெளி வந்தா ரையர். 18

817 கனவகம் வந்தாற் போல நனவினுங் காட்சி நல்கும்
பனவரைக் கண்டு தாழ்ந்து பார்த்திபன் றுதித்து நின்றான்
றினகர கோடி யென்னத் திருவுருக் கொண்டு நின்ற
வனகமா மறையோர் பொன்பெ யெழிலியை நினைத்தா ரன்றே. 19

818 நினைத்தலு மோடி வந்து நெஞ்சநெக் குருகித் தாழ்ந்து
நனைத்தடங் கொன்றை மாலை நம்பனே பணியா தென்னக்
கனைத்தமா முகில்காள் கண்ட தேவியி னெல்லை காறு
முனைத்தபொன் பொழுதி ராலோர் முகுர்த்தமென் றருளி னானே. 20



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக