புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_c10 
85 Posts - 77%
heezulia
கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_c10 
250 Posts - 77%
heezulia
கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டதேவிப் புராணம்


   
   

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:03 am

First topic message reminder :

கண்டதேவிப் புராணம்
திரிசிரபுரம் மஹாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றியது.



இஃது சிவநேசம் பொருந்திய வெளிமுத்தி வயிரவ ஐயாவவர்கள் அநுமதிப்படி தேவகோட்டை மு.குப்பான் செட்டியாரவர்கள் குமாரர் முத்தரசப்பசெட்டியாரால் சென்னை இலக்ஷ்மீவிலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.


கடவுள் வாழ்த்து


1 விநாயகர்
பூமேவு பரையொருபாற் பெருமான்பின் பாற்றழுவிப் புணர்ந்தொன் றாய
மாமேவு பெண்பாலாண் பாலொடுமா றுற்றெரிந்து மாறு றாமே
தூமேவு முன்பால்வந் துறத்தழீஇ யொருமருப்பாற் றுணைப்பா லாய
தேமேவு முகமலரும் வலம்புரிக்குஞ் சரத்திருதாள் சேர்ந்து வாழ்வாம் 1

2 சொர்ன்னவருடேசர்
மாமேவு கடவுளருந் தடவுளருஞ் சுரும்பமர்பூ மாலை வேந்துங்
கோமேவு மலரானும் பலரானும் புகழ்திகிரிக் குரிசி றானுந்
தேமேவு பண்ணவரு நண்ணவருள் சுரந்துகண்ட தேவி மேவும்
பாமேவு புகழ்ச்செம்பொன் மாரிபொழிந் தவர்மலர்த்தாள் பரசி வாழ்வாம் 2

3 தேமாரி யமன்பதைக ளுளங்கருதி யன்னையுஞ்சீர் திகழ்பி தாவு
மாமாரி யனுமுலவாப் பெருங்கதியு நீயேயென் றடைந்து போற்றக்
காமாரி யாயிருந்துங் கவுமாரி யொடுங்கலந்த கருணை மூர்த்தி
பூமாரி சுரர்பொழியப் பொன்மாரி பொழிந்தபிரான் பொற்றாள் போற்றி 3

4 பெரியநாயகி
சொற்றபெரும் புவனமெலா மொருங்கீன்ற பெருந்தலைமைத் தோற்றத் தானோ
கொற்றமிகு பெருங்கருணை சுரக்குமிறை மையினானோ குமரி யாயுங்
கற்றமையிப் பெயர்பூண்டா யெனுமருத வாணரெதிர் கனிவா யுள்ளாற்
சற்றமைய முறுவலித்து மகிழ்பெரிய நாயகிதா டலைமேற் கொள்வாம் 4

5 வாய்ந்தபர சத்தியாய் விந்துவாய் மனோன்மணியாய் மகேசை யாய்ச்சீர்
வேய்ந்தவுமை யாய்த்திருவாய்ப் பாரதியா யிவரன்றி வேறா யின்னு
மேய்ந்தசிறை யிலிநாத னெத்திறநிற் பானதனுக் கியைய நின்றே
தோய்ந்தவுயிர்க் கின்புதவும் பெரியநா யகிதுணைத்தா டொழுது வாழ்வாம் 5

6 சபாநாயகர்.
மறையாதியியம்புகுறிகுணங்கடந்தோரைந்தெழுத்தேவடிவமாகி
நிறையாதிபடைப்பாதிதுடியாதியோரைந்துநிகழ்த்தநாளு
மிறையாதிதவிர்ந்திருவர்வியந்தேத்தவுமைதிருக்கண்விழைந்துசாத்த
வறையாதிமணிமன்றுண்டநவிலும்பெருவாழ்வையடுத்துவாழ்வாம் 6

7 சிவகாமியம்மை.
ஆன்றதாயடைந்தசுகங்கருவுமடைதருமாலென்றறைகூற்றிற்கோர்
சான்றதாயெவ்வுயிருமடையின்பந்தானடையுந்தவாலின்பாக
நான்றதாய்மிளிர்சடிலநாதனியற்றானந்தநடனங்காணு
மீன்றதாய்சிவகாமவல்லியிருதாமரைத்தாளிறைஞ்சிவாழ்வாம் 7

8 தட்சணாமூர்த்தி.
வேறு.
ஆய்தருபொருளுமாராய்ந்தடிநிழலடங்குமாண்பும்
வேய்தருமலர்நேரங்கைவிரலிருகூற்றிற்றேற்றித்
தோய்தருமுனிவர்நால்வர்துதித்திடக்கல்லாலென்னும்
பாய்தருவடிவாழ்முக்கட்பரனடிக்கன்புசெய்வாம் 8

9 வயிரவர்.
புகர்படுசெருக்குமேவல்புன்மையென்றெவருந்தேறப்
பகர்மறைகமழாநிற்கும்பரிகலமங்கையேந்தி
நிகரின்மான்முதலோர்மேனிநெய்த்தோர்கொண்டொளிர்பொன்மாரி
நகரினிதமர்ந்துவாழும்வடுகனைநயந்துவாழ்வாம் 9

10 மருதவிருட்சம்.
வேறு.
பரவியநாதமூலமாப்பராரைபணைகிளைகொம்பொடுவளாரும்
விரவியபஞ்சசத்தியாத்தளிர்கள்வேதமாமலர்களாகமமாக்
கரவியலாதவாசமைந்தெழுத்தாக்காமருசுகோதயமதுவா
வுரவியன்ஞானசொரூபமேயாகியொளிர்தருமருதினைத்துதிப்பாம் 10

11 வலம்புரிவிநாயகர்.
வேறு.
ஓங்குபெருந்தனக்கினமாயுற்றமதவாரணங்களொருங்குதேம்பி
யேங்குதிறமுறவருத்திவணக்கிடுமங்குசபாசமென்னுநாமந்
தாங்குபடையிரண்டுமொருதனைவணங்கக்கரத்தேந்தித்தலைமைபூண்டு
தேங்குநெடுங்கருணைபொழிவலம்புரிக்குஞ்சரத்திருதாள்சென்னிசேர்ப்பாம் 11

12 சுப்பிரமணியர்.
வெயிலேறவிரிக்குமுடிவானவர்விண்குடியேறவெள்ளையானை
குயிலேறவரிபிரமர்புள்ளேறவம்மனைவேர்கூடாமாதர்
கயிலேறமிளர்கடக்கையேறமெய்யேறக்கவினார்தன்கை
யயிலேறவமர்ந்துசிறைமயிலேறும்பெருமானையடுத்துவாழ்வாம். 12

13 திருநந்திதேவர்.
வேறு.
வரைபொடிபடுக்கும்வச்சிரப்படையும்வலிசெழுதண்டவெம்படையும்
விரைசெலற்றிறத்தின்மாற்றலர்நடுங்கும்விளங்கொளித்திகிரியம்படையும்
புரையமைசமழ்ப்புப்பொருந்தவில்வீசிப்பொலியும்வேத்திரப்படைதாங்கி
யுரையமைகயிலைகாத்தருணந்தியொருவனைமருவியேத்தெடுப்பாம். 13

14 தமிழாசிரியர்.
வேறு.
பன்னிருதடங்கைச்செம்மல்பாற்சிவஞானம்பெற்றுப்
பன்னிருகதிருமொன்றாம்பான்மையின்விளங்கிநாளும்
பன்னிருதவமாணாக்கர்பழிச்சிடமலையமேவப்
பன்னிருசரணநாளுந்தலைக்கொடுபரவுவோமே. 14

15 திருஞானசம்பந்தசுவாமிகள்.
அறைவடமொழிநவின்றபாணினியகத்துநாண
விறையமர்மயிலைமூதூரிருந்தவோர்தாதுகொண்டே
நிறைதரவொராறுமேலுநிரப்புதென்மொழிநவின்ற
மறையவன்காழிவேந்தன்மலரடிக்கன்புசெய்வாம். 15

16 திருநாவுக்கரசுசுவாமிகள்.
நீற்றுமெய்ச்சிவனேயென்றுமவனினுநிறைந்தாரென்றுஞ்
சாற்றுதற்கியையத்தந்தைதன்பரியாயப்பேரு
ளீற்றுமெய்கெடுத்தொன்றிற்பன்னிரண்டன்மெய்கொடுத்துக்கூறத்
தோற்றுமெய்ப்புகழ்சானாவிற்கரசினைத்தொழுதுவாழ்வாம். 16

17 சுந்தரமூர்த்திசுவாமிகள்.
எண்ணியமறுமைப்பேறுமிம்மையேயுற்றதென்ன
மண்ணியவியங்கும்வெள்ளிமால்வரையெருத்தமேறி
யண்ணியவியங்காவெள்ளிமால்வரையடைந்துவாழும்
புண்ணியமூர்த்திநாவற்புலனைப்போற்றிவாழ்வாம். 17

18 மாணிக்கவாசக சுவாமிகள்.
மாயவனறியாப்பாதமலரவன்மனைவிமேனி
தோயவுமலரோன்காணாச்சுடர்முடியனையானீன்ற
பாயநீருடுத்தமங்கையிவரவுமுருகிப்பாடுந்
தூயவர்கமலபாதத்துணையுளத்திருத்திவாழ்வாம். 18

19 தண்டீசநாயனார்.
மலர்புரைகுடங்கைவெள்வாய்மழுப்படையொன்றுதாங்கி
யலர்பசுவோம்பியின்னுமுண்ணுதலாதியாவும்
பலர்புகழ்தனக்கென்றொன்றும்வேண்டிலாப்பரன்போற்கொண்ட
நலர்செறிசேய்ஞலூர்வாழ்பிள்ளையைநயத்தல்செய்வாம். 19

20 அறுபத்துமூன்றுநாயன்மார்.
வேறு.
பூன்றதன்மையில்புன்மையேநெஞ்சகத்
தேன்றவஞ்சகமாதியிருப்பினுந்
தோன்றவோர்புரஞ்சூழ்ந்துறவாழ்வரா
லான்றமேன்மையறுபத்துமூவரே. 20

21 பஞ்சாக்கரதேசிகர்.
பூதங்கடந்துபொறிகடந்துபுலனுங்கடந்துபுகல்காண
பேதங்கடந்துகாலமுதலனைத்துங்கடந்துபெருவிந்து
நாதங்கடந்துவளர்துறைசைநமச்சிவாயதேசிகன்பொற்
பாதங்கடந்துபற்றறுத்தானினிமேலல்லற்படலிலையே. 21

22 அம்பலவாண்தேசிகர்.
வேறு.
மருடருவினைகடேய்த்தோமாமலக்குறும்புமாய்த்தோ
மிருடருபிறப்பில்வாரோமென்றுமோரியல்பிற்றீரோ
மருடருதுறைசைமேவுமம்பலவாணதேவன்
பொருடருகமலத்தாளெந்தலைமிசைப்புனைந்தபோதே. 22

23 சித்தாந்தசைவர்கள்.
பண்ணியபுறமார்க்கங்கள்பாழ்படவொழித்துமேலாம்
புண்ணியவிபூதியக்கமணியொடைந்தெழுத்தும்போற்றி
யண்ணியசிவானந்தத்தேனிரம்பவுண்டமையாநிற்கும்
தண்ணியகுணசித்தாந்தசைவரைவணக்கஞ்செய்வாம். 23

24 ஆலப்பணிசெய்வோர்கள்.
அரவுநீர்ச்சடையானெங்களம்மையோடகிலமெல்லாம்
பரவுமாறமர்பொன்மாரிப்பதிப்பெருந்தளியிற்றொண்டின்
விரவுநான்மறையோராதியலகிடல்விழைந்தோரீறா
முரவுசேர்தவத்தர்யாருமுவந்தியாந்தொழுந்தேவாவார். 24


கடவுள் வாழ்த்து முற்றிற்று.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:14 am

4. நைமிசைப்படலம். (201 - 237)

201 தருப்பொருந்தலாற்சலதரமூர்தலாற்சசியை
விருப்பொருங்குறத்தழுவலால்விண்ணவர்விழையுந்
திருப்பொருந்தலாற்கண்மலராயிரஞ்செறிந்த
வுருப்பொருந்தலானைமிசமிந்திரனொக்கும். 1

202 மலரணங்குறத்தழுவலான்மருவுநால்வாயா
லலர்மிசைப்பொலிமாண்பினான்மண்ணளித்தலினா
னலர்விரும்புபல்கலைப்பொலிவுடைமையானாளு
முலர்தராதநைமிசவனம்விதியையுமொக்கும். 2

203 உற்றதானவர்தமையொழித்தமரரையூட்டக்
கற்றமேன்மையாற்பூமணம்பொருந்தலாற்கருங்கார்
செற்றமேனிவந்தமைதலாலளிவளர்திறத்தாற்
கொற்றநேமியங்கடவுளும்போலுமக்குளிர்கான். 3

204 பிறையுங்கங்கையுமீமிசைத்தவழ்தலாற்பிறங்கி
நிறையும்பல்சடையுடைமையானிலவுபூங்கொன்றை
நறைமணத்தலாற்கூவிளநயத்தலானாளுங்
குறைவிலாச்சிவபரனையுமானுமக்குளிர்கான். 4

205 திருந்துவானவர்முனிவரர்மொய்த்தலாற்செவ்வே
யிருந்துநன்னலமெய்தினர்க்களித்தலாலால
மருந்துசெய்தவனமர்தலாற்சலிப்பரும்வலியாற்
பொருந்துவெள்ளியங்கயிலையும்போலுமக்கானம். 5

206 மோகமாதிகளொழிந்தவம்முழுத்தவவனத்து
யாகசாலையினெழும்புகையெங்கணுந்துழாவி
மேகமார்தருவெளியிடைப்படிதலாலன்றோ
மாகமார்நிறம்புகைநிறமென்பர்மண்ணுலகோர். 6

207 ஓங்குநைமிசத்துஞற்றிடுமகத்தழற்கொழுந்து
வீங்குபொன்னுலகுருக்குமென்றஞ்சியேவிண்ணோர்
தேங்குகங்கையுமங்குலுங்கீழுறச்செய்தா
ராங்குநின்றிவணுறுவதுங்குளிரவாயன்றோ. 7

208 மேயபற்பலதருக்களினின்றுமேலிடத்துப்
போயபல்விடபங்களின்மலர்தொறும்புகுந்து
பாயவண்டுகளுகுத்தசெந்தாதுவீழ்பண்பாற்
றேயமோதும்விண்ணுலகுசெந்தாதுலகென்றே. 8

209 விண்ணளாவியமகத்தழற்கொழுந்துமேலெழுந்து
கண்ணளாவியமரமுதற்கரைதருக்கொழுந்த
மெண்ணளாவியவேற்றுமைதெரிவரிதென்றுந்
தண்ணளாவியதண்மையும்வெப்பமுந்தவிர்ந்து. 9

210 அண்டவாணர்தம்பசிதவிர்த்தருளுமத்தானம்
புண்டரீகமுமாம்பலும்புரிமகப்பொருட்டி
னண்டுகூர்மமும்பறவையுமளப்பரியதாய
வண்டுமொய்த்தலின்வனமெனற்கொத்ததுமாதோ. 10



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:14 am

211 வேறு.
இன்னபல்வளத்தநைமிசவனத்திலிருப்பவர்விதிவிலக்கமைதி
சொன்னமெய்ப்பொருணூலாகியமறையுந்துளக்கமிலங்கமோராறும்
பன்னரும்புகழ்சாலாகமத்திரளும்பகர்தருமற்றுளவெவையு
நன்னயம்பயப்பப்பாலுணுங்குருகினவையொருமூன்றுமற்றுணர்ந்தார். 11

212 கொடுமருத்தெழுந்துநெடுவரைபிடுங்கிக்குவலயநடுங்கவீசிடினும்
படுதிரைக்கடலோரேழுமொன்றாகிப்பரந்துமேற்பொங்கினுங்கொண்மூ
வடுதிறற்பெருந்தீயுருமுவீழ்த்திடினுமணுத்துணையஞருமுட்கொளார்வெங்
கடுமிடற்றமைத்தகண்ணுதற்பெருமான்கழல்கழலாதுள்வைத்திருப்பார். 12

213 வானமர்நறவுக்கற்பகநீழல்வாழ்பவன்றோற்றமுயிறப்புங்
கானமர்கமலமலர்மிசைப்பொலியுங்கடவுடன்றோற்றமுமிறப்பு
மூனமர்திகிரிவலனெடுத்துவணமுயர்த்தவன்றோற்றமுயிறப்புந்
தானமர்காலமெனப்பலகண்டார்தவாதினும்பற்பலகாண்பார். 13

214 இருவினைப்பயனென்றுரைசெயப்பட்டவின்பமுந்துன்பமுமெய்தி
னுருவினைவிடாமுன்னமைந்தனவேயென்றுவப்புறார்முனிதராரென்றுங்
கருவினையொழிக்குஞ்செயல்செயலன்றிக்கருதுறார்பிறநகையிடத்தும்
வருவினையருளினிரிதரக்காண்பார்மாசறுகாட்சியிற்பொலிவார். 14

215 என்னபல்பிறப்புந்துயரமேவிளைக்குமித்தகுபிறப்பறற்குபாயம்
பன்னருமறையீறளப்பரும்பெருமான்பாதங்காணுதலதற்குபாய
மன்னவன்விபூதிகண்மணிபுனைந்தோரைந்தெழுத்தெண்ணியாங்காங்கு
மன்னவீற்றிருக்குந்தலப்புகழ்கேட்டுமனங்கொளலென்றுளந்துணிந்தார். 15

216 மொழிதருதவத்துச்சவுநகமுனிவன்முதற்பலமுனிவரர்குழுமி
வழிதருமதுப்பூங்கொன்றையானுவக்குமாமகம்பன்னிரண்டாண்டிற்
கழிதருமொன்றுபுரிந்தனரதனைக்காணியநீற்றொடுபரமன்
விழிதருமணிபூண்முனிவரர்பலருமேவினாரம்முனிவரருள். 16

217 செங்கதிரகத்துப்பொலிந்ததென்றுரைத்தல்செய்யமெய்ஞ்ஞானமும்புறத்துத்
தங்கவெண்மதியம்போர்த்ததென்றுரப்பத்தவலரும்விபூதியுமுடையோன்
பங்கமில்பரமன்விழிமணிபூண்டுபரவெழுத்தைந்துமுட்கணித்துத்
துங்கமாணவர்தங்குழாம்புடைசூழத்சூதமாமுனிவனும்வந்தான். 17

218 வந்தமாமுனியையிருந்தமாமுனிவர்மகிழ்ந்தெதிர்சென்றடிபணிந்து
சந்தமாரிருக்கையழகுறவிட்டுத்தனித்ததன்மேலுறவிருத்திக்
கந்தமாமலர்முற்கொண்டருச்சித்துக்கவின்றபாத்தியமுதலளித்துத்
தந்தமாதரவிற்பணிந்தனரிருந்தார்சவுநகமுனிவரனுரைப்பான். 18

219 மறைமுழுதுணர்ந்துவகுத்துபகரித்தவாதராயணமுனிவரன்பாற்
குறையறவுணர்ந்தவருட்பெருங்கடலேகோதிலாக்குணப்பெருங்குன்றே
துறைபலதெரிக்கும்புராணமுற்றளந்துதொகைவகைவிரியினிற்றெரித்து
மிறைதபுத்தருளுங்கற்பகதருவேவிமலவாழ்வேயெனத்துதித்து. 19

220 துன்னியகருணைச்சிவபிரானுவக்கத்தொடங்கினமொருமகமுடிப்பான்
மன்னியவதுபோதனையனேயிரங்கிவந்தெனவந்தனையொருநீ
முன்னியநினதுதரிசனமதனான்முடிந்ததித்தினஞ்சுபதினமாய்
நன்னியமத்தேநானுமற்றியாருநன்மகமிம்மகமன்றோ. 20



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:15 am

221 ஓரிடந்தலமற்றோரிடந்தீர்த்தமோரிடமூர்த்திநீர்சூழ்ந்த
பாரிடமதனிற்சிறந்ததாயிருக்கும்பகர்ந்தவோர்மூன்றன்மான்மியமு
மோரிடஞ்சிறந்தேயிருப்பதெத்தானமுரைக்கினுங்கேட்கினும்விழைவு
பாரிடங்குணிப்பக்குனிக்குநம்பரமன்பரிந்தருள்செய்வதெத்தானம். 21

222 எத்தலநினையிற்றருமமாமதனோடெத்தலமுரைக்கினன்பொருளா
மெத்தலவங்காணினின்பமாமவையோடெத்தலம்வசிக்கின்வீடாகு
மெத்தலமனாதிமுத்தனெம்பெருமானிடையறாதிருப்பதுமற்று
மெத்தலமயன்மாலாதியர்போற்றியிறைஞ்சிடவெற்றைக்கும்பொலியும். 22

223 இத்தனைவளங்கண்முழுவதுமமைந்தவிருந்தலமொன்றுநீநவின்றா
லத்தனையனையாயுய்குவமறைந்ததகலிடத்துண்டுகொலிலைகொன்
முத்தனையவதுநன்கிருந்திடுமேன்மொழிந்தவெம்பாக்கியமாமாற்
சித்தனையாதுதெளிதரவுரைத்திதேசிகோத்தமத்தவவென்றான். 23

224 தவத்துயர்பெருமைச்சவுநகமுனிவன்றன்மொழியகஞ்செவியேற்றுச்
சிவத்துயர்கருணைச்சூதமாமுனிவன்செம்மனத்துவகையனாகிப்
பவத்துயரகற்றுமிதுபகரென்றபடிநனிநன்றுநன்றந்தோ
வவத்துயரிதுபோற்களைவதுபிறிதின்றகலிடத்தென்றுரைசெய்வான். 24

225 நெடியமாதவத்துச்சவுநகமுனிவநீவினாவியதுலகோம்பும்
படியதாயெவர்க்கும்பேருபகாரப்பண்பதாய்நின்றதுகண்டாய்
கொடியதாகியநஞ்சமுதுசெய்தருளாற்குவலயம்புரந்தாம்பெருமா
னடியவாயடைதற்குபாயமீதன்றியாய்தரினும்பிறிதிலையே. 25

226 விழைவினீவினாயபடியெலாம்பொருந்திமேவுமோர்தலமுமுண்டதன்வாய்க்
கழைகுலாஞ்சிலையோற்காய்ந்தவர்தமக்குக்கயிலையாதிகளினும்பிரியந்
தழைதருமனையதலமிதுகாறுஞ்சாற்றியதிலையொருவருக்குங்
குழைதருமனத்தினீவினாவியதாற்கூறுதுமனையமந்தணமே. 26

227 மிகுபுகழ்படைத்ததமிழ்வளநாட்டுண்மேதகுபாண்டியநாட்டிற்
றகுபெருந்துறைக்குச்சற்றுமேற்றிசையிற்சாற்றுறும்யோசனையொன்றி
னகுபொழிற்கானப்பேருக்கீசானநற்றிசையோசனையொன்றி
னுகுதலில்சாலிவாடியூர்க்கழலோனுறுதிசையோசனையரையில். 27

228 ஒருதிருப்புத்தூர்க்குற்றகீழ்த்திசையினொன்றரையோசனையளவிற்
பொருவருபுனவாயிலுக்கியைமருத்துப்புணர்திசையோசனையொன்றிற்
றருவடர்பொழிலாடானைக்குவடபாற்றழைதிசையோசனையொன்றில்
வெருவருவீரைவனத்திற்குத்தென்பால்விராந்திசையோசனையொன்றில். 28

229 மதுநதிவிரிசன்மாநதிமுறையேவடக்கினுந்தெற்கினுமொழுகப்
புதுமதிமுடித்தான்றனக்கிடமாகிப்பொலிதருமொருதலமதன்பேர்
முதுதவமருதவனமெனமொழிவர்முளைத்தொருமருதமர்திறத்தா
லிதுவலாற்கண்டதேவியென்றொருபேரெய்தியதின்னமும்பலவால். 29

230 போற்றியநாமகாரணம்பின்னர்ப்புலப்படுமித்தலமேன்மை
யூற்றியலமைந்தசுவையுடைக்காந்தத்துருத்திரசங்கிதையுரைக்குந்
தேற்றியகானப்பேர்ப்புராணத்துஞ்செப்பியதுண்டிவையனைத்து
மாற்றியதவத்தோய்கேண்மதியுரைப்பாமற்புதம்பயப்பதென்றறிமோ. 30



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:15 am

231 செறியொருமுகுர்த்தமெண்ணியுமிதன்மேற்சிறந்ததாயொருதலமுணரே
மறிவுருவனையதலமகத்துவத்திற்காகரமாயதுமற்று
முறிவினாற்பொருளுஞ்சேய்த்திருந்தகத்துமுன்னினுங்கொடுப்பதுகண்டாய்
குறிகெழுமனையதலத்துமான்மியமுற்கூறுதுந்தொகுத்துளங்கோடி. 31

232 ஊழியுஞ்சலியாக்கயிலையங்கிரியினும்பர்தம்பிரான்றிருமுகக்கண்
வீழியங்கனிவாய்வெண்ணகையுமையாண்மென்கரங்கொடுபுதைத்ததுவும்
வாழியவனையானேவலிற்கழுவாய்வயக்கிடவுலகமுற்றுயிர்த்தாள்
பூழியர்நாட்டினருச்சுனவனத்துப்புகுந்துமாதவம்புரிந்ததுவும். 32

233 வழிகெழுசண்டன்கொடுந்தொழிற்கஞ்சிமாலயன்முதலியோர்கயிலை
யொலிகெழுகழற்காற்சிவபிரானேவவொருங்குவந்தளவிலாவளமை
பொலிகெழுமருதவனத்திடைப்புகுந்துபூரணிதன்னைக்கண்டதுவுங்
கலிகெழுசண்டாசுரனுயிரவியக்காளியைத்தோற்றுவித்ததுவும். 33

234 தேவியைமருதவனத்தமர்பெருமான்றிருக்கலியாணஞ்செய்ததுவுங்
காவியங்களத்தோனருடலைக்கொண்டுகருதுருத்திரப்பெருமானு
மோவியமனையாளுற்றமாமார்பத்தொருவனுங்கலைமகடவனும்
வாவிமூன்றாங்குத்தனித்தனியகழ்ந்துவரமலிபூசைசெய்ததுவும். 34

235 நிறைபுகழ்க்கதிருமதியுமாங்கெய்திநெடுந்தடந்தனித்தனிதொட்டுக்
குறையறப்போற்றிப்பூசைசெய்ததுவுங்கொடியவாளரக்கனோடமர்த்துச்
சிறையிலியாயசடாயுபூசித்துத்திருத்தகுமுத்தியெய்தியது
மறைவிதிப்படிகாங்கேயனோர்தீர்த்தம்வகுத்துறப்பூசித்தவாறும். 35

236 மற்றவன்பொருட்டுமருதமர்நிழல்வாழ்வள்ளல்பொன்மழைபொழிந்ததுவுங்
கொற்றவெங்சிலைமான்றனைவதைத்ததுவுங்குளிர்சிவகங்கையின்சிறப்பு
மற்றமிறலத்துப்பெருமையும்புகழ்சாலத்தலமான்மியமென்று
கற்றவர்புகழுஞ்சூதமாமுனிவன்கனிவொடுதொகுத்தினிதுரைத்தான். 36

237 மன்னியதவத்துச்சவுநகமுனிவன்மற்றதுகேட்டுளமகிழ்ந்து
மின்னியபுகழோய்தொகுத்துரைத்ததனைவிரித்துரைத்தருளியென்றிரப்பத்
துன்னியவுவப்பிற்குசூதமாமுனியுஞ்சொற்றனனதனைமாதவத்தோர்
பன்னியதமிழான்மொழிபெயர்த்தெடுத்துப்பாடுவான்றுணிந்தனனுய்ந்தேன். 37

நைமிசைப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 4-க்கு, திருவிருத்தம். 237.




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:16 am

5. திருக்கண் புதைத்தபடலம். (238 -312)

238 வண்டுதுற்றதாமரைமலர்மிசையமர்மறையோன்
றண்டுசக்காம்வளைசிலைவாள்கொள்கைத்தலத்தோ
னண்டுவண்பதத்தோற்றமுமிறுதியுமனந்தங்
கண்டுநிற்பதுகண்ணுதல்வெள்ளியங்கயிலை. 1

239 அரவுகான்றசெம்மணிபலமேற்பொதிந்தலங்கப்
பரவுமேன்மையிற்பொலிவரைபரம்பரனுதற்க
ணுரவுசால்விழிச்செந்தழற்கொழுந்தகத்தொருதான்
விரவுதன்மையைத்தெரித்ததுபோன்மெனவிளங்கும். 2

240 அகத்துவைகியசெந்தழல்புறஞ்சுலாயழற்ற
மிகத்தழங்குபாற்புணரிமேற்பொங்கினாலொக்கு
நகத்தழைந்தசெந்தளிர்ப்பொழில்சூழ்விராய்நண்ண
மகத்துவம்பொலிந்தோங்கியவன்னமால்வரையே. 3

241 மருவுபாற்கடல்பொங்கிமேலெழுதரமாலு
மொருவுறாதுமீமிசைக்கிடந்துறங்குவதேய்ப்பப்
பொருவிலாதுயர்ந்தோங்கியவத்தகுபொருப்பின்
றிருவலாஞ்சிகரத்துமாலுறங்குவசெறிந்தே. 4

242 அடிவறைத்தலைமடங்கறாழ்கந்தரமணையா
முடிவிலாவருவித்திரளாரமாமோலி
நெடியநாயகன்கோயிலாநிறைமதிகுடையாப்
படியிலாவரசிருக்குமத்தகுபருப்பதமே. 5

243 எய்துமானிறக்கறுப்பன்றிக்கறுப்புவேறில்லை
தையன்மார்நடுத்தளர்வன்றித்தளர்வுவேறில்லை
வெய்யதங்கணனுதல்விழியன்றிவேறில்லை
யையபாதவவஞ்சமன்றில்லைமற்றாங்கே. 6

244 பற்றுபேரிருண்முழுமையுமழிதரப்பருகிச்
சுற்றுமேயசெம்மணிநடுச்சுடர்ப்பெருங்கற்றை
செற்றுமால்வரைத்தோற்றமொண்செந்தழனாப்பண்
மற்றுவெண்ணிறப்புனலெழுந்தமைவதுவயக்கும். 7

245 மிக்கபேரொளியவ்வரைவீற்றிருந்தருளத்
தக்கவாதனமாகியதன்மைதேர்ந்தன்றோ
மைக்கண்மெல்லியறழுவிடக்குழைந்தமெய்வானோன்
கைக்கும்வில்லெனக்குழைந்ததோர்காமருபொருப்பு. 8

246 நறியபைம்பொழிலவ்வரைத்தியானஞ்செய்நலத்தாற்
குறியமாமுனியொருகரம்மைத்தலுங்கோள்செ
னெறியபாவமாயினதெனுங்கவலைநீத்துவப்ப
வறியயாவருமழுந்தியதொருவரைபிலத்தே. 9

247 இறைவன்மேனியுமேனியிற்பூதியுமேற்ற
பிறையுந்தும்பைமருக்கமுமனவும்பேணிறகு
நிறையுமேறுமால்யானையும்வெள்ளெனநிலாவி
யுறையுமவ்வரையுறுசுடர்மூழ்கலானன்றோ. 10



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:16 am

248 அன்னமால்வரைதனைத்தொழுவலிகுறித்தன்றோ
மின்னவாவியமார்புடைவித்தகனொருகை
முன்னமோர்வரையெடுத்திடமெலியதாமுடிந்து
நன்னர்வான்குடையாயதுநானிலம்வியப்ப. 11

249 அயனையோர்மலர்சுமக்குமற்றரியைநீர்சுமக்கும்
வியனிலாவுமிவ்வேதுவான்மெல்லியரவரே
பயனிலாவுமிம்மால்வரைசுமத்தலிற்பரனே
சயநிலாம்வலியோனெனிற்சாற்றுவதென்னே. 12

250 வானநாடவர்சூட்டியபொன்னரிமாலைக்
கானமெங்கணுங்கிடப்பனகழித்திடவீழ்ந்து
பேனவார்திரைப்பாற்கடற்பெருக்கமேற்பிறங்கி
யானபற்பலாயிரந்துகிர்க்கொடிப்படர்வனைய. 13

251 பொலங்கொள்கற்பகப்புதுமணம்போர்த்தியபுரமு
நலங்கொள்சத்தியவுலகமும்வைகுந்தநகரு
நிலங்கொளவ்வரைக்கடிமையாய்நிகழ்தலின்றோ
வலங்கொளப்பொலிதரலுடன்மாறுமாறுறினே. 14

252 உலகுபற்றுயிர்சரியையாதியவொருமூன்று
மிலகுபொற்புறப்புரிதலவ்வரைகுறித்தென்னி
லலகுமுற்றுறாவத்தகுமால்வரைப்பெருமை
பலகுறித்துளத்தெண்ணினும்பாடமுற்றுவதோ. 15

253 வேறு.
அன்னமால்வரைமேலாயிரங்கோடியவிரிளங்கதிரொருங்குதித்தா
லன்னமாமதில்கோபுரங்கருக்கிரகமத்தமாமண்டபம்விமான
மன்னமாநடையாராடரங்காதியாடகப்பசும்பொனான்மணியா
னன்னகாவண்ணமமைத்ததம்மனையோடங்கணரினிதமர்கோயில். 16

254 அனையவான்றளியுளாயிரங்கரமுமாயிரங்கால்களாநிறுவிப்
புனையவாங்கதிரேமேற்பரப்பாகப்பொருந்தியதென்னமண்டபமொன்
றெனையநாவலரும்புகழமுற்றாததிலங்குமம்மண்டபநாப்பண்
வினையம்வாய்ந்தவருமிற்றெனப்படாதமிளிர்மணிவேதியொன்றம்ம. 17

255 அத்தகுமணிசெய்வேதிமேல்விறல்சாலாளரியாகியஞான்று
பொத்தியவகங்காரந்தவிர்த்தாண்டபுண்ணியந்தெரிந்ததுவிளைக்கும்
வித்தகமலசத்தியுந்தவிர்த்திடுவான்விழைந்தரிமுழுவதுமரியா
யுத்தமனடிகடாங்கினாலென்னவொளிர்மணிமடங்கலாதனமேல். 18

256 உருவுளொன்றாயும்விழியுளொன்றாயுமொளிவளர்தலைக்கலனாயு
மருவியவிரதக்காலுளொன்றாயும்வைகிடமாயும்வீற்றிருப்பெற்
கொரவரங்களங்கமொழியெனவிரப்பவொழித்தலுமுவந்தருடெரிப்பான்
வெருவருமதியமுடிமிசைப்பொலியும்விதமெனவெண்குடைநிழற்ற. 19

257 அற்புதமுடிமேல்விரையிலாவருக்கமகற்றுபுதாம்வதிதருவான்
பொற்புறமலர்வெண்டாமரைமலர்கள்புந்தியுற்றெழுந்திருபாலும்
விற்பயின்மதிகண்டுறத்தலைகவிழ்ந்துமீளவுமெழுந்துழிதரல்போ
லெற்பொலிபசும்பொற்பூணணிமடவாரிரட்டுசாமரைதலைபனிப்ப. 20



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:16 am

258 புலிதருசருமப்பிருதிவியரையிற்பொங்கொளியப்புவான்முடியி
னொலிதருதழல்கைநுதற்கணினடியாருறுமலக்குரோதவானுளத்தின்
மலிதருநம்போலெங்கணுங்கலந்துவயங்குவதில்லெனவுவந்து
கலிதருசிவிறிவிடுவளியெழுந்துகமழ்திருமெனிமேற்றவழ. 21

259 திரிபுரமெரித்தாய்காலனைக்குமைத்தாய்சிலைமதனீறெழவிழித்தா
யரிபிறப்பைந்திற்றண்டநன்குஞற்றியதண்முதலறிகுறிபூண்டாய்
பரிகலமறையோன்றலையறுத்துவந்தாய்பற்பலதேவரென்பணிந்தா
யிரிதரவசுரரளவிலர்ச்செற்றாயென்றுவந்தியர்விறல்பாட. 22

260 பலமுகமுழவமுதற்பலவியமும்படர்கணத்தவர்சிலரதிர்ப்ப
நலமலிபணிலம்வயிர்குழல்பீலிநகுதுளைக்கருவிகள்பிறவுஞ்
சிலகணமிசைப்பத்திவவியாழெடுத்துச்சிலர்நரம்புளர்ந்திசையமுத
மலகறவூற்றவரம்பையர்முதலோரபிநயத்தொடுமெதிர்நடிப்ப. 23

261 சாரணரியக்கர்சித்தர்கந்தருவர்தக்ககிம்புருடர்கின்னரர்வெள்
வாரணரமரர்தயித்தியரரக்கர்மடலவிழ்கமலம்வீற்றிருக்கு
மாரணர்நறியபசுந்துழாய்ப்படலையலங்கியவிலங்கெழினிறத்து
நாரணர்பிறருந்தலைமிசைக்கரங்கணன்றெழீஇக்குவித்தனர்நெருங்க. 24

262 குழிவிழிப்பிறழ்பற்குடவயிற்றிருண்மெய்க்குறுகுறுநடந்திடுகுறுத்தாட்
பழிதபுத்தியங்குபாரிடக்குழுவும்பற்பலவயிரவர்கணமுங்
கழியருட்கொடியசிறுவிதிமகத்தைக்கருக்கியவீரனுமறத்தை
யழிவறக்காக்குமையனும்பிறருமணிமையினெருங்கினர்நிற்ப. 25

263 முனைவனங்குரவன்றிருமரபினுக்குமுதற்குருவாகியமுன்னோ
னனைவரும்பரமசிவனெனப்புகழ்வராரருணிரம்புறப்பெற்றோன்
றனைநிகர்கருணைநந்தியெம்பெருமான்றடங்கரச்சூரல்சற்றசைத்து
நினையவரவர்தந்தராதரந்தெரிந்துநிறுத்துபுதிருமுனருலாவ. 26

264 கயமுகத்தவுணனுயிர்தபமாட்டிக்கடவுளர்பலரையும்புரந்த
வயவொருமருப்புப்புகர்முகக்கடவுள்வலப்புறத்தினிதுவீற்றிருப்ப
வியனமருலகமுழுதுமீன்றெடுத்தும்விளங்கருட்கன்னியேயாய
கயன்மருள்கருங்கட்செய்யவாய்ப்பசுந்தோட்கவுரிமற்றிடத்துவீற்றிருப்ப. 27

265 ஒருவரைதாழ்த்திக்கொடுந்தொழிற்றகுவருடலெனும்பலவரையுயர்த்தி
வெருவருமொருவாரிதியறச்சுருக்கிவிளம்பியதகுவர்மெய்நெய்த்தோர்
பெருகியபலவாரிதியுறப்பெருக்கிப்பிறங்குமத்தகுவரைச்சாய்த்துப்
பொருவில்வானவரைநிமிர்த்தவேடனக்கும்புண்ணியவுமைக்குநள்ளிருப்ப. 28

266 சடைமுடிநிலவுவெள்ளமுதொழக்கச்சற்பங்கள்காரமுதொழுக்க
வடையொருகரமானுடையெனப்பொலியுமரைப்புலியஞ்சியதேய்ப்ப
மிடைமிசைத்தாவவெள்ளியதரங்கம்விரிபுனல்கைத்தழலெழறேர்ந்
துடைதரும்பொருட்டுக்கிழக்கிழிதரவேரொருங்கமைதிருமுகம்பொலிய. 29

267 புண்ணியநீறுநெற்றியிற்பொலியப்பொங்கிமேலெழுந்தழனோக்கந்
திண்ணியபகைதேர்ந்தடங்கியதொளிரத்திருமுகக்கண்களோரிரண்டுங்
கண்ணியகருணைமடைதிறந்தென்னக்கதிர்த்திடக்கரிசறுப்பவரே
யெண்ணியகழலிற்கழலுறத்தனிவீற்றிருந்தனனெம்மையாளுடையான். 30



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:17 am

268 வேறு.
காமருதிருவோலக்கங்கண்களிகொள்ளநோக்கித்
தேமருவலரின்மேலான்றிகழ்மணிமறுவினோடு
மாமருவலங்கன்மார்பன்வலனுயிர்குடித்ததோன்றல்
பாமருவியசீர்மற்றயாவரும்படிந்தாரின்பம். 31

269 அவரவர்முறைப்பாடெல்லாமஞ்செவிநிறையவேற்றுத்
துவர்படுசடிலத்தோன்றறூயநன்மொழியாற்கங்கை
யிவர்முடியசைப்பானோக்குநோக்கினாலின்பமெய்தக்
கவரருள்செய்துபோக்கிக்கவுரியோடெழுந்தானன்றே. 32

270 காந்தளம்போதிற்செய்யகமலமென்மலரேய்ந்தென்ன
மாந்தளிர்மேனியம்மைவலக்கரமிடக்கைபற்றிப்
பூந்தளிரடிப்பூமாயோன்புதல்வன்வாய்வைத்துக்காப்புற்
றாய்ந்தபாதுகைமேற்சூட்டியந்நின்றுபெயர்ந்தானன்றே. 33

271 மரகதச்சுடரினோடுமாணிக்கச்சுடரெழுந்து
பரவுறநடந்தாலென்னப்பயப்பயநடந்துசென்று
கரவறவெதிர்தாழ்வோர்க்குக்கண்ணருள்வழங்கிப்புக்கான்
குரவமந்தாரமாதிகுலவுபூந்தெய்வச்சோலை. 34

272 புண்ணியப்பொழிலினூடுபுகுதலும்பொழில்காப்பாளர்
நண்ணியவிருப்பிற்போற்றிநயந்திருபாலுமோடித்
தண்ணியமலர்களகொய்துதருந்தொறும்வாங்கிமோந்து
துண்ணியமருங்குனாசிநுனையினுஞ்சேர்த்தாநின்றான். 35

273 அறிபொருள்செறியத்தோன்றுமான்றவர்கவிபோல்வித்துச்
செறிகனிசுமந்துநிற்குந்தாடிமச்சிறப்புநோக்காய்
குறிபருப்பொருளொன்றேய்ந்தசெய்யுளிற்குலவித்தோன்றும்
பறிகனிசுமவாநின்றுபரந்தமுந்திரிகைநோக்காய். 36

274 மிகுபொருளமையக்கற்றும்வெளிப்படைசெய்யார்போல
மிகுகனிமண்ணுட்கொண்டுவெளிசெயாப்பலவுநோக்காய்
நகுபொருள்பலவுமியாருந்தெவ்வுறநயப்பார்போல
நகுகனிபலவுமியாரந்தெவ்வவாழ்நன்மாநோக்காய். 37

275 தம்முடையாயுள்காறுநூலொன்றேசமைப்பார்போல
விம்முகாய்க்குலையொன்றம்மவெளிசெயுமரம்பைகாணா
யம்மபற்பலசெய்வாரினடர்பழக்குலைபல்கொண்டு
செம்மையுமுயர்வுவாய்ந்துதிகழ்தருதெங்குகாணாய். 38

276 சிலகவியானுஞ்செய்துசெறிதருபயன்படாரா
யலகறவுரைவிரித்துப்பயன்படுமவரையொப்பச்
சிலகனியானுமீன்றுசெறிதருபயன்படாவா
யலகறவலர்விரித்துப்பாடலமமைவநோக்காய். 39

277 ஒருகவியேதுக்கொண்டுபலவிரித்துரைப்பார்போன்றோர்
மருவடிகொண்டுபற்பல்விரிந்தமாதவியைநோக்காய்
பெருகியசெய்யுட்கோதம்பிறங்கிலக்கணமாறுற்றுக்
கருதடியொன்றேகொண்டவஞ்சியைத்தெரியக்காணாய். 40



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:17 am

278 ஆன்றநின்கொங்கைபோலவரும்பியக்கொங்கைமேலாற்
சான்றவொண்சுணங்குபோலத்தண்சுணங்கெழமலர்ந்தே
யேன்றநின்பதத்துமென்மையெனப்பொலிபஞ்சிகாய்த்துத்
தோன்றவிங்கமராநிற்குஞ்சொற்பொலிகோங்கம்பாராய். 41

279 ஏயுநின்மேனிவண்ணமெனப்பசுந்தளிர்களீன்ற
யாயும்வெண்ணகையின்வண்ணமாமெனவரும்புகான்று
சாயுநுண்மருங்குல்வண்ணமெனத்தளர்தொசிவதாகித்
தோயுமென்குணத்தமுல்லைக்கொடிபலதுவன்றல்காணாய். 42

280 எனப்பொழில்வளத்துட்சில்லவிமயமீன்றெடுத்தபாவை
தனக்கினிதியம்பியெங்கடம்பிரானங்கண்மேய
மனக்கினிதாயசெம்பொன்மண்டபத்தினிதுமேவி
யுனற்கருமுவப்பிற்சிங்கவொளிரணையிருந்தான்மன்னோ. 43

281 அண்ணலவ்வாறுமேவமற்றவனனுஞைபெற்று
வண்ணமென்மலர்கள்கொய்வான்மலைமகளாயவன்னை
யெண்ணருமிகுளைமார்களேவலினுவந்துமேவக்
கண்ணகனாங்கோர்பாங்கர்க்கயிற்சிலம்பொலிக்கச்சென்றாள். 44

282 உந்தியின்வனப்பைவவ்வியொளித்தனவென்றுதேர்ந்து
முந்தியமௌவல்கொய்துமுளையெயிற்றழகுவவ்வி
யந்திலிங்கொளித்ததென்றுதளவரும்படங்கக்குற்றுஞ்
சந்தணிகொங்கைநங்கைவேறிடஞ்சாரச்சென்று. 45

283 படர்வளியலைப்பத்தேம்பிப்பற்றுக்கோடின்றியொல்கு
மடர்பசுங்கொடிகட்கெல்லாந்தனித்தனியவிர்கொம்பூன்றித்
தொடர்புசெய்திடுமினென்றுதோழியர்சிலரையேவி
யிடர்தபுத்தெம்மையாளுமேந்திழையந்நின்றேகி. 46

284 மற்றொருபாங்கரண்மிமணங்கமழ்ந்திங்குமேய
பொற்றபாடலத்தின்பூவும்புதுமதுப்பொழியுங்கோங்குஞ்
செற்றமந்தாரப்பூவுஞ்செறிதரக்கொணர்மினென்றே
யுற்றவர்சிலரைப்போக்கியந்நின்றுமுவந்துசென்று. 47

285 வேறுமோரிடத்தையண்மிமென்புனலகத்துப்பூத்த
நாறுசெங்கழுநீர்நீலநக்ககோகனகமின்ன
கூறுகொண்டணைமினென்றுகூடநின்றவரையேவித்
தேறுநர்க்கருளந்தேவிதனித்தனடிருமினாளே. 48

286 மதிமுடிக்கணவற்சாரும்வாஞ்சையின்வருபிராட்டி
திதியமைபாண்டிநாடுசெய்தமாதவத்தின்பேற்றால்
வதிமருதவனச்சீர்த்திவானமும்பொதிர்த்துச்செல்ல
வதிரருமகிழ்ச்சியாலேயாடலொன்றகத்துட்கொண்டு. 49

287 பாதசாலங்களெல்லாம்பாதமேற்செலவொதுக்கி
யோதருங்காஞ்சியாதியுத்தராசங்கங்கொண்டு
மேதகமரங்குல்யாத்துமென்மெலநடந்துபின்போய்ப்
பூதநாயகன்முகக்கண்புதைத்தனண்மலர்க்கைகொண்டு. 50



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:17 am

288 நிறைகலைமதியத்தேவேநிகழ்கதிர்த்தேவேநீவி
ரிறையவன்முகத்துக்கண்ணாயிருக்கினும்விடேம்யாமென்று
கறைமுகில்கரங்கணீட்டிக்கதுமெனமறைத்ததொக்கு
மறைபெரும்புவனமின்றாளையர்கண்புதைத்தகாட்சி. 51

289 மூராரியென்றுரைக்கும்பெண்யான்முதலைநீங்குபுதனித்து
விராம்வனத்துறைவதோர்ந்தும்வெளிப்பட்டுமறைந்தும்வாட்ட
லிராவகையொழிப்பவின்றேயென்றவண்மறைத்ததொக்கும்
புராதனர்முகத்துநாட்டம்புராதனிமறைத்தகாட்சி. 52

290 மறைமொழியிகந்தபாவிமகத்தவியுண்ணப்புக்கு
முறைதிறம்புற்றுமையன்முகத்துவீற்றிருந்துநாளு
மறைதரவிளங்கலொல்லாதவிரிருகதிர்காளென்று
பிறைநுதல்சினந்துபொத்தும்பெற்றியும்பொரூஉமக்காட்சி. 53

291 அடியவருளத்துநீங்காவருட்பிரான்முகத்துநாட்டங்
கடியமைக்குழலிவ்வாறுகரங்களாற்புதைத்தலோடு
நெடியபல்புவனமுற்றுநிறைந்தபல்லுயிருஞ்சாம்பக்
கொடியகேவலமேயென்னக்குருட்டிருள்பரந்ததம்மா. 54

292 எண்ணருநாள்கடோறுமெழுந்துதற்காயாநிற்கு
மண்ணலங்கதிர்கடம்மையடர்த்திடவலியிலாமை
யொண்ணலமின்றித்தேம்பியொடுங்கியவந்தகாரந்
தண்ணமுதனையாள்செங்கைத்தலங்களைப்புகழ்ந்ததன்றே. 55

293 தெறுபகையொழிந்ததென்றுசெறிந்தெழுமிருளோடொத்துக்
கறுவுநம்பகையுந்தீர்ந்துகழிந்ததென்றுவப்புமேவி
மறுவறவிதுசெய்தாட்குமாறெவன்செய்வாமென்று
குறுநகைச்செவ்வாய்மாதைக்கூகையும்புகழ்ந்ததம்மா. 56

294 செய்யதாமரைநேர்நாட்டச்செல்வனுமெண்கணானு
மையவாயிரங்கணானுமிமைப்பிலாதமர்விண்ணோரும்
வெய்யவாளவுணர்சித்தர்விஞ்சையர்முதலோர்யாரு
மொய்யவாமிருள்வீக்கத்தான்மூட்டமொத்திருந்தாரன்றே. 57

295 வெருவில்பாதலத்துநாளுமேவிவாழுலகரெல்லா
மிருபுலன்கவராநிற்குமேற்றமார்நமதுகண்க
ளொருபுலன்கவருமற்றையொருபுலன்கவர்ந்ததில்லை
மருவுகாரணம்யாதோவென்றெண்ணினர்மயங்காநின்றார். 58

296 மம்மருற்றுயிர்களெல்லாமின்னணமயங்காநிற்ப
வம்மவென்செய்தாள்பேதையாயினார்போலவென்று
செம்மலெம்பெருமான்வலலேதிருவுளத்திரக்கம்பூண்டு
விம்முசெந்தழனுதற்கண்டிறந்தனன்றிமிரம்வீய. 59

297 நுதல்விழிதிறத்தலோடுநோக்கியவெம்பிராட்டி
விதலையுற்றஞ்சியென்னாய்விளைந்ததென்செய்தாமென்று
முதலவனெதிரேவந்துமுன்னுறாதிழைத்தகுற்ற
மதலையாய்பொறுத்தியென்றுவணங்கினளெழுந்துநின்றாள். 60



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக